இன்றுதான் என் முதல் இண்டர்வியூ. என் கல்லூரியிலேயே நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூ. இதுவரை ஒரு சில எழுத்துத் தேர்வுகளைத்தாண்டி அடுத்த நிலை தேர்வுகளுக்கு நான் சென்றதில்லை. இன்று தான் முதல் முறையாக என்னையும் மதித்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளார்கள்.
காலை எழுந்தது முதலே எனக்குள் ஒரே பரபரப்பு தான். எந்தச் சட்டை போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டேன்.
"என்னடி சட்டையும் பாண்டும்?!!!! பொம்பிள பிள்ளையா லட்சணமா சேலை கட்டிட்டு போ" என்றார்.
சண்டை போட மனமில்லாததால் இருவருக்கும் பொதுவாக வெளிர் நீல நிற சுடிதார் போட்டுக் கொண்டேன்.
"இன்னிக்காவது கோயிலுக்குப் போயிட்டு போ " என்றாள் அம்மா.
"அதுக்கெல்லாம் நேரமில்லை" என்றேன், கடைசி தடவையாக சகுந்தலா தேவியின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டே.
"ரெண்டு நாள் லீவு விட்டாலும் இப்படி காலைல தான் படிக்கணுமா? !! இப்பவும் ஸ்கூல் பொண்ணு மாதிரியே பண்ணா எப்படி?" என்றார் அப்பா
ஒருவழியாகக் கிளம்பினேன். "ரொம்ப டென்ஷனா இருக்க.. வண்டில போகாத. பஸ்ல போ.!!!" என்றான் அண்ணன்.
அவனை அலட்சியப் படுத்தி விட்டு வண்டியை எடுத்தேன்.
*** *** ** *
இருபது நிமிடத்திற்கு முன்னமேயே வந்து விட்டேன். கல்லூரி முதல்வர் வாசலிலேயே நின்றிருந்தார்.
"என்னம்மா பூங்கோதை! இண்டர்வியூவா??" என்றார்
ஆம் என்று தலையசைத்தேன்.
"பார்த்து பண்ணும்மா! நம்ம காலேஜ் மானமே உன் கையில தான் இருக்கு" என்று என் டென்ஷனை அதிகமாக்கினார்.
"சி. எம். எஸ் கம்ப்யூட்டர்ஸ் - பர்சனல் இண்டர்வியூ " என்று போர்டு வைத்திருந்த அந்த அறையைத் தட்டினேன்.
"ப்ளீஸ் கம் இன்" என்றார் அங்கே அமர்ந்திருந்தவர். அவர்தான் இன்றைய நேர்முகத் தேர்வுக்குழுவின் முக்கிய உறுப்பினர் போலும்.
"குட் மார்னிங் சார்" என்றேன்.
"குட் மார்னிங். என் பெயர் சுரேந்திரன். இன்றைய பேனலின் லீட் இண்டர்வியூவர். நீங்க தான் பூங்கோதையா? " என்றபடி என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
"ஆமாம் சார். மத்தவங்க எல்லாம் வரலியா? " என்றேன் காலியாய் இருந்த இருக்கைகளைக் காட்டி
"நம்ம பேனல்ல இன்னும் ராஜ்மோகன் மட்டும் தான். அவர் வரும் வரை நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்களேன். நீங்க இந்த காலேஜ்ல தான் படிச்சீங்கன்னு சொன்னாங்க.. உங்க காலேஜ் எப்போ தொடங்கினாங்க? ஸ்டூடன்ட்ஸ் எப்படி இருப்பாங்க? " என்றார்.
நானும் மேஜையில் இருந்த ஒரு ரெஸ்யூமை எடுத்துப் பார்த்தபடி என் கல்லூரியிலேயே நான் தேர்வாளராக பங்குபெறப் போகும் முதல் இண்டர்வியூவிற்கு கேள்விகளை அசைப்போட்டபடி பேச ஆரம்பித்தேன்.
24 comments:
திரும்பவும் குமுதம் ஒருபக்கக் கதை பாணிதான் என்றாலும் நன்றாகவே திருப்பம் வைத்து எழுதுகிறீர்கள்.
இன்னும் சிறப்பக எதிர் பார்க்கிறேன்
அப்படி போடுங்க. தெரிஞ்ச திருப்பம்தான் இருந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க.
உங்களுக்கு நல்லா கதை வருது அம்மணி, நடத்துங்க
பொன்ஸ்,
தெளிவான நீரோடைடையைப் போன்ற அமைதியான, இயற்கையான பாணி.. இருப்பினும், இன்னும் கொஞ்சம் சிறப்பாக்க முயலுங்கள்
செல்வகுமார்
நல்லா இருக்கு பொன்ஸ்! நம்ம நண்பன் ஒருத்தன் காலேஜ் முடிச்சு 5 வருஷத்துலேயே இண்டர்வியூ எல்லாம் எடுத்துட்டான்(ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்காக). பயங்கர மரியாதையாம் இண்டர்வியூவராப் போகும் போது.
மணியன், அபிராமம், கொத்தனார், இளா, வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி
செல்வா, இன்னும் நல்லா எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து படித்து ஆதரிப்பதற்கு நன்றி...
பாலா, உங்க எதிர்பார்ப்புக்கு எப்போ எழுதப்போறேன்னு தெரியலை; பாக்கலாம்
கைப்புள்ள அண்ணா.. என்ன அஞ்சு வருஷத்தைப் பத்தி சொல்றீங்க.. இப்போ எல்லாம் காலேஜை விட்டு வெளில வந்து ஒரு வேலை கிடைச்ச உடனே இன்டெர்வியூ எடுக்க ஆரம்பிச்சுடறாங்க..
சரியா சொன்னீங்க பொன்ஸ்.... நானும் 1.5 வருடத்தில் இன்டெர்வியூ எடுத்தேன்
நல்லா இருக்கு பூங்கோதை
Good one
indha interview nalla irukkey. mine is
இண்டெர்வியூ!! (http://maraboorjc.blogspot.com/2006/04/blog-post_04.html ). I read your blog regularly but didn't find time to write a feedback. Will do so in future.
வருகைக்கு நன்றி balag, நீங்க கதை படிச்சீங்களா இல்லை பின்னூட்டம் மட்டும் தானா ?? :)
கருத்துக்கு நன்றி சந்தரவதனா, என் பெயர் பூங்கோதை இல்லை :)
thanks dev :)
சந்திரசேகரன், நீங்களும் என் பதிவு படிப்பீங்களா? பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப நன்றி.. உங்க இன்டர்வியூ படிக்கறேன்.. :)
கதையை முழுமையாக படித்தேன் பொன்ஸ்
t'was a good one. I really admire ur narration
நல்லா இருக்கு இந்தக் கதை.
thanks Ms. congeniality
நன்றி துளசி அக்கா.. இப்போ தான் இதுல சொன்னா மாதிரி இன்டெர்வியூவுக்கு போய்ட்டு வந்தேன் :)
நல்ல முயற்சி பொன்ஸ். நன்றாக வந்திருக்கிறது.
நானும் நிறைய இண்டர்வியூக்கள் எடுத்திருக்கிறேன். அப்பா...எத்தனையெத்தனை அனுபவங்கள்....அப்பப்பா!
//நானும் நிறைய இண்டர்வியூக்கள் எடுத்திருக்கிறேன். அப்பா...எத்தனையெத்தனை அனுபவங்கள்....அப்பப்பா! //
அதுவும் எழுதுங்க ராகவன்.. என்ன, ? போட்டோ மாத்திட்டீங்க!!!
உங்க இன்டர் வியூ நல்லா இருந்திச்சி
படிச்சதுக்கும் பாரட்டியதுக்கும் நன்றி சிங் :)
// கருத்துக்கு நன்றி சந்தரவதனா, என் பெயர் பூங்கோதை இல்லை :) //
பூங்கோதையின் செல்லப்பெயர்தான் பொன்ஸ் என்று சந்திரவதனா அவர்கள் நினைத்திருப்பாரோ?
:-)))
என்ன கதை இது?
செம கடியா இருக்கே! :(
பொன்ஸ்,
"கதையை முழுமையாக படித்தேன்"
"நல்லா இருக்கு இந்தக் கதை"
"தெளிவான நீரோடைடையைப் போன்ற அமைதியான, இயற்கையான பாணி.. "
"உங்களுக்கு நல்லா கதை வருது அம்மணி, நடத்துங்க "
நான் சொல்ல நினைத்ததை என்னைவிட அழகாக மற்றவர்கள் சொல்லிவிட்டதால் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.
ஒரு சின்னக் கேள்வி பொன்ஸ். அறிய வேண்டும் எனும் ஆவலில்தான் கேட்கிறேன்.
/* நீங்க இந்த காலேஜ்ல தான் படிச்சீங்கன்னு சொன்னாங்க.. உங்க காலேஜ் எப்போ தொடங்கினாங்க? ஸ்டூடன்ட்ஸ் எப்படி இருப்பாங்க? " என்றார்.*/
உணமையிலேயே இப்படித்தான் தமிழகத்தில் நேர்முகத் தேர்வு வைப்பார்களா? அல்லது கதைக்காக சும்மா எழுதினீர்களா?
Post a Comment