Monday, August 21, 2006

திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும்

சென்னைக்கு வந்து நான் எது நடந்துவிடும் என்று பயந்து கொண்டே இருந்தேனோ, அது நடந்தே விட்டது.. ஆம், நேற்று எதேச்சையாக தமிழ் வலைப்பதிவுகளின் ஒரே ப்ளாக் இஞ்சினியரான பாலபாரதியையும் அவரது நண்பர் திருவாளர் கோயிந்தையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. போன இடத்தில் ஒரு கணினியும் அகப்படவே திருவாளர் கோயிந்து காலம் நேரம் பார்க்காமல் பதிவு பொறியாளரிடம்(Blog Engineer ;) ) தான் கற்ற வித்தை ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

முதலில் அத்தனை ஆர்வமாகக் கேட்கவில்லை என்றாலும், பொறியாளரின் பதிவில் இருக்கும் தொட்டால் மட்டுமே தோன்றும் பக்கப்பட்டி (அதாங்க, sidebar) எப்படிப் போடுவது என்னும் ஒரே விஷயம் என் ஆர்வத்தைத் தூண்ட, அதை மட்டுமே தெரிந்து கொள்வதற்காக, பிறவற்றையும் கவனிக்க வேண்டியதாகிவிட்டது.

"அம்மணி பொன்ஸூ, பதிவுல லிங்க் கொடுக்கிறது எப்படின்னு உனக்குத் தெரியுமா?"என்றபடித் தொடங்கினார் கோயிந்து..

"லிங்கா? அதான் எனக்குத் தெரியுமே.. இதோ புது போஸ்ட் அடிக்கும் போது கம்போஸ் மோடு(Compose Mode) க்குப் போய்ட்டு, அதுல எந்த நாலு வார்த்தைக்கு லிங்க் கொடுக்கணுமோ, அதை மட்டும் செலக்ட் பண்ணி, இதோ இந்த பட்டன் இருக்கு பாரு


இதைத் தட்டணும்.. அப்புறம் ஒரு புது விண்டோ வரும்.. அதுல உன்னோட லிங்கைப் போட வேண்டியது தான்.."


"சரி.. அத்த வுடு.. கொஞ்சம் லெட்டர் பெருசாவும், கொஞ்சம் சின்னதாவும் எப்படி மாத்தணும்? அது தெரியுமா?" என்று அடுத்த டெஸ்ட் வைத்தான் கோயிந்து..

இதுவரை அத்தனை ஆர்வமாக பதில் சொல்லாமல் இருந்த நான் இந்தக் கேள்வியில் அதிக உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தேன்..
"மறுபடி உனக்கு வேண்டிய நாலு வார்த்தையை செலக்ட் பண்ணு.. மேல பாரு Normal Size-னு ஒரு ட்ராப் டவுன் இருக்கு பாரு..."


"என்னாது? ட்ராப்பு.. டவுனா?!! இன்னாது அது?"


"அதாம்பா.. இங்க இருக்குப் பாரு.. "


"இதை எடுத்து உனக்கு வேணுங்கிற சைஸுக்கு மாத்து.. அவ்வளவு தான்.."


"அம்புட்டு தானா?" என்று கோயிந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இஞ்சினியர் சார் தனது திடீர் போன் காலை முடித்துக் கொண்டு வந்தார்..


நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது ஞானத் தந்தை கோயிந்து நான் ஏதும் பேசும் முன், இஞ்ஜினியர் சாரிடம், "ஏம்பா, ஏதோ, லிங்க் போடுறது எப்படின்னு கத்துக்க சொன்னியே.. இதோ பாரு இப்படித் தான் போடணுமாம்.. " என்றான்..

வாயடைத்து பார்த்துக் கொண்டே இருக்கும் போது அடுத்து சொன்னான்.

"இதைத் தான் நானே முட்டி மோதி கத்துகிட்டேனே, அடுத்து அந்தப் படம் போடுறது எப்படின்னு கொஞ்சம் சொல்லுறது?" என்று..

"அட.. என்ன பொன்ஸ் அப்படிப் பார்க்கறீங்க.. சொன்னேனே.. நம்ம சிஷ்யப் பயல் கோயிந்து.. ரொம்ப புத்திசாலி.." என்று பாலா என்னைப் பார்த்து சொல்ல, நான் எஸ்கேப்..

(பதிவில் லிங்க் போடுவது எப்படி, படம் போடுவது எப்படி என்று சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயிந்துவைப் பாலாவிடமிருந்து சில நாள் கடத்தி வந்து இந்தத் தொடர்.. வேறு ஏதாவது எனக்குத் தெரிந்த ப்ளாக் விஷயங்கள் கேட்டால், அதையும் சேர்த்துக் கொள்கிறேன்.. :) )



தொடரும்

38 comments:

Anonymous said...

Mathy Kandasamy சொன்னது:

நல்ல விதயம் பொன்ஸ்!

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா...
ஆளைக்காணமேன்னு இங்கன தேடி கிட்டு இருக்கேன்... அவரின் அடுத்த பதிவுக்காக.. கொஞ்சம் அனுப்பி வையுங்க...

Anonymous said...

selvanayaki சொன்னது:

நன்றி பொன்ஸ்:

Anonymous said...

நாமக்கல் சிபி சொன்னது:

நல்ல தொடர்(!?). மிக்க நன்றி வலைப்பதிவர்கள் சார்பாக!

Anonymous said...

துளசி கோபால் சொன்னது:

அம்மாடி பொன்ஸ், பத்திரமாப் போய் சேர்ந்துட்டேன்னு சொல்றதுக்குத்தானே இந்தப் பதிவு.

ஆமாம், பின்னூட்டம் கொடுக்கறப்ப சில வார்த்தைகளை மட்டும் கொட்டை எழுத்துலே எப்படி போடணுமுன்னு கோயிந்துக்கிட்டே கொஞ்சம் கேட்டுச் சொல்லு தாயி. புண்ணியமாப் போகும்.

Anonymous said...

திருவாளர்.கோயிந்து புதிசாலியா? இல்லையா?
(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல தொடர் பொன்ஸ்!
எனக்கும் பதிவு மற்றும் பின்னுட்டம் விசயமாக பல சந்தேகங்கள் உண்டு கண்டிப்பாக ஒவ்வொன்றாக கேட்பேன்!
1.நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

மதி, நன்றி, ஏதாச்சும் சொதப்பினா வந்து உதவுங்க... கோயிந்து இதுக்கும் உதவியே இல்லை :))

பாலா, கோயிந்துவை உங்க வீட்லயே வச்சிக்குங்க.. அப்பப்போ நானே வந்து கத்துக்கிறேன்.

செல்வா :)

துளசி அக்கா, ஆமாங்கா, வந்து சேர்ந்தாச்சு.. உங்க கேள்விக்கு அடுத்த முறை கோயிந்து என்ன சொல்றான்னு பார்க்கலாம்..

சரவணன், பதில் : முடியும்.. எப்படி? : ஓவர் டூ கோயிந்து பார்ட் டூ

G.Ragavan said...

கோவிந்த கோவிந்த கோபால கோவிந்த
கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா

லிவிங் ஸ்மைல் said...

// எனக்கும் பதிவு மற்றும் பின்னுட்டம் விசயமாக பல சந்தேகங்கள் உண்டு கண்டிப்பாக ஒவ்வொன்றாக கேட்பேன்!
1.நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி? //

சரவணன் கேட்பதை வழிமொழிகிறேன்..

மேலும் சுரதா முறையில் வரமருக்கிறது இப்போதைக்கும் அதையும் சேர்த்து விளக்கமும். (முயற்சி செய்யாமைக்கு மன்னிக்கவும்)

அருள் குமார் said...

//1.நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?// எனக்கும் இந்த டவுட் இருக்கு பொன்ஸ். சீக்கிறம் சொல்லுங்க.

அப்புறம்.. பாவம் கோயிந்து! ஏற்கனவே பாலா கிட்ட மாட்டிகிட்டு கஷ்ட்டப்படறார். அவர விட்டுட்டு பாலபாரதியை கலாய்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவோம்.

உறுப்பினர்,
பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம்.

(சங்கத்தின் தலைமை யாரென்று இப்போது சொல்வதற்கில்லை :))

உங்கள் நண்பன்(சரா) said...

வீடியோ கிளிப்பிங்சை சில பதிவர்கள் இணைத்துப் பதிவிடுவதைப் பார்த்திருக்கின்றேன், அதைப் பற்றியும் விளக்கவும்!

கோயிந்து என்ன ஆச்சு? இருக்கியா இல்லை வழக்கம் போல தண்ணியப் போட்டுட்டு மட்டையாயிட்டியா?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

//கோவிந்த கோவிந்த கோபால கோவிந்த
கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா//

கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
?!?!?!?!?!
:-)

Anonymous said...

செந்தழ,ல் ரவி சொன்னது:

(///கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?////

சாத்தியம். அதற்க்கு உங்கள் டெம்ப்ளேட்டில் சிறிய மாறுதல் செய்ய வேண்டும்.

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

//அதற்க்கு உங்கள் டெம்ப்ளேட்டில் சிறிய மாறுதல் செய்ய வேண்டும்.//
- அவசியமில்லை என்று கோயிந்து சொல்கிறார்..

உங்கள் நண்பன்(சரா) said...

பொன்ஸ் அக்கா!
தெரியவில்லை என்று தான் தங்களிடம் நான் சந்தேகம் கேட்டேன்! இதே சந்தேகம் பலருக்கும் இருக்கின்றது! உங்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் பதில் சொல்லலாம்,இல்லையென்றால் தெரிந்த மற்றைய வலைப்பதிவு நண்பர்களும் சொல்லவும்!
உங்களின் இந்தப் பதிவை பல புதியவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதமாக அமைக்க வாழ்த்துக்கள்!!

இந்தப் பதிவை அனானிகளை விட்டு ஒரு காமெடிப் பதிவாக ஆக்காமல் ஒரு நல்ல பயனுள்ள பதிவாக தொடர்ந்திட வேண்டுகோள் வைக்கின்றேன்!

(அனானிகளுக்கு தனி-யா வேறு ஒரு பதிவிடுங்க்ளேன், அங்கு விளையாடட்டும், நானும் கலந்து கொள்கிறேன்)

அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

ஏனுங்க வர வர உள்குத்து இல்லாம பதிவே போட மாட்டீங்களா.
இது என்ன தலைப்பு. இது உங்களுகே நியாயம் இருக்கா.
சரி விடுங்க, ஏதோ ஆசைப்படுகின்றீர்கள். நடத்துங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

சரவணனின் கட்டளைப்படி அனானிகளுக்கு நோ என்ட்ரி.. அத்துடன், அனானி தாயத்தையும் மாட்டியாயிற்று.. இனி தொல்லை இருக்காது என்று நம்புவோம்.. :)))


அரசியல் ரத்னா நாகை சிவா,
பல உள்குத்து பார்த்து நீங்கள் இதிலும் "உள்"குத்து தேடுகிறீர்கள்.. இந்தப் பதிவில் இருப்பது நேர்குத்து.. => குத்து டூ கோயிந்து..
நேற்று மாலை இந்திய நேரம் சுமார் 3 மணிக்கு உதயமான "பாலபாரதி கலாய்ப்போர் சங்கப்" பணிகளின் ஒரு பகுதி. சங்கத் தலைமை பற்றி அருளின் பின்னூட்டத்தில் காணலாம்.

- யெஸ்.பாலபாரதி said...

//உறுப்பினர்,
பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம்.
//

என்ன நடக்குது.. என்னையும்ம் கூட ஆட்டத்துல சேர்த்துப்பீங்களா...?

- யெஸ்.பாலபாரதி said...

//கோவிந்த கோவிந்த கோபால கோவிந்த
கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா//

//கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
?!?!?!?!?!//

ராகவா இதுவும் உன் வேலை தானே...

- யெஸ்.பாலபாரதி said...

அக்காவுக்கு சந்தேகத்தை சொல்லீஇட்டு வாறேன்னு.. நேத்து போன கோயிந்து இன்னும் வரலை.. எங்கன மப்புல கெடக்காரோ.. சீக்கரம் வரச்சொல்லுங்க..
(ஒங்க ஏரியாவுல ஏதாவது மின் கம்பத்துக்கு கீழே பாருங்க.. கிடக்கலாம்..)
நான் இன்னும் பதிவு போடாம இருக்கேன்...

பொன்ஸ்~~Poorna said...

பாலா, தல,

"மொத்தமா போடுறேன்.. கூட்டு சேர்ந்து போடுறோம்"னு ஏமாத்துற பதிவுகளை விடுங்க.. கோயிந்து பதிவையாவது நேரத்துக்குப் போடுங்க.. நேத்து தான் கோயிந்துவை அனுப்பிட்டோமே..

Anonymous said...

கைப்புள்ள சொன்னது:

நல்ல முயற்சி பொன்ஸ்! கோயிந்து சரி, பொன்ஸ் சரி, தலைப்புல இருக்குற அந்த அப்பாவி யாருங்க?

G.Ragavan said...

// யெஸ்.பாலபாரதி said...
//கோவிந்த கோவிந்த கோபால கோவிந்த
கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா//

//கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
கோ'பாலா'
?!?!?!?!?!//

ராகவா இதுவும் உன் வேலை தானே... //

அடடா! முருகா முருகா முருகா!

ஒங்க பேரு எஸ்.பாலபாரதி
உங்களுக்குச் சொல்லப் போற பதில் நோ பாலபாரதி

Anonymous said...

J Chandrasekaran சொன்னது:

இந்த மேல இன்கிலீஷு டப்பா, கீழ தமிழு டப்பா எப்படிடாப்பா சேர்க்க்கறது கோயிந்து? சுரதா, கிருபாவுக்கு இந்த மேட்டர்க்காக, நாங்களும் நன்ரி சொல்வோமே!

G Gowtham said...

////1.நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?// எனக்கும் இந்த டவுட் இருக்கு பொன்ஸ். சீக்கிறம் சொல்லுங்க.//

எனக்கும்!

- யெஸ்.பாலபாரதி said...

அடுத்த பதிவு.. நாளை இருக்கா..

Anonymous said...

இ.கொ. சொன்னது:

என்னைப் போன்ற தொழில்நுட்ப அறிவிலிகளுக்கு (அது யாருடா மத்த விஷயத்தில் அறிவு இருக்கான்னு கேட்கறது?) இந்த மாதிரி ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்குடுத்தா நாங்களும் புரிஞ்சுப்போமில்ல.

ரொம்ப டாங்ஸுங்க.

ALIF AHAMED said...

////1.நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?// எனக்கும் இந்த டவுட் இருக்கு பொன்ஸ். சீக்கிறம் சொல்லுங்க.//

எனக்கும்!/./


எனக்கும்..

மற்றும்

பின்னுட்டத்தில் லிங்க் கொடுப்பது எப்படி??

உங்கள் நண்பன்(சரா) said...

//பின்னுட்டத்தில் லிங்க் கொடுப்பது எப்படி??
//

எனக்கும்


அன்புடன்...
சரவணன்.

பொன்ஸ்~~Poorna said...

சரவணன், எல்லார் கூடயும் சேர்ந்து "எனக்கும்" போடறீங்க!!

மின்னல், சரவணன், இகொ... எல்லாருக்கும் அடுத்த பதிவு..

சந்திரா, அது நண்பர் வசந்தனிடம் இருந்து பெற்றது. இன்னும் கொஞ்சம் மாற்ற ஆசை. அப்புறம் அது பற்றிப் பதிவு போடலாம்.

ஸ்மைலி, tha போட்டுப் பாருங்க.. த வருமே.

Anonymous said...

தருமி சொன்னது:


1. ங் - இந்த எழுத்துக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படி?
2. ஒரு பொண்ணு நிக்குதே ஒங்க ப்ளாக்குல. என் வெப்லாக்ஸ்ஸில போட்டது மாதிரி ப்ளாக்ஸ்பாட்டுல பூப்படம் போடணும்னா எப்டீங்கோ?

Anonymous said...

,

மா சிவகுமார்
சொன்னது:

கடும் கோடைக் காலத்தில் மாலை மூன்றரை மணிக்கு சென்னையில் கடற்காற்று அடிக்கத் தொடங்குவது போல உங்கள் பதிவு பொன்ஸ்.

அன்புடன்

மனதின் ஓசை said...

நல்ல பதிவு பொன்ஸ்..
//நமக்கு வரும் பின்னூட்டத்தில் ஒரு வரியை மட்டும் (கவனிக்க:முழுப்பின்னூட்டத்தையும் அல்ல)
எடிட் அல்லது அந்த ஒரு வரியை மட்டும்நீக்குவது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?// எனக்கும் இதே டவுட்டு இருக்குது.. தீர்த்து வைக்கும் கோயிந்துக்கு ஒரு குவாட்டர் வாங்க காசு தரப்படும்.. (இந்த கேள்வியை ஒரிஜினலா கேட்டவர்கிட்ட இருந்து) :-)

ஆமா, ஏன் சில கேள்விக்கு பின்னுட்டத்திலேயெ பதில் சொல்றீங்க?

பொன்ஸ்~~Poorna said...

//ஆமா, ஏன் சில கேள்விக்கு பின்னுட்டத்திலேயெ பதில் சொல்றீங்க?//
அப்படி ஒன்றும் பாட்டர்ன் தெரியலியே மனதின் ஓசை.. த-வுக்கு மட்டும் தானே சொன்னேன்?

மனதின் ஓசை said...

// த-வுக்கு மட்டும் தானே சொன்னேன்?//

அததான் சொன்னேன். மறந்து சொல்லியாச்சோன்னு நினச்சேன்.. :-)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

புதரகம் இருந்து தாயகம் வந்தாச்சா(வந்த நேரம் நல்ல மழைய கொண்டு வந்து இருக்கிங்க. மான்சூன்ல வந்த மழை வராமா வெயிலா வரும்!!!)

என்னை நாடு கடத்தாம மாவட்டம் கடத்திடாங்க. நெட் கபேல 30 ரூபா அதான் கொஞ்ச நாளா அஞ்சாத வாசம். வந்ததும் உங்க பதிவு தான் ஏக களேபரமா இருக்கு உங்க பக்கம் நடக்கட்டும் .... நடக்கட்டும் ..

நானும் என் பேட்டைக்கு வந்து கச்சேரிய வச்சுகிரேன்.என் பதிவுக்கு இணைப்பு தந்து இருக்கிங்க என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது, மிக்க்க நன்றி.இன்று தான் பார்த்தேன், கொஞ்சம் லேட் தான் பொருத்தருள்க!

என் நிலை இரு தலைக்கொல்லி எரும்பு போல் உள்ளது! மீண்டும் முழு வீச்சில் வருவான் இந்த வவ்வால்!

தருமி said...

அய்ய...இதெல்லாம் எனக்கு ஜுஜுபி'ங்க. எனக்கு வேண்டியதெல்லாம், இதோ உங்க பதிவில் ரெண்டு ஆனை - ஒண்ணு மூஞ்சிய காமிச்சிக்கிட்டு, இன்னொண்ணு திருப்பிக்கிட்டு உக்காந்திருக்குதுகளே - அதுமாதிரி படங்கள எப்படி போடுறதுன்னுதான். கோயிந்துகிட்ட சொல்லி அனுப்பினேனே...