Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

வான் மறைக்கும் மேகக்கூட்டம்
விளக்கடிக்க நிலவுமில்லாத அமாவாசைகள்
சூரியனும் மறைந்து போகும் கிரகணங்கள்...

வானையும் துண்டாடத் தூண்டும் விமானத் தாக்குதல்கள்..

எல்லாம் தாங்கியபடி..


இன்னும் இருக்கிறது ஆகாயம்


[ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஈஈஈஈஸ்!! "கவிதை"ன்னு யாரும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ் :) ]

25 comments:

இராம் said...

பப்பியக்கா,

ஐ யம வெரி சாரி..... ஒரு - தான் போட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

ராம் தம்பி,
அட, இந்தப் பதிவே -க்குத் தான் போட்டேன் ;) இன்னும் ரெண்டு வேணாலும் குத்துங்க :)

ஆபீஸ்ல கடுப்பாய்டுச்சுன்னா இப்படி மொக்கை பதிவு போடுறது நம்ம பொழுது போக்கு :)

இராம் said...

//ராம் தம்பி,
அட, இந்தப் பதிவே -க்குத் தான் போட்டேன் ;)//

:-))))

// இன்னும் ரெண்டு வேணாலும் குத்துங்க :)//


உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
ன்னு சொல்லுது என்னா பண்ண நானு.... வேற ஏதானச்சிம் வழி இருக்கான்னு பார்க்கிறேன்.

//ஆபீஸ்ல கடுப்பாய்டுச்சுன்னா இப்படி மொக்கை பதிவு போடுறது நம்ம பொழுது போக்கு :) //

நானெல்லாம் போடுறதெல்லாமே மொக்கபதிவு தான்.....

குறும்பன் said...

கவித கவித.
படத்த விட கவித அற்புதம்

பினாத்தல் சுரேஷ் said...

சொல்ல மாட்டோம், பயப்படாதீங்க!

முத்து(தமிழினி) said...

நல்ல கவிதை

(கோவமா இருக்கமில்ல)

ஆவி அம்மணி said...

கவிதை சூப்பர்.

அட்டகாசம். கலக்கீட்டீங்க!

பாராட்டுக்கள்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கவித எழுதின பப்பியக்காவுக்கு ஓஓஓஓஓஓஓஓஓ
போடலாம்..
வாங்கப்பா வாங்க..

வெற்றி said...

பொன்ஸ்,
நல்ல அருமையான படங்கள். கவிதையும்(?) மிகவும் அருமை.

ILA(a)இளா said...

படமும், கவிதையும் அருமை. படத்துக்கு தகுந்தா மாதிரி கவிதை எழுதி இருக்கிறது அதைவிட அருமை. போட்டியில கலந்துக்காமயே கலக்குறீங்க. இததான் outstanding perfomer அப்படின்னு சொல்றதா?

Leo Suresh said...

[ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஈஈஈஈஸ்!! "கவிதை"ன்னு யாரும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ் :) ]
ச்சிச்சி அந்த மாதிரி அதிகபிரசங்கி வேலலாம் செய்யமாட்டோம்
லியோ சுரேஷ்
துபாய்

ராசுக்குட்டி said...

நல்ல அருமையான படங்கள்.
ஆனா ஆச்சரியம் பாருங்க எங்க ஊர்லயும் ஆகாயம் இப்படித்தான் இருக்கு
;
;
;
;
;
;
;
;
;
;
கடந்த ரெண்டு நாளா!

பொற்கொடி said...

கவித கவித படி!

காண்டீபன் said...

நல்ல கவிதை

பொன்ஸ்~~Poorna said...

ஆகா..

"பரிசுகள் கண்டிப்பாக வேண்டாம்"னு போட்ட அழைப்பிதழ் மாதிரி ஆய்டுச்சு!
இப்படி எல்லாரும் கவிதைன்னு சொல்லி என்னைக் கலாய்க்கிறதை, வன்மையா கண்டிக்கிறேன்..

இளா,//படமும், கவிதையும் அருமை. படத்துக்கு தகுந்தா மாதிரி கவிதை எழுதி இருக்கிறது அதைவிட அருமை. போட்டியில கலந்துக்காமயே கலக்குறீங்க. இததான் outstanding perfomer அப்படின்னு சொல்றதா?
// வரிக்கு வரி உள்குத்துன்னுவாங்க.. இது சொல்லுக்கு சொல் உள்குத்தா இருக்கு தலைவா!

ராசுக்குட்டி, எந்த ஊருங்க நீங்க ?

தம்பி said...

//ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஈஈஈஈஸ்!! "கவிதை"ன்னு யாரும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ் //

இதுவே கவுத மாதிரிதான் இருக்கு!

கவிதை அருமை!!

வைசா said...

நல்ல படங்கள். சென்னையிலா எடுத்தீங்க? 'கிறுக்கல்களும்' (கவிதைன்னு சொல்லக் கூடாதில்லையா) நன்றாக இருக்கின்றன.

வைசா

மா சிவகுமார் said...

பொன்ஸ் இதையெல்லாம் தாண்டி, இன்னும் பல நடந்தும் இன்னும் பல கோடி ஆண்டுகள் கழிந்தாலும் ஆகாயம் இருக்கத்தானே போகிறது. சிதம்பர ரகசியம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆகாயம் எங்கு இல்லை என்று சொல்லுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Vaa.Manikandan said...

என்ன எழுதுவது என்று தெரியவில்லை

:)

Samudra said...

//அட, இந்தப் பதிவே -க்குத் தான் போட்டேன் ;) இன்னும் ரெண்டு வேணாலும் குத்துங்க :)//

அடடா, பொன்ஸ் தெரியாம ஒரு + குத்திடேனே.

ப்ச்.அடுத்த பதிவுக்கு வேனா ஒரு - குத்திடலாமா?

நாமக்கல் சிபி said...

கார் முகில்கள் மேலே!
கார்களோ கீழே!

ஆஹா என்ன ஒரு கவிதை!

Johan-Paris said...

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல்!!
இத்தனைக்குப் பின்னும்!
இன்னும் இருக்குது ஆகாயம்!
படங்கள்; நன்று!
யோசிக்கிறீங்க!!நல்ல மாதிரி!
யோகன் பாரிஸ்

Madura said...

பொன்ஸ், சரின்னு தோணலைன்னா இதப் பப்ளிஷ் பண்ண வேண்டாம், ... கேக்காம இருக்க முடியல! :) ஆர்வம் பற பறக்குது மனசுல! என்ன படம் பாத்தீங்க, ஸைன்ட் சார்ல்ஸ் சினி 18 ல?! :) "அந்நியன்" பாத்தீங்களா (என்னோட!) இல்ல "புலிகேசி" பாத்தீங்களா? அப்பவே நினைச்சேன், அங்க இருக்கிற ஒண்ணு இரண்டு பேரு தமிழ்மணமா இருக்கலாமோன்னு - ஒண்ணு இரண்டு பேர் அங்க இன்னும் இருக்காங்க தான?! :) ... "ப்ரியா"ல ஏன் பக்கத்துல உக்காந்து பஃபே கூட சாப்பிட்டு இருக்கீங்களா?! :) இப்படியெல்லாம் தோணுச்சு ஃபோட்டோ பாத்தப்போ! நானும் அங்கில்ல இப்பம்!

பொன்ஸ்~~Poorna said...

கலக்குறீங்க மதுரா, இங்க இருந்தீங்களா! மிஸ் பண்ணிட்டேனே :(
ப்ரியால ஒரே ஒரு நாள் மதியம் சாப்பிடோம். யார் கண்டா, பக்கத்துல பக்கத்துல கூட இருந்திருக்கலாம்..

அந்நியன் காலத்தில் நான் அங்க இல்லவே இல்லை, இம்சை அரசன் போட்ட அன்னிக்கு வேற ஊருக்குப் போய்ட்டேன் :( இங்க பார்த்தது ஏதோ இங்கிலீஸ் படம்.. கார்ஸ் என்று நினைக்கிறேன்.

இன்னும் நண்பர்கள் நிறைய அங்க இருக்காங்க.. :)

கடைசி படம், மெரினா, மிச்சமெல்லாம் ஸெயின்ட் சார்லஸ் :)

deeps said...

கவிதையும் எழுதிட்டு கடைசில இதை கவிதைனு சொல்லாதீங்கனு போட்டிருப்பது நியாயமா அக்கா.