கண்ணீர் விடவும் கவலைப் படவும்
மண்ணில் ஆயிரம் மனிதர் உண்டு
உன்னில் என்ன இல்லை என்று
எண்ணி இங்கு அழுகிறாய் இன்று
அன்றைய இளைஞன் அறிவியல் கண்டான்
அடுத்தவன் வந்து நிலவினை வென்றான்
நேற்றைய இளைஞன் இணையம் படைத்தான்
இன்றைய இளைஞன்நீ இன்முகம் பெறுவாய்!!
எழுந்துநில் உனது தோல்விகள் அனைத்தும்
அழுந்திட மண்ணில் மிதித்துத் தள்ளிடு
சிறந்துநில் வாழ்வின் சிக்கல்கள் அறுத்திடு
அறிந்திடு நேற்றின் வெற்றிப் படிகள்
கோபுரம் கட்ட உனக்கது உதவும்
மாபெரும் வெற்றிகள் தோள்களில் குவிந்திடும்
நாளைய வெற்றிகள் நலம்தரும் என்று
காளைநீ இன்றே களிப்ப டைந்திடு
அறிவினை எடுத்து துருக்களை அகற்றி
துணிவினைப் பூசித் துயரங்கள் விடுத்து
கன்னத்தில் உள்ளக் கரங்களைப் பிரித்து
முன்னேற்றப் பாதையில் உந்தேரைச் செலுத்து
மாலையில் உலகம் உன்வசம் ஆகும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்மே
36 comments:
நல்ல பாட்டு. மரபுக்கவிதையா?
நன்றி பெருவிஜயன். மரபுன்னு நினைச்சு தான் எழுதினேன்.. ஆசிரியப்பாவுக்கு கிட்டக்க வரும்.. ஆனா சரியா தப்பான்னு பெரியவங்க யாராச்சும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்
unga blog parthen.migamum arumai.ungalal eppadi ippadi thamizil ezhutha mudikirathu?ungal thamiz sevaikku en paarattukkal.
ravishankar.
biothunder2000@yahoo.co.in
அந்தப் பையன் பாவம்..சிவனேன்னு உக்காந்திருக்கான். அவன் அழுகுறான்னு யாருங்க சொன்னங்க? :-)
Good one!
Nice to read!!
படிக்க உற்சாகமாக இருந்தது. பாராட்டுகள்.
பொன்ஸ், பெண்களுக்கு பொருந்தாதோ...இது ஒரு தலைபட்சமா இருக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்..
ரவிசங்கர், பாராட்டுக்கு நன்றி.. தமிழ் எழுத்து எப்படி எழுதறீங்கன்னு கேக்கறீங்களா? நான் பயன்படுத்துவது சுரதா எழுத்துரு மாற்றி.. நீங்களும் எழுதலாமே..
அதே தான் தருமி நானும் சொல்லறேன்.. பிடிச்சு வச்ச 'பிள்ளையாராட்டம்' உக்காந்திருக்காதே.. எதாச்சும் பண்ணுன்னு தான்..
இதுக்குன்னு அழற பையன போட்டேன்னா, அவ்வளவு தான்.. "பசங்களை அழவிடுவது உங்களை மாதிரி பொண்ணுங்கதான்னு" யாராவது பதிவு போட்டுடுவாங்க.. அதான் இப்படி..
சிவபாலன், பாலாஜி, பாலா, ஊக்குவிக்கறதுக்கு நன்றி.. பின்னாடி வருத்தப் படப்போறீங்க..
இதே மாதிரி ரெண்டு மூணு 'கவிதை' வச்சிருக்கேன்.. ஹி ஹி :)
அரையணா, கஷ்டப்பட்டு உங்க போட்டோவைத் தேடிக் குடுத்திருக்கேன். அந்த அரையணாவை என்கிட்டக் குடுத்துட்டு போட்டோவை எடுத்துகிட்டுப் போங்க :)
எதிரில் இருக்கும் நீர்நிலையில் மினைக் கண்டான்
இதன் வண்ணம் இப்படி எப்படி என எண்ணம் கொண்டான்
நினைவில் தோழியின் விருப்பம் கேட்டான்
நாளை அவளோடு வரும்வரை இருக்குமா எனக் கவலை கொண்டான்.
//"பசங்களை அழவிடுவது உங்களை மாதிரி பொண்ணுங்கதான்னு//
வாஸ்தவந்தானுங்களே!
ஐயா பட்டணத்து ராசா,
என்னையா சொல்ல வர்றீக? திட்டறீகளா, இல்ல பாராட்டுறீகளா? ஒண்ணுமே புரியாம நானும் அந்தப் பையன மாதிரி இப்போ கன்னத்துல கைய வச்சி உக்காந்திருக்கேன்.. சீக்கிரம் வந்து சொல்லிடுங்க :)
என்ன அக்கா.. ராசா சொல்லுறது விளங்கல்லையா.. அந்தப் பையன் என்ன நினைச்சுட்டு அப்படி உக்காந்து இருக்கான்னு அழகு தமிழ்ல்ல தெளிவாச் சொல்லியிருக்காருங்க
//பொன்ஸ், பெண்களுக்கு பொருந்தாதோ...இது ஒரு தலைபட்சமா இருக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்//
உண்மைதான் கவிதா,.. பெண்களுக்கு இதெல்லாம் பொருந்தாது.. அவங்க எப்போவுமே உங்க அணில் குட்டி மாதிரி சுறுசுறுப்பானவங்க.. இந்த மாதிரி ஊக்க வரிகள் எல்லாம் அவங்களுக்குத் தேவையே இல்லை :)
ஆனா, நீங்க இதுல எது ஒருதலைப் பட்சமா இருக்குன்னு தெளிவா சொன்னா நல்லா இருக்கும் :)
ஓ தேவ், ராசா அப்படிப் போறாரா, சரி சரி.. ஆமாம்,
"நாளை அவளோடு வரும்வரை இருக்குமா எனக் கவலை கொண்டான்."
- இதுக்கு என்ன பொருள்? அதுக்குள்ள தலைவர் சுட்டு சாப்பிடலாம்னு நினைச்சுட்டாரா?? :)
கரிக்கெட் அக்கா... நாளைக்கின்னா ரெண்டு துண்டு... இன்னிக்குன்னா ஒரே துண்டு.... முடிவு பண்ண முடியாமாத் தான் சிந்தனையா உக்காந்து இருக்காரு....
பேக்கிரவுண்ட்ல்ல வாளை மீனுக்கும் ... பாட்டு கேக்குதா அக்கா?
தேவ் நன்றி
மின் அதே இடத்தில இருக்கனும்க்கிற கவலைத்தான்.
//
அதுக்குள்ள தலைவர் சுட்டு சாப்பிடலாம்னு நினைச்சுட்டாரா?? :)
//
மற்றப்படி நிஙக சொல்ல மாதிரி இல்ல, ஏன்னா பையன பாத்தா சைவமா தெரியுது.
தேவு, அல்லாரையும் நம்மள மாதிரியே நெனச்சா எப்படி.. பாரு ராசா இல்லைங்கறாரு..
ஐயா ராசா, நீங்க சைவம் இல்லை போலிருக்கே.. மீனில் மீயை முழுங்கி மியாக்கிட்டீங்களே :) அடடா நீங்க - அங்கேயும் ஒரு ஐ காணோமய்யா..
நல்லா எழுதீருக்கீங்க. ஆனா படிச்சு எனக்குள்ள எந்த உத்வேகமும் வரலையே? என்ன மாதிரி ஆளுங்கள எந்த லிஸ்ட்ல சேப்பீங்க..
Beautiful one!! Kalakiteenga..very inspiring!!
கவிதைகளிலும் பல வகைகளாய் எழுதுகிறீர்கள், பேருந்து பயணம் ஒரு வகை என்றால் உலகம் உன் வசம் மற்றொரு வகையாக உள்ளது. மேலும் எழுதவும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சாணக்கியன், யாருக்கு ஓட்டு போடணும்னு இவ்வளவு அனாலிசிஸ் பண்ணறீங்க.. உங்களுக்கு இந்தக் கவிதை எல்லாம் வேண்டாம்ங்க.. இது இல்லாமலேயே நீங்க ஒரு சுறுசுறுப்புத் திலகம் தான்..
Thanks Ms Congeniality,
அதெப்படிங்க தொடர்ந்து படிக்கிறீங்க.. உங்க வேலைக்கு நடுவுல நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.. அதுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்
ரொம்ப நன்றிங்க குமரன் எண்ணம்,
//கவிதைகளிலும் பல வகைகளாய் எழுதுகிறீர்கள், //
ஒரே மாதிரி எழுதினா எனக்கே போர் அடிச்சிடும்.. வேற வேற மாதிரி எழுதறது தான் எனக்குப் பிடிக்கும் :)
Ur good posts make me visit ur site often!! :-D
பொன்ஸ் கவிதை ஓகே. ஆனா பதில்கள்லதான் ஒன் சைட் கோல் அடிக்கிறீங்க. சோர்ந்துபோற பொண்களே இல்லைன்னு? அதேமாதிரி சோர்வே அடையாத ஆண்களும் ஏராளம்; சரி, க(வி)தை ன்னு விட்டுத்தள்ள வேண்டியதுதான்!!
என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங்க? ஆனாலும் பரவாயில்லை நல்லாவே இருக்கு. தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன். (தலைவி பதவிக்குப் போட்டி வேண்டாம் என்று.)
//சோர்ந்துபோற பொண்களே இல்லைன்னு? அதேமாதிரி சோர்வே அடையாத ஆண்களும் ஏராளம்; சரி, க(வி)தை ன்னு விட்டுத்தள்ள வேண்டியதுதான்!!
//
:)எல்லாம் கவிதாவுக்காகத் தான்.. கண்டுக்காதீங்க..
பாருங்க, சாணக்கியனுக்கு என்ன சொல்லி இருக்கேன்னு :)
//என்ன பொன்ஸ், திடீர்னு கவிதைல எல்லாம் இறங்கிட்டீங்க? ஆனாலும் பரவாயில்லை நல்லாவே இருக்கு. தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன். (தலைவி பதவிக்குப் போட்டி வேண்டாம் என்று.) //
வாழ்த்துக்கு நன்றி அக்கா.. நீங்க ரெண்டு அறிக்கை விட்டீங்கன்னா, நான் "வ.வா.ச , கீதாக்கா"ன்னு சொல்லிகிட்டு கவிதை எழுதிகிட்டு கிளம்பிடுவேன் (எவ்வளவு நாளைக்குத் தான் ராமா கிருஷ்ணான்னு சொல்றது..?!!)
//Ur good posts make me visit ur site often//
Many thanks Ms. congeniality :)
செந்தமிழ்ல புகுந்து விளையாட்றீங்க.. நல்ல கவிதை..இலக்கணம் எங்க படிச்சீங்க?
உங்க தமிழ் நல்லா இருக்கு..இலக்கணமெல்லாம் எங்க படிச்சீங்க?
தொடர்ந்து எழுதுங்க...
பரத்,
இந்தப் பக்கம் வந்து கவிதை படிச்சதுக்கு முதல் நன்றி.. தமிழ் எல்லாம் ஸ்கூல்ல படிச்சது தாங்க.. +1, +2லயும் தமிழ் தான் படிச்சேன்.. அது கூடக் காரணமா இருக்கலாம்:)
Post a Comment