

தோள் மேலமர்ந்து
சாமி பார்த்த நாட்கள்..
என் தலை நோகாது
உன் கை நோகக்
குளிக்க வைத்த நாட்கள்..
ஒற்றைக் கையால்
குளத்தில் எறிந்து
நீந்த வைத்த நாட்கள்..
மகளென
மலர்ந்ததில்
இழந்தது
எத்தனை?!
மீண்டும்
மழலை திரும்ப
வேண்டும்,
உன் போர்வையில் புகுந்து
உள்ளங்கைகளில்
உறங்கும்
ஒரு நாளுக்காகவேனும்
நன்றி தமிழோவியம்

12 comments:
மறுமொழிச் சோதனை
!
//மகளென
மலர்ந்ததில்
இழந்தது
எத்தனை?!//
பொன்ஸ்,
அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை. ரொம்ப நல்லாருக்கு. பாராட்டுகள்.
நல்ல கவிதைங்க. வர வர உங்கள் எழுத்து மெருகேறிகிட்டே வருது. வாழ்த்துக்கள்.
பொன்ஸ்,
//தோள் மேலமர்ந்து
சாமி பார்த்த நாட்கள்..
என் தலை நோகாது
உன் கை நோகக்
குளிக்க வைத்த நாட்கள்..//
என்னைப் பாதித்த வரிகள் இவை. எனது தந்தையையும் என் குழந்தைப் பருவத்தையும் ஞாபகப்படுத்திய வரிகள்.
//மகளென
மலர்ந்ததில்
இழந்தது
எத்தனை?!//
அழகிய சிந்தனை.
அற்புதமான கவிதை.
தமியன், கைப்புள்ள, இளா, வெற்றி, நன்றி..
தமியன், கொஞ்சம் பழைய கவிதைகள் தான்.. படங்கள் தேடிப் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்..
பெரியவர்கள் ஆன எல்லோருக்கும் குழந்தை ஆகும் ஆசை இருக்கும்தான் ஆனால் அதற்கான நீங்கள் கூறும் காரணம் தந்தை பாசம்.அருமை பொன்ஸ்
கவிதையில் வரும் அப்பா போல் எனக்கு எப்போதோ பிறக்கப்போகும் மகளிடம் நடந்திட வேண்டும் என ஆசை எழுகிறது.நன்றி
படமும் தலைப்பும் அருமை
அன்பின் பொன்ஸ்,
உங்கள் கணினியின் தேதியை சரிபாருங்கள். உங்கள் பதிவில் செப்டம்பர் 11 என்று காட்டுகிறது.
அருமையான கவிதை!! நல்லாருக்குங்க பொன்ஸ்!!
பழயன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு. அதனால், வளர்தலும், சில வசதியை இழத்தலும் இயல்பே. மனதை நிரவுதல் மனதின் நிரடலை மறையச் செய்யும். மனிதன் ஆசையின் எல்லை தன்னை உணர்தல் அரிதே.
இது best of pons. நீர் நீர் கவிதை (*?!) worst of pons :)
Post a Comment