Friday, December 15, 2006

சர்வேயல்

சர்வேசன் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வந்து சர்வே எடுத்துக் கொண்டே இருக்கிறார். பதிவர்களைப் பற்றிய வாக்கெடுப்பை அறிமுகப் படுத்தியதும் சர்வேசனின் பின்னூட்ட எண்ணிக்கை முதல், பதிவு தட்டப்படும் எண்ணிக்கைவரை எல்லாம், எல்லாம், எல்லாமே ஏறி விட்டது போலும்... :)

"நவம்பர் மாதம் பிளாக்கர் கணக்கு உருவாக்கிய சர்வேசன் அதற்குள் பதிவர்களை அளக்கும் அளவுக்கு எப்படி வந்தார்" என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமுகவினர். "சர்வேசனை நம்பலாமா?" என்று இன்னுமொரு அளப்பானே தொடங்கிவிட்டார் இம்சை அரசன்.

என் பங்குக்கு என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும் முன்வைத்துவிடுகிறேன்:

  • பல்சுவை, ஆன்மீகம், சமூக அக்கறை, அரசியல் தவிர வேறு வகைகளே இல்லையா என்ன? யோசித்தால் அறிவியல் (வைசா, செந்தில் குமரன்..), மருத்துவம்(எஸ்கே, மங்கை, பத்மா..), கவிதை(ப்ரியன், ரசிகவ்,..), செய்திகள்(இட்லிவடை, ஊசி,..), பங்குவணிகம்(குப்புசாமி, தமிழ்சசி, சதயம்..), நகைச்சுவை(வெட்டிப்பயல், கைப்புள்ள..), புதிர்கள்(யோசிப்பவர்..), தொழிற்நுட்பம்(ஹை கோபி, ரவிசங்கர்..) இன்னும் எத்தனை பிரிவுகள் எட்டிப் பார்க்கின்றன?!

  • இன்னின்னார் இன்னின வகைகளில் மட்டுமே அடங்குவார்கள் என்பதைத் தீர்மானிக்க மூவர் குழு என்ன அளவுகளைப் பயன்படுத்தியது என்பதைப் பற்றிய தெளிவான குறிப்பு காணோம். உதாரணத்திற்கு, தமிழ்சசியைப் பல்சுவையில் எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதே புரியவில்லை. ஆழமான அரசியல் கட்டுரைகளையும், தீர்க்கமான வணிக ஆய்வுகளையும் கொடுக்கும் தமிழ்சசியின் கட்டுரைகளை பிற "நிஜமான" பல்சுவைப் பதிவர்களுடன் சேர்த்துப் பட்டியலிட்டால், "பல்சுவை" என்ற தலைப்புக்குப் பொருத்தமான பதிவர் என்று பார்த்து ஓட்டு போடுவதா? அல்லது சிறந்த என்பதைப் பார்ப்பதா?

  • அரசியல்/ சமூகம் என்று தான் தமிழ்மணமே வகை பிரிக்கிறது. அரசியல் கட்டுரைகளையும் சமூக அக்கறையையும் எப்படிப் பிரிக்கிறார்கள்? எந்த அளவைகளில் இவற்றைத் தனித்தனியாக பார்க்க முடிகிறது? அரசியல் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? அத்துடன், சமூகம் குறித்தான விஷயங்களை எழுதும் பதிவர்களுக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்குமே. அப்படியான அரசியல் பார்வைகளும் சமூக அக்கறையுடனான அவர்கள் பதிவுகளில் கண்டிப்பாக வெளிப்பட்டிருக்கும். ஆக, அரசியலையும் சமூகத்தையும் எப்படிப் பிரிக்கிறீர்கள்?

  • பல விஷயங்களையும் எழுதக் கூடிய, அரசியல் நையாண்டிப் பதிவுகளை அற்புதமாகக் கொடுக்கும் செல்வனை, சமூக அக்கறைப் பிரிவில் சுருக்குவது/out of place ஆக்குவது ஆகாதா?

  • செந்தழல் ரவியின் வேலைவாய்ப்புப் பதிவை அசுரன், சபாபதி சரவணன் இவர்களின் சமூகம் குறித்த பதிவுடன் ஒப்பிடுவது கூட குயிலையும் மயிலையும் ஒப்பிடும் விதமாகத் தான் இருக்கிறது.

  • ஒரு கட்சி சார்பாகவோ, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்தோ இருக்கக் கூடிய பதிவுகளை மட்டுமே அரசியல் பதிவாக முன்வைப்பதாக இருந்தால், We the people எழுதும் பல சமூகம் சார்ந்த பதிவுகள் எந்தக் கட்சியையும் முன்வைப்பதாக இல்லை என்பது தானே உண்மை?

  • ஈழ அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேசும் தமிழ்நதி, அகிலன், வசந்தன் போன்றோருக்கு இடமே இல்லாமல் ஒரு சர்வே என்பது அடுத்த ஆச்சரியம்!

  • ஆன்மீகப் பிரிவில், கண்ணபிரான் ரவிசங்கர், ஞானவெட்டியான் போன்ற ஆன்மீகப் பதிவர்கள் விட்டுப்போனது ஒரு குறை என்றால், தருமி போன்ற நாத்திகவாதிகளையும் அதில் சேர்த்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். கடவுள் சிந்தனையாளர்களுடன், கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்களையும் சேர்ப்பது தான் நடுநிலையான வாக்குப் பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்னும் பல கேள்விகள்.. நேற்றே எழுதி இருக்க வேண்டிய இந்தப் பதிவை ஒரு நாள் தள்ளி இடுவதற்கு காரணம், சர்வே குறித்த கேள்விகளை, அதில் பெயர் வராத ஏக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாக திரிந்துவிடக் கூடாதென்ற பயம். மேலும் இவற்றில் சில கேள்விகளை முன்வைத்த போது சர்வேசன் எழுதிய ஒரே பதில், "மூவர்குழுவுக்கு மதிப்பு கொடுத்து இதைச் செய்திருக்கிறேன்" என்பது தான்.

சர்வேசன் மிகவும் மதிக்கும் அந்த மூவர் குழுவின் பேரில், சர்வேயில் வாக்கு போட விரும்புபவர்களுக்கும் மதிப்பு வர வேண்டுமென்றால், அந்த மூவர் யாரென்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துக் கணிப்பில் உதவும் மூவர் குழுவின் அரசியல் பார்வை, அவர்கள் பயன்படுத்தும் அளவுகள் என்பதெல்லாம் தெரியாமல், எப்படி வாக்களிக்க முடியும்?

ஐயா, சர்வேசா, நேர்மையான தேர்தல் என்றால், தேர்தல் அதிகாரிகள் பேரைச் சொல்லும்மைய்யா...

31 comments:

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ், சர்வேசன் பிளாக்கில் பின்னுட்டம் போக மறுக்கிறது. அவர் முந்தா நாள், 2006ல் வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் சிறப்பானவர்களை தேர்தெடுக்கப் போகிறோம் என்ற புது விதியை நுழைத்துவிட்டேன் என்று பின்னுட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அதைப் பார்த்ததும், 13ம் தேதி மாலை, இது நல்ல முடிவு. புதியவர்களுக்கு இது ஒரு அங்கிகாரத்தையும், இன்னும் தங்களை செம்மைப் படுத்திக் கொள்ளவும் உதவும் என்று மெயில் நாலைந்து முறை ரிஜக்ட் ஆகி, பிறகு போனது என்று நினைக்கிறேன். சர்வேசா, கொஞ்சம் கமெண்ட் மாடரெஷனை திறந்துப் பாருங்கள் அதில் இருக்கலாம்.
பொன்ஸ், இந்த கருத்துக்கணிப்பில் திரும்ப திரும்ப பத்ரி, குழலி, பினாத்தல், முத்து, துளசி, இட்லி வடை, ஜிரா, குமரன் மற்றும் என்னைப் போன்ற பழைய ஆட்களை தேர்தலில் நிறுத்துவதே தேவையில்லை என் ரெண்டனா கருத்து.

என் பதிவு, 2006 பார்த்தீர்களா?

Anonymous said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.

'பெயர் வெளியிட விரும்பாத' மூவர் குழு என்று முதலிலேயே சொல்லியாச்சே. contract மீறல் ஆயிடும்.
so, I am the escape :)

எல்லாம் சொன்னீங்க சரி. வந்த 123 சிபாரிசுகளை வைத்து எல்லாத்தும் ஒரு மார்க் போட்டு average எடுத்து, கொஞ்சம் மெனக்கட்டுதான் லிஸ்ட் கொடுத்திருக்காங்க மூவர் குழு.

அவங்கள பாராட்டலனாலும் பரவால்ல. ஆனால், லிஸ்டில் இடம் பெற்ற 25 பேரை பாராட்டியிருக்கலாமே?

பாராட்டுங்களேன் ப்ளீஸ். உண்மையில் பதிவில் இடம்பெற்ற 25 பேரும் இந்த வருடம் நல்ல பல பதிவை தந்தவர்கள்.

வரவேற்போம், வாழ்த்துவோம்!!

(மற்றபடி, நீங்க சொன்ன மாதிரி சில விடுபட்ட பதிவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறேன். but, based on our selection committee, they didnt deserve a spot among the 25 this year. sorry :) )

நாடோடி said...

யக்கோவ் டேக் இட் ஈஸி....

சீரியஸ் இல்லாத இடத்துல காமடி பண்ணிக்கோ.

நாமக்கல் சிபி said...

//ஈழ அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேசும் தமிழ்நதி, அகிலன், வசந்தன் போன்றோருக்கு இடமே இல்லாமல் ஒரு சர்வே என்பது அடுத்த ஆச்சரியம்!//

ஆச்சரியமான உண்மை!

//கடவுள் சிந்தனையாளர்களுடன், கடவுள் மறுப்புச் சிந்தனையாளர்களையும் சேர்ப்பது தான் நடுநிலையான வாக்குப் பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது.
//

ரிப்பீட்டேய்!

பொன்ஸ்~~Poorna said...

சர்வேசன்,
//அவங்கள பாராட்டலனாலும் பரவால்ல. ஆனால், லிஸ்டில் இடம் பெற்ற 25 பேரை பாராட்டியிருக்கலாமே?
//
பாராட்டவே இல்லை என்று சொல்லி பதிவைப் புறந்தள்ள முயல்வது போலிருக்கிறது இந்தப் பின்னூட்டம்.

//ஆழமான அரசியல் கட்டுரைகளையும், தீர்க்கமான வணிக ஆய்வுகளையும் கொடுக்கும் தமிழ்சசியின் கட்டுரைகளை //
//அரசியல் நையாண்டிப் பதிவுகளை அற்புதமாகக் கொடுக்கும் செல்வனை,//
என்பதெல்லாம் உங்களுக்குப் பாராட்டாகத் தெரியவில்லையா?

பெயர் வெளியிட விரும்பாத நீங்களும், உங்கள் மூவர் குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் 25 நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக எழுதி பாராட்டும் ஒரு பதிவை எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால், மன்னிக்கவும், அது போன்ற பதிவைத் தர என்னால் முடியாமல் போய்விட்டது

மற்றபடி, விமர்சிக்காதே! பாராட்ட மட்டுமே உனக்கு உரிமை உள்ளது என்று சொல்வதாக இருந்தால், சர்வே என்பதும் ஒரு விதமான விமர்சனம் தான். உங்களின் இந்த நிலைப்பாட்டின் படி, அதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்

Anonymous said...

//மற்றபடி, விமர்சிக்காதே! பாராட்ட மட்டுமே உனக்கு உரிமை உள்ளது என்று சொல்வதாக இருந்தால், சர்வே என்பதும் ஒரு விதமான விமர்சனம் தான். உங்களின் இந்த நிலைப்பாட்டின் படி, அதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்//

விமர்சிக்காதேன்னு சொல்லலியே. பாராட்டு ஒண்ண போட்டுட்டு விமர்சிச்சிருக்கலாம்.

செல்வன், தமிழ்சசி பற்றிய விமர்சனமே பாராட்டும் சேர்த்து இருந்தது என்பது நீங்க சொன்னப்பறம் புரிஞ்சுது.

தமிழ் சசி கலவையாக எல்லாத்தை பத்தியும் எழுதுவதால் அவருக்கு பல்சுவை பிரிவு.
செல்வன் 'சுவை'யா எழுதி இருக்கர மாதிரி தெரியலையாம் (மூவரில் ஒருவர் சொல்லுவது). ஆனா சூடா, மக்கள்ஸுக்கு சொரணை வர நிறைய எழுதி இருக்காராம். உ.ம். 'நாட்டுக்கு என்ன செஞ்சேன்' என்பது போன்ற பதிவுகள்.


so, உங்களின் பார்வையில், இப்ப இருக்கும் 25ல் யாரை தூக்குவது, யாரை சேர்ப்பது ?
இருபத்தைந்தே அதிகம். எல்லாரையும் accommodate பண்ணா சொத சொதனு ஆயிடும் தேர்தல் :)

உஷா, உங்கள் பின்னூட்டம் கிடைக்கவில்லை.
மூத்த பதிவர்களை சேர்க்காமல் தேர்தல் எடுப்பதா? அதெல்லாம் சரி இல்லீங்கோ.
அடுத்த முறை வாக்கெடுப்புக்கு முன்னர், லிஸ்டில் இடம் பெறும் ஆளுக்கு ஈமெயில் அனுப்பி ஒரு O.K வேணா வாங்கலாம்.

சரியா?

பொன்ஸ்~~Poorna said...

//என் பதிவு, 2006 பார்த்தீர்களா? //
பார்த்தேன் உஷா.. அத்துடன் சர்வேசனின் அந்த முடிவை மீள் பரிசோதனை செய்வதாகவும் அவரே சொல்லி இருந்தாரே..

//சீரியஸ் இல்லாத இடத்துல காமடி பண்ணிக்கோ. //
நாடோடி :)))))))))))

Anonymous said...

//மற்றபடி, விமர்சிக்காதே! பாராட்ட மட்டுமே உனக்கு உரிமை உள்ளது என்று சொல்வதாக இருந்தால், சர்வே என்பதும் ஒரு விதமான விமர்சனம் தான். உங்களின் இந்த நிலைப்பாட்டின் படி, அதையும் நீங்கள் நிறுத்த வேண்டும்//

விமர்சிக்காதேன்னு சொல்லலியே. பாராட்டு ஒண்ண போட்டுட்டு விமர்சிச்சிருக்கலாம்.

செல்வன், தமிழ்சசி பற்றிய விமர்சனமே பாராட்டும் சேர்த்து இருந்தது என்பது நீங்க சொன்னப்பறம் புரிஞ்சுது.

தமிழ் சசி கலவையாக எல்லாத்தை பத்தியும் எழுதுவதால் அவருக்கு பல்சுவை பிரிவு.
செல்வன் 'சுவை'யா எழுதி இருக்கர மாதிரி தெரியலையாம் (மூவரில் ஒருவர் சொல்லுவது). ஆனா சூடா, மக்கள்ஸுக்கு சொரணை வர நிறைய எழுதி இருக்காராம். உ.ம். 'நாட்டுக்கு என்ன செஞ்சேன்' என்பது போன்ற பதிவுகள்.


so, உங்களின் பார்வையில், இப்ப இருக்கும் 25ல் யாரை தூக்குவது, யாரை சேர்ப்பது ?
இருபத்தைந்தே அதிகம். எல்லாரையும் accommodate பண்ணா சொத சொதனு ஆயிடும் தேர்தல் :)

உஷா, உங்கள் பின்னூட்டம் கிடைக்கவில்லை.
மூத்த பதிவர்களை சேர்க்காமல் தேர்தல் எடுப்பதா? அதெல்லாம் சரி இல்லீங்கோ.
அடுத்த முறை வாக்கெடுப்புக்கு முன்னர், லிஸ்டில் இடம் பெறும் ஆளுக்கு ஈமெயில் அனுப்பி ஒரு O.K வேணா வாங்கலாம்.

சரியா?

Anonymous said...

btw,

அரசியல் & சமூகம் ஒண்ணாதான் இருக்கணும்.
ஆனால், நம்ப ஊர்ல அப்படியா நெலம இருக்கு?

அரசியல்ல இருப்பவனுக்கு எங்கயாவது சமூக அக்கரை இருக்கா?
அரசியல் எழுதரவங்க அவங்க வட்டத்தை பத்தி மட்டும்தான் எழுதராங்க.
உண்மையான ச.அக்கரையோடு எழுதரவங்க அரசியல் கலப்பில்லாம மக்கள்ஸுக்கு தேவையானத விழிப்புணர்வுக்காக எழுதறாய்ங்க்ய.

Anonymous said...

அட என்னய்யா கொடும இது. அ.மு.க தொல்ல தாங்க முடியல.
ஒரு ஆள ஒழுங்கா வேல பாக்க விட மாட்டீங்களா.
A போட்டா B காணும்பீங்க
B போட்டா A காணும்பீங்க.

கலகக் கண்மணிகளாச்சே நாமதான். முடிஞ்ச வரைக்கும் கொழப்புவோம்.

தமிழ்நதி said...

பொன்ஸ்,
நல்லவேளை… சர்வேசனுக்கு நான் இட்ட பின்னூட்டம் எவ்வளவோ முயன்றும் ‘ம்கூம் போகமாட்டேன்’என்று அடம்பிடித்துவிட்டது. இல்லையென்றால் இன்று உங்கள் பதிவில் எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதும், அந்தப் ‘போகமறுத்த’பின்னூட்டத்தில் நான் உங்கள் பெயர் எப்படி விடுபட்டது என்று கேட்டிருந்ததும் சேர்ந்து பெரிய ‘நன்றிக்கடன்’, ‘பக்கப்பாட்டு’, ‘சார்புநிலை’ என்று பேசப்பட்டிருக்கும். நான் இப்போதுதான் புதுவரவு பொன்ஸ். தொடர்ந்து தரமாக எழுதினால் 2007இல் கவனிக்கப்படலாம். கவனிக்கப்படாவிட்டாலும் கொஞ்சம்கூட வருத்தப்படமாட்டாத ஒரு ‘போக்கு’ எனது. பரிந்துரைத்தமைக்கு நன்றி.

Anonymous said...

//ஈழ அரசியலையும், சமூகத்தையும் பற்றிப் பேசும் தமிழ்நதி, அகிலன், வசந்தன் போன்றோருக்கு இடமே இல்லாமல் ஒரு சர்வே என்பது அடுத்த ஆச்சரியம்!//

தமிழ் நதி பெயர் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. மத்தவங்க பெயர் யாரும் சிபாரிசலயே.

anyway, வாரத்துக்கு ஒரு சர்வே போடுவதா 2007'ன் plan. (நமக்கு எழுத எல்லாம் வராதுங்கோ)

so, என்னென்ன category வேணும்னு வரிசையா சொல்லி, யார் யார் பெயரை போடணும்னும் சொன்னீங்கன்னா lineஆ கொடுத்திடலாம் :)

Anonymous said...

"so, என்னென்ன category வேணும்னு வரிசையா சொல்லி, யார் யார் பெயரை போடணும்னும் சொன்னீங்கன்னா lineஆ கொடுத்திடலாம் :)"
ethuku peru than nakkal appadinu solratho? super reply servail? ponsakka ungalu apalika oru pathil solren

கருப்பு said...

நேற்றைக்கு பெய்த ம்ழையில் இன்றைக்கு முளைத்த காளானாய் தெரியவில்லை சர்வே.. திட்டமிட்ட குயில்கூட்டின் ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.

பொன்ஸ், அருமையாக வெளியுலகத்துக்கு அறிவித்து விட்டீர்கள்.

இவர்கள் தேர்ந்து எடுக்காவிட்டால் நாம் சிறந்த பதிவர் இல்லையென்று அர்த்தம் ஆகாது.

Anonymous said...

யார் யார்ருக்கு கள்ள வோட்டு வேணும். வேணும்றவங்க தனிமடலில் தொடர்ப்பு கொள்ளவும். இங்கே பொழுது போகமாட்டேனுது.

லக்கிலுக் said...

சர்வேசன் அவர்கள் என் பெயரை அவரது லிஸ்டில் இருந்து தயவுசெய்து நீக்கிவிடவும். வலைப்பதிவில் என்னுடைய இடம் என்னவென்று எனக்குத் தெரியும்.

அவரது சர்வே கேலிக்குரியதாக இருப்பதால் அதில் எனக்கு நம்பிக்கையில்லை.

Anonymous said...

"சர்வேசன் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது வந்து சர்வே எடுத்துக் கொண்டே இருக்கிறார். பதிவர்களைப் பற்றிய வாக்கெடுப்பை அறிமுகப் படுத்தியதும் சர்வேசனின் பின்னூட்ட எண்ணிக்கை முதல், பதிவு தட்டப்படும் எண்ணிக்கைவரை எல்லாம், எல்லாம், எல்லாமே ஏறி விட்டது போலும்... :)"
யக்கா பின்னூட்ட கயமைத்தனம் முதலிய மேட்டர் எல்லாம் நமக்கு புதுச என்ன. என்னவொ தெரியல எனக்கு தேன்கூடு போட்டியும் நம்ம ஜெயிச்ச கதையும் தான் ஞாபகம் வருது. எவன் Blog hit rate increase அனா நமக்கு என்ன? இதுக்கு பேரு தான் எங்க ஊருல வைத்தெரிச்சல் அப்படின்னு சொல்லுவாங்க.

"நவம்பர் மாதம் பிளாக்கர் கணக்கு உருவாக்கிய சர்வேசன் அதற்குள் பதிவர்களை அளக்கும் அளவுக்கு எப்படி வந்தார்" என்று கேள்வி எழுப்புகிறார்கள் அமுகவினர். "சர்வேசனை நம்பலாமா?" என்று இன்னுமொரு அளப்பானே தொடங்கிவிட்டார் இம்சை அரசன். "

அது சரி யாருங்க இவங்க எல்லாம்? உள்ளூர் வைத்தெறிச்சல் கோஷ்டியா இருக்குமோ? உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்ளோ? தெரிஞ்சவங்களோ?

"பல்சுவை, ஆன்மீகம், சமூக அக்கறை, அரசியல் தவிர வேறு வகைகளே இல்லையா என்ன? யோசித்தால் அறிவியல்"

இருக்கு தான் கேள்வி கேட்பது சுலபம். ஏன் நீங்களும் உங்க பட்டிண கோஷ்டியும் இது மாதிரி ஏதாவது செய்ய வேண்டியது தானே?

"தருமி போன்ற நாத்திகவாதிகளையும் அதில் சேர்த்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்."

காமெடிக்கு ஒரு அளவே இல்லையா? ஆன்மீகத்துல கடவுள் மறுப்பு பதிவாளர்களா? உங்க கூட ஒரே தமாசு தான்

"சர்வே குறித்த கேள்விகளை, அதில் பெயர் வராத ஏக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாக திரிந்துவிடக் கூடாதென்ற பயம்"

என்ன பயம் என்ன பயம்

"ஐயா, சர்வேசா, நேர்மையான தேர்தல் என்றால், தேர்தல் அதிகாரிகள் பேரைச் சொல்லும்மைய்யா..."

தமிழ்மணத்துல நட்சத்திரமா தேர்ந்து எடுத்த பொழுது வராத கேள்வி அதாவது யாரு எப்படி எந்த நிர்வாகி தேர்ந்து எடுக்கிறாருன்னு வெளியே தெரியாத பட்சத்தில் எப்படி நம்ம கேள்வி கேக்காம போயி உட்கார்ந்தோம்? இம்சை அரசன், அனானி போன்ற பதிவாளர்கள் யாருன்னு தெரியாமலேயே அவங்களுக்கும், அவங்க கருத்துக்களுக்கும் குடை பிடிச்சோம். நம்ம சுத்தி நாலு விசிலடிச்சான் குஞ்சிகள் யக்கா நீங்க பெரிய எழுத்தாளினி அப்ப்டின்னு சொல்றதை வச்சி போதை மண்டைக்கு ஏறி திரியக்கூடாது. யாருப்பா அந்த போட்டியை நடத்துறது அக்காக்கு ஒரு சீட்டை போட்டு இருந்தா இந்த கேள்வியே வந்து இருக்காது இல்ல.

Anonymous said...

" விடாதுகருப்பு சைட்...
நேற்றைக்கு பெய்த ம்ழையில் இன்றைக்கு முளைத்த காளானாய் தெரியவில்லை சர்வே.. திட்டமிட்ட குயில்கூட்டின் ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.

பொன்ஸ், அருமையாக வெளியுலகத்துக்கு அறிவித்து விட்டீர்கள்.

இவர்கள் தேர்ந்து எடுக்காவிட்டால் நாம் சிறந்த பதிவர் இல்லையென்று அர்த்தம் ஆகாது. "

இதோ பாருடா யாருன்னு கருத்து சுதந்திர அண்ணாச்சி. போலி பக்கங்களும் நானே கருத்து சொல்றதும் நானே. இப்ப எல்லாம் அடுத்தவங்க பெயரில் பக்கம் ஆரம்பிப்பது இல்ல. அக்கா கூட அவங்க பெயரில் தளம் ஆரம்பிச்சதுல இருந்து ரொம்ப பாசக்காரங்க ஆயிட்டிங்க போல. என்ன எல்லாம் ஒருத்தன் என் வீட்டு பக்கம் வராதடா நாயேன்னு சொன்னா செத்தாலும் அந்த பக்கம் போக மாட்டேன். இது எல்லாம் ஒரு ஜென்மம்

பொன்ஸ்~~Poorna said...

// என்னவொ தெரியல எனக்கு தேன்கூடு போட்டியும் நம்ம ஜெயிச்ச கதையும் தான் ஞாபகம் வருது. எவன் Blog hit rate increase அனா நமக்கு என்ன? இதுக்கு பேரு தான் எங்க ஊருல வைத்தெரிச்சல் அப்படின்னு சொல்லுவாங்க. //
ஹாய் அனானி, தேன் கூடு போட்டில ஜெயிச்சவங்க லிஸ்ட்ல ஒருத்தரா நீங்க? அட! சூப்பர் க்ளூவா இருக்கே இது..

// அது சரி யாருங்க இவங்க எல்லாம்? //
தொடங்கி வச்ச சர்வேசனும், நடுவர் குழுவும் யாருன்னே தெரியலை.. நடுவுல புகுந்து கருத்து கணிக்கிறவங்க யாருன்னு யாருக்குத் தெரியும்?

// உள்ளூர் வைத்தெறிச்சல் கோஷ்டியா இருக்குமோ? உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்ளோ? தெரிஞ்சவங்களோ?//
இல்லீங்க.. அனானி முன்னேற்றக் குழுவானதுனால, அனானியான உங்களுக்கு வேண்டியவங்கன்னு நான் நினைச்சேன்..

// இருக்கு தான் கேள்வி கேட்பது சுலபம். ஏன் நீங்களும் உங்க பட்டிண கோஷ்டியும் இது மாதிரி ஏதாவது செய்ய வேண்டியது தானே? //
எதுக்குங்கிறேன்? எதுக்கு? ஓட்டெடுப்பு நடக்கிறது தப்புன்னு நான் எங்கிட்டாவது சொல்லுருக்கேனா என்ன?

//காமெடிக்கு ஒரு அளவே இல்லையா? ஆன்மீகத்துல கடவுள் மறுப்பு பதிவாளர்களா? உங்க கூட ஒரே தமாசு தான் //
காமெடிக்கெல்லாம் ஏதுங்கண்ணா அளவு? ஆக, கடவுள் மறுப்பாளர்னு நிறைய பேர் இருந்தாலும் அப்படியே விட்ரலாங்கிறீங்களா? சரி, விடுங்க.. உங்க ஆசையக் கெடுப்பானேன்.

// தமிழ்மணத்துல நட்சத்திரமா தேர்ந்து எடுத்த பொழுது வராத கேள்வி அதாவது யாரு எப்படி எந்த நிர்வாகி தேர்ந்து எடுக்கிறாருன்னு வெளியே தெரியாத பட்சத்தில் எப்படி நம்ம கேள்வி கேக்காம போயி உட்கார்ந்தோம்? //
யாருன்னு எனக்குத் தெரியவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியலை... ஏன்னா, அதுக்கான அளப்பானெல்லாம் என்னனு தெளிவா வச்சிருக்காங்க. இங்க அதையாச்சும் சொல்லச் சொல்லுங்களேன்..

// இம்சை அரசன், அனானி போன்ற பதிவாளர்கள் யாருன்னு தெரியாமலேயே அவங்களுக்கும், அவங்க கருத்துக்களுக்கும் குடை பிடிச்சோம். //
எங்க சாமி? குடை எங்க இருக்கு? நான் கேட்ட கேள்விகளுக்கும் அவங்க கேட்ட கேள்விகளுக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா என்ன? வந்து கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லச் சொல்லுங்க.. நான் பேசாம போகப் போறேன்..

// யாருப்பா அந்த போட்டியை நடத்துறது அக்காக்கு ஒரு சீட்டை போட்டு இருந்தா இந்த கேள்வியே வந்து இருக்காது இல்ல. //
அப்பவும் வந்திருக்கும், ஏன்னா, கேட்ட கேள்விக்கு, நீங்களும் சர்வேசனும், யாருமே இன்னும் பதில் சொல்லலையே! பேர் போட்டவங்க கூட இங்கிட்டும் அங்கிட்டும் கூட "வேணாம், வேணாம்னு" புலம்புறதப் பார்க்கலியா? மானிட்டர ஒருமுறை தொடச்சிட்டுப் பாருங்க...

இலவசக்கொத்தனார் said...

பொன்ஸ்,

அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு அவர் போட்டு இருக்கார். அது என்ன பெரிய நோபல் பரிசா? இண்டிரஸ்ட் இருந்தா ஓட்டு போடுங்க. இல்லையா, சிரிச்சுக்கிட்டே போங்க. அவருக்கும் என் அளவுக்குத்தான் கவுஜ புடிக்கும் போல அதுனால அதைப் போடலை. இதப் போயி ஒரு பெரிய விஷயமா ஆளாக்கு பதிவு போட்டு பேசறது நல்லாவா இருக்கு?

அதுவும் இல்லையா? நீங்க சொன்ன எல்லா பாயிண்டையும் எடுத்துக்கிட்டு ஒரு தேர்தல் நடத்துங்க. எதுக்காக இவ்வளவு சர்ச்சை. எனக்கு புரியவே இல்லை. அவரு என்ன தமிழ் வலைப்பதிவின் அதிகார பூர்வமான அவார்டா தராரு?

எல்லாத்தையும் ஒரு பரபரப்பான நோக்கத்திலயே பார்க்கணும் அப்படிங்கிறது இப்போ எழுதப்படாத விதியாகவே ஆயிடுச்சு. ரொம்ப வருந்தத்தக்க நிலைதான் இது.

Boston Bala said...

---ஆன்மீகப் பதிவர்கள் விட்டுப்போனது ஒரு குறை என்றால்,---

related news...
Harvard drops religion course requirement | US News | Reuters.com: "It has proposed a new course requirement on "what it means to be a human being," which is expected to broadly cover a number of areas in the humanities.

Task force members were convinced by their colleagues religion and spirituality would be adequately covered by other categories, including the moral reasoning requirement and requirements covering society in the United States and abroad."

VSK said...

கொத்ஸின் கருத்துகளுடன் முழுதுமாக ஒத்துப் போகிறேன்.

இது போன்ற பதிவுகளெல்லாம் அடுத்தவரின் ஆர்வத்தைக் குறைக்கச் செய்யும் முயற்சியாகக் கருதுகிறேன்.

வேணும்னா, ஒத்துப் போகாதவங்க கலந்துக்க வேணாம்; அல்லது தனி சர்வே ஆரம்பிக்கலாமே!

Anonymous said...

கொத்ஸ்,

//எல்லாத்தையும் ஒரு பரபரப்பான நோக்கத்திலயே பார்க்கணும் அப்படிங்கிறது இப்போ எழுதப்படாத விதியாகவே ஆயிடுச்சு. ரொம்ப வருந்தத்தக்க நிலைதான் இது. //

ரிபீட்டூ....

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்நதி, நன்றி :)))

//தமிழ் நதி பெயர் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. மத்தவங்க பெயர் யாரும் சிபாரிசலயே.//
சர்வேசன், சிபாரிசுகளை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறீர்களா? அப்படியெனில் சிபாரிசுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஒதுக்கி இருக்கலாம்; இந்த விதியையும் சிபாரிசின் போதே தெளிவாக்கி இருக்கலாம். ஏற்கனவே எனக்குப் பிடித்தவர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமையால், நான் விட்டுப் போனவர்களின் பேரைத் தான் சிபாரிசு செய்தேன். சிபாரிசு எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்திருந்தால், நான் மீண்டும் சொல்ல வேண்டாமே என்று விட்டுப் போன சிபாரிசுகள் வீணாகிவிட்டனவே!

// so, என்னென்ன category வேணும்னு வரிசையா சொல்லி, யார் யார் பெயரை போடணும்னும் சொன்னீங்கன்னா lineஆ கொடுத்திடலாம் :) //
நான் சொல்லி நீங்க சர்வே செய்யணுமா?!.. உங்க மூவர் குழுவையோ, இல்லைன்னா இங்க முன்னாடி வந்த "பரிசு பெற்ற அனானியையோ" கேளுங்க. எனக்கு வேணும்னா தனியா சர்வே நடத்திக்கிடறேன்..

ரொம்ப முக்கியம், வாங்க.. அப்பாலிக்கா வர்வீங்கன்னு காத்திருக்கேன் :)

கருப்பு, நீங்க சொல்வதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. சர்வே யாருடைய ஏற்பாடாக இருந்தால் என்ன.. அதில் உள்ள சில தகவல் பிழைகளையே இங்கே சுட்டிக் காட்டி இருக்கு..

லக்கி, அதான் இப்போதைக்கு யாரையும் நீக்க முடியாதுன்னு சொல்லிட்டாரே..

கொத்ஸ், எஸ்கே, நன்றி..
சர்வேக்கு வெளியில் மற்றவர்கள் விளம்பரம் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறார் சர்வேசன்(பார்க்க அவர் பதிவு). விளம்பரம் கொடுக்கவேண்டும், அதில் இருப்பவர்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால், விமர்சனங்களும் வரும்.. அதையும் கேட்கணும்.. அவ்வளவு தான்.

பாபா, என்ன சொல்றீங்க? ஆன்மீகம்னு ஒரு வகை இருப்பதே தப்புன்னா :-D :))

Anonymous said...

//சர்வேசன், சிபாரிசுகளை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறீர்களா? அப்படியெனில் சிபாரிசுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஒதுக்கி இருக்கலாம்; இந்த விதியையும் சிபாரிசின் போதே தெளிவாக்கி இருக்கலாம். ஏற்கனவே எனக்குப் பிடித்தவர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமையால், நான் விட்டுப் போனவர்களின் பேரைத் தான் சிபாரிசு செய்தேன். சிபாரிசு எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்திருந்தால், நான் மீண்டும் சொல்ல வேண்டாமே என்று விட்டுப் போன சிபாரிசுகள் வீணாகிவிட்டனவே//


சிபாரிசு எண்ணிக்கை எல்லாம் கணக்கில் வைக்கவில்லை. நீங்க சொன்ன ஈழப் பதிவர்கள் சில பேரை யாரும் சிபாரிசு செய்யவில்லை போலும்.

விளம்பரத்துக்கு நன்றி. தொடரட்டும் அலசல்கள்.
புது சர்வே பாத்தீங்களா? வந்துட்டு போங்க. :)

Boston Bala said...

---ஆன்மீகம்னு ஒரு வகை இருப்பதே தப்புன்னா ---

எதுவரை ஆன்மீகத்தின் எல்லை என்பதில் ஹார்வார்டுக்குப் பரிந்துரைப்பவர்களுக்கே இன்றைய தேதியில்தான் பிறிதொரு சிந்தனையை நடைமுறை செய்திருக்கிறது.

கட்டம் கட்டி, இது நையாண்டி, இது அரசியல், இது நகைச்சுவை என்று எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் பதிவுகளையும் வகைப் படுத்த முடியாது. ;)

நீங்க ஏதோ ஆன்மிகத்தைப் பற்றி சொல்லியிருந்தீங்க... ஹார்வர்டு குழுவும் கருத்து விட்டிருந்தாங்க... ஆறு வித்தியாசம் கண்டுபிடித்துக் கொள்ள உங்களிடமே விட்டு, மறுமொழிந்தவுடன் என் வேலை முடிந்தது :)

Syam said...

யக்கா எனக்கும் வருத்தம்தான்..ஒரு போட்டி வெச்சா எல்லா கேட்டகிரியும் இருக்கனும்...என்ன மாதிரி மொக்க போடுறவங்கள எல்லாம் மதிக்கவே இல்ல நம்ம சர்வேசன் :-)

Udhayakumar said...

//கட்டம் கட்டி, இது நையாண்டி, இது அரசியல், இது நகைச்சுவை என்று எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் பதிவுகளையும் வகைப் படுத்த முடியாது. ;)//

பாபா, அப்போ சர்வே'சன்' பண்ணறது தப்புங்கறீங்களா?

Anonymous said...

நான்கூட அந்த லிஸ்ட்ல இல்ல ஸ்யாம். நம்மல்லாம் பதிவுலகிற்காக எப்படியெல்லாம் உழைச்சோம் :-)

Anonymous said...

என்னங்க வேற யாரும் ஒண்ணும் சொல்லலியா இன்னிக்கு?

சர்வே எடுப்பது எப்படின்னு தனியா ஒரு சர்வே போடணும் போலருக்கே :)

btw, பொன்ஸ் template அட்டகாசமா இருக்கு. பழைய template attractive இல்லன்னு மூவர் குழுல ஒருத்தர் சொன்னாரு (may be that played a crucial role in not selecting your post for this year :) நாராயண நாராயண )

Anonymous said...

udhayakumar

//பாபா, அப்போ சர்வே'சன்' பண்ணறது தப்புங்கறீங்களா? //

அவருதான் கட்டம் கட்டி போட முடியாதுன்னு சொல்லிட்டாரே.

நானும் தான் 100% யாரும் ஒரு கட்டத்துக்குள் fit ஆகலன்னு சொல்லிட்டேனேய்யா.

so, நம்ம வழி சரியான வழி தான் :)

மறவாதீர் கண்மணிகளே, வாக்களிக்க கடைசி நாள் December 22nd 8.00 AM IST.

ஓட்டு போட இங்கே க்ளிக்குங்க