Sunday, July 16, 2006

உள்ளடக்கம் - அட்டவணை

பொன்ஸ் பக்கங்களின் சின்ன உள்ளடக்கம்

என்னைப் பற்றி

சிறுகதை முயற்சிகள்

கவிதைகள் என்று எழுதியவை...


அறிவியல்/கணினி
விளையாட்டுப் பொன்ஸ்

பயணக் கட்டுரைகள்

விழியம்

விமர்சனங்கள்

எனக்குப் பிடித்த என் பதிவுகள் சில

நட்சத்திரப் பதிவுகள்

சிறுவர் பக்கங்கள்

- டிசம்பர் 9, 2006 அன்று புதுப்பிக்கப்பட்டது

27 comments:

நாமக்கல் சிபி said...

உள்ளடக்கம் - அட்டவணை என்ற இந்த சிறு கதை மிகவும் அருமையாக இருந்தது.

நாகை சிவா said...

//உள்ளடக்கம் - அட்டவணை என்ற இந்த சிறு கதை மிகவும் அருமையாக இருந்தது. //
இது சிறுகதையா, நான் இம்புட்டு நேரம் கவிதைனு நினைச்சு படிச்சுகிட்டு இருந்தேன். (அதான் உடைக்காம எழுதி இருக்காங்க)

ஏதோ ஒன்னு, நாமளும் வழக்கம் போல சொல்லி வைப்போம்.
நல்லா இருக்குங்க.

நாமக்கல் சிபி said...

//நான்
பொதுவா
யார் கிடைச்சாலும்
என் இந்தக்
கதையைப் படிச்சீங்களா,
அந்தக்
கதையைப் படிச்சீங்களான்னு
கேள்வியா கேட்டுகிட்டு
இருப்பேன்!

இந்தச்
சுய விளம்பரம்
தாங்காம(ல்)
நிறைய பேர்
ஓடியது உண்டு.!

இப்படி இருக்கையில்,
சிவகுமார் அருளின்
கதையை
விமர்சிக்கும் போது,
தனிப் பதிவாகப்
போட்டால் எல்லாக்
கதைகளையும் படிப்பதாகச்
சொன்னதும்,

உடனே நானும்
உள்ளே புகுந்து
கதை எல்லாம்
சேர்த்து ஒரு பதிவு,
அவ்வளவு தானே!
நானும் போட்டுடறேன்னு
இறங்கியாச்சு//


நாகையாரே கவிதைன்னா இப்படி இருக்கணும்!

நாகை சிவா said...

//நாகையாரே கவிதைன்னா இப்படி இருக்கணும்! //
உண்மை தான் சிபியாரே, அவங்க உடைச்சு எழுத மறந்துட்டாங்கனு நினைச்சு, நானே உடைச்சு உடைச்சு படிச்சேன். உங்க பின்னூட்டத்த பாத்ததுக்கு அப்புறம் தான் அது சிறுகதைனு தெரிந்தது. அப்ப அப்ப வந்து நம்ம அறிவு கண்ணை திறந்து வைக்கிறீங்க. ரொம்ப தாங்க்ஸ்

நாகை சிவா said...

தளபதியாரே!
நான் தப்பு பண்ணுனதுக்கு பொன்ஸ் தான் காரணம், அவங்க இந்த பதிவை வகைப்படுத்தாமல் விட்டுட்டாங்க. அதான் கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சு. அவங்கள முதல இது சிறுகதைனு வகைப்படுத்த சொல்லுங்க

மனதின் ஓசை said...

யப்பா...யெப்படியெல்லாம் பதிவு போடறாங்கைய்யா..(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்)...
ஆ.. இத போடனும் இல்ல.. :-) பொட்டச்சு...பொட்டச்சு...

எனிவே.... கவிதை போல் உள்ள இந்த கதை அருமை.. அட்டகாசம்...

manasu said...

சிபி இது வெண்பா இல்லையா??
ஓ அதுக்கு வரிகளுக்கு இடையில் ஒரு கோடு வரணும்ல அப்பப்ப....

நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா - பொன்ஸ்
இது தகுமா?

இலவசக்கொத்தனார் said...

ஆஹா!

அட்டகாசம் பண்ணறீங்கப்பா! ஆந்தை மற்றும் சிங்கம்புலி அருமை அருமை!
அது யாரப்பா வெண்பா பத்தி கேள்வி கேட்கறது? மனசா? நாளையிலேருந்து வெண்பா கிளாசுக்கு வந்திரு. என்ன?

VSK said...

கதையாகக் கவிதையை வெண்பாவில் வடித்த பொன்ஸுக்கு என்ன கைம்மாறு செய்வது?!!
இத்னை உலகுக்குக் காட்டிய நா.சி.,நா.சி., இ.கொ.வுக்கு நன்றி!!

பொன்ஸ்~~Poorna said...

கருத்து சொன்ன,
திறனாய்வு செஞ்ச
அல்லாருக்கும்..

நன்றிங்க!! :))

மனதின் ஓசை said...

//அல்லாருக்கும்..

நன்றிங்க!! :)) //


போலீஸ்காரர் பயமா? :-)

தருமி said...

பின்னூட்டம் போடறதையே ஒரு 'கலையா' பண்ண ஆரம்பிச்சீட்டீங்களே'ப்பா! நல்லா இருக்கு.
நமக்கு இதெல்லாம் தெரியாதுன்றதினால...அப்பீட்!

ILA (a) இளா said...

ஏனுங்க, அப்படியே பக்கவாட்டுலயும் போட்டுருங்க எங்களுக்கு வசதியா இருக்கும்ல.

பொன்ஸ்~~Poorna said...

//போலீஸ்காரர் பயமா? :-) //
மனதின் ஓசை, பயமா, நமக்கா.. ஹ,.. நோ பயம்.. ஒன்லி fear.. அதுகூட அடையாளம் தெரியாத போலீஸுக்கு இல்லை.. எல்லாம் மேல "திறனாய்ஞ்சவங்க" கிட்ட தான்.. ;)

//பின்னூட்டம் போடறதையே ஒரு 'கலையா' பண்ண //
தருமி, சோதிடக் கலை மாதிரி இதுவும் ரொம்ப நாளா இருக்கு ;)

//அப்படியே பக்கவாட்டுலயும் போட்டுருங்க //
முந்தியே போட்டுட்டேன் பாருங்க இளா.. "உருப்படியான உள்ளடக்கம்"

ரவி said...

நல்லாத்தாம்யா தொகுத்திருக்காங்க...

கதைகள் அருமை..குறிப்பாக - சந்திரா அத்தை - எங்க அத்தை பேருகூட சந்திரா தானுங்க..:))

நாகை சிவா said...

//அட்டகாசம் பண்ணறீங்கப்பா! ஆந்தை மற்றும் சிங்கம்புலி அருமை அருமை! //
வசிஷ்டர் வாயில் பாராட்டா!!!!!
ரொம்ப தாங்க்ஸ் கொத்துஸ்,
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.

//எல்லாம் மேல "திறனாய்ஞ்சவங்க" கிட்ட தான்.. ;)//
:)))))))

//நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா - பொன்ஸ்
இது தகுமா? //
தகாது தகாது. கொத்துஸ் கிளாஸ்க்கு கூப்பிடுறார். அங்க போயி கேளுங்க.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ரவி, அத்தைக்கு ஓட்டுப் போட்ருங்க..

Santhosh said...

//இது சிறுகதையா, நான் இம்புட்டு நேரம் கவிதைனு நினைச்சு படிச்சுகிட்டு இருந்தேன். (அதான் உடைக்காம எழுதி இருக்காங்க)

ஏதோ ஒன்னு, நாமளும் வழக்கம் போல சொல்லி வைப்போம்.
நல்லா இருக்குங்க//

சிபி கலாய்ப்பது நானாக இருந்தால் அப்படிங்கிறது இது தானா?
பொன்ஸ் யார் மேல கோவம் திரும்பி நின்னுட்டு இருக்கிங்க.. கோவமா? இல்ல யாரையாவது எதிர்பார்த்து நின்னுட்டு இருக்கிங்களா? :))

Santhosh said...

//நன்றி ரவி, அத்தைக்கு ஓட்டுப் போட்ருங்க..//
நல்ல கேட்கறிங்கப்பா ஓட்டு :))(இது பொது மாத்தில் இருந்து தப்பிக்க) அடுத்த முறை ஏரியா எம்.எல்.ஏக்கு நிப்பிங்க போல.

நாகை சிவா said...

//சிபி கலாய்ப்பது நானாக இருந்தால் அப்படிங்கிறது இது தானா? //
சந்தோஷ், தெளிவா தான இருக்க, நான் சொன்னது சிபி சொன்னாத படிச்சு இருக்க. சிபி கலாய்த்தை படித்து பாரு, சும்மா சூப்பரா இருக்கு...
பொன்ஸ், டெம்பிள்ட் நல்லா இருக்குங்க.
யாருக்காக வெயிட்டிங் ;)

fhygfhghg said...

பொன்ஸ்,

டெம்ப்ளேட் சூப்பர்...

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

புத்தகக் கண்காட்சியில் பை நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொண்டு அதில் மிகப் பிடித்து வாங்கியதை விட்டு விட்டு மீதி எல்லாவற்றையும் புரட்டி படித்து விட்டு, இப்போ இதை ஆரம்பிக்கலாம் என்று திறக்கும் ஆர்வத்துடன் உங்கள் பட்டியலுக்கு வந்தேன். "அந்தப் பயம்" கதையில் ஆரம்பித்து "ஏன்??" வரை இடத்தை விட்டு அகலாமல் படித்து முடித்தேன். இவற்றில் முதல் மூன்றும் ஏற்கனவே படித்தது. மொத்தமும் மாணிக்கக் கற்கள்.

திரும்பவும் சொல்லக் கூடாது என்று நினைத்தேன், ஜானகி ராமன் தனது பேனாவை உங்களிடம் கணினி விசைப்பலகையாக கொடுத்து விட்டுப் போய் விட்டார் என்றுதான் படுகிறது. வாக்கியங்களின் கனத்தை மனம் தாங்க முடிவதில்லை. ஒரே வாக்கியத்தில் ஏழெட்டுச் சொற்களில் ஒரு வாழ்க்கை முழுவதையும் கொண்டு வந்து விடுகிறீர்கள்.

"பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்ற நம்பிக்கையைப் பொய்ப்பித்த ஒரே மகன் வயிற்றில். "
"உலகம் எல்லாம் சுற்றி வந்த பேராசிரியருக்குச் சரிக்குச் சரியாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை பேசுவது ரொம்ப வியப்பளிக்கும் நிகழ்வு."
"கடைசி தடவையாக சகுந்தலா தேவியின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டே. "

என்றெல்லாம் நீங்கள் எழுதிக் கொண்டு போய் விட, நகைச்சுவை ஆகட்டும் சோகம் ஆகட்டும் கிண்டலாகட்டும் மனதினுள் கத்தி போல இறங்குகிறது. ஆதன கீர்த்தாம்பரத்திலே என்று எல்லா பக்கங்களையும் விவரித்து எழுதி விட வேண்டும் என்று இல்லாமல் ஒரு சிறு கதைக்குள் நாவல்களின் களங்களையே அடக்கி விடுகிறீர்கள்.

மீண்டும் ஜானகி ராமன், மோக முள் என்ற நாவலை ஒவ்வொரு முறைப் படிக்கும் போதும் மனம் தவித்துப் போகும். இப்படி ஒரு எழுத்தாளனா, இப்படி ஒரு மனசா, எப்படி வாழ்ந்திருந்தால் எப்படி சிந்தித்திருந்தால் இப்படி எழுத முடியும் என்று நினைத்து மாளாது.

அப்படி மனதைத் தவிக்க வைத்து விடும் எழுத்து உங்களுடையது. ஒரு பண்பட்ட சீரிய உள்ளத்திலிருந்துதான் இப்படி உயர்வான கதைகளும் பதிப்புகளும் வரும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அப்புறம் தவிர்க்க முடியாத சில அறிவுரைகள்:

கொஞ்சம் நிறையப் படியுங்கள். தொடர்ந்து சக மனிதர்களை அவதானியுங்கள். சில கதைகளின் முடிவை வலிந்து சிந்தித்தது போலப் படுகிறது. நல்ல முடிவாகக் கொடுக்க வேண்டும் என்று முனையாமல் இயல்பாகக் கதை எப்படி போக வேண்டுமோ அப்படி முடிக்கப் பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Udhayakumar said...

பயணங்கள் முடிவதில்லை மற்றும் இன்னொரு பங்கு எனக்கு பிடித்தவை லிஸ்டில் இருக்கிறது...

ALIF AHAMED said...

டெம்பிளெட் சூப்பர்





நிக்கிறதும் :::))))))))))

வெற்றி said...

பொன்ஸ்,
உங்களின் பதிவுகளை விரும்பிப்படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு உங்களின் இப்பதிவு நல்ல பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

பி.கு:- உங்களின் தள முகப்பில் பூச்செண்டுடன் நிற்கும் பெண்ணின் படம் உங்களுடையதா? :)

Udhayakumar said...

//பி.கு:- உங்களின் தள முகப்பில் பூச்செண்டுடன் நிற்கும் பெண்ணின் படம் உங்களுடையதா? :)//

இதெல்லாம் டூ மச் ... அந்த பொண்ணு பாவம் சிவனேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. நம்ம பொன்ஸுக்கு 10 கண்ணு வேணும்ன்னு சொல்லிட்டிருக்காங்க...

பொன்ஸ்~~Poorna said...

வழிப்போக்கன், சந்தோஷ், உதயகுமார், வெற்றி, மின்னல், சிவா, உங்களுக்காக..