Tuesday, August 29, 2006

பூ மலரும் பொழுது



பூ மலரும்
பொழுதுகள்
விசேஷமானவை

தோரணங்கள்
வாத்தியங்கள்
அறிவிப்புகள்
இல்லாமல்

யாரும் பார்க்காத
சில நொடிகளில்
மலர்ந்து விடுகின்றன!

எடுத்துச்
சூட முடியாத போதும்
எல்லா பூக்களுமே
மலரும் பொழுது
அழகுதான்!


18 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்க எழுத்துல ஒரு பயங்கர ஸ்பார்க் இருக்கும் தொட்டா ஈர்த்துக்கற கரண்ட் மாதிரி இதில அந்த ஸ்பார்க் இல்லையோன்னு தோணுது, உங்களோட ஆரம்ப எழுத்தில இருந்தது இப்போ எல்லாம் குறைஞ்சா மாதிரி இருக்கு. உங்களோட ஆரம்ப எழுத்து care free ஆக இருந்தது அது போல இப்போ எழுதறதில்லையோன்னு தோணுது. தப்பா நினைச்சுக்காதீங்க தோணுறதை அப்படியே சொல்லீறது பழக்கம். தப்பா சொல்லீருந்தா மன்னிச்சுக்கோங்க ஹி ஹி...

ALIF AHAMED said...

ம் கலக்குங்க

யானை ஜடை நல்லா இருக்கு !!!!

நாமக்கல் சிபி said...

குமரன் எண்ணம் அவர்களை நானும் வழி மொழிகிறேன்.

அவசரப் பதிவோ?

கவிதை நன்றாக இருக்கிறது. கவிதையைவிட கவிதையின் படமும்.

நாமக்கல் சிபி said...

//யானை ஜடை நல்லா இருக்கு !!!!
//

கோபுரங்கள் சாய்வதில்லை!

ALIF AHAMED said...

/./
கோபுரங்கள் சாய்வதில்லை!
/./

மற்றும்
யானை(க்கும்)யும் அடி சருக்கும் :)

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன், சிபி,
பூ மலரும் பொழுதில் என்னங்க ஸ்பார்க்? அதிகம் காயப்படுத்தக் கூடாத உணர்வு இது.. :)

இந்தக் கவிதையை ரொம்ப கவனம் எடுத்து எழுதியது உண்மைதான்.. கேர்ஃப்ரீயா எழுத முடியலைங்க.. :(

//தப்பா சொல்லீருந்தா மன்னிச்சுக்கோங்க // மன்னிக்கிறதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை :)

மின்னல் :))))

Baby Pavan said...

அக்கா,

கவிதையும், படமும் நன்றாக இருக்கிறது.

Unknown said...

மலரும் மழலையும் ஒன்று தான்... மிகச் சரி.

ALIF AHAMED said...

பூ மலரும்
பொழுதுகள்
விசேஷமானவை
/./

மொட்டு மலர்வதை சொல்லுரீங்க தானே

தப்போ....???

ALIF AHAMED said...

யாரும் பார்க்காத
சில நொடிகளில்
மலர்ந்து விடுகின்றன!
/./

மலரும் பொழுது
அழகுதான்
/./

பாக்காத நேரம்னு மலருதுனு சொல்லுரிங்க

கிழே மலரும் பொழுது அழகுனு சொல்லுரீங்க

தப்போ .....???
(புரியல அதான்.:)

Porkodi (பொற்கொடி) said...

புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)

Anonymous said...

நக்கீரனாரின் நண்பன்/நண்பி மின்னல் வாழ்க!

G Gowtham said...

ரொம்பப் பெரிய விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
கவிதை அருமை!
யானைச்சடை அழகு!
ஆனால் அந்த வண்டியை நினைச்சாத்தான் கவ்லையா இருக்கு!!

ILA (a) இளா said...

கவிதயும், அதன் உவமைப்படமும் அழகு.

கண்ணிமைக்கும் நேரத்தில்
மலர்ந்து விடுகின்றன!

சூட முடியாவிடினும்
பூக்கள்
மலரும் பொழுது
அழகுதான்!

Anonymous said...

//
உண்மைதான்.. கேர்ஃப்ரீயா எழுத முடியலைங்க.. :(
//

அதான் தலைவர் அன்னிக்கே சொன்னாரில்ல
"தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டி ஒட்டாமல் இரு.
மாயா மாயா எல்லாம் மாயா."

அதான் திருவள்ளுவர் அன்னிக்கே சொன்னாரில்ல
"எண்ணித் துணிக கருமம். துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு".

கேர்ஃப்ரீயாத் தான் எழுதனும், பெறகு blog, internet எல்லாம் எதுக்கு யாருக்கோ பயந்துக்கிட்டு ஜால்ரா தட்டவா ?

தருமி said...

இந்தப் பக்கத்தில எனக்குப் பிடிச்சது யானையும் அதன் ஜடையும்தான்.

Anonymous said...

ஸ்பார்க், கரண்ட், யானை, பனை....என்ன சொல்லுங்க....ரொம்ப பாசமா....அக்காவ வாரரிங்க

வெற்றி said...

:))