பாலபாரதியிடமாவது விசாரிக்கலாம் என்றால், எப்போது பார்த்தாலும் அவரது தொலைபேசி பிஸியாகவே இருந்தது. காரணம் என்னவென்பதை சமீபத்திய வரவணையான் பதிவைப் பார்த்துத் தான் நானும் தெரிந்து கொண்டேன்... 'சரி, இது வேலைக்காவாது' என்று நேரடியாக நேற்று கிளம்பி கோயிந்துவைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.
நான் போனபோது கோயிந்து கணினியைப் பார்த்தபடி என்னவோ ரொம்ப தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
"என்ன கோயிந்து, வலைபதிவர் சந்திப்புக்குக் கூட வராம அப்படி என்ன வேலை உனக்கு?" என்றேன்.
"அது வந்து பொன்ஸூ, புது டெக்னாலஜி கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிகிட்டிருக்கேன்.. எஞ்ஜினியர் சொல்லி இருப்பாரே.. "
"ஒண்ணும் சொல்லலியே.. என்ன டெக்னாலஜி அது?"
"இப்போ உன்னோட ரொம்பப் பழைய பதிவெல்லாம் இருக்கில்ல.. அதை
அன்னிக்கி தேதிக்கி பார்க்காம தவறவிட்ட ஆட்கள் இருப்பாங்கல்ல.. அவங்களுக்குக் காட்டணும்னு ஆசப் பட்டன்னு வை.. எப்படி பண்ணுவ?"
"அதான் இப்போ அந்நியலோகத்தின் featured post எல்லாம் இருக்கே.. அதில்
வந்துடுமே.."
"ஆமாம்.. ஆனா அதுல உனக்குத் தேவையான பதிவு வருமா? அந்நியலோகம் பூவா தலையா போட்டு தேர்ந்தெடுத்துக் காட்டுறது தானே!"
"அதுவும் சரிதான்.. அதுனால?"
"அதுக்குத் தான் ஏற்கனவே இருக்கிற பதிவ மக்கள் பார்க்க, திரும்பி பழைய
பதிவ எடுத்து மொத்தமா திருப்பி போடணும்னு தல சொல்லிகினாரு.. அதச் செய்ய புது டெக்னாலஜி கண்டுபிடிச்சிகிட்டிருந்தேன்.. அந்த கேப்ல வலைபதிவர் சந்திப்பு முடிஞ்சிடுச்சு."
"ஆமாம் கோயிந்து, அதுக்கு ஏன் இத்தனை கஷ்டப்படுறே? பேசாம ஒரு
மீள்பதிவு போட்டுற வேண்டியது தானே.. "
"மீள்பதிவா? ஐ.. இதப் பார்றா.. பேரெல்லாம் ஷோக்காத் தான் சொல்ற
பொன்ஸு.. எப்படிப் போடுவ மீள்பதிவு? "
"அட ரொம்ப சுலபம்பா.. உன்னோட பழைய பதிவை எடு. அதை எடிட் மோடில் திறந்துக்க. இப்போ இதுல கீழ ஒரு ஆப்ஷன் இருக்கு பாரு:
Post and Comment Options: அப்டீன்னு
அதைத் திறக்கணும்(அம்புக்குறி மாதிரி இருப்பதைக் க்ளிக் செய்யவும்).. அதுல பதிவுக்கு நேரம் இருக்கும்.
பதிவோட நேரத்தைத் தற்போதைய நேரமாகவோ, இல்லைன்னா,
உன்னுடைய சமீபத்திய பதிவின் நேரத்தை விட அதிக நேரமாகவோ ஆக்கிட்டு, அதை திருப்பி பப்ளிஷ் பண்ணனும்.
உதாரணத்துக்கு உங்காளு இப்போ சமீபத்துல ஒரு மீள்பதிவு போட்டார் இல்லையா.. அந்த அருணா பொண்ணு பத்தி.. அதை முதல் முதல் போட்டது -பிப்ரவரி 08, 2006 தேதி. அந்தப் பதிவை எடுத்துப் பார்த்தால், கீழே அந்தத் தேதி இருக்கும். அதுல அந்தத் தேதியை மாத்தி இன்னிக்கி தேதி வச்சிட்டு பப்ளிஷ் பண்ணியிருந்தார்னா, அந்தப் பதிவு புதுப் பதிவா ஆகி இருக்கும். இது தான் மீள்பதிவு"
"நீ சுளுவா சொல்லிக்கின.. இப்போ அப்படி எல்லாம் செஞ்சா பழைய பதிவு இருக்குமா? இருக்காதா?"
"பழைய பதிவு தான் புதுப் பதிவாகிடுச்சே.. அந்தத் தேதியில் இந்தப் பதிவு இருக்காது.. "
"அப்போ முத மொற போட்டப்போ நாலு பேர் பின்னூட்டம் போட்டிருப்பாங்க இல்ல? அந்த பின்னூட்டமெல்லாம் தொலஞ்சி பூடுமே.. அதை எல்லாம் என்ன மறந்துடச் சொல்றியா?"
"இல்ல கோயிந்து.. அந்தப் பின்னூட்டம் எல்லாம் உன்னோட புதுப் பதிவில
வந்திருக்கும். ஆக, புதுப் பதிவு வரும்போதே அந்தப் பின்னூட்டங்களோட
வரும்.. மக்கள் குழம்பாம இருக்க, மீள்பதிவுன்னு சொல்றது நல்லது.."
"சரி சரி.. ஏதாவது சொல்லச் சொன்னா போதுமே. பெரிய சாமியார் ரேஞ்சுக்கு
கடைசில நீதி சொல்லாம முடிக்கத் தெரியாதே உனக்கு.. மீள் பதிவுன்னு
எழுதுறாங்களாம்!! ரொம்பத் தான் படம் போடுறம்மணி.. சரி, இந்தப் படம்
போடுறதப் பத்தி சொல்றேன் சொல்றேன்னு சொல்லியே ஒரு மாசம் ஓட்டிட்டயே, அதுபத்தி சொல்லப் போறியா இல்லையா?"
"படம் போடுறது பத்தி என்ன?"
"பதிவுல படம் எப்படிப் போடுறது?"
"பதிவுல படம் போடுறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு, ப்ளாக்கரிலேயே
படத்தை ஏத்திட்டு, பதிவுல போடணும். இன்னும் ஒரு வழி, ப்ளாக்கர் அல்லாத வேற இடங்களில் படத்தை வலையேத்திட்டு, அதை லிங்க் எடுத்து ப்ளாக்கரில் கொடுத்திடணும்.."
"எங்க வலையேத்தலாம்னு சொல்ற?"
"இப்போ photobucket.com, flickr.com என்று பல்வேறு சைட் இருக்கே எதுக்குன்னு.. அதுல எதுலயாவது ஏத்திடவேண்டியது தான். இதெல்லாம் வேண்டாம்னா, இங்கே இன்னும் நிறைய படம் வழங்கி சேவைகளின் பெயர்கள் இருக்கு. இதில் படத்தை வலையேற்றும் போது உனக்கு ஒரு உரல் (லிங்க்) கிடைக்கும்."
"இந்த உரலை எங்க கொடுக்கணும்?"
"புதுப் பதிவு போடும்போது இதோ இந்த இடத்தில் இருக்கும் படம் மாதிரியான சின்ன பொத்தானைத் (ஐகான்) தட்டி அதுல கொடுக்க வேண்டியது தான்.. ரொம்ப சுலபம்.."
"ம்ம்.. ஆனா, சிலசமயம் இந்த ஐகானைத் தட்டி கொட்டிப் போட்டாலும் வராம இருக்கே, அப்போ என்ன செய்யுறது.. ?"
"இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் HTML தெரிஞ்சால், இதைச் செய்யலாம்.. படத்தை வலையேற்றிய பின், அதை எடுத்துப் பயன் படுத்த இந்த 'img' டேக்கை பயன்படுத்தலாம். கீழே இருக்கும் கோட் மொத்தமும் பயன்படுத்தி இந்தப் படத்தை உங்க பக்கத்தில் சேர்க்கலாம் :
இதில் படத்திற்கான உரலை மட்டும் மாற்ற வேண்டும்.. அவ்வளவு தான்.. ரொம்ப சுலபம்.. "
"அது சரி.. எனக்கென்னவோ இதை விட சுலபமான வழிமுறை இருக்குன்னு
தோணுது.. அம்மணி வழக்கம்போல தலையச் சுத்தி மூக்கைத் தொடுறீங்க..
இருக்கட்டும்.. யாராவது இன்னும் சுலபவழி சொல்லி அந்த மூக்கை உடைக்கிறாங்களா இல்லையான்னு பார்த்திடலாம்.. "
"சரி.. மத்த கேள்வியெல்லாம் ஒரு நாள் கேட்டியே, அதுக்கெல்லாம் பதில்
சொல்லவா?"
"ஆமாம்.. நீ ஒரு மாமாங்கம் கழிச்சி சொல்லுவ. அதுவரை எங்களுக்குத்
தெரியாதுன்னா நினைச்சிகிட்டிருக்க?"
"அப்போ தெரியுமா? நான் கிளம்பவா?"
"அட, இரு அம்மணி, எங்க தப்பிக்கிற? சொல்லு சொல்லு, நீ கத்துகிட்டு வந்தது சரியா இல்லையான்னு நான் செக் பண்ணனும் இல்ல?"
என் நிலைமையை நொந்து கொண்டு பதில் சொல்லத் தொடங்கினேன்..
[இந்தத் தொடரின் பழைய பகுதிகள் : 1 2 3 ]
பிற்சேர்க்கை: படம் போடுவதற்கு இன்னும் சுலபமான வழியை ரவி சொல்லி இருக்கிறார் இங்கே
10 comments:
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
நான் எழுதறதுக்கெல்லாம் மீள்பதிவு அவசியமா????
உங்க வார்ப்புரு சொதப்புதே... பழசே நல்லாத்தானே இருந்தது...
சிவஞானம்ஜி, என்னங்க புரியலை? ரொம்ப குழப்பமா இருக்கா என்ன?
உதய், அந்த வார்ப்புரு நிறைய பேருக்கு சரியா லோட் ஆகலைன்னு சொல்றாங்க.. அதான்.. இது என் மிகப் பழைய வார்ப்புரு..
ஐய் ! எனக்கும்கூட புரியுதே......
தாங்ஸ் கோயிந்து
உபயோகமான ஒரு விஷயத்தை மிக சுலபமாக புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள்.
அதற்கு நன்றி.
கோவிந்து சொல்வதை கேட்காதீர்கள். உபயோகமாக எல்லோருக்கும் புரியும்படி இன்னும் எழுதுங்கள்.
நன்றி
வரவணையான், ஜயராமன்,
பின்னூட்டங்களுக்கு நன்றி. வார்ப்புரு கோளாறால், சில பின்னூட்டங்கள் இந்தியன் வார்ப்புருவில் விழுந்துவிட்டன.
எடுத்து இங்கே இட்டுள்ளேன்.
உபயோகமான தகவல்கள்.. அழகான விதத்தில்...
நான் மீள்பதிவு போடத் திரும்பி வெட்டி ஒட்டிப் போட வேணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். தகவலுக்கு நன்றி.
கோவிந்துவை மிகவும் உபயோகமாக பயன்படுத்துகிறீர்கள்!
தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
புதியவர்கள் தேடும் விடைகள்
30. தமிழ் மணத்தில் குறிச்சொற்களை எப்படிப் பயன்படுத்துவது?
இதுக்கு இந்த பதில் போதுமா?(அங்கே இட்ட பின்னூட்டம் பதிவானதா இல்லையா என்றே தெரியாத பிளாக்கர் சொதப்பல்!)
http://valai.blogspirit.com/archive/2006/12/08/தமிழ்மணமும்-குறிச்சொற்களும்.html
Post a Comment