Friday, December 01, 2006

பூனை.. பூனை.. பூனைக் குட்டி...

[தலைப்புக்காக நாடோடிக்கு நன்றி. பதிவும் இன்னுமொரு மீள் பதிவு தான். சிறுவர் பூங்காவில் இருந்ததை இங்கே பொன்ஸ் பக்கங்களில்..]


எங்கள் வீட்டுப் பூனை


எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை;
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை


தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை.
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை




அருஞ்சொற் பொருள்:[இது ஒண்ணு தான் குறைச்சல் :) ]
பகை = பகைவனான காட்டுப் பூனை

படத்தில் இருப்பது நாங்கள் வளர்த்த செல்லப் பூனை பொம்மு.

6 comments:

இராம்/Raam said...

யக்கா.

சின்னடவுட்... பூனைக்காக இப்பிடி ஒரு கவுஜ எழுதிருக்கீங்களே. அது இன்னமும் உசுரோட இருக்கா???

சான்ஸே இல்லே அது இந்நேரம் போயி சேர்ந்திருக்கும்... ;)))

We The People said...

//சின்னடவுட்... பூனைக்காக இப்பிடி ஒரு கவுஜ எழுதிருக்கீங்களே. அது இன்னமும் உசுரோட இருக்கா???//

யாருபா அது பொன்ஸை கலாக்கிறது. பொ.க.ச ஆரம்பிச்சிட்டீங்களா??

லதா said...

யானைக்கொரு காலம் வந்தா ..... என்ற பழமொழிக்காகவா ?
:-)))

Machi said...

ஆனை ஆனை பாட்டு மாதிரி இருக்கு பாட புத்தகத்தில் போட சொல்லி வலைப்பதிவர்கள் சார்பா தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம் போட்டுடலாமா?

/காலை சரியாய் அழைத்து/ - புரியலையே?

நாங்க ஒரு பூனை வளர்த்தோம் அதுவும் உங்க பூனை மாதிரியே இருந்துச்சு, எங்க பூனையும் வெளியே ஊர்/சாலை சுத்துனப்ப
ஊருக்கு வந்த நரிக்குறவங்க அடிச்சி தின்னுட்டாங்க. :-(

பொன்ஸ்~~Poorna said...

ராம், பூனை நெஜமாவே செத்துப் போயிடுச்சு.. ஆனா, இதான் காரணமான்னு தெரியலியே!! :(( [பூனை ஏன் இறந்துச்சுன்னு தெரியணுமா? படியுங்கள் ஏன்??]

ஜெய்சங்கர், பொகச ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சு! :( அது பத்தி கேட்கவேண்டியவங்க கிட்டகேளுங்க .. :(((

லதா :))))

//ஆனை ஆனை பாட்டு மாதிரி இருக்கு பாட புத்தகத்தில் போட சொல்லி வலைப்பதிவர்கள் சார்பா தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம் போட்டுடலாமா?//
போடுவோமே குறும்பன்

காலையில் சரியாய் அழைத்து- ன்னு இருக்கணும்.. பொருட் பிழை. பொறுத்தருள்க.. :)) எங்க பூனை சேவல் மாதிரி காலையில் எழுப்பிக் கூட விடும் :) அதான் அது :)

இராம்/Raam said...

//ஜெய்சங்கர், பொகச ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சு! :( அது பத்தி கேட்கவேண்டியவங்க கிட்டகேளுங்க .. :(((//


ஆமாம் கரெக்ட் என்க்கிட்டே கேளுங்க சொல்லுறேன் அதேபத்தி........ :)))