"பட்ட காலிலேயே படும் "
- சென்னையின் இப்போதைய நிலையை வேறு எப்படிச் சொல்வது?
1, 2, 3, 4 : இவற்றைத் தொடர்ந்து நானும் சென்னைக்கு வரும் அறிவிப்பு.
எப்படியும் இப்போ இருக்கும் நிலையில் வந்து சேருவது கஷ்டம் என்று மகிழும் மக்களே, நான் பிரிட்டன் வழியாக வரவில்லை.. எனவே சீக்கிரமே வந்து சேர்ந்துவிட வாய்ப்புகள் உள்ளன.. எச்சரிக்கையாக இருக்கவும்.
பாபாவின் செய்தித் தொகுப்பைப் பார்த்தால், நல்ல adventurous ட்ரிப்பாக இருக்கும் போல் தோன்றுகிறது.. (வரும்போதே என்னை ஒரு மாதிரி பார்த்து, நாலு முறை சோதனை போட்டு அனுப்பினாங்க.. இப்போ சுத்தம் :)
28 comments:
எதுக்கு இந்த பில்டப்....
இது தேவையா, இது உனக்கு(ங்களு) தேவையா.
நமக்கு இது எல்லாம் எடுப்படுமா
நாகை சிவா சொல்வது :
ஆஹா ஊருக்கு வறீங்களா. வாங்க வாங்க
வாழ்த்துக்கள்
வாங்கக்கா வாங்க!
என்னடாது சில நாட்களா பெய்ஞ்சிட்டிருந்த மழை நிற்கப்போறது மாதிரி தெரியுதேனு பார்த்தேன்.
நீங்க வரப்போறீங்களா?! :-)
இ.கொ. சொன்னது:
அமெரிக்கா பட்டாசு ஆர்டர் குடுத்தாச்சாமே....
நல்பயண வாழ்த்துக்கள் பொன்ஸ்.
சென்று வா பொன்மகளே!
):):):):):):):):):):):):):):):):):)
அறிவிப்பைக் கண்டு அலறும் மக்களே!
தெரியாதா உங்களுக்கு அந்தப் பழமொழி?
இது வேறு ஒன்றுமல்ல!
"யானை வரும் பின்னே!
மணியோசை வரும் முன்னே!"
என்பதை நிரூபிக்கும் 'பொன்'மொழி!
:))
ரேவதி நரசிம்ஹன் சொன்னது:
பொன்ஸ் வரவு நல் வரவு. ஆல் த பெஸ்ட் fஅர் ஸ்மூத் சைலிங்
நாமக்கல் சிபி சொன்னது:
வலைப்பதிவு வாசகர்களின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். :)
பொன்ஸ். ஊருக்குப் போன பின்னாடி எப்படி உணர்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். அமெரிககா வந்தபின் முதன்முறையாக ஊருக்குப் போன போது எல்லாமே புதிதாகத் தோன்றியது எனக்கு - வண்டி வாகன நெரிசல், மக்கள் பேரம் பேசும் முறை, இப்படி நிறைய சொல்லலாம். கல்ச்சர் ஷாக் என்பது எனக்கு இங்கே வந்து முதன்முறையாக நம்ம ஊருக்குப் போன போது தான் வந்தது. நம்ம ஊர் எவ்வளவு வித்தியாசமானது என்று புரிந்தது. :-)
//ஒரே சோகச் செய்தியாகக் கொடுத்ததுக்கு இதோ இங்க ஒரு சின்ன ஆறுதல் செய்தி இருக்கிறது. //
அவங்க வலை பதிவை விட்டு போவது உங்களுக்கு ஆறுதல் தருகிறதா? அவங்களுக்கு என்ன பிரச்சனையோ என்னவோ if you mean it then its so sick of you.
பொன்ஸ் சொன்னது:
சந்தோஷ், அணில் குட்டி மாதிரி நானும் விளையாட்டாத் தான் போட்டிருந்தேன்.. உங்க பின்னூட்டம் பார்த்தா, இதுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருக்கு ரேஞ்சுக்கு யோசிக்கவைக்குது. இந்த வம்புக்கு நான் வரலை.. அந்த வரிகளை எடுத்துட்டேன்..
(அப்படியே, அந்தப் பதிவிலும் யாழிசை சொன்னதை வழி மொழிஞ்சிருக்கேன்.. பப்ளிஷ் ஆனதுக்கப்புறம், அங்கேயும் இதைச் சொல்லிடுங்க, மறக்காம)
இந்த விளையாட்டுக்கு நானும்:
அப்பா, புஷ்ஷினார் நிம்மதியாக புஸ் என்று மூச்சு விட்டார்.
அமெரிக்க பெரு மக்கள் சார்பாக (எப்படியும் அமெரிக்க கண்டம் தானே - கண்டம் விட்டு கண்டம் போறாங்க:-)....
ஹிஹி, வாய்ப்புக்கு நன்றி. (எங்க ஊட்டு புளியோதரை சாப்பிடாம போறீங்க, இருக்கட்டும். அம்பத்திரெண்டு பட்டி கிராமத்துக்கும் பேர் போனது).
வாம்மா பொன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... :)))
Happy Journy!
நம்ம ஊர்ல அமைச்சர்கள் எல்லாம் வருவாங்கன்னா எல்லா வண்டிகளையும் நிறுத்தி வைப்பாங்க. நீங்க வரீங்கன்னு தெரிஞ்சவுனே ஆகாய விமானத்தையெல்லாம் நிறுத்தி வெச்சாங்க. திரவ சமாச்சாரம் எதையும் கொண்டு வராதீங்க.
Bon Voyage.
dharumi சொன்னது:
(வரும்போதே என்னை ஒரு மாதிரி பார்த்து, நாலு முறை சோதனை போட்டு அனுப்பினாங்க//
அது என்னாங்க...உங்கள மாதிரி ஆளுகள ஒன்றுக்கு நாலு முறை...என்னப்போல ஆளுகள ஒண்ணுமே கண்டுக்கலை...எனக்கு முன்னும் பின்னும் வந்த ஆள்கள புரட்டிப் போட்டாங்க... ஒருவேளை 'அகத்தினழகு முகத்தில் தெரியும்' என்பாங்களே அது இதானோ ? :)
துளசி கோபால் சொன்னது:
கப்பல் படத்தோட ரகசியம் இப்பப் புரிஞ்சுபோச்சு. ஊருக்குக் கிளம்பியாச்சா? அதுக்குள்ளேயா மூணு/அஞ்சு மாசம் போயிருச்சு.
சரி. பத்திரமாப் போய்ச் சேருங்க. அங்கெ வந்து கண்டுக்கறேன்.
லதா சொன்னது:
// வரும்போதே என்னை ஒரு மாதிரி பார்த்து, நாலு முறை சோதனை போட்டு அனுப்பினாங்க //
ஏதோ யானை படம் / மஞ்சள் பை நினைவிற்கு வருகிறது :-)))
Dubaivaasi சொன்னது:
வாங்கன்னு நான் சொல்ல முடியாது.
நல்லபடியா போய்ச்சேருங்க!
நல்லவங்க எப்பவும் நல்லா இருப்பாங்க, எதுக்கு வீணா டென்ஷன். Wish you happy Journey.
வாரீங்களா? சென்னைக்கா? என்னைக்கு?
இந்த மாதக் கடைசீ வரை இங்க இருப்பேன். மிஞ்சிப் போனா கூட ஒரு வாரம் பத்து நாள். இருக்கும் போது வந்தீங்கன்னா...திரும்ப ஒரு லஞ்ச் மீட் போடுவோம். ஒங்க கம்பெனிலதான்.
பொன்ஸ்,
உறவுகளைப் பிரிந்து அமெரிக்காவில் தனிமையில் இருந்த போது பல அருமையான பதிவுகள்[கதை/கவிதை] தந்தீர்கள். தாய்மண் சென்றதும் சுற்றத்தாரின் அரவணைப்பில் தமிழ்மணம் வருவதை நிறுத்தாது பல பல அருமையான பதிவுகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தாய்மண் நோக்கிய தங்களின் பயணம் இன்பகரமானதாக அமைய வாழ்த்துகிறேன்.
Rishi சொன்னது:
வாங்க! வாங்க!
சென்னை இனிதெ உங்களை வரவேற்கிறது!!
சுதர்சன்.கோபால் சொன்னது:
ஓ...வாங்க...வாங்க...
perusu சொன்னது:
பொன்ஸ் அக்கா
பாத்தீங்களா,ஜெட் லேக்ஃ உங்களுக்கும் .
இன்னும் சிறிது நாட்களுக்கு அப்படித்தான் இருக்கும்.
TheKa சொன்னது:
அப்படின்னா, வீட்டுக்குப் போயி சேர்ந்தாச்சா?
ஜெட் லேக்ஃ போகலியா.
தூக்கம் வர்லேன்னா இந்தப்பக்கம் வந்துதானே ஆகணும்
குறும்பன் சொன்னது:
கப்பல் படத்திற்கு பதில் விமானத்தின் படம் போட்டிருக்கலாம். இல்ல விமானத்தில் போனாலும் கப்பல்ல போற நேரம் ஆகுதுங்கிறத சொல்லாமல் சொல்லரீங்களா?
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
பொன்ஸ் சொன்னது:
வந்தாச்சு வந்தாச்சு!!! :))
அமேரிக்காவுல என்ன வாங்குனீங்க ?
Post a Comment