Saturday, December 30, 2006

புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..

பழைய ப்ளாக்கர் பீட்டாவான இன்றைய ப்ளாக்கருக்கு மாறுவதில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் பற்றிய மணியனின் பதிவைப் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவு பீட்டாவுக்கு மாறிய பின்னால் உங்களின் வார்ப்புரு மாற்றத்தைச் சுலபமாக்கும் பதிவு.

இதோ, பீட்டாவுக்கு மாறலாம் வாங்க...

பகுதி 1: வார்ப்புரு மாற்றம்
நிலை 1: உங்களின் பதிவை புது ப்ளாக்கருக்கு மாற்றும் முன்னர், உங்களின் பழைய வார்ப்புருவைப் படியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிலை 2: புது ப்ளாக்கருக்கு மாறுங்கள் என்ற சுட்டி ஒன்று உங்களின் ப்ளாக்கர் கணக்கில் உட்புகுந்த உடனேயே தெரியும். அந்தச் சுட்டியைத் தட்டி அது கேட்கும் விஷயங்களைக் கொடுத்துவிட்டு, அப்படியே ஹாயாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தால், தானே உங்களின் பதிவு புது புளாக்கருக்கு மாறியபின் கூகிள் மடல் கணக்கிற்கு ஒரு மடல் வந்துவிடும்.

நிலை 3: இந்த முறை உங்களின் புது ப்ளாக்கர் பயனர் கடவுச் சொல் வழியே உட்புகுந்தால், உங்களின் பதிவுகள் ஏற்கனவே புது ப்ளாக்கருக்கு மாறி இருக்கும்.

நிலை 4: உங்கள் பதிவின் Layout அல்லது Template பக்கம் இது போல் காட்சி அளிக்கும்:




நிலை 5: இதில் "Customize Design" என்ற சுட்டியைத் தட்டி உங்களின் பழைய ப்ளாக்கர் வார்ப்புருவைப் புது வார்ப்புருவுக்கு மாற்றலாம் [ மாற்றினால் மட்டுமே புது ப்ளாக்கரின் பலவித நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும்.]

நிலை 6: Customize Design இல் கீழ்காணும் Upgrade Your Template என்ற சுட்டி தெரியும். இதையும் தட்டுங்கள். உங்களின் பழைய வார்ப்புரு இல்லாமலே போய்விடும் என்றும் அதை வேண்டுமானால் திருப்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என்றும் ஒரு எச்சரிக்கை எட்டிப் பார்க்கும். "சரி சரி" என்று சொன்னால் புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறிக் கொள்ளலாம்.



நிலை 7: புது ப்ளாக்கர் வார்ப்புருவும் பார்ப்பதற்கு பழைய ப்ளாக்கர் வார்ப்புருக்கள் போலத்தான் இருக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன் பின் Save Template என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.
நிலை 8: இப்போது உங்களின் வார்ப்புரு புது ப்ளாக்கருக்கு ஏற்றபடி மாறிவிட்டது. அதை உறுதிப் படுத்தும் விதமாகக் கீழ்க்காணும் பக்கம் திறக்கும்.

பகுதி 2: தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி?

புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறியபின் தமிழ்மணத்தில் உடனடியாக சேர்க்க இயலாது. எப்படிச் சேர்ப்பது என்பதற்கான விளக்கமே இந்தப் பகுதி.

நிலை 9: நிலை 8இல் குறித்திருக்கும் Edit HTML சுட்டியைத் தட்டி, கீழ்வரும் பக்கத்திற்குச் செல்லவேண்டும்.

இங்கு ஓரத்தில் இருக்கும் Expand Widget Templates உக்கு 'ஆம்' என்று சொல்ல வேண்டும்.

நிலை 10: இப்போது, தமிழ்மணமும் ப்ளாக்கர் பீட்டாவும் பதிவில் கண்டிருப்பது போல் ]]></b:skin> என்ற பகுதியைக் கண்டுபிடிக்க வேண்டும்.


நிலை 11: இதன் கீழ் தமிழ்மணத்தின் கருவிப் பட்டிக்கான முதல் பகுதி நிரலை இணைக்க வேண்டும்.

அந்த நிரல் உங்களின் வசதிக்காக இங்கும்:




<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->

<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->




நிரலை இட்ட இடத்தின் கீழ் ]]</HEAD> என்ற பகுதி வரும்





நிலை 12: தமிழ்மண கருவிப் பட்டையின் இரண்டாம் பாகத்தை, நிரலியின் dateHeader பகுதியைக் கண்டுபிடித்து அதன் கீழ் இட வேண்டும். dateHeader பகுதி இப்படி இருக்கும்:





<b:if cond='data:post.dateHeader'>

<h2 class='date-header'><data:post.dateHeader/></h2>

</b:if>






நிலை 13: இட வேண்டிய தமிழ்மண கருவிப் பட்டி இரண்டாம் பாகத்திற்கான நிரல்:




<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1

(c)2005 thamizmanam.com -->



<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

</b:if>



<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1

(c)2005 thamizmanam.com -->




நிலை 14: இரண்டாம் பாகத்திற்கான நிரல் சரியான இடத்தில் இருந்தால், அதன் பின்னர், <b:include name="'post'/" data="'post'"> என்ற பகுதி வரும்.

நிலை 15: இதன் பின்னர், கீழுள்ள Save Template பித்தானை அழுத்தி இந்த மாற்றங்களைச் சேமிக்க வேண்டும்.
நிலை 16: இத்துடன் உங்கள் பதிவில் கருவிப் பட்டை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தெரியும். அத்துடன் பெரும்பாலான பதிவுகள் இந்த இடத்தில் தமிழ்மணத்தில் சேர்ந்து விடுகின்றன. மிக அதிக இடுகைகள், பின்னூட்டங்கள் உடைய பதிவுகள் சில சமயம் சேராமல் தொல்லை கொடுத்தால் தமிழ்மணத்தின் தளத்தில் அது குறித்தான பிரச்சனைகளை முன்வைக்கலாம்.

புதுப் ப்ளாக்கரின் வார்ப்புருவைப் பயன்படுத்துவதால், கீழுள்ளது போல் Add Page Element என்ற வசதியைப் பயன்படுத்தி வேண்டிய எண்ணுவான், உங்களின் ப்ரோபைல் பற்றிய விவரங்கள், சுட்டிகள் என்று பலவும் இணைக்கலாம். இதையும் ஒரு முறை பார்த்து இணைத்துக் கொண்டால் உங்கள் பக்கம் பார்க்க அருமையாக இருக்கும்.

படங்களுடனான விளக்கங்களுடன் மேலதிக தகவல்கள் இந்தத் தளத்திலும் உள்ளன.

ஆக, தைரியமாக புது ப்ளாக்கருக்கு மாறி புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்...

[பிகு: படங்களின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும். ]



புது ப்ளாக்கர் வார்ப்புருவில் பழைய பதிவர்களின் பின்னூட்டப் பெயர்கள் தெரியாமல் போகும். இதைச் சரி செய்ய, பதிவர் ஜெகத்தின் பதிவு உதவும்.

21 comments:

மணியன் said...

நன்றாகவே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் பிளிறியிருக்கிறீர்கள்.தமிழ்மணப் பட்டியை சேர்ப்பதும் தமிழ்மணத்தில் சேர்வதும்தான் trickyஆக உள்ளது. நான் ஒரு சோதனை பதிவாக மணிமலர்2.0 செய்து பார்த்தேன். அதில் இன்னும் பட்டையே வரவில்லை. அதனால்தான் customize பட்டனை அழுத்த தயாராக இல்லை.

பழையதிலிருந்து புதிய வார்ப்புரு (நான் அடைப்பலகை என குறிப்பிடுகிறேன்) மாறி தமிழ்மண பட்டை இடும்போது பழைய நிரல்களை நீக்க வேண்டுமா அல்லது comment out செய்தால் போதுமா ?

Anonymous said...

very useful. Will use this when I switch to new blogger. danks

Wish you and your family a very happy and prosperous new year.

ராஜசன் said...

பொன்ஸ். நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன். ஆனால் தமிழ்மணப்பட்டை இடுகைகளின் தென்படவில்லை. கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி.

http://raajasampayil.blogspot.com/index.html

ராஜசன் said...

பொன்ஸ். என் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது. ஆனால் இப்போதும் என்னால் தமிழ்மணப்பட்டையைப் பார்க்க இயலவில்லை.

தமிழ்மணத்தில் பதிவு தெரிவதற்காக நீங்கள் ஏதேனும் செய்தீர்களா? அப்படியென்றால் என்ன செய்தீர்கள்?

ரொம்ப நன்றி.

Deepa said...

Hi..When i try to add the second part of the code for pathivu toolbar... this is the eoor i get
///////////////////////
Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: The reference to entity "posturl" must end with the ';' delimiter.
//////////////////////////
You seem to be in Beta--but i dont see pathivu toolbar in ur posts..Can u help me fix this..
Deepa

பொன்ஸ்~~Poorna said...

நன்றி மணியன், - பழையதிலிருந்து புதிய வார்ப்புரு மாறும்போது, பழைய நிரல்கள் ஏதும் இருக்காதே மணியன்.. கேள்வி புரியவில்லையே! :(

டுபுக்கு, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. சீக்கிரம் மாறுங்க :)

ராஜசன், உங்கள் பதிவில் தமிழ்மணப் பட்டி சேர நான் ஏதும் செய்யவில்லை. தமிழ்மணம் சமீபத்தில் அவர்கள் தொழிற்நுட்ப மாறுதல் ஏதோ செய்ததில் உங்கள் பதிவும் சரியாகி இருக்கும்.

தீபா, இப்போ ஓகேவா? script எல்லாம் எடுத்துவிட்டு பார்த்தீர்களா?

இலவசக்கொத்தனார் said...

அம்மா தாயே,

நமக்கு இந்த மாறவேண்டிய நிலமை வரும் பொழுது சொல்லியனுப்பறேன். கொஞ்சம் கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போயி கரை சேர்த்துடு தாயே!

மணியன் said...

பொன்ஸ்,
//பழையதிலிருந்து புதிய வார்ப்புரு மாறும்போது, பழைய நிரல்கள் ஏதும் இருக்காதே மணியன்.. கேள்வி புரியவில்லையே! :(//

நீங்கள் சொல்வது சரிதான். நான் இன்னும் புதிய வார்ப்புருவிற்கு மாறாததால் இது ஒரு hypothetical கேள்விதான்.

முதலில் மணிமலர்2.0 என்ற புதிய பதிவை புதிய பிளாக்கரில் உருவாக்கி தமிழ்மண நிரலை சரியாக இட்டும் தமிழ்மணப் பட்டை தெரியவில்லை. என்னுடைய http://manimalar2.blogspot.comஐ பார்க்கவும். XML எல்லாம் தெரியாமலே நிறைய தமிழாக்கம் செய்திருக்கிறேன், பாருங்கள் :)

இந்தப் பிரச்சினையினால் எனது வழக்கமான பதிவான மணிமலரை( http:// manimalar.blogspot.com) classic styleஇலேயே வைத்திருக்கிறேன்.

பூனைக்குட்டி said...

உங்கள் ஸ்கிரிப்டில் பிழை உள்ளது.

நான் நினைக்கிறேன் & ஐ & போட்டால் உட்காரும் என.

சீனு said...

அம்மனி,

//வார்ப்புரு//
Template? இப்படி சொன்னாத்தானே எங்களுக்கு தெரியும்...:)

படங்கள் தெரியவில்லை.

பீட்டாவிற்கு மாறிய பின் பழைய template-ஐயே வைத்துக் கொள்ள முடியுமா? அப்படி வைத்துக் கொண்டால், ஏதேனும் disadvantages?

Mohandoss said...

naan enna ezuthinEn enna vanththirukkiRathu. okay innumoRu try.

& pathil & amp ;(space illaamal pOddaal udkaarum).

லக்கிலுக் said...

இவ்ளோ கும்மி அடிக்க வேண்டி இருக்குதே...

பேசாம பழைய பிளாக்கர்லேயே இருந்துக்கறோம்.

Anonymous said...

பொன்ஸ், விளக்கமான பதிவுக்கு நன்றிகள்.

மோகன்தாஸ் அவர்களின் திருத்தத்துடன்
//& பதில் &//
பட்டை அழகாகத் தெரிகிறது.

கோவி.கண்ணன் said...

பொன்ஸ்,

உங்கள் ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது....ஆனால் ... ஆனால்

தமிழ்மணத்தில் சேர்க்கும் போது

மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.

உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.

உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்

பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்

இப்படி வருகிறது !

என்ன செய்யலாம் ?
:(

G.Ragavan said...

இவ்வளவு விளக்கமாச் சொல்லியிருக்கீங்க. எல்லாம் சரிதான். ஆனா புது பிளாகர்ல என்னையச் சேக்கவே மாட்டேங்குறாங்களே. எத்தன வாட்டி சேரப் போனாலும்...ஒன்னோட பிளாகு பெருசாயிருக்கு..பின்னூட்டம் நெறையா இருக்கு. இப்ப மாத்த முடியாதுன்னு திட்டி அனுப்பீட்டாங்க. :-( இதுக்கு என்ன செய்றதுன்னு சொல்லுங்க?

பங்காளி... said...

பொன்ஸ்...

எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கிறது....உதவி தேவை...

1.எனது பதிவில்(http://pangaali.blogspot.com) எழுத்துக்களெல்லாம் மொச்சைக்கொட்டை சைஸில் தெரிகிறது...இதை எப்படி சிறிதாக்குவது.....

2.எனது மற்றொரு பதிவான http://panguvaniham.wordpress.com தமிழ்மணத்தில் என்னால் சேர்க்க இயலாததால் அவர்களே மேன்னுவலாக சேர்த்தனர்.....ஆனால் எனது புதிய பதிவுகள் எதுவும் தமிழ்மணத்தில் தெரிவதில்லை...இதை களைவதெப்படி?

கெல்ப் பண்ணுங்க தாயே...

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், உங்களுக்குச் செய்யாமயா...

மணியன், மணிமலர்2.0 தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டதே! பதிவுப் பட்டை தான் ஏன் தெரியவில்லை என்று புரியவில்லை. idealலாக தெரியவேண்டும்.. தமிழாக்கம், மணிமலரின் shared items எல்லாம் நான் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.. மிக நன்றாக உள்ளது :)

தாஸ், என்ன சொல்றீங்க? எந்த இடத்தில் பிரச்சனை? இப்போ சரி செய்திருக்கேனே அங்க தானா?

சீனு, படங்களைக் க்ளிக்கிப் பாருங்கள். பழைய templateஐயே வைத்துக் கொண்டால், உங்களால் labelகளைப் பயன்படுத்த முடியாது என்று நம்புகிறேன்.

லக்கி, ஒரு முறை கும்மி அடிச்சாச்சுன்னா அப்புறம் வசதி நிறைய இருக்கே! :)

விண்ணாணம், நன்றி

கோவி, எந்தப் பதிவில் இந்தப் பிரச்சனை? எனக்கு ஒரு மடல் அனுப்புங்களேன்..

ராகவன், நிறைய கூட்டுப் பதிவுகளில் இருப்பவர்களை இப்போதைக்கு பீட்டாவுக்கு மாற்ற விட மாட்டேன் என்கிறார்கள். முதலில் உங்களின் கூட்டுப் பதிவுகள் அனைத்தையும் மாற்ற முயற்சியுங்களேன்..

பொன்ஸ்~~Poorna said...

பங்காளி,
//1.எனது பதிவில்(http://pangaali.blogspot.com) எழுத்துக்களெல்லாம் மொச்சைக்கொட்டை சைஸில் தெரிகிறது...இதை எப்படி சிறிதாக்குவது......//
சரியாத்தானே இருக்கு? சின்னது செய்யணும்னா, உங்க Layout இல் Fonts and Colors பக்கத்தில் சின்னது செய்யுங்களேன்..

//2.எனது மற்றொரு பதிவான http://panguvaniham.wordpress.com தமிழ்மணத்தில் என்னால் சேர்க்க இயலாததால் அவர்களே மேன்னுவலாக சேர்த்தனர்.....ஆனால் எனது புதிய பதிவுகள் எதுவும் தமிழ்மணத்தில் தெரிவதில்லை...இதை களைவதெப்படி//
வோர்ட்பிரஸ் பற்றித் தெரிந்தது அதிகமில்லை.. இது பற்றி எங்கோ படித்த நினைவு இருக்கு.. முடிந்தால் எடுத்துக் கொடுக்கிறேன்.

பங்காளி... said...

என் அறிவுக்கண்ணை(?) திறந்த/திறக்க முன் வந்தமைக்கு நன்றி...நன்றீ..

கோவி.கண்ணன் [GK] said...

//கோவி, எந்தப் பதிவில் இந்தப் பிரச்சனை? எனக்கு ஒரு மடல் அனுப்புங்களேன்..//

பொன்ஸ்...!

இந்த பதிவுதான் !

http://govikannan.blogspot.com

முன்பு பீடாவில் இருந்தது !

Anonymous said...

hi I can't able to install "pathivu pattai" in my blogger beta. iam new to thamizhmanam help me my url "http://www.oppareegal.blogspot.com".