Sunday, July 16, 2006

இன்னுமொரு பங்கு



தினம் போல
அருகில் வந்து
தொடவில்லை
என்று
முகம் திருப்பிக் கொள்கிறது
எதிர்வீட்டு மல்லிச்செடி;



முன்போல
கையாட்டி ரசிப்பதில்லை
என்று
கடும்கோபம் கொள்கிறது
மின்சார ரயில்;




காலைப் பரபரப்பில்
துடைக்காமல்
விட்டதற்காக
கடுப்படிக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி;



ஏனோ
இன்று புதிதாகப்
பூ வாங்கித்
தொடுக்கிறேன்
என் வாகனத்தில்



நாளை முதல்
எதிர்பார்ப்பும் கோபமும்
ஏமாற்றத்தின் புலம்பலும்
ஏறி விடும்



இன்னுமொரு பங்கு...

29 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//எதிர்விட்டு மல்லிச்செடி;//

???

;)

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ..
கட்டுரையாளராகவோ, கதையாசிரியராகவோ தான் ஆகிடுவீங்கன்னு நினைச்சேன்.
ஆனா
இப்படி கவிதாயினி ஆகிகிட்டே வாரீங்களே!
:(

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல கவிதை.

/* தினம் போல
அருகில் வந்து
தொடவில்லை
என்று
முகம் திருப்பிக் கொள்கிறது
எதிர்விட்டு மல்லிச்செடி; */

பொன்ஸ், நல்ல கற்பனை.

/* நாளை முதல்
எதிர்பார்ப்பும் கோபமும்
ஏமாற்றத்தின் புலம்பலும்
ஏறி விடும்
இன்னுமொரு பங்கு... */

உண்மைதான்.

துளசி கோபால் said...

//நாளை முதல்
எதிர்பார்ப்பும் கோபமும்
ஏமாற்றத்தின் புலம்பலும்
ஏறி விடும்
இன்னுமொரு பங்கு... //

எங்கே? ஓஓஓஓஓ அங்கெயா?

மா சிவகுமார் said...

வாவ்!

சென் புத்தத்தில் இறங்கி விட்டீர்களா என்ன?

அன்புடன்,

மா சிவகுமார்

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ்,தினமும் எல்லாரையும் கண்டு கொள்ள
நேரம் கிடைக்கவில்லையா?
ஒரு நாளுக்கு
48 மணி நேரம் ஆக்கிவிடலாமா?;
:-))))

தருமி said...

attendance மட்டும்! :)

நாகை சிவா said...

எதிர்பார்ப்பு பொய்த்தால் கோபம் வரும்,
கோபம் வந்தால் ஏமாற்றம் வரும், ஏமாற்றம் வந்தால் புலம்பல் வரும்.
அப்ப எதிர்பார்ப்பை நிறுத்தினாலே அனைத்தும் நின்று விடுமா?

நாகை சிவா said...

கவித நல்லா இருக்குங்க
எங்க சுட்டதது...சே... எப்ப எழுதியது....

manasu said...

//ஏறி விடும்
இன்னுமொரு பங்கு... //

எந்த பங்கு பொன்ஸ், நானும் வாங்கிக்கிறேனே!!
(குப்ஸ்,சதயத்திற்கு போட்டியா நீங்களும் பங்கு பத்தி எழுத ஆரம்பிச்சாச்சா??)

ALIF AHAMED said...

//
ஏனோ
இன்று
புதிதாகப்
பூ வாங்கித்
தொடுக்கிறேன்
என் வாகனத்தில்
//

புதுசா கார் வாங்கியிருக்கிங்களா ??

ALIF AHAMED said...

//
நாளை முதல்
எதிர்பார்ப்பும் கோபமும்
ஏமாற்றத்தின் புலம்பலும்
ஏறி விடும்
இன்னுமொரு பங்கு...
//

புது காருனா பூ வைக்கிறது தான் டெய்லியா வைக்க முடியும் ???

பட்டணத்து ராசா said...

Good one :-)

பொன்ஸ்~~Poorna said...

மதி, மாத்திட்டேன்.. சுட்டியதற்கு நன்றி,

யாழிசை, //ஆனா இப்படி கவிதாயினி ஆகிகிட்டே வாரீங்களே!:( // வருத்தமா?

//நல்ல கவிதை. நல்ல கற்பனை// நன்றி வெற்றி

பொன்ஸ்~~Poorna said...

//எங்கே? ஓஓஓஓஓ அங்கெயா? // - குறிப்பா இங்க அங்கன்னு இல்லைக்கா. பொதுவாவே சொல்றேன்..

//சென் புத்தத்தில் இறங்கி விட்டீர்களா என்ன?// இல்லையே சிவா.. சென் படித்ததில்லை.. இதுவும் சென் கவிதையாகி விட்டதா?!! படித்துப் பார்க்க வேண்டியது தான் :)

//ஒரு நாளுக்கு 48 மணி நேரம் ஆக்கிவிடலாமா?;// - மனு, என்ன படம்ங்க அது? நல்லா இருக்கே!! நான் உங்க மீனைத் தான் போடுவீங்கன்னு நினைச்சேன் :)

பொன்ஸ்~~Poorna said...

//attendence மட்டும்! :) // :)

//அப்ப எதிர்பார்ப்பை நிறுத்தினாலே அனைத்தும் நின்று விடுமா? // உண்மைதான் சிவா.. எதிர்பார்ப்பை நிறுத்த முடியாது.. குறைக்கணும்..

//எப்ப எழுதியது.... // ஒரு ரெண்டு வாரத்துக்கு முந்தி தமிழோவியத்துக்கு அனுப்பியது..

பொன்ஸ்~~Poorna said...

//(குப்ஸ்,சதயத்திற்கு போட்டியா நீங்களும் பங்கு பத்தி எழுத ஆரம்பிச்சாச்சா??) //
மனசு, குப்ஸின் காலியான ஆறாவது இடம் இன்னும் காலியாத்தானே இருக்கு?

//புதுசா கார் வாங்கியிருக்கிங்களா ?? புது காருனா பூ வைக்கிறது தான் டெய்லியா வைக்க முடியும் ??? // மின்னல், இந்த கார், பூ மாதிரியான புற வாழ்க்கையைப் பத்தியே யோசிக்காதீங்க.. இது ஒரு தத்துவக் கவிதை ;) தத்துவத்தைத் தேடுங்க.. கிடைச்சதுக்கப்புறம் உங்களைச் சந்திக்கிறேன்.. (கீழ்ப்பாக்கத்துல தானே இருப்பீங்க? ;) )

பட்டணத்து ராசா, நன்றி.. இந்தப் பக்கமெல்லாம் வருவீங்களா? -எதிர்பார்ப்பில்லீங்க.. வராதவங்க வந்தா கவிதை ரொம்ப நல்லா வந்திருக்குன்னு ஒரு சந்தோஷம் :)

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ்,ஆடிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
மீனு போட்டா பொன்ஸ் வருவாங்கனு பட்சி சாத்திரம் சொல்லிச்சு.
படம் , பத்திப் போட்டாக்கூட வருவீங்களா.
தெரியாம்ப் போச்சேப்பா.
:-)

மனதின் ஓசை said...

பொன்ஸ்.. கவிதை நல்லா இருக்கு...

ஆனா இது புரியலையே..
//எதிர்பார்ப்பை நிறுத்த முடியாது.. குறைக்கணும்..//

யாரோட எதிர்பார்ப்பு? என்ன சொல்ல வரீங்க இந்த கவிதையில?

மனிதன் இயந்திரத்தனமான அவசர வாழ்க்கைக்கு நடுவே மற்றவற்றை கவனிக்க மறக்கிறான்.இயற்கையை ரசிக்க மறுக்கிறான்..புதிதாய் வருபவற்றுக்கு மற்றும் மரியாதை. முதல் நாள் மட்டும்.. - இதுதானே கவிதை சொல்லும் கருத்து? இல்லை வேறு எதும் சொல்லி என் மரமண்டைக்கு ஏறலையா?

ILA (a) இளா said...

//முகம் திருப்பிக் கொள்கிறது
எதிர்வீட்டு மல்லிச்செடி//
நல்ல வரிகள். பொறுமையா இந்த கவிதையை மாத்துங்க பொன்ஸ். நல்ல கரு. முழுமைஅடையலையோன்னு ஒரு ஆதங்கம்.அதான்.

நாகை சிவா said...

//ஒரு ரெண்டு வாரத்துக்கு முந்தி தமிழோவியத்துக்கு அனுப்பியது.. //
பெரிய ஆளுனு சொல்லுங்க....

//உண்மைதான் சிவா.. எதிர்பார்ப்பை நிறுத்த முடியாது.. குறைக்கணும்..//
ஒத்துக்குறேன்.
No (Big) Expectations, No (Big) Disappointment.
:)))

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

கவிதைல கலாசுறிங்களே, இனிமே என்னோட பிளாக் எல்லாம் மூடிட்டு வேற எதுன வேலைப்பார்கலாம்னு தோனுது! பின்ன இப்படி பின்னுறிங்க! கவிதை முடியாதது போல இருக்குனு சொல்றாங்களே எல்லாரும்னு ஏதும் முடிவுறை போல சேர்க்காதிங்க அப்படியே இருக்கட்டும், கவிதைல கடைசில ஒரு கேள்விக்குறி படிக்கிறவங்க மனசுல வரணும் , இப்படி இருந்தா தான் அந்த கேள்வி தோன்றும் ,கவிதைக்கு இலக்கணம் புதிர் போல் இருத்தல் என நான் நினைக்கிறேன் அந்த வகையில் உங்க கவிதை சரியா தான் இருக்கு! கொஞ்சம் கற்பனையை வாசகர்கள் யூகத்திற்கு விடனும் அதுபோல விட்டு இருக்கிங்கனு தான் நான் நினைக்கிறேன்

Anonymous said...

attendance test

கதிர் said...

பொன்ஸ் அக்கா,

கவிதை நல்லா இருக்கு...

அன்புடன்
தம்பி

பொன்ஸ்~~Poorna said...

மனதின் ஓசை,

//யாரோட எதிர்பார்ப்பு? // எல்லாரோட எதிர்பார்ப்பும் தான்.

//அவசர வாழ்க்கைக்கு நடுவே மற்றவற்றை கவனிக்க மறக்கிறான்//
அப்படி இல்லை.. தினம் போலன்னு சொல்றோம் இல்லையா.. அதுனால, இதெல்லாம் தினமும் செய்வது தான் ..
தினம் ஒரு வேலையைச் செஞ்சீங்கன்னா ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது இல்லையா?

இப்போ, நான் போடும் ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க ஒரு பின்னூட்டம் போடறீங்க.. ஒரு பதிவுக்கு போடாம விட்டா, எனக்கு ஒரு ஏமாற்றம் வரும். நான் வந்து கேட்பேன், இல்லைன்னா, புலம்புவேன், இல்லைன்னா நினைவு வச்சிருந்து அப்புறம் பகைமை பாராட்டுவேன்.. இப்படியான எதிர்பார்ப்புகளைத் தான் சொல்ல முயற்சி செஞ்சேன்..

இந்தப் பின்னூட்ட கான்சப்ட் கூட சேர்க்கலாமான்னு ஒரு யோசனை இருந்தது ;)

பொன்ஸ்~~Poorna said...

இளா,
//முழுமைஅடையலையோன்னு ஒரு ஆதங்கம்.அதான். //
- //கவிதைல கடைசில ஒரு கேள்விக்குறி படிக்கிறவங்க மனசுல வரணும் //- வவ்வால்
மாற்ற முடியுமான்னு தெரியலை இளா.. பார்க்கிறேன் :)

ரவி, நன்றி

//பெரிய ஆளுனு சொல்லுங்க....// சிவா, இதெல்லாம் பெரிய விஷயமா.. ?!! ( நாலு இங்க்லீஸ்படம், சப் டைட்டில் இல்லாமயா? பெரியாள் தான் ;) )

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
//இனிமே என்னோட பிளாக் எல்லாம் மூடிட்டு //
இப்போவே பாதி நாள் உங்களைக் காணோம்.. ரொம்ப பீல் ஆவாதீங்க.. கொஞ்ச நாள் வேணா கவிதையை நிறுத்தி வச்சிப் பார்க்கிறேன் ;)
//அந்த வகையில் உங்க கவிதை சரியா தான் இருக்கு! கொஞ்சம் கற்பனையை வாசகர்கள் யூகத்திற்கு விடனும் அதுபோல விட்டு இருக்கிங்கனு தான் நான் நினைக்கிறேன் //
நன்றி.. அது மாதிரி இருக்கணும்னு தான் பார்த்தேன்..

அனானி, என்னங்க இது.. அட்டென்டென்ஸ்னா, உங்க பேரையும் பதிக்கணும்ங்க.. யார் வருகைன்னு எனக்கெப்படித் தெரியும்? ;-)

நன்றி தம்பி :)

VSK said...

பழகியவர்கள், அவ்வப்போது முகம் காட்டிச் சிரித்து விட்டுப் போகிரவர்கள், அன்றாடத் தேவைகளுக்காக பார்க்க நேரிடுபவர்கள்,
இவர்களைப் புறக்கணித்துவிட்டு, இன்னுமொரு உறவைத் தொடுக்கிறீர்கள்!

இவர்கள் கடுப்படிப்பதாக நீங்கள் எண்ணுவது, உங்களது முந்தையக் கவிதையில் சொன்ன அந்தத் 'தேடலை' இன்னும் விடாமல் செய்துவருவதைத்தான் காட்டுகிறது!

விரைவில் விடை கிடைக்க வாழ்த்துகள்!

"பக்கம் பக்கமாகத் தேடுவதை நிறுத்தி, ஒரே இடத்தில் தேடினால், ஒருவேளை கிடைக்கக்கூடும்" என யாரோ ஒரு அறிஞன் சொன்னதாக நினைவு!!

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே,
அட, அட.. ஒரு கவிதைன்னு இருந்தா, அது படிக்கிறவங்களுக்கு வித விதமா பொருள் கொடுக்கணும்னு போன வாரம் தான் எங்க கவிதைத் திறனாய்வுத் துறைத் தலைவர் அட்லாஸ் வாலிபர் இலவசக் கொத்தனார் சொன்னார்... அதே மாதிரி படிக்கிறவங்க ஒவ்வொருத்தரும் ஒரு பொருள் காணும் போது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

//"பக்கம் பக்கமாகத் தேடுவதை நிறுத்தி, ஒரே இடத்தில் தேடினால், ஒருவேளை கிடைக்கக்கூடும்" //
அந்த அறிஞன் சொன்னதையும் யோசித்துப் பார்க்கிறேன்.. ஆனா, பக்கம் பக்கமாகத் தேடாவிட்டால், இப்படி பொன்ஸ் பக்கங்களை நிறைக்க எதுவும் கிடைக்காமல் போய்விடுமே!! :)) நம்மளே மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம் ;)