கடலுக்கு அப்பால்
விட்டு வந்தவனை
எண்ணிக்
காத்து நிற்கிறேன்.
கால்கள் சோருமுன்
தொடுவான் முகட்டில்
அவன் படகு தெரியலாம்
இயற்கைதந்த கடலில்
மனிதன் வகுத்த
எல்லைகளைத் தாண்டுமுன்
சுட்டும் வீழலாம்
படகும் மூழ்கலாம்
கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்.
எல்லாம் கடந்து
வந்துவிடு!
உணவு கிடைக்குமோ
நம் உணர்வு புரியுமோ.....
தெரியவில்லை,
... உயிராவது மிஞ்சலாம்!!!
41 comments:
சூப்பர்... எதிர்பார்த்த மாதிரியே நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...
பொன்ஸூ,
//உணவு கிடைக்குமோ
நம் உணர்வு புரியுமோ.....
தெரியவில்லை,//
சாச்சுட்டீயம்மா சாச்சுட்டீயே... :-)
புரியுது இன்னும் நிறைய் படைப்புகளை எதிர்பார்க்கும், தெகா.
ஹச்சூ! ஹச்சூ! டெம்பிளேட் நல்லா இருக்கு.
அம்மா பொன்ஸ்,
வார்ப்புரு எல்லாம் மாத்தி பக்கத்திற்கு பக்கம் வித்தியாசம் வாங்கி விட்டீர்களா ஆஆஆஆஆனு கேட்கிறா பத்திரிக்கைப்போல இருக்கு உங்க பதிவு :-))
இந்த கவிதை எழுத வேறு ஒரு கவிதை தானே தூண்டுகோள் ஆ இருந்தது, விகடனில் இலங்கை தமிழர் சோகத்தை சொல்லும் விதமாக இப்படி ஒரு கவிதை போட்டு இருந்தாங்க கொஞ்ச நாள் முன்னர் ,
//எல்லைகளைத் தாண்டுமுன்
சுட்டும் வீழலாம்
படகும் மூழ்கலாம்
கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்//
இதை ஒத்த வரிகளும், எல்லாம் கடந்து வந்தால் உயிராவது மிஞ்சலாம் என்றும். வரும். "இன்ஸ்பையர்" ஆகி எழுதியதாக தான் சொல்கிறேன் , எனவே தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள், நல்ல கவிதை உணர்வுப்பூர்வமாக உள்ளது
ஹல்லோ பொன்ஸ்.
எல்லாமே நல்லா இருக்கு.
தோற்றம்,படைப்பு,அளிப்பு.
என்னவொரு பார்வை ,, அந்தப் பெண்ணுக்கு,,
அதை உணர்ந்த உங்களுக்கு.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு
கவிதை நல்லா இருக்குங்க.
பின் குறிப்பு இந்த கவிதைக்கு தேவை. :-)
எனக்கு கவிதை என்றாலே இரண்டாம் பட்சம் தான்.பல சரியாக புரியாததால் கடந்துவிடுவேன்.
இந்த மண்டைக்குள் அதை ரசிக்கும் திறமையில்லை.
ஆனால் உங்க Template சூப்பரோ சூப்பர்.
மிக அருமை
ஏந்திழை ஒருத்தியின் ஏக்கமா அது?
இல்லை
எத்தனையோ பேரின் உள்ளப் புலம்பல்
உதய், தெகா, நன்றி
இகொ, //ஹச்சூ! ஹச்சூ// ???
//இந்த கவிதை எழுத வேறு ஒரு கவிதை தானே தூண்டுகோள் ஆ இருந்தது, //
வவ்வால்,
கவிதை எல்லாம் படிக்கலீங்க.. ஆனா விகடன்ல படிச்ச கட்டுரைகள் எல்லாம் தான் காரணம்.. நம்ம just படிச்சதை வச்சி எதுவும் எழுதணுமான்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.. இந்த வார்ப்புரு மாற்றியதும்.. சரின்னு எழுதியாச்சு..
தப்பா எடுக்க என்ன இருக்கு.. உணர்வுப் பூர்வமா என்று சொன்னதுக்கு நன்றி.. ஆனா, இது நிஜமாவே அவங்க உணர்வெல்லாம் கொஞ்சமாவது பிரதிபலிக்குமா என்று எனக்குச் சந்தேகம் தான்..
//எல்லாமே நல்லா இருக்கு.// நன்றி வல்லி
//பின் குறிப்பு இந்த கவிதைக்கு தேவை. :-) // குறும்பன், குறும்பா ஏதோ சொல்றீங்கன்னு புரியுது.. என்னான்னுதான்.. புரியலை.. :)
//ஆனால் உங்க Tஎம்ப்லடெ சூப்பரோ சூப்பர்// குமார் ரொம்ப நன்றி :)
//கற்பனை வளம் அற்புதம் // நன்றி, ரகு
// வார்த்தைகள் வசப்பட்டது உன் வசம்.// - என்னங்க ரகு, உங்க புரோபைலில் நீங்க யாரு என்னன்னு கூடத் தெரியலை ஏகவசனத்துக்கு வந்துட்டீங்க?!!
//எத்தனையோ பேரின் உள்ளப் புலம்பல் // ஆமாம் சிஜி.. :(
//இயற்கைதந்த கடலில்
மனிதன் வகுத்த
எல்லைகளைத் தாண்டுமுன்
சுட்டும் வீழலாம்
படகும் மூழ்கலாம்
கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்.
எல்லாம் கடந்து
வந்துவிடு!
//
இன்று நாம் கூறும் பதிலும் இதுதான்னு யோசிக்கும் போது வலியாகத்தான் இருக்கிறது.
பொன்ஸ் கவிதை அருமை.
கடலுக்கு அப்பால்
விட்டு வந்தவனுடன்
கலந்துவிடும் காலம்
கனிந்து வருகிறது
பொன்மகளே கலங்காதே!
கவலைகள் தீரும்
கண்களும் மலரும்!!
:)
ஆகா! பிரமாதம். அருமை.
இதயத்தைத் தொடும் கவிதை.
//இயற்கைதந்த கடலில்
மனிதன் வகுத்த
எல்லைகளைத் தாண்டுமுன்
சுட்டும் வீழலாம்
படகும் மூழ்கலாம்
கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்.//
அருமையான வரிகள்.
Ellarum ponn's ponn's nu solranga ..ungalai parri eluthuraannga..ungal peyaril poli pinnootamum iduranga..adhu yaru andhu ponn's appdinu parka vandhane..
idhu variakum oru moonu padivu padichrukane..adhai vaithu ondrum ennal solla mudiya villai..meedhiyai padithu vittu meendum pinootam idugirane..appdiye numma pakkthirkum vandh oru parkiradhu!!!
பொன்ஸ், எல்லோரும் போல நானும் உங்கள் வார்ப்புருவினால் கவரப்பட்டேன். கவிதை சொல்லும் வலி நம்மால் உணர முடியாதுதான். அதுவே வலிக்கத்தான் செய்கிறது. :(
வலிகூட அனுபவிக்கப் பிடிக்கும்
அவஸ்தைதானோ என வேறு மாதிரியாகவும் யோசிக்க வைத்து விட்டது உங்கள் கவிதை!
அவர்களோடு அவர்களாக இருக்க ஆசைப்படுகிறேன்.
ச்சூ...ச்சூ...ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் அமெரிக்கா போலிருக்குதே? எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்.
:)
டெம்ப்ளேட் அருமையா இருக்கு. யானை இன்னும் பெருசாவும் வேகமாவும் ஓடுது. அதுவும் நல்லாத் தான் இருக்கு.
//இகொ, //ஹச்சூ! ஹச்சூ// ??? //
அவருக்கு கவுஜ்னா ஆவாது. அதான் அந்த ஹச்சூ! ஹச்சூ.....
நமக்கும் கிட்டத்தட்ட அப்படி தான். இப்ப ஒட்டு போடும் காலம், அதனால் கவுஜ் மெய்யாலுமே டக்கரா இருக்குங்க.
இயற்கை படம் நேத்து பாத்தீங்களா.....என்ன... இல்ல சும்மா தான் கேட்டேன். நல்ல படம்....
பொன்ஸ், பொண்ணப் பார்த்தா மீன் பிடிக்க போன வூட்டுக்காரரை எதிர்பார்த்து நிக்கிற மாதிரி தெரியலயே... ஏதோ Cruise ல வேர்ல்டு டூர் போன லவருக்கு காத்திருக்க மாதிரில இருக்கு??
ஒருவேளை வெள்ளைக்கார மீனவரோ??
பொற் குவியலை தூக்கி கடாசிட்டு யானையை கொன்டு வந்திங்க
இப்போ டெம்பிளெட்டை மாத்தி நாலு பதிவு போடுவிங்க
ம் என்னத்த சொல்ல கவிதை நல்லா இருக்கு
நிக்குறது யாருன்னு சொல்லலையே நீங்க இல்லைனு மட்டும் கண்டிப்பா தெரியும் ::)))
இப்பதான் ஒருபதிவெழுதி முடிச்சேன்.ஹி ஹி நம்ம பதிவுக்கு ஒரு விளம்பரம்
//பொண்ணப் பார்த்தா மீன் பிடிக்க போன வூட்டுக்காரரை எதிர்பார்த்து நிக்கிற மாதிரி தெரியலயே//
மனசு! இது மீனவர்களை பற்றி கவிதை இல்ல. ஈழத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களில் ஒருத்தி தன் துணைவனையோ காதலைனையோ எதிர்பார்த்து.
//யானை இன்னும் பெருசாவும் வேகமாவும் ஓடுது. அதுவும் நல்லாத் தான் இருக்கு. //
காலம் ஒடுதுல, இந்த மாற்றம் கூட இல்லாட்டி எப்படி. அதுவும் தினமு காம்ப்ளன் குடித்து வளர்த்த உடம்பு. இப்பொதைக்கு ஒ,கே. இன்னும் சில காலம் ஆனால் இங்க பதிவில் யானை ஒடுவதற்கு மட்டும் தான் இடம் இருக்கும். எழுதுவதற்கு இடம் இருக்காது.
//உணவு கிடைக்குமோ
நம் உணர்வு புரியுமோ.....
தெரியவில்லை,
... உயிராவது மிஞ்சலாம்!!!//
பொன்ஸ் ஒரு சின்ன சந்தேகம்.
இங்கு உணர்வு புரியுமோ என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். உணவு கிடைக்குமோ என்ற கேள்வி எழுப்பி விட்டு உயிராவது மிஞ்சலாம் என்பது பொருத்தமாக இல்லயே!
சிவாண்ணா, தப்புங்ணா.
சரியான விளக்கத்திற்கு நன்றிங்ணா.
(பொன்ஸ் கொ.ப.செ. சேர்த்த விஷயத்த சொல்லவே.. இல்ல....
ரகு, // யாரோ ஒரு கவி எழூ+திய சினிமா பாடலை // இதை சினிமா பாடல் லெவலுக்குக் கொண்டுவந்துட்டீங்களா? புல்லரிக்குதுங்க..
வெட்டி, //இன்று நாம் கூறும் பதிலும் இதுதான்னு யோசிக்கும் போது வலியாகத்தான் இருக்கிறது// ம்ம்.. உண்மைதான்..
எஸ்கே, என் கொ.ப.செ. சிவா கூறியதைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. உங்களுக்கும் எனக்கும் ஒரு புரிதல் இடைவெளி எப்போவுமே இருக்குன்னு நினைக்கிறேன்.. :(
//இதயத்தைத் தொடும் கவிதை// நன்றி வெற்றி, கவிதைக்குக் காரணம், நீங்க கேட்டதுதான்.. அதுக்கு இன்னும் ஸ்பெஷன் நன்றி :)
//எல்லாரும் பொன்ஸ் பொன்ஸ்னு சொல்ராங்க // கார்த்திக், அப்படி யாருங்க சொன்னாங்க?
உங்க பக்கத்துக்கு வந்தேனுங்க.. என்னவோ வளரும் கலைஞர், நிச்சயம் பின்னூட்டம் போடுங்கன்னு ஒரே மிரட்டலா இருக்கு.. நமக்கு அதெல்லாம் ஒத்து வராதுங்க.. சாரி :).. கொஞ்சம் பின்னூட்டங்களும் தமிழில் போடுங்க.. தமிங்கிலிஸ் பின்னூட்டங்கள் அத்தனை நல்லா இல்லை...
//கவிதை சொல்லும் வலி நம்மால் உணர முடியாதுதான். அதுவே வலிக்கத்தான் செய்கிறது//
உண்மை தான் மணியன்.. வலியே உணர முடியாதது.. கவிதை முழுமை அடையாதது என்பது தான் என் எண்ணம்.. :(
//வலிகூட அனுபவிக்கப் பிடிக்கும்
அவஸ்தைதானோ// கௌதம், வேற எதுவுமே முடியவில்லை என்றால்.. இதுவும் நடக்குமோ என்னவோ!! மற்றபடி, அவர்களோடு இருக்க எனக்குக் கூட விருப்பம்..
கைப்ஸ், //எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்// சரியானா நல்லது தான்.. பார்ப்போம்..
சிவா, //இயற்கை படம் நேத்து பாத்தீங்களா// :))) இல்லீங்க :)
மின்னல், //இப்போ டெம்பிளெட்டை மாத்தி நாலு பதிவு போடுவிங்க // ஹி ஹி.. எப்படியோ, புது டெம்ப்ளேட்டினால தானே கவிதை வந்தது? ;)
சிவா,
//இங்க பதிவில் யானை ஒடுவதற்கு மட்டும் தான் இடம் இருக்கும். எழுதுவதற்கு இடம் இருக்காது. // :)))))))
//உணவு கிடைக்குமோ என்ற கேள்வி எழுப்பி விட்டு உயிராவது மிஞ்சலாம் என்பது பொருத்தமாக இல்லயே! //
உணவு கிடைப்பது ஒரு அடிப்படைத் தேவை இல்லையா.. அதுவே நடக்குமோ என்னவோ. ஆனால் உயிர் கண்டிப்பாக இருக்கும்.. சிவா, ரொம்ப கேள்வி கேட்காதீங்கப்பா :) எனக்குச் சொல்லத் தெரியலை.. மனசுல வந்ததை எழுதி இருக்கேன்.. அவ்வளவு தான் :)
மனசு, :)))
பொன்ஸ்..
நல்ல உணர்வுப்பூர்வமான கவிதை..
//உங்களுக்கும் எனக்கும் ஒரு புரிதல் இடைவெளி எப்போவுமே இருக்குன்னு நினைக்கிறேன்..//
இதுல என்ன புரிதல் இடைவெளி இருக்கு. உங்கள் கதையின் நாயகி கூறியதற்கு அவர் ஆறுதல் சொல்கின்றார்.
என்ன எஸ்.கே. நான் சொல்வது சரி தானே ;)
//ரொம்ப கேள்வி கேட்காதீங்கப்பா:)//
எங்க ஊரு அண்ணாத்த கேள்வி கேளுங்காரு. நீங்க வேணாம் சொல்லுறீங்க. ஒன்னும் புரியல.
//எனக்குச் சொல்லத் தெரியலை.. மனசுல வந்ததை எழுதி இருக்கேன்.. அவ்வளவு தான் :)//
உங்களை குறை சொல்வதற்காக கேட்கலங்க. இரண்டு மூன்று படித்து பாக்கும் போது மனதில் பட்டது, அதனால் கேட்டேன். அம்புட்டுத் தான்.
பொன்ஸ்
உங்களுக்கு டெம்ப்ளேட் எங்கே கிடைத்தது.?
நல்ல இருக்கு பொன்ஸ்....
டெம்ப்ளேட் நல்லா இருக்கு அதுக்கு தகுந்த கவிதை...வேலைல ரொம்ம பிஸியா இருபீங்க போல இருக்கு... :-)
பொன்ஸ்...கவிதை நல்லா இருக்கு...வார்ப்புருவில் இருக்கும் பெண்ணுடன் முழுமையாக பொருந்தா விட்டாலும் கவிதையின் சோகம் தெளிவாக தெரிகிறது.....
புது template நல்லா இருக்கு... இப்பதான் பார்த்தேன்...
அருமையான வார்ப்புரு, அந்த பெண்ணின் தனிமையும் கவிதையும் அழகுக்கு அழகு சேர்க்கிறது
நல்ல கவிதை
நல்ல கவிதை அதற்கு ஏற்றதுப் போல் புகைப்படம்
கப்பி பய, சிவா, ராம், மனதின் ஓசை, இளா, பரத், ப்ரியன், நன்றி..
ஸ்யாம் //வேலைல ரொம்ம பிஸியா இருபீங்க போல இருக்கு// ஹி ஹி..
கனவு //ஆனா புரியாத மாதிரியும் தோணுது// விடுங்க :)
பாலசந்தர், //உங்களுக்கு டெம்ப்ளேட் எங்கே கிடைத்தது.? // பதிவிலேயே வார்ப்புரு கொடுத்தவர்னு போட்டிருக்கேன் பாருங்க..
யம்மாடி... இது கவிதைன்னு நினைச்சுக்கிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டேன்.
இப்பத்தான் புரியுது, டெம்ப்ளேட் விவ(கா)ரம்ன்னு.
அ ஆ ( அடி ஆத்தாடீ....)
நல்லா இருக்கும்மா.
//கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்.
உணவு கிடைக்குமோ
நம் உணர்வு புரியுமோ.....
தெரியவில்லை,
... உயிராவது மிஞ்சலாம்!!!//
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
தப்பி்ப் பிழைத்து வருகிறார்
உரிமை உள்ள தேசம் என்று
உங்களிடம் வருகிறார்
பொன்ஸ் போன்ற நல்லவர்கள்
இன்னும் இங்கு உள்ளதால்
கரை சேர்ந்த மீதியேனும்
நலமோடு வாழுது!
நன்றி பொன்ஸ்
வேதா சொன்னது:
மிக அருமையான மனதை தொட்ட கவிதை. இந்த கவிதையை குங்குமத்தில் படித்தேன். உங்கள் பெயரும் போட்டிருந்தார்கள் . நீங்கள் தானா என தெரிந்துக் கொள்ளவே இங்கு வந்தேன்.:) பாராட்டுக்கள்:)
Post a Comment