"டேய்! இது தப்புடா!" பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
"என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?" ராம் சீறினான்.
"மாப்பிள்ளை என்ன சொல்றாரு?" தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.
"வந்து.." அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்
"நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!" கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
"இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்" சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.
******************
ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.
"டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு" அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை
"அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?" இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.
"ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?" என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.
*********
"என்ன ராம், பொண்ணு எப்படி?"
பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.
"எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்.." என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.
பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.
"என்ன சொல்றா பொண்ணு?" இராம்குமாரின் தந்தை
"அது.. வந்து.. " பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.
"சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா.."
இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
"என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?" அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.
"அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.." என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.
[பத்து வருடங்களுக்கு முன்னால், குமுதம் ஒரு பக்கக் கதைகள் வகையில் முயற்சித்தது..
33 comments:
இளையவன் ரவி character கதையில் வரும் போதே தெரிந்துவிட்டது கதையின் முடிவு :)...
நல்ல கதை.
நல்லா இருக்கு பொன்ஸ்
10 வருசமாகியும் குமுதம் இன்னம் மாறலைனு சொல்றீங்களா :-)
அட அட என்னாமா எழுதி இருகீங்க பொன்ஸக்கா ! நல்லா இருக்குங்கோ !!
முடிவு யூகிக்க முடிந்தது.
பெண்ணியம் பேசுற மாதிரி கதை இன்னைய தமிழ் மண சூழலுக்கு ஏத்த மாதிரி இருந்ததால கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ரசிக்க முடிந்தது.
பொன்ஸ்..நல்ல கதை!
ஸ்ருதி, ப்ரியன், பாண்டி, முல்லை - நன்றி
முத்துகுமரன், பத்து வருஷமா?!.. நீங்க வேற.. எத்தனை வருஷமானாலும் குமுதம் ஒரு பக்கக் கதைகள் மாறாதுன்னு தான் தோணுது :)))
//இன்னைய தமிழ் மண சூழலுக்கு ஏத்த மாதிரி இருந்ததால //
செந்தில், மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே.. சரியாப் பாருங்க, இது வெள்ளிக்கிழமை வலையேற்றப்பட்டது.. பத்துவருடத்துக்கு முன்னால எழுதினது.. ரொம்ப பழசு.. இன்றைய சூழ்நிலைக்காக எழுதியது இல்லை :)
:)))
//வெள்ளிக்கிழமை வலையேற்றப்பட்டது..// தமிழ்மணத்தில் இன்றுதானே வந்திருக்கிறது?
இதே போல இன்னொரு கதை படித்த நினைவு. அதில் கதை இம்மாதிரி போகிறது.
முதல் அதிர்ச்சிக்கு பிறகு, தீபாவின் தங்கை மறுபடி அப்போதே தன்னைப் பெண் பார்க்க ஏற்பாடு செய்து அங்கேயே தம்பியைத் தேர்ந்தெடுக்கிறாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
vi:)
//தமிழ்மணத்தில் இன்றுதானே வந்திருக்கிறது? //
சிந்தாநதி, அது ஒரு சோகக் கதை.. செந்தில் சாபம்னு நினைக்கிறேன்; பீட்டாவுக்கு மாறியபின் இந்த வலைப்பூ தமிழ்மணத்தில் சேர கிட்டத் தட்ட ஒரு மாதமாகிவிட்டது :(
//முதல் அதிர்ச்சிக்கு பிறகு, தீபாவின் தங்கை மறுபடி அப்போதே தன்னைப் பெண் பார்க்க ஏற்பாடு செய்து அங்கேயே தம்பியைத் தேர்ந்தெடுக்கிறாள்.//
இந்த முடிவு இன்னும் நல்லா இருக்கு டோண்டு சார்.. :)
//vi:) //
vi?? என்னாச்சு? :))
கதையின் முடிவு யூகிக்க முடிந்தது...
I -- > Very interesting ஹிஹிஹி
:):):)
p.s:
vi ==> "VI"naiooki, இங்க டைப் ஆயிடுச்சு,
கதை ரொம்ப எளிமையா இருக்குங்க!
(எளிமை எப்பவுமே அழகுதான் :) )
பொன்ஸ்,
நல்ல கதை.
ஹாஹா.. நல்லாருக்குதுங்க கதை!
//கதையின் முடிவு யூகிக்க முடிந்தது//
சிஜி, குமுதம் ஒருபக்கக் கதைன்னு சொல்லிட்டேனே ;)
ஓ.. வினையூக்கி, அ.ச!! - (அப்ப சரி ;) )
அருட்பெருங்கோ, வெற்றி, நன்றி...
சேது :) //ஹாஹா.. நல்லாருக்குதுங்க கதை!//
அது சரி :)))
அலைபாயுதே (கதைக்கு என்ன தலைப்பு?)
//(கதைக்கு என்ன தலைப்பு?) //
பாபா, அப்போ வச்ச தலைப்பு "முற்பகல் செய்யின்.." :)
சகோதர பாசம் :)
(தங்கள் தலைப்பு நன்றாக இருக்கு)
ரொம்பவே சப்புன்னு போச்சுங்க. இவரை நிராகரிச்சதுனால ஞானம் பொறந்திடுச்சா? இவரு வேணாம்னா ஒதுங்கிப் போயி அப்புறம் வந்து வேணும்னா சரின்னு அந்த தீபா மட்டும் தலையாட்டணுமா?
என்னமோ போங்க! :)))
என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணல்லியே ?
சின்ன வயசுலேயே சமூக கதை எல்லாம் எழுத துவங்கியாச்சா ? பெரிய ஆளுதாம் நீங்க !!
தீபாவும் நிராகரிச்ச மாதிரி கதை முடிஞ்சிருந்தா ராம் மீது மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்துருக்கும்
ஒரு நிமிடக் கதைன்னு சொன்னீங்கோ...
எனக்கு ஒன்னரை நிமிசம் ஆகிப் போச்சு :))...
எக்ஸ்பெக்ட் த அன்-எக்ஸ்பெக்டட்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...
நல்லாயிருக்குங்க பொன்ஸ் அக்கா :)
ஆனா அதுக்கப்புறம் தீபா என்ன சொல்லும்? தீபாவோட தங்கச்சி என்ன சொல்லும்??
யக்கோவ்,
கதை நல்லாயிருக்கு...
இ.கொ. & இ.அ.,
---ரொம்பவே சப்புன்னு போச்சுங்க. இவரை நிராகரிச்சதுனால ஞானம் பொறந்திடுச்சா?---
---அதுக்கப்புறம் தீபா என்ன சொல்லும்? தீபாவோட தங்கச்சி என்ன சொல்லும்??---
பொதுவாக சில சந்தேகம் (நான் தருமி (திருவிளையாடல்) மாதிரிங்க... கேக்கத்தான் தெரியும் : )
1. இந்த மாதிரி கேள்விகளை எழுப்பினால், அது முக்கியமான கதைதானே? பலரையும் சிந்திக்க வைக்கிறதே!
2. கதாமாந்தர்கள் எல்லாரும் அகிலனின் நாயகர்கள் மாதிரி நல்லவன் + வல்லவன் ஆக அமைதல் அவசியமா? எதிர்மறை புரிதல்களை உணர்த்தும் நடையும் அவசியமா?
3. கதையில் வரும் மக்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கலாமா? நிஜத்தை பிரதிபலித்து, அனுசரித்துப் போகும் நிலையை புனைவுகள் முன்னிறுத்த வேண்டுமா?
4. கட்டுரையில்தான் கருத்து பேதம் காட்டலாம்; வாதிடலாம். கதையில் கூடாது. சரியா? (காலச்சுவடு 'பிள்ளை கெடுத்தால் வினை குறித்த விவாதங்கள்' என்று புத்தகமேப் போட்டிருக்கிறது. மேற்பட்ட கேள்விக்கு ஆம் என்றால், சர்ச்சைகளை அச்சடித்து, மதிப்பு கூட்டுவது தவறா?)
ஏதோ என்னாலானது : )
பாபா,
என்ன சொல்ல வறீங்க? என்னமோ கதையைப் படிச்சேன். தோணுனதை சொன்னேன். அதுக்கு இப்படி அக்கு வேற ஆணி வேறையா கழட்டி நம்பெரெல்லாம் போட்டு பின்னி எடுத்தீங்கன்னா என்ன பண்ணறது? அழுதுடுவேன் சொல்லிட்டேன். ஆமா!
பாபா, :)
கொத்ஸ், ஞானம் எங்கயாவது இப்படி ஒரு இடத்தில் தான் கிடைக்கிறது.. தீபா என்ன செஞ்சான்னு நாம சொல்லவே இல்லையே.. விட்டா இதையே ஒரு மெகா சீரியல் ஆக்கிடுவீங்க போலிருக்கே :)))
ரவி, உங்களை வச்சி காமடியா :))
ப்ராஸ்ராம், ஆமாம். ராம் மீது எந்த அனுதாபமும் வேண்டாம் :)
ஜி, எனக்கு ஒரு நிமிசம் தாங்க ஆச்சு :))
இம்சை அரசி, நன்றி :)) அப்படியே யோசிச்சிகிட்டே இருங்க, "முற்பகல் செய்யின் பார்ட் டூ" போட்ருவோம் ;)
இராம், நன்றி, (ஏன் இ திடீர்னு?:) )
கொத்ஸ், விக்கி பசங்கன்னு சொல்லி "எல்லாக் கேள்விக்கும் பதில் இருக்கு எங்க கிட்ட"ன்னு சொல்றீங்க! பாபாவின் நாலு கேள்விக்குப் பயந்தா எப்படி? ;)
//இராம், நன்றி, (ஏன் இ திடீர்னு?:) )//
யக்கோவ்,
நான் ஏன் மாத்தினேன்னா - II ன்னு பதிவு போடுறேன்.
இன்னுமொரு துன்பியல் அனுபவம்.
:((
//கட்டுரையில்தான் கருத்து பேதம் காட்டலாம்; வாதிடலாம்.//
கவிதையை விட்டுட்டீங்களே பாபா? கவிதான்னா கருத்து பேதத்துக்கு முன்னாடி வடிவ பேதத்தைக் கண்டே சிலர் குதிப்பாங்களே :-D
//நான் ஏன் மாத்தினேன்னா - II ன்னு பதிவு போடுறேன்.//
இராம், நானிங்கே வெயிட்டிங்
//"அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.." //
கதை முடிவில் கூட அந்த இராம்குமார் திருந்தவில்லை. அந்த தீபா இதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள கூடாது!
Post a Comment