Tuesday, July 04, 2006

வெட்டியாய்ச் சுட்டவை ஐந்து


ஒற்றைப் பனையாம் உவமை அழிந்தது
இற்றைக்கு ஓர்-ஆன்ட் டெனா

தனியொருவனுக் கிடமிலையெனில்

தார்ச்சாலையில் படுப்போம்..


"களைப்பான நாள்,

கடுப்படிக்கும் வேலை"

'கடலை' நல்லா வறுபடுது.,

கசங்கிப் போனது நான் மட்டும் தான்..


எவனுக்கோ கல்யாணம்,

எனக்கு அலங்காரம்!

யாரையோ சுமக்காமல்

நீரைச் சேமிப்பது எப்போது?

ஆரோக்கியமான புரவிதான்

அதிவேகமாகத் தான் விரட்டுகிறேன்

இந்த (புத்தக) அட்டையிலிருந்து

இறங்கினால் தானே!!


[ஹி ஹி... செல் வாங்கின புதுசுல கண்டதையும் சுட்டது.. ச்ச்சும்மா எடுத்துப் போட்டுப் பார்த்தேன்.. ஒரு டைம் பாஸ் :)) ]

43 comments:

கிவியன் said...

ஆறு ஆறுன்னு போய்கிட்டு இருகறப்ப பொன்ஸ் என்னடா அஞ்சுன்னு ஆரம்பிச்சுட்டாங்களோன்னு வந்து பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது, என்ன 2megapixel செல்லா? படங்கள் நன்றாக வந்துள்ளன (உடன் படக்கருத்தும்)...அது சரி txt like a teen டிகிரி வாங்கியாச்சா? (யாரப்பாத்து என்னா கேள்வியிதுன்னு பதில் வரும்னு நெனக்கிறேன்)

ராபின் ஹூட் said...

யானை எதுவும் கிடைக்கலயா?

Thekkikattan said...

பொன்ஸு,

//ஒற்றைப் பனையாம் உவமை அழிந்தது
இற்றைக்கு ஓர்-ஆன்ட் டெனா//

.....இற்றைக்கு... அப்படிங்கிறது இயற்கைக்கு தானே?//"களைப்பான நாள்,

கடுப்படிக்கும் வேலை"

'கடலை' நல்லா வறுபடுது.,

கசங்கிப் போனது நான் மட்டும் தான்.. //

எனக்கு இது பிடித்திருக்கு...

Jeeves said...

nalla irunga ( unix box - no tamil font to type )

anbu"TON"
jeevaa

பொன்ஸ்~~Poorna said...

கிவி சுரேஷ்,
பிக்செல், கிக்செல் எல்லாம் கேட்கக் கூடாது.. அந்த செல் பாவம்.. கொஞ்சம் நல்லாவே போட்டோ எடுக்கும்.. என்ன, வாங்கின புதுசுல நமக்குத் தான் எடுக்கத் தெரியலை.. இந்த லட்சணம் :)
இந்தப் படத்தைப் பாருங்க..இதுவும் நம்ம போன்ல எடுத்தது தான்.. கொஞ்சம் வெவரமானதுக்கப்புறம்..
txt like a teen - இந்த டிகிரி எதுக்குன்னு நிஜமாவே புரியலீங்கோ..

ராபின்,
யானையைப் பத்தி எழுதினா,
"யாரையோ
சோம்பேறி இல்லை
என்று சொல்ல,
நான் ஓடுகிறேன்"னு எழுதணும்.. நம்மளைப் பத்தி.. நாமே.. ஹி ஹி..

துளசி கோபால் said...

செல், புல்லுன்னுகிட்டு இருக்காம, அங்கே இருக்கறப்பவே 'டில்' ல்லு ( டிஜிட்டல் கேமராவுக்குச் செல்லப்பேர்)

வாங்கிக்கிட்டு அசல் படங்களைப் போடற வழியைப் பார்க்காம.........

வெற்றி said...

பொன்ஸ்,
படித்தேன். இரசித்தேன்.
அதுசரி, படங்கள் பற்றி சில தகவல்களையும் தந்திருக்கலாமே[ஊர், நாடு, etc]!

பொன்ஸ்~~Poorna said...

தெகா,
இற்றைன்னு சொன்னா, இன்றைக்கு என்பதன் இலக்கண வடிவம்.. முன்னாடி ஒத்தப் பனைமரம்னு சொல்லிகிட்டு இருந்தோம்.. இன்னிக்கு ஒத்தையா நிக்குறது ஆன்டென்னா தான்..

எல்லா மரத்தையும் வெட்டியாச்சு.. முன்ன கூட்டம் கூட்டமா ஆன்டென்னா இருந்த இடத்துல, இன்னிக்கு கேபிள் புண்ணியத்துல ஒண்ணும் இல்லாம போச்சு.. அதான் அதிசயமா ஆன்டென்னா பார்த்தா, அதுக்கு ஒரு வெண்பா..

ஜீவா, இவ்வளவு அலுத்துக்கிடறீங்க?!!.. அந்த முதல்ல இருக்கிறது வெண்பா, அது வெண்பா மாதிரி தெரியுதா??

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, அந்தப் படங்களும் வருது.. ரெண்டு மூணு நாள்ல ரெண்டு மூணு படமாவது போடறேன்... பை த பை, இது அசல் படம் இல்லைங்கிறீங்களா? :)

வெற்றி, நாடு விட்டு நாடு எடுத்த படமெல்லாம் ஒண்ணும் இல்லை, எல்லாமே அன்னை பூமி பாரதம் தான்.. முதல் படம் எடுத்தது வேலூர் பேருந்து நிலையத்துல, மீதிப் படங்கள் எல்லாம் பூனாவில் நான் குடியிருந்த அண்டை அயலில் எடுத்தது. :)... மத்தபடி பெரிய குறை இந்த ஊர்ல ஒரு மாடு, ஒட்டகம் கூடப் பார்க்க முடியலை. அது ஒரு பெரிய வருத்தம் தாங்க... அதுக்குத் தான் இதெல்லாம் அப்பப்போ எடுத்து பார்த்துக்கிறேன் :)

kekkE PikkuNi #25511630 said...

படம் - நார்; விளக்கம் - பூ. நல்லா இருந்தது. (கொஞ்சம் நாரும் தெரிஞ்சது, ஹிஹி).

பாலசந்தர் கணேசன். said...

ஆமாம் ஆண்டென்னாக்கள் மறைந்து போய் விட்டன.

Jeeves said...

digital SLR வாங்கினது தான் பெருமை.. உருப்படியா போட்டோ எடுக்க நேரம் இல்லை.. அதான் அந்த " நல்லா இருங்க "

குறள் வெண்பா தானே அப்பமே கவனிச்சேனே :)

அன்புடன்
ஜீவா

கோவி.கண்ணன் said...

பொன்ஸ், நல்லா இருக்கு பொன்ஸ் ... படங்களும் ... அதன் கீழ் குறுங்கவிதையும் ... சூப்ப்பர்

SK said...

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தளர நீர்வடிய
ஒற்றைப் பார்வை பார்த்தவனும்
நீயா.....?
[இருவர்]

குமரன் (Kumaran) said...

படமெல்லாம் நல்லா இருக்கு பொன்ஸ்.

manu said...

பொன்ஸ்,சும்மாக்கோசரம் ஒரு யானை போட்டு இருக்கலாம். பாவம்பா. அதுக்கு காம்ப்லெஷ் வராது? என்னடாது. இந்த அம்மாவுக்காக ஓடி ஓடி உழைத்தும் நம்மளைக் கண்டுக்காம விட்டாங்களே என்று நம்ம கிட்டே சொல்லிச்சு.

நாமக்கல் சிபி said...

வெட்டியாய்ப் போட்ட பின்னூட்டம் ஒன்று!

மனதின் ஓசை said...

//எவனுக்கோ கல்யாணம்,

எனக்கு அலங்காரம்!

யாரையோ சுமக்காமல்

நீரைச் சேமிப்பது எப்போது?

//

எனக்கு பிடித்தது இது...
படங்களும் சில கவிதைகளும் நல்லா இருந்தது பொன்ஸ்..

//பொன்ஸ்,சும்மாக்கோசரம் ஒரு யானை போட்டு இருக்கலாம். பாவம்பா. அதுக்கு காம்ப்லெஷ் வராது? என்னடாது. இந்த அம்மாவுக்காக ஓடி ஓடி உழைத்தும் நம்மளைக் கண்டுக்காம விட்டாங்களே என்று நம்ம கிட்டே சொல்லிச்சு.//
இப்படி பன்னிட்டீங்களே?

//வெட்டியாய்ப் போட்ட பின்னூட்டம் ஒன்று! //
ஆஹாஆஆஆ...

கைப்புள்ள said...

படங்கள் நல்லாருக்கு பொன்ஸ்.

குறிப்பா...
//ஒற்றைப் பனையாம் உவமை அழிந்தது
இற்றைக்கு ஓர்-ஆன்ட் டெனா//
இது வெயிட்டு...

பொன்ஸ்~~Poorna said...

ஆகா!! கெ.பி, நீங்க இருக்கிற இடத்துல பார்த்து பேசணுமே.. ஏதோ, இதிலும் உங்களுக்கு ரெண்டு பூ தெரிஞ்சிருக்கே.. நன்றி :)

ஆமாம் பாலசந்தர்.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் காணாமல் போகும் உலகம் :)

ஜீவா, நானே உங்க கமென்டைத் தமிழ்ப்படுத்திட்டேன். ஒரு வெண்பாவாவது இருந்தாத்தான் இந்தப் பக்கம் வருவீங்க போலிருக்கே... :)

பொன்ஸ்~~Poorna said...

நன்றி கோவி. கண்ணன், குமரன்,

//ஒற்றைப் பார்வை
பார்த்தவனும்
நீயா.....? //
எஸ்கே, நானில்லைங்க ;)

சிபி, ஹி ஹி.. நீங்களே வெட்டியாப் போடுறதுன்னா... அத்தனை மோசமாவா இருக்கு? :))

இளவஞ்சி said...

மாடு படமும் ஒட்டக கவிதையும் அருமைங்க!

பொன்ஸ்~~Poorna said...

மனு, என்னங்க, எனக்கும் யானைக்கும் இடையில ஒரு கேப் கொண்டுவந்துருவீங்க போலிருக்கு.. யானை தான் நம்ம பக்கத்துல எப்பவும் ஓடிகிட்டே இருக்கே.. தனியா வேற போடணுமா? :)

//படங்களும் சில கவிதைகளும் நல்லா இருந்தது பொன்ஸ்//
மனதின் ஓசை, எதெல்லாம் நல்லா இல்லைன்னும் ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா..

நன்றி தல, ஒரே ஒரு ஆன்டென்னால என்ன தல வெயிட்டு ? ரொம்ப லைட்டு :)))

வாத்தியார், நன்றி.. அப்படியே இன்னோரு Happy Birthday :).. உங்க பிறந்த நாளைக்கு இங்ஙன ஆபீஸெல்லாம் லீவு விட்டு ஊரெல்லாம் வெடி வெடிச்சுக் கொண்டாடுறாங்க ;)

இளவஞ்சி said...

// உங்க பிறந்த நாளைக்கு இங்ஙன ஆபீஸெல்லாம் லீவு விட்டு ஊரெல்லாம் வெடி வெடிச்சுக் கொண்டாடுறாங்க ;) //

நமக்கு இந்த வெளம்பரம் புடிக்காதுன்னா ஒருத்தரும் கேக்கறதே இல்ல! ஹிஹி..

மணியன் said...

கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பது போல பொன்ஸின் செல்போனும் வெண்பா வடிக்கும் போல ! கருத்தும் கவிதைகளும் ... சூப்பர் !

sivagnanamji(#16342789) said...

இன்னும் 100 ஆண்டுகளுக்குள் நாம்
எவைஎவற்றை எல்லாம் இழ்ந்துவிடுவொம் எனும் அவலத்தைப்
படம் பிடித்துவிட்டிர்கள்
இருந்தாலும் யானைப் படம் இல்லாதது குறைதாங்க...
ஒருவேளை அது ஓடிட்டே இருப்பதாலே போடல்லியோ?
ஓடி வந்திட்டிருந்தா போட்டிருப்பீங்களோ
your elephent is running towards (-> and not <- )

barath said...

ஒட்டகம் படமும் உங்கள் comment um அருமை

நாகை சிவா said...

வெட்டியாய்ப் போட்ட பின்னூட்டம் இரண்டு.

நாகை சிவா said...

படம் புடிக்குற கைப்பேசி வச்சு இருக்காங்களாம்.

வெட்டியாய்ப் போட்ட பின்னூட்டம் மூன்று

சிபியாரே, மிச்சத்த நீங்க வந்து போட்டுங்க

மின்னுது மின்னல் said...

"வெட்டியாய்ச் சுட்டவை நன்றாக வந்துள்ளன "

ஜொள்ளுப்பாண்டி said...

பொன்ஸக்கா
உத்துப்பார்த்தேன்!
கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தேன். கிட்டக்கப்போயி பார்த்தேன்.
கொஞ்சம் எட்டக் நின்னு பார்த்தேன்.
படிச்சுப் பார்த்தேன்!
தலைய சாய்ச்சிப் பார்த்தேன்.

ம்ம்ஹூம் கண்டே புடிக்க முடியலை. மூனாவது படம் என்னாக்கா?? :(

பொன்ஸ்~~Poorna said...

//நமக்கு இந்த வெளம்பரம் புடிக்காதுன்னா ஒருத்தரும் கேக்கறதே இல்ல! ஹிஹி.. //
எல்லாம் இருக்கிறது தானே.. சரி, எப்போ ட்ரீட்? :) [அதுக்குத் தானே அவ்வளவு ஐஸ் வச்சோம் :)) ]

// கருத்தும் கவிதைகளும் ... சூப்பர் ! //
நன்றி மணியன்

//இன்னும் 100 ஆண்டுகளுக்குள் நாம் எவைஎவற்றை எல்லாம் இழ்ந்துவிடுவொம் எனும் அவலத்தைப் படம் பிடித்துவிட்டிர்கள்//
சிஜி, 100 ஆண்டுகளுக்குப் பின் யானை இருக்குமுங்க.. அதான் அதை எடுக்கலை :) ஆனா, இழந்துடுவோம்னு சொல்றீங்களா? இப்போவே இயற்கையைக் காப்பாத்த நடவடிக்கைகள் நடந்துகிட்டு தானே இருக்கு..

பொன்ஸ்~~Poorna said...

பரத், மின்னல், நன்றி,

சிவா, வெட்டியா ஒரு நன்றி,

//படம் புடிக்குற கைப்பேசி வச்சு இருக்காங்களாம்.//
பாயின்டைப் பிடிச்சது நீங்க மட்டும் தான்.. அதுக்குத்தே இத்தனை பில்டப்பு.. எத்தனையோ உள்குத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நாகை சிவா இந்த மாதிரி ஜுஜுபி மேட்டர் எல்லாம் கண்டு பிடிக்கலைன்னாத் தான் தப்பு :)

பாண்டி, ஹி ஹி. எல்லாத்தையும் கண்டுபிடிக்கிற நம்ம சூடான் புலி, அரசியல் ரத்னா நாகை சிவா வந்து கண்டுபிடிக்கிறாரான்னு பார்ப்போம் :)

S. அருள் குமார் said...

//ம்ம்ஹூம் கண்டே புடிக்க முடியலை. மூனாவது படம் என்னாக்கா?? :( // ஜொள்ஸ், பாத்ததுமே எனக்கு அது லேடீஸ் ஹாண்ட் கர்சீப் என்று தோன்றியது!

சரிதானா பொன்ஸ்?!!

பொன்ஸ்~~Poorna said...

அருள், எப்டிங்க இதெல்லாம்?!!!

இந்த போட்டோவையும் கர்ச்சீப்பையும் சேர்த்து பார்த்த சில நண்பர்களுக்கே அடையாளம் தெரிஞ்சதில்லை.

அதிலும் பெண்களின் உடைகளைப் பற்றி பதிவு பதிவா எழுதும் ஜொள்ளு பாண்டிக்கும் தெரியாத ரகசியத்தை.. ம்ம்ம்ம்.. என்னவோ இருக்குங்க.

நிலவு நண்பனின் அழைப்பிதழுக்கு நீங்க கொடுத்த ரியாக்ஷன்லேர்ந்தே சந்தேகம் தான்... ..

S. அருள் குமார் said...

நமக்கு ரொம்பப் பிடிச்ச மேட்டரெல்லாம் எங்க எப்படி பாத்தாலும் கண்டுபிடிச்சிற மாட்டோமா?! அப்படித்தான் :))

//அதிலும் பெண்களின் உடைகளைப் பற்றி பதிவு பதிவா எழுதும் ஜொள்ளு பாண்டிக்கும் தெரியாத ரகசியத்தை.. //

ஹ.. ஹா... நாங்கல்லாம் எழுதறதில்ல. அவ்ளோதான்... :))

நாகை சிவா said...

//எத்தனையோ உள்குத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நாகை சிவா //
எதுக்கு இந்த உள்குத்து.

//எல்லாத்தையும் கண்டுபிடிக்கிற நம்ம சூடான் புலி, அரசியல் ரத்னா நாகை சிவா வந்து கண்டுபிடிக்கிறாரான்னு பார்ப்போம் :) //
எதை எதையோ கண்டுபிடிக்கற நாங்க இந்த தம்மாதுண்டு துணி ஏதுனு கண்டுபிடிக்க மாட்டோமாக்கும்....

நமக்கு முன்னாடி நம்ம நண்பர் அருளு கண்டுபிடித்துவிட்டார். நன்றி அருள்.

நாமக்கல் சிபி said...

//பாண்டி, ஹி ஹி. எல்லாத்தையும் கண்டுபிடிக்கிற நம்ம சூடான் புலி, அரசியல் ரத்னா நாகை சிவா வந்து கண்டுபிடிக்கிறாரான்னு பார்ப்போம் :)
//

விட்டா! இதுக்காக சி.பி.சி.ஐ.டி போலீஸை வரவழைப்பீங்க போலிருக்கே!

பாண்டிக்கா தெரியாது! தன்னடக்கத்தோட கேட்டிருக்கார்! அவ்வளவுதான்.

G.Ragavan said...

வெட்டியாச் சுட்டப்பவே இப்படியிருக்கே....சுட்டியாவோ கெட்டியாவோ சுட்டிருந்தா எப்படி இருந்திருக்கும்!

Anonymous said...

pictures are nice and
the kavithaigal also
suits well.
particularly, the orraipanaimaram; and the ottagam kavithaigal... superma

நாகை சிவா said...

//வெட்டியாச் சுட்டப்பவே இப்படியிருக்கே....சுட்டியாவோ கெட்டியாவோ சுட்டிருந்தா எப்படி இருந்திருக்கும்! //

இப்படியே தான் இருந்து இருக்கும்.

ILA(a)இளா said...

வெட்டியா இருந்தாலும் ஒரு Professionalism தெரியுதே,

தேவ் | Dev said...

படங்கள் அருமை.. துளசியக்காவின் கருத்தை வழிமொழிகிறேன்.