ஆகஸ்ட் முதல் வாரம்: நட்பு வாரம்..
ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நண்பர்கள் தினம்..
ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நண்பர்கள் தினம்..
இந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்குவோர்..
- வீர மங்கை கவிதாவும், அவர்தம் கலங்காத் தோழி அனிதாவும்
- சங்கப் போர்வாள் தேவ்
- இணையத்தின் ஒன்லி ஒன் பத்திரிக்கை ரிப்போர்ட்டர் இட்டிவடை
- திடீர்ப் பின்னூட்ட ஜாம்பவான் கோவி கண்ணன்
- இணைய நண்புக்கு இலக்கியம் படைக்கும் சிறில் அலெக்ஸ்
- "உயிர்" நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும் ராசுக்குட்டி
- புதிய பதிவர் அனிதா
வேற யாராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க.. சேர்த்துடலாம் ;)
பி.கு: ஐம்பதாவது பதிவுக்கு ஏதாச்சும் போடணும்னு யோசிச்சிகிட்டே இருந்தேன். என்ன போடுறதுன்னு தெரியலை. அதான்!!
பதிவு போட விஷயம் இல்லைன்னா என்ன பண்ணுவோம்?!!!
கரெக்ட்.. படம் மாத்திடுவோம்ல..
கொட்டிய பொன்னைக்
கொண்டோடியது
யானை
ஓடிய கால்கள்
ஓய்வெடுக்க வந்தது..
ஆடியபடி..
என் பாய்மரம்..
(இப்படியே மிதந்துகிட்டே ஊருக்குப் போனா நல்லாத் தான் இருக்கும்.. எப்போ போய்ச் சேருறது!!!)
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
37 comments:
warum änderte u Ihr elephent
அட!
ஹால்ஃப் செஞ்சுரிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்!
இன்னிக்குதான் நம்ம தலை கைப்புள்ளை 100 அடிச்சிருக்கார்!
இன்னிக்குத்தான் சங்கம் 100வது நாள் கொண்டாடுகிறது!
ஆகஸ்டு ரொம்ப விஸேஷமான மாதம் தான் போல!
நண்பர்கள் தினத்திற்கும் என் வாழ்த்துக்கள்!
யானை
இருந்தாலும் "ஐம்பது" பொன்
பறந்தாலும் "ஐம்பது" பொன்
ஆக மொத்தம் 100 "பொன்ஸ்"!
நட்புடன்!
ஓசிப்பதிவுக்கு ஒரு ஓசிப் பின்னூட்டம்.
இப்போ வாழ்த்துக்கள் எனச் சொல்ல ஒரு பின்னூட்டம்.
வாழ்த்துக்கள்.
படங்கள் பற்றிய திறனாய்வு.
முதலில் நிறையா பொன் சேர்த்தீங்க.
அப்புறம் தூக்க முடியாம யானை மேல கொண்டு போனீங்க.
அப்போ கடல் வந்திடுச்சா. யானையை வித்துட்டு அந்த காசையும் சேர்த்து கப்பலில் கொண்டு போறீங்க.
புதரகத்தில் நல்ல வரும்படிதான் போல.
கடைசியா ஒரு சந்தேகம்.
இவ்வளவு நாள் யானை வருது யானை வருதுன்னு சொன்னதுக்குப் பதிலா இப்போ படகு வருதுன்னு சொல்லணுமா? கப்பல் வருதுன்னு சொல்லணுமா?
வாழ்த்துக்கள் 50 க்கு
படம் மாத்தி தனி பதிவு போட்டு இருக்கலாம்:))
//
கடைசியா ஒரு சந்தேகம்.
இவ்வளவு நாள் யானை வருது யானை வருதுன்னு சொன்னதுக்குப் பதிலா இப்போ படகு வருதுன்னு சொல்லணுமா? கப்பல் வருதுன்னு சொல்லணுமா?
//
ஐய்யயோ அப்ப படகு என் தலையில தான் லேன்ட் ஆகுமா ??
//ஐய்யயோ அப்ப படகு என் தலையில தான் லேன்ட் ஆகுமா ??//
மின்னலு.
படகு எங்கனா லேண்ட் ஆகுமா? சீ தான் ஆகும்.
ஹால்ப் செஞ்சுரிக்கு ஹாட்ஸ் ஆஃப்...
யானை கட்டி பதிவெழுதினது போக இப்போ கப்ப்ல் ஓட்டி எழுதுங்க..
//warum änderte u Ihr elephent //
இங்க வந்தும் இவரு இந்த விளையாட்டை விடலையா?
congrats!!!!
ஓசிப்பதிவுக்கு கிடைத்த பின்னூட்டங்கள்கூட ஒரிஜினல் பதிவுக்கு கிடைக்கவில்லை. இந்த பின்ன்னூட்ட கயமையை வன்மையாக கண்டிக்கிறேன்.
:)))
நண்பர்தின வாழ்த்துக்கள் தோழி.
வவா சங்கத்தில் பிளவு ! குவாட்டர் கோவிந்தன் துப்புகிறார்.
உலகம் ஆகஸ்டு 3. இந்த மாத வவா சங்க அட்லாஸ் வாலிபராக ஆப்பு வாங்கும் கொங்குராஸாவை பின்னூட்டமிட்டு பெரிய ஆளாக்க கூடாது என்றும் அப்படி செய்தால் தன்னால் தொடர்ந்து களப்பணியாற்ற முடியாதென்றும் இலவசகொத்தனார் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அதற்கு பயந்தே கொங்குராசா இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்தும் வயதான வாலிபரான போனமாத அட்லாஸ் வாலிபர் கொத்ஸுக்கு இன்னும் பின்னூட லஞ்சம் கொடுக்கப் படுகிரதாம். இத் தகவலை அறிந்த கொங்குராசா தனது ஆதரவை சங்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள விவசாய அணிகளிடம் ஆலோசித்து வருகிறாராம். அப்படி விலகும் போது தன்னோடே, இளா, கைப்பு, நாகை சிவா இன்னும் தனது ஆதரவாளர்களையும் அழைத்து புதிய வவா சங்கம் ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிராராம் அதனால் தான் தேர்தல் களப்பணி செலவாக இப்போது குவாட்டர் பதிவை நாசூக்காக தனது ஆதரவாளர்களிடம் சொல்கிரார். சங்கத்தில் பிளவி ஏற்படுவதை பொன்ஸ் விரும்பவில்லை என்றும் அப்படி பிரிந்தால் தான் தனிக் கட்சி ஆரம்பிக்கவும் இப்போதே முடிவெடுத்தே தனது சின்னமான யானை சின்னத்தில் இருந்து கப்பலுக்கு மாறிவிட்டாராம். சங்க உறுப்பினர்கள் இது குறித்து அச்சப் பட தேவையில்லை என போனமாத பின்னூட்ட நாயகர் சொல்லி விட்டாராம் . குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி
குவார்ட்டர்,
பேசாம தனி வலைப்பூ ஆரம்பிச்சி இந்த மாதிரி செய்திகளை எல்லாம் தனிப் பதிவாப் போட்டு சுட்டி தரலாமே.. இதுவே ஓசிப் பதிவு.. இதுல இத்தனை பெரிய பின்னூட்டமா?!!
//
யானை
இருந்தாலும் "ஐம்பது" பொன்
பறந்தாலும் "ஐம்பது" பொன்
//
யானை எங்கைய்யா பறக்க போவுது !!
ஓடி களைத்து படுத்து விட்டது..!!:)
என்ன பொன்ஸ். நீங்களும் பதிவுகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியாச்சா? :-)))) எண்ணிக்கையா முக்கியம்? எண்ணி எண்ணிப் போடும் அருமையானப் பதிவுகள் அல்லவா முக்கியம்? :-))))
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
நண்பர்கள் தினத்திற்கும் நட்பு வாரத்திற்கும் வாழ்த்துகள்.
//warum änderte u Ihr elephent //
குவார்ட்டரூ, el gran hombre! Este poste explica porqué se va el elefante
நூறுக்கு நாளிருக்கு எஸ்கே.. பார்க்கலாம் :)
//புதரகத்தில் நல்ல வரும்படிதான் போல// ஹி ஹி.. எப்படி வேணா கூப்பிடுங்க, இப்போ என்ன? ..
//படம் மாத்தி தனி பதிவு போட்டு இருக்கலாம்:)) // மின்னலு, விடு விடு.. என்ன இப்போ.. :)
//இந்த பின்ன்னூட்ட கயமையை வன்மையாக கண்டிக்கிறேன்.// சிறில், பின்னூட்டத்தையே எதிர்பார்க்கலை.. அதுல கயமை வேற வந்துடுச்சா!!!
// நீங்களும் பதிவுகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியாச்சா? // என்ன பண்ண குமரன்... நான் எண்ணாதே எண்ணாதேன்னு சொன்னாலும், ப்ளாக்கர் எண்ணுதே!!!
வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.. பர்சனலி என்னைப் பொறுத்தவரை, 50 எல்லாம் ஒரு நம்பரா என்ன?!! தல, தள, தேவ், எல்லாரும் 100 தாண்டி 150 நோக்கிப் போய்கிட்டிருக்காங்க.. நானெல்லாம் சும்மா.. :)
gracias a usted. e im apesadumbrado para mi español en su Blog
தோழி!
நண்பர்கள் வார வாழ்த்துக்கள்.
யானையை கப்பலால் ஓட்டிய
புதரக மாலுமி பொன்ஸ் அக்கா
வாழ்க ! வாழ்க.
50க்கு வாழ்த்துக்கள்!
(50 தானா?)
இங்கே பின்னூட்டமிட்டால் எல்லா ஒரிஜினல் பதிவுகளுக்கும் கூரியர் செய்து விடுவீர்களா ?
சுட்டப்பட்ட பதிவர்களுக்கும் இனி பதிவிட இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எல்லோருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்!
பொன்ஸ், 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,
என்னப்பா, வீர மங்கை அப்படி இப்படின்னு பட்டம் கொடுத்து இருக்கீங்க.. வீரத்தை சோதனை பண்ண யாராவது கிளம்பட போறாங்க..
இந்த பட்டத்தை பார்த்து, பாவம் சிவா தான் கொஞ்சம் அதிகமா பொறாமை படுவாரு..
Wishes for 50 :)
HAPPY FRIENDSHIP DAY !!!!
//
HAPPY FRIENDSHIP DAY !!!!
//
ஒரு வாரம இதையே சொன்னா அதுக்கு பேரு "HAPPY FRIENDSHIP WEEK" இல்லையா??
எனிவே நாஞ்சொல்லுறேன் "haappy friendship week" enjoy
எழுதிக்கொள்வது: வழிப்போக்கன்
வாழ்த்துக்கள்.
14.52 5.8.2006
எழுதிக்கொள்வது: fairy ( http://www.welcometamil.blogspot.com )
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - நன்றி
18.30 5.8.2006
எழுதிக்கொள்வது: கைப்புள்ள
ஐம்பதாம் பதிவுக்கு என் வாழ்த்துகள்.
14.51 5.8.2006
அம்பதுக்கு வாழ்த்துக்கள்.
அப்புறம்... ம்ஹூம்
எனக்கு யானைதான் பிடிச்சிருக்கு!
அதப் பார்த்துட்டுதான் நான் குதிரையேறினேன்.
சரி.. மாற்றம் மட்டும்தானே மாறாதது?!
எழுதிக்கொள்வது: Vasanthan
பரிசோதனை.
23.5 5.8.2006
பொன்ஸ், நண்பர் தின நல் வாழ்த்துக்கள்.
50 தானா எழுதீருக்கீங்க?
100, 200 பதிவுக்கான
விஷயம் அவைகளில் இருந்து இருக்கு.
கப்பலில் ஏறியதால் தாய்னாடு வரும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறென்.
போட்டொ பக்கெட்டை
எனக்கு சொன்ன அருமைத் தோழிக்கு ஆயிரம் நன்றி.
dharumi சொன்னது:
வாழ்த்துக்கள்
நாகை சிவா சொன்னது:
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
அரை சதத்துக்கும் வாழ்த்துக்கள்
Dubaivaasi சொன்னது:
இங்கே இருக்கா யானை போன காரணம்? அமேமேமேமேரிக்காவிலே இருந்து கப்பல்லே வரீங்களா? வந்து சேர்ந்தா மாதிரி தான்!
பொன்ஸ் உங்கள் யானையை கண்டு உள்ளே வந்தேன் அதற்குள் கப்பலில் ஏறி விட்டீர்கள். Congrats
ராசுக்குட்டி சொன்னது:
பொன்ஸ் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் - கொஞ்சம் தாமதம்...
யானையோ கப்பலோ நல்ல ரசனைதான் உங்களுக்கு
"உயிர்" நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும் ராசுக்குட்டி - குத்திப்புட்டிகளே :-(
Post a Comment