பதினாறு மணி நேர
பேருந்து பயணம்
நீட்டாத காலுக்கும்
மடக்காத கைக்கும்
சாய்ந்த முதுகுக்குமான இடம்
என்னுடையது...
பயணம் முழுமைக்கும்!!!
மங்கிய மாலை
மொழிபுரியா திரைப்படம்
தென்னிந்தியா போக நேர்ந்த
துரதிர்ஷ்டம் பேசியே
அயரச் செய்யும்
அடுத்த இருக்கை மராத்திப் பெண்
இருள் வெளிகளில்
செல்பேசி வெளிச்சம் மட்டும்
துணையாக
முன்னிரவு
பெயர் புரியா தாபாக்களில்
பின்னிரவில் சப்பாத்தி;
உயிர்குத்தும் குளிருக்கு
தொண்டையில் இறங்கும்
கொதி (தே)நீர்
தொட்டிலென ஆடியும்
தூக்கியும் போடும்
பேருந்தில்
கால் மடக்கிக்
கோழித் தூக்கம்
லேசான பனி நீருடன்
விடியும் விடியாத
இளங்காலை;
தென்னிந்திய டீக்கடையில்
காலை நிறுத்தம்.
எத்தனை முறை கேட்டாலும்
புரிய மறுக்கும் கன்னடம்.
சகிக்க முடிந்த காபி
சகிக்காத கழிப்பறை
நகரில் நுழைந்தபின்
நின்று நின்று தொடரும்
முன்மதியப் பயணம்
பயணத்தின் முடிவில்
பெரிய மகிழ்ச்சி,
காத்திருக்கும் உன் கண்கள்..
கைப்பற்றி நடக்கையில்
களைப்பு பறந்திட
கதைகள் முடியுமுன்
மறுநாள் விடியல்
பேருந்து நிலையத்தில்
கண்களில் நீர்த்திரையுடன்
நாம்
திரும்பும் பயணங்களில் மட்டும்
வரம்பின்றி நீள்கின்றன
பதினா......... று மணி நேரம்
என் ஜன்னலில்
அடுத்த சனியை எதிர்பார்க்கும்
இரண்டு ஏக்கக் கண்கள்..
பயணம் பூராவும்
அதன்பின்னும்...
31 comments:
:(
ராசா, :( இதுக்கு என்னங்க அர்த்தம்? நல்லா இல்லையா??
//நல்லா இல்லையா??//
அப்படியில்லீங்க..
//அடுத்த சனியை எதிர்பார்க்கும்
இரண்டு ஏக்கக் கண்கள்..// இந்த வரிக்கான ஃபீலிங்.. :)
பதினாரு பத்தோ.. அடுத்த சனியை எதிர்பார்க்கிறதுல மட்டும் அதே ஏக்கம்.
அப்பாடா.. பீலிங்க்ஸ் கெளப்புற அளவுக்கு இருக்கா.. இப்போ தான் நிம்மதியா இருக்கு :)
நல்லா இருக்கு பொன்ஸ்
கவித.. :)
நல்லா இருக்கு பொன்ஸ்....
எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு போய் வந்தீங்க?...
Pons,
Very nicely written :-)
very nice
நன்றி கவிதா
யாழிசைச் செல்வன், கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸ்.. இவ்ளோ வயசானவரா நீங்க? ;)
நன்றி பாலாக், எல்லாம் நம்ம ஊரு தான்... பதினாறு மணி நேரம் பஸ்ல போனது பூனாலேர்ந்து பெங்களூர் வந்துகிட்டிருந்த காலத்துல..
Thanks Ms. Congeniality and Bharath.
பொன்ஸ், பாலாக் என்று அழைக்காதீர்கள்...பாலா.ஜி என்று அழைக்கவும்.
நன்றி.
உங்க பேர் பாலாஜியா.. ஓ.. balag என்றால் தமிழில் டைப் செய்யும் போது பாலாக் என்று நினைத்து விட்டேன் :)
நல்லா இருக்கு பொன்ஸ்.
பட்டணத்து ராசா, சங்க வேலைகளில் மும்முரமா இருந்ததாலே, நீங்க வந்ததைப் பார்க்கலை.. :(
வந்ததுக்கும் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கும் நன்றிங்க.. :)
கவிதை அழகாக இருக்கு பொன்ஸ்..மிகவும் ரசித்தேன் பாராட்டுகள்
இதே மாதிரியான இன்னுமொரு கவிதை சமீபத்தில் படிக்க கிடைத்தது இதோ அந்த கவிதை
வளைகுடா விமானம்
விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது
கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி
- புகாரி.
கவிதை அருமையாக உள்ளது. மேலும் எழுதவும்.
வரும்போது இன்பமாகக் கழியும் 16 மணிநேரம் போகும் போது 16 யுகங்களாக மாறி விடும் அற்புதத்தை
அழகாக படம் பிடித்து விட்டீர்கள்.
வளைகுடா விமானம், நல்லா இருக்கு ப்ரியன்.. நாலு வரில சொல்லிட்டாங்க..
வாழ்த்துக்களுக்கு நன்றி குமரன் எண்ணம், சிவகுமார் :). தொடர்ந்து ஆதரவு தாருங்கள் :)
எப்படி, எப்படி, ரொம்ப .."அனுபவிச்சு" எழுதியிருக்கீங்க, நல்லாயிருக்கு
//எப்படி, எப்படி, ரொம்ப .."அனுபவிச்சு" எழுதியிருக்கீங்க, //
:)
விட்டு விட்டு பிரிந்தாலும் ଭ உன்னைத்
தொட்டுக் கொண்டேயிருக்கும் மென்னிதயம்
கிட்டேயிருந்து செய்ய
கிட்டவில்லை வேலை
கட்டியவணைப் பிரித்து வைத்த....
கட்டுகளாய் பணம்!
(ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன்ல.....?)
நன்றாக இருக்கிறது.
//(ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன்ல.....?)//
உண்மைதாங்க நாகு.. ஆனா, பணத்தைத் தவிர வேற ஏதும் இப்படிப் பிரித்து வைப்பது இல்லையா?
நன்றிங்க தேசாந்திரி.. இன்னிக்குத் தான் நீங்க தமிழ்மணத்துல திரியறீங்க போலிருக்கு?!!! :)
உண்மை தாங்க. நம்ம விண்மீன் (விண்மீன் - நன்றி: சொல் ஒரு சொல், குமரன்) முத்து (தமிழினி) இடுகைக்கு மேல இடுகை இட்டு நம்மை இழுக்கிறாரே!
//உண்மை தாங்க. நம்ம விண்மீன் (விண்மீன் - நன்றி: சொல் ஒரு சொல், குமரன்) முத்து (தமிழினி) இடுகைக்கு மேல இடுகை இட்டு நம்மை இழுக்கிறாரே! //
படிங்க படிங்க.. இப்படித் தான் நானும் படிச்சிகிட்டு இருக்கேன்...
poons and desanthiri,
சைடுல படம் ஓட்டறது இதுதானா? என் கண்ணில் படாம அவ்ளொ சுலபமா நழுவிட முடியுமா?
இந்த கவிதையை பின்நவீனத்துவ முறைப்படி அணுகலாமா?
(பூன்ஸ் மயக்கமடைந்து விழுகிறார்)
ஐயோ குரு,
இது ரொம்ப பழைய கவிதை..
இதை நவீனத்துவமா மாத்த வேண்டிய அவசியமே இல்லை..
இது கவிதையே இல்ல..
இதை
இதை..
இதை..
இப்படியே விட்டுடலாம்ங்க..
ஏற்கனவே உங்க கவிதை நாய் படும் பாடு படுது....
அதாவது உங்க கவிதைல வர்ற நாய் ரொம்ப பாடு படுது..
இந்தக் கவிதைல நான் தாங்க வர்றேன்.. எனக்கு அப்படி ஒரு நிலைமையா.. :(
மூட நம்பிக்கைகள் நிறைந்த இன்னாட்டில் அடுத்த சனியை எதிர்பார்க்கும் ஒரே ஆள் நீங்கள்தான்!
கதை, கவிதை...எங்கேயோ போய்க்கிட்டு இருக்கீங்க...
இன்னும் உயரம் போக வாழ்த்துக்கள்.
Post a Comment