Friday, December 01, 2006

பாலபாரதியின் செல்போன்

பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

"இத்தோ.. பொன்ஸக்கா இங்கக் கீது சார்" கணினித் திரைக்குள் தலையை விட்டுக் கொண்டு கிட்டத்தட்ட அதன் ஒரு பாகமாகவே ஆகிவிட்ட என்னைக் கலைத்தது அந்தச் சத்தம். எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தேன். அட நம்ம கோயிந்து.

"வா கோயிந்து.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து.. எங்கே போயிருந்த?"

"நான் எங்கப் போனேன்னு மெய்யாலுமே உனக்குத் தெரியாது? உன் பதிவைத் தொறந்து பார்த்தாலே ஏதோ மும்மாரி சோமாறின்னு சொல்லுதே! "

"கோயிந்து, நீ எங்கிருந்து படிக்கிறேன்னு அது சொல்லும். ஆனா உனக்கு மட்டும் தான் சொல்லும், எனக்குச் சொல்லாது. சரியா?"

"அதுல தான் எனக்கும் சாருக்கும் ஒரு பெரிய டவுட்டு"

"இன்னாபா டவுட்டு? ச்சே.. என்ன சந்தேகம்?" என்றேன்.

"இப்படிப் பதிவத் தொறக்கும்போதே எங்கேர்ந்து பார்க்குறான்னு கண்டுகிற தில்லாலங்கடி வேலைய எப்படிச் செய்யறான்? அதக் கேட்கத் தான் வந்துகினோம் நானும் சாரும்."

"உங்க சார் வேற வந்திருக்காரா? எங்க காணோமே.."

"அது ஒன்னியும் இல்ல.. சார் தன்னோட செல்போன எங்கயோ வச்சிட்டாராம்.. தேடிப் பார்த்துகிட்டிருக்காரு.."

வெளியே எட்டிப் பார்த்தால் பாலபாரதி தன் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

"இல்லையே.. காதுல தானே வச்சிருக்காரு.."

"கிட்டப் போய் கேட்டுப் பாரும்மே.."

கொஞ்சம் அருகில் போய்க் காது கொடுத்துப் பார்த்தேன்.. "அருள், தல, என் செல்போனைக் காணோம்யா.. நீதான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் பாலபாரதி.

"நீ வா பொன்ஸு.. நம்ம வேலையப் பார்ப்போம். அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..

"சரி, கோயிந்து... நீ கேட்ட கேள்வி ரொம்ப சுலபம். உலகை ஒன்றாகச் சேர்க்கும் இணையம் இருக்கு இல்லையா? இது ஒரு நெட்வொர்க். இப்போ டெலிபோன் நெட்வொர்க் இருக்கே அது மாதிரி. இப்போ உன்னோட செல்போனையே எடுத்துக்குவோமே.. இதுல சிம்கார்ட் போட்டோம்னு வையி, உடனே உன்னைக் கூப்பிட முடியுமா? "

"அதெப்படி முடியும். ஆக்டிவேட் பண்ணுவாங்கல்ல?"

"அதே தான். அந்த தொலைதொடர்புச் சேவையைத் தருபவர்கள் ஆக்டிவேட் செய்தால் தான் உன்னால என்கிட்ட பேச முடியும். அதே மாதிரி தான் உன்னோட கணினிக்கு இணையத் தொடர்பும். இணையத்துக்குக்காக அகலப்பட்டை(broadband), தொலைபேசி வழிச் சேவை(dialup), கம்பியில்லாச் சேவை(wireless network)ன்னு எந்த மாதிரி சேவையில் இணையத்தில் தொடர்பு கொண்டாலும் உன்னோட கணினிக்கு ஒரு நம்பர் கொடுப்பாங்க. நம்ம போன் நம்பர் மாதிரி. இந்த நம்பரைத் தான் உன் கணினியின் ஐபி முகவரின்னு சொல்றோம். எந்த இணையச் சேவைமையத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளுறீங்க, என்ன முகவரி என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஐபி ட்ராக்கர் நிரலிகள் இருக்கு. இந்த நிரலிகளில் ஒன்றை எடுத்து உங்க பக்கத்தின் வார்ப்புருவில் சேர்த்தா, அவ்வளவு தான்!"

"ஓ.. அவ்வளவு தானா, இத்த வச்சி தான் அவனவன், கஸ்மாலம், நீ சென்னைல கீற, தில்லீல சுத்துறன்னு சொல்லிகிட்டிருக்கானா?! இத்தப் போய் பெரிசா நெனச்சு பயந்துகினேம்மா! சார்..! சார்..!!" கோயிந்து பாலபாரதியை அழைத்துக் கொண்டே வாசற்பக்கம் போகவும் என் செல்பேசி சத்தமிடவும் சரியாக இருந்தது.

போன் செய்தது வரவணை. "ஏங்க பொன்ஸ், எங்க மாம்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுங்க.. கொஞ்சம் என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா?"

"என்ன? ஏது?"

"அடச்சே, விளையாடாதீங்க.. எனக்குப் போன் பண்ணி, போனைத் தொலைச்சிட்டேன், காணோம்னு ஒரே தொல்லை.. கொஞ்சம் அந்தக் காதுலேர்ந்து எடுத்துக் கையில கொடுக்கக் கூடாதா? ஒரு வேலையும் பார்க்க முடியலை!" என்றார் வரவணை. "இந்த நேரம் பார்த்து அவருக்குப் போன் செஞ்சது வேற பெரிய தப்பாப் போச்சு. சொந்த செலவில் சூன்யம்!"

"உங்களுக்கேவா? அது சரி, இப்போ எப்படி எனக்குப் போன் பண்ணீங்க?"

"இன்னோரு லைன்லேர்ந்து பேசிகிட்டிருக்கேன் பொன்ஸ்.,அந்தப் பக்கம் மாம்ஸ் இன்னும் குறுக்குக் கேள்வியாக் கேட்டுகிட்டிருக்காரு!. நீங்களும் இப்படிக் கேட்காதீங்க. அளுதுடுவேன்.."

"சரி கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்புவதற்குள், கோயிந்து திரும்பி வந்தான், பாலாவுடன்.

"என்ன பாலா? போன் கிடைச்சிதா?"

"இதோ இவன் தான் எடுத்து ஒளிச்சு வச்சிருந்தான்."

"என்னய்யா நடக்குது இங்க?" என்றேன் கோயிந்துவிடம்.

"நீ ஒன்னியும் கண்டுக்காத.. அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லு.."

"என்ன அடுத்து?"

"இப்போ எல்லாம் ரெண்டு வலைப்பதிவர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலே 'எனக்குப் பத்தாயிரம் ஹிட்ஸ்', 'எனக்கு முப்பதாயிரம் ஹிட்ஸ்'னு ஏதோ ஏலம் விடுறவன் மாதிர் கெளம்புறாங்களே, இதென்ன ஹிட்ஸ்?"

நான் பதில் சொல்வதற்குள் என்னுடைய வலப்பக்கத்திலிருந்து "நீ உருப்பட மாட்டே" என்று ஒரு குரல் வந்தது. குரலுக்குரிய திசையை நான் திரும்பிப் பார்க்கவும், அதற்கு நேர் எதிர் திசையிலிருந்து "நீ தான் உருப்பட மாட்டே" என்று பதில் வந்தது.

என்னடா என்று இந்தப் பக்கம் திரும்பவும், பாலபாரதி ஒரு வினோத காரியம் செய்தார். "உருப்படமாட்டேனா?, அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாளைக்குப் படையல் போட்ருவோம்" என்றார் காற்றைப் பார்த்தபடி.

"கோயிந்து, என்னய்யா ஆச்சு உங்க சாருக்கு? காத்துகிட்ட எல்லாம் பேசத் தொடங்கிட்டாரு?"

"அவரை வுடு பொன்சு.. அவரோட கொல சாமிங்க இப்படித் தான் அப்பப்போ அனானியா வந்து கொரல் கொடுப்பாங்க.. நீ சொல்லு!"

"சரி, இணையத்தில நிறைய கவுண்ட்டர்கள் கிடைக்குது. இப்போ உன்னோட பக்கத்தை யாராவது திறக்கறாங்கன்னு வை, அப்போ இந்தக் கவுண்ட்டர் என்ன பண்ணும், ஒரு முறை திறந்திருக்கு உங்க பக்கம்னு நினைவு வைச்சிக்கும். அடுத்த முறை வேற யாராவது எங்கிருந்தாவது திறந்தால், ரெண்டுன்னு கணக்கை அதிகப்படுத்திடும். இப்படியே உங்க பக்கத்தை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் இந்தக் கணக்கு அதிகமாகும்."

"இப்போ, நானே ரெண்டு தபா தொறக்கறேன்னு வை, அப்போ ரெண்டுன்னு வருமா? இல்லை ஒண்ணுன்னு வருமா?"

"ரெண்டு தரமும் அப்டேட் ஆகும். அத்தோட இல்ல கோயிந்து, நீ இப்போ திறந்து வச்சிருக்கும் போதே, அந்தப் பக்கத்தை ஒரு முறை புதுப்பித்தால் (refresh), அப்போவும் ஒரு எண்ணிக்கை கூடும். "

"நம்ம பதிவை நாமே தொறந்தாலும் இந்தக் கணக்கு வருமா?"

"ஆமாமாம். நம்ம பதிவை நாமே தொறந்தாலும், இதில் எண்ணிக்கை கூடும். ஆனா சில நிரலிகள் இது போல் இல்லாமல், நம்ம பதிவை நாமே திறந்தால் அதைப் பதிவு செய்யாமல் இருக்கவும் வழி வச்சிருக்கு"

"அது நமக்கெதுக்கு.. இப்போ இந்த நம்பர் பெரிசா இருந்தாத் தான் பெருமையாமே! இந்த மாதிரி கவுண்டர்கள் எனக்கும் வேணும்னா எங்கிட்டுப் போகணும்?"

"இந்தப் பக்கத்தில் புள்ளி விவரச் சேவைன்னு பட்டியல் போட்டுச் சொல்லி இருக்காங்க பாரு. அங்கிருந்து எடுக்கலாம். மொதல்ல சொன்ன ஐப்பி டிராக்கர் வேணும்னா இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இது மட்டும் தான். "

"யக்கா பொன்ஸ், இந்த கவுண்டரை வச்சு எங்க கொல சாமிகளா வருது யாருன்னு சொல்ல முடியுங்கிறாங்களே அது உண்மையா?" முதன்முறையாகப் பேசினார் - எங்களிடம் பேசினார் -பாலபாரதி

"ஒரு மாதிரி ஊகிக்கலாம். இப்போ இந்த கவுண்ட்டர்களில் சிலது ஐப்பி டிராக்கராகவும் செயல்படுது. இந்த ஐப்பி டிராக்கர் நமக்காக நம்ம பக்கத்துக்கு வந்து போன ஐப்பிகளைச் சேமிக்கும். இன்னும் சரியாச் சொல்வதானால், உலகின் எந்தெந்த ஐப்பிக்களை உடைய கணினிக்களில் நமது பதிவு திறந்து பார்க்கப் பட்டது என்பதை இது சேமித்து வைக்கும். ஸ்டேட் கவுண்டர் அப்படி ஒரு தளம். இதில் உங்களுக்குன்னு ஒரு கணக்குத் தொடங்கி இது கொடுக்கும் நிரலியை உங்கள் பதிவில் பதித்துவிட்டால், இந்த இடத்தில் உங்கள் பதிவுக்கு வந்து போகும் கணினி முகவரிகள் சேமிக்கப் படும். எப்போ வேணாலும் எடுத்துப் பார்க்கலாம். ப்ராக்ஸி மூலம் வந்தால் இங்கயும் பார்க்க முடியாது."

"ப்ராக்ஸின்னா? " என்றார் பாலா.

"அதான் நைனா, பள்ளிக்கொடத்துல அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது, ஒனக்குப் பதிலா வேற எவனாவது உள்ளேன் சொல்லுறது தான். இன்னும் சுளுவா சொல்லணும்னா, இப்போ நீ இல்லாத பதிவுகள்ல கூட ஒன்னைக் கலாசினா பாகசவில் சேர்ந்துடுவாங்கன்னு வீத பீப்பிள் சொன்னார் இல்ல, அது மாதிரி.."

"ஓ.. " என்றார் பாலா.

"அதே தத்துவம் தான். நமது முகவரியிலிருந்து பக்கத்தைப் பார்க்காமல், வேறொரு தளத்திலிருந்து பார்க்கலாம். இது மாதிரி சுத்தி வந்து பார்க்கிற போது, அதை இந்தக் கவுண்டர்களால கண்டுபிடிக்க முடியாது"

கோயிந்து தன் செல் போன் கூப்பிட்டதால் எடுத்துப் பார்த்தார்..

"என்ன கோயிந்து?"

"அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க.. அதுக்குன்னு ஒரு அறிமுக மெஸேஜ் வச்சிருக்கேனே.. அதையும் நம்ம ஜெய் பதிவையும் சேர்த்துத் தர்றது தான்.. பாகசவுக்குக் கொளுகைப் பரப்புச் செயலாளர் மாதிரி ஆய்டிச்சு நம்ம நெலம! என்னத்தச் சொல்ல!"

கோயிந்துவைப் பார்த்து, "நீதானா அது?" என்று முறைத்தார் பாலா. "பின்ன பாருங்க பொன்ஸ், தினசரி எனக்குப் பத்து பின்னூட்டமாவது வருது.. எனக்கு சர்டிபிகேட் கொடுங்க, இவனுக்குக் கொடுங்கன்னு.. !"

"என்ன சர்டிபிகேட்?"

"பாகச சர்டிபிகேட் தான்!" நொந்து கொண்டே சொன்னார் பாலா..

"சரி அதென்ன செல்பேசி தொலைஞ்சு போச்சுன்னு செல்லுலயே பொலம்பிகிட்டிருந்தீங்க?" கோயிந்து கொடுத்த குறுஞ்செய்தி இடைவெளியில் கேட்டேன்.

"பேசிகிட்டிருந்தது என்னோட செல்லு.."

"அப்போ தொலைஞ்சது?"

"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.

"அது என்ன? தெரியாதே!" என்றேன் ஆவலோடு.

பதில் வருவதற்குள், பாலா, பேச்சை மாற்றிவிட்டார். "அதெல்லாம் அப்புறம் பேசுவோம், ஆமாம், சில சமயம் ஒரே பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கவுண்டரும் ஒரு நம்பர் காட்டுதே அது எப்படி?"

"ஒவ்வொரு கவுண்டரையும் ஒவ்வொரு நேரத்தில் அந்தப் பக்கத்தில் சேர்த்திருப்பாங்க.. அவ்வளவு தான்"

இதற்குள் கோயிந்துவின் செல்போன் சிணுங்கியது.

"இன்னா நைனா? என்னது? புதுசா கவுண்டர் போட்டுத் தரணுமா.. இப்போ " " இல் இருக்கேன்; இங்க புதுசா ஒரு கஸ்டமரு.. 'கவுண்டர்னா கவுண்டமணியா'ன்னு கேட்டு ஒரே ரவுசு.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சேன்.. நீ அங்கயே இரு.. இதோ நான் என் அஸிஸ்டெண்டைக் கூட்டிகிட்டு இதோ வந்துகினே கீறேன்; எங்காச்சும் போய்டாத என்ன?" என்றபடி போனை வைத்தவர், "அந்தப் போனை என்னாண்ட கொடு சார். கௌதம் சாருக்கு வலைப்பதிவு இஞ்சினியரப் பார்க்கணுமாம். உன்னக் கூட்டிகினு வாரேன்னு சொல்லிட்டேன், அந்தப் போன் உங்கைல இருந்தா நீ மறுக்கா கடல போட ஆரம்பிச்சிடுவ.. இங்க கொடு பார்க்கலாம்... " என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்து, "அப்பால வந்து கண்டுகிறேன் பொன்ஸு. பார்க்கலாம் என்ன?" என்று கிளம்பினான் கோயிந்து..
உண்மையாகவே கவுண்டரிடம் அடி வாங்கிய செந்தில் மாதிரி பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
[ப்ரியன் யோசனைப் படி, உருவான இந்தப் பதிவு, பாகசவின் கோடிக் கணக்கான உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ]

44 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அடப்பாவீகளா! இதுல பழைய லிங்க் வேறயா?
:-((((

இம்சை அரசன் said...

என்னையும் ஆட்டைல சேர்த்துப்பீங்களா?

ப்ரியன் said...

பா.ச.க பதிவுக்கு நன்றி

பழைய சுட்டிகளுக்கு சிறப்பு நன்றி :)

நாமக்கல் சிபி said...

கோடாணு கோடி வாசகர்கள் மற்றும் பா.க.ச தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து
பா.க.ச பதிவிட்ட பென்மனச்செம்மல் பொன்ஸ் அக்கா அவர்கள் வாழ்க!

- பா.க.ச,
கோவை.

பொன்ஸ்~~Poorna said...

பின் குறிப்பு: பாகசவுக்குச் சமர்ப்பணமாகும் இந்தப் பதிவே பொன்ஸ் பக்கங்களின் நூறாவது பதிவாக அமைந்து சிறப்பித்திருக்கிறது என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொல்கிறேன் ;)

பாலாவுக்கும், கோயிந்துக்கும் நன்றி ! (சங்கத்துக்கும் :)) )

மோகினிகள் கழகம் said...

பா.க.ச பதிவிற்க் நன்றி!

நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடமளித்த பெருந்தன்மையை வாழ்த்துகிறோம்.

பா.க.ச,
மோகினிகள் அணி.

நாமக்கல் சிபி said...

100 வது பதிவு வேறா!

வாழ்த்துக்கள் பொன்ஸ்!

கடைசி பதிவுகள் குறிப்பாக நட்சத்திர பதிவுகளிலெல்லாம் உங்கள் எழுத்துக்களின் செம்மை கூடியே இருந்தது. இப்படியே தொடரட்டும்!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

என்னது இது நூறாவதா? அது சரி!!!

ஆட்கள் சப்ளை செய்பவர் said...

ஒரு லாரில ஆளு பத்தாது! இன்னும் ஒரு முந்நூறு பேரு அனுப்பறேன்!

பா.க.ச பதிவு, பொன்ஸ் அக்காவோட 100வது பதிவு வேற.

குட்டிச்சாத்தான்ஸ் கிளப் said...

பொன்ஸ் அக்கா அவர்களின் 100 வது பதிவை சிறப்பித்த எங்கள் அண்ணன், தங்கத்தின் தங்கம், வானுயர்ந்த வள்ளல்
குழந்தை பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

குட்டிச் சாத்தான்ஸ் கிளப்,
பா.க.ச பிரிவு.

ஆன்லைன் ஆவிகள் said...

ஐயா!
இன்னிக்கு அங்கிள் பாலபாரதியைக் கலாய்க்கிறாங்களாம்!

எல்லாரும் ஓடியாங்கோ! ஓடியாங்கோ!

சவுரவ் கங்குலி said...

நான் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் இம்மகிழ்ச்சியான வேளையிலே அண்ணன் பால பாரதி அவர்களைக் குறிப்பிட்டு தனது 100 பதிவை இட்ட பொன்ஸ் அவர்களுக்கு எங்கள் பா.க.ச, மேற்கு வங்க அணியினினரின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் பாலபாரதி அவர்களின் சேவைகளைப் பற்ரி சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பதிவு மட்டும் போதாது. இன்னும் நூறு பதிவுகளேனும் போட வேண்டியிருக்கும்.

இருப்பினும் ஒரே ஓரு சிறு நிகழ்ச்சியை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொண்டு எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.

அண்ணன் பாலபாரதி அவர்கள் மட்டும் இல்லையென்றால் நான் இந்திய அணிக்குத் திரும்பியிருப்பேனோ என்று எண்ணிக்கூட பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அண்ணன் அவர்கள் என்னை இந்திய அணியில் சேர்க்க அரும்பாடு பட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு சோடா குடித்துவிட்டு மீண்டும் தொடர்கிறேன்.

செந்தழல் ரவி said...

வந்துட்டோம்....பாலாபாய் கி ஜே..!! பா.க.ச பதிவு போட்ட பொன்ஸுக்கு டபுள் ஜே...!!!! இந்த பதிவு லோடாக லேட்டாகுதே ? பாலபாரதியை பற்றி போட்டதாலே இருக்குமா ?

ஆழியூரான். said...

//அளுதுடுவேன்..//

அழுதுடுவேன்...

பிழைதிருத்துனர் சங்கம் சார்பாக
ஆழியூரான்.

ILA(a)இளா said...

//பொன்ஸ் அக்கா அவர்களின் 100 வது பதிவை சிறப்பித்த எங்கள் அண்ணன், தங்கத்தின் தங்கம், வானுயர்ந்த வள்ளல்
குழந்தை பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

இதுக்காகதானே நேத்து சுமார 30 கள்ளவோட்டு போட்டேன்.

ரொம்ப தேங்க்ஸ் அக்கா.

:))))))))))))))))))))))))))))))

நாடோடி said...

//பொன்ஸ் அக்கா அவர்களின் 100 வது பதிவை சிறப்பித்த எங்கள் அண்ணன், தங்கத்தின் தங்கம், வானுயர்ந்த வள்ளல்
குழந்தை பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நாடோடி said...

//அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க..//

நான் இரண்டாம் கட்ட உறுப்பினர் ஆகி பல நாட்கள் ஆகிவிட்டது.

கோயிந்து மறந்திட்டாரா?..

Raja said...

Hi,

Yakkka Ponsu..

Check Your Counter...

I have increased it.

uyeeeeee....

SP.VR.சுப்பையா said...

அப்படியே, பிளாக்கர் பீட்டாவில (தெரியாமல்) போய் மாடிக்கிட்டு முழிக்கிறவங்களைக் கைதூக்கிவிட, பதிவு ஒன்று போடுங்கள் சகோதரி!

செந்தழல் ரவி said...

///அப்படியே, பிளாக்கர் பீட்டாவில (தெரியாமல்) போய் மாடிக்கிட்டு முழிக்கிறவங்களைக் கைதூக்கிவிட, பதிவு ஒன்று போடுங்கள் சகோதரி! //

வாத்யாரே...அம்மனியோட முதல் பதிவு (நட்சத்திர வாரத்தில்) அதானுங்களே !!!!!

Pot"tea" kadai said...

//வாருங்கள்! வாருங்கள்!! SYDNEYஇல் மாதம் மும்மாரி பொழிகிறதா?
AUSTRALIAஇல் நம் மக்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களா?
உங்கள் UNWIRED AUSTRALIA என்ற கணினி அடிக்கடி restart செய்யாமலே வேலை செய்கிறதா?
powered by IP2Location.com //

உள்ள வர்ரதுக்கே இவ்வளவு கேள்வியா?...

இப்போ பதில்:
சிட்னில வெக்க தாங்கல...28 டிகிரில ஒடம்பு வறுபடுது...நம்மக்களா? யாருங்க அது? நா மட்டும் நல்லா இருந்தா போதும்..:)) இந்நாள் வரைக்கும் ஒரு தடவ கூட ரீஸ்டார்ட் ஆனதில்ல...ஒரு வேல நீங்க கேட்டதுனால இனிமே ரீஸ்டார்ட் ஆச்சுன்னாலும் உங்களுக்கு கன்னா பின்னான்னு ரவியும், லக்கி, மற்றும் ஸ்வீடன், பிலாடெல்பியா, நியூயார்க்ல இருந்து அனானிமஸ் பின்னூட்டம் வரும்...:))

இன்னும் பதிவ படிக்கலை...படிச்ச பிறகு வேனுமின்னா எதுனா காமென்ட்ஸ் போடறேன்.

மண்ணாங்கட்டி said...

இந்தப் பதிவில் பதிவிற்கு சம்மந்தமானது மட்டும் தான் எழுதனுமா?

பொன்ஸ்~~Poorna said...

மண்ணாங்கட்டி,
//இந்தப் பதிவில் பதிவிற்கு சம்மந்தமானது மட்டும் தான் எழுதனுமா? //
அப்படி எழுதினாக் கொஞ்சம் சந்தோசமா இருக்கும்.. நூறாவது பதிவில்லீங்களா.. அடிக்கடி எடுத்துப் பார்த்தாலும் பார்ப்பேன் அதான்.. :)))

Anonymous said...

எனக்கு தூக்கம் தூக்கமா வருது ......

மாம்ஸ் ஆளுக்கு ஒரு டீயும் தம்மும் அடிச்சிட்டு வரலாமா

S. அருள் குமார் said...

//அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..//

யப்பா... அப்போ நான் கோயிந்து இல்லை :)

நாமக்கல் சிபி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

தொடர்ந்து கலக்கவும்...

We The People said...

பொன்ஸ்,

சூப்பரு.... நல்லா சங்க சேவை பண்ணுறீங்க.. 100வது பதிவு, அதுவும் பா.க.ச பதிவு..... அசத்தல்.. வாழ்த்துக்கள்.. நம்ம சங்க எப்படி வளர்ந்து இன்னாமா அசத்துது பா.க.ச,
மோகினிகள் அணி, குட்டிச் சாத்தான்ஸ் கிளப்,பா.க.ச பிரிவு, பா.க.ச, மேற்கு வங்க அணி, அடேங்கப்பா... எங்கேயோ போயிட்டோம் போங்க..

////அருள் சார் அல்லாத்தையும் கண்டு பிடிச்சிக் கொட்திடுவாரு.." என்று அழைத்தான் கோயிந்து..//

யப்பா... அப்போ நான் கோயிந்து இல்லை :)//

அருளு உங்களுக்கு விவரமே தெரியாதா... கோயிந்துவும், பாலாபாய்யும் டபுள் ஆக்ட், அவர் தான் இவரு, இவர்தான் அவரு.. அன்னியன் மாதிரி... ஸ்பிலிட் பெர்ஸனாலிடி ;)

:)))))))

பொன்ஸ் உங்க நட்சத்திர வாரம் சூப்பரா கலைகட்டுது...வாழ்த்துக்கள்.

We The People said...

பொன்ஸ்,

அது சரி, அது என்ன பா.க.ச, மோகினிகள் அணி, இதை யாரு தொடங்கினது? நம்ம தல எதாவது வேலையை காட்டுறாரா??

Anonymous said...

100 வது பதிவு வாழ்த்துக்கள்!!!


ஆனால் BRONX என்று தவறாக எனது இடத்தை கூறுகிறது.

சேதுக்கரசி said...

ஹாஹா..

//அதுவா, இந்தச் சேதுக்கரசி, நாடோடி, தங்கவேல்னு யாராவது எஸ் எம் எஸ் பண்ணி அப்பப்போ பாகச ன்னா என்னான்னு கேட்பாங்க..//

இப்போ பிரச்சினையில்லை. உங்க பதிவு பார்த்து நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன் :-D

//அருளு உங்களுக்கு விவரமே தெரியாதா... கோயிந்துவும், பாலாபாய்யும் டபுள் ஆக்ட், அவர் தான் இவரு, இவர்தான் அவரு.. அன்னியன் மாதிரி... ஸ்பிலிட் பெர்ஸனாலிடி//

இப்படி எழுதி மேலும் தெளிவுபடுத்தினதுக்கு நன்றி We The People.

//"அது கடலை செல்!" என்றபடியே திரும்பி வந்தான் கோயிந்து. 'அடப்பாவிங்களா!' என்று நினைத்துக் கொண்டேன். "பாலா பாய் மேட்டர் ஒனக்குத் தெரியாதா?" என்று அடுத்த முடிச்சைப் போட்டான்.//

இந்த முடிச்சை எப்ப விடுவிக்கிறீங்க?

அப்படியே, 100வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் பொன்ஸ்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

சேதுக்கரசியக்கோவ்வ்வ்..,
என்னது ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? :-(

புதுசா வர்ற சங்கத்துக்காரங்க கூட.., பல வருச எக்ஸ்பீரியன்சை காட்டுறாங்கப்ப்பா...?

இதுல வீ த பிப்பிள் வேற..?

தம்பி said...

நல்லா இருக்குங்க பொன்ஸ் இந்த பதிவு!

நட்சத்திரபதிவுகளில் பெண் ஏன் அடிமையானாள் பதிவுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!

ப்ரியனுக்குதான் நன்றி சொல்லணும், ஏன்னா அவருதான ஐடியா குடுத்தது.

அப்படியே 100ம் வாழ்த்து!

த.அகிலன் said...

ஆஹா நல்லா இருக்கே யக்கோவ் எனக்கு ஒரு உதவி இது வரைக்கும் எத்தனைபேர் பா.க ச.வில் உறுப்பினராக இருக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? ஏன்னா நான் 1101 வது உறுப்பினராக சேர முடியுமா என்று பார்க்கிறேன்.(ம் இதெல்லாம் பாலா பாய் சொன்னதுதான் நான் அவரிடம் எப்பிடி உங்க சங்கத்துல சேரலாம் அப்படி கேட்தும் அவர் கண்ணா உன் டேட் ஆப் பேர்த் என்ன என்றார் நான் ஏதூ பாரம் பில் பண்ணவாக்கும் என நினைத்து சொன்னதும் ஆ நீ வந்து ஒண்ணு பண்ணு கண்ணா கூட்டினா 3 வரக்கூடிய மாதிரி ஒரு நம்பரில் உறுப்பினராகிடு என்று சொன்னாருக்கா?)ஏன்? உங்களுக்கு தெரியுமா என்ன

சேதுக்கரசி said...

//யக்கோவ்வ்வ்..,
என்னது ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? :-(//

யக்கோவ் சொறதனால தான் நான் பா.க.ச-வில் சேர்ந்திருக்கேங்கிறதையே மறந்துட்டு மறுபடியும்...???!!! செல்போனைக் காணோம்னு செல்போன்லயே சொன்ன கதையால்ல இருக்கு இது :-D

//புதுசா வர்ற சங்கத்துக்காரங்க கூட.., பல வருச எக்ஸ்பீரியன்சை காட்டுறாங்கப்ப்பா...?//

1101% உண்மை. proof-க்கு அகிலனின் பின்னூட்டம் காண்க.

Anonymous said...

kavunter mattumthan kidikkumma? naickre,naidu, vanniyar thevar ellam kidaikkatha?

பொன்ஸ் said...

பின்னூட்டமிட்ட பாகச அன்பர்கள் எல்லாருக்கும் பாகச சார்பாக கோடானுகோடி நன்றிகள்..

சவுரவ் கங்குலிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி...

//பிழைதிருத்துனர் சங்கம் சார்பாக
ஆழியூரான்.//
அது சரி!!!

சுப்பையா சார், பிளாக்கர் பீட்டா பதிவு ஒண்ணு போட்டாச்சே... உங்களுக்கு வேறெதும் புதுப் பிரச்சனையா பீட்டாவில்??

//உள்ள வர்ரதுக்கே இவ்வளவு கேள்வியா?...//
பொட்டீக்கடை, முதல் முறையா வரீங்க இல்ல, அதான் :))
// ரீஸ்டார்ட் ஆச்சுன்னாலும் உங்களுக்கு கன்னா பின்னான்னு ரவியும், லக்கி, மற்றும் ஸ்வீடன், பிலாடெல்பியா, நியூயார்க்ல இருந்து அனானிமஸ் பின்னூட்டம் வரும்...:))//
ஐய்யோன்னு சொல்றதா, ஹையான்னு சொல்றதா.. ஒண்ணுமே புரியலியே!! :))))

//கோயிந்துவும், பாலாபாய்யும் டபுள் ஆக்ட், அவர் தான் இவரு, இவர்தான் அவரு.. அன்னியன் மாதிரி... ஸ்பிலிட் பெர்ஸனாலிடி ;) //
:)))) வீ த பீப்பிள், இது போன்ற உண்மைகளை அவ்வப்போது எடுத்துச் சொல்லி சங்க மக்களை நல்வழிப்படுத்தவும் :))

//அது சரி, அது என்ன பா.க.ச, மோகினிகள் அணி, இதை யாரு தொடங்கினது? நம்ம தல எதாவது வேலையை காட்டுறாரா??//
ஜெய், தல போட்டோவைப் பார்த்து, மோகினி, குட்டிச் சாத்தான் எல்லாம் கூட சங்கத்துல சேருவேன்னு ஒரே அடம்.. அதான் தனிக் கிளைன்னு நினைக்கிறேன்..

//இந்த முடிச்சை எப்ப விடுவிக்கிறீங்க?//
சேது, அடுத்த பாகச பதிவில் வரும்..ஸ்டே ட்யூண்ட்,:))

//ஏன்? உங்களுக்கு தெரியுமா என்ன//
அகிலன், தல சொல்றாருன்னு ஏமாந்துராதீங்க. இப்படிச் சொல்வதற்கு ஒரெ காரணம், ஏற்கனவே 100010 க்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் நமது சங்கத்தில் 1101 ஆவது உறுப்பினராக இனிமேல் நீங்கள் சேர முடியாது என்பது தான். ஆகவே, நீங்கள் 100011ஆவது உறுப்பினராக, இப்போதே சேர்ந்து விடுங்கள்.. எப்படி ஐடியா? :))))

க்ருபா said...

இதோடு அது பற்றியும் தெரிந்திருந்தும் தெரிவிக்காமல் விட்டிருந்தால், இனிமேல் உங்கள் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஐ.பி. முகவரியே இல்லாமல் போகக்கடவது!

பொன்ஸ்~~Poorna said...

//பற்றியும் தெரிந்திருந்தும் தெரிவிக்காமல் விட்டிருந்தால், இனிமேல் உங்கள் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஐ.பி. முகவரியே இல்லாமல் போகக்கடவது! //
க்ருபா, தெரியாது.. தெரியாது... தெரியவே தெரியாது.... :)))

தெரிவித்தமைக்கு நன்றி.. :)

நாகை சிவா said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்!

100 ஆயிரமாக வளரட்டும் :-(

நாடோடி said...

யக்கோவ் 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களோட ஒரு பதிவுல பின்னூட்டத்த edit பண்ணுரத பத்தி சொல்லிருந்தீங்களே. கீழே உள்ளது அதற்கு உதவும்.

< span class="item-control admin-xxxxxxxxxx pid-yyyyyyyyy" >< a href="http://www.blogger.com/post-edit.g?blogID=zzzzzzzz&postID=< $BlogCommentNumber$ >">Edit Comment< /a >< /span >

இதை <$BlogCommentDeleteIcon$> அடுத்து சேர்த்துக்கொள்ளாவும்.

xxxxx,yyyyyy,zzzzzz bloger accountக்கு ஏற்றாற்போல் மாற்றவேண்டும்.

த.அகிலன் said...

பொன்ஸ் said...
100011ஆவது உறுப்பினராக, இப்போதே சேர்ந்து விடுங்கள்.. எப்படி ஐடியா? :))))
யக்கோவ் என்னை என்ன கேட்டுக்கிட்டு பேரை பட்டியல்ல சேத்துட வேண்டியது தானே

எங்கள் தலையின் தலையை எடுத்தாவது அவர் புகழ் காப்போம்
இது எப்டி இருக்கு

கிரேக் செப்பல் said...

//சவுரவ் கங்குலிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி... //

சவுரவ் கங்குலிக்கெல்லாம் நன்றி சொல்லி நேரத்தை வீணாக்கும் பொன்ஸ் அவர்களை கலாய்க்கிறேன்.
(ச்சே தமிழ்மணம் படிச்சி படிச்சி இப்படி ஆயிட்டேன்)

மன்னிக்க!
சவுரவ் கங்குலிக்கெல்லாம் நன்றி சொல்லி நேரத்தை வீணாக்கும் பொன்ஸ் அவர்களை கண்டிக்கிறேன்.

நாடோடி said...

< span class="item-control admin-988976385 pid-534469321" >< a href="http://www.blogger.com/post-edit.g?blogID=24180143&postID=< $BlogCommentNumber$ >">Edit Comment< /a >< /span >

யக்கோவ் மேலே உள்ளது உங்க பதிவுக்கானது.(ஒரு example).

இதை அப்படியே comment filed ல சேத்துருங்க.

http://singpolyma-tech.blogspot.com/
இந்த பிளாக்ல technical related பதிவுகள் இருக்கு.