Wednesday, May 24, 2006

புதிய பூமி; பழைய வானம் தான்

முன்னுரை : இங்கேஇதெல்லாம் எழுத என்ன இருக்கு என்று தான் இத்தனை நாள் சும்மா இருந்தேன்.. அப்புறம் பார்த்தால், "எங்க இருக்கீங்க?" "என்ன பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு" எல்லா பக்கத்திலிருந்தும் கேள்விகளாக வந்து விழுவதால்... போதும் பில்டப்பு.. இனி மேட்டர்:என்ன காரணமோ கடல் கடந்து வந்தது ஒன்றும் பெரிய மாற்றமாகத் தோன்றவில்லை. 24 மணி நேர விமானப் பயணம், 16 மணி நேர பேருந்து பயணங்களைவிட வசதியாகவே இருந்தது. பாரிஸில் இறங்கி ஏறிய போது, பக்கத்தில் ஆஜர்பெகிஸ்தானிலிருந்து (அதாங்க, நம்ம நன்மனம் ஊரு) வந்திருந்த ஒரு வக்கீல் தாத்தா வேறு கடலை போட்டுக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.நியூ யோர்க்கில் இம்மிக்ரேஷன் (தமிழில் என்ன?) கடந்து உள்ளே வரும்போது ஒரு நிம்மதி.. அங்கிருந்து, நான் தங்கப் போகும் ஊருக்கு ஒரு இணைப்பு விமானம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் முன்பே வந்து பெயர் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சட்ட திட்டங்கள் ஏதும் இல்லாமல், விமானம் புறப்படுவதற்கு ஐந்து நிமிடம் முன்பு ஓடி வந்து டிக்கெட் கொடுத்த (அங்க மட்டும் நேரத்துக்குப் போய்டுவோமா என்ன?!! :) ) என்னையும் உள்ளே விட்ட பின்னும் வேறு யாராவது வருகிறார்களா என்று காத்துக் கொண்டு இருந்ததைப் பார்க்கும் போது, நம்மூர் ஊர்பஸ்களின் நியாபகம் தான் வந்தது..அடுத்து அவர்கள் காட்டிய வழியில் இறங்கிப் போனால், முதலில் பயணம் செய்து வந்த கடல் தாண்டி விமானத்தை[அதாங்க trans-oceanic] (200 இருக்கைகள்?!!) எண்ணிப் பார்க்கையில், 50 பேர் அமரக் கூடிய இந்த விமானம் ஒரு விளையாட்டுப் பொம்மை தான்.. சும்மா விளையாட்டு பொம்மை கணக்காக ஒரு நாலு விமானங்கள் ஒரே ஏறுவழியில் [boarding gate] இருந்தன.. ஒவ்வொன்றும் சில நிமிட இடைவெளியில் வெவ்வேறு இடங்களுக்குப் புறப்பட்டு போகும் விமானங்கள்.. இறங்கி வந்து ஊர் பெயர் சொன்னதும், ஊர்பஸ் கண்டக்டர் போலவே ஒருவர் "இதோ, இதுல ஏறிக்கம்மா" என்று கைகாட்டுகிறார். ஏறிய ஐந்து நிமிடங்களில், "இந்த வண்டி ..... ஊருக்குப் போகிறது, வேறு எங்காவது போக வேண்டியவர்கள் இறங்கலாம்" என்று அறிவிப்பு வேறே!!!

ஏற்கனவே, நம்ம ஊரில் கிளம்புமுன்பே நிறையபேர் எச்சரித்திருந்தது, "விமானத்தில் கைப் பைகளாகத் தூக்கிச் செல்லும் பைகளில் கொஞ்சம் துணியும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் கொண்டு செல்ல வேண்டும், மற்றவர்களின் பைகளுடன் சேர்க்கப்படும் செக்கின் பாக்கேஜுகள்(Checkin baggage) நிச்சயம் தொலைந்து விடும் அபாயம் இருக்கிறது.. ஒரு நாளேனும் சமாளிக்க வேண்டிய உடைகள் கைப்பையில் அவசியம் இருக்கவும்" என்பது தான். என்னடா நியூ யார்க் வரை இந்தப் பைகள் தொல்லையின்றி வந்து விட்டனவே என்று யோசித்ததால், என்கண்ணே தான் பட்டிருக்க வேண்டும்.. கொண்டுவந்த இரு பெட்டிகளில், ஊர்பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒன்றைக் காணவில்லை. போய் புகார் சொன்னால், "24 மணி நேரத்தில் உன் விலாசத்திற்கு வர ஆவன செய்கிறேன்" என்று சொல்லி, அதுவே ஒரு பெரிய உதவி போலச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.இங்கே வந்து ஒரு நாளில் எனக்கு என் பை கிடைத்ததும், அடுத்த நாள் வந்த மூன்று பேருக்கு (மூணு பேரா வந்தா எப்டிங்க?!! அதான் நம்பர் வொர்க் அவுட் ஆகலை :) ) அவ்ர்கள் துணிமணி, சாப்பாடு எதுவும் இரண்டு நாள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்று அறிந்த போது, "அட நம்ம பரவாயில்லை" என்று தோன்றிவிட்டது..

ஊரில் இருந்து கிளம்பும் போது குக்கர் எடுத்து வைத்துக் கொண்டவள், குண்டு எடுத்து வைக்க மறந்தாச்சு, அட, எல்லாம் குக்கருக்குப் போடும் குண்டு தான்.. குண்டு இல்லை என்பதே, நல்ல பசி வேளையில், குக்கரை எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது.. நல்லவேளை இந்த ஹோட்டலில் மைக்ரோ வேவ் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.. இதுவரை சன்டீவி புண்ணியத்தில் வினோதினி மட்டுமே சமைத்து நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த உபகரணத்தை கொஞ்சம் நேரம் புரியாம பார்த்து விட்டு, ஹோட்டல்கார ஆட்களிடமே உதவி கேட்டு சமைத்து பார்த்தேன்.. சாதம் பூப்போல இல்லாவிட்டாலும் பிரியாணி அரிசி மாதிரி முழித்து முழித்துப் பார்க்கிறது. இதெல்லாம் கவைக்குதவாது என்று முடிவு செய்து இப்போது பழைய கால வழக்கப்படி சாதம் "வடித்து" சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. சீக்கிரம் குக்கருக்கு குண்டு வாங்கவோ, இல்லை ஒழுங்காக மைக்ரோவேவில் சமைப்பது எப்படி என்றோ தெரிந்து கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..அட சொல்ல மறந்துட்டேனே, புதரகம்னு பேர் வச்சாலும் வச்சாங்க, இங்கே எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரே புதர், புல்வெளி, மரம் தான்.. எப்படித் தான் இத்தனை மரத்தையும் வெட்டாம, ஒழுங்கா தண்ணி விட்டு வளர்க்கிறாங்களோ??!! பின்ன, ஹோட்டல்களில் கூட தண்ணியை இலவசமாகத் தருவதில்லை, இந்த மரம் செடி கொடிக்கெல்லாம் எப்படி விடறாங்கமற்றபடி குறை என்றால், பெரிய குறை ஒரு தமிழ்ச் சேனல் கூட வருவதில்லை. தொ.கா ஒரு வேஸ்ட்!! வந்தா மட்டும் வேஸ்ட் இல்லையா என்று தோன்றினாலும் செல்வி, கே டிவி எல்லாம் பார்த்து கிட்டு இருந்த நமக்கு எப்படிங்க இந்த நரி நியூஸும்(Fox) வானிலை சானலும் போதும்?!!பெரிய ஆறுதல், இலவச இணையம், 24 மணி நேரம்..அப்புறம் இங்கே பார்த்த மற்றோரு ஆச்சரியம், விற்கப்படும் எல்லா உணவுகளிலும், அது தயிராக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் விலைப் பட்டியல் இருக்கோ இல்லையோ, கலோரி, விட்டமின் அளவு எல்லாம் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். மக்கள் சாதாரணமான சாப்பாடே சாப்பிட மாட்டாங்களா? எல்லாத்துக்கும் விட்டமின், மினரல் கணக்கு பார்த்து தான் சாப்பிடுவாங்களா என்ன? கஷ்டம்டா சாமி!!!ஆகா, இவ்வளவு எழுதிட்டோமா?!! இங்க வந்து இதுவரை மூன்று நாள் தான் ஆச்சு என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்... பயம் வேண்டாம், ஒவ்வொரு மூன்று நாளும் இது மாதிரி கட்டுரைகள் தொடராது :)

68 comments:

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்மண பட்டியைக் காணோமே?!!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:-)
தமிழ்மணத்தில் சேர்த்துட்டேன்.
//சாதம் பூப்போல இல்லாவிட்டாலும் பிரியாணி அரிசி மாதிரி முழித்து முழித்துப் பார்க்கிறது. இதெல்லாம் கவைக்குதவாது என்று முடிவு செய்து இப்போது பழைய கால வழக்கப்படி சாதம் "வடித்து" சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்..//
:-)

//ஒவ்வொரு மூன்று நாளும் இது மாதிரி கட்டுரைகள் தொடராது..//
:-(

வெளிகண்ட நாதர் said...

//இம்மிக்ரேஷன் (தமிழில் என்ன?)//குடியேற்ற கட்டுபாடு துறை, எந்த அர்த்தத்திலே கேட்கிறீங்கங்கறதை பொறுத்து இருக்கு! உங்க வாக்கிய கருத்துக்கு இது சரி!

//விலைப் பட்டியல் இருக்கோ இல்லையோ, கலோரி, விட்டமின் அளவு எல்லாம் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள். மக்கள் சாதாரணமான சாப்பாடே சாப்பிட மாட்டாங்களா? எல்லாத்துக்கும் விட்டமின், மினரல் கணக்கு பார்த்து தான் சாப்பிடுவாங்களா என்ன? கஷ்டம்டா சாமி!!!// உங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லையே, இங்க உள்ளவங்களுக்கு அதிகம். இந்த பட்டியல் பார்த்து சாப்பிட ரொம்ப உதவியான ஒன்னு! நமக்கு நாமே கட்டுபாடுடன் நம்மை காக்க, இதில ஒரு கஷ்டமும் இல்லேம்மா!

வவ்வால் said...

வணக்கம் அம்மா பொன் ஸ்!

காரமான ஜிலேபி ஒத்துக்காம தலைமறைவாகிட்டதா இருந்தேன்.கடல் தாண்டி சீமைக்கு போய்டிங்களா? அக்கரை சீமையிலே அழகா!!?? இருக்கிறத எல்லாம் படம் புடிச்சி உங்க பதிவில் போடுங்க! அப்படி பார்த்தா தான் நமக்குலாம் உண்டு!

SK said...

நான் சொன்னது போலவே,
நிறைய புதர்களைப் பார்த்து மகிழ்ந்ததற்கு மகிழ்ச்சி!

'குண்டு' எல்லாம் வேண்டாம்!
உடனே, பக்கத்தில் உள்ள, வால்-மார்ட் அங்காடிக்குச் சென்று 6 - 7 டாலரில் ஒரு மைக்ரோவேவ் குக்கரை வாங்கி,
ஒரு கப் அரிசிக்கு, 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி,
15 - 20 நிமிடம் டைமர் வைத்து அழகான அரிசி சோறு சாப்பிட வாழ்த்துகிறேன்!

தனி மடலில், உங்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவிக்கவும்~!

உங்கள் ஊரில் உள்ள எம் நண்பரைத் தொடர்பு கொள்ள சொல்லுகிறேன்!
[சாப்பாட்டுக்கு மட்டும்!!!]

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்!

3 நாளுக்கு ஒருமுறை பதிவை எதிர்பார்க்கிறேன்!

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்மணத்தில் சேர்த்ததற்கு நன்றி பாலா.. இந்தக் கணினி பிரச்சனை தான் என்று நினைக்கிறேன்.(பின்ன ஓசி கணினியாச்சே :)) பழைய பதிவுகளின் பட்டிகளும் காணவில்லை :(

வெளிக்கண்ட நாதர்,
இம்மிக்ரேஷன் - இந்த வார்த்தை எழுதும் போது, நீங்க தான் வந்து பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.. நீங்களே சொல்லிட்டீங்க :)

//நமக்கு நாமே கட்டுபாடுடன் நம்மை காக்க, இதில ஒரு கஷ்டமும் இல்லேம்மா! //
அது என்னங்க நமக்கு நாமே கட்டுப்பாடு, இந்த பட்டியல் பார்க்கும் போது இவ்வளவு விட்டமின், மினரல் சாப்பிடும் அளவுக்கு நம்ம என்ன நலிஞ்சா இருக்கோம்னு தோணுது.. ஒரே நன்மை, என்னைப் பொறுத்தவரை, வாங்கும் பொருள் வெஜிடேரியன் தானான்னு சுலபமாப் புரியுது..:))

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே,
//நான் சொன்னது போலவே, நிறைய புதர்களைப் பார்த்து மகிழ்ந்ததற்கு மகிழ்ச்சி!//
நீங்க சொன்னா தப்பா போகுமா?:)

//உடனே, பக்கத்தில் உள்ள, வால்-மார்ட் அங்காடிக்குச் சென்று //
வால்மார்ட் எதுவும் பக்கத்தில இல்லையே.. இது ஒரு கிராமமாம்!! county!!!

//6 - 7 டாலரில் ஒரு மைக்ரோவேவ் குக்கரை வாங்கி,//
6- 7 டாலரா?!!! அது சரி.. யோசிக்க வேண்டியது தான்.

//அழகான அரிசி சோறு சாப்பிட வாழ்த்துகிறேன்!//
இது ஒண்ணு தாங்க ஆசையைத் தூண்டுது!!! இந்த ஒரு வாக்கியத்துக்காகவே இப்போ வால்மார்டைத் தேட, வாலைச் சுருட்டிகிட்டு கிளம்ப வேண்டியது தான்.

//உங்கள் ஊரில் உள்ள எம் நண்பரைத் தொடர்பு கொள்ள சொல்லுகிறேன்!
[சாப்பாட்டுக்கு மட்டும்!!!]//
இருங்க, இருங்க, சாப்பாட்டுக்கு மட்டும்னா எப்படி? அவர் சமைச்சு நான் சமைச்சு அவர் சாப்பிடவா? இப்படி சாப்பாட்டுக்கு உதவின்னு சொல்லி நேத்திக்கே ரெண்டு பேர் வந்து நான் பண்ணிவச்ச (பிரியாணி அரிசியில் ரசம்!!! என்னே காம்பினேஷன்!!! ) சாப்பாட்டை ரசிச்சி சாப்பிட்டுட்டு போய்ட்டாங்க.. ஒண்ணும் சொல்லிக்க முடியலை :)

//3 நாளுக்கு ஒருமுறை பதிவை எதிர்பார்க்கிறேன்! //
இத்தனை பேர் ஆவலா இருந்தா எழுதித் தான் ஆகணும் போலிருக்கே!!

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க வவ்வால், உத்திரத்துல இடம் கொடுக்கறேன்னு நீங்க சொன்ன நேரம் பாருங்க, ஆகாய விமானத்துலயே இடம் கொடுத்துட்டாங்க... அதான் தொத்திகிட்டு வந்துட்டேன். இங்க மனுஷங்க சாப்பிடும் சாப்பாட்டுக்கு பேசாம காரமான ஜிலேபில ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு சாப்பிடலாம்..
இங்க கிடைக்கும் சாப்பாடு பத்தி எல்லாம் தனியா ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன்..

படம் எடுக்க கேமிரா வேண்டும்.. இதுவரை வாங்க வில்லை.. ஒருவேளை வாங்கினால், போடுகிறேன் :)உங்களுக்கு இல்லாத படமா?:)

நன்மனம் said...

//விற்கப்படும் எல்லா உணவுகளிலும், அது தயிராக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் விலைப் பட்டியல் இருக்கோ இல்லையோ, கலோரி, விட்டமின் அளவு எல்லாம் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்.//

அந்த பாக்கட் என்னிக்கு பிரிண்ட் பண்ணது... அந்த பொருள் என்னிக்கு தயார் பண்ணது... பண்ணவனுக்கே வெளிச்சம்:-))

கால்கரி சிவா said...

பொன்ஸ், என்ன குக்கர்ன்னு சொல்லுங்க குண்டு வாங்கி அனுப்புறேன்.

நுண்ணலை அரிசி சமைப்பானும் வேண்டுமென்றால் வாங்கி அனுப்புறேன்

துபாய்வாசி said...

அமெரிக்கா போய் சேர்ந்துட்டு, குண்டு வாங்க போறேன்னு சொல்றீங்க! புஷ் தாத்தா இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கப் போறாரு. பத்திரமா இருங்க.

Immigration = குடியேறல் என சென்னை விமான நிலையத்திலேயே எழுதி வைத்திருப்பாங்களே? பார்த்ததில்லையா?

பொன்ஸ்~~Poorna said...

//அந்த பாக்கட் என்னிக்கு பிரிண்ட் பண்ணது... அந்த பொருள் என்னிக்கு தயார் பண்ணது... பண்ணவனுக்கே வெளிச்சம்:-)) //
நன்மனம், அதெல்லாம் போட்டிருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்.. நமக்கிருக்கிற அவசரத்துல அதையெல்லாம் நான் பார்க்கிறது இல்லை.. நாளைக்குப் பார்த்து சொல்றேன்

சிவா, ஹாக்கின்ஸுங்க.. நுண்ணலை அரிசி சமைப்பானா.. ஸ்ஸ் யப்பா கண்ணைக் கட்டுதே.. கால்கரியில் உட்கார்ந்து காலாட்டிகிட்டே வாக்குறுதியா அள்ளி விடுறீங்க.. :) ம்ம்ம்

துபாய்வாசி, சென்னை விமான நிலையத்துல என்னத்தப் பார்த்தேன்.. குண்டு எடுத்து வராமலேயே என்னைப் பார்த்து குண்டு குண்டா கேள்வி கேட்டுப் பயமுறுத்திட்டாங்க.. எங்கப்பா, ஒரே கேலி, "உன்னைப் பார்த்ததும் அவங்களுக்கு தெரிஞ்சிடிச்சு - திருட்டு முழி"ன்னு!!

manasu said...

//குண்டு எடுத்து வைக்க மறந்தாச்சு//

அங்க ஒசாமா அடிப்பொடிகள் யாரும் இல்லையா... அவுங்கட்ட கேட்டுப்பாருங்க குண்டு..

1.ஒசாமா அடிப்பொடி மூலம் குண்டு கிடைக்கும், சோறு பொங்கி சாப்பிடலாம்.
2.புஷ் அடிப்பொடி மூலம் இலவச சோறே (பிரட்?) கிடைக்கும்.

எது வசதி?

பொன்ஸ்~~Poorna said...

மனசு,
புஷ் அடியைப் பிடிச்சு பிரட் சாப்பிடுவதை விட ஓசாமாவிடம் குண்டு வாங்கி அரிசி சமைக்கலாம்..
விலாசம் கொடுங்க.. பார்த்துட்டு வர்றேன் :)

துளசி கோபால் said...

பொன்ஸ்,

அடடா.... நாடு விட்டே போயாச்சா? போட்டும். எல்லாம் நம்ம ஊர்தான்.

மைக்ரோவேவ் ரைஸ் குக்கர் வாங்கிரணும். 1 கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணி. நான் அவ்வளோதான் ஊத்தறேன். ஆனா இது ஜாஸ்மின் அரிசிக்கு. பாசுமதின்னா 3 கப்.
100% பவர்லே 4 நிமிஷம், 70% பவர்லே 4 நிமிஷம், 9 நிமிஷம் 59% பவர்,

அப்ப்டிப் போட்டாத்தான் தண்ணி வழியாது. இல்லேன்னா தினம் அதைவேற தொடைச்சுக்கிட்டு இருக்கணும்.

அக்கம்பக்கத்துலே இண்டியன் ரெஸ்டாரண்ட்டு இல்லையா?(-:

தேவ் | Dev said...

//சாதம் "வடித்து" சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. //

:)))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நல்ல பதிவு.. தொடருங்கள்..

ஆழியூரான். said...

அக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
க.பி.க ஆரப்பிச்ச உடனேயே.. வெளி நாட்டுக்கு ஓடிட்டீங்களா... :)
வாழ்த்துக்கள்.. இன்னும் எழுதுங்க..

வெளிகண்ட நாதர் said...

//அது என்னங்க நமக்கு நாமே கட்டுப்பாடு, இந்த பட்டியல் பார்க்கும் போது இவ்வளவு விட்டமின், மினரல் சாப்பிடும் அளவுக்கு நம்ம என்ன நலிஞ்சா இருக்கோம்னு தோணுது.. ஒரே நன்மை, என்னைப் பொறுத்தவரை, வாங்கும் பொருள் வெஜிடேரியன் தானான்னு சுலபமாப் புரியுது..:))//
நான் தான் கேட்டேனே? உங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லாத வரைக்கும் சரி. இருந்தா இது எல்லாம் உப்யோகப்படும். சிட்டிகை அளவில் உள்ள திணிக்கிறதை கார்போஹைட்ரேட் 15g மேலே கொஞ்சம் போனாலும் சர்க்கரை இரண்டு பான்ய்ட் எகிறிடும். இதைத்தான் கட்டுபாடுன்னு சொன்னேன். இந்த பவுச்ல வர அயிட்டம் எல்லாம் இந்த லேபிளை படிச்சு நம்மல நாமே கட்டுபாடா இருக்கலாம். வாயகட்டமுடியாது தான். சில தப்பான கான்செப்ட் நம்ம ஊர்ல சர்க்கரை வியாதி வந்தா, ஆளை கொண்ணுடுவாங்க நாக்கௌ கட்டி. ஆனா இந்த லேபிள் மந்திரம் உண்மையிலே நம்க்கு தரும் பெரிய பாடம். வேணும்னா இதை அப்புறம் ஒரு பெரிய பதிவா போடுறேன்!

Bala.G said...

pons,
Katturai nallaa irundhadhu.
US-la endha oorukulla irukeenga??... naanum inga vandhu 3 vaaramaagudu....paris, new york vazhiyaathaan vandhen...

manasu said...

//இருங்க, இருங்க, சாப்பாட்டுக்கு மட்டும்னா எப்படி? அவர் சமைச்சு நான் சமைச்சு அவர் சாப்பிடவா?//

ஆஹா....

பொன்ஸ் க்கு கல்யாண ஆசை வந்திருச்சுப்பே......

உஷாக்கா க்ளாஸ் ஒர்க் அவுட் ஆயிடுச்சு போல.

ஜொள்ளுப்பாண்டி said...

பொன்ஸக்கா என்ன அங்கன போயும் சோற வடிச்சிகிட்டு :( போய் hotdog, pizzaa,burgger ன்னு போட்டு தாக்கி உடம்ப தேத்திகிட்டு வாங்க !! :)

கீதா சாம்பசிவம் said...

பொன்ஸ், வால்மார்ட் இல்லாத ஊரே கிடையாது. இல்லையென்றாலும் வால்க்ரீன் இருக்கும். வால்மார்ட்டுக்குத் தம்பி. "Sams" Club" என்று இருக்கிறது. வால்மார்ட்டுக்கு அண்ணன். சாதம் சமைக்க மைக்ரோவேவ் எனக்குத் தெரிந்து சரியாக வருவதில்லை. ரைஸ் குக்கர் வாங்கவும். அரிசி அளவு ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர். இந்தியா ஸ்டோர் இல்லாத ஊரே இருக்காது. ஊரை நன்றாகச் சுற்றிப் பார்க்கவும்.அப்போது ஏதாவது இந்தியன் ஸ்டோர் கண்ணில் படும். ஃப்ரீஸ்டு சப்பாத்தி, பரோட்டா போன்றவை கிடைக்கும். லோக்கல் பிரெட் நன்றாகவே இருக்கும். பிரெட் டோஸ்டர் எல்லாம் அடுப்பு, மைக்ரோவேவ், அவன், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாமும் அப்பார்ட்மெண்ட்டோடு சேர்ந்தது. கொஞ்சம் தள்ளிப் பக்கத்தில் உள்ள பெரிய ஊர் எது என்று கேட்டுக் கொள்ளவும். எல்லா சாமான்களுமே கிடைக்கும். நல்ல வேளையாக கோடை நாளில் போய் இருக்கிறீர்கள். குளிர் வாட்டி எடுத்து விடும். எத்தனை மாதம் அல்லது வருடம்? சங்க வேலைக்கு எல்லாம் ஜுஜுபியா? Coffee Maker வாங்கவும். அதிலேயே டீயும் போடலாம். நினைவாக வரும்போது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களையும் தானம் செய்து விடவும். இங்கே உபயோகிக்க முடியாது.

Rishi said...

Gundu kondu pogatha thale thane....bathirama PUDARAGAM poneenga illane.....

:)

Samudra said...

//பெரிய ஆறுதல், இலவச இணையம், 24 மணி நேரம்..//

இது தானுங்க மிகப்ப்ப் பெரிய ஆறுதல்!

//ஒவ்வொரு மூன்று நாளும் இது மாதிரி கட்டுரைகள் தொடராது..//

ஓசி பி.சி, ஓசி இனையம்...இது பத்தாதுங்களா? இனி ஒரு பதிவுக்கு இத்தனைன்னு சம்பளம் கொடுத்தா தான் எழுதுவீங்களா? :)

கைப்புள்ள said...

சகோதரி புதரகத்தில் உணவுக்கு சிரமப்படுவதை அறிந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "வவாசமார்ட்"(Vavasamart),புதரகத்தில் இன்னுமிரு நாட்களில் திறக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேவைபடின் Vavasa Sheraton தொடங்கவும் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.

அது வரைக்கும் நம்ம புஷ்சு தெனமும் ஃபுல் மீல்ஸ் அனுப்பி வைப்பான்மா...கொஞ்சம் பொறுத்துக்க.

கைப்புள்ள said...

//ஊரை நன்றாகச் சுற்றிப் பார்க்கவும்.அப்போது ஏதாவது இந்தியன் ஸ்டோர் கண்ணில் படும். ஃப்ரீஸ்டு சப்பாத்தி, பரோட்டா போன்றவை கிடைக்கும். லோக்கல் பிரெட் நன்றாகவே இருக்கும்.//

இப்பவாச்சும் புரிஞ்சுக்கம்மா...அக்காவோட பாசத்தை. அடிக்கிற கை தான் அணைக்கும்...கோவம் இருக்குற எடத்துல தான் குணம் இருக்கும்.

Kuppusamy Chellamuthu said...

பயணக்கட்டுரை படித்து நீண்ட காலம் ஆன ஏக்கத்தைத் தீர்த்து வைத்து விட்டீர்கள் போங்கள்.
மணிகண்டனது ஆந்திரா ஸ்னாக்ஸ் போல இது அமெரிக்கா ஸ்னாக்ஸ் ஆகி விடும் போல இருக்கிறதே??

ஓட்டுனர் உரிமம் எல்லாம் இருக்கிறதா பொன்ஸ்??

-குப்புசாமி செல்லமுத்து

கைப்புள்ள said...

//இப்பவாச்சும் புரிஞ்சுக்கம்மா...அக்காவோட பாசத்தை. அடிக்கிற கை தான் அணைக்கும்...கோவம் இருக்குற எடத்துல தான் குணம் இருக்கும்.//

ஐயயோ! ஸ்மைலி போட மறந்துட்டேனே.

:)))))))-

இலவசக்கொத்தனார் said...

வாங்க வாங்க. கொஞ்சம் அவசரத்தில் இருக்கேன். அதனால மீதியெல்லாம் அப்புறம்.

குப்புசாமி செல்லமுத்து அண்ணாச்சி, நம்ம பதிவெல்லாம் படிக்கறது இல்லையா?

பொன்ஸ்~~Poorna said...

துளசிக்கா, தண்ணி ரொம்ப வழியுதுக்கா.. நீங்க சொன்ன விதத்துல இன்னிக்கி செஞ்சி பாக்கறேன். இன்டியன் ரெஸ்டாரண்ட் எல்லாம் கட்டுப்படியாகாதுக்கா!! ஏதாச்சும் மிச்சம் பிடிக்கணுமே!! :)

கழகப் போர்வாளுக்கு நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறதைப் பார்த்து என்ன ஒரு சிரிப்பு!! ம்ஹும்!!!

நன்றி யாழிசைச் செல்வன்.. கொஞ்ச நாளா உங்க 'புலம்பல்களைக்' காணோமே?!! :)

மணியன் said...

என்னங்க, எங்க போனாலும் நமக்கு நம்ம ஊர் சாப்பாடுதான், நம்ம தொ.காதான் வேண்டியிருக்கிறது. என்னமோ புதரகம் மினி இந்தியாவாக ஆகிவருவதாக சொல்கிறார்களே , உங்கள் கௌன்டி மட்டும் விதிவிலக்கா?

பொன்ஸ்~~Poorna said...

ஆழியூரான், க.பி.க ஆரம்பிச்சிட்டீங்களா? எல்லாரும் வ.வா.ச பார்த்து நல்லா கத்துகிட்டாங்க!!

வெளி(க்)கண்ட நாதர், உங்களுக்கு சக்கரை நோய் இருக்கா? இப்படி விலாவாரியா அதுபத்தி சொல்றீங்க!! எப்படியோ பதிவு போடுங்க, பாக்கிறோம் :)

பாலாஜி, இங்க வந்து பதிவு பாக்கறீங்க பாருங்க.. அதாங்க நம்ம தமிழ்மணம்!! :) ஊர் விஷயம் எல்லாம் தனி மடலில்..

மனசு, நீங்க வேற..:) அதான் எழுதி இருந்தேனே, சமையலுக்கு உதவின்னு சொல்லி இங்க ரெண்டு பேர் சாப்பிட்டது... அதான் ஒரு முன்னெச்சரிக்கை :)

பொன்ஸ்~~Poorna said...

பாண்டி, இங்ஙன வந்து பாரு தெரியும்!! அந்த வேகாத பிஸ்ஸாவையும், உப்பு காரம் இல்லாத பர்கரையும் எத்தனை நாள் சாப்பிட முடியும்!! சப்பாத்தி கூட பரவாயில்லை.. அட்ஜஸ்ட் செய்யலாம்.. இந்த பிஸ்ஸா, பர்கர் எல்லாம் ம்ஹும்!!! :(

கீதாக்கா, ஊரை இன்னும் பார்க்கலை.. பார்த்துட்டு எழுதறேன்.. காபி மேக்கர் இங்க தங்குமிடத்திலேயே கொடுக்கிறார்கள்.. நமக்கு அதைப் பார்த்தாலும் லேசா கை நடுங்குது.. காபி, டீ எல்லாம் நானே நல்லா போடுவேனே, எதுக்கு தனி மேக்கர் எல்லாம் :). மிச்சபடி நீங்க சொன்ன அண்ணா, தம்பி எல்லாம் தெரியறாங்களான்னு பார்க்கிறேன் :)

வாங்க ரிஷி, நிஜ குண்டு எடுத்து வந்திருந்தாலும் இவங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.. எல்லாம் கேள்வியோட சரி.. என்ன சொன்னாலும் ஒத்துகிட்டாங்க :)

பொன்ஸ்~~Poorna said...

சமுத்திரா, பதிவு எழுதி முடிச்சு பார்க்கும் போது, இதுக்கே நல்லா திட்டு விழப் போகுதுன்னு நினைச்சேன். இவ்வளவு ஆதரவு இருக்குன்னா எழுத வேண்டியது தான் :)

அண்ணே கைப்பு அண்ணே, நீங்க தான் நாயோட, புஷ்ஷைப் பார்க்க வர்றீங்களாமே? அப்படியே எங்க வூட்லேர்ந்து அந்த குண்டைக் கொஞ்சம் கடத்திக் கொணாந்தா நல்லா இருக்கும் :)

குப்புசாமி, அமெரிக்கா போய் நான் சாப்பிடுவது ஸ்னாக்ஸ் மட்டும் தான்னு ஆகிப்போச்சு.. ஒரு நாள் முழுச்சாப்பாடு சமைச்சு சாப்பிடணும் ம்ம்ம்... இந்திய ஓட்டுனர் உரிமம் உள்ளது.. இங்க செல்லுபடியாகுமான்னு தெரியலை :(

கொத்ஸ், மெதுவா வாங்க, அவசரம் இல்லை.. இன்னும் மூணு மாசம் இங்க தான் :)

மணியன், இது சரியான கிராமமா இருக்கும் போலிருக்கு.. பார்க்கலாம், ஏதாவது நல்லதா நடந்தா இன்னோரு பதிவு போட வேண்டியது தான் :)

Dharumi said...

ஏற்கெனவே போட்ட பின்னூட்டம் என்னாச்சுன்னு தெரியலையே!

மகேஸ் said...

//விற்கப்படும் எல்லா உணவுகளிலும், அது தயிராக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும் விலைப் பட்டியல் இருக்கோ இல்லையோ, கலோரி, விட்டமின் அளவு எல்லாம் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்//

என்ன இப்புடிச் சொல்லிப்புட்டீக. அதப் பாத்துதான் வாங்கிச் சாப்பிட்டு எடையைக் கன்ரோலா வச்சிருக்கேன். சில சாண்ட்விட்ச் 1500 கலோரி வரையெல்லாம் சத்து இருக்கும். ஒரு மாசம் தினம் ஒன்னு சாப்பிட்டால் 5-10 கிலோ எடை கூடிவிடும். பாத்தும்மா, ஊருக்கு திரும்பிவரும் போது உங்க சங்கத்து ஆளுங்களுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிடாதீங்க.

இளவஞ்சி said...

சந்தோசம்!

சோறு தண்ணியெல்லாம் 10 நாள்ல செட்டாகிரும்!

அங்கயாவது ஆபீஸ் வேலைக கொஞ்சம் பாருங்க! :)

பொன்ஸ்~~Poorna said...

தருமி, உங்க பின்னூட்டம் தப்பா ரிஜெக்ட் ஆய்டுச்சு.. இதோ மடலில் இருந்து:
//பெரிய ஆறுதல், இலவச இணையம், 24 மணி நேரம்..

... பயம் வேண்டாம், ஒவ்வொரு மூன்று நாளும் இது மாதிரி கட்டுரைகள் தொடராது :)//
- அப்போ, ஒவ்வொரு நாளும் மூன்று கட்டுரைகளா...?
//

பயம் வேண்டாம்.. ஒவ்வொரு நாளும் மூணு பின்னூட்டம் போடறதுக்கே நாக்கு தள்ளுது!! பதிவு எல்லாம் வராது என்று வாக்கு கொடுக்கிறேன்!!! :)

பொன்ஸ்~~Poorna said...

மகேஸ், இப்படி எல்லாம் பார்த்து சாப்பிடக் கூடாதுங்க.. நாலு தரம் மாடி ஏறி இறங்கினா சரியாய்டும்!! அளந்து சாப்பிடுவது கொஞ்சம் பிடிக்காத விஷயம்.. பாக்கலாம்..

இளவஞ்சி,
//சந்தோசம்!//
நாடு கடத்தினது சந்தோஷமா? அதெல்லாம் நடக்காது, உங்க க்ளாசுக்கு சிலேட்டோட வந்துருவோம்ல..

// சோறு தண்ணியெல்லாம் 10 நாள்ல செட்டாகிரும்!//
பத்து நாள் ஆகுமா!! ஐயையோ!!!

// அங்கயாவது ஆபீஸ் வேலைக கொஞ்சம் பாருங்க! :) //
அதெல்லாம் நம்ம என்னிக்கி பார்த்திருக்கோம் ??!!

பெருசு said...

அக்கா பொன்ஸூ
அமேரிக்காவுக்கே வந்துட்டீங்க.
அக்கம் பக்கம் பாத்து இருங்க தாயீ.
காத்து கருப்பு கண்ணு பட்டிறபோவுது.
அங்கிட்டெல்லாம் 15c வராது, சொல்லிப்பிட்டேன்.
பழையபடி வெண்பா கிளாஸ் ஆரம்பிப்பீங்களா

Karthik Jayanth said...

அக்கா ஆற்றலரசி பொன்ஸ்,

//நியூ யோர்க்கில் இம்மிக்ரேஷன் (தமிழில் என்ன?)

வெண்பா வாத்தியாரம்மா அமெரிக்கா வந்ததும் மாறிட்டாங்க :-)

// சாதம் "வடித்து" சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்..

:-))))))))))) .. பேசாம ஒரு எலக்ட்ரீக் ரைஸ் குக்கர் வாங்கிடுங்க அக்கா.. அதுதான் ஈஸி சொல்லிட்டேன். இல்ல Subway, Taco bell, chipottale லயே காலம் தள்ளலாம் அது உங்க வசதி.. இல்ல அப்படியே பொடி நடையா இங்க வாங்க.. உங்க அன்பு தம்பி எதோ சமைச்சி போடுறேன். நல்லா சாப்பிடுங்க :-) .இங்க தினமும் ரணகள சமையல்தான்(சிவா சார் புண்ணியத்துல சால்னா லேட்டஸ்ட்).. ஆனா வார கடைசில மட்டும்தான் தோசை கிடைக்கும்.. வார நாள்ல கிடையாது.

//தண்ணியை இலவசமாகத் தருவதில்லை

அதான் டிரிங் இருக்கல்ல

//கஷ்டம்டா சாமி!!!

இதுல என்ன கஷ்டம் இருக்கு.. இதுதான் ஈஸி சொல்ல போனா. நம்ம பெர்சனல் டிரைனர் ஒரு சார்ட் போட்டு தருவாங்க. அத பாலோ பண்ணுனா போதும்.. உடம்பு ஹெல்திதான் எப்பவும் :-)

குமரன் (Kumaran) said...

வாங்க அம்மணி. ஊருக்கு வந்தவுடனே புலம்பத் தொடங்கியாச்சா? சரி சரி. இது எல்லாருமே செய்றது தான். கொஞ்ச நாள் போனா சரியாப் போவும்.

வழக்கமா எல்லாரும் குடுக்கிற பில்டப்பு தானே அம்மணி. நம்ம புது வலைப்பூவைப் பாருங்க. பில்டப்பு எப்படி இருக்குன்னு. :-) அப்புறம், வசீகரா பாட்டு போட்டிருந்தேனே. பாத்தீங்களா?

குமரன் (Kumaran) said...

இம்மிக்ரேசன்னா தமிழ்ல என்னான்னு சொல்ல வந்தா ஏற்கனவே சொல்லியிருக்காங்க. ஏர்பஸ்ஸ நம்ம் ஊர் ஊர்பஸ்ஸுன்னு சொல்லி நல்லாவே உங்க அனுபவத்தை எழுதியிருக்கீங்க. :)

எப்படியோ பை வந்து சேந்ததே. மகிழ்ச்சி. இது வரைக்கும் எத்தனையோ தடவை நம்ம ஊருக்குப் போயிட்டு வந்திருக்கேன். ஆனா இந்த பை வந்து சேராத அனுபவம் நல்ல வேளை எனக்கு ஏற்பட்டதில்லை. :-)

கலோரி, விட்டமின் போடத் தான் செய்யறாங்க. நான் அதெல்லாம் பாக்குறதில்லை. அதனால ஒரு தடவைக்கு மறு தடவை பாக்குறப்ப நண்பர்கள் எல்லாம் அடையாளமே தெரியலைன்னு சொல்லுவாங்க. :-)

குமரன் (Kumaran) said...

உங்க இலவசக் கணினியில ஏதாவது நெருப்புச் சுவர் இருக்கப்போகுது. நெருப்புச் சுவர் தான் பட்டியை மறைக்குது. நான் என்னுடைய கணினியில ஒவ்வொரு தடவையும் நெருப்புச் சுவரை இடிச்சுட்டுத் தான் தமிழ்மணத்துக்கு அனுப்புறது பதிவை. :-)

குமரன் (Kumaran) said...

யப்பா.... இவ்வளவு பேரு உங்களுக்கு சமையல் குறிப்புகள் சொல்றாங்கப்பா. பயபுள்ளைக தான் தானா எல்லாத்தையும் கத்துக்குது. நாங்க எல்லாம் வந்து சமையல் செஞ்சு சாப்புடலையா. கொஞ்சம் நாள் போனா எல்லா அத்தைமார்களும் அக்காமார்களும் மெச்சற அளவுக்கு சமையல் செய்யத் தொடங்கிடுவீங்க. எல்லாம் அனுபவம் தான். :-)

பொன்ஸ்~~Poorna said...

பெருசு, இங்ஙன உட்கார்ந்து என்ன வெண்பா வகுப்பு.. எல்லாம் இருக்கட்டும், ஊருக்குப் போய் பார்க்கலாம் :)

கார்த்திக், உங்க ஊருக்கு ஒரு ட்ரிப் போட்டுற வேண்டியது தான். அதென்ன வாரக் கடைசியில் மட்டும் தோசை? செய்முறைப் பிரச்சனையா? இல்லை மாவு இல்லையா?

குமரன், நெருப்புச் சுவர் பிரச்சனைதான்னு நினைக்கிறேன்.. நீங்க கொடுத்து வச்சவரு, உங்க பை தொலைந்ததே இல்லை :). இங்க விழுந்த சமையற்குறிப்பெல்லாம் திரட்டி, "நுண்ணலை அடுப்பும் நானும்"னு ஒரு பதிவு போட்டுற வேண்டியது தான் :)

செல்வன் said...

பொன்ஸ் அக்கா,

டாலர் ஸ்டோர் என ஒன்று இருக்கும்.அனைத்தும் மிக விலைமலிவாக கிடைக்கும்.டின் உணவுகள்,பழங்கள்,தக்காலிகேன்,சூப் எல்லாம் 1$ தான்.பிலாஸ்டிக் கப்,ஸ்பூன் வேண்டுமென்றாலும் கிடைக்கும்.

வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் தட்டுங்கள்.

சிங். செயகுமார். said...

பொன்ஸ் சாப்பாட்டு பிரச்சனை தீருவதற்க்குள் மூனு மாசம் ஓடிடும் போல:)

தேவ் | Dev said...

//"வவாசமார்ட்"(Vavasamart),புதரகத்தில் இன்னுமிரு நாட்களில் திறக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேவைபடின் Vavasa Sheraton தொடங்கவும் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.//

பொன் ஸ் அக்கா,

தல இம்புட்டு பீலிங் விடுறாரே என்னன்னு விசாரிச்சேன்.. அது ஒண்ணும் உங்களுக்காக இல்ல ...எல்லாம் அவ்ர் டார்லிங் நம்ம மதிப்பிற்குரிய கைப்பொண்ணு அங்கன டூர் போயிருக்காகளாம் அவக வசதிக்காகத் தானாம்...

எதோ சொல்லுவாகளே நெல்லுக்கு பாயுறது புல்லுக்கும் பாயட்டும்ன்னு அந்தக் கதைத் தான்:)

தல ப்ளீஸ் எக்ஸ் க்யூஸ் மீ உண்மையை என்னாலே மறைக்க முடியல்ல.:)))

தேவ் | Dev said...

கீதா அக்கா கொடுக்குற ஐடியா பாசம் மாதிரியாத் தெரியுது.. இல்ல பொன் ஸ் அக்காவை நிரந்தரமாப் புதரகத்துல்ல குடியேத்திட்டு இங்கே மகளிரணியை மொத்தமாக் கவர் ப்ண்ணி பவர் காட்டுற மாதிரியில்ல தெரியுதுன்னு சங்கத்து கேட் வாசல்ல சங்கத்து முக்கிய மக்கள் பேசிகிட்டு நின்னாயங்க. நான் தான் போய் அப்படி எல்லாம் எதுவும் இல்ல.. இது பாசம் தான் .. பாசம் மட்டும் தான் அவங்க வேட்டியை உருவி தரையிலேப் போட்டுத் தாண்டி சத்தியம் பண்ணிச் சொல்லிட்டு வந்தேன்..

தேவ் | Dev said...

//கழகப் போர்வாளுக்கு நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறதைப் பார்த்து என்ன ஒரு சிரிப்பு!! ம்ஹும்!!!//

சங்கத்து ஆற்றலரசிப் பதிவில்ல கழகத்துப் போர்வாள் சிரிப்பா..எந்த கழகமா இருந்தாலும் சரி ஸ்டாப் லாபிங் ஆமா சொல்லிப்புட்டேன்.

என்னக்கா எப்படி நம்ம சவுண்ட் கரிக்கிட்டா மெரட்டுரேனா?

Dharumi said...

பதிவின் தலைப்பு ரொம்ப பிடிக்குது. நல்லா இருக்கு.

Rishi said...

Hmmm pasanga ellarum software kooda samayalum padikaranga pola ore receipes'a kotranga :):)

Sadam vadikarathu avao kastama :)

சந்தோஷ் aka Santhosh said...

வாங்க பொன்ஸ் இதுக்கே இப்படி அசந்து போயிட்டா எப்படி. ஊர் பஸ்ல பயணம் செய்ய முயற்சி செய்து பாருங்க அப்புறம் முடிஞ்சா லைசென்ஸ் எடுத்துப்பாருங்க SSN ஆபிஸ் பக்கம் போயி பாருங்க.

பொன்ஸ்~~Poorna said...

செல்வன், டாலர் கடையையும் இன்னும் பார்க்கவில்லை.. நீங்களும் இந்த ஊர் தானா? நீங்கள் இணையத்தில் இருக்கும் நேரத்தை வைத்து, நம்ம ஊருக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று நினைத்தேன் :)

சிங், அப்படித்தான் ஆகும் போலிருக்கு :(

தேவ், கைப்பொண்ணு பத்தி நோ கமென்ட்ஸ் :).. நெல்லுக்குப் பாய்ந்தாலும் புல்லுக்குப் பாய்ந்தாலும் ஏதோ பாய்ந்தா சரிதான் :)

பொன்ஸ்~~Poorna said...

தருமி, மறுபடி வந்ததுக்கு முதல் நன்றி; தலைப்பை யாருமே கவனிக்கலியேன்னு நினைச்சேன்.. கவனிச்சு ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி :)

ரிஷி, நீங்க இங்க புதுசு போல, சமையல் குறிப்பு சொன்னவங்க எல்லாம் பெண்கள் தான் - எஸ்கே ஐயா நீங்கலாக.. வீட்டாரின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் பேணும் இல்லத்தரசிகள் :). மத்தபடி, இப்போ பசங்க எல்லாம் சாப்ட்வேர் கூட சமையலும் படிக்கிறாங்க என்பது சத்தியமான வார்த்தை.. இங்க பல சமையல் குறிப்பு பதிவுகள் வரும்.. அதெல்லாம் பார்த்தா உங்களுக்குத் தெளிவா புரியும் :)

சந்தோஷ், பஸ்ஸே காணோமேங்க!! SSN, லைசென்ஸ் தொல்லை எல்லாம் இப்போதைக்கு இல்லை.. அந்தவரை நான் தப்பிச்சேன் :)

செல்வன் said...

பொன்ஸ் அக்கா
நான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூயார்க் இல்லை.அதெல்லாம் கோடீஸ்வரர்கள் இருக்கும் ஊர்.
நான் இனையத்தில் இருக்கும் நேரத்துக்கு கணக்கு வழக்கே கிடையாது.அதை வைத்து கண்டுபிடிக்க முடியாது.:-))

பொன்ஸ்~~Poorna said...

//நான் இருப்பது அமெரிக்காவில் தான்,நியூயார்க் இல்லை.//
செல்வன், நானும் நியூ யார்கில் இல்லீங்க.. அங்க தான் நம்ம போர்ட் ஆப் என்ட்ரி - நுழைவுத் துறைமுகம்!! (எப்படி, சரியா தமிழ்ப்'படுத்தி'ட்டேனா?)

//நான் இனையத்தில் இருக்கும் நேரத்துக்கு கணக்கு வழக்கே கிடையாது.அதை வைத்து கண்டுபிடிக்க முடியாது.:-)) //

அது உண்மைதான்.. பெரியாளா இருக்கீங்க!! :)

செல்வன் said...

பெரிய ஆள் எல்லாம் கிடையாது.

நான் ரொம்ப எளிமையான மனிதன்.உங்களில் ஒருவன்(ரஜினி படம் நிரைய பார்த்ததால் வந்த விளைவு..:-)))

செல்வன் said...

போர்ட் ஆப் என்ட்ரி - நுழைவுத் துறைமுகம்!//

குட் டிரான்ஸ்லேஷன்.ஐ அப்ரிஷியேட் இட்.

அப்ரிஷியேடுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு " மேலே முனிவர் சாப்பிட்டார்"

up rishi ate :-))

பொன்ஸ்~~Poorna said...

//நான் ரொம்ப எளிமையான மனிதன்.உங்களில் ஒருவன்(ரஜினி படம் நிரைய பார்த்ததால் வந்த விளைவு..:-))) //
ரஜினி படம் நிறைய பார்த்ததால், தமிழையும் தப்பு தப்பா எழுதறீங்க.. எங்க, நிறைய சொல்லுங்க பார்க்கலாம்!! :)

D The Dreamer said...

பொன்ஸ்:
வெண்பா வடிக்கும் உங்களை சோறு வடிக்க விட்டுடுச்சே இந்த விதி :)
அடிக்கடி அனுபவங்களை பகிர்ந்துக்கங்க :)
D the D

கீதா சாம்பசிவம் said...

இந்த தேவ் சும்மாவே இருக்காமல் ஏதோ பெனாத்திக்கிட்டு இருக்கிறாரே. தலைவர் கவனிக்கறதில்லையா? நம்ம உள் விஷயத்தை எல்லாம் இப்படி உடைச்சாப் பேசறது?(ஸ்மைலி போட்டுக்கவும்). என் கிட்ட வசதி இல்லை. ஏழை கணினி. அடிக்கடி இணைப்புப் போய்விடும்.

கீதா சாம்பசிவம் said...

பொன்ஸ்,
நீங்க வடிச்ச சோத்தையா மேலே உள்ள முனிவர் சாப்பிட்டார்? பாவங்க அவர், அது சரி, முனிவர்னு சொல்றாரு, ஆனால் எப்பப் பார்த்தலும் மிலிட்டரி டிரஸ்ஸிலேயே வராரே, ரொம்ப பயமா இருக்குங்க. தூங்கும் போது கூட மிலிட்டரி டிரஸ் தானா?

பொன்ஸ்~~Poorna said...

கனவாளரே.,
வருகைக்கு நன்றி:)!! வெண்பா வடிப்பது மிக்கச் சுலபம் அப்டின்னு இந்த அனுபவம் புரிய வச்சிடுச்சு :)..

கீதாக்கா,
உங்க கூட படா தமாஷ்க்கா.. செல்வனைப் போய் முனிவன்னு சொல்றீங்க?!! அவர் தாங்க கடவுள்.. முனிவன்னு எல்லாம் சொல்லி அவரைக் குறைச்சு மதிப்பிடாதிங்க :)

Karthik Jayanth said...

பொன்ஸ்,

நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம். :-) தோசை சுட நேரம் ஆகும்.. வார கடைசிதான் சரி..வேற ஒண்ணும் இல்ல.

SK said...

//'குண்டு' எல்லாம் வேண்டாம்!
உடனே, பக்கத்தில் உள்ள, வால்-மார்ட் அங்காடிக்குச் சென்று 6 - 7 டாலரில் ஒரு மைக்ரோவேவ் குக்கரை வாங்கி,
ஒரு கப் அரிசிக்கு, 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி,
15 - 20 நிமிடம் டைமர் வைத்து அழகான அரிசி சோறு சாப்பிட வாழ்த்துகிறேன்!//

துளசி கோபால் சொல்வதற்குப் 10 பின்னூட்டத்திற்கு முன்னமேயே இந்த செயல்முறையை நான் சொல்லியிருந்தேன்!

எனக்குத் 'தேங்க்ஸ்' கிடையாதா?!!:))

கலிகாலமடா சாமி!

அப்புறம் 'வவ்வால்', நீங்க இந்த 'ஸ்' போட சிரமப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்!
பொன்ஸ் எனக்குச் சொன்னது போல "பெரிய எஸ்" போட்டுப் பாருங்கள்!