Wednesday, April 19, 2006

பொங்கியது போதும்; வாளை எடு


சங்கப் போர்வாள், வெற்றி வீரர், சென்னை தந்த செம்மல் தேவ், உன் மடல் கண்டு நான் மனம் நொந்திட்டேன்.. பெயர் விளக்கம் தெரியாத ஒரு புதுக் கட்சியினர் விடும் அறிக்கைக்காக, மனம் நொந்து நீயும் இப்படி பால் மாறுவதா!!!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடவேண்டிய வயதில் குதிரை ஏறி மால்காண்டு சென்று அங்கும் அயராமல் கட்சிப் பணி பற்றியே சிந்திக்கும் நமது தங்கத் தலைவர் எங்கே?..

எங்கே எங்கே என்று கேட்டுத் துடிக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்குக் கூட இன்னும் முகமூடி போட்டு இருக்கும் அந்த பெயர் தெரியா கட்சி எங்கே..?

எதுகை மோனையில் அறிக்கை விட்டார்கள் என்று பணிவதா?

சிங்கம் சிறு நரியைக் கண்டு மனம் வாடுவதா??!!

வ.வா.ச ப.ம.கவுக்கு பணிந்து வழிவிட்டார்கள் என்று வரலாறு பேசுவதா??!!

எத்தனை அடி வாங்கிய போதும் அழாமல் சிரித்தே எதிரிகளைச் சிதறடிக்கும் தலைவர் கைப்புவின் வழித்தோன்றல்கள் நாம்!!

இந்த சலசலப்புகளுக்கும் பினாத்தல்களுக்கும் அஞ்சி பணிவதா!!!!

இழுக்கு தம்பி இழுக்கு!!!

இன்னும் தேர்தல் அறிக்கையே வெளியிடாத அந்தக் கட்சிக்கு நாம் சீட்டு ஒதுக்கியது நமது பெருந்தன்மை. அதைப் புரிந்து கொள்ளாமல், அறிக்கை விடும் வீணர்களுக்கு பதில் சொல்ல நமக்கு அவசியமில்லை.


எடு வாளை.. இவர்களை தேர்தல் களத்தில் சந்திப்போம்..

கழகப் போர்வாள் தேவ், சங்கச் செயல் வீரன் பாண்டி, காற்றென கடுகி பிரசாரம் செய்யும் கண்மணி கீதா, பொன்மனச் செம்மல் சிபி, புயலாம் பேராசிரியர் கார்த்திக் இவர்கள் நம் பக்கம் இருக்கையில், வெற்றி நமதே..

வெற்றிவேல்!! வீரவேல்!!!! சக்திவேல்!!!!

(இதுக்கும் விஜய் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா? சும்மா ஒரு இதுக்குத் தான்.. நயன்தாரா படம் போட்டு அறிக்கை விடும்போது, நாங்களும் விஜய் படம் போட வேண்டியது தானே..

"வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா!!!")

45 comments:

ambi said...

கட்சியில் என்னை மாதிரி புதிய உறுப்பினர் சேர்க்கை எல்லாம் உண்டா? :)

துளசி கோபால் said...

பொன்ஸ்,

திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு? ( புள்ளெ எதாவது கெட்ட கனா கண்டு பயந்துருச்சோ? மாரியாத்தா... மகமாயி காப்பாத்தும்மா...)

எந்த வா(லை)ளைச் சொல்றிங்க?

வாளைமீனுக்கும்.... ஒரு பாட்டு வருதே. அந்த வாளா?

தேவ் | Dev said...

அக்கா...வாளா...அதையெல்லாம் நம்ம தல எடைக்குப் போட்டு நம்ம சங்கத்து போன மீட்டிங்க்கு நம்க்கெல்லாம் பேரீச்சம் பழம் வாங்கி கொடுத்தாரே.. மறந்துப் போச்சா.... அய்யோ அய்யோ இன்னும் சின்னப் பில்லத் தனமாவே இருக்கீங்க.... நம்ம கிட்ட பிளேடு கூட கிடையாது அது தான் உண்மை...

இதுக்காக நம்ம தல வீரத்தையோ நம்ம சங்கத்து மக்கள் வீரத்தையோ யாரும் குறைச்சுப் பேசிடக் கூடாது இல்ல அதான் ராவோட ராவா உக்காந்து தம் கட்டி தலயோட வீரவரலாற்றை விரிவா எழுதி நம்ம கச்சேரியிலேப் போட்டுருக்கேன்... பாவம் அவங்க படிச்சுட்டுப் பயந்துப் போயிருப்பாங்க...அய்யோ அய்யோ..

http://chennaicutchery.blogspot.com/2006/04/blog-post_114546002831791367.html

பொன்ஸ்~~Poorna said...

வாங்க அம்பி வாங்க... எங்க கட்சி ஒரு திறந்த புத்தகம்.. யார்வேணாலும் சேரலாம்.. விதிமுறைகள், அடிப்படைத் தகுதி எல்லாம் தேவ் தம்பிகிட்ட கேட்டுக்குங்க..

பொன்ஸ்~~Poorna said...

//திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு? ( புள்ளெ எதாவது கெட்ட கனா கண்டு பயந்துருச்சோ? மாரியாத்தா... மகமாயி காப்பாத்தும்மா...)//
என்னக்கா இப்படிக் கேக்கறீங்க.. நம்ம தான் வ.வா.சங்கத்தோட கொள்கை பரப்புச் செயலாளர் பதவிய நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் கேக்காம, தேவ்தம்பி கொடுத்துட்டப்ல.. அதான்... ஒரு அறிக்கையாச்சும் விட்டு கட்சி மானத்த காப்பாத்த வேணாமா..

//எந்த வா(லை)ளைச் சொல்றிங்க?
வாளைமீனுக்கும்.... ஒரு பாட்டு வருதே. அந்த வாளா? //

இப்படிச் சபைல கேக்கறீங்களே.. உங்க கிட்ட மட்டும் சொல்றேன்.. ரகசியமா வச்சிக்குங்க, அதே வாளை தாங்கா.. அதத்தான் எடுத்து நல்லா சமைச்சு சாப்பிட்டு ஒடம்பத் தேத்த சொல்லி எங்க தல சொல்லி இருக்காரு..

பொன்ஸ்~~Poorna said...

//இதுக்காக நம்ம தல வீரத்தையோ நம்ம சங்கத்து மக்கள் வீரத்தையோ யாரும் குறைச்சுப் பேசிடக் கூடாது இல்ல அதான் ராவோட ராவா உக்காந்து தம் கட்டி தலயோட வீரவரலாற்றை விரிவா எழுதி நம்ம கச்சேரியிலேப் போட்டுருக்கேன்... //
நல்ல வேலை செய்தாய் தம்பி..

//பேரீச்சம் பழம் வாங்கி கொடுத்தாரே.. மறந்துப் போச்சா.... //
அந்தப் பேரிச்சம் பழம் கொஞ்சம் பழசாக இருந்தது மட்டும் தான் எனக்கு நினைவிருக்கிறது.. அடுத்த முறை வேற கடை பார்க்கச் சொல்ல வேண்டும்..

//.... நம்ம கிட்ட பிளேடு கூட கிடையாது அது தான் உண்மை...//
தேவ், பிளேடு இல்லையெனில் சோர்ந்து விடக் கூடாது.. நம் அண்ணன் கைப்புவின் படங்கள் உள்ளவரை, கவலை ஏன்? அண்ணனின் வீர முகம் பார்த்தால் எதிரிக் கூட்டம் பின்னங்கால் பிடரியில் பட சிதறி ஓடாதோ!!!

செல்வன் said...

வ.வ.சங்கம்,அகில உலக ஆன்மிக சூப்பர்ஸ்டார் அண்ணன் குமரன் மன்றம்,மல்லிகை அணி ஆகிய திரிசூல கூட்டணியை கண்டு ப.ம.க பயந்து ஒதுங்கிவிட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப.ம.க வை உடைத்து இலவச கொத்தனார் தனி அணியாக கடைசி நேரத்தில் வ.வ கூட்டணிக்கு வரவிருப்பதாகவும் மதுரை மத்தியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிகிறது.

கழக தலைவர் அண்ணன் கைபுள்ளை இம்சை அரசன் புலிகேசி படப்பிடிப்பிலிருந்து வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என தெரிகிறது.கட்டதுரை,சரளாக்கா,பார்த்திபன் கூட்டணி சூறவளி சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் அந்த சூறாவளியில் ப.ம.க கலகலக்கும் என தெரிகிறது.

இராமநாதன் said...

அம்மா பொன்ஸு,
அரசியலுக்கு நீங்க புதுசு. நீங்களும் உங்க சகாக்களும் கலப்பையில் தமிழ் உழ கற்க நினைக்கக்கூட தொடங்காத காலத்திலிருந்து உலக அரசியலில் புரட்சி செயதுவந்துள்ள ஒரே கட்சி ப.ம.க.

உதயம், புதிய சட்டங்கள், ஒரு ரிஸ்க் அனாலிஸிஸ்

படித்து விட்டு, அடங்குங்கப்பா.. கைப்புவின் வெள்ளை மனம் எங்களுக்கும் தெரியும். அவரும் தன் லெவல் அறிந்து ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், உங்களைப் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் தான் நிலை தெரியாமல் ஆட்டம் போடுகிறீர்கள். இன்னும் காலம் தாழ்ந்துவிடவில்லை. பகிரங்க பொதுமன்னிப்பு வரும்வரை இது தொடரும்.

கட்சி பிரபலங்களின் லிஸ்ட் நானும் கொடுக்கவா?
1. தலைவர் முகமூடி
2. மத்திய கிழக்கு கொ.ப.சே பெனாத்தலார்
3. ஆஸ்திரேலியா பசிபிக் கொ.ப.சே துளசியக்கா
4. Intelligence Chief மற்றும் நாரதர் 'ஏஜெண்டு' ஞானபீடம்
5. சைவச்சூப்பு ஆன்மிக செம்மல் பெங்களூர் வட்டம் கோ.இராகவன்
6. வட அமெரிக்க (மேற்கு) கொ.ப.சே சின்னவன்
7. வட அமெரிக்க (கிழக்கு) பிரதிநிதிகள் கொத்ஸு மற்றும் கௌசிகன்
8. உலகக்குசும்புச் செயலாளர் - இணையில்லா இணையக் குசும்பர்

இப்போதைக்கு இதுபோதும். மேலும் விவரங்களுக்கு சுட்டிகளைப் பார்க்கவும்.

நாங்கள் பெயர்தெரியாக் கட்சியா? இது காமெடி இல்லப்பா, ட்ராஜெடி.

அ.உ.ஆ.சூ.மி.சங்க செல்வன்,
இதுபோன்ற தவறான பிரச்சாரங்களில் மேலும் ஈடுபடுவீர்கள் என்றால் நீங்களும் ப.ம.க. வின் ஹிட்லிஸ்டில் சேர்க்கப்படுவீர்கள். தனியாள் என்பதற்காக விட்டுவைத்திருக்கிறோம். தேர்தலில் தோற்று டெபாஸிட் இழந்தது நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். மறந்துவிட்டதென்றால் சொல்லுங்கள் நிலவுத்தேர்தலுக்கான சுட்டியைத் தேடித்தருகிறேன்.

அன்புடன்,
இராமநாதன்
கொ.ப.சே (ஐரோப்பா)
ப.ம.க

கவிதா|Kavitha said...

பொன்ஸ் என்ன ஆச்சி உங்களுக்கு , சென்னை வெயில் தாங்களையா?.. அடிக்கடி வெளியில போகாதீங்கப்பா.. பாருங்க...over ஆ பொங்கிட்டீங்க..!

தேவ் | Dev said...

//வ.வ.சங்கம்,அகில உலக ஆன்மிக சூப்பர்ஸ்டார் அண்ணன் குமரன் மன்றம்,மல்லிகை அணி ஆகிய திரிசூல கூட்டணி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.//

செல்வனாரே இது லட்சியக் கூட்டணி. இன்று மாலை தல கைப்பு வி சேனலில் பேட்டியளிக்கிறார். பேட்டியின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடனிருந்தால் நன்றாக இருக்கும் எனத் தல பீல் பண்ணுறார்... கண்டிப்பா நீங்க வரணும...

ஜொள்ளுப்பாண்டி said...

வ.வா.கழகம் ஈன்றெடுத்த மாணிக்கமே! சங்கத்தின் பொங்கு தமிழே ! முறத்தால் புலியை புறத்தே துரத்திட்ட வீரதமிழ் பரம்பரையில் முளைத்திட்ட வீரமங்கையே ! நின் காளி அவதாரம் கண்டு கயவர்கள் நம் சங்கத்தின் புறவாசல் வழியாக கூட்டு வைக்க வருகிறார்கள் ! ப.ம.கழகக் கொள்கையென்று ஒன்று சாம்பிளுக்கு தருகிறேன்

//ப.ம.கட்சி கொள்கைகள் ::

1. இந்த கட்சி, அந்த கட்சி என்று பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டோம்... யாரோடு சேர்ந்து எக்கேடு கெட்டாலும் எப்போதும் 4 மந்திரி பதவியை கைவசம் வைத்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம்... அதுதானே தமிழக நலனுக்கு நல்லது.//

யாரோடு சேர்ந்தும் எக்கேடு கெட்டாலும் பதவி வேண்டுமாம் நம்மோடு சேர்ந்தால் மட்டும் கெடாமல் ஆகி விடுவார்கள் என்ற மனப்பிராந்தியில் பேஸ்த் அடித்து பினத்திக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் இந்த பயம் தேவையற்றது என்பதை பச்சிளம் பாலகனும் சொல்வான் !

தோழர் மருத்துவர் ராமனாதன் அவர்கள் பகன்றிருக்கிறார்
//"அம்மா பொன்ஸு,
அரசியலுக்கு நீங்க புதுசு"//

அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் , நேசப்படுகிறேன்,விருப்பப்படுகிறேன் ! ஆமாம் நாங்க புதுசுதான் ஆனா

"நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கோம் "

உங்கள் தலைவரையே எகிப்திய பிரமிடுகளின் மத்தியில் தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டு பழங்கதைகளைப் பேசி நிலாதேர்தலென போன நூற்றாண்டில் நடந்த தேர்தலைப் பற்றியே பேசிப்பேசி வெறுமனே ஜல்லியடித்துக் கொண்டிருக்காமல் கொடுத்த சீட்டைப் பெற்றுக்கொண்டு 'கம்'முனு வங்கிகிட்டு பேசாமல் இருக்கும்படி அன்பாகக் கூறுகிறேன்.

வாழ்க பொன்மனச் செல்வி புரட்சி வேங்கை நவீன ஜான்சிராணி பொன்ஸ் !

வளர்க வ வா க !

பொன்ஸ்~~Poorna said...

கவிதா, எல்லாம் சும்மா ஒரு பொழுதுபோக்கு தான்.. இதெல்லாம் நீங்க கண்டுக்காம போங்க.. அணில மட்டும் எங்க கட்சிப் பிரசாரத்துக்கு அனுப்பி வையுங்க..

பொன்ஸ்~~Poorna said...

செல்வன்,

//ப.ம.க வை உடைத்து இலவச கொத்தனார் தனி அணியாக கடைசி நேரத்தில் வ.வ கூட்டணிக்கு வரவிருப்பதாகவும் மதுரை மத்தியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிகிறது.
//
கொத்தனார் ஏற்கனவே வ.வா.ச.வில் இருக்கிறார்.. இதைப் பத்தி சுட்டி கொடுத்திருக்கேன்.. பாருங்க..

பொன்ஸ்~~Poorna said...

ராமநாதனுக்கு ப.ம.கவின் பாசறைக்குள்ளேயே சென்று அளித்த பதில்:

பச்சோந்திகள் மட்டும் தான் புள்ளிவிவரம் சொல்லுமோ..
இதோ பிடியுங்கள் என் புள்ளி விவரத்தை:

1. வ. வா சங்கத்தின் வரலாறு அறிய புரட்டுங்கள் இந்தப் பக்கத்தை.
2. அண்ணன் குமரனும் அவர்தம் அப்பன் சிவபெருமானும் கைப்புள்ளயின் பாசத்துக்கு மயங்கி, ரொம்ப நல்லவன் என்று பெயர்சூட்டிப் புகழளித்த கதை இங்கே
3. எங்கள் கட்சியின் பலத்தைப் பறைசாற்றும் விதமாய் பேராசிரியர் கார்த்திக் எழுதிய மடலுக்கு உங்கள் கொத்தனாரே (இலவசம், இப்போவும் இடமிருக்குங்க, 'எங்கள்' ஆகுறதுக்கு ;)) ஆசைப்பட்டு எங்கள் கட்சியில் சேர விண்ணப்பித்ததைக் காண சொடுக்குங்கள் இங்கே!!
4. நுழையவே இடமில்லாத மண்டபத்தில், எங்கள் அண்ணனின் பரிசம் போட்ட நிகழ்ச்சி இங்கே
5. வந்தாரை வாழவைத்து அண்ணனுக்கு ஆப்பு வைக்கும் வ.வா.கட்சியில், வீரபாகுவுக்கு நடந்த வீர மரியாதை இங்கே
6. மகளிர் நலம் பேணும் வ.வா.சங்கத்தின் கொ.ப.செ., தற்புகழ்ச்சி சிறிதுமில்லாத தன்னடக்கச் செம்மல், அடியேன் பொன்ஸின் அறிக்கை காண இதோ, வருக வருக..

இப்போதும் நீங்கள் மன்னிப்பு கேட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினால், 'மன்' என்னும் இரு சொல்லிலேயே மனம் நெகிழ்ந்து கூட்டு, குழம்பு வைக்க எங்கள் பாண்டி நாட்டு சிங்கம், மால்கேட் மாணிக்கம் கைப்பு அண்ணன் தயாராக இருக்கிறார் என்று சொல்லி என் சிற்றுரையி முடிக்கிறேன்..

பொன்ஸ்~~Poorna said...

தேவ், பாண்டி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல், தொடர்ந்து பணியாற்றும் உங்களை வாழ்த்த தமிழில் சொல்லறியாமல், பிரெஞ்சில் தேடி விட்டு, அன்னைத்தமிழைப் புறக்கணித்தேன் என்று அண்ணன் வருந்துவாரே என்று இப்படியே விட்டு விடுகிறேன்..

தொடர்க நம் சங்கப் பணி.. வளர்க நம் கைப்பு திருநாமம் (அதே நாமம் தான்)

இலவசக்கொத்தனார் said...

//3. எங்கள் கட்சியின் பலத்தைப் பறைசாற்றும் விதமாய் பேராசிரியர் கார்த்திக் எழுதிய மடலுக்கு உங்கள் கொத்தனாரே (இலவசம், இப்போவும் இடமிருக்குங்க, 'எங்கள்' ஆகுறதுக்கு ;)) ஆசைப்பட்டு எங்கள் கட்சியில் சேர விண்ணப்பித்ததைக் காண சொடுக்குங்கள் இங்கே!!//

இதைப் பத்தி கொஞ்சம் பேசலாமா? ரொம்ப இண்டிரெஸ்டிங்கான விஷயம்.

முதலில் நான் என்ன எழுதினேன்னு பார்ப்போம்.

//அண்ணா,

சமீப காலத்தில இவ்வளவு உணர்ச்சியை தூண்டும் விதமா யாருமே எழுதின ஞாபகம் இல்லீங்கண்ணா. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்கண்ணா.

உங்க கட்சியில் சேரலாம்ன்னு தோணுது, ஆனா அதுக்கான வயசு இல்லீங்களே. ஏதாவது இளைஞர் அணி இருக்குதாங்கண்ணா?//

இதுதான் நான் எழுதினது. இப்போ ஏன் எழுதினேன்னு பார்க்கணும். இவங்க சங்க நம்பர் 2 (பேராசிரியர்ன்னா தமிழ்ல நம்பர் 2ன்னுதானே அர்த்தம், (சாரி, குமரன் கோச்சுப்பாரு), பொருள்.) ஒரு கடிதம் எழுதறாரு. ஆனா அதைப் படிச்சா நம்ம கழக வாசனை வீசுது. என்னடான்னு பார்த்தா, நம்ம கழக கண்மணிகளுக்கு நிலா தேர்தலில் நான் எழுதிய மடலின் அப்பட்ட காப்பி. வேணும்னா இங்க போய் பாத்துக்குங்க.

சரி இந்த மாதிரி டாக்டர் பட்டம் வாங்கினவங்க எல்லாம் காப்பியடிச்சுப் பாசானவங்கதானே. என்னடா, நம்மளைப் பாத்து எழுதி இருக்காங்களே. நமக்கு ஒரு சலாம் வைக்கக் காணுமே. சரி, சின்னப் பசங்க முன்னுக்கு வரணும் அதனால அவதூறு வழக்கெல்லாம் போட வேண்டாம். போனா போகட்டும். ஆனா அதே சமயம் அவங்களுக்கு புரிய வைக்கணும் என்ற எண்ணத்தில் இப்படி எழுதிப் போட்டேன். சரி, வஞ்சப் புகழ்ச்சியை புரிஞ்சுகிட்டு இவ்வறிக்கையின் மூலம் அப்படின்னு ஒரு சுட்டி குடுப்பாருன்னு பார்த்தா அவரு என்னமோ அவரை பாராட்டறதா நினைச்சுகிட்டு பதில் போடறாரு. அடி, உதை வாங்கி மரத்துப்போன இவங்க கிட்ட நாசூக்கா பேச நினைச்சது என் தப்புதான். என்ன பண்ணறது.

சரி. இவருக்குத்தான் புரியலை. ஆனா இதை வச்சு எங்க கழகத்தில் கலகம் பண்ண நினைக்கிற இவங்க சங்க கொ.ப.செ.வை என்ன சொல்லறது? எங்க போயிங்க முட்டிக்கிறது? என்னமோ எங்க வெ.வா. இவங்க சங்கத்தில சேர்ந்திருக்காராமே. அவரை வச்சு வஞ்சப் புகழ்ச்சி பத்தி பாடம் நடத்த சொல்லணும். நினைக்க நினைக்க சிரிப்புதாங்க வருது.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், உண்மையாப் பாத்தா பேராசிரியர்னு உம்மைத் தான்யா கூப்பிடணும்.. என்ன அற்புதமா பதம் பிரிச்சி விளக்கறீரு!!!

இப்போ நீங்க குடுத்த பதிவ நான் படிச்சி பார்த்தேன்.. அதுக்கும் எங்க பேராசிரியர் நம் 2 க்கும் அவ்வளவா ஒத்துமை இல்லயே.. தமிழ் ஒரு விந்தையான மொழி.. அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோணி இருக்கோ?? கட்சியில நான் புது மெம்பர்ங்கறதுனால, இந்த மகளிர் தின செய்தி அறிக்கை பத்தி எல்லாம் தெரியலை..(அதான் உங்க பாணியில, ஏன், எதனால்னு தெரியலை) அதுனால இதப் பத்தி கருத்து சொல்ல நான் எங்க பேராசிரியரையே அழைக்கிறேன்.. இதோ அமெரிக்க டயத்துல வந்துருவாரு..

இருந்தாலும் நீங்க வஞ்சப் புகழ்ச்சிஎல்லாம் பண்ணினது கொஞ்சம் ஓவர்.. எங்க வ.வா.சங்கப் பசங்களுக்கு வெளிப்படையான புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்குமே வித்தியாசம் புரிய நேரமாகும், இதுல வஞ்சத்தையும் கொஞ்சத்தையும் அவங்க எங்க கண்டாங்க..

கடைசியா, வெ.வா. கண்டிப்பா சேர்ந்திருக்காருங்க.. அவரு பேர்லேர்ந்தே தெரியலையா? எவ்வளவு மோனையோட இருக்கு - எங்க சங்கப் பேருக்கு??!!

நன்மனம் said...

யாருப்பா அது வஞ்சப்புகழ்ச்சிய பத்தி பேசறது, பினாதலார் வராரு. இங்க வஞ்ச புகழ்ச்சிய தோலுரித்து காட்டுனது யாருனு சொல்லுங்க பாப்போம்?

ஸ்ரீதர்

இலவசக்கொத்தனார் said...

யோவ் அம்பி,

என்ன நக்கலா? ஒரு பக்கம் நம்மளை தலைவான்னு கூப்பிடறது, அப்புறம் இந்த மாதிரி சங்கத்துல எல்லாம் சேரரது. இதெல்லாம் நல்லா இல்லை. சொல்லிட்டேன். ஆமா.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், ஏதோ எங்க கட்சியிலயும் வீரப் பேச்சுக்கு மயங்கி ஒருத்தர் சேரரேன்னு சொல்றாரு.. அவரையும் இப்படி மெரட்டினா நாங்க எங்க போகறது??

ஏற்கனவே நாங்க எங்க தலைவரையும் பேராசிரியரையும், தளபதியையும் தேடிகிட்டிருக்கோம்.. இப்போ எங்க புது உறுப்பினரையும் எடுத்துகிட்டா என்ன பண்றது??

இப்படி பக்கத்துல வாங்க, உங்களுக்கு குளிரூட்டப்பட்ட காரே ஏற்பாடு பண்ணி இருக்கோம்.. நைஸா இப்படி வந்துருங்க.. பச்சக் கலர் சட்டை கூட போட்டுட்டு வர வேணாம்.. அடிப்படை உறுப்பினர் கார்டு ரெடியா இருக்கு :)

Karthik Jayanth said...

சங்கத்தின் செயல் சுனாமி பொன்ஸ் அவர்களே,

ஒரு கொடியில் பூத்த இரு பாச மலர்கள் நாம், இதில் பிரிவேது. இந்த அன்பு தம்பியின் உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.

//தமிழ் ஒரு விந்தையான மொழி.. அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோணி இருக்கோ??

நீங்கள் கொடுத்த விளக்க அறிக்கையையே நான் வழிமொழிகிறேன். கொத்ஸ் அவர்கள் எழுதிய அறிக்கையை பார்த்தேன். படித்தேன்.

இதனை இந்த உ.தா கொண்டு விளக்க முனைகிறேன்.

போர்களத்தில் தளபதி ஆற்றும் உரை ஒன்றுதான் அதர்மம் அழிய, தர்மம் நிலைக்க வெற்றிவேல் !! வீரவேல் !! .இதனை ஒரு மொழியில் எவ்வாறு வேறு வார்த்தைகளை கொண்டு சொல்ல முடியும்.. இந்த வார்த்தைகளைத்தான் சூரபதுமனை சூல் கொண்டு அழித்த எம்பெருமான் முருக கடவுள் சொன்னது, கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதும் இதுதான்.

உலகின் தலை சிறந்த வீரர்களை எடுத்து கொண்டால், போர்முனையில் வெற்றி ஒன்றையே வேண்டிய மாவீரன் அலெக்ஸாண்டர் சொன்னது, மக்கள் புரட்சி மூலம் உலகில் புதிய சரித்திரதை எழுதிய லெனின், சேகுவேரா என ஒரு மொழி வார்த்தையில் சொன்னால் ஒன்றுதான். ஒரு பொருள் வார்த்தையை சீர்/ மோர்/ பீர் எனவும், எதுகை/ இடக்கை/ வலக்கை/ உலக்கை/ மோனை எனவும், அடி உதை எனவும், ஒரு வார்த்தையை நான் சொன்னேன் அவன் என்னை பார்த்து படிக்கிறான் / பதிவை இடிக்கிறான் என்று சொல்ல நான் ஒன்றும் இலக்கிய பித்தன் அல்லவே.களத்தில் வெற்றி ஒன்றையே விரும்பும் வீர தளபதி நான்.

நிலா அவர்கள் நடத்திய தேர்தலில் ஆன்மிக உலகின் ஆழ்கடல் (ரிஜீஸ்டர்டு), பல பதிவுகளின் பன் முக நாயகன், தகவல் சுரங்கம், உள்/ வெளி/ சைடு/ மேல்/ கீழ் குத்து என எதுவும் இல்லாமல் நேரடியாக செய்திகளை சுருங்க கூறும் கருத்து கந்தசாமி, இணைய உலகுக்கு கோனார் நோட்ஸ் போட்ட பெரும் தலைவன், வழி தவறுவோர்க்கு கலங்கரை விளக்கு, அரவணைத்து நல்வழி காட்டும் அன்பு செம்மல், மதுரை தந்த மண்ணின் மைந்தன் அண்ணன் குமரன் அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தில்தான் வரலாறு காணாத வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இவர்களோ பழம்பெருமை மட்டுமே பேசி, இப்படி சரித்திரத்தை திசை திருப்பும் முயர்ச்சியிலும் இறங்கி இருப்பதுதான் இதில் விந்தையான விசயம்.

பினாத்தல் சுரேஷ் said...

இந்தப் பதிவையோ, அதன் பின்னூட்டங்களையோ, படிக்கும் அளவிற்கு எங்களுக்கு வேலை இல்லாமல் இல்லை என்பதை பதிவு செய்வதற்காகவே இங்கு வந்தேன். இந்தப்பதிவை இலவசனாருக்கு ஒதுக்கி இருப்பதில் அவர் மிகப்பாந்தமாக் வேலை செய்வதை அறிய முடிவதால், அவருக்கு மின்குளிரூட்டான் மற்றூம் பனிக்காலத்துக்கு மின் கொதிப்பூட்டான் பொருத்திய ஊர்தி பிரச்சரத்துக்காக வழங்கப்படுகிறது.

தேவ் | Dev said...

பெருமதிப்பிற்குரிய சங்கத்து கொ.ப.செ பொன் ஸ் அக்கா அவர்களே... சங்கத்துப் பிராச்சாரத்திற்காக நானும் சங்கத்து முன்னணியினரும் அன்னைத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று களப் பணி ஆற்றியதில் அறிந்தது....
தமிழகமும் தமிழ் மக்களும் வருத்தப் படாத வாலிப சங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தெரிகிறது.

தல கைப்புவின் மீது கொண்ட அன்பு புலப்படுகிறது.

தம்பி பாண்டியின் சீரிய திட்டங்கள் இளைஞர்களையும் இளைஞிகளியும் கவர்ந்திருப்பது தெரிகிறது

சங்கத்தின் செயலாளர் தளபதி சிபியின் குமர காவியம் மற்றும் அமானுஷ்ய வாசகி போன்ற படைப்புக்கள் சங்கத்தை நகரங்களைத் தாண்டியும் வேரூன்ற செயதுள்ளது

அண்ணி கைப்பொண்ணுவின் எளிமை... அக்கா ஆற்றலரசி (உங்களைத் தான் இப்படித் தான் ஊருக்குள்ளே கூப்பிடுறாயங்க) பொன் ஸ் அவர்களின் எழுச்சி மிகு சங்கப் பணி ஆறிலிருந்து அறுபது வரை பெண்களிடம் நமக்கு நல்ல பேரை வாங்கி தந்து இருக்கு...
தமிழ் மக்களுக்கு 'சிரிப்பு எம்.ஜி.ஆர்' அண்ணன் கைப்புக்குப் பிறகு மிகவும் செல்வாக்கான இடம் உங்களுக்கு இருக்கிறது எனபது நான் கண்கூடாய் கண்ட உண்மை.
இன்னும் பல செய்திகள் இருக்கு ஆனால் சுருங்கச் சொல்லும் பொருட்டு

நண்பர் ஜிரா கடைசி நேரத்தில் காலை வாரி விட்டு கூட்டணி மாறி அவர்கள் மேடையில் நின்று கூவும் அவலத்தை தமிழ்க மக்கள் அவ்வளவாக ரசிக்க வில்லை... நல்லாத் தமாசாப் பேசுறார்ப்பா என அவரைக் கோமாளியாக்கி சிரிக்கிறார்கள்... ஜிராவின் துரோகத்தைத் தமிழகம் மன்னிக்காது.

ம்ம்ம்ம் இன்னும் இருக்கும் ப.ம.க பற்றி மக்கள் கருத்து... அதை வந்து சொல்லுறேன்.

பொன்ஸ்~~Poorna said...

அருமை தம்பி அருமை.. என்ன ஒரு பதிவு.. சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் இப்படி சூடான செய்திகளாக அள்ளி வழங்கும் உனக்கு எத்தனை சூடான இட்லி வடை தந்தாலும் தகும்

ஜிரா மாதிரி கடைசி நேர ஆதாயங்களுக்காக வாக்கு மாறுபவர்களைக் கண்டு தமிழகம் கைக்கொட்டி சிரிக்காமல் கையாட்டி ரசிக்கவா செய்யும்?!! எத்தனை மரியாதையாய் வைத்திருந்தோம் அவரை.. சமையல் துறை மந்திரியாக இருந்த அவரை வருவாயை அதிகரிக்கும் எரிவாயுத் துறைக்கு மாற்றலாம் என்று நேற்று கூட தலைவர் கைப்பு தொலைபேசியில் இயம்பினார்.

இப்படி ஆனது என்று நான் நவின்றதுமே நம்ப இயலாமல், தம்பி தேவிடமும் நம் தளபதி சிபியிடமும் ஒன்றுக்கு இருமுறை கேட்டபின்னும் கலங்கி நின்றிட்டார்.

அண்ணனுக்கு ஜிராவின் செய்கையை ஜீரணிக்க இன்னும் ஜில (சில தான், ஒரு மோனைக்காக) நாள் ஆகும்..

அதுவரை கழகத்தை வழிநடத்திச் செல்லும் பெரும் பொறுப்பு நம் பிஞ்சுத் தோள்களில் விழுந்துவிட்டது..

பொன்ஸ்~~Poorna said...

சுற்றுப்பயண சூறாவளி தம்பி தேவ்,

ப.ம.கவிலிருந்து அவர்கள் கொள்கையும், குடும்ப அரசியலும் கண்டு மனம் நொந்து செயல் வீராங்கனையாம் அன்னை உஷா தேவி வ.வா.சங்கத்தில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்.

அன்னைக்கு விருப்பமான தொகுதியைக் கொடுத்து அவர்தம் வருத்தம் தீர சோளா ஷெரட்டனில் ஒரு அறை ஒதுக்கி அவரின் சொந்த உபயோகத்துக்கு, வழக்கமாக நம் மந்திரிகளுக்கு அளிக்கும் செவ்ரோலே காரை கொடுக்குமாறு அண்ணன் சொல்லச் சொன்னார்.

அண்ணி கைப்பொண்ணுவையும் கொஞ்ச நாளாகக் காணோம்.. அவரை இந்தப் பச்சோந்திக் கட்சியினரால் ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோவென என் தாயுள்ளம் பதறுகிறது.. அதையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்..

உன் சுற்றுபயணம் பற்றி இன்னும் விரிவாகப் பதிவிடவும். அப்படியே கார்த்திக்குக்கு ஒரு தொகுதி ஒதுக்கவும்.. பேராசிரியர் மறுபடி பாட்டெழுத ஆரம்பிச்சுட்டாரு.. அப்படியே விட்டுட்டா அடுத்து அப்படியே அமெரிக்க 'குடி'மகனாய்டப் போறாரு..

சரளாக்கா said...

என் அன்பு தம்பி கைப்புவின் மகிமை தெரியாமல் ஆட்டம் போடும் ப.ம.கவை எச்சரிக்கிறேன்.உங்கள் ஆட்டத்தை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்கள் ஓட்டை மாற்றிப்போட்டால் தெரியும் கதை.

வ.வா.சங்க மகளிரணி களத்தில் இறங்கினால் ப.ம.க அடுத்த நிமிடம் காணாமல் போய்விடும் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.புயலென என் தம்பி கைப்பு களத்தில் இறங்கினால் நிலைமை இன்னும் மோசமடையும்.

வேணாம்.விட்டுருங்க.தம்பி தேவ் கொடுத்த 31 தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் நல்லது.இல்லாவிட்டால் திண்டிவனம் ராமமூர்த்தி,டீ.ராஜேந்தர் கட்சி நிலைமை தான் உங்களுக்கும் ஏற்படும் என எச்சரிக்கிறேன்

G.Ragavan said...

// நண்பர் ஜிரா கடைசி நேரத்தில் காலை வாரி விட்டு கூட்டணி மாறி அவர்கள் மேடையில் நின்று கூவும் அவலத்தை தமிழ்க மக்கள் அவ்வளவாக ரசிக்க வில்லை... நல்லாத் தமாசாப் பேசுறார்ப்பா என அவரைக் கோமாளியாக்கி சிரிக்கிறார்கள்... ஜிராவின் துரோகத்தைத் தமிழகம் மன்னிக்காது. //

வீண்பழி சுமத்தும் தேவே....வேலையைப் பாத்துக்கிட்டுப் போவே என்று மக்கள் துரத்தும் நாள் விரைவில் இல்லை.

நானா துரோகி....நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். அன்றைக்கு நீங்கள் வீட்டிற்கு வந்த பொழுது பத்து இட்டிலி பத்தாது என்ற பொழுது இருபத்தைந்தாகக் கொடுக்கச் செய்தேன். அதுவும் பத்தாமல்
இரண்டு இட்லி வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
சட்னியுடன் ஒன்று
சாம்பாருடன் ஒன்று - என்று பாடிக் கேட்டது மறந்து விட்டதா? அப்பொழுது என் கையால் நானே இரண்டு இட்டிலிகளை முழுதாய் உமது இலையில் வைத்தது மறந்தது போலும்.

அந்த நன்றியை மறந்து உமது வீட்டிற்கு நான் வந்த பொழுது எனக்குத் தண்ணீர் கூடக் கொடுக்காமல் பெப்சி என்ற கருப்புத் திரவம் கொடுத்த உமது கருப்பு உள்ளத்தை நான் அறியேனோ! ஊர் மக்கள்தான் அறியாரோ!

அன்றைக்கு எனக்குத் தண்ணீர் குடுக்கக் கூடாது என்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள் சொன்னது உங்களுக்கு மறந்து போனதா?

ஆறும் ஒன்பதும் எனக்கும் மறக்கவில்லை. மக்களுக்கும் மறக்கவில்லை. வருகின்ற தேர்தலில் உமது கட்சிக்கு ஆறு சீட்டு கூடக் கிடைக்காமல் இருக்க இப்பொழுதே அறம் பாடுகிறேன். பிறகு தெரியும் யார் கோமாளி என்று.

அப்பொழுது உமது Bun TVயானது ஊசிப் போகும் என்று இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.

G.Ragavan said...

// ஜிரா மாதிரி கடைசி நேர ஆதாயங்களுக்காக வாக்கு மாறுபவர்களைக் கண்டு தமிழகம் கைக்கொட்டி சிரிக்காமல் கையாட்டி ரசிக்கவா செய்யும்?!! எத்தனை மரியாதையாய் வைத்திருந்தோம் அவரை.. சமையல் துறை மந்திரியாக இருந்த அவரை வருவாயை அதிகரிக்கும் எரிவாயுத் துறைக்கு மாற்றலாம் என்று நேற்று கூட தலைவர் கைப்பு தொலைபேசியில் இயம்பினார். //

யாரது பொன்ஸா பேசுவது. பேசுவதற்கு முன்னால் தலைவரை ஒரு பேச்சு கேட்டு விட்டுப் பேசுவது நல்லது. அவருக்குத் தெரியும் என்னை எதிர்த்துப் பேசினால் என்னாகும் என்று.

பெங்களூர் மாநகரில் மட்டுமே எங்களுக்குப் பத்துக்கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பத்து கோடி பேரும் நடந்தே சென்னை வந்தது இன்னமும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன். அன்றைக்கு வரவேற்கக் கூட வராதவர்கள் இன்றைக்குப் பேசுகிறார்கள்.

மத்தியில் உமது ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு நாங்கள் நடக்கும் ரோடெல்லாம் ஒருவழிப்பாதைகளாக்கி எங்களை நீண்ட தூரம் நடக்க வைத்த நயவஞ்சகத் தனத்தை உலகம் இன்னமும் மறக்க முடியாமல் தவிக்கிறது.

இரண்டு ஒருவழிப் பாதையை ஒன்றோடு ஒன்று சேர்த்து பத்து நாட்களாக ஒரே சாலையில் என்னை....என்னை விடுங்கள்...எங்கள் அன்புத் தொண்டர்களைச் சுற்றி வரச் செய்தீர்களே....கால் வலிக்கிறது என்று அழுத பொழுது அமிர்தாஞ்சன் குடுத்தீர்களா? அயோடக்ஸ் வாங்கித் தந்தீர்களா?

சமையல்துறைப் பொறுப்பில் இருந்த என்னை கைப்புள்ளையின் சமையலில் குழப்படி செய்து பதவிக்கு வர இருந்தேன் என்று வீண்பழி சுமத்தியதும் தொண்டர்கள் எனக்காக டீக்குடித்ததும் இன்னமும் என் கண்களிலேயே இருக்கின்றது.

அந்த டீக்குவளைகள் என் வீட்டு வரவேற்பரையில் இன்னமும் இருக்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டுதான் வெளியே வருகிறேன். இதெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது. நேற்று வரை அரசியலே தெரியாமலே இருந்து விட்டு...இன்றைக்கு மத்திய மத்திரியாகி இருக்கும் உங்களுக்கு எங்கே அரசியல் தெரியப் போகிறது. பிழைத்துப் போங்கள்.

// அண்ணனுக்கு ஜிராவின் செய்கையை ஜீரணிக்க இன்னும் ஜில (சில தான், ஒரு மோனைக்காக) நாள் ஆகும்.. //

ம்ம்ம்ம்....ஆட்டுக்கால் பாயவை அள்ளிக் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் கேட்டால்தானே....அஜீரணமாம்..தேர்தல் முடிவு உங்களுக்கு அஜீரணத்தைத்தான் தரும் என்பதற்கு இதுவே அத்தாட்சி.

Jeeves said...

கட்சித் தலைமை என்னைப் போன்றீரை சிறிதேனும் மதிக்காததாலும், ஆற்றலரசியும் என் பெயரை எங்கேயும் சொல்லாமலும் இருட்டடிப்பு செய்வதால் இந்தச் சங்கத்தை விட்டு விலகுகிறேன். இந்தக் கடிதத்தையே எனது இராஜினாமா கடிதமாக வைத்துக் கொள்ளவும்

ஏற்கனவே குருவி பிஸ்கோத் வாங்கித்தரேன்னு சொன்ன தலைவர் ஏமாற்றியதை கண்டித்தும்
வெளியேறுகிறேன்


ஜீவா

பெருசு said...

பொன்ஸ்

உமது உருமல் கண்டு எமது தினவெடுத்த தோள்கள்
போர் போர் என முரசு கொட்டினாலும் ,அரசு கட்டிலில்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் அடலேறுவின்,
பென்சிலால் வரைந்த மீசை ஜொள்ளால் கரைந்தாலும் ,

இருங்க இம்சை அரசன் 23 க் காக நான் எழுதிக் கொண்டிருக்கும் பதிவின்
முன்னூட்டத்தை இங்கே பின்னூட்டமாக

கொழப்பற பெருசு

இலவசக்கொத்தனார் said...

//இப்படி பக்கத்துல வாங்க, உங்களுக்கு குளிரூட்டப்பட்ட காரே ஏற்பாடு பண்ணி இருக்கோம்.. //

//அவருக்கு மின்குளிரூட்டான் மற்றூம் பனிக்காலத்துக்கு மின் கொதிப்பூட்டான் பொருத்திய ஊர்தி பிரச்சரத்துக்காக வழங்கப்படுகிறது.//

இப்போ என்ன சொல்லறீங்க?

பொன்ஸ்~~Poorna said...

கொத்தனார்,
இதெல்லாம் இப்படி பப்ளிக்கா பேசக் கூடாது.. மின்குளிரூட்டான், மின்கொதிப்பூட்டான்னு சொல்லிடா ஆச்சா?? இதெல்லாம் எப்படி சாத்தியம்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..

ஒரு சின்ன காரே தராம உங்களை வ.வா.ச அலுவலகத்துக்கும், ப.ம.க வீட்டுக்கும் நடையா நடக்க விட்டிருக்காங்க.. இந்த நிலையில் மின் குளிரூட்டானாம்.. கின் கொதிப்பூட்டான்னாம்.. சிரிப்பு தாங்க வருது.. இப்படி அப்பாவியா இருக்கீறே.,

பொன்ஸ்~~Poorna said...

அக்கா, சரளாக்கா, வாங்க வாங்க..

நல்ல வேளை.. இவ்ளோ நாள் மகளிர் தனியா நான் மட்டும் கத்திகிட்டிருந்தை மகளிர் அணி ஆக்கி மெரட்டிடீங்க..

பொன்ஸ்~~Poorna said...

//இரண்டு ஒருவழிப் பாதையை ஒன்றோடு ஒன்று சேர்த்து பத்து நாட்களாக ஒரே சாலையில் என்னை....என்னை விடுங்கள்...எங்கள் அன்புத் தொண்டர்களைச் சுற்றி வரச் செய்தீர்களே....கால் வலிக்கிறது .//
இதுக்குத் தான் பெண்களூர்ல இருக்காதீங்கன்னு சொல்றது.. தங்கத் தமிழகமும் சிங்காரச் சென்னையும் இரட்டை வழி, மூன்று வழி ஏன், சில முறை தெருவில் நடக்கும் ஆடு மாடுகளின் வழியும் சேர்த்து நான்குவழிப் பாதைகளாகவே போட்டு வைத்திருக்கும் எங்கள் அண்ணனின் அன்பு ஊருக்கு வரவேற்கிறது..

//அந்த டீக்குவளைகள் என் வீட்டு வரவேற்பரையில் இன்னமும் இருக்கின்றன.//
அந்த டீக்குவளைகள் எங்கள் சங்கத்தின் பொதுச் சொத்து.. சீக்கிரம் திருப்பித் தரவும்.. நீங்கள் அணியிலிருந்து விலகியதைக் கண்டித்து பல உறுப்பினர்கள் டீக்குடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொன்ஸ்~~Poorna said...

நண்பா ஜீவாஆஆஅ (எபெக்டுக்கு..).
நீ வெண்பா எழுத அழைத்த போதெல்லாம் உன்பா என்பா என்று ஏலம் விடாமல், எங்கள் சங்கத் தலை முதல் கடைக் கோடி உறுப்பினரான பொன்ஸ் வரை, தளபதி சிபி முதல் நக்கல்திலகம் பார்த்தி வரை வந்து வெண்பாடியதை மறந்து விட்டாயா?
உனக்கும் எங்கள் தலைக்குமான அன்பு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையர் போல், அதியமான் ஔவையார் போல் சரித்திரத்தின் பொன்னேடுகளில் இடம்பெற வேண்டிய நட்பு என்று தலை கைப்பு இப்போதும் எப்போதும் முப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்..
சூடான நெய்யப்பம் தா என நீ கேட்ட போது, எங்கள் தலை, இந்தோர் முழுவது தேடி நல்ல அக்மார்க் நெய்யிலேயே செய்து கொண்டுவந்து கொடுத்ததை மறந்தனையோ...

தன் 'தலையில்' தானே நெருப்பு என்று எங்கள் தலையைப் புகழ்ந்து நீ எழுதிய பதிவு தன் தலையில் தானே நெருப்பு வைத்து மறைந்த போது, விழுந்தடித்துக் கொண்டு வந்து வருத்தம் தெரிவித்தது யார் என்பது நினைவிருக்கிறதா?

காவிரி ஆற்றின் கரையில் நாம் அமர்ந்து வெண்பா வடித்ததூ ஊம்
அதைக் கொத்தனார் கேட்டு ரசிக்க முயன்று முழித்ததூஊம்
அதைக் கண்டு சிரிக்காம, நாம் வெண்பா இலக்கணம் சொல்லிக் கொடுத்ததூஊம்
எல்லாம் நீ மறந்தது விதி இல்லை நண்பா
நம் எதிரிகள் செய்யும் சதி..

வெண்பாத்துறை என்று ஏட்டில் இல்லாத ஒரு துறையை ஒதுக்குவதாக அந்த விந்தை மருத்துவன் விளம்பிடுவான்.. அதை நம்பி மோசம் போகாதே நண்பா..

உனக்காக இங்கே தமிழ்ப் பணித்துறையும் அற நிலையத் துறையும் காத்திருக்கின்றன.. அண்ணனின் தாயுள்ளம் இந்த ராஜினாமாவை இன்னும் அறியவில்லை என்று சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்...

இலவசக்கொத்தனார் said...

//நடையா நடக்க விட்டிருக்காங்க.//

ஹெலிகாப்டர் வேணுமான்னு கேட்டாங்க. நாந்தான் வேணாம்ன்னு சொன்னேன். அதற்காக்த்தான் அந்த வண்டி. எங்கள் இயக்கத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இலவசக்கொத்தனார் said...

//இந்த ராஜினாமாவை இன்னும் அறியவில்லை என்று சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்...//

அவரு ஆளையே காணும். அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. போங்க. போயி வேற வேலை இருந்தா பாருங்க.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸூ.. இப்போத்தான்யா யோசிச்சி யோசிச்சி எழுதினேன்.. அதுக்குள்ள பின்னாடியே வந்தா எப்படி..

சரி சரி..
வழக்கம் போல வெண்பாவ ரிலீஸ் பண்ணுங்க.

Jeeves said...

:D இப்படி ரெண்டு பக்கமும் பண்ணா நான் எந்தப் பக்கம் சேர்ரது ?? பேசாம அரசியலே வேண்டாம்னு ஒதுங்கி ஹிமயமலைக்கு போய்ட போறேன் :((


வருகிறேன்

அழுகையுடன்

ஜீவா

பொன்ஸ்~~Poorna said...

ஜீவா,

ரொம்ப இளகிய மனசுக்காரரா இருக்கீங்க. நீங்க அழுதா தலை மனசு தாங்குமா..
"உன் கண்ணில் நீர் வழிந்தால்"னு பாட ஆரம்பிச்சிட்டாரு.

நீங்க பேசாம சைக்கிள் ஓட்டிட்டே, வெண்பா இலக்கணம் பத்தி, மோனை பத்தி பதிவு போட்டுட்டு இருங்க.. நாங்க இந்த தேர்தல் முடிஞ்ச உடனே உங்களைத் தமிழ்ப் பணித்துறைல உக்கார வச்சிர்ரோம்..

தேவ் | Dev said...

//வீண்பழி சுமத்தும் தேவே....வேலையைப் பாத்துக்கிட்டுப் போவே என்று மக்கள் துரத்தும் நாள் விரைவில் இல்லை.//

நீங்கள் பேசவில்லை ஜிரா... கூடா அணியின் கும்மி சத்தமும் குலவைச் சத்தமும் தான் உங்கள் மறுமொழியில் எனக்குத் தெரிகிறது...

அன்று நீங்கள் கொடுத்த 25ல் நா நயம் இருந்தது,.... நானும் சுவைத்தேன் நாட்டிற்கும் அந்த சுவையை எடுத்து இயம்பினேன்... இரண்டு கேட்டேன்.. இன்று பிரண்டு போவீர் என்று அறிந்திருந்தால் அன்று அப்படி கேட்டிருப்பேனா?

ஆகா பெஸ்சி என்ற கரும் திரவாமா... அய்யா ஜிராவே அது உருவாகும் இடம் தெரியுமா? அதன் பின்னணி தெரியுமா? அந்த கரும் திரவம் உருவாகும் மிடாஸ் தொழிற்சாலைகளின் பூர்வீகம் தெரியுமா? ம்ம் என்னச் சொல்ல.. தாயின் சமையல் போல் அன்பும் நட்பும் சேர்ந்து பரிமாறும் நீங்கள் இன்று மிடாஸ் கூட்டத்தினரோடுத் தான் கைக்கோர்த்து நிற்கிறீர்.. அதைப் புரிந்து கொள்ளும்...
சென்னையில் தண்ணி உங்களுக்கு கொடுக்க முடியாமல் நாங்கள் அந்த கரும் திரவம் கொடுத்த பொழுது ருஷ்ய பனிமலைகளை உருக்கி இந்த தமிழனின் தாகம் தீர்த்து இருக்க வேண்டாமா.. இன்று உம்மை முடுக்கி விடுவோர்...செய்யவில்லையே மாறாக அன்று உம் தாகத்திற்கு நாங்கள் அளித்த எங்களிடமிருந்த அரையாண்டு பொக்கிஷமான பெப்ஸி மீது விரல் நீட்டுகிறார்கள்.

எங்களுக்கு தண்ணி வராமல் போனதற்கு காரணமே ப.ம.க தான்...கருப்பு மனமே... கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று தேனினும் இனிய திருத்தமிழில் வாழ்த்துப் பாடிய உம் நாவு இன்று கருப்பைப் பழிப்பது எப்படி ஜிரா? செஞ்சோற்று கடனை நன்றாகவே ஆற்றுகிறீர் நண்பரே.. வாழ்க நீர்.. வரு.வா.ச உம்மை மன்னித்தாலும்.. தலக் கைப்புவின் அன்பு மனம் உம்மை மன்னித்தாலும் தமிழக மக்கள் உம்மை மன்னிக்க மாட்டார்கள்... நீர் தோற்க போவது உறுதி...கடைசியாக ஒன்று... உம் தோளிலிருக்கும் க்ருப்பு துண்டின் கலரை உடனே மாற்றும்...இனி கருப்பு உமக்கு அழகல்ல

பொன்ஸ்~~Poorna said...

தேவ் தம்பி..

இத்தோட முடிச்சிகிடலாம்னு உஷாக்கா சொல்லிட்டாங்கப்பா.. ரெண்டு தலையும் இல்லாம, எவ்வளவு நாள் தான் சமாளிக்கிறது.. அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

வெட்டிப்பயல் said...

Kaipponnuvin Varugai matrum therthal Arikkai aagiyavatrai thodarnthu Va.Vaa.Sangathin Kudumba Arasiyal Pokkai kandithu Namakkal Shibi Sangathai Vittu veliyeri Paa.Ma.Kavil Inaiya Iruppathaga therigirathu.

தேவ் | Dev said...

நம் சிபியா அறிக்கை விட்டிருக்கிறார்... அய்யோ அய்யோ... தமிழுக்காகவும் தமிழ் வாலிபர்களுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த சிபியின் அறிக்கையா இது... ஆங்கிலத்தில் யாரோ எழுதி கொடுத்தது போல் உள்ளது... போகட்டும் ... சிபி சிறைப்பட்டு விட்டார்....தளபதி தள்ளுபடி ஆகிவிட்டார்...

தேவ் | Dev said...

அக்கா கடைசியாகக் கிடைத்த தகவல்... தளபதி சிபியை ஒரு நாலு பேர் தூக்கிட்டு போய் ரஷ்யா காபி பார் ஓரத்திலே வச்சு சப் சப்ன்னு அடியை போட்டிருக்காங்க.... அவரும் வலி தாங்காமா கத்தி இருக்காரு... வரு.வா.ச விட்டு விலக்ச் சொல்லி நொங்கு நொங்குன்னு நொங்கியிருக்க்காங்க... பாவம்க்கா அவர்... அப்புறமா ஒரு ஆட்டோவில்ல போட்டு கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு கொண்டு போயிருக்காங்க...அங்கே ஒரு 8 கொத்தனார் குரூப் குமுறு குமுறுன்னு குமுறியிருக்காயங்க.. சிபி சீவன் போற அளவுக்கு சவுண்ட் விட்டிருக்காரு.. அப்புறம் அவ்ரை ஒரு கூடையிலேப் போட்டு எட்டாவது மாடிக்கு கொண்டு போயிருக்காயங்க..அங்கேயிருந்துப் பார்த்தா பூரா கோயம்புத்தூரும் தெரிஞ்சுதாமா....அதைக் காட்டத் தான் நம்மளைக் கொண்டாந்து இருக்காங்கன்னு சிபி சந்தோஷப் பட்ட கேப்பிலே பளார் பளார்ன்னு மாத்தி மேஸ்த்திரி கொத்தனார்ன்னு ஆளாஆளுக்கு சிபியைப் போட்டுப் பின்னியிருக்காய்ங்க.. அப்பவும் சிபி அசரல்ல...
சிபியை இப்படி கிழிச்சுக் காயப்ப் போடுறத ஒரு டாக்டர் நமட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டுப் பாத்துட்டே இருந்துருக்காரு.. நம்ம சிபி அவர் நல்லவர்ன்னு நம்பி அவர்கிட்ட போய் உதவி கேட்டு இருக்காரு.. அப்போ கேப்ல்ல அவர் கிட்ட அறிக்கையிலே கையெழுத்து வாங்கிட்டு ஆயின்ட்மென்ட் தடவுன அந்த டாக்டர் பேரு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணுமா என்ன?

கோடி பேர் கிட்ட கும்மாங்குத்து வாங்குனாலும் வாங்குன சுவ்டே தெரியாமல் வீர புன்னகை பூக்க சிபி என்ன நம்ம தலக் கைப்புவா??

பாவம் சிபி இப்போ கோவையிலே வலி தாங்காமல் படுத்து இருக்காராம்...

தளபதி தள்ளுபடி ஆனது இப்படித் தான்