Tuesday, August 22, 2006

எடிட்.. edit.. எடிட்...

பகுதி 1
பகுதி 2

"டீ எங்க வாங்கினது?" என்றேன் கிளாஸின் நிலையைப் பார்த்தபடி.

"ஆரம்பிச்சிட்டாங்கப்பா! எங்க வாங்கினது; எப்படி வாங்கினது; பணம் கொடுத்தா, கிரெடிட் கார்டா எல்லாத்தையும் சொல்லணுமே!!" என்று அலுத்துக் கொண்டான் கோயிந்து

"இல்லை, ஸ்டார்பக்ஸ்ல டீ குடிச்சுட்டு இப்படிப் பட்ட கிளாஸ்ல எல்லாம்.. "

"அம்மணி! அடங்குங்க!! டீ குடிக்கிறதுன்னா குடிங்க.. இல்லைன்னா கிளாஸைக் கீழ வச்சிட்டு பதிலைச் சொல்லுங்க!!" என்ற பாலாவின் கட்டளைக்கிணங்க, கண்ணை மூடிக் கொண்டு குடித்து விட்டு, நிமிர்ந்தேன்.

"ம்ம்.. இப்போ சொல்லுங்க.. மத்தவங்க நம்ம பதிவில் போடும் பின்னூட்டத்தை எப்படி எடிட் செய்வது?" என்றார் பாலா.. கேள்வியை மறக்காமல்.

"உங்க லாகின் வழியா உங்க பக்கத்தைப் பாருங்க. அதில் இருக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும் ஒரு குப்பைத் தொட்டி தெரியும். அதை க்ளிக் பண்ணுங்க."

"ஐய்யோ.. அப்புறம் அழிஞ்சிடுமே.. " என்றான் கோயிந்து.

"இரு இரு.. என்ன அவசரம்? " என்றேன். "இப்போ அந்தப் புதுப் பக்கத்தோட உரல் இப்படி இருக்கும்"

http://www.blogger.com/delete-comment.g?blogID=24180143&postID=115623777191154907

அதுல delete-comment : இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துட்டு post-edit இந்த வார்த்தைகளைப் போடணும்.. அப்புறம் இப்படி வரும்:

http://www.blogger.com/post-edit.g?blogID=24180143&postID=115623777191154907

இந்த உரலை ஒரு முறை தட்டி பக்கத்துக்குப் போகணும். இந்தப் பக்கம் நம்ம ப்ளாக்கரின் புதுப் பதிவு போடும் பக்கம்(Create Post) மாதிரியே இருக்கும்.. ஆனா, எடிட் செய்யும் பகுதியில் பதிவுகளுக்குப் பதில் நீங்க தேர்ந்தெடுத்த பின்னூட்டம் வரும்.. இந்தப் பின்னூட்டத்தை வேண்டிய மாற்றங்கள் செய்து பப்ளிஷ் பட்டனைத் தட்டி வெளியிட வேண்டியது தான்..

ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "

"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? " என்றார் பாலா

"ஆமாம்.. மாத்தலாம்.." என்றேன்..

தீவிர சிந்தனையிலிருந்த கோயிந்து மெல்லத் தலையாட்டினான்..

"என்ன கோயிந்து? என்ன விஷயம்? " என்றார் பாலா

"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!" என்று கோயிந்து சொன்ன போது ப்ளாக் இஞ்ஜினியரின் சிஷ்யன் நிஜமாகவே புத்திசாலி தானோ என்று எனக்கு அடுத்த சந்தேகம் வந்துவிட்டது..

"பொன்ஸ், எனக்கொரு சந்தேகம்" என்றார் பாலா என் சிந்தனையைக் கலைத்து, "நான் தானே உங்களுக்கு ப்ளாக் ஆரம்பித்த புதிதில் தமிழ்மணத்தில் சேருவது பற்றி எல்லாம் சொன்னேன். நீங்க எங்கேர்ந்து இந்த விஷயம் எல்லாம் கத்துகிட்டீங்க?"

"அதுவா பாலா..இந்த வார நட்சத்திரம் தான் சொல்லிக் கொடுத்தார்.. பதிவே போட்டிருக்கார் பாருங்க.. நட்சத்திரத்துக்குத் தான் நன்றி.." என்றேன்..

"ஆமாம், இப்படித் தான் ஒவ்வொருத்தர் கிட்டயா ஒவ்வொண்ணு கத்துகிட்டு தனித் தொடர் போட்டு ஊரை ஏமாத்தறீங்களா? உங்களுக்கு அந்த பின்னூட்டம் அழிக்கிறது எப்படின்னு சொல்லித்தர மாட்டேனாக்கும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்..

"அட, என்னபா நீ.. உனக்குத் தான் அதெல்லாம் ஒண்ணும் தெரியாதே.. பொன்ஸக்காவை ஏமாத்தி இன்னும் ரெண்டு டெக்னாலஜி கத்துகிட்டு அப்புறமா இப்படி சொல்லிருக்கலாம்ல? " என்று உண்மையை உடைத்து என்னை இன்னும் திகைக்க வைத்தான் கோயிந்து..

[பி.கு: ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இந்த உரல் மாறுபடும். எனவே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பப்ளிஷ் செய்தபின் அதன் உரலைக் கண்டுபிடித்து தான் இந்த மாறுதலைச் செய்ய வேண்டும் ]

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் வந்த வழிமுறைகளில், மாயவரத்தான் சொன்னது இன்னும் கொஞ்சம் சுலபமானதாக இருக்கிறது. இந்தப் பக்கத்திற்குச் சென்று, அங்கிருக்கும் பெட்டியில் டெலிட் கமென்ட் பக்கத்தின் உரலை இட்டால், சுலபமாக பின்னூட்டத்தை மாற்ற முடியும். URL-ஐ மாற்ற முயன்று தப்பு செய்யாமல், இது இன்னும் சுலபம்..

தொடர்ச்சி

39 comments:

G Gowtham said...

//என்று உண்மையை உடைத்து என்னை இன்னும் திகைக்க வைத்தான் கோயிந்து..//
உண்மையை உடைக்கும் சாக்கில்
எங்கள் அனுபவ இன்ஞினியர் பாலாவின் மூக்கையும் உடைக்க முயற்சிக்கும் புது இன்ஞினியர் பொன்ஸக்காவை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
என்ன பார்க்கறீங்க.. றோம் சொல்றேன்னா.. என் பின்னாடி பாருங்க எத்தன எத்தன எத்தன பேரு?
ஆஹா! ஒரு பயலயும் காணுமே!!
ஓவரா வீடு கட்டிட்டேனோ?!
எஸ்கேப்பு...

இராம்/Raam said...

//என்ன பார்க்கறீங்க.. றோம் சொல்றேன்னா.. என் பின்னாடி பாருங்க //

நான் இருக்கேன் கெளதம்....

அருள் குமார் said...

பொன்ஸ், நல்ல விஷயம்தான்... ஆனா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு தப்பா யூஸ் பண்ணத்தான் தொணும். உதாரணத்துக்கு நானே உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடறேன். அதுல தெரிஞ்சோ தெரியாமலோ ஏதோ தப்பாவே எழுதிட்டேன்னு வைங்க. நான் சரியாத்தான் சொன்னேன் பொன்ஸ் அத எடிட் பண்ணி தப்பா ஆக்கிட்டாங்கன்னு உங்களையே குத்தம் சொல்லலாம் இல்லையா ;)

அருள் குமார் said...

கெளதம் சார்,
பாலாவை கலாய்க்க ஒரு சங்கம் ஆரம்பிச்சோம். அதுக்கு நிறையபேர் வந்தாங்க :) இந்த தொடரின் முதல் இரண்டு பதிவுகளைப் பாருங்க.

ஆமா... பாலாவை ப்ளாக் எஞ்சினியர் னு முதல் முதல்ல கலாய்ச்சது நீங்கதானே... இப்போ எங்க இப்படி சொல்றீங்க ;)

தகடூர் கோபி(Gopi) said...

//"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? "//

சேச்சே! இல்லீங்க.. ஒரு வலைப்பதிவர் அவர் பதிவுக்கு வந்த எந்தப் பின்னூட்டத்தை வேனா மாத்தலாம்.

மத்தவங்க பதிவுல இருக்க யாரோ ஒருத்தரோட பின்னூட்டத்தையெல்லாம் நாம மாத்த முடியாதுங்க.

தகடூர் கோபி(Gopi) said...

அப்றம் இந்த வித்தை புரியாதவுங்க இந்த Firefox - Grease Monkey - user scriptஐ நிறுவி இதே விஷயத்தை செய்யலாம்.

என்னது? Grease Monkeyன்னா என்னான்னு தெரியாதா?

பரவாயில்லை... இந்த பக்கத்துல இருக்கிற மாதிரி Templateஐ மாத்திக்கலாம்.

அதுவும் முடியாதா? அதே பக்கத்துல கீழே இருக்கிற பொட்டியில் BlogId and PostId குடுத்து "Edit Comment"ஐ தட்டுங்க போதும்.

G.Ragavan said...

ஆகா....இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்களே....வாத்தியாரம்மாதான் நீங்க. வாழ்க. வாழ்க.

இதெல்லாம் முயற்சி செஞ்சு பாக்குறேன்.

நாகை சிவா said...

//ஆமா... பாலாவை ப்ளாக் எஞ்சினியர் னு முதல் முதல்ல கலாய்ச்சது நீங்கதானே... இப்போ எங்க இப்படி சொல்றீங்க ;) //
அருள், எப்படி பார்த்தாலும் கெளதம் நம்ம ஆளுங்க. அவர் சரியா தான் சொல்லி இருக்கார் பாருங்க.

//உண்மையை உடைக்கும் சாக்கில்
எங்கள் அனுபவ இன்ஞினியர் பாலாவின் மூக்கையும் உடைக்க முயற்சிக்கும் புது இன்ஞினியர் பொன்ஸக்காவை வன்மையாகக் கண்டிக்கிறோம்!//
இன்னும் உடைக்காம முயன்று கொண்டே இருக்கும் பொன்ஸை அவர்(நாங்கள்) வன்மையாக கண்டிக்கிறோம். என்ன கெளதம் சரி தானே :)

Anonymous said...

த்ருமி சொன்னது:


//"இது மாதிரி யார் வேணா, யாரோட பின்னூட்டத்தை வேணா மாத்தலாமா? " என்றார் பாலா

"ஆமாம்.. மாத்தலாம்.." என்றேன்..// இப்படி பொன்ஸ் எழுதியிருந்ததைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டேன்.

//மத்தவங்க பதிவுல இருக்க யாரோ ஒருத்தரோட பின்னூட்டத்தையெல்லாம் நாம மாத்த முடியாதுங்க.// - இதப் படிச்சதும்தான் புரிஞ்சுது.

நாகை சிவா said...

//ஆகா....இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்களே....வாத்தியாரம்மாதான் நீங்க. வாழ்க. வாழ்க.//
இது செல்லாது
செல்லாது

துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந்திர வாத்தியாரம்மா

இந்த சதி வேலைக்கு நாங்க யாரும் துணை போக மாட்டோம்.

Anonymous said...

மாயவரத்தான் சொன்னது:

இவ்வளவு எல்லாம் கஷ்டப்பட வேண்டாமே... இங்கே போங்க.. ஈஸியா பின்னூட்டத்தை மாத்தலாம்...
http://blogger-templates.blogspot.com/2005/07/edit-comments.html

அருள் குமார் said...

//இன்னும் உடைக்காம முயன்று கொண்டே இருக்கும் பொன்ஸை//
அட..! ஆமாம் சிவா. நான் தான் தப்பா புரிஞ்சிகிடேன் :)

G Gowtham said...

அருள்,

//ஆமா... பாலாவை ப்ளாக் எஞ்சினியர் னு முதல் முதல்ல கலாய்ச்சது நீங்கதானே... இப்போ எங்க இப்படி சொல்றீங்க ;)//
மனமாஆஆர சொல்றேங்க.
போய்ய்யும் போய்யும் நான் போயி நம்ம பாஆஆஆலாஆஅவக் கலாஆஆய்ப்பனா.. நிஜம்ங்க அது. ட்ரூத் ட்ரூத். இப்பக்கூஊஊட பாலாஆஆதாங்க நம்மா ப்ளாக் இன்ஞினியரு! (இத நீங்க நடிகர் திலகம் பாணில படிக்கக்கூடாது ஆமா!)

தோள் கொடுத்த ராமுக்கு ஒரு 'ஓ!'

நாகை சிவா,
//அருள், எப்படி பார்த்தாலும் கெளதம் நம்ம ஆளுங்க. அவர் சரியா தான் சொல்லி இருக்கார் பாருங்க. //
கச்னு பிடிச்சிங்க பாயிண்ட்டை.
நம்ம பாலாவோட மூக்கு செம ஸ்ட்ராங்க்!

இராம்/Raam said...

//தோள் கொடுத்த ராமுக்கு ஒரு 'ஓ!'
//

என்னா கெளதம் நான் உங்களுக்கு இதக்கூட செய்யாட்டி எப்பிடிங்க....!

என்னா இன்னும் குதிரையை மாத்தாமே வெச்சிருக்கீங்க....? உங்க இஞ்சினியர்கிட்டே சொல்லி நல்ல குதிரையா பாருங்க.... சும்மா ஒரு இடத்திலே நிக்கமா ஓடிக்கிட்டே இருக்கு இது... ;-)

இயற்கை நேசி|Oruni said...

பொன்ஸூ,

ரொம்ப பிரோயோசனமாகவும், உடனே பயன்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுவிதமாகவும், விசயங்களை கொடுத்து வருகிறீர்கள். நன்றி!

தெகா/நேசி/ஊரணி ;-)

நாகை சிவா said...

//குதிரையா பாருங்க.... சும்மா ஒரு இடத்திலே நிக்கமா ஓடிக்கிட்டே இருக்கு இது... ;-) //

குதிரைனு ஒன்னு இருந்தால் அது ஒரு இடத்தில் சும்மா நிக்காம ஒடனும். புரியுதா?

////அருள், எப்படி பார்த்தாலும் கெளதம் நம்ம ஆளுங்க. அவர் சரியா தான் சொல்லி இருக்கார் பாருங்க. //
கச்னு பிடிச்சிங்க பாயிண்ட்டை.
நம்ம பாலாவோட மூக்கு செம ஸ்ட்ராங்க்! //

அடி மேல் அடி அடிச்சா.... அதே தான். :)

//அட..! ஆமாம் சிவா. நான் தான் தப்பா புரிஞ்சிகிடேன் :) //

பரவாயில்லை. இப்ப கப்புனு பிடிச்சிங்க பாருங்கள். அதான் மேட்டரு.

ALIF AHAMED said...

/./
ஒரு மரியாதைக்கு, வார்த்தைகள் எடிட் செய்யப் பட்டுள்ளது என்று எழுதுவது நல்லது. "
/./

என்னோட பின்னுட்டதில் இதுபோல் ஒரு முறை செய்திருந்தீர்கள்.

நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும். அது எடிட் செய்ய பட்டது..!!!!!!ரியலி :)))

- யெஸ்.பாலபாரதி said...

நான் இல்லா சமத்தில் இப்படி கிளம்புகிறாவர்களை... மென்மையாக கண்டிக்கிறேன்.
(எதிரணியின் கூட்டம் அதிகமாகிடுச்சு)
:-(

கிவியன் said...

ஆஹா, great men (and women also, இல்லன்ன டின் கட்டிர மாட்டீங்க) think alikeன்னு சொல்வாங்களே என்னோட சமீபத்திய பதிவுல இதபத்தித்தான் எழுதினேன். ஒரு வெள்ளோட்டமா துளசியோட பின்னூட்டத்த கொஞ்சம் மாத்தி பாத்தேன் நல்லா வேல செய்யுது ஆனா விஷயம் பழசு. ஏற்கனவே கோகுல் குமார் இத பத்தி எழுதியிருக்காரு.

ராசுக்குட்டி said...

மிக அருமை... எங்களைப் போன்ற புதியவர்கள் வேலையை மிக இலகுவாக்கி விட்டீர்கள். கொஞ்சம் கூட அசதி தராத நடை! வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

//எதிரணியின் கூட்டம் அதிகமாகிடுச்சு//
தல, பேசாமா நீங்களும் எங்க அணியிலேயே சேந்துடுங்களேன். என்ன... உங்களை நீங்களே கலாய்க்கவேண்டி வரும் ;)

துளசி கோபால் said...

நாகை சிவா,

//துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந்திர வாத்தியாரம்மா

இந்த சதி வேலைக்கு நாங்க யாரும் துணை போக மாட்டோம்.//

உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்? நன்றி நன்றி நன்றி.
ஆனா கணினியைப் பொறுத்தவரை இன்னும் நான் ஒண்ணாப்பு தாண்டலையேப்பா.
நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி( தகப்பன்சாமிக்குப் பெண்பால் எனக் கொள்க)
ஆயிருக்கு.

நல்லா இருக்கட்டும்.

Anonymous said...

அது சரிம்மா...

ஆனா..
1. லிங்க் கொடுக்கும் போது சிலர் பக்கத்தில் அதை க்ளிகினால்... தனியா 'ஜன்னல்' வருதே அது எப்படி?

2. பதிவுல படம் போடும் போது.. அசையும் படங்கள்(gif) அசையாமல்.. நிக்குதே.. அதை சரி பண்ண முடியாதா?

3. சைடுல லிங்க் போடுறது எப்படி?

இப்ப இது போதும்.. அப்பால.. வந்து கேட்கிறேன் மிச்சத்தை...

இராம்/Raam said...

//குதிரைனு ஒன்னு இருந்தால் அது ஒரு இடத்தில் சும்மா நிக்காம ஒடனும். புரியுதா?//

ஏலேய் புலி,

நான் எங்கெனே போனாலும் பின்னாடியே வந்து நொணநாட்டியம் பண்ணுறதுதான் உன்னோட வேலையா... எனக்கு தெரியாதா குதிரைன்னா ஓடாணுமா நிக்கனுமனின்னு.... நான் என்னா யானைன்னு சொல்லி அது ஓடலை...நிக்கலைன்னா சொன்னேன்....
:-))))

- யெஸ்.பாலபாரதி said...

ஆனா கணினியைப் பொறுத்தவரை இன்னும் நான் ஒண்ணாப்பு தாண்டலையேப்பா.
நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி( தகப்பன்சாமிக்குப் பெண்பால் எனக் கொள்க)ஆயிருக்கு.

இளம் வாத்தியாரம்ம பொன்ஸ் அக்கவுக்கு ஜே!
இந்த வாய்ப்பை விட்ட துளசியம்மா- வுக்கும் ஜே!

அருள் குமார் said...

//இளம் வாத்தியாரம்ம பொன்ஸ் அக்கவுக்கு ஜே!//

உங்களுக்கே அக்கான்னா, எப்படி இளம்..?????

பொன்ஸ்~~Poorna said...

//உங்களுக்கே அக்கான்னா, எப்படி இளம்..????? //
ஆகா.. கொஞ்சம் அமைதியா இருக்கலாம்னு பார்த்தா.. இப்படி ஆளாளுக்கு போட்டுத் தாக்கறீங்க?!!!

அருள், நம்ம ஆரம்பித்த சங்கத்தின் பெயர், "பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம்".. "பொன்ஸைக் கலாய்க்கும் சங்கம்"னு தப்பா நினைச்சிட்டீங்க போலிருக்கு :)

- யெஸ்.பாலபாரதி said...

என்ன நடக்குதுங்குறேன்... நான் இல்லைங்கிற தைரியத்துல... அருளை கட்டாயப்படுத்தி சங்கத்தில் சேர்க்கும் முயற்சியை வண்மையாக (நெசமாவே) கண்டிக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

கௌதம், ராம்,
பா.க.ச. சார்பாக எங்கள் கண்டனங்கள் ஜிபோஸ்டில் வருகின்றன. - இல்லை இல்லை.. ஜிபோஸ்டுக்கு அனுப்பப்படுகின்றன

//எங்கள மாதிரி ஆளுங்களுக்கு தப்பா யூஸ் பண்ணத்தான் தொணும்.//
அருள், எல்லாத்துலயும் தப்பும் சரியும் இருக்கு.. சொல்லும்போதே, இதன் தவறான பயன்பாட்டையும் சொல்லிவிட்டால், அப்புறம் கற்றுக் கொள்பவர்கள் பாடு.. அந்த வகையில் இந்தக் கிரிமினல் ஐடியாவையும் சொன்னதுக்கு நன்றி ;)

கோபி,
விளக்கங்களுக்கு நன்றிங்க :) கோயிந்து பொன்ஸ், ரெண்டு பேரும் கத்துகிட்டோம்.. அடிக்கடி இப்படி வந்து குட்டுங்க :)

நீங்க கொடுத்த மத்த வழிகளில்
//அதே பக்கத்துல கீழே இருக்கிற பொட்டியில் BlogId and PostId குடுத்து "Edit Comment"ஐ தட்டுங்க போதும். //
இது ஒன்று தான் எனக்கு சுலபமாக இருந்தது.. அதுக்குத் தனி நன்றி :)

//இதெல்லாம் முயற்சி செஞ்சு பாக்குறேன்//
போங்க ராகவன், உங்களுக்குத் தெரியாததா.. சும்மா கேலி பண்றீங்க :))

அருள் குமார் said...

இப்பவும் பாலாவைத்தாங்க கலாய்க்கறோம்...

அவரோட வயசுக்கு, உங்கள அக்கான்னு சொல்றது பொருத்தமா இல்லன்னுதானே அப்படி கேட்டேன்!

(இதுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்கணுமா?!!!)

அருள் குமார் said...

//அருளை கட்டாயப்படுத்தி சங்கத்தில் சேர்க்கும் முயற்சியை வண்மையாக (நெசமாவே) கண்டிக்கிறேன். //

என்னை யாரும் கட்டாயப்படுத்தி பா.க.ச வில் சேர்க்கவில்லை. நானாக விருப்பப்பட்டுத்தான் சேர்ந்தேன் என்பதை, என் சுய நினைவுடன் இங்கே பதிவு செய்கிறேன்!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி நாகை சிவா.. எந்தச் சங்கத்து வேலையா இருந்தாலும் திறம்படச் செய்யுறீங்க :))

தருமி.. ஹி ஹி.. கோயிந்து, பொன்ஸ் ரெண்டு பேர் சார்பாவும் :))

//துளசி அவர்கள் தான் வலை உலகின் ஒரே நிரந்திர வாத்தியாரம்மா//
ஆமாம் சிவா.. நானும் இதை வழி மொழிகிறேன்..

நன்றி மாயவரத்தான் :) உங்க சுட்டியைப் பதிவிலேயே சேர்த்துவிட்டேன்..

தெகா, மதுரா, என் கடன் பணி செய்து கிடப்பதே (கோயிந்து: பயங்கரமா டயலாக் வுடுது அம்மணீ):))

பொன்ஸ்~~Poorna said...

மின்னல், :)

கிவியன், //ஆனா விஷயம் பழசு//
கரெக்டு.. கோகுல் சொல்லி அதை மணி சொல்லி நான் படிச்சி.. அந்தக் கதையும் பதிவில் இருக்கு பாருங்க :)

ராசுக்குட்டி, பயனுள்ளதாக இருந்தால், நன்றி

துளசிக்கா..
//நம்ம பொன்ஸ் எனக்குத் தாய்ச்சாமி ஆயிருக்கு.//
ஆகா.. இதெல்லாம் என்னக்கா.. சும்மா எனக்குத் தெரிஞ்சதை எழுதுறேன்.. பயனுள்ளதாக இருந்தால் நல்லது தான் :)
//நல்லா இருக்கட்டும். //
வந்த புதுசுல சொன்னீங்க, இது இரண்டாவது ஆசிர்வாதம்.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் :))

கோயிந்து.. வரேன்.. வரேன்..

பாலா, நீங்க இன்னும் கிளம்பலியா?

அருள்.. கை கொடுங்க.. ரொம்ப நன்றி :))

ராசுக்குட்டி said...

பொன்ஸ் -> இரண்டு விஷயங்கள்!
1) கீழே இருக்ற யானை பிரமாதமா இருக்கு
2) காஸ் வார்ப்புருவிலிருந்து ஒண்ணு உருவினேன் மறுமொழி மட்டும் ஒழுங்காக வரவில்லை... நீங்களும் இதே பாதிப்புக்குள்ளானீர்களா? கொஞ்சம் உதவுங்களேன்!

ராசுக்குட்டி said...

hi pons,
Also can we name the html file blogger generates...sometimes it pads up some long numbers right

பொன்ஸ்~~Poorna said...

ராசுக்குட்டி, பிளாக்கர் உருவாக்கும் புது லிங்குக்கில் உங்களூக்குத் தேவையான வகையில் இருக்க வேண்டும் என்றால், தலைப்பில் ஏதேனும் ஆங்கில எழுத்துக்களோ, அல்லது நம்பர்களோ இருக்கவேண்டும்.. அவ்வளவுதான் :)

- யெஸ்.பாலபாரதி said...

//1. லிங்க் கொடுக்கும் போது சிலர் பக்கத்தில் அதை க்ளிகினால்... தனியா 'ஜன்னல்' வருதே அது எப்படி?

2. பதிவுல படம் போடும் போது.. அசையும் படங்கள்(gif) அசையாமல்.. நிக்குதே.. அதை சரி பண்ண முடியாதா?

3. சைடுல லிங்க் போடுறது எப்படி?
//

தலைவி.. கோயிந்து கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலியே...
அப்ப அப்ப வந்து தொல்லை தாரார்... வெடையை சொல்லிடுறது தானே..

dondu(#11168674346665545885) said...

"இப்போ தான் புரியுது, கொஞ்சம் சீனியர் பதிவர்கள் எல்லாம் ஏன் தன்னோட பின்னூட்டத்தைத் தனியாச் சேமிக்கிறாங்கன்னு!"

ஆஹா, நான் செய்வதற்கு இப்படி வேறு பலன்கள் உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna said...

//ஆஹா, நான் செய்வதற்கு இப்படி வேறு பலன்கள் உண்டா?
//
டோண்டு சார்,
சரியா பாருங்க, கோயிந்து "தனியா" சேமிக்கிறவங்களைச் சொல்றாரு!

"தனியா" சேமிப்பதற்கு உதாரணங்கள்:

1 2 3

நீங்க செய்வதற்கு என்ன காரணம்னு மறுமொழியிடப்பட்ட இடுகைகளைப் பார்த்தாலே தெரியுமே!