ஓர் இரவில்...
மிக நீண்ட
சுலபவழியில் (freeway)
நிலவுடன் பயணம்;
இரவும்,
இதம்தரும் குளிரும்,
இருபுறமும்
இயற்கை இருள் கலைக்கும்
மின்விளக்கு அழகும்,
சாய்ந்து ரசிக்க
சுகமான இருக்கையும்,
உடல் தொட்டுச்
சென்ற மென்தென்றலும்,
உணர்வு தொடாமல்
தலை சாய்த்துக் கொள்ள
கடல்கள் தாண்டியிருக்கும்
உன் தோள் மட்டும்
எண்ணி
ஏங்கும் நான்!
74 comments:
அதுக்குள்ள Homesickness வந்தாச்சா?
இங்க வந்தா முக்கியமான பிரச்சனை இதுதான்.
நாம மட்டும் இதை எல்லாம் பார்க்கிறோமே family கூட இருந்திருந்தா நல்லாருகுமேன்னு நினைச்சுட்டே இருப்போம்.
லாஸ்வேகாஸ்,கலிபோர்னியான்னு சுத்தினப்ப எல்லாம் I badly missed them all.
ஓஓஓஓஓ......கவிதையா?
என்னக்கா, கேக்கிற அளவுக்கு மோசமா இருக்கா?
//அதுக்குள்ள Homesickness வந்தாச்சா? //
செல்வன் :-)
'வீட்டு நினைப்பைத் தவிர வேறு ஏதோ நினைப்பு உள்ளூற ஊடுருவி இருப்பதை உணர முடிகிறது!
வாழ்த்துகள்!
பொன்ஸ் அக்கா,
Freeway ல போனதுக்கு எல்லாம் ஒரு பதிவா ?
செல்வன்,
//லாஸ்வேகாஸ்,கலிபோர்னியான்னு சுத்தினப்ப எல்லாம் I badly missed them all.
நோ கமென்ட்ஸ் :-)
ஆஹா, என்னாங்க சொல்றது :-( , ஆமா அந்த படத்தில இன்னங்க இருக்குது... ட்ரெயினா?
தெகா
கார்த்திக், ஒரு பதிவோட விட்டுட்டேனேன்னு நீங்க சந்தோசப் படணும்.. இதுவே கொத்தனாரா இருந்தா ?!!!
தெ.கா., அது என்னான்னு தெரியலை.. இரவு, மின்விளக்கு வெளிச்சம் இதுக்கெல்லாம் தொடர்பா தோணிச்சு அதான்.. போட்டுட்டேன் :)
ஹும்.. கஷ்ட்டந்தான் :)
எஸ். கே கவிதையைப் பார்த்தாலே புரியலியா, வீட்ல இருக்கிறவங்க நினைப்புத் தான் :)
//Suka said...
ஹும்.. கஷ்ட்டந்தான் :)
//
கஷ்டம்தான்னு சொல்லிகிட்டே சிரிப்பான் போடறாரே!! :)
இதுதான் சங்கதியா?
பொன்ஸ், சீக்கிரம் வீடு வந்துடுங்க.நீங்க சொன்ன தோள் அப்பதான் சந்தோஷப்படும்.நல்லா இருந்ததுப்பா. நம்ம வாழ்க்கையே இதுதான். இங்கெ இருந்தால் அங்கே தேடும்.பூர்ணமாக உணர தோழமை தேவை.மனு
//கார்த்திக், ஒரு பதிவோட விட்டுட்டேனேன்னு நீங்க சந்தோசப் படணும்.. இதுவே கொத்தனாரா இருந்தா ?!!!//
அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணும். வெண்பா கிளாஸ், ஆசிரியப்பா கிளாஸ் எல்லாம் முடிஞ்ச பின்னாடி இதுக்கு ஒரு கிளாஸ் போடலாம்.
உடைச்சு உடைச்சு நாலு வரி, சம்பந்தமில்லாமல் ஒரு படம். இது ஒரு பதிவு. இதை நம்ம சமக்கால இலக்கியத்தோட சமன் படுத்திப் பேசறீங்க. எல்லாம் நேரம்டா சாமி.
ஆமா இந்த தோளு - இது அம்மாவோடதா? ரங்கமணியா?
//தலை சாய்த்துக் கொள்ள
கடல்கள் தாண்டியிருக்கும்
உன் தோள் மட்டும்
எண்ணி
ஏங்கும் நான்! //
அப்படி என்றால் வ.வா.ச.வை விட்டு விட்டுப் போய்விடுவீர்களா? :-(((
சிங், உங்களுக்கு என்ன புரிஞ்சிதுன்னு நீங்க சொல்லமலேயே எனக்குப் புரிஞ்சிடுச்சு.. அத்தோட நம்ம புரிதலை மத்தவங்க புரிஞ்சிக்காம இருக்கணுமா இல்லையான்னு புரியாததால.. இத்தோட நிறுத்திக்கிடறேன்.. (இல்லைன்னா இந்த லைனைப் புரியாம நீங்க மதன் கிட்ட கேட்டு, அவர் புரிஞ்சி பதில் சொல்ல இன்னும் ஒரு வருசமாகி.,ஹிஹி.. எதுக்கு?!! ) :)
அவ்வளவு தாங்க மனு.. வீட்ல இருந்தா வெளில போகத்தோணும், வெளில வந்தா, வீட்டுக்கு எப்போ போவோம்னு ஒரு ஏக்கம்.. :(
//எல்லாம் முடிஞ்ச பின்னாடி இதுக்கு ஒரு கிளாஸ் போடலாம். //
இதுக்கு ஒரு கிளாஸா?? ஏய்யா, ஏற்கனவே கால்கரிக்குப் போய் க்ளாஸ் க்ளாஸா போட்டது போதாது?!!
// உடைச்சு உடைச்சு நாலு வரி, சம்பந்தமில்லாமல் ஒரு படம். இது ஒரு பதிவு. இதை நம்ம சமக்கால இலக்கியத்தோட சமன் படுத்திப் பேசறீங்க. எல்லாம் நேரம்டா சாமி.
ஆமா இந்த தோளு - இது அம்மாவோடதா? ரங்கமணியா? //
சாரி.. இப்படி ரசனை இல்லாத ஆளுக்கெல்லாம் சொல்றது இல்லை.. சும்மா எழுதினேன்.. ரங்கமணி வரும்போது, "அட, உனக்குத் தான்யா எழுதினேன்"னு கைல கொடுத்தா ஒரு தங்க வளையலோ, பிளாட்டினம் நெக்லஸோ அப்போ என்ன பாஷனோ அதுக்குத் தக்கன பாத்துக்கிடலாம்!!
//அப்படி என்றால் வ.வா.ச.வை விட்டு விட்டுப் போய்விடுவீர்களா? :-((( //
அப்படி எல்லாம் இல்லை லதா.. எங்க சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்றும் பதினாறு கீதா மேடமே (அக்கா, பதினாறா, பதினாலா??) அதற்கு ஒரு வாழும் சாட்சியாச்சே!!
//ரங்கமணி வரும்போது, "அட, உனக்குத் தான்யா எழுதினேன்"னு கைல கொடுத்தா ஒரு தங்க வளையலோ, பிளாட்டினம் நெக்லஸோ அப்போ என்ன பாஷனோ அதுக்குத் தக்கன பாத்துக்கிடலாம்!!
//
அட இப்படித்தான் பொன்ஸ் நானும் நினைச்சேன். என்ன நீங்க தங்கவளையல், பிளாட்டினம் நெக்லஸ்ன்னு சொல்றீங்க. நான் கேட்டதோ புளியோதரையோ, சிக்கன் ரோஸ்டோ, தக்காளி சாதமோ தான். ஆனால் பழைய சாதம் கூட கிடையாதுன்னுட்டாங்க. ஒழுங்கு மரியாதையா இப்ப என்னைப் பாத்து எழுதுறதுன்னா எழுதுங்க. சும்மா யார்யாரையோ நெனச்சிக்கிட்டு எழுதுனதை எடுத்துக்கிட்டு இங்க வந்தா விளக்குமாறு தான்னுட்டாங்க. :-(
கும்ஸ், அண்ணா,
இவங்க அறியாப் பொண்ணு (அறியா பொன்ஸூ) அதனால இப்படி எல்லம் எழுதறாங்க. பெரியவங்க நாமதானே சொல்லிக் குடுக்கணும்.
சரியா சொன்னீங்க கொத்ஸ் அண்ணா. என் பங்குக்கு நான் சொல்லிட்டேன். நானே சொன்ன பிறகு பெரியவங்க நீங்க இன்னும் எவ்வளவு அறிவுரை வச்சிருப்பீங்க இந்த அறியாப் பொன்மகளுக்கு? எல்லாத்தையும் தவறாம சொல்லுங்க.
சந்தை சிறுத்துதுன்னா,
சாகுபடி ஆளுக்குக் கொண்டாட்டமாம் !
ஏதோ பொன் ஸ் மனசில பட்டதை
பட்டுன்னு எழுதிட்டாங்கன்னா,
அதுக்காக இப்படியா
ஆளாளுக்கு பாயறது?
அறியாப் பொண்ணாம்!!
இவுஹ தான் வந்து சொல்லிக் கொடுப்பாஹளாம் !
என்னய்யா அக்குரமமா இருக்கு!
கேக்கறதுக்கு இங்க ஆளு இல்லைன்னு நெனைச்சுட்டிஹளா!
குமரன், கொத்ஸ், எஸ்கே, உங்க அன்புக்கும் பரிவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க!!!
இப்போ தான் உஷாக்கா, இளவஞ்சி, எல்லார் வீட்டுக்கும் போய் நல்லா மனைமாட்சி கத்துகிட்டு வந்திருக்கேன்.. ஒரு கல்யாணம் பண்ணி கண்கலங்காம வச்சிக் காப்பாத்த இது ஒண்ணு போதும்.. அடுத்தது லைன்ல வரும்போது, உங்க மூணு பேர்கிட்ட தான் வந்து கோச்சிங் எடுப்பேன்.. இத்தோட விட்ருங்கப்பா!! :)
//அடுத்தது லைன்ல வரும்போது, உங்க மூணு பேர்கிட்ட தான் வந்து கோச்சிங் எடுப்பேன்..//
அதுவரையில் காத்திருப்போம்!
அண்ணன்மார் உனக்காக!
பொன்மயிலே போய் உறங்கு!
பொழுதாகிப் போனதின்று!!
:))
பொன்ஸ் இப்ப தான் உங்க புரொபைலை பார்த்தேன்.நீங்க என்னை விட சின்னவங்க.ஆக அக்கா இல்லை.தங்கச்சி
nama ellam Veetule irukkum podu ennamo athoda arumai...lesule puriyathu..
aanaippadi engayavathu pona than HOME romba vaatum...:(
Cheers....
கும்ஸ் அண்ணாத்தே பாணியிலே...
:)-
//தலை சாய்த்துக் கொள்ள
கடல்கள் தாண்டியிருக்கும்
உன் தோள் மட்டும்
எண்ணி
ஏங்கும் நான்!
//
ம்ம். புரிகிறது உங்கள் கஷ்டம்!
பொன்ஸக்கா கவித நல்லாயிருக்கு.
வயசானங்க எல்லாரும் என்னமோ பெசிகிட்டு இருக்காங்க...எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது.
ஆஹா....
பொன்ஸ் க்கு கல்யாண ஆசை வந்திருச்சுப்பே......
உஷாக்கா க்ளாஸ் ஒர்க் அவுட் ஆயிடுச்சு போல.
Meendum athe pinnootam,intha pathivirkum poruthamaai irukkirathu!!!!
எஸ் கே, ரசிகர் மன்றம் அமைச்சது சரிதான்..
//அதுவரையில் காத்திருப்போம்!
அண்ணன்மார் உனக்காக!
பொன்மயிலே போய் உறங்கு!
பொழுதாகிப் போனதின்று!!
//
உரைநடையில் உரைக்கும் வழக்கமே இல்லையா? :)
செல்வன், என்னங்க, நீங்கவேற, அக்காவாவது, தங்கச்சியாவது, பிரண்ட்ஸ், அப்டியே விட்ருவோம்:)
நன்றி ரிஷி, தமிழில் எப்போ எழுத ஆரம்பிக்கப் போறீங்க?
thanks கைப்ஸ் அண்ணாச்சி :)
சிபி, எப்போ வந்தீங்க?
பரவாயில்லை சமுத்ரா.. விடுங்க.. கவித நல்லார்ந்தா போதும் :)
மனசு, இனிமே உங்களுக்கு :-) தாங்க.. கைப்பு அனுப்பின சிரிப்பானையும் சேர்த்து ரெண்டு :) :) வச்சிக்குங்க:)
//தலை சாய்த்துக் கொள்ள
கடல்கள் தாண்டியிருக்கும்
உன் தோள் மட்டும்
எண்ணி
ஏங்கும் நான்!//
வருத்தபடாத வாலிப சங்கத்திலிருந்து கொண்டு வருத்தமா ? Cheer up:)
///"கடல்கள் தாண்டியிருக்கும்
உன் தோள் மட்டும்...."///
அப்போ கடல் தாண்டினதுதான்
க(வி)தைக்கு காரணம்.
நட்சத்திரமே... நன்றி..:) எழுதும்போது கொஞ்சம் வருத்தம்... ஆனா, இந்தப் பின்னூட்டங்களைப் பார்த்ததுக்கு அப்புறம் பயங்கர மகிழ்ச்சி தான்.. இத்தனை பேர் நம்ம வருத்தத்துல பங்கெடுக்க இருக்காங்களேன்னு :)
ராஜா, நீங்க இப்போ தான் புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு,, ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு ஆராய்ச்சியெல்லாம் பூந்து விளையாடறீங்க?!! நீங்க தான் வ.வா.சங்க உறுப்பினர் துபாய்ராசாவா?
கடல்கள் தாண்டிய தோள்கள்
வெகு விரைவில்
தங்களின் தலை சாய்வதற்காய் கிடைக்கட்டும்
//உரைநடையில் உரைக்கும் வழக்கமே இல்லையா? :)//
"குணா" !!
?????????!!!
நன்றி ஞானியார்.. கவிதை எழுதிவிட்டு நீங்க பார்ப்பிங்களான்னு நினைச்சேன் :)
எஸ்.கே, உங்க ஒருவரிக் கவிதை பின் நவீனத்துவ வகையைச் சேர்ந்ததா? எனக்குப் புரியலியே அதான் கேட்டேன் :)
//நன்றி ஞானியார்.. கவிதை எழுதிவிட்டு நீங்க பார்ப்பிங்களான்னு நினைச்சேன் :)//
அட என்னை உண்மையிலேயே ஞானி ஆக்கிருவீங்க போலிருக்குது..
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..
என்னங்க? புரிஞ்சுப்பீங்கன்னு பார்த்தேன்!
என்னை ஏமாத்திட்டீங்களே!
கமல் பாடுவாரே அதுல ஒரு பாட்டு!
நினைவுக்கு வருகிறதா?
"அது வந்து... ஒன் கவிதையெலாம் படிக்கும்போது வார்த்த வர மாட்டேங்குது... ஒரேபாட்டாத்தான் வருது.... இதை அப்படியே கவிகைல சொல்லிடுங்க... என்பார்!
ஒடனே ஜானகியும்,
'உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது'
அப்படீன்னு சொல்வாங்களே!
சரியா?!:)
ஆமா, லாங்க் வீக்கெண்டுக்குக்கு எங்கேயும் போகலியா?
ஹோட்டல்தானா?
உரைநடை போதுமா?
:))
சங்கத்தை விட்டுப் பொன்ஸ் போறதாவது? அந்தத் தோளையும் சேர்த்து இழுக்க மாட்டோம்? என்ன நினைச்சுக்கிறீங்க?
அது சரி பொன்ஸ், என்கிட்ட மட்டும் ரகசியமாச் சொல்லுங்க. கல்யாணம் எப்போ?ரங்கமணி யாரு? தோளா?
///"ராஜா, நீங்க இப்போ தான் புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு,, ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு ஆராய்ச்சியெல்லாம் பூந்து விளையாடறீங்க?!! நீங்க தான் வ.வா.சங்க உறுப்பினர் துபாய்ராசாவா?"///
பொன்சு!பொன்சு!!!!எப்படிமா!எப்படி
இதெல்லாம்!!!!!!;-);-);-);-);-)
ya.ur guessing is absolutely Right.As per ur 'அன்புக்கட்டளை'
இப்போதைக்கு'profile' போட்டாச்சு.
பதிவுகள் விரைவில்.
(My special Wishes to ur Great Extraordinary Sensitivity.Regards.)
அன்புடன்,
(துபாய்)Raja.
சாரி எஸ்.கே, உங்க ரசிகை இன்னும் உங்க லெவலுக்கு வரலை.. இனி வந்துர வேண்டியது தான்.. எங்கேயும் போகலை.. ஹோட்டல் தான்.. தமிழ்மணம் தான் :)
//உரைநடை போதுமா?//
நிஜமாவே உரைனடை போதும்.. இனி கவிதையே எழுதுங்க.. புரிந்து கொள்கிறேன் :)
கீதா, சேர்த்துட்டா போச்சு.. நீங்க மதுமிதாவுக்குச் சொன்னதை இங்கே போடவில்லை.. அதை நீங்க மதுமிதா வீட்லயே போய் சொல்லிடுங்க :)
என்ன ராசா, பெரிய ரகசியமா?!! உங்க ப்ரோபைல் பார்த்தாலே தெரியுது :).. display name-ai துபாய் ராஜான்னே மாத்திடுங்க.. அது தான் நல்லா இருந்தது :)
உங்க அம்மாவுக்கு ஃபோன் செய்து 'இந்த' விஷயத்தைச் சொல்லிட்டேன். ஏதோ என்னால முடிஞ்சது...
தருமி!!! என்னங்க.. சின்னப்புள்ளைக ஏதோ சந்தோஷமா இருக்கட்டும்னு விடாம.. ஒரு கவித கூட சொல்ல விட மாட்டேங்கறீங்க!! :))
//ஒரு கவித கூட சொல்ல விட மாட்டேங்கறீங்க!! :))//
:))))))))))))))
படிச்ச உடன் ஒன்னுமே புரியல. என்னடா ஆச்சு, நம்ம மகளிரணி தலைவிக்கு அப்படினு, யோச்சிகிட்டே பின்னூட்டங்கள பாத்த, அத கவிதை சொல்லி இருக்காங்க. சரி நாமளும் வந்த தான் வந்துடோம், என்ன சொல்லாம் - ஆங்க கவிதை சூப்பருங்க. 2006யின் சூப்பர் கவிதை இது தானோங்க. இதுவே அதிகமா இருக்கு. அதுனால நிறுத்தி விடலாம்...
By the Way, கவிதையல்லாம் வேற எழுதிவிங்களா. பல திறமைகள் குவிச்சி கிடக்குதுனு சொல்லுங்க. வாழ்த்துக்கள். யாரையும் மனதில் நினைத்து எழுதி.......................
அம்மா பொன் ஸ்,
நள்ளிரவின் அந்தகாரதினூடே ஸ்வீட் ,காரம் சாப்பிட்டு கொண்டே சுலபவழி பயணம் செய்த போது உதித்த கவிதையா!!?? கவிதைக்கு பக்கமா வந்து இருக்கிங்க அதுக்குள்ள பின்னூட்டதிலே எல்லாம் இதான்டா கவிதைனு! வாசிச்சுடாங்க எல்லாம். இனிமே அவ்வளவு தான் இதுவே கவிதைனு நிறைய வரும் அப்போ! அப்போ பீலிங் ஆகி கவித வந்த இங்கே வந்து கொட்டிருங்க நாங்கலாம் எதுக்கு இருக்கோம்! (நான் கூட நாலு வரிகிறுக்கினதும் கவிதை மாதிரி இருக்கேனு சொல்லிடாங்க நாலு பேரு நானும் அன்னில இருந்து அதான் கவிதைனு கிறுக்கிட்டே இருக்கேன் :-))
//. 2006யின் சூப்பர் கவிதை இது தானோங்க//
சிவா.. போதுங்க.. ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் வாபஸ்.. நம்ம நல்லுறவு இப்படியே தொடரட்டும் :)
//கவிதைக்கு பக்கமா வந்து இருக்கிங்க அதுக்குள்ள பின்னூட்டதிலே எல்லாம் இதான்டா கவிதைனு! //
வவ்வால், நானும் பார்த்துகிட்டே இருந்தேங்க.. எல்லாரும் இப்படிச் சொல்றாங்களே, இதுவே ஒரு திருஷ்டி மாதிரி ஆகி, அடுத்த கவிதைக்கு சுலபவழி கிடைக்காம போய்டுமோன்னு..
இனி கவலையில்லை.. வவ்வால் வந்தாரு, திருஷ்டி கழிச்சாரு... நம்ம கற்பனைக்குப் பஞ்சமே இருக்காது இனி :) :)
அருமை
அம்மா பொன் ஸ்!
திருஷ்டிலாம் இல்லை ச்சும்மா டமாஸ்! இங்கே ஒரு கும்பலே நாய் , நரி லாம் வச்சு கவித எழுதுறத பார்க்கிறப்போ உங்க கவித இலகியம்ங்க! ஓர் இரவில் நு கதை எழுதினவர் முதல்வர் ஆனார் ,அனேகமா நீங்க தான் அடுத்த பிரதமர் ஓர் இரவில்னு கவிதை எழுதிட்டிங்கல்ளே அதான்! மனம் தளராத விக்கிரமாதித்யை போல எழுதிடே இருங்க படிக்க தான் நாங்கலாம் இருக்கோம்ல :-))
நன்றி சந்திரவதனா!!
வவ்வால், உங்க சொற்படி பிரதமர் மட்டும் ஆனேன்னு வச்சுகுங்க, நீங்க தான் ஜனாதிபதி !! (அப்போ தான் நாடு உருப்புடும் :)) நாய் நரியப் பத்தி மட்டும் தான் எழுதுனாங்கன்னு வருத்தமா? வவ்வாலைப் பத்தி ஒரு கவிதை எழுதி இருந்தா கொஞ்சம் மகிழ்ந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. அடுத்த கவிதை உங்களைப் பத்தித் தான் :)
//மனம் தளராத விக்கிரமாதித்யை போல எழுதிடே இருங்க படிக்க தான் நாங்கலாம் இருக்கோம்ல :-)) //
புது பட்டம் வந்தாச்சு இனி புதரக விக்கிரமாதித்யை பொன்ஸ்னு தாம் எல்லாரும் கூப்பிடனம், பிகிலு கிகிலு லாம் கிடையாது:-)
கவித கவித பொன்ஸ் அக்கா நடு நடுவுல மானே தேனே பொன்மானே இது எல்லாம் போட்டுக்கனும்
எல்லோருமே பாராட்டி முடித்துவிட்டபடியால், 'நல்லா இருக்கு' ன்னு நான் சொன்னால் அது சம்பிரதாயமாகவே தெரியும் :-)
-குப்புசாமி செல்லமுத்து
அடுத்த முறை போட்டுரலாம் ஸ்யாம் :)
குப்புசாமி, எல்லாருமே வாங்கினாலும் உங்களுக்கும் கொஞ்சம் ஷேர் மிச்சம் இருக்குமுங்க.. :) :)
//சுலபவழியில் (freeway)// நல்ல தமிழாக்கம்! சில ஆங்கில வார்த்தைகள் இங்கே கேட்கிறப்ப அதை சட்டுன்னு தமிழ்ல சொன்னா எப்படி இருக்கும்னு நான் நிறைய நினச்சுக்குறதுண்டு. அதே மாதிரி சில வாசகங்கள் உடனே நமக்கு தெரிந்த தமிழை ஞாபகப்படுத்தும். உதாரணத்து இந்த 'Hard times, Please Help me'ன்னு போர்ட்ல எழுதி பிச்சை கேட்கிறவங்களை பார்க்கும் போது, 'ஐயா, கஷ்டகாலம், உதவி பண்ணுங்கையா'ன்னு நம்ம ஊரு பிச்சாண்டிகள் ஞாபகம் தான் வரும்!
அம்மா கவிதாயினி பொன் ஸ்!
//வவ்வால், உங்க சொற்படி பிரதமர் மட்டும் ஆனேன்னு வச்சுகுங்க, நீங்க தான் ஜனாதிபதி //
வவ்வாலை ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆக்க இது ஒரு திட்டமிட்ட சதி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வன்மையாக கண்டிக்கிறேன்.எனது தனி தன்மையை இழக்காமல் தலைகீழாக தொங்குவேனே அன்றி எடுப்பார் கைப்பிள்ளை ஆக மாட்டேன் என சூளுரைக்கிறேன்!
//அடுத்த கவிதை உங்களைப் பத்தித் தான் :)//
வவ்வால் பற்றி கவித அதை தலைகீழா தொங்கிட்டே படிக்கனுமா :-))( எனக்கு பிராப்ளம் இல்லை!!!)
//நல்ல தமிழாக்கம்! //
நன்றி வெளிகண்ட நாதர்.. இன்னும் பார்ப்பவற்றை எல்லாம் தமிழாக்கி எழுத முயல்கிறேன் :)
// தலைகீழாக தொங்குவேனே அன்றி எடுப்பார் கைப்பிள்ளை ஆக மாட்டேன்//
ஓக்கே வவ்வால்.. ஏற்கனவே ஒரு கைப்பிள்ளை இருக்காரு.. நீங்க வேறயா?!! வேண்டவே வேண்டாம் :)
//தொண்டை அடைக்கும்..ஏண்டா வந்தொம் எண்று இருக்கும்...//
ஹமீது, பின்னூட்டத்திலயே சோகமாக்கிட்டீங்கப்பா.. முதல் பின்னூட்டம் போலிருக்கு, சீக்கிரம் வலைப்பதிவில் எழுத வாழ்த்துக்கள் :)
உங்களின் கற்பனைவளம் மிகவும் நன்றாக உள்ளது. உங்களின் மற்ற பதிவுகளிலும் இதனை நான் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் உங்கள் எழுத்துகளில் இப்பொழுது உள்ளதைவிட அதிக பற்று கொண்டு எடுத்து எழுதவும்(சீரியஸா எழுதுங்கறதை தமிழ்ல கஷ்டப்பட்டு சொல்லிருக்கேன்). உங்களுக்குள் ஒரு நல்ல எழுத்தாளார் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
///"ராசா!! :).. display name-ai துபாய் ராஜான்னே மாத்திடுங்க.. அது தான் நல்லா இருந்தது :)"///
நன்றி பொன்சு!!ஆனால் தாய்நாட்டு
பற்று தடுக்கிறதே!!!!!!.
தோள் தேடும் தோழியே
தோள் கண்டாய் தோளே கண்டாய்
தோளில் நீயும் கிளியெனக் கொண்டாய்
என்று அது உனக்குக் கிட்ட எனது வாழ்த்துகள்.
//உங்களுக்குள் ஒரு நல்ல எழுத்தாளார் தூங்கிக் கொண்டிருக்கிறார்.//
"பொன்ஸ்! இந்தாங்க சூடான காபி.
எழுந்துக்கறீங்களா இல்லையான்னு" ரங்கமணி வந்து எழுப்புவார்.
Beautiful Pons!!!! Heartfelt thoughts..huh?!
ரங்கமணிய நினச்சுதான் பாவமா இருக்கு பொன்ஸு. இதுக்கு ப்ளாட்டினத்துல நெக்லஸ் வேணுமா? நல்ல வேளை நீங்களும் மதுரை மீனாஷி ஒரிஜினல் செட் வேணும்னு கேக்காம விட்டீங்களே.. :))
மத்தபடி இது கவிதையா இல்ல வேற ஏதாவதான்னால்லாம் எனக்குச் சுத்தமா தெரியாதுன்னு இங்க சொல்லிக்கறேன்.
//உங்களுக்குள் ஒரு நல்ல எழுத்தாளார் தூங்கிக் கொண்டிருக்கிறார்//
செந்தில் குமரன், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.. எங்க இருக்காருன்னு தேடிப் பார்க்கிறேங்க :)
//ஆனால் தாய்நாட்டு பற்று தடுக்கிறதே!!!!!!. //
ராசா, உன் தாய் நாட்டு பற்றைத் தாங்க முடியலியே!! :)
ஜி.ரா, அடக்கி வாசிங்க.. கிளியெல்லாம் கூப்பிடறீங்க, மயில் கோபிக்கப் போகுது :))
சிபி, ஹமீது, ஒருத்தர் பாராட்டினா பொறுக்காதே!!! ம்ஹும்!!!
//என்ன யாரும், ஏண்டா எழுதினன்னு கேட்டா உங்கள கை காமிச்சிடுவேன்....//
ம்ஹும் ஹமீது, சரியில்லை.. உங்களைப் ப்ளாக்கர் அக்கவுண்டு தொடங்கச் சொன்னேன் பாருங்க, அதுவே இளவஞ்சி வாத்தியார் சொன்னா மாதிரி சொ.செ.சூ. வச்சிக்கிடறது தான்..
Thanks Ms. Congeniality :)))
//ரங்கமணிய நினச்சுதான் பாவமா இருக்கு பொன்ஸு//
உங்க அனுதாபங்களைச் சேர்க்கவேண்டிய இடத்துல சேர்க்க வேண்டிய நேரத்துல சேர்த்திடறேன் ராமனாதன்.. போட்டோ மாத்திட்டீங்களா?!!
//எல்லாருமே வாங்கினாலும் உங்களுக்கும் கொஞ்சம் ஷேர் மிச்சம் இருக்குமுங்க.. :) :)//
ஆகா...உங்க உவமானத்துக்கு உச்சவரம்பே இல்லியா??.
-குப்புசாமி செல்லமுத்து
Hmmm nanum ekalappai ellam download pani parthuten...unable toget Tamil keyboard...sikirama start panidivum :)
//உங்க உவமானத்துக்கு உச்சவரம்பே இல்லியா??.//
:)))
ரிஷி, சுரதாவில் முயலுங்க...
http://jaffnalibrary.com/tools/Unicode.htm
பொன்ஸ், இதில இருந்து என்ன தெரியுதுன்னா, கவிதைன்னு ஒண்ணு எழுதினா, நிறைய பின்னூட்டம் வரும் - "சுலப வழியில".. :-)
//இதில இருந்து என்ன தெரியுதுன்னா, கவிதைன்னு ஒண்ணு எழுதினா, நிறைய பின்னூட்டம் வரும் - "சுலப வழியில".. :-)//
அப்படியெல்லாம் ஒண்ணூம் கிடையாதுங்க, தருமி!
யார் எழுதறாங்க.. அப்படீங்க்றதுலதான் இருக்கு விஷயம்!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நானுந்தான் எழுதறேன்!
:))))))))))))))))))
//யார் எழுதறாங்க.. அப்படீங்க்றதுலதான் இருக்கு விஷயம்//
கரெக்ட். கரெக்ட்.
கவிதைதான் என்றில்லை. சமையற்குறிப்பு கூட போடலாம். ஆனா இவங்களை மாதிரி இணையத்தின் சுப்ரீம் ஸ்டாரா இருக்கணும். அதான் கணக்கு.
//இணையத்தின் சுப்ரீம் ஸ்டாரா இருக்கணும்//
தர்ம அடி எங்கேர்ந்து ஆரம்பிக்கப் போகுதுன்னு தெரியலை.. அனேகமா இந்தக் க்ரைம் கதை முடியும்போது உதையும் ஆரம்பிக்கும்னு நினைக்கறேன்!!! ம்ஹும் :(
kadaisi nalu varigal unmai poons.
appappa inda madiri nenappu varumbodu..all we cud do is see them in webcam..or talk to them..mmmmm
Post a Comment