சங்கத்தின் தலை கைப்புள்ள தலைமை ஏற்கும் இலக்கண மன்றம்
கைப்பு: ஏம்மா பொன்ஸு, இப்போ, எலக்கணம் கத்து இங்ஙன இருக்குற பசங்கள்லாம் என்ன பண்ணப் போறாங்க? எதுக்கு இந்தக் கூட்டம்?
சிபி: இல்ல தல, ஏதோ இப்ப கத்துகிட்டாலாவது, அடுத்த தேர்தல்ல நல்லபடியா திருத்தமா அறிக்கை விடலாம்ல..
கைப்பு: சரி சரி.. என்னாத்த சொல்லப் போற?
பொன்ஸ்: இன்னிக்கு நாம பாக்கப் போறது, சொல் இலக்கணம்.. அதுல புணர்ச்சி விதிகள்.
ஜொ. பாண்டி: அக்கா, அற்புதமான டாபிக்கா எடுக்கறீங்கக்கா.. நீங்க அறுக்கப் போறீங்கன்னு வந்தேன்.. ஆற்றலரசி பொன்ஸ் வாழ்க.
பேராசிரியர் கார்த்திக்: வாழ்க வாழ்க.!!!
பொன்ஸ்: ரொம்ப உணர்ச்சி வசப்படாத பாண்டி, இது, ரெண்டு சொல்லைச் சேர்க்கும் போது எங்கெல்லாம் ஒற்று வரணும், எங்க வரக் கூடாதுங்கற பாடம் இது.
ஜொ. பாண்டி: அவ்வளவு தானா?!! ம்ஹும்.. (சோகமாகப் பாட ஆரம்பித்து விடுகிறார்) குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்!!!
பொன்ஸ்: நண்பர்களே, பாண்டி இப்போது உருகி உருகிப் பாடிய பாட்டையே எடுத்துக் கொள்வோம்:
கூவச் சொல்லுகிற: இந்தப் பதத்தில், கூவ என்பது நிலைமொழி, சொல்லுகிற என்பது வருமொழி. நிலைமொழி கடைசி எழுத்தும், வருமொழி முதல் எழுத்தும் எப்படிச் சேருதுங்கறதுக்கான விளக்கம் தான் புணர்ச்சி விதி.
கூவச் சொல்லுகிற இதைப் பிரிச்சா, கூவ + ச்+ சொல்லுகிறன்னு வரும். இந்த 'ச்' ஒற்று. வினையெச்சத்துக்கு முன்னாடி க, ச, த, ப இந்த எழுத்துக்கள் வந்தா, ஒற்று வரும்.
பார்த்திபன்: அம்மணி பொன்ஸு, வினையெச்சத்தப் பத்திப் பேசி உனக்கு நீயே வினைய வரவழைக்கிற.. இப்போ இந்த "குயிலப் பிடிச்சு, கூண்டில் அடைச்சு கூவ" இதுல, பிடிச்சு, அடைச்சு எல்லாமும் வினையெச்சம் தானே? இதுல ஏன் உங்க ஒற்றர்கள் வரலை?
பொன்ஸ்: நல்ல கேள்வி பார்த்தி!!
கட்டத்துரை: கேள்வி புரியலைன்னா நல்ல கேள்வின்னு சொல்லிடுவீங்களே!! நல்ல தல, நல்ல தொண்டர்..
பொன்ஸ்: இந்த விதிக்கு ஒரு விலக்கு இருக்கு. 'அ','இ','ய்' இதுல முடியும் வினையெச்சங்களுக்குத் தான் ஒற்று மிகும். இங்க 'பிடிச்சு', 'அடைச்சு', இவை எல்லாம் 'உ' வில் முடியுது. அதான் இதுக்கு ஒற்று வரலை.
பெருசு ஏதோ இல்லை என்று தலையாட்டியபடி இருக்கிறார்.
பொன்ஸ்: பெருசு, என்னாச்சு? என்ன யோசனை?
பெருசு: குயிலப் பிடிச்சு.. இதுல இருக்கிற 'ப்'ஐப் பத்தி சொல்லாமயே விட்டுப் போச்சே!!!
பார்த்தி (சரளாக்காவிடம்): பெருசு, நம்மாளா, வவாசவா?
சரளாக்கா: எப்படி இருந்தா என்ன?.. மடக்கிட்டாரில்ல...
பொன்ஸ்: அது சரியான சந்தேகம்.
சரளாக்கா: ம்ஹும், வெளக்கம் சொல்லுன்னா.. !!!
பொன்ஸ்: குயிலப் பிடிச்சு, இதை குயிலை+ ப்+பிடிச்சுந்னு பிரிக்கலாம். இதுல இரண்டாம் வேற்றுமை விகுதி 'ஐ' வருதில்லையா, இரண்டாம் வேற்றுமையிலும்(ஐ), நான்காம் வேற்றுமையிலும்(கு) ஒற்று வரும். அதனால தான் அங்க ப் வருது..
கைப்பு: எலே பாண்டி, நீ பாடின ஒரு பாட்டுல இத்தனை விதியா!!
அண்ணனைப் பாராட்டி அடுத்த பாட்டு பாடு பாக்கலாம்.
பாண்டி: "சிங்கமொன்று புறப்பட்டதே " என்று பாட ஆரம்பிக்கிறார்
பார்த்தி(இதைப் பொறுக்காமல்): "அடிவாங்க, சிங்கமொன்று புறப்பட்டதே-
உதை வாங்க சிங்கமொன்று புறப்பட்டதே"
என்றபடி கைப்புவை அடிக்க ஓடுகிறார். கைப்பு பயந்து போய் அப்படியே எஸ்கேப்பாக, ஜொ.பாண்டிக்கு அவரது உடன்பிறப்பிடமிருந்து அழைப்பு வருகிறது புதுத்துணி வாங்க வேண்டும் என்று. "இதோ வந்துட்டேன் தங்கச்சி" என்று அவரும் ஓட எல்லாரும் கட்சியின் விதிப்படி மூலைக்கொருவராகச் சிதறி ஓடுகிறார்கள்.
கவிதா, நீங்க சங்கத்துல என்ன பண்றாங்கன்னு கேட்டுகிட்டே இருந்ததினால சங்கத்தின் உருப்படியான செயல்பாடுகளைப் பதிவு பண்ணிட்டேன்.
அப்படியே இது "வெண்பா வடிக்கலாம் வா"வோட தொடர்ச்சிங்கறதுனால, இந்த வார ஈற்றடி
"தேறுமோ தேர்தல் கணிப்பு"
இது நம்ம வெண்பா:
ஊருளோர் பொய்களை ஒட்டிக் கணித்தாலே
தேறுமோ தேர்தல் கணிப்பு?!!!
141 comments:
எண்ணித் துணிகவென்று ஏனைய சான்றோரெலாம்
வாக்கதனை அளித்துவிட வகையாய்ப்
புறப்பட்டு
ஓபோடும் விண்ணப்பம் வேண்டிக் கேட்டிருக்க
தேறுமோ தேர்தல் கணிப்பு!
வவாசவு டன்வாழ் வாசா வாவென
பமாகாமோ தியதில் இருமாப் புடனே
வாறிடு வோமோதொ குதிக ளைகைப்பு
தேறுமோ தேர்தல் கணிப்பு.
பொன்ஸ், அருமையான நகைச்சுவை உணர்வு. வாழ்த்துக்கள்.
இப்ப இது போறும். யாராவது வந்து மொத்தினதுக்கு அப்புறம் வரேன்.:-))
ஒற்று மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அதற்கான சுட்டியைச் சட்டெனப் பிடித்து இங்கு தட்டிட இயலவில்லை. நாளை இடுகிறேன்.
பொன்ஸ் நல்ல காரியம் செய்கிறீர்கள். இதோ எனது வெண்பா
இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்ப(து) அவர்சொல் - எவர்வர
மாறும்நம் வாழ்வெனும் மக்களின் புண்மனத்
தேறுமோ தேர்தல் கணிப்பு.
நடராஜன்.
சங்க நடவடிக்கைகளைப் பார்த்தால் தமிழ்சங்கம் தோற்றது போங்க :))
உள்குத்தோ இல்ல வெளிக்குத்தோ
நியாயப்படிதாங்க போடணும்.அதுதானே பெருசுக்கு அழகு.
வஞ்சப்புகழ்ச்சி அணி எல்லாம்
நமக்கு தெரியாது பொன்ஸூ.
தலைக்கு மேல் என்னென்னவோ போகுது!
ஓகை நடராஜன்,
தங்கள் முதல் பத்தியே ஏதோ ஒரு வெண்பாவென்று நினைத்து விட்டேன்.
சிபி,
எங்க வெ.வா சொல்வது போல், " உங்க பாட்டு நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் வெண்பாவே எழுதலாம் "
இருந்தாலும் உங்க பாட்டை வெண்பாவாக்க முடியுமான்னு நானே பாக்கறேன்:)
அப்படியே அந்தப் பாட்டை(!?)
கொஞ்சம் அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
இருங்க அம்மணி,
கொத்ஸ் என்னவோ புது பரோட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்காரு, அவரைப் போய் வெண்பாவுக்கு கூப்பிட்டா அவரு எப்படி வருவாரு?
//தங்கள் முதல் பத்தியே ஏதோ ஒரு வெண்பாவென்று நினைத்து விட்டேன். //
ஓய் சிபி,
உமக்கு மூளையே கிடையாதா?
உமக்குதான் மண்டையில ஒண்ணும் இல்லையே! யாரார்கிட்ட விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை வாணாம்.
நீங்க ஒண்ணும் மனசுல வெச்சிக்காதீங்க சார்.
ஆற்றலரசி பிகிலு பொன்ஸ் அவர்களே,
சத்தியமா தல சுத்துது.. மெல்ல படிச்சு எதுனா புரியுதா பாக்குறேன்.. இப்பொதைக்கு ஒரு ஒரமா உக்காந்து வாழ்க மட்டும் சொல்லிகிறேன்
//இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்ப(து) அவர்சொல் - எவர்வர//
என்பதை
இவர்வரு வாரென் றிவரே இயம்ப
அவர்வரு வாரென்ப தவர்சொல் - எவர்வர
என்றும் எழுதலாம் அல்லவா? தவறிருந்தால் திருத்தவும். அப்படியே மன்னிக்கவும்.
பெருசு, வயசான காலத்துல எழுதினாலும், நல்லாவே எழுதி இருக்கீங்க..:)
ஆனா, அங்கங்க தளை தட்டுது. :(
வவாசவுடன் வாழவா சாவா வெனவே
பமகவும் மோதியதில் பேரா தரவாய்
வாரிடு வோமோ தொகுதிக ளைகைப்பு
தேறுமோ தேர்தல் கணிப்பு.
ஏதோ என்னாலாது சரி படுத்த முயற்சி பண்ணி இருக்கேன்.. இன்னும் இதில ஏதாவது திருத்தம் இருக்கான்னு தெரியலை :(
ஸ்ரீதர், நகைச்சுவை மட்டும் தான் தெரியுதுங்களா? அடுத்த வார வகுப்புல உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துருவோம்.. (அதான் காமெடி பண்ண : ) )
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழுவில் அருமைத் தலைவி பாசமிகு அண்ணி கைப்பொண்ணு அவர்கள் எழுப்பிய பல சர்வதேச இலக்கணப் பிரச்சனைகளை எதோ காரணங்களுக்காக இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது. இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலுக்கான விளக்கத்தைப் பெருமதிப்பிற்குரிய சங்கத்தின் கொ.ப.செ தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் முழுவதும் படிக்கல...ஆனாலும் இந்த பின்னூட்டம். எனக்கு அம்பிகா டீச்சர்தான் முதன் முதலி தமிழ் இலக்கணம் சொல்லி கொடுத்தாங்க... நீங்க இங்க சொல்லிருக்கற மாதிரி நல்ல எடுத்துக்காட்டோட விளக்கமா சொல்லுவாங்க... அவங்களை ஞாபகப் படுத்துனதுக்கு நன்றி. இந்த வாரம் ஊருக்கு போய் அவங்களை பார்க்க்ப் போறேன்.
//ஒற்று மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அதற்கான சுட்டியைச் சட்டெனப் பிடித்து இங்கு தட்டிட இயலவில்லை. நாளை இடுகிறேன்.//
நிச்சயம் கொடுங்க நடராஜன். அடுத்தப் பதிவும் மற்ற விதிகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.. மிகவும் உதவியாக இருக்கும்.
//இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்ப(து) அவர்சொல் - எவர்வர
மாறும்நம் வாழ்வெனும் மக்களின் புண்மனத்
தேறுமோ தேர்தல் கணிப்பு.//
நடராஜன், மிகச் சரியாகச் சொன்னீர்கள்.. அவங்க அவங்க தானே வருவதாகக் கூறும் கணிப்புகள் தான் இப்போ எல்லா இடத்திலும் :). மக்களை யார் பார்க்கிறார்கள்?!!.. இன்னிசை வெண்பா இனிமையாக இருக்கிறது...
//வாரென்ப(து) அவர்சொல்// தேமாங்காய் முன் நிரை - தளை தட்டுகிறதே :(
இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்(று) அவர்கூற்(று) - எவர்வர
மாறும்நம் வாழ்வெனும் மக்களின் புண்மனத்
தேறுமோ தேர்தல் கணிப்பு
இப்போது சரியா?
நன்றி மணியன்.. வாலிபர் சங்கத்திலும் தமிழ் படிப்போம்னு சொல்ல வேணாமா!!!
//உள்குத்தோ இல்ல வெளிக்குத்தோ
நியாயப்படிதாங்க போடணும்.அதுதானே பெருசுக்கு அழகு.
வஞ்சப்புகழ்ச்சி அணி எல்லாம்
நமக்கு தெரியாது பொன்ஸூ. //
பெருசு, இது புரியலையே.. நீங்க இன்னும் உள்குத்தும் குத்தலை, வெளிக் குத்துக்கும் வரலை... அப்புறம், வஞ்சப் புகழ்ச்சி எங்க இருக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பெருசு :)
//தலைக்கு மேல் என்னென்னவோ போகுது//
தருமி, உங்க சின்னத் திரைப் பதிவோட பின்னூட்டம் எல்லாம் பார்த்து வந்ததுதான் இந்த இன்ஸ்பிரேஷன்.. ஜிரா, கொத்ஸ் எல்லாம் நான் சமையலறை பக்கம் போவது இல்லைன்னு சொல்றாங்க.. அதான் தமிழ்ச் 'சேவை'யாவது செஞ்சி அந்த பழியைத் துடைக்கலாம்னு.. :)
//ஜொ. பாண்டி: அக்கா, அற்புதமான டாபிக்கா எடுக்கறீங்கக்கா.. நீங்க அறுக்கப் போறீங்கன்னு வந்தேன்.. ஆற்றலரசி பொன்ஸ் வாழ்க.//
ஜொ. பாண்டி,,, நானும் உங்க ரேஞ்சில்தான் படிச்சேன்... :-)
பொன்ஸ் அக்கா,
எனக்கு இந்த இலக்கணம் இலக்கியம் எல்லாம் தெரியாதே?என்னன்னு கமன்ட் கொடுக்க?ஒரு + மட்டும் குத்திடறேன்
///தமிழ்ச் 'சேவை'யாவது செஞ்சி அந்த பழியைத் துடைக்கலாம்னு//
சிலேடைப் பேச்சில் வல்லவர் என்பதை நம்ம பிகிலு பொன்ஸ் மீண்டும் ஒரு
முறை நிரூபித்துவிட்டார்.
வாழ்க அவரது தமிழ்! வளர்க அவரது தொண்டு!
//கொத்ஸ் என்னவோ புது பரோட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்காரு, அவரைப் போய் வெண்பாவுக்கு கூப்பிட்டா அவரு எப்படி வருவாரு?
//
உண்மைதான் பார்த்தி.. அடுத்த தேர்தலுக்குத் தான் இவர் வருவார்னு நெனைக்கிறேன்..
//ஆற்றலரசி பிகிலு பொன்ஸ் அவர்களே,
சத்தியமா தல சுத்துது.. மெல்ல படிச்சு எதுனா புரியுதா பாக்குறேன்.. இப்பொதைக்கு ஒரு ஒரமா உக்காந்து வாழ்க மட்டும் சொல்லிகிறேன்
//
பாசமலர் பேராசிரியாரே, நீங்க பொறுமையா படிச்சு பாருங்க..
புரிந்தாலும் புரியாவிட்டாலும் பின்னூட்டமிடும் பாசக்கார அண்ணன் கார்த்திக்...
வாழ்க வாழ்க..
சே.. எலெக்ஷன் தான் முடிஞ்சிடுச்சே.. இந்தப் பழக்கம் மட்டும் போக மாட்டேங்குது..
கனவு காணுபவரே.. (D the Dreamer)
வெண்பா ரொம்ப சுலபம் தாங்க.. எங்க வெ.வா பதிவெல்லாம் பார்த்தீங்கன்னா, சுலபமா எழுதலாம்..
//இவர்வரு வாரென் றிவரே இயம்ப
அவர்வரு வாரென்ப தவர்சொல் - எவர்வர//
அது தான் இப்படி எழுதறார்னு நினைக்கிறேன் சிபி..
//இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்ப(து) அவர்சொல் - எவர்வர//
இப்படி எழுதினா இன்னும் தெளிவா புரியும்னு..
அதோட, வார்த்தைகளை உடைக்காமல் எழுதணும்னு எங்க வெ.வா. ஜீவா சொல்லி இருக்காரு..
//இந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழுவில் அருமைத் தலைவி பாசமிகு அண்ணி கைப்பொண்ணு அவர்கள் எழுப்பிய பல சர்வதேச இலக்கணப் பிரச்சனைகளை எதோ காரணங்களுக்காக இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது. இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் செயலுக்கான விளக்கத்தைப் பெருமதிப்பிற்குரிய சங்கத்தின் கொ.ப.செ தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//
தேவ், என்னாச்சு, நம்மதான் அண்ணிய வெயிலுக்கு இதமா ஜிகிர்தண்டா செஞ்சி கொண்டுவரச் சொல்லிட்டோமே. அதுல என்ன இலக்கணப் பிரச்சனை எழுப்பினாங்க?? நினைவில்லையே!!!
உதயகுமார், உங்க டீச்சரைப் போய்ப் பார்த்துட்டு வாங்க.. அவங்க கிட்ட இந்த ரேஞ்சு பத்தி எல்லாம் சொல்லாதீங்க.. :)
பெருமதிப்பிற்குரிய கொ.ப.செ பிகுலு பொன்ஸ் அக்கா அவர்க்ளே...
ஜிகிர்தண்டா வாங்க பாசமிகு அண்ணி கைப்பொண்ணு அவர்களை கால்நடையாய் மதுரைக்கு விரட்டியது நியாமா? போக்குவரத்துச் செலவுக்கு காசு கேட்ட அந்த மாசில்லா மால்கேட் மாணிக்கத்தின் மனங்கவ்ர் கள்ளியை நீங்கள் நிற்க வைத்து எல்லோர் முன்னிலையிலும்
1430 வது திருக்குறளைச் சொல்லுமாறு வற்புறுத்தியதும்... திருக்குறளில் மொத்தமே 1330 குறள்கள் தான் உள்ளது எனத் தெரியாமல் அந்த பெண் குலச் சிங்கம் தன் சொந்தக் குரலில் திக்கி திணறி நின்றது எனப் பொதுக்குழுவில் நடந்த அநீதிகளை சொல்லவே என் இதயம் பதறுகிறதே... அய்யோ இதே கருத்தை எழுப்பிய மகளிர் அணியின் மங்கா விளக்கு.. பேரராற்றலரசி கீதா மேடம் எழுப்பிய கேள்விகளும் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளதே? சங்கத்தில் என்ன தான் நடக்கிறது...
உடனே விளக்கம் தாருங்கள் அக்கா...
வெண்பா எழுத
அன்பா
பண்பா-சொல்லிகொடுத்த
நண்பா... ஐயோ இது என்ன
வம்பா....
ஆளைவிடுங்கப்பா.....
தலை சுத்துது.
தேவ், இப்போ தானே சொன்னேன்..
//செலவுக்கு காசு //
நான்காம் வேற்றுமைக்கு 'க்' வரணும்..
//திக்கி திணறி//
அப்புறம், 'இ'யில் முடியும் வினையெச்சத்துக்கும் த் வரணும்..
பேராற்றலரசி கீதா, பெண்குலச் சிங்கம் கைப்பொண்ணு ரெண்டு பேரையும் காணோம்.. வந்தாங்கன்னா பதில் சொல்லச் சொல்றேன்.. அப்புறம் நானே திரிச்சி சொல்லிட்டேன்னு நீங்க சொல்லிடுவீங்க..
செல்வன்,
"சொல்வதற்கு ஒன்றும் இல்லை"ன்னு பின்னூட்டம் குடுக்கறீங்க பாருங்க.. கூட்டணின்னா இப்படித் தான் இருக்கணும்.. ரொம்ப ரொம்ப நன்றி :)
மனசு, உங்க இயற்பெயர் (டி) ராஜேந்தரா? இப்படி வெண்பாவை அன்பா வம்பு பண்ணறீங்க... :)
பொன்ஸ், நல்ல காரியம் பண்றீங்க. சீக்கிரம் மீதியிருக்கற விதிகளையும் சொல்லுங்க. அப்புறம் எங்களுக்கு வீட்டுப்பாடம்-லாம் கெடையாதா?
//நிற்க வைத்து எல்லோர் முன்னிலையிலும்
1430 வது திருக்குறளைச் சொல்லுமாறு வற்புறுத்தியதும்... //
பொன்ஸ் கேட்டதும் அவரும் பயப்படாமல் அந்த குறளை சொல்லிவிட்டுதானே சென்றார்.
"அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு"
என்று!
அய்யய்யோ.. யக்கா!! தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்.. விட்ருங்க.. :(
சாணக்கியன், இந்தப் பாடத்துக்கே எத்தனை எதிர்ப்பு, பாருங்க!!! வீட்டுப்பாடமெல்லாம் கொடுத்தா, யாரும் என் வீட்டுப் பக்கம் வரவே மாட்டாங்க.. வம்புல மாட்டிவிட்டுடுவீங்க போலிருக்கே..
கடைசியா கிட்டத் தட்ட வெண்பாவா ஒண்ணு சொல்லிட்டீங்க.. அதானே.. கைப்பொண்ணு குறளைத் தான் சொல்லிட்டாங்களே..
கொங்கு ராசா,
என்ன அப்படி சொல்லிட்டீங்க.. 'இந்தப் பக்கம்'ல ஏன் 'ப்' வரணும்னு அடுத்த பதிவுல சொல்லலாம்னு இருக்கேன்... அதுக்குள்ள விட்ருவோமா?
//"அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு"//
இது சங்கத்தின் மீதும் அண்ணி மீதும் நீங்கள் கொண்ட அளவற்ற விசுவாசத்தின் காரணமாக சொல்லுறீங்க...
திருவள்ளுவர் பேரூந்தைக் கூட கண்டிராத.. திருவள்ளுவரின் புகைப் படம் கூடக் கண்டிராத நம் அண்ணியார் திருக்குறள் சொன்னாரா என்னால் நம்ப முடியவில்லை...
இப்போது அண்ணியார் எங்கே? அடி வாங்கி அஹிம்சை அரசன் 23ஆம் புலிக்கேசியின் குடும்ப குத்து விளக்கு எங்கே? கோட்டைக்குச் செல்லும் என் அன்புத் தலைவனின் அன்பரசியார் எங்கே?
இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் வேண்டும்...
//இது சங்கத்தின் மீதும் அண்ணி மீதும் நீங்கள் கொண்ட அளவற்ற விசுவாசத்தின் காரணமாக சொல்லுறீங்க...//
இல்லை தேவ்! தலை கைப்பு அவர்களின் சொந்தப் பேருந்தான சென்னை மாநகரப் போக்குவரத்துக்குட்பட்ட பேருந்தில்தான் இதைப் படித்திருக்கிறார்.
தற்போது அப்பேருந்தை தலை வேறு யாருக்கோ (கைகளில் துண்டு போட்டு) பேரம் பேசி விற்றுவிட்டதாக தகவல்.
நான் எங்கேயும் போகலை. இங்கே தான் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன். (வை.கோ. மாதிரி) இந்த பொன்ஸ் (தயாநிதி மாதிரி திடீர்னு வந்துட்டு)என்னைக் கலந்துக்கவே விடலை. எல்லாம் தலைவர் இல்லையா அதான், தலைவர் வரட்டும், பார்த்துக்கிறேன்.கட்சி மாறலாமானு யோசிக்கிறேன். கோடி யார் கொடுப்பாங்க தெரியலியே.
தேவ், தலைவரைக் காணோமேன்னு கவலையே பட மாட்டேங்கறீங்க.. அண்ணியப் பத்தி இத்தனை கவலையா?
ஒருவேளை தேர்தால் எல்லாம் ஓவெர்னு, சீரியல் பாக்கப் போய்ட்டாங்களோ?
//இங்கே தான் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்//
அப்பாடா, அவங்களே சொல்லிட்டாங்க.. தம்பி தேவு, கேட்டுக்கப்பா.. கீதாக்கா கூட்டத்துல எதுவும் கேட்கலை.. எதுவும் சொல்லலை.
போதுமா..
ம்ஹும்.. இலக்கண மன்றத்த இலக்கிய மன்றமா ஆக்கிப்புட்டீங்களே!!!
//இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வரு வாரென்ப(து) அவர்சொல் - எவர்வர//
அரசியலைப் பொருத்தவரைக்கும்
"இவர் வாரு வாரென்று இவரே இயம்ப
அவர் வாரு வாரென்று அவர்சொல்
எவர் வர?"
வெண்பா எழுதறதுக்கு முன்னாடி எழுதுற பொருளின் கரு மிக்கியமா இல்லையா? வர்றதா, வாருறதா? எது அரசியல்ல கரெக்ட்? :-)
//கட்சி மாறலாமானு யோசிக்கிறேன். கோடி யார் கொடுப்பாங்க தெரியலியே.//
என்ன கீதா மேடம் இவ்வளவு குழப்பம். நேர மருத்துவர் பதிவுக்குப் போய் என்ன பதவி வேணுமோ கேட்டு வாங்கிக்கங்க.
தம்பி தேவ்,
உனக்குக் குடுக்கப்பட்ட அசைன்மெண்டை நன்றாகவே செய்கிறாய். நீ விளைவிக்கும் குழப்பத்தில் இந்த சிறு நரிச் சங்கம் ஆடிப் போய் நிற்கிறது.
நம் கட்சியின் ஒற்றர்கள் பிரிவின் தலைவனாக உன்னை நியமிக்க பொதுக்குழுவிற்கு சிபாரிசு செய்கின்றேன்.
கரெக்டா வந்து 50 போட்டுட்டார்யா கொத்ஸ்!
இது நம்மளோட மொய்!
கீதாக்கா = வைகோ. ஓக்கே அவங்க வந்துருவாங்க.
பொன்ஸ் = தயாநிதி. சரியாத்தான் இருக்கு. ரெடிமேடா பதவி எல்லாம் கிடைக்குது.எல்லாரையும் இப்படி மிரட்டறாங்க.
அய்யய்யோ. நான் ஒண்ணும் சொல்லலை. ஒரு கோடி ரூபாய் கேட்டா நான் எங்க போறது?
வெண்பான்னு சொன்ன உடனே 50 பின்னூட்டம் வருதய்யா. நம்ம ஆட்களின் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்குது.
//கீதாக்கா = வைகோ. ஓக்கே அவங்க வந்துருவாங்க.
பொன்ஸ் = தயாநிதி.//
சிபி = ஸ்டாலின்
கைப்புள்ள = கருணாநிதி
இதை ஒத்துக்க மாட்டீங்களே!
//எது அரசியல்ல கரெக்ட்? :-) //
சந்திரா, அதுக்குத் தான் வகைப்படுத்தி இருக்கோம்ல.. இது அரசியல் பதிவு அல்ல :)
//வெண்பான்னு சொன்ன உடனே 50 பின்னூட்டம் வருதய்யா. நம்ம ஆட்களின் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்குது.//
அட! இந்நேரம் 200-300ன்னு போயிட்டிருக்க வேண்டியது!
தேவையில்லாம வெண்பா வை இழுத்ததால் 75% பேரு பார்த்தவுடனேயே எகிறிடறாங்க!
(பி.பி.ப.ஓ)
இப்போதைக்கு ஒரு அர்ஜெண்ட் வெண்பா. அப்புறமா இதற்கு மேல் ரெண்டு வரி எழுதி அளவியல் வெண்பாவா மாத்திடலாம்.
மாறுமோ மக்கள் நிலையும் அதற்குமே
தேறுமோ தேர்தல் கணிப்பு!
//என்ன கீதா மேடம் இவ்வளவு குழப்பம். நேர மருத்துவர் பதிவுக்குப் போய் என்ன பதவி வேணுமோ கேட்டு வாங்கிக்கங்க.
//
கொத்ஸ், பதிவுல பேர் போட்டு கூப்பிட்டாலும், கடைசியா 50ஆவது பின்னூட்டத்துக்கு வந்துட்டீரே! சரியான ஆள் தான் நீர்.. எங்க வெண்பா?
பினாத்தலார் மெயிலில் அனுப்பிய வெண்பா...:
என்கணிப்பு ஏற்க, அவன்கணிப்பு தள்ளிவிட
புண்பட்ட எண்ணம் புதுக்கணிப்பாய்- மன்னர்கள்
மாறுதல் விரும்பினரா - மாடுகள் விரும்பினரா?
தேறுமா தேர்தல் கணிப்பு?
//சிபி = ஸ்டாலின்
கைப்புள்ள = கருணாநிதி//
அவரு இல்லாதப்ப அடி வாங்கணும்ன்னு ஆசை இருந்தா யாரு தடுக்க முடியும். ஆமா நீங்க கட்சி மாறினதா ஒரு அரி(றி)க்கை வந்துதே.
(நான் பெனாத்தலாரின் 'மு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார்' பதிவை சொல்லவில்லை)
//நம் கட்சியின் ஒற்றர்கள் பிரிவின் தலைவனாக உன்னை நியமிக்க பொதுக்குழுவிற்கு சிபாரிசு செய்கின்றேன்.//
தேவ் இது தான் சங்கதியா? இது அரசியல் பதிவு இல்லைங்கறதுனால, நீங்க தப்பிச்சீங்க.. இருக்கட்டும், தலைவர் வரட்டும்..
கொத்ஸ், எங்களுக்கும் ஒற்றர் படை இருக்கு, அதுக்கு தனிமனிதப் படையாக நல்ல மன்சோட ஒருத்தர் இருக்காரு.. அவர் பெயர் வடமொழியில் இருப்பதால், இந்தப்பதிவில் சொல்லவில்லை.. மேலதிக விவரங்களுக்கு துபாய்வாசியின் பதிவைப் பார்க்கவும்..
சிபி, மத்த பின்னூட்டம் எல்லாம் புரியுது, இது என்ன (பி.பி.ப.ஓ) ??
கொத்ஸ்,
எங்கயோ போய்ட்டீர்... இன்ஸ்டண்ட் வெண்பா எல்லாம் அடிச்சி விடறீர்!!! வாழ்க உம் தமிழ்ப் பணி.. வளர்க எம் பதிவின் பின்னூட்டம் :)
//இந்நேரம் 200-300ன்னு போயிட்டிருக்க வேண்டியது! //
ஏம்பா சிபி, இதுவும் பதிவை பொறுத்துதானே. தனிவிதிகளை எல்லாம் பொது விதியா மாத்துனா எப்படி :)
இது சரியா இருக்கான்னு பாரும்மா. அவசரத்தில் எழுதினது.
இலவசமாய் ஏதேதோ காட்டியே நாட்டில்
பலபேரின் பாசத்தை வெல்லும் தலைவரால்
மாறுமோ மக்கள் நிலையும் அதற்குமே
தேறுமோ தேர்தல் கணிப்பு!
பி.பி.வ.ஓ - பின்னங்கால் பிடறி பட ஓடினர்.
அதாவது வெண்பா என்ற வார்த்தையைப் பார்த்தவுடன்
பின்னங்கால் பிடறி பட ஓடினர்.
தேமா புளிமா பாரு
பூவிளங்காய் எங்கே கூறு
எனக் கேட்டபோ தினிலே
நான் பார்த்துக்கி டந்ததென் னவோ
பூப்போ லச்சிரித்த என்
தமிழைய்யா பேத்தியை -அப்
போதினிலே என் தலைதட்டி
தளை தட்டுதடா மூடா
உன் அகமெங்கே போனதெனக்
கேட்டால் நான் அந்தஉண் மைகூற
இயலுமோ?
யக்கா பொன்ஸக்க இப்படி ஆக்கிபுட்டீங்களே என்னைய??
வெண் பொங்கலைத்தவிர ஏதுமறியா மூடன் நான்.ஆனாலும் ஒரு வெண்பா 'லுக்கு' வர்றதுக்காக மொத்தமா எழுதி அங்கங்கே வார்த்தைகளைப் பிரிச்சு மேஞ்சுட்டொம்லே??:))) ஏதோ என்னாலான உதவி.
பொன்ஸக்கா வெண்பா க்ளாஸ் எடுத்து ஒண்ணுமே ஜொள்ளுப்பாண்டி எழுதலை என நாளை வரலாறு கூறலாமா?? ஏதோ என்னாலான செஞ்சோற்றுக்கடன்!!!
;);)
பினாத்தலார், நல்ல வெண்பா தாங்க..
கொஞ்சம் அங்கங்க தளை தட்டுது.. ஆனாலும் கருத்து நல்லா இருக்கு :)
என்கணிப்பு ஏற்க, அவன்கணிப்பு தள்ளிவிட
புண்பட்ட எண்ணம் புதுக்கணிப்பாய்- மன்னர்கள்
மாறுதல் விரும்பினரா - மாடுகள் விரும்பினரா?
தேறுமா தேர்தல் கணிப்பு?
அங்க தாங்க தட்டுது.. இதோ:
என்கணிப்பு ஏற்க, அவன்கணிப்பு தள்ளிவிட
புண்பட்ட எண்ணம் புதுக்கணிப்பாய்- மன்னர்கள்
மாறுதல் விரும்பினரா - மாடுகள் வேண்டினரா?
தேறுமா தேர்தல் கணிப்பு?
அவ்வளவு தான் உங்க வெண்பா இப்போ தயார்..
//தேமா புளிமா பாரு
பூவிளங்காய் எங்கே கூறு
எனக் கேட்டபோ தினிலே
நான் பார்த்துக்கி டந்ததென் னவோ
பூப்போ லச்சிரித்த என்
தமிழைய்யா பேத்தியை -அப்
போதினிலே என் தலைதட்டி
தளை தட்டுதடா மூடா
உன் அகமெங்கே போனதெனக்
கேட்டால் நான் அந்தஉண் மைகூற
இயலுமோ?
//
கலக்கறீங்க ஜொள்ஸ்! வாழ்க உமது வெண்பா! வளர்க உமது தொண்டு!
அதாம்வே தமிழய்யா பேத்திய நீ விடும் (வெண்பா) 'லுக்கு'!
என்னோட பாட்டை எப்போ பிரிச்சித் தரப்போறீங்க பொன்ஸ்?
(இல்லைனா ரணகளமாகிடும்ல!)
இலவசம்,
கலக்கறீங்க.. வெ.வா பார்த்தார்னா அப்படியே உச்சி குளிர்ந்து போய்டுவாரு.. இப்படி நாலு நாலா எடுத்து விடறீங்க.. வாத்தியார் எங்க போனார்னுதான் தெரியலை :(
எல்லாரும், மக்கள் நிலை மாறும்னு தான் எதிர்பார்க்கறோம்.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ!!!
பாண்டி, அவ்ளோதான்யா.. இது வெண்பா லுக்குல வரலை.. அதைத் தாண்டி ஒரு ஆசிரியப்பா லுக் வருது.. எல்லாம் ஒரு ரிச் லுக் தான்..
இத அப்படியே எடுத்து கிட்டுப் போய்க் குடு, உங்க தமிழய்யா பேத்திகிட்ட.. தளை தட்டவே தட்டாது :)
பொன்ஸக்கா என்னைய மாதிரி ஆளுகளுக்காக ஏன் பேசாம நீங்க
' வெண்பா For Dummies' அப்படீன்னு ஒரு பதிவப் போட்டுத் தாக்கக் கூடாது?
அப்புறம் இன்னிக்கி training classல கொடுத்த ஹோம்வொர்க் எல்லாம் எப்படியோ 'அக்கம் பக்கம் பாரடா ஜொள்ளுராசா' ன்னு முடிச்சிட்டேன்.இப்ப சந்தோசம்தானே?
இங்கேயும் இந்த 'இலக்கிய அரசியல்' கூத்து தானா? நான் வரலேப்பா இந்த விளையாட்டுக்கெல்லாம்!
ஆள விடுங்க சாமியோவ்....
//என்னோட பாட்டை எப்போ பிரிச்சித் தரப்போறீங்க பொன்ஸ்?
//
நீங்க இன்னும் அதை மறக்கலையா.. சரி சரி..
இதுவரை மத்தவங்க வெண்பாவில் சொல்லாத புதுக் கருத்து இருக்கிறதுனால, பிரிச்சுப் பாக்கறேன்..
துவா,
இது இலக்கண அரசியல்.. இலக்கியம் இல்லை:)
//' வெண்பா For Dummies' அப்படீன்னு ஒரு பதிவப் போட்டுத் தாக்கக் கூடாது? //
ஜொள்ளு, அதான் எங்க வெ.வா. ஏற்கனவே போட்டு இருக்காரு. அதனாலதானே என்ன மாதிரி டம்மி எல்லாம் கூட வெண்பா அது இதுன்னு பேசிகிட்டு திரியுது.
சிபி, இது உங்க பா.. :
எண்ணித் துணிகவென்று ஏனைய சான்றோரெலாம்
வாக்கதனை அளித்துவிட வகையாய்ப்
புறப்பட்டு
ஓபோடும் விண்ணப்பம் வேண்டிக் கேட்டிருக்க
தேறுமோ தேர்தல் கணிப்பு!
நாலு வரியாவே வச்சி மாத்திப் பார்த்தேன்.. முடியலை. இது பாருங்க:
சோராமல் சான்றோர்கள் ஓப்போட ஓடுகையில்
தேறுமோ தேர்தல் கணிப்பு?
நீங்க நினைச்சா மாதிரி வந்திருக்கா?
//சோராமல் சான்றோர்கள் ஓப்போட ஓடுகையில்
தேறுமோ தேர்தல் கணிப்பு?
//
நான் நினைத்த பொருள் வரவில்லையே!
அச்சர! அம்மணி இன்னிக்கு ஒரு முடிவோடதான் இருக்காங்க போல!
81 ஆய்டுச்சு! இன்னும் வெறும் 19 தான்.
தம்பிகளா! ஆளுக்கு இன்னும் ரெண்டு போடுறது!
ஜொ. பாண்டி, இங்கே பார்க்கவும்.. வெண்பா for all sorts of dummies ஏ எழுதி இருக்கிறார் வாத்தியார்
http://payananggal.blogspot.com/2006/03/2_14.html
http://payananggal.blogspot.com/2006/03/3.html
சட்ட சபைக்குள்ள சம்மணம் போட்டுகிட்டு
சபா நாயகரா அமர்வதுதான் யாருன்னு பார்க்கத்தான் காத்திருக்க எல்லாரும் ஓபோட்டா
தேறுமோ தேர்தல் கணிப்பு!
//நான் நினைத்த பொருள் வரவில்லையே!//
என்ன நினைச்சீங்கன்னு எனக்குப் புரியலை.. கொத்தனார் கை கொடுப்பாராக.. :)
பார்த்தி, வகுப்பை ஒழுங்கா கவனிச்சது நீங்களும் சரளாவும் தான் போலிருக்கு.. அக்கா எங்க காணோம்? :)
அதாவது சி.எம்.மா அம்மா அல்லது ஐயா இப்படி யாராவது வரப் போறாங்கன்னு எல்லாரும் காத்துகிட்டிருக்கும்போது படிச்ச சனங்க எல்லாரும் 49ஓ போடக் கிளம்பிட்டால்
வெளங்குமா தேர்தல் கணிப்பு!
இதைத்தான் சிபியும் சொல்ல வர்றாருன்னு நினைக்கறேன்!
//கவிதா, நீங்க சங்கத்துல என்ன பண்றாங்கன்னு கேட்டுகிட்டே இருந்ததினால சங்கத்தின் உருப்படியான செயல்பாடுகளைப் பதிவு பண்ணிட்டேன்//
பொன்ஸ், அதுக்காக இப்படியா?..கார்த்திக் நிலைமை தான் எனக்கும்..தல சுத்துது..ஒன்னுமே புரியலா..யாருக்கு வாழ்க சொல்லறது...ன்னு கூட..புரியல.. சங்கத்தை பற்றி இனிமே நான் கேள்வி கேட்பேனா??? கேட்டா..இன்னொரு வாட்டி தல சுத்த வைச்சுடுவீங்களே..?!!! தெய்வங்களா...வாழ்க..
//அச்சர! அம்மணி இன்னிக்கு ஒரு முடிவோடதான் இருக்காங்க போல!
81 ஆய்டுச்சு! இன்னும் வெறும் 19 தான்.
தம்பிகளா! ஆளுக்கு இன்னும் ரெண்டு போடுறது!//
அப்படி இல்லை சிபி.. தமிழ்மணம் கொஞ்ச நேரமா வேலை செய்யலை.. அதான் என்னோட பதிவையே பாத்துகிட்டு இருந்துட்டேன்.. 80க்கு வந்துடுச்சு.. இன்னோரு வெண்பா வந்தா நல்லா இருக்கும்..
வெண்பா வடிக்கலாம் வான்னு கூப்பிட்டுட்டு, மொத்தமே 6 வெண்பா தான் இருக்கு... :(
சிபி சொல்வது பார்த்திக்குத் தான் புரியுது..என்ன ஒரு பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு.. :)
சிபி, நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. பார்த்தி உங்களைக் கவனமா கண்காணிக்கிறாரு.. பாத்துக்குங்க :)
என்ன கவிதா இப்படி சொல்லிட்டீங்க.. உங்களோட சேர்ந்து ஒரு புரட்சி வெண்பாப் படை அமைக்கலாம்னு நினைச்சிகிட்டு இருந்தேனே...!!! :( சரி, நமக்குத் தான் கவிஞர் அணில் இருக்காரே.. அவர் போதும்... :)
//என்ன ஒரு பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு//
ஆமாமா! வில்லிவாக்கம் நூர் ஹோட்டல்ல பிரியாணி சாப்பிடப் போனப்போ அவன்தான் எனக்கு கர்ச்சீப் போட்டு சீட்டு பிடிச்சி வெச்சான் பாருங்க!
நீங்கதான் மெச்சிக்கணும் அவன் நட்பை! எப்போ எப்படி போட்டு வாங்குவான்னு தெரியாது!
நம்ம தலை அவங்கிட்ட பட்ட பாடு தெரியுமில்ல! அவனைப் பார்த்தாலே நித்தியகண்டம் பூரண ஆய்சுன்னு நம்ம தலை சொல்லுவாரு!
பினாத்தலாரின் மெயில் பின்னூட்டம்:
பெரியோர் சிறியோர் பேரறிஞர் சான்றோர்
ஒருவரைத் தேர்ந்து முடித்தார் - அறியாமல்
மாறுதல் விரும்பி முடிவெடுத்தேன் ஓப்போட -
தேறுமோ தேர்தல் கணிப்பு?
இப்படிப்பண்ணா கருத்து மாறாம வந்து விடுகிறது.
அப்புறம், என் பா வில் இரு குறையில் ஒன்றைத்தான் பிடித்துத் திருத்தி இருக்கிறீர்கள்.
என்கணிப்பு ஏற்க, அவன்கணிப்பு தள்ளிவிட
புண்பட்ட எண்ணம் புதுக்கணிப்பாய்- மன்னர்கள்
மாறுதல் விரும்பினரா - மாடுகள் விரும்பினரா?
தேறுமா தேர்தல் கணிப்பு?
இரண்டு விருப்பத்தையும் வேண்டுதல் ஆக்கி -
என்கணிப்பு ஏற்க, அவன்கணிப்பு தள்ளிவிட
புண்பட்ட எண்ணம் புதுக்கணிப்பாய்- மன்னர்கள்
மாறுதல் வேண்டினரா - மாடுகள் வேண்டினரா?
தேறுமா தேர்தல் கணிப்பு?
னு என் தலையத்தட்டி, பா-வின் தளையைச் சரி செஞ்சுடலாம்:-)
இயக்கத்தின் இதயமென உழைத்த கீதா மேடத்துக்கு வைகோ என்று பெயர்
கட்சியின் முதல் தேர்தல் விளம்பரம் செய்த விவசாயி தோழனின் பெயர் எந்த இடத்திலும் இல்லாமல் இருட்டடிப்பு
அண்ணியார் கைப்பொண்ணு காணவில்லை...
கேள்வி கேட்ட எனக்கு ஒற்றன் பட்டம் ... சங்கத்தின் சான்றோர்களுக்கே இந்த நிலைமை என்றால் சங்கத்தின் கடைசி தொண்டன் என் நிலைக் கேட்கவா வேண்டும்....
உறவுக்குக் கைக்கொடுப்போம் உரிமைக்குக் வாய்ஸ் கொடுப்போம் என்ற கைப்புவின் கொள்கையின் படி வளர்ந்தவன் நான்...
பாரம்பரியம் மிக்க சங்கத்தின் பெருமையைக் குலைக்கும் விதத்தில் நடக்கும் நடந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு இது கடைசி எச்சரிக்கை...
37 ரூபாய்க்கு பேசி.. 3 ரூபாய் மட்டுமே கொடுத்து அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அடிப்பட்டு மிதிப்பட்டு என் தலைவன் கைப்பு வாலிபப் பசஙக் கும்மாளமாக் கும்மி அடிக்க வாங்கிப் போட்ட இந்தச் சங்கம் இலக்கணம் வகுப்பு என்ற பெயரில் குதறபடுவதா... இதை ஒருக்காலும் உண்மையான வருத்தப் படாத எந்த வாலிபனும் உயிர் இருக்கும் வரைப் பொறுக்க மாட்டான்...
இலக்கணம் மீறுவோம் .. தலைக்கனம் பொறுக்க மாட்டோம்.....
தலயின் உண்மை விசுவாசி
தேவ்
//நீங்கதான் மெச்சிக்கணும் அவன் நட்பை! எப்போ எப்படி போட்டு வாங்குவான்னு தெரியாது!
//
ஆகா.. எவ்வளவு கோபம் வருது உங்களுக்கு.. அதான் சிபி நானும் உங்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லறேன்..
பினாத்தலார், மறுபடி தளை தட்டுது.. சிபிக்குக் கை கொடுக்கும் பாவில்:
பெரியோர் *சிறியோர் பேரறிஞர்* சான்றோர்
ஒருவரைத் தேர்ந்து முடித்தார் - அறியாமல்
*மாறுதல் விரும்பி* முடிவெடுத்தேன் ஓப்போட -
தேறுமோ தேர்தல் கணிப்பு?
இப்படிச் செஞ்சா சரியாய்டும்:
பெரியோர் சிறியவர் பேரறிஞர் சான்றோர்
ஒருவரைத் தேர்ந்து முடித்தார் - அறியாமல்
மாறுதல் வேண்டி முடிவெடுத்தேன் ஓப்போட -
தேறுமோ தேர்தல் கணிப்பு?
அதான் உங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சே.. இனி என்ன விரும்புவது? வேண்டுவது தான் தளை தட்டாமல் பொருந்துகிறது ;) :)
பினாத்தலார், சொல்ல மறந்துட்டேனே. (100 கிட்ட வரும்போது இப்படி மறப்பது சகஜம் தானே!! :) ),
இப்போ தளை தட்டாம உங்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கு... வேண்டுதல் தான் உங்களைப் பொறுத்தவரை நிறைவேறும்.. விரும்புதல்னு சொல்லி வீட்ல வாங்கிக் கட்டிக்காதீங்க :)
தேவ்,
விவசாயி இயற்கை விவசாயம் செய்யப் போய்விட்டதால் கூட்டத்துக்கு வரமுடியாமல் போனது அவை அறிந்ததே..
கீதாவை வைகோ என்று யாரும் கூறவில்லை.. அவரே கூறிக் கொண்டதே அது.. கைப்பொண்ணுவை யார் தொலைச்சாங்கன்னு தெரியலை.. கைப்பு ஒண்ணும் சொல்லாமல் இருப்பதால், அவரும் கைப்பொண்ணுவும் சைலன்டாக எங்கேனும் எஸ்கேப் ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது..
இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியலை.. காத்திருப்போம், பாசமலருக்குக் கைகொடுக்க, ஒரு கொடியில் பூத்த இரண்டாவது மலரான பேராசிரியர் கண்டிப்பாக வருவார்... :)
தேவ்,
கோபப்படாது பொருத்தருள்க! எத்தனையோ சமயங்களில் என்னை நீர் சாந்தப் படுத்தினீர் அல்லவா!
இவ்வாறு நீர் ஆவேசப்பட்டால் எதிகளுக்கு எகத்தாளமாய்ப் போய்விடும் என்பதை நீர் அறியாததா?
இங்கு நடப்பது வெண்பா கூட்டம் என்ற பெயரில் தேர்தலுக்குப் பிறகான வ.வா.சங்க வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனை! எதிரிகளின் ஒற்றர்கள் சிலர் இங்கு ஊடுருவியிருப்பதாக வந்த (வதந்தி)தகவலின் பேரில், பேருக்கு சும்மா (லுலூங்காட்டி) நன்கைந்து பாடல்களைப் புனைவது போல் பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நிஜ வெண்பா என்றால், வெ.வா.ஜீவா இல்லாமல் நடக்குமா? என்பதை சற்றே சிந்தியும்.
சிபி,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நா தழு தழுக்குது :(
வ வா ச கூட்டமா??? நான் இது தமிழ் வகுப்புன்னு நெனெச்சேன்...
தப்பான இடதுக்கு வந்துட்டென்...
பொன்ஸ்
100 ...
அடடா, வந்த்ததுதான் வந்தேன்... இது 100 வது போல... வாழ்த்துக்கள் பொன்ஸ்!!!
-பெங்களூர் 70 வது வட்ட பமாகா தலைவர்.
எதிரியென்று பார்க்க மாட்டோம் நாங்கள்,
இட்லிக்கு தலை வணங்கு, கொத்து பரோட்டாவுக்கு அடி பின்னு என்னும் கொள்கையை பிறக்கும் போதே நெஞ்சில் சுமந்தவர்கள் நாங்கள்...
பொன்ஸக்கா என்னாது வெண்பா for dummies ஏற்கனவே எழுதீட்டாங்களாஆஆ?? விடக்கூடாது. நான் உங்களுக்கு தலைப்பு எடுத்துத்தாறேன்.உங்க தமிழறிவை தரணியறியச் செய்திட வேண்டாமா? இதோ தலைப்பு
தமிழ் for Tamils
தளையோ தவளையோ...
வெண்பா Ver 1.0.2.4.7
தேமா புளிமா புளிக்காதம்மா...
இந்தத் தலைப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
நானும் நம்ம சங்க சிங்கம் தேவ் அண்ணும்தான் ஓரமா குந்திகினு சம்பந்தமில்லாம பேசிகிட்டு இருக்கோம்னு நெனைக்கிறேன்.
தேவண்ணே அமைதி அமைதி!!!
நாந்தான் 100ஆ?
வாழ்த்துக்கள்
எப்படியோ பொன்ஸ் ஒரே நாள்ள 100 அடிச்சிட்டாங்க!
வாழ்த்துக்கள்.
நன்றி! நம்மளையும் ஆட்டத்துல சேத்துகிட்டதுக்கு!
பொன்ஸு,
நூறுக்கு வாழ்த்துகள். தமிழ்மண பின்னூட்ட எலீட் க்ளப்பில் சேர்ந்ததுக்கு, க்ளப்பின் தலைவி பின்னூட்ட நாயகி துளசியக்காவின் சார்பில் வருக வருகன்னு வரவேற்கிறேன். :))
இதப் பாத்து சந்தோஷமா இருந்தாலும், உங்களுக்காகவே கீழ வர வரிகள எழுதி வச்சுட்டு போயிருக்காரோ பாரதியாருன்னு பாவமாவு இருக்கு!
//
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தியறியாயோ!
குப்பையிலே மலர்கொஞ்சும் குறுக்கத்தி கொடி வளராதோ நன்னெஞ்சே!
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது உன் வாழ்வுக்கு நேராமோ?//
இதேதான். சிப்பியில முத்து மாதிரி, குப்பையில் பூப்பூத்த கொடி மாதிரி, சேற்றினில் முளைத்த செந்தாமரை மாதிரி நீங்க அந்தக் வெட்டிக்கூட்டத்துல இருக்கணுமா? சாதிச்சு காமிச்சுட்டீங்க. இனிமே நம்ம பக்கம் வருவீங்கன்னு எனக்குத் தெரியும். சேத்துல இருக்கற உங்கள கோபுரத்துல வைக்கறோம். சீக்கிரம் வாங்க. காத்திகிட்டுருக்கோம்.
அன்புடன்,
மருத்துவர் சின்ன ஐயா
ப.ம.க
----
பொதுமக்களே,
நடந்துமுடிந்த தேர்தலில் அமோக வெற்றியை எங்களுக்குத் தந்ததற்கும், கைமாத்து வாங்கின மால்கேட் மாணிக்கத்துக்கு கும்மாங்குத்து குத்தி கோல்கேட் கோயிஞ்சாமியாக்கியதற்கும், எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்கும் நன்றி தெரிவித்து நாளை மறுதினம் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும். இடம் எங்கேன்னு நான் சொல்ல வேணாமே :))
100!
என்ன நடக்குது இங்கே?
என்னை ஏமாற்றி கட்சி ரகசியங்களைக் கறப்பது உம்மால் முடியாது!
தமிழ் பாதுகாப்பு வேறு, கூட்டணி வேறு.
பொன்ஸ்,
இது நூறாவது பின்னூட்டமா? தயாநிதியை விட speedங்க நீங்க.சங்க வேலையைத்தான் அம்போனு விடறீங்க. ஏதோ என்னை மாதிரி பெரியவங்க இருக்கறதாலே கட்சி காப்பாற்றப் படுகிறது.
இலவசம்,
குழப்பம் ஒண்ணும் இல்லைங்க. இவங்களோட கூத்தைத் தலைவரும் நம்ம வெண்பாக் கவிஞரும் இல்லாத நேரத்தில் பார்த்துப் பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டேன்.
நன்மனம்,
என்ன நடக்குது உங்க வலைப்பூவிலே? வரவே முடியலை?
சின்னபசங்க எல்லாம் இப்பதான் ஸ்கூலை முடித்து தமிழ் இலக்கணம் மறக்காம இருக்கீங்க.
இந்த "பெரு"சு மட்டுன் இன்னும் மறக்காமே இருக்காரே. பெருவிலே தமிழ் வாத்தியாரா.
இதைப் படித்துவிட்டு நானும் இனிமே சரியாக ப் த் க் சேர்க்கிறேன்
//வ வா ச கூட்டமா??? நான் இது தமிழ் வகுப்புன்னு நெனெச்சேன்...
தப்பான இடதுக்கு வந்துட்டென்... //
பரவாயில்லை உதயகுமார்.. ரெண்டும் ஒண்ணாத் தான் நடந்தது..
ஜெயஸ்ரீ, ஒண்ணு குறைவு.. ஒரு வெண்பா போடுங்களேன்..
100ஆவது நீங்க தான் உதயகுமார்.. :)
நீங்க அந்தக் கட்சியில இருக்க வேண்டிய ஆளே இல்லை.. :)
//தமிழ் for Tamils
தளையோ தவளையோ...
வெண்பா Ver 1.0.2.4.7
தேமா புளிமா புளிக்காதம்மா...
//
ஆ.. தம்பி பாண்டி.. இத்தனை தலைப்புகள் உள்ளனவா.. என் கை துடிக்கிறது.. பதிவு போட விழைகிறது.. இருக்கட்டும்.. கொஞ்சம் கட்சியில் சலசலப்பு அடங்கட்டும்.. (அதான் தேவும் கீதாவும் கெளப்பறது தான்).. அப்புறம் எழுதுவோம் :)
//நாந்தான் 100ஆ?//
இல்ல கொத்ஸ், அம்பதுக்கு நீங்க வந்தீங்க.. 100க்கு உங்க பெங்களூர் 70வது வட்டத் தலைவர் வந்திருக்காரு.. மனம் தளராம, நீங்க 200க்கு முயற்சிக்கலாம்:)
//நன்றி! நம்மளையும் ஆட்டத்துல சேத்துகிட்டதுக்கு! //
கட்டதுரை நீங்களும் பார்த்தியும் இல்லாமலா...!!! நம்ம கைப்புவோட பெருமையை உலகுணரச் செய்வது நீங்க ரெண்டு பேரும் தானே!!!
தேவ் அண்ணா,
உனக்கு என்ன பிரச்சனை.. எதோ அக்கா கிளாஸ் எடுக்குது.. இந்த நேரத்துல போய் சிறுநரிகளின் சலம்பல் கேட்டு நீயும் சவுண்டு விடலாமா.. கட்சிக்காக நீ எவ்வளவு வியர்வை சிந்தி இருக்க ? கட்சியின் இந்திய தூண் நீ.. என்ன கூட்டாளி நீ போய் இப்படி ?..
நமக்கு வெண்பொங்கல் தான் தெரியும்.. அக்கா எதோ வெண்பா அப்படின்னு பதிவு எல்லாம் போடுது.. இந்த எதிரி கட்சிகாரங்க அவங்களே ஒத்துகிட்ட மாதிரி இன்னைக்கு திங்கள்கிழமை அப்படின்னு எல்லாம் பதிவு போடாம நல்ல விசயம் தானே..
இதுலயும் சமாதானம் ஆகலயா.. சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிபார்.. என்னையும் எனது ஊயிர் தோழன் சிபியையும் இணைத்த அன்பு பாலம் அல்லவா நீர்.. நீர் போய் கோவம் கொள்ளலாமா..
சரி இன்னும் சமாதனம் ஆகலைன்னா சொல்லுப்பு.. கடை வேல முடிஞ்சதும் இன்னும் விரிவா எழுதுறேன்
இதே நேரத்தில் உருப்படியான பதிவு போட்டு 100 கமென்ட் வாங்கிய ஆற்றலரசி, அக்கா பிகிலு பொன்ஸ் அவர்களை நம்ம சங்கத்தின் தங்கங்கள் சார்பாக, ஒரு கொடியில் பூத்த இரண்டாவது மலரான இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்..
ராமனாதன்,
நீங்க ரொம்ப பெரிய பின்னூட்டம் போட்ருக்கீங்களே சரி, ஒரு வெண்பாவாவது இருக்கும்னு பாக்க வந்தா.. ம்ஹும்...
பதிவு பூரா பாருங்க.. எல்லாம் எங்க சங்கத்துக்காரங்க பின்னூட்டம்.. இந்த அன்பையும் பாசத்தையும் விட்டுட்டு உங்க கட்சிக்கு வருவதா... நோ... நெவர்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
வ.வா. சங்கமே எங்கள் மூச்சு.. கைப்புவே எங்கள் நிரந்தர முதல்வர் :)
சற்று தாமதமாகி விட்டது.
ஒற்று பற்றிய சுட்டி:
http://pksivakumar.blogspot.com/2006_01_01_pksivakumar_archive.html
அன்புடன்
நடராஜன்.
//என்னை ஏமாற்றி கட்சி ரகசியங்களைக் கறப்பது உம்மால் முடியாது//
பெனாத்தல், அது என்ன கட்சி ரகசியத்தை இப்போ சொன்னிங்க? விரும்புதல், வேண்டுதல் மேட்டரா?
உங்க கட்சியிலும் அப்படித் தானா? நீங்க விரும்புவதை விட மருத்துவரிடம் வேண்டி நின்றாத்தான் உங்களுக்கு தேவையானது கிடைக்குமா?
எங்க சங்கத்துல அப்படி எல்லாம் இல்லைங்க.. எங்கத் தங்கத் தலைவர்கிட்ட எது கேட்டாலும், ஏன், எனக்குப் பிடித்தத் தொகுதின்னு சொன்னாலே குடுத்துருவாரு.. அவ்வளவு பெரிய மனசு... :)
எப்படி வசதி, இனி மேலும் வேண்டிகிட்டு இருக்கப் போறீங்களா?
ஆகா.. கீதாக்கவே குழப்பம் இல்லன்னு சொல்லிட்டாங்க...
நூறுபின்னூட்டம் பெற்றதைவிட பெரிதுவக்கும் தலைவலியின்
குழப்பமில்லை என்ற கூற்று..
இலவசம்.. எங்கள் சங்கத்தின் கட்டமைப்பைக் குலைக்க முயற்சி செய்ததற்காக உங்களைக் கண்டிக்கிறேன்..
கீதாக்கா, நம்ம ஒற்றர்படைத் தளபதி நன்மனத்துக்குத் தான் வலைப்பூவே இல்லையே.. அவர் என்ன நினைக்கிறார் என்று பிறர் அறியாமல் வைத்திருப்பதாலேயே அவர் ஒற்றர் ஆகி இருக்கிறார்.. நீங்க யாரைக் கேக்கறீங்க?
சிவா,
சென்னைப் பக்கத்துக்கும் எட்டிப் பாத்ததுக்கு முதல் நன்றி..
//இதைப் படித்துவிட்டு நானும் இனிமே சரியாக ப் த் க் சேர்க்கிறேன் //
இன்னும் சில விதியெல்லாம் பத்தி சங்கத்துல பேசப் போறோம்.. தொடர்ந்து வந்து பாருங்க :)
//இவர்வரு வாரென் றிவரே இயம்ப
அவர்வரு வாரென்ப தவர்சொல் - எவர்வர
என்றும் எழுதலாம் அல்லவா?//
சிபி, அப்படி எழுதவேண்டியதைத்தான் எளிதாக புரிவதற்காக (று) என்ற குறியீட்டில் வழக்கமாக எழுதப் படுகிறது.
பொன்ஸ், நீங்கள் குறித்தது சரிதான். திருத்திய வெண்பாவும் சரிதான். ஆனால் நான் வெண்பாவை இப்படிப் பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும்.
இவர்வரு வாரென்(று) இவரே இயம்ப
அவர்வருவா ரென்ப(து) அவர்சொல் - எவர்வர
மாறும்நம் வாழ்வெனும் மக்களின் புண்மனத்
தேறுமோ தேர்தல் கணிப்பு.
நடராஜன்
இன்னொரு வெண்பா:
இத்தனை தேர்தலில்வாக்(கு) இட்டேன் கணிப்பிற்கென்
சித்தத்தை யார்கேட்டார் இன்றுவரை - சுத்தமாய்க்
கூறவில்லை ஆயின் குறைபட்ட கூத்ததனால்
தேறுமோ தேர்தல் கணிப்பு.
நடராஜன்.
/பதிவு பூரா பாருங்க.. எல்லாம் எங்க சங்கத்துக்காரங்க பின்னூட்டம்.. இந்த அன்பையும் பாசத்தையும் விட்டுட்டு உங்க கட்சிக்கு வருவதா... நோ... நெவர்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
//
ஆனாலும் 50ம் 100ம் எங்ககிட்ட இருந்து என்பதை மறந்து விடாதீர்... அடுத்த எலெக்ஷனுக்கு இப்பவே பொட்டி குடுக்க ஆரம்பிச்சாச்சு... எல்லாம் அப்படியே லைன்ல வாங்க....
//பதிவு பூரா பாருங்க.. எல்லாம் எங்க சங்கத்துக்காரங்க பின்னூட்டம்.. இந்த அன்பையும் பாசத்தையும் விட்டுட்டு உங்க கட்சிக்கு வருவதா... நோ... நெவர்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)//
//இலவசம்.. எங்கள் சங்கத்தின் கட்டமைப்பைக் குலைக்க முயற்சி செய்ததற்காக உங்களைக் கண்டிக்கிறேன்.. //
பின்னூட்ட விளையாட்டில் ஒரு கட்சியினரைச் சார்ந்து இருக்கக் கூடாதென்பதை உணராத உங்க பேச்சு கா.
ரொம்ப நன்றி நடராஜன்.. இத்தனை விதிகள் இருக்கா.. இப்போது தான் ஒவ்வொன்றாகப் பார்க்கின்றேன். இன்னும் எளிமைப் படுத்தி எழுத முயற்சிக்கிறேன்..
//ஆனால் நான் வெண்பாவை இப்படிப் பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும்.//
அட, மாற்றிப் பிரித்ததில் இப்போது சரியாகிவிட்டதே.. நமக்குத் தோணலை பாருங்க :)..
அடுத்த வெண்பாவும் நல்லா இருக்கு. ஆனாலும் சந்தேகம், குறைப்பட்ட.. ப் வராதா?
//ஆனாலும் 50ம் 100ம் எங்ககிட்ட இருந்து என்பதை மறந்து விடாதீர்... அடுத்த எலெக்ஷனுக்கு இப்பவே பொட்டி குடுக்க ஆரம்பிச்சாச்சு... எல்லாம் அப்படியே லைன்ல வாங்க.... //
125 உம் நீங்க தான் போட்ருக்கீங்க:)
//பின்னூட்ட விளையாட்டில் ஒரு கட்சியினரைச் சார்ந்து இருக்கக் கூடாதென்பதை உணராத உங்க பேச்சு கா. //
இலவசம், இதுக்கெல்லாம் கா விட்டா எப்படி.. சும்மா லுலுவாகாட்டிக்கு.. வேணும்னா
இந்த அன்பையும் பாசத்தையும் விட்டுட்டு உங்க கட்சிக்கு வருவதா... நோ... நெவர்... ( சின்னி ஜெயந்த் ஸ்டைலில் படிக்கவும்)
இப்போ சரியா?
உ.பி.சவுக்கு ஒரு பிரசினைன்னா உடனே வந்து உயிர் (உயிரா? உயிரா? :)) கொடுக்கும் பாசக்கார அண்ணன், 'திருப்பதி' தல (எத்தனை நாளைக்குத் தான் பாசமல்ர்னே சொல்றது... ) பேராசிரியர் கார்த்திக்
வாழ்க வாழ்க!!!!
தேவ் தம்பி.. கோவம் தீர்ந்ததா? குழப்பம் குறைந்ததா? :)
கோவமா எனக்கா? என்னப் பேச்சு பேசுறீங்க?
நாமத் தான் தேர்தலில் கெலிச்சிட்டோம் தெரியுமில்ல...
சமாதானமாப் போயிருவோமா....
இந்த ஆங்கிலக் கேள்விக்கு டக்க்குன்னு பதில் சொன்னாப் போதும்...
I am a 5 Letter word
I am a Talent in you
If u take the first letter u will b dead
if u take the first 2 letters it will b sick
கோவமா எனக்கா? என்னப் பேச்சு பேசுறீங்க?
நாமத் தான் தேர்தலில் கெலிச்சிட்டோம் தெரியுமில்ல...
சமாதானமாப் போயிருவோமா....
இந்த ஆங்கிலக் கேள்விக்கு டக்க்குன்னு பதில் சொன்னாப் போதும்...
130 அடிச்சதுக்கு எங்க வாழ்த்துக்கள்...
அப்புறம் சமாதனம் எல்லாம் பேசுறீங்க....
சமாதானமாகப் போக ஒரு கன்டீஷன்
நாங்க கேக்குற இந்த கேள்விக்கு பதில் சொன்னா சமாதானம் பத்தி யோசிக்கலாம்...
என்ன அக்கா.. ரெடியா?
X is a 5 Letter word
X is a talent in u
If u remove the first letter u will b dead
if u remove the first two lettters
x will be sick...
what is X?
இது அசல் சங்கப் போட்டி அக்கா... உங்க திறமையைக் காட்டுங்க பாப்போம்
அட என்னப்பா இது இம்புட்டு டைம் கொடுத்தும் பதிலைக் காணும்...
தமிழ் இலக்கணம் மட்டும் பேசுனா உள்ளூர்ல்ல தான் அரசியல் பண்ணமுடியுமாம்... ஆங்கிலத்துல்ல அப்படியே அரையும் குறையுமா எடுத்துவுட்டா டெல்லிக்கு போய் டேராப் போடலாமாம்.. அதான் தல சங்கத்துல்ல ஆங்கில அறிவொளி திட்டத்தை அறிமுகப் படுத்தச் சொன்னாரு... அதோட முதல் படியே பெரும் இடியா இல்ல இருக்கு...
சரி சரி நாம எல்லாம் எதிர்ப்பையும் எகத்தாளத்தையும் எடுத்து இடுப்பில்ல வச்சுட்டு போறக் கூட்டமாச்சே அதுனால யார் எதித்தாலும் தலக் கைப்புவின் ட்ரீம் கேர்ள் கைப்பொண்ணு அண்ணியின் எண்ணத்தில் உதித்த இந்த மாபெரும் திட்டததினைச் செயல் படுத்தாமல் ஓய மாட்டோம்ல்ல:)
//125 உம் நீங்க தான் போட்ருக்கீங்க:) //
ம்ம்ம்...பார்த்தீங்களா எங்க பாசத்தை... 150 க்கும் வருவோம்...
தம்பி தேவ், இந்தப் பதிவுக்கு இது தான் உள்குத்துன்னு நினைக்கிறேன்.. தமிழ் படிக்கலாம்னு சொன்னப்போ ஏதோ சில பேர் வந்து போய்ட்டு இருந்தாங்க.. ஆங்கிலப் புதிர் போட்டு அவங்களையும் வராம பண்ணிட்ட!!!
இதெல்லாம் "யோசிங்க" கிட்ட கேட்கவேண்டிய கேள்வி.. எனக்கெல்லாம் ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மி தம்பி.. யாராவது பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்!!!
//ம்ம்ம்...பார்த்தீங்களா எங்க பாசத்தை... 150 க்கும் வருவோம்... //
நன்றி உதயகுமார்.. ஆனா இந்தப் பாசம் போதுங்க.. யாரும் ஒற்று மிகும்-மிகா இடங்களைப் பார்க்கிற மாதிரி தெரியலை.. உங்க கொ.ப.செ கொத்தனார் பதிவு மாதிரி ஆய்டுச்சு.. எல்லாரும் பின்னூட்டம் மட்டும் பாத்துட்டு விளையாடிகிட்டு இருக்காங்க..
இதோட முடிச்சிக்கலாம்னு பாக்கிறேன்.. :)
வெண்பாக்கள் எழுதுபவர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.. அதோட தேவ் கேட்ட புதிருக்கும் விடை சொல்லலாம்.. :)
sari sari... kovisukkatheenga... I will come with answer for Dev's puzzle...
//உங்க கொ.ப.செ கொத்தனார் பதிவு மாதிரி ஆய்டுச்சு.//
என்ன இது? எல்லாருக்குமே தெரியுமே. நம்ம பதிவு நாலு பேர் வந்து போற இடம். அங்க என்ன வேணா பேசலாம்ன்னு. டீக்கடை மாதிரி இவ்விடம் அரசியல் பேசக்கூடாதுன்னு போர்ட் எல்லாம் போடலையே. சொல்லப்போன பொட்டீக்கடையே அரசியல் பேசறாரு.
ஒண்ணு பண்ணலாம், வெண்பா தொடரா போடணும்னா வெ.வா. பதிவுலையே போடலாம். அங்க மட்டும் அது சீரியஸ் வெண்பா பதிவு. மற்ற பின்னூட்டங்களுக்கு இ.கொ.வை அணுகவும்ன்னு போர்ட் போட்டுடலாம். என்ன சொல்லறீங்க?
//ஒண்ணு பண்ணலாம், வெண்பா தொடரா போடணும்னா வெ.வா. பதிவுலையே போடலாம். அங்க மட்டும் அது சீரியஸ் வெண்பா பதிவு. மற்ற பின்னூட்டங்களுக்கு இ.கொ.வை அணுகவும்ன்னு போர்ட் போட்டுடலாம். என்ன சொல்லறீங்க?
//
டபுள் ஓகே.. என்னையும் ஆட்டத்துல சேத்துக்குங்க.. அப்புறம் இந்த மாதிரி, கை பரபரத்து என் பதிவுலயே வெண்பா போடாம இருக்கேன்.. :-D
//பரபரத்து என் பதிவுலயே வெண்பா போடாம இருக்கேன்..//
இதுக்குத்தான் என் பதிவில் ஒரு சந்தர்ப்பம் குடுத்தா உங்க வெண்பாவே நல்லா இருக்குன்னு ஜகா வாங்கறீங்க. நான் என்னதான் செய்யறது?
Still no one has answered my puzzle? :(
என்னங்க இந்த வ.வா சங்கம் பவர்புல் சங்கம் போலிருக்கு. 100வது நாளையும் தாண்டி வெற்றிநடை போட்டுட்டுருக்கு. ஜமாயுங்க. கைப்பு பதிவுகள நான் சரியா படிக்கலை இன்னும். அங்கயும் கொஞ்சம் போயிட்டு வரேன்.
Post a Comment