- அட அடுத்து அக்டோபர் மாதம் புதிர்களுக்கான விடைகள், மற்றும் விளக்கங்கள். இத்துடன் ஐயா ப்ளோரைப் புயல் அவர்கள் அளித்த வெண்பாக்களையும் இங்கே பதிக்கிறேன்..:
- 1. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?
முடியாது
2. அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?
அதிகபட்சம் - மூன்று
குறைந்த பட்சம் - ஒன்று
விளக்கம்:
படத்தில் உள்ள விவரத்தை வைத்து remainder- கள் 0- 6 வரை வரலாம். இதில் 0 என்றால், ஜனவரி ஒன்று என்ன கிழமையோ, அந்த மாதத்தின் 13 ஆம் தேதியும் இதே கிழமை தான். 1 என்றால் ஜனவரி 1 இல் இருந்து அடுத்த கிழமை. இப்படிப் பார்க்கும் போது, 0-6 வரை எல்லா எண்களும் ஒரு முறையாவது வந்து விடுகிறது. எனவே இதில் வெள்ளிக்கிழமை ஒரு முறையாவது வந்துவிடும். அதே போல் சாதா ஆண்டுகளில் 2 என்னும் எண்ணும், லீப் வருடங்களில் 6 என்னும் எண்ணும், மூன்று முறை வருகின்றன. இந்த வகையில் சாதா ஆண்டுகளில் ஜனவரி 1 புதன் கிழமையாக இருந்தால், 3 13-வெள்ளிகளும், லீப் வருடங்களில் ஜனவரி 1 சனிக் கிழமையாக இருந்தால், மூன்று 13-வெள்ளிகளும் சாத்தியம். எனவே குறைந்த பட்ச எண்ணிக்கை 1, அதிக பட்ச 13 வெள்ளிகளின் எண்ணிக்கை 3
பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
பதிலாக நிற்கும் பிரிந்து.
[XIII - X - முடியாது என்பதைக் குறிக்க, III - அதிகபட்சம் 3 வெள்ளிகள் என்பதைக் குறிக்கிறது.] - பெருக்குத் தொகை 36 வர வேண்டுமெனில், அதன் factors (தமிழில்? :( )
1, 2, 18 = 36, 21
1, 3, 12 = 36, 16
1, 4, 9 = 36, 14
1, 6, 6 = 36, 13
2, 2, 9 = 36, 13
2, 3, 6 = 36, 12
3, 3, 4 = 36, 10
இதில் 13 என்பது பக்கத்து வீட்டு எண்ணாக இருந்தால் மட்டும் தான் குழப்பம் வரவாய்ப்பிருக்கிறது. இதில் முதல் மகள் பள்ளிக்குப் போவதால், மற்ற இரு மகள்கள் தான் இரட்டையர்களாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான விடை 2, 2, 9
விடை:
அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.
- இந்தத் தேதி ஒரு 3 எண்களின் பெருக்குத் தொகை. அத்துடன் நான்குவிதமான பெருக்கல்கள் மட்டுமே சாத்தியமான ஒரு எண்.
எனவே விடை 24. இதன் factors:
1, 2, 12
1, 3, 8
1, 4, 6
2, 2, 6 (இது ஆட்டைக்கு சேர்த்துக் கொள்ளப் பட மாட்டாது. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான மக்கள் இருந்தார்களே!)
2, 3, 4.
ராமு கேட்ட கேள்வி = ஒரு குழுவில் ஒரே ஒருவர் இருப்பது சாத்தியமா? என்பதாகும்.
இல்லை என்று சொன்னவுடன், பதிலான 2,3,4 என்பதைச் சொல்லிவிட்டார்.
சிவஞானம்ஜி, சிவகுமார், கத்திரிக்காய் ஆகியோர் சொன்ன 30உம் சரிதான்.
(factors:
1, 2, 15
1, 3, 10
1, 5, 6
2, 3, 5)
ஆனால், இந்த மாதம் என்ற சொல்லை இந்தப் புதிரில் சேர்த்ததே கடந்து போன தேதி என்பதைக் குறிக்கத் தான் :)
சரியா பதில் சொன்னவங்களுக்கு இதோ பரிசு, சர்வீஸ் போய் புதுப் பொலிவுடன் வந்த மான்குட்டியின் போட்டோ:
15 comments:
அட வெறும் போட்டோதானா
ஆகா, சிஜி, ஏதோ நம்மாலானது :) நான் என்ன தடாலடியாரா :)
//மற்ற இரு மகள்கள் தான் இரட்டையர்களாக இருக்க வேண்டும்//
இது அழுகுணி ஆட்டம்.
இரட்டையர்கள் என்ற விஷயத்தை சொல்லாதபோது 2,3,6 என்ற பதிலும் சரிதானே.
இல்லாவிடில் பக்கத்து வீட்டு எண் 13 என்று எப்படி ஊகித்துக்கொள்வது.
(முதல் கேள்வியில் 13 வந்ததால் இரண்டாவதிற்கும் 13 வரவேண்டும் என்றால் கடைசி கேள்விக்கு மட்டும் தேதி மாறியதன் நோக்கம் என்ன?)
பப்பியக்கா,
பின்னூட்ட ஆதரவுக்கு நன்றியெல்லாம் சொல்லிருக்கீங்க...
ஆனா நானும் உங்க புதிர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமின்னு பார்த்தேன். அப்புறத்தேன் யோசிச்சு பார்த்ததிலே வேணாமின்னு விட்டுட்டேன்.
ஹி ஹி ஒன்னுக்குகூட விடை தெரியலே அதான்.
எங்கள் பொன்ஸ் அக்கா அவர்களின் ஆட்டம் அழுகுணி ஆட்டம் என்று கூக்குரலிடும் ஆவி அம்மணியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
/அ.உ.பொ.ர.ம.கூ.ச//
இது என்னவோ பா.க.சவுக்குப் போட்டியாத் தொடங்கின மாதிரி இல்ல இருக்கு!
இங்க பாருங்க கண்ணுங்களா, என்ன சங்கம் வேணா அமைச்சிக்குங்க, எவ்வளவு பின்னூட்டம் வேணா போட்டுக்குங்க.. ஆனா உங்க லக்கி பிரதர் மாதிரி என்னால அனானிப் பதிவெல்லாம் போட முடியாது, இப்பமே சொல்லிட்டேன் :)
பதிவை யாருங்க கேட்டா! நீங்க உங்க பாட்டுக்கு பதிவைப் போடுங்க!
பின்னூட்டத்தை நாங்க பார்த்துக்கறோம்!
கால் கியர், கிக் ஸ்டார்ட்டர் என்றெல்லாம் சொல்லி என்னை கலங்கடிச்சியேம்மா..அந்த மான்குட்டியா இது? சரி சரி..இருக்கட்டும்..
பொன்ஸக்கா,
ஒரு சந்தேகம்...
இந்த நாய் குட்டி ஓடுக்கிட்டே இருக்கே... இதுக்கு கால் வலிக்காது ;)
இதான் மான்குட்டியா? அப்ப மான்வாஹனீன்னு ஒங்களக் கூப்பிடலாமா பொன்ஸ்?
பொன்ஸ்,
//அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.//
புரியவில்லையே! கொஞ்சம் புரியக்கூடிய மாதிரி விளக்கம் சொல்ல முடியுமா?
நன்றி.
வணக்கம் மேடம் நல்ல போட்டி.....மன்னிக்கனும்
சபாஷ் சரியானப்போட்டி.........நல்லாதான் இருக்கு ஆனா நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு நீங்க என்னடானா..........விற்காத பத்திரிக்கையில
என்னனவோ புதிர் போட்டி வைச்சி விற்க முயற்சி பண்ற மாதிரி ....சரி போங்க நம்ம சில விஷயங்களை தாங்கிகொள்ளதான் வேண்டும்..........
நிறைய அன்புடன்
வீரமணி
என்னங்க நடக்குது இங்க.
அட்ரஸ் மாறி வந்து விட்டேனா?
Naan kooda sariyana answer vechruken,... :D...Anaal ippo too late..
adhuvum parisu--PHOTO ...LOL!!Ungaluku periya manasu ponga.. ;)
Moolai romba use panra mare post potrukeenga... :D So naan apeetu...
PS: Nice blog.. love the running puppy...
பொன்ஸ்,
இந்த template நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் பழைய பதிவுகளையும் consider பண்ணுங்க. Readability கம்மியா இருக்கு ;(
Post a Comment