Thursday, May 25, 2006

மது, என்னையும் வெள்ளாட்டுக்கு சேர்த்துக்குங்க.. :))

சொந்தக் கதை சொல்வது ரொம்ப பிடிச்ச ஒண்ணு.. அதிலும் என் பதிவுகளில் பாதிக்கு மேல் சொந்தக் கதை சோகக்கதை தான் :)

இதுவரை மதுமிதாவின் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்த்திரா விட்டாலும், ஒருத்தர் ஆசையா கேட்டும் சொந்தக் கதை சொல்லாம விட்டா எப்படி? அதனால் தான் இந்தப் பதிவு:

வலைபதிவர் பெயர்: பொன்ஸ்.. உங்க புத்தகத்துல போடும் அளவுக்கு சொந்தப் பேரு அவ்வளவு சூப்பரெல்லாம் இல்லை.. இங்க நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், சொல்ல விருப்பமில்லை :)

வலைப்பூ பெயர்: பொன்ஸ் பக்கங்கள்

சுட்டி(உர்ல்): http://poonspakkangkal.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாரும் தனியா அறிமுகம் செய்யலை.. ஏதோ ஒரு நாள் பொழுது போகாம நெட்ல சுத்திகிட்டு இருந்தப்போ அண்ணன் கைப்புவோட பதிவுல கால்(கை?) தவறி விழுந்துட்டேன்.. அத்தோட என் கணினிக்கும் rediff, the-hindu, thatstamil மாதிரியான தளங்களுக்குமான நட்பு சுத்தமா முறிஞ்சி, தமிழ்மணம், தேன்கூடு இவற்றிற்கு மொத்த குத்தகைக்கு விட்டாகிவிட்டது..

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 16 - மார்ச் - 2006 - அட நான் இன்னும் இங்கே apprentice தாங்க!!

இது எத்தனையாவது பதிவு: 25 (சங்கப் பணிகள் நீங்கலாக)

இப்பதிவின் சுட்டி(உர்ல்): எழுதி முடித்ததும் தானே தெரியும்?? முன்னாடியே அறிய வழியிருந்தால் சொல்லித்தாங்கப்பா :) http://poonspakkangkal.blogspot.com/2006/05/blog-post_25.html (எழுதி பிரசுரித்துப் பின் சேர்த்தது)

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ் படிக்கப் பிடிக்கும்.. தவறில்லாமல் தமிழ் எழுதவும் பிடிக்கும்.. இங்கே எழுதப்பட்ட தமிழைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்து எழுதத் தொடங்கினேன்..

சந்தித்த அனுபவங்கள்: நிறைய.. பலவிதமான மனிதர்கள்.. நான் பார்த்திராத உலகங்கள்.. இதுவரை அதிகம் சிந்திக்காத பல கோணங்கள்.

பெற்ற நண்பர்கள்: நிறைய.. இணைய நண்பர்கள்(chat friends etc) என்னும் போது ஒரு வட்டத்துக்கும் வந்துவிடும் நட்பு, இது போன்ற பதிவுலக நண்பர்கள் என்னும்போது இன்னும் விரிந்ததாக இருக்கிறது.. அவர்கள் எழுத்தும், சிந்தனைகளுடனும் ஏற்படும் நட்பாதலின், இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.

கற்றவை: இதுவரை கற்றதும் இனியும் கற்கப் போகிறதும் அளவில் அடங்காதவை.. ஆர்வம் கொண்டவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் இங்கே சரியான தீனி இருக்கிறது...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் ஒன்று தான் இங்கே இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.. கருத்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கருத்து சொல்பவரை எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை தமிழ்மணத்தின் ஆரோக்கியம் பெரிய கேள்விக் குறியே...

இனி செய்ய நினைப்பவை: பெரிதாக ஒன்றுமில்லை.. இன்னும் நிறைய கற்க ஆசை.. அவ்வளவுதான்..

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: உலகம் தெரியாத சின்னப் பெண் :)... இங்கே நடக்கும் வெட்டி அரசியலையும் வீணான வாதங்களையும் பார்த்து வருத்தப்படும் மற்றுமொரு வலைபதிவர்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: உங்கள் ஆராய்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. (என்னத்த சொல்லி என்னத்த பண்ண!! மது - இது உங்களுக்கு இல்லீங்க!! :) )

45 comments:

நன்மனம் said...

//கருத்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கருத்து சொல்பவரை எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை தமிழ்மணத்தின் ஆரோக்கியம் பெரிய கேள்விக் குறியே...//

//இங்கே நடக்கும் வெட்டி அரசியலையும் வீணான வாதங்களையும் பார்த்து வருத்தப்படும் மற்றுமொரு வலைபதிவர்.//

:-((

சிங். செயகுமார். said...

பொன்ஸ் அக்கா மதுமிதா கேட்ட கேள்விகள் பல விட்டுடீங்க போல!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி நன்மனம் (வருத்தப் படுவதில் என்ன நன்றி :( )

சிங், என்னங்க விட்டுப் போச்சு?!! சொல்லுங்க, சரி செய்துடலாம்!!

குமரன் (Kumaran) said...

:-)

சிங். செயகுமார். said...

முதல் கேள்விய விட்டுட்டு அடுத்த கேள்விக்கு தாவி ஓடி போயிட்டிங்கன்னு நான் சொன்னாலும் தெரிஞ்சிதான் நீங்க பண்ணி இருக்கீங்கங்கன்னு சொல்லும்போது நான் என்னாத்த சொல்ல :)

பொன்ஸ்~~Poorna said...

ஓ.. வலைபதிவர் பெயரா.. சிங், என் பேர் உங்களுக்குத் தெரியாதா? இருந்தாலும் ஆய்வுக்காக என்பதால் சரியாகக் கொடுக்கவேண்டுமே என்று சேர்த்திருக்கேன். :)

பொன்ஸ்~~Poorna said...

குமரன், ஏன் இந்த சிரிப்பு என்று நான் கேட்க மாட்டேன்.. இதுவரை கேட்டவங்களுக்கே நீங்க இன்னும் பதில் சொல்லவில்லை :). வருகைக்கு நன்றி , அம்புட்டுதேன் :)

குமரன் (Kumaran) said...

பொன்ஸ். அது சிரிப்பு இல்லை. புன்சிரிப்பு; புன்னகை. படிச்சேங்கன்னு சொல்றதுக்காக இப்ப இப்படித் தொடங்கியிருக்கேன். :-)

இதுவரை கேட்ட எல்லாருக்கும் இது தான் பதில். :-)

ramachandranusha said...

ஆனாலும் குருவை பற்றி ஒரு வார்த்தை சொல்லாதற்கு பெயர் குரு துரோகம் ;-) ( குரு முதலில் போடும்
பின்னூட்டம் என்று நினைக்கிறேன். குரு, அனைத்தையும் அவதனித்துக் கொண்டுத்தான் இருக்கிறேன்)

பொன்ஸ்~~Poorna said...

உஷாக்கா, வாங்கக்கா, வாங்க வாங்க!!!

இதுவரை நீங்க என் வீட்டுப் பக்கமே வராம இருக்கீங்களேன்னு ஒரு வருத்தம் உண்டு.. உங்க பேரை எழுதாம விட்டதால தானே நீங்க இப்போ இந்தப் பக்கம் வந்திருக்கீங்க:) அதனால ரொம்ப மகிழ்ச்சி :)

உங்களைக் குருவாகப் பார்க்கலைக்கா, நீங்க என் வாழ்க்கைக்கே வழிகாட்டி இல்லையா? மத்தவங்க பதிவில் கத்துக்கிடறது எல்லாம் சாதா பாடம் தான்.. வாழ்க்கைப் பாடம் கத்து கொடுத்தது நீங்க தானே.. :)

(அப்பாடா, இப்போ தப்பிச்சிட்டேன்.. கொஞ்ச நாள் முன்னாடி வேற ஒருத்தர குருன்னு சொல்லிகிட்டு இருந்ததுக்கு அவர் வேற காலைல வந்து என்ன கேக்க போறாரோ :( )

பொன்ஸ்~~Poorna said...

குமரன், புன்சிரிக்க இந்தப் பதிவில் ஏதாவது இருக்கா என்று எனக்கு சந்தேகம் தான், இருந்தாலும், அந்தப் புன்சிரிப்புக்கு என் சின்ன நன்றி :)

சந்தோஷ் aka Santhosh said...

//உலகம் தெரியாத சின்னப் பெண் :)... //
அக்கா அப்படியா அக்கா?

வெற்றி said...

//என்னத்த சொல்லி என்னத்த பண்ண!! //

பொன்ஸ், ஏன் இப்படி சலித்துக்கொள்கிறீர்கள்? என்ன நடந்தது?

பொன்ஸ்~~Poorna said...

உண்மைதான் சந்தோஷ் ;)

வெற்றி, அதெல்லாம் எதுக்கு?!! சில விஷயங்களில் அறியாமை ஒரு வரம் :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நற...நற...
----
/தவறில்லாமல் தமிழ் எழுதவும் பிடிக்கும்.. /
நான் அம்பேல்...

:-(

செல்வன் said...

கருத்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கருத்து சொல்பவரை எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை தமிழ்மணத்தின் ஆரோக்கியம் பெரிய கேள்விக் குறியே...//

என்னத்தை சொல்ல?

நிறைய உதாரணங்கள் நினைவுக்கு வருது.சொன்னா பலர் சண்டைக்கு வருவார்கள் என்பதால்.......


ஹே ராம்.தமிழ் இலக்கிய உலகை காப்பாத்து

பொன்ஸ்~~Poorna said...

//நற...நற...//
எதுக்கு?!!

உங்களுக்குத் தான் விளம்பரம் பிடிக்காதே, அதான் உங்க பேர் போடலை.. இல்லைன்னா 25 பதிவு வந்ததற்கு முக்கிய உதவி: பால பாரதின்னு போட்டிருப்பேன்.. என்ன, உங்க க.பி.க ஆளுங்க கிட்டேர்ந்து வாங்கிக் கட்டி இருப்பீங்க :)

பொன்ஸ்~~Poorna said...

//ஹே ராம்.தமிழ் இலக்கிய உலகை காப்பாத்து //
ஹே ராம் கமல் படம், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? புரியலையே செல்வன் ;)

செல்வன் said...

அக்கா,

நீங்க வேற கமல் அது இதுன்னு சொல்லி மக்கள் அதுல எதோ உள்குத்தை உருவாக்கிட போறாங்க.பொல்லாத உலகம் இந்த இலக்கிய உலகம்.:-)))

"ஜெய் ரஜினி" ந்னு சொல்லி முடிச்சுடறேன்

பொன்ஸ்~~Poorna said...

ஆன்மீக சூப்பு குமரனின் கட்சியில் இருந்துகொண்டு ஜெய்னு வடமொழிச் சொல்லை பயன்படுத்தி இருந்தாலும், வாழ்க ரஜினின்னு சொல்லி உங்களை மன்னிச்சி விட்டுடறேன் :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நற..நற.. அதுக்கு அல்ல.. பிழையில்ல தமிழுக்காக.. என்னை மாதிரி.. கை நாட்டுக்காரய்ங்க.. தமிழ் படிச்சு.. டை அடிக்கிறதே பெரிசு.. அதனால சொன்னேன்...
//உங்க க.பி.க ஆளுங்க கிட்டேர்ந்து வாங்கிக் கட்டி இருப்பீங்க :)//

நெவர்.. என் கழக கண்மணிகளைப் பத்தி எனக்கு தெரியும்.. தவிர.. கபிகழகத்தில் பெண்களுக்கும் இடமுண்டு என்பதை இங்கு நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன்.. :-)
(உங்களுக்கும் சீட்டு காலியா இருக்கு...)

பொன்ஸ்~~Poorna said...

// கபிகழகத்தில் பெண்களுக்கும் இடமுண்டு//
இதுக்கு பேசாம நீங்களும் வந்து வ.வா.சவிலயே சேர்ந்துடலாம்.. ரெண்டுத்துக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இருக்காதுன்னு நினைக்கிறேன் :)

செல்வன் said...

பாத்தீங்களா
"ஜெய்"ல கூட ஒரு உள்குத்து இருக்கு.
இதுதான் அரசியல்.
ஆனா வ.வா.ச கூட்டணில இருந்துகிட்டு அரசியல் பண்ன பயப்படலாமா?


அரசியல்னு சொன்னதும் நினைவுக்கு வருது

எஸ்.கே சார் ஒரு வெடிகுண்டு பதிவு போட்டுட்டு தூங்க போயிட்டார்.நாளைக்கு அது தமிழ்மணத்துல தெரியும்போது வெட்டுகுத்தே நடக்கும் பாருங்க:-))

www.aaththigam.blogspot.com

பொன்ஸ்~~Poorna said...

அந்தப் பதிவு அவர் நேற்றே போட்டுட்டாரு செல்வன்.. அமெரிக்க நேரத்தில் அதற்கெல்லாம் குண்டு வெடிக்காது... உரை நடையிலேயே நிறைய பதிவு வந்தாச்சு!! :))

செல்வன் said...

குண்டு வெடிக்கணும்னு ஆசையா பதிவு போட்டிருக்கார்.யாரும் சண்டை பிடிகக்லைன்னா வருத்தப்படுவார்.
அதனால முதல் பின்னூட்டம் நானே போட்டுட்டு வந்துட்டேன்.

தலைப்பு தப்பா குடுத்திருக்கார்.ரொம்ப வெஜிடேரியன் தலைப்பு"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"னு குடுத்திருக்கார்.முகப்பௌ பக்கத்துல இந்த தலைப்பை பாத்தாலே நிரைய பேர் ஒதுங்கிடுவாங்க

"இட ஒதுக்கீடு தேவை இல்லை" அப்படின்னு அடிச்சு விட்டிருந்தார்ன்னா இன்னேரம் புயலே வெடிச்சிருக்கும்:-))

மணியன் said...

பொன்ஸ், நீங்க முடிச்சீட்டீங்களா ? எனக் கேட்டதன் பொருள் இப்போது விளங்குகிறது. நீங்கள்தான் எனக்கு குரு :)

கீதா சாம்பசிவம் said...

பொன்ஸ், இத்தனை பழகியும் உங்க பேர் என்னனு தெரியாட்டியும் உங்க பதிவும் கொள்கையும் நல்லா இருக்கு.
இப்படிக்குப் பேர் தெரியாத
நிரந்தரத் தலைவலி.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம், சொல்ல மறந்துட்டேன். உங்க பேர் மேலே உங்களுக்கு ஏதோ பிடிக்கலியோனு தோணுது, எதுவா இருந்தாலும் விட்டுத் தள்ளுங்க. அப்பா, அம்மா கொடுத்த அடையாளம். அவங்களுக்காக ஏத்துகுங்க.

Samudra said...

பொன்ஸ்,

எல்லாத்தையும் சொல்லீட்டு நீங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு மட்டும் சொல்லாமவிட்டுடீங்களே.....

நாகை சிவா said...

பெயருல என்னங்க இருக்கு. ஒரு அடையாளம் தானே. விடுங்க.
தன் பதவியை கூட வெளிக்காட்டாத(இந்த பதிவில் மட்டும்) உங்கள் பெருந்தன்மையை என்ன சொல்லுரது போங்க)
அது சரி, உலகம் தெரியாத சின்ன பொன்னு யாருங்க.........நீங்களா......

பாரீஸ்ல ஈபிள் டவர் பாத்திகளா, இல்லாட்டி திரும்பி வரும்போது தவறாமல் பாருங்கள், ஷாப்பிங் கூட........

பொன்ஸ்~~Poorna said...

//நீங்கள்தான் எனக்கு குரு :) //
போங்க மணியன், அதான் பதிவிலயே சொல்லி இருக்கேனே, நானெல்லாம் கத்துக்குட்டி :)
தவிர, உங்க அனுபவம் அளவு கூட எனக்கு வயசு இருக்குமான்னு தெரியலை :)

கீதாக்கா, பேர் தெரியலைன்னா என்னக்கா, நம்ம பாசம் (?!) குறையவாப் போகுது.. வீட்ல வச்ச பேரு நல்ல பேரு, அதை தமிழ்மணத்துல போட மனசு வரலை.. அவ்வளவுதான்!!

பொன்ஸ்~~Poorna said...

//எல்லாத்தையும் சொல்லீட்டு நீங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு மட்டும் சொல்லாமவிட்டுடீங்களே.....//
சமுத்ரா, நல்லதுக்கும் கெட்டதுக்கும் அளவுகோல் இருக்கா? சமீபத்துல ஏதோ பதிவுல நல்லவரோ மீட்டர் பத்தி எழுதி இருந்தாங்க.. அது மாதிரி ஏதாச்சும் இருந்தா குடுங்க, கைல வச்சி பார்த்து சொல்லறேன் (அந்நியனில் சதா மாதிரி ;) ) :)
[நாயகன் டயலாக் தான் எழுத நினைச்சேன்.. நமக்கு முந்தி நிறைய பேர் அதைப் பயன்படுத்திட்டாங்க :(.. ]

//பெயருல என்னங்க இருக்கு. ஒரு அடையாளம் தானே. விடுங்க. //
அதேதான்.. :)
// தன் பதவியை கூட வெளிக்காட்டாத(இந்த பதிவில் மட்டும்) உங்கள் பெருந்தன்மையை என்ன சொல்லுரது போங்க)//
பதவி ஆசையா? எனக்கா? இல்லவே இல்லீங்க..!!! (சூடான்லேர்ந்து வந்து அந்த தலைவலியை மட்டும் கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்!! :) )
// அது சரி, உலகம் தெரியாத சின்ன பொன்னு யாருங்க......... நீங்களா...... //
அட நம்புங்கைய்யா.. யாருமே நம்ப மாட்டேங்கறாங்களே!! :(
// பாரீஸ்ல ஈபிள் டவர் பாத்திகளா, இல்லாட்டி திரும்பி வரும்போது தவறாமல் பாருங்கள், ஷாப்பிங் கூட........ //
எங்க?, பாரீஸ்ல ரெண்டு மணி நேரம் தான் கொடுத்தாங்க.. திரும்பும் போதும் அதான்.. அதுல பாரீஸ் ஏர்போர்ட் தான் பார்க்க முடியும்.. கத்துகிட்ட பிரெஞ்சை பேசிப் பார்க்கக் கூட முடியலை :(

தேவ் | Dev said...

//இங்கே நடக்கும் வெட்டி அரசியலையும் வீணான வாதங்களையும் பார்த்து வருத்தப்படும் மற்றுமொரு வலைபதிவர். //

Who are the others? Pls sikkiram release the list?

We need to address all the VARUTHA PADUM valaipadhivars :)

பொன்ஸ்~~Poorna said...

சாரி தேவ், சங்கப் பணி ஆத்தி ஆத்தி, வெளில என்ன நடக்குதுன்னு கவனிக்க விட்டுட்டீங்க போலிருக்கு..

I dont have a full and inclusive list.. there are things va.vaa.sa cannot help :)

பொன்ஸ்~~Poorna said...

கீதாக்கா, இப்போ தான் பார்த்தேன்,, அது என்னக்கா, கொள்கையெல்லாம் கண்டு பிடிச்சிருக்கீங்க இந்தப் பதிவுல?? மது கேட்ட கேள்வில கூட கொள்கைன்னு ஒரு பாயின்ட் இல்லையே!! :)

Sivabalan said...

பொன்ஸ்,

// வருத்தப்படும் மற்றுமொரு வலைபதிவர். //

வருத்தப்படாதீங்க... நல்லதே நடக்கும்..

பொன்ஸ்~~Poorna said...

//வருத்தப்படாதீங்க... நல்லதே நடக்கும்.. //
ம்ம்ம்ம்... பார்க்கலாம் சிவபாலன் :)

செல்வன் said...

கீதாக்கா

Rose is a rose is a roseனு கேள்விப்பட்டதில்லையா?பேர்ல ஒண்ணும் இல்லை.

மதுமிதா said...

நன்றி பொன்ஸ்

அதென்னது
துளசிம்மாவுக்கப்புறம் இப்படி பதிவு போட்டு நீங்களும் செல்வனும் பூந்து வெள்ளாடுறீங்க

கொஞ்சம் விளம்பரமும் செய்யுங்க தாயி

பொன்ஸ்~~Poorna said...

எல்லாம் உங்க புண்ணியம் தான் மது..

எல்லாரும் கொடுத்துட்டாங்க போலிருக்கே..- அதுவும், இங்க வந்திருக்கிறவங்க எல்லாம் கொடுத்திருக்காங்க.. தேவ் தவிர.. அவரும் குடுத்திருவாரு.. (தம்பி தேவ், உன்னை நம்பி சொல்லிட்டேன்)..

இருங்க, உங்களுக்காக வேணும்னா, எங்க சங்கப் பலகைல ஒரு விளம்பரம் போட்டிடறேன் :)

இலவசக்கொத்தனார் said...

//தவறில்லாமல் தமிழ் எழுதவும் பிடிக்கும்.. இங்கே எழுதப்பட்ட தமிழைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்து எழுதத் தொடங்கினேன்..//

எதோ இடிக்கற மாதிரி இல்ல? கொஞ்சம் சரியா பாருங்க. :)

கைப்புள்ள said...

//உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: உலகம் தெரியாத சின்னப் பெண் :)... //

http://kaipullai.blogspot.com/2006/05/blog-post_25.htmlஇல்

// பொன்ஸ் said...
வ.வா.ச அங்கத்தினர்கள் மட்டும் தான் நண்பர்கள்னா, அப்போ ப.ம.க., க.பி.க, மத்த கட்சி அங்கத்தினர்கள் எல்லாம் உங்க நிரந்தர எதிரி தானே?!?!

உங்க பாசத்துக்கு முன்னாடி...அவ்வ்வ்வ்வ்வ்வ்:)//

//க.பி.கழகம் said...
என்னது நாங்க எதிரியா...
கைப்பு இப்படியா நாம பழகுனோம்...
வ.வா. சங்கத்துக்கு முன்னாடியே உன்னைய கூட்டு சேர அழைச்ச ஆளுங்கையா நாங்க...
மனசு வருத்தமா இருக்குப்பூ...
நல்லா இருங்க...
அம்புட்டுதேய்ன்.. //


நம்பறேன் தாயீ...முழுசா நம்பறேன்
:)

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ்,
அதாங்க, தப்பா எழுதறவங்களைப் பார்த்து ண்,ன் சரி செய்யவாவது ஒரு ப்ளாக்கர் அக்கவுண்ட் வேணுமே.. அது :)

கைப்பு அண்ணாச்சி,
உலகம் தெரியாத பொண்ணாத்தான் இருந்தேன்.. உங்க சங்கத்துல சேர்ந்து அப்ப்டி இப்படி தத்தி தத்தி கத்துகிட்டு இருக்கேன் :)

கைப்புள்ள said...

//உங்க சங்கத்துல சேர்ந்து அப்ப்டி இப்படி தத்தி தத்தி கத்துகிட்டு இருக்கேன் :)//

அது ஏன் என்னால மட்டும் தத்தி தத்தியும் கத்தி கத்தியும் கத்துக்க முடியலேன்னு தான் வெளங்க மாட்டேங்குது?

சீனு said...

//கருத்துக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று கருத்து சொல்பவரை எதிர்ப்பவர்கள் இருக்கும் வரை தமிழ்மணத்தின் ஆரோக்கியம் பெரிய கேள்விக் குறியே//
உண்மைதாங்க. இதையெல்லாம் பாக்குறொப்பொ இந்த blog உலகை விட்டே போய்டலாம்ன்னு தான் தோனுது. ரொம்ப vex ஆயிட்டேன்...