Friday, April 21, 2006

கட்டுங்க கட்டுங்க..

ப.ம.கவைப் பாத்து "கதை கட்டுங்க கட்டுங்க"ன்னு சொல்றா மாதிரி இருந்தாலும், இந்தப் பதிவோட நோக்கம் அது இல்ல..

கௌசிகன் திடீர்னு காணாம போய்ட்டதுனால, நானே ஒரு கட்டம் போட்டு நிரப்பிப் பார்த்தேன்.. சரி, நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு பதிவிலயும் போட்டுட்டேன்.
குறிப்புகள்:

எல்லாத்துக்கும் பொதுவான குறிப்பு, இதுல வர்ற எல்லாம் பதிவாளர்களின் பெயர்களே, அவங்களே வச்சுகிட்ட பேராகவும் இருக்கலாம், அன்பா வைக்கப்பட்ட பேராகவும் இருக்கலாம்.. :

குறுக்கு

1. 125:360 :: 150:84 - இப்போதைய நிலவரம்(6)
3. ஆங்கிலத்தில் பாதி இல்லை; தமிழில் திருப்பினாலும் நிறையவில்லை (2)
5. கமண்டல நீரில் ஆறு தந்தான் ஒரு முனிவன்; ஆற்றில் பாலம் கட்டுகிறான் இந்த முனிவன் (4)
7. உலகம் சுற்றுபவர் இப்போ கட்டத்தில் (8)
11. ரோஜா, பூக்கட்டினார்; பாக் கட்டுவார்; பாதிதான் கிட்டினார் (5)
12. நல்ல மனசுய்யா உமக்கு (3)
13. விட மாட்டாரா இவரு (4)
15. திருப்பித் திருப்பிப் பேசுவார் 'அவன்' (6)

நெடுக்கு

2. ஒரு பேர்; ரெண்டு பேர்; மூணு பேரா - சீ சீ, போலிகளைக் கண்டு ஏமாறாதீர்(4)
4. பொய்யில்லை (3)
6. காப்பி இல்லாமலா காலை உணவு? (5)
8. இவர் காவியம் செய்தால் வாசிப்பது மனிதர்கள் மட்டும் தானா? (7)
9. கட்டம் போட்டியா, ஒட்டு போட்டேனே!
பக்கம் இல்லையே என்னைக் கட்டிபோட (3)
10. இடிதாங்கும் இளைஞர்; பாசக்கார தலைவர் (5)
14. வெள்ளை ஒளியில் பிள்ளை விளையாட்டு (2)

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் எழுதி இருக்கேன்.. ஏதாச்சும் தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க... ஈஸியா இருக்கும்னு தான் நினைக்கிறேன்...


56 comments:

பொன்ஸ்~~Poorna said...

குறிப்பு 1 மாறிடுச்சுங்கோ...
1. 125:360 :: 150:86 - இப்போதைய நிலவரம்(6)

இதே ரேட்ல போனா, இன்னிக்கி பூரா குறிப்பு ஒண்ணு மட்டுமே மாத்திகிட்டிருக்கணும் போலிருக்கே :

யோசிப்பவர் said...

4) உண்மை
2) ராகவன்

இரண்டுபேர்தான் அவசரத்துக்கு தெரிந்தார்கள். அவர்களும் சரியா என்று தெரியவில்லை.

பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா.. யோசிப்பவரே,, நீங்களாவது பதில் சொன்னீங்களே.. ரெண்டு பதில் சொன்னாலும், சரியா அடிச்சிருக்கீங்க..

நானே குழம்பிப் போய்ட்டேன்.. என்னடா, நம்ம ஏதாவது தப்பா சொல்லிட்டோமா, யாரையும் காணோமேன்னு..

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப வருத்தப்படறீங்களே.தெரிஞ்சதைச் சொல்லறேன்.

1. இராமநாதன்
2. ராகவன்
6. இட்லிவடை
8. நாமக்கல் சிபி
10. கைப்புள்ளை

மீண்டும் வருவேன்.

பொன்ஸ்~~Poorna said...

வருத்தம் தீர்க்க வந்தார் கொத்தனார்
மறுக்க முடியா விடைகள் தந்தார்
இருப்பினும் இருக்கு இன்னும் கேள்வி
பொருப்பாய் பதிலைப் பெறவே பொறுப்பேன் :)

எல்லாமே கரெக்டுங்க.. எல்லாமே கரெக்டு,... :)

ஜெயஸ்ரீ said...

குறுக்கு

1. இராமனாதன்
5. கௌசிகன்
11. இலவசக்
13. கறுப்பு

நெடுக்கு

1. ராகவன்
4. உண்மை
8. நாமக்கல் சிபி
10. கைபுள்ள

பொன்ஸ்~~Poorna said...

வாங்க ஜெயஸ்ரீ வாங்க.. எங்க வராம போய்டுவீங்களோன்னு பார்த்தேன்

1. சரி
5. சரி
11. சரி
13. சரி
2. சரி (1 இல்லை 2 இது..)
4. சரி
8. சரி
10. சரி.. ஆனா ஒற்று விட்டுட்டீங்க.. (ஆமா, அப்படியே அப்பா அம்மா வச்ச பேரா, ஒற்றினா என்ன ஒற்றாட்டா என்னன்னு கேக்கறீங்களா?? . அது சரி ).. :)

மிச்சம் புதிர் அப்படியே வெயிட்டிங். உங்களுக்காக.. :)

பெருசு said...

என்னங்க இது

போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க .

ஒண்ணுமே புரியலீங்க.

எல்லாத்துக்கும் விடை சரியா எழுதறவுங்களுக்கு தென் அமெரிக்கா கிளையின்
சார்பா (அதாங்க வ.வா.ச) , ஒரு ஓ போடலாம்.

பெருசு.

பெருசு said...

என்னங்க இது

போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க .

ஒண்ணுமே புரியலீங்க.

எல்லாத்துக்கும் விடை சரியா எழுதறவுங்களுக்கு தென் அமெரிக்கா கிளையின்
சார்பா (அதாங்க வ.வா.ச) , ஒரு ஓ போடலாம்.

பெருசு.

பொன்ஸ்~~Poorna said...

ஓ மட்டுமா.. வருத்தப்படாமல் என்றும் வாலிபராய் இருப்பது எப்படின்னு அண்ணன் எழுதின புத்தகம் குடுக்கலாமான்னு ஒரு எண்ணம் இருக்கு.. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப் படும்..

தேவ் | Dev said...

15) parthiban

தேவ் | Dev said...

12)ஸ்ரீதர்

பொன்ஸ்~~Poorna said...

தேவ்,
12 சரி..
15 தப்பு..

பார்த்தியால ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நெனைக்கறேன் :)

மோகன்தாஸ் said...

15 பினாத்தலார்???

ஏதோ என்னால் முடிந்தது???

பொன்ஸ்~~Poorna said...

மோகன் தாஸ்,
வாங்க வாங்க, முதன் முறையா வந்துருக்கீங்க.. சரியாவும் சொல்லிட்டீங்க.. :)

ஜெயஸ்ரீ said...

குறுக்கு

7. பின்னூட்ட நாயகி
15. பினாத்தலார் (தலைகீழாக)

நெடுக்கு

6.இட்லிவடை
14. நிலா

ஜெயஸ்ரீ said...

12. ஸ்ரீதர்

பொன்ஸ்~~Poorna said...

ஜெயஸ்ரீ.. எல்லாமே சரி.. அப்டியே முடிச்சிடுங்க.. :)

கவிதா|Kavitha said...

பொன்ஸ்..எப்படி இப்படியெல்லாம்..கலக்கறீங்க போங்க..

பொன்ஸ்~~Poorna said...

கவிதா, இதோட ஓடிடாதீங்க.. ஏதாச்சும் ஒரு பதிலாவது சொல்லுங்க..

சந்தோஷ் aka Santhosh said...

என்ன பொன்ஸ்(பெயர் சரியா).. விடையை சொல்லுங்க.. நமக்கு அந்த அளவுக்கு பொருமை இல்லிங்க.

பொன்ஸ்~~Poorna said...

கிட்டத் தட்ட முடிஞ்சிடுச்சுங்க.. இன்னும் மூணு வார்த்தை தான் பாக்கி.. இதுவரை நிரப்பப்பட்ட கட்டங்களையும் கொடுத்திருக்கேன்..

இன்னும் ஒரு க்ளூ.. மூணு பேருமே பெண்கள்.

கொத்ஸ், நீங்க தான்யா திரும்பவும் வருவேன்னு திகில் கதைகணக்கா சொல்லியிருக்கீர்.. வந்து முடிச்சுக் கொடுமைய்யா..

இலவசக்கொத்தனார் said...

//மூணு பேருமே பெண்கள்.//
ஆஹா. இது போதுமே. இப்போ போடறேன்.

தாய்குலமே. அடுத்த தேர்தலில் நம்மளை ஞாபகம் வச்சுக்கோங்க.

3. ஷாஉ ( என்னங்க அவங்க ரொம்ப கோவப்பட்டு கட்சியை விட்டு போறேன்னு எல்லாம் சொல்லறாங்க. எதோ வெண்பா எல்லாம் எழுதி சமாதானப் படுத்தி வச்சுருக்கோம். அவங்க பேரை இப்படி ரிப்பேர் பண்ணறீங்களே.)

9. ஜெயஸ்ரீ (நம்ம ர.ம.த. வைப்பத்தி நானே சொல்லணுமா? உங்க ர.ம.த. நாந்தாங்க.)

14. நிலா (இவங்களைப் பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன். எழுத வச்சுட்டீங்களே. பின்ன என்ன? நம்மளை பத்தி தப்பா எழுதினாங்க. சரின்னு சும்மா இருந்தேன். ஆனா இப்போ கட்சி பத்தி தப்பா எழுதறாங்க. ரத்தம் கொதிக்குதுங்க.)

ஜெயஸ்ரீ said...

3. உஷா??

14 . சரியா பாருங்கம்மா. முதலிலேயே போட்டாச்சு

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ்,
வந்து புதிரை முடிச்சு கொடுத்ததுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்.. (உங்களுக்கு பதில் சொல்லிக் கொடுத்ததுக்கு நீங்க தனியா நன்றி சொல்லுங்க..)
தாய்'க்'குலமே.. ஒற்று விட்டுட்டீங்களே..
3. // என்னங்க அவங்க ரொம்ப கோவப்பட்டு கட்சியை விட்டு போறேன்னு எல்லாம் சொல்லறாங்க. எதோ வெண்பா எல்லாம் எழுதி சமாதானப் படுத்தி வச்சுருக்கோம். அவங்க பேரை இப்படி ரிப்பேர் பண்ணறீங்களே// - அவங்களை எங்க கட்சிக்கு அழைப்பது தானே இலட்சியமே..
9. // உங்க ர.ம.த. நாந்தாங்க// அதுக்கு நெறய போட்டி இருக்குங்க.. ஏற்கனவே குமரன் எண்ணம்னு ஒருத்தர் துடிக்கறாரு.. அடக்கி வச்சிருக்கேன்...:)
14..// ஆனா இப்போ கட்சி பத்தி தப்பா எழுதறாங்க. ரத்தம் கொதிக்குதுங்க.// என்னங்க, இப்படி சொல்றீங்க.. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு நம்ம கடமையைப் பாத்துகிட்டு போக வேண்டாமா???!!

பொன்ஸ்~~Poorna said...

ஜெயஸ்ரீ,
தன்னடக்கமா? உங்க பேரைத் தவிர, எல்லாரையும் கண்டு பிடிச்சிட்டீங்க.. நிலா சரியாத் தான் சொல்லி இருந்தீங்க.. நான் தான் தவற விட்டுட்டேன்..

வந்து புதிரை முயற்சி பண்ணினதுக்கு ரொம்ப நன்றி.. அப்பப்போ வாங்க..

ஜெயஸ்ரீ said...

பொன்ஸ்,

அந்த clue புரியவே இல்லங்க ... நான் வலைபதிவர் எல்லாம் இல்லை. சும்மா பின்னூட்டம் மட்டும்தான் ...

இலவசக்கொத்தனார் said...

//தாய்'க்'குலமே.. ஒற்று விட்டுட்டீங்களே.. //

தாய்க்குலத்தின் பக்கம் ஒற்றர்கள் வரவேண்டாமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்.

எப்படி சமாளிப்பு? :))

இலவசக்கொத்தனார் said...

//9. // உங்க ர.ம.த. நாந்தாங்க// அதுக்கு நெறய போட்டி இருக்குங்க.. ஏற்கனவே குமரன் எண்ணம்னு ஒருத்தர் துடிக்கறாரு.. அடக்கி வச்சிருக்கேன்...:)//

ஹலோ! நான் சொன்னது உங்களைப் பார்த்து இல்லை. ஜெயஸ்ரீயைப் பார்த்து. முதல்ல நம்ம கழகத்துக்கு வாங்க. அப்புறமா உங்களை கன்ஸிடர் பண்ணறேன். ஆசையைப் பாரு ஆசையை. :)

இலவசக்கொத்தனார் said...

//14..// ஆனா இப்போ கட்சி பத்தி தப்பா எழுதறாங்க. ரத்தம் கொதிக்குதுங்க.// என்னங்க, இப்படி சொல்றீங்க.. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு நம்ம கடமையைப் பாத்துகிட்டு போக வேண்டாமா???!!//

அப்படி போனா பின்னூட்டம் எப்படி வாங்கறது? இப்படி வம்பிழுத்துப் பார்த்தாலும் வர மாட்டேங்கறாங்களே.

இலவசக்கொத்தனார் said...

//(உங்களுக்கு பதில் சொல்லிக் கொடுத்ததுக்கு நீங்க தனியா நன்றி சொல்லுங்க..)//

நன்றிக்கு நன்றி.

சொல்லிட்டேன். சந்தோஷமா?

இலவசக்கொத்தனார் said...

//பொன்ஸ்,

அந்த clue புரியவே இல்லங்க ... நான் வலைபதிவர் எல்லாம் இல்லை. சும்மா பின்னூட்டம் மட்டும்தான் ...//

அதனாலதான் எப்போ ஆரம்பிக்க போறீங்கன்னு கேட்டுகிட்டே இருக்கோம். நீங்கதான் பிடி கொடுக்க மாட்டேங்கறீங்க.

பொன்ஸ்~~Poorna said...

//நான் வலைபதிவர் எல்லாம் இல்லை. சும்மா பின்னூட்டம் மட்டும்தான் ...
//

ஜெயஸ்ரீ அதாங்க சொல்லி இருக்கேன். "பக்கம் இல்லையே என்னை கட்டிப்போட"

பொன்ஸ்~~Poorna said...

//தாய்க்குலத்தின் பக்கம் ஒற்றர்கள் வரவேண்டாமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்.

எப்படி சமாளிப்பு? :)) //

சமாளிப்புத் திலகமய்யா நீர்னு ஏற்கனவே துளசி அக்கா உங்களைச் சொல்லி இருக்காங்களே...

பொன்ஸ்~~Poorna said...

//ஹலோ! நான் சொன்னது உங்களைப் பார்த்து இல்லை. ஜெயஸ்ரீயைப் பார்த்து. முதல்ல நம்ம கழகத்துக்கு வாங்க. அப்புறமா உங்களை கன்ஸிடர் பண்ணறேன். ஆசையைப் பாரு ஆசையை. :)
//
போகட்டும்.. அட்லீஸ்ட் இதுலயாவது நீங்க தலைவரா இருக்கீங்களே.. ப.ம.க மாதிரி வெறும் கொ.ப.ச.வா இல்லாம .. அதுக்கு தான் இங்க வாங்க, தலைவர் ஆக்குறோம்னு எங்க தல சொல்லறாரு..

நிலா said...

//இவங்களைப் பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன். எழுத வச்சுட்டீங்களே. பின்ன என்ன? நம்மளை பத்தி தப்பா எழுதினாங்க. சரின்னு சும்மா இருந்தேன். ஆனா இப்போ கட்சி பத்தி தப்பா எழுதறாங்க. ரத்தம் கொதிக்குதுங்க//

இது சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு :-)))

கொத்ஸ் வளர்றதுக்கு கட்சி நிதிலருந்து காம்ப்ளான் வாங்கி அனுப்புங்கப்பா :-)))

இலவசக்கொத்தனார் said...

கட்சி பத்தி தப்பா பேசினதுக்கு ரத்தம் கொதிச்சா அது சிறுபிள்ளைத்தனமா? ஸ்மைலி எல்லாம் போட்டா சரியாயிடுமா?

ஒழுங்கா வந்து கட்சியில சேருங்க. பழசையெல்லாம் மறப்போம் மன்னிப்போம் பண்ணலாம்.

இல்லை உங்களை சும்மா விட மாட்டோம்.

இலவசக்கொத்தனார் said...

//போகட்டும்.. அட்லீஸ்ட் இதுலயாவது நீங்க தலைவரா இருக்கீங்களே.. ப.ம.க மாதிரி வெறும் கொ.ப.ச.வா இல்லாம .. அதுக்கு தான் இங்க வாங்க, தலைவர் ஆக்குறோம்னு எங்க தல சொல்லறாரு..//

சும்மா தலையாட்டற தலைவரா இருக்கறத விட மாபெரும் இயக்கமொன்றின் தொண்டனாக இருப்பது எவ்வளவோ பெருமை. நீங்களும் வந்தாதானே தெரியும். எப்போ வறீங்க? ஆசிரியப்பா அணித்தலைவி பதவி மற்றும் கோயம்பேடு கொ.ப.செ. பதவிகள் காத்திருக்கின்றனவே.

பொன்ஸ்~~Poorna said...

//ஒழுங்கா வந்து கட்சியில சேருங்க. பழசையெல்லாம் மறப்போம் மன்னிப்போம் பண்ணலாம்.
//
என்னங்க.. எலெக்ஷன் கமிஷனரையேவா!!! இதெல்லாம் ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்..

பொன்ஸ்~~Poorna said...

//ஆசிரியப்பா அணித்தலைவி பதவி மற்றும் கோயம்பேடு கொ.ப.செ. பதவிகள் காத்திருக்கின்றனவே.
//

ம்ஹும்.. இப்போ நாங்க கட்சியோட அகில உலக கொ.ப.ச வாக்கும்.. உங்க கட்சிக்கு வந்து கோயம்பேட்டுலயே அடைஞ்சு கெடக்க சொல்லறீங்களா!!!

இலவசக்கொத்தனார் said...

//என்னங்க.. எலெக்ஷன் கமிஷனரையேவா!!! இதெல்லாம் ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்..//

முதல்ல அவங்க முன்னாள். ரெண்டாவது, இந்த மாதிரி அரசியல் பண்ண ஆரம்பிச்சது அவங்கதானே.மூணாவது எல்லாரையும் கட்சியில் சேர்த்து ஒரு நல்ல நிலமைக்கு கொண்டுவரணும்ன்னுதானே பாடுபடறேன்.

இலவசக்கொத்தனார் said...

//ம்ஹும்.. இப்போ நாங்க கட்சியோட அகில உலக கொ.ப.ச வாக்கும்.. உங்க கட்சிக்கு வந்து கோயம்பேட்டுலயே அடைஞ்சு கெடக்க சொல்லறீங்களா!!!//

அதான் சொல்லிட்டேனே. தலையாட்டும் தலைமை பதவியா வேண்டும்? அது மட்டுமில்லாது கொ.ப.செவாக கொள்கை இருக்கும் இயக்கத்தில் அல்லவா இருக்கவேண்டும்?

எங்க கட்சியில் சேருங்கள். உடனே அமெரிக்கா வர ஆவன செய்கிறேன். :)

பொன்ஸ்~~Poorna said...

//எங்க கட்சியில் சேருங்கள். உடனே அமெரிக்கா வர ஆவன செய்கிறேன். :)//
போதும் போதும்.. இங்க எல்லாம் ஏற்கனவே ஆகிட்டு இருக்கு,... நீங்க புதுசா ஒண்ணும் செய்ய வேண்டாம்.. தேர்தல் நேரத்துல தமிழகத்துல இருந்தா தானே நல்லா நாலு சேனல்ல வரலாம்.. ஆள் சேக்கலாம்.. :)

இலவசக்கொத்தனார் said...

ஐயோ. இவங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே.

அங்க இருன்னு சொன்னா, கோயம்பேட்டுலையே அடஞ்சு கிடக்கணமான்னு கேட்கறாங்க.

சரி அமெரிக்கா வாங்கன்னா, இல்லை இங்கயே இருக்கேன்னு சொல்றாங்க.

முருகா.......

இலவசக்கொத்தனார் said...

உங்க முதல் குறிப்பு இப்போ இப்படி மாறி வரணுமே.

1. 125:360 :: 150:137

இது கொஞ்சம் நேரத்துக்கு தாங்கும்ன்னு நினைக்கிறேன். வருங்கால சந்ததியினர் உங்க பதிவ பாத்து குழம்பாம இருக்கணுமில்லையா. அதுக்காத்தான். :)

பொன்ஸ்~~Poorna said...

நீங்க ரொம்பவும் "ரெஅடிங் பெட்நேன் cஒம்மென்ட்ச்" பண்ணறீங்க.. ஜாக்கிரதையா இருக்கணும்..
அதாகப் பட்டது என்னன்னா.. கோயம்பேட்டில் அமர்ந்து கொண்டே, அகில உலகத்துக்கும் எம் கொள்கையைப் பரப்புவதே எம் கட்சியின் மிகப் பெரும் நோக்கம்..

வல்லரசான அமெரிக்காவுக்கு வந்தால், எங்க சுதந்திரமும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளும் தடைபடுமே என்றுதான் யோசிக்கிறேன்..

பிற்காலத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக மேல் நாடுகளுக்கு அனுப்புவதாக எம் கட்சித் தலைமை உறுதி கூறி இருக்கிறது :) என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

பொன்ஸ்~~Poorna said...

//ரெஅடிங் பெட்நேன் cஒம்மென்ட்ச்" //
Reading between comments...:)

பொன்ஸ்~~Poorna said...

//வருங்கால சந்ததியினர் உங்க பதிவ பாத்து குழம்பாம இருக்கணுமில்லையா. அதுக்காத்தான். :) //

பரவாயில்லையே.. வருங்கால சந்ததியர் இந்தப் பதிவெல்லாம் பாப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?

அது சரி.. ரெண்டு மூணு நகைச்சுவைப் பதிவும் வேணுமில்ல.. டம்மீஸ் பதிவுன்னு புக் போடும்போது இதெல்லாம் பயன் படுத்திக்கலாம்

இலவசக்கொத்தனார் said...

//வல்லரசான அமெரிக்காவுக்கு வந்தால், எங்க சுதந்திரமும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளும் தடைபடுமே என்றுதான் யோசிக்கிறேன்..//

கால்கரி சிவா பதிவெல்லாம் படிக்கறது இல்லையா?

இலவசக்கொத்தனார் said...

இது 50.
இனி ஜூட்.
ஆல் ரைட்.
குட் நைட்.

அட புது கவித =))

பொன்ஸ்~~Poorna said...

//கால்கரி சிவா பதிவெல்லாம் படிக்கறது இல்லையா? //
ஆந்திராவில் இருந்தப்போ கலம்காரின்னு ஒரு ஆர்ட் பாத்துருக்கேன்..அது என்ன கால்கரி?!! இனிமே தான் படிக்கோணும்..

பொன்ஸ்~~Poorna said...

//இது 50.
இனி ஜூட்.
ஆல் ரைட்.
குட் நைட்.

அட புது கவித =))

//

என்ன ஒரு கவித.. சத்தமா சொல்லாதீங்க.. புதுக்கவிதை க்ளாஸ்ல கடைசி சீட்டுக் கூட கெடைக்காது..

இருந்தாலும் 50 பின்னூட்டம் இலவசமாய் அள்ளித் தந்து இந்த கட்டத்தைக் கட்டிய இலவசக் கொத்தனாருக்கு வ.வா.ச.வின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்..

எப்போ வந்து எங்க கட்சியில் சேரறீங்க.. வெண்பா வித்தகர், அமெரிக்கத் தலைவர் போஸ்ட் எல்லாம் ரெடி

இலவசக்கொத்தனார் said...

//என்ன ஒரு கவித.. சத்தமா சொல்லாதீங்க.. புதுக்கவிதை க்ளாஸ்ல கடைசி சீட்டுக் கூட கெடைக்காது..//

இப்படி ரெண்டு மூணு வார்த்தைகள்ள நாலஞ்சு வரி எழுதினா அதுதானே புது கவித? இல்லையா? ஐயாம் சாரி. ஐயாம் தி கன்ஃபியூஷன்.

இலவசக்கொத்தனார் said...

//எப்போ வந்து எங்க கட்சியில் சேரறீங்க.. வெண்பா வித்தகர், அமெரிக்கத் தலைவர் போஸ்ட் எல்லாம் ரெடி//

திருநெல்வேலிக்கே அல்வாவா? டூமச். பட் நோ லக். முதல்ல கூப்பிட்டது நாந்தான். ஞாபகம் இருக்கட்டும்.

பொன்ஸ்~~Poorna said...

//இப்படி ரெண்டு மூணு வார்த்தைகள்ள நாலஞ்சு வரி எழுதினா அதுதானே புது கவித? இல்லையா? ஐயாம் சாரி. ஐயாம் தி கன்ஃபியூஷன். //

நீங்க கேட்ட நேரம், ஆசீப் புதுக் கவிதைக்கு விளக்கமே கொடுத்துட்டார்.. பாருங்க :)

பொன்ஸ்~~Poorna said...

//முதல்ல கூப்பிட்டது நாந்தான். ஞாபகம் இருக்கட்டும். //

நல்லா ஞாபகம் இருக்குங்க.. ரெண்டு நாள் இருங்க.. இங்க நிலமையைப் பாத்துட்டு சொல்றேன். :)