Monday, August 21, 2006

பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்

ப்ளாக் இஞ்ஜினியர் பாலாவிடமிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன் (தப்பியோட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றறிய இங்கு பார்க்கவும்) . ஆனால், அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கோயிந்துவை வேறு காரியமாக வெளியில் அனுப்பிய பொறியாளர், அடுத்து என்னைக் குறிவைத்தார்.

"பொன்ஸ், உங்களுக்கு இந்த பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

"அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லையே பாலா! ரொம்ப சுலபம். நீங்க உங்க ப்ளாக்குக்குப் போங்க. பின்னுட்டப் பெட்டியில் ஒன்றும் தட்டச்சாமலே, உங்க பெயரையும், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அடியிலும், ஒரு குப்பைத் தொட்டி தெரியும் பாருங்க. அதைத் தட்டினா, "பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கவா? , இல்லை அடையாளத்தை விட்டுவைக்கவா?" ன்னு கேட்கும். பதில் சொல்லி அழிங்க.. அவ்வளவு தானே" என்றேன்.

"ஏம்மணி, என்னன்னவோ செய்யுறோம், இது தெரியாதா எனக்கு? உங்க பக்கத்துல இருக்கிற பின்னூட்டத்த அழிங்க, அழிக்காதீங்க. என்ன வேணா செய்யுங்க. அடுத்தவன் பக்கத்துல இருக்கும் உங்க பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"

நான் ஒரு நிமிடம் பயந்து போனேன். பாலா நிஜமாவே பெரிய பொறியாளர் தானோ? நான் தான் தப்பா நினைத்திருக்கேனோ.?!!

"எப்படி பாலா செய்வீங்க?" இதைக் கேட்ட போது என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அது சொல்றேன். அதுக்கு முந்தி, பின்னூட்டத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் நல்லா டார்க்கா போடுறீங்களே எப்படி? அதைச் சொல்லுங்க. இதைச் சொல்றேன்" என்றார்.

"சரி, பின்னூட்டத்தில் டைப் பண்ணும் போது, அங்கயும் சில டேக்(tag) இருக்கு. கொஞ்சம் தான்:இப்போ பின்னூட்டத்தில் பொன்ஸ் - இந்த வார்த்தையைத் தனிச்சுக் காட்டணும்னு வைங்க. இதுக்கு முன்னும் பின்னும்


போடணும். இப்படி:

இப்படிப் போட்டா, இது நல்லா தடியா, தனிச்சுத் தெரியும்..

அடுத்து இந்த வார்த்தைக்கு ஒரு லிங்க் கொடுக்கணும்.. பொன்ஸ் -> இதுக்கு லிங்க்: http://poonspakkangkal.blogspot.com

அப்போ டேக் பயன்படுத்தி இப்படி எழுதணும்:அப்புறம், ஒரு வார்த்தையைச் சாய்வெழுத்தா எழுதவேணும்னா, பொன்ஸ் இப்படி வரணும்னா, i tag பயன்படுத்தணும்.. இப்படி:


அவ்வளவு தான்.. புரிஞ்சிதா?"

"ஆமாம்.. பெரிய, ராக்கெட் டெக்னாலஜி!! இல்ல, அவ்வளவு பெரிய விஷயம் சொல்லித் தரப் போறேனே, அது உங்களுக்குப் புரியுமான்னு பார்த்தேன். பரவாயில்லை முதல் அடியில் தேறிட்டீங்க..

இன்னும் ஒண்ணு சொல்லுங்க.. நம்ம சரவணன் கேட்கிறாரு, மத்தவங்க அனுப்பும் பின்னூட்டத்தை, பப்ளிஷ் செய்த பிறகோ முன்னாலோ, அதன் வார்த்தைகளை மாற்ற முடியுமா?"

பாலாவின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் கோயிந்து,

"காப்பி வாங்க போனேன், டீ வாங்கி வந்தேன்" என்று பாடிக் கொண்டே வந்தான்.. அவன் கொண்டு வந்த டீயைக் குடித்து விட்டு நான் சொன்ன பதில் நாளை..

[குறிப்பு: இந்தப் பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் ஏதேனும் ஒரு டேக்கை முயற்சிக்கலாம்.. வசதியாக இருக்கும் ;) ]

தொடரும்

22 comments:

S. அருள் குமார் said...

//பாலா நிஜமாவே பெரிய பொறியாளர் தானோ? //
பொன்ஸ்... இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?! நீங்கள் வார்த்தைகளுக்கு லிங்க் கொடுக்கத்தான் தெரிந்து வைத்திருக்கிறீகள். அவருக்கு படங்களுக்கெல்லாம் லிங்க் கொடுக்கத்தெரியும்னு தெரிஞ்சா என்ன ஆவீங்களோ?!

Dharumi said...

dharumi சொன்னது:

அதானே பார்த்தேன் எதுக்கு இந்த பொன்ஸ்அடைப்புக்குறிக்குள் எழுத்துக்களைக் கொடுத்திருக்காங்கன்னு. அது சரி underline செய்ய என்ன tag?

S. அருள் குமார் said...

//அவருக்கு படங்களுக்கெல்லாம் லிங்க் கொடுக்கத்தெரியும்னு தெரிஞ்சா என்ன ஆவீங்களோ?!//
அடுத்த பகுதியில, எப்படியாச்சும் இத எப்படி பண்றதுன்னு பாலா கிட்ட கேட்டு மக்களுக்கும் சொல்லிடுங்க பொன்ஸ்.

Madura said...

பொன்ஸ் நல்ல ஐடியா - கலாய்ச்சலோட ஜாலியாய் போகுது படிப்பதற்கு! இன்டெரெஸ்டிங்க் பாயிண்டுல தொடரும்னு போட்டு தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே! :) வந்து வந்து பாக்குறேன், அடுத்த பதிவுக்கு ....

SK said...

பத்திரமாய் சேமித்து வைக்க வேண்டிய உருப்படியான பதிவு!

அம்மாடியோவ்! ஆத்தா வரம் கொடுக்கறதுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டியதாப் போச்சு!

இப்பவாவது <'b'>.பொன்னாத்தா<'b'> கண்ணைத் தொறந்துச்சே!

:)

ட்ரை பண்ணிட்டு வர்றேன்!

Anonymous said...

த்ருமி சொன்னது:

என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டதாக ஒரு மயில் உங்களிடமிருந்து வந்தது. இங்கே வந்து பார்த்தால் பதிலேதும் இல்லையே!
என் கேள்விக்கென்ன பதில்...?
அதோடு இங்க ஒரு மெடல் ஒண்ணு சைடுல இருக்கே...அமெரிக்காவுல யாரும் உங்களுக்கு தங்கப் பதக்கம் கிதக்கம் கொடுத்தாய்ங்களா?

Anonymous said...

மா சிவகுமார சொன்னது:

பொன்ஸ்,

நல்ல தொடர். பாலாவின் தலையைச் சும்மா உருட்டுகிறீர்களா, அவரும் சேர்ந்து எழுதுகிறாரா :-). கோயிந்தை இவ்வளவு ஓரம் கட்டாமல் அவரது ஞானத்தை அதிகமாகத் தரவும்.

அன்புடன்,

மா சிவகுமார்

உங்கள் நண்பன் said...

ரெம்ப
நன்றி
பொன்ஸ் அக்கா


அன்புடன்...
சரவணன்.

திரு said...

நன்றி பொன்ஸ் ஹி ஹி! நானும் கத்துகிட்டேனா?
தொடர்ந்து எளிய முறையில் HTML Code சொல்லித்தரப்படும்னு சொல்லி தொடருங்களேன். :)

மணியன் said...

பொன்ஸ், அருமையான ட்யுடோரியல் (வழிகாட்டிப் பாடங்கள் என்று மொழிபெயர்க்கலாமா?). தொடருங்கள்!

என்ன பதக்கம் வாங்கியுள்ளீர்கள் ? சுடோகோ விலா ?

மின்னுது மின்னல் said...

நன்றி பொன்ஸ்

கேள்வி

< 'a' href="http://kalaaythal.blogspot.com/2006/08/011.html">
இந்த < /a >
தாயத்தை கட்டுனா நான் வரகூடாதா???

சும்மா டெஸ்டிங்க் :::::)))

Udhayakumar said...

உதயகுமார் சொன்னது:

தாயத்து கொஞ்சம் சின்னதாக்கூட இருக்கலாம் தப்பில்லை :-0

எங்க அக்காவுக்கு இன்டெர்நெட் கிளாஸ் எடுக்க எடுத்த வைத்த குறிப்புகள் இன்னமும் தூங்கிட்டு இருக்கு.

தருமி < 'u' > < '/u' > tag அடிக்கோடிட உதவும். ஆனால் பின்னூட்டப் பெட்டியில் வேலை செய்யாது.

Anonymous said...

துளசி கோபால் சொன்னது:

போன பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லி(கொடுத்த) கோயிந்துக்கு
துளசியக்காவின் நன்றி.

G Gowtham said...

புது ப்ளாக் இன்ஞினியர் பொன்ஸை இப்படி உபயோகமாக எழுதவைத்த நம்ம அனுபவ இன்ஞினியர் பாலாவுக்கு தேங்க்ஸ்!!
கோயிந்துக்கும்!!!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//புது ப்ளாக் இன்ஞினியர் பொன்ஸை இப்படி உபயோகமாக எழுதவைத்த நம்ம அனுபவ இன்ஞினியர் பாலாவுக்கு தேங்க்ஸ்!!
கோயிந்துக்கும்!!!//

ஆஹா... இப்படி எல்லோரும் ஒரே அணியில சேர்ந்துட்டா.. என் நிலை என்ன ஆகும்.. :(

பொன்ஸ்~~Poorna said...

//அடுத்த பகுதியில, எப்படியாச்சும் இத எப்படி பண்றதுன்னு பாலா கிட்ட கேட்டு மக்களுக்கும் சொல்லிடுங்க பொன்ஸ். //
பார்க்கலாம் அருள்.. பாலா பிடி கொடுக்க மாட்டேங்கிறாரு.. :))

//அது சரி underline செய்ய என்ன tag? //
:( பின்னூட்டத்தில் அதெல்லாம் செய்ய முடியாது தருமி :(
//என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டதாக ஒரு மயில் உங்களிடமிருந்து வந்தது//
- இல்லையே.. மெயிலிலும் அதர் ஆப்ஷனா? ;)


மதுரா, சரவணன்.. :))

எஸ்.கே, மின்னல், ரெண்டு பேரும் வீட்டுப் பாடம் சரியா செய்யலை.. இன்னும் ஒரு முயற்சி தேவை.. இந்த quote (' ')ஐயும் நீக்கி விட்டுப் போடவும்.. மின்னல், நீங்க ஸ்பேஸையும் தூக்கணும்..

//பாலாவின் தலையைச் சும்மா உருட்டுகிறீர்களா//
- சிவகுமார், பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் சார்பாக, உங்களுக்கான பதில் ஒத்தி வைக்கப்படுகிறது ;)

//தொடர்ந்து எளிய முறையில் HTML Code சொல்லித்தரப்படும்னு சொல்லி தொடருங்களேன். :) //
திரு, நன்றி, முயற்சிக்கிறேன்..

//என்ன பதக்கம் வாங்கியுள்ளீர்கள் ?//
மணியன்,
அது ஒரு பெரிய கதை.. இங்க பாருங்க.. , அதோட,
இந்த
சீரீஸின் பழைய பதிவையும் பாருங்க.. இந்தத் தொடர் எழுத ஆரம்பித்தது, உங்களையும் மனதில் வைத்து தான்.. :)

உதய், //தாயத்து கொஞ்சம் சின்னதாக்கூட இருக்கலாம் தப்பில்லை :-//
தாய்த்தை எடுத்துட்டேன்.. ஒரு நாளைக்குத் தான் ப்ரீவேர்.. ;)

துளசிக்கா, இன்னும் வருது .. பாருங்க :)

Anonymous said...

//
"ஏம்மணி, என்னன்னவோ செய்யுறோம், இது தெரியாதா எனக்கு? உங்க பக்கத்துல இருக்கிற பின்னூட்டத்த அழிங்க, அழிக்காதீங்க. என்ன வேணா செய்யுங்க. அடுத்தவன் பக்கத்துல இருக்கும் உங்க பின்னூட்டத்தை மொத்தமா அழிக்கத் தெரியுமா?"
//

இதுக்கும் அதே முறை தான். bloggerல லாக் இன் பண்ணிட்டு அடுத்தவுங்க பதிவுக்குப் போனா, நம்ம பின்னூட்டத்துக்கு கீழே டெலிட் பட்டன் வரும்.

இதுக்கு பதில் சொல்லுங்க. அடுத்தவன் பதிவுல மத்தவன் பின்னூட்டத்த அழிப்பது எப்படி ?
ஹே ஹே.

Anonymous said...

துளசி கோபால் சொன்னது:

வாம்மா என் ராசாத்தி.
வந்து இதையெல்லாம் எனக்குக் கொஞ்சம் சொல்லிக்கொடு தாயி.
எத்தனை நாளைக்குத்தான் இப்படி கணினி கை நாட்டாவே இருக்கறது?

S. அருள் குமார் said...

அனானி,
//இதுக்கும் அதே முறை தான். bloggerல லாக் இன் பண்ணிட்டு அடுத்தவுங்க பதிவுக்குப் போனா, நம்ம பின்னூட்டத்துக்கு கீழே டெலிட் பட்டன் வரும்.//
இப்படி டெலிட் பண்ணாலும் நம்ம பேர் அங்க வரும். நம்ம பின்னூட்டத்த அங்க டெலிட் பண்ணியிருக்கோம்னு மத்தவங்களுக்குத் தெரியும். அந்த சுவடே இல்லாமல் அழிப்பது எப்படி என்பதுதான் எங்கள் கேள்வி!

//இதுக்கு பதில் சொல்லுங்க. அடுத்தவன் பதிவுல மத்தவன் பின்னூட்டத்த அழிப்பது எப்படி ?
// அடடா... இதுவல்லவா கேள்வி. எனக்கும் இதே டவுட் இருக்கு பொன்ஸ் :)

பொன்ஸ்~~Poorna said...

//அடடா... இதுவல்லவா கேள்வி. எனக்கும் இதே டவுட் இருக்கு பொன்ஸ் :)//
அருள், பாஸ்வோர்ட் ஹேக்கிங் தான் செய்யணும்.. சைபர் க்ரைமில் மாட்டி விட்டுருவீங்க போலிருக்கு:))

//பொன்ஸை இப்படி உபயோகமாக எழுதவைத்த //
ஆகா.. உள்குத்து.. உள்குத்து.. பாலா, கௌதமையும் மாத்தியாச்சா?!!

கோபி(Gopi) said...

//அது சரி underline செய்ய என்ன tag?//

அன்டர்லைன் அதாவது <'a' href="#"><'/a'> இதே பக்கத்துக்கு லிங்க் கொடுக்கற குறுக்கு வழியில அன்டர்லைன் வரும்.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

கொஞ்ச நாள் நான் அஞ்சாத வாசம் போய்ட்டேன் அதுகுள்ள ஒரு முதியோர் கணினி கல்வி ஆராம்பிச்சாச்சா? சரி நானும் முதியோஒர் வேஷம் கட்டி படிக்க வரேன்.(தங்கமான பாடம் சார் தமிழ் நாடே சொல்லுதுது!)