Saturday, January 06, 2007

Happy Feet

கடைசியாக நானும் ஹாப்பி பீட் என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்.




அண்டார்டிகா கண்டத்து பெங்குயின்களும், அவற்றின் மீன் தட்டுப்பாடும், மனிதர்கள் பெங்குயின்களின் தட்டுப்பாட்டை உணர்ந்து தமது ஆழ்கடல் மீன் பிடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதும் தான் படத்தின் முக்கிய கதை. கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தெக்கிக் காட்டானின் பதிவைப் பார்க்கலாம்.

பலரும் சொல்லிவிட்டது போல், இசை மிக மிக அழகு. கொள்ளை கொள்ளும் பாடல்கள். அத்துடன் நடனமும்.




முக்கிய விஷயமான ஆழ்கடல் மீன்பிடித்தலைத் தவிர எனக்கு இந்தப் படத்தில் தென்பட்ட சில விசயங்கள்:

  • Disabled Penguin ஆக சித்தரிக்கப் படாமல் Differently Abled Penguin ஆக முன்னிறுத்தப் படும் மம்பிளின் சந்தோசக் குதிப்பு.


  • பெங்குயின் மொழி என்று பிரித்துச் சொல்வதன் மூலம் அது மனிதர்களுக்குப் புரிவதில்லை என்று உண்மை காட்டியிருக்கும் விதமும் அழகு.


  • பெங்குயின் கார்ட்டூன்கள் வழக்கம் போல் அழகு. முக்கியமாக கதாநாயகனைப் பிரித்துக் காட்ட முதுகில் ஒரு வெள்ளை நிறமும், அவனது அம்மாவைப் பிரித்துக் காட்ட மச்சம் வைத்திருந்த விதமும் எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றியது


  • வித்தியாசமான திறமையுள்ள மம்பிளை அதன் கூட்டத்தார் ஏற்காமல் போவது கூட மனித வாழ்க்கைக்கு மிக மிக அருகில் உள்ள விஷயமாக இருக்கிறது.


  • "எல்லாரிடமும் ஒரு நல்ல பக்கம் இருக்கும், அந்தப் பக்கத்தில் அணுகினால், நாம் சொல்வதைக் கேட்க வைக்க முடியும்" என்ற மம்பிளின் அணுகுமுறை இன்னுமொரு அற்புதமான பாடம்.


  • பெங்குயின் பற்றிய புனைவிலும் லவ்லேஸ் போன்ற போலிச் சாமியார்களைச் சேர்த்து மூடநம்பிக்கைகளையும் சாடியுள்ளமை மற்றொரு அழகு


  • Alien என்று பிற கிரக, பிற சூரிய குடும்ப உயிர்களை நாம் அழைத்தால், இதே பூமியில் இருக்கும் ஒரு உயிரினம்/பல உயிரினங்கள், மனிதனையும் alienஆக நினைக்கக் கூடிய அளவில் தான் நாம் நமது சக பூமிவாசிகளை மதிக்கிறோம் என்றும் நிறுவியிருக்கிறார் கதாசிரியர்.


  • உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் "இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்" என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.




  • எப்படியும் படம் பார்த்து முடிக்கும் போது, "ஆக, இப்படி ஏதாவது சந்தோஷக் குதிப்பு, போன்ற வித்தியாசமான செயல்தன்மை இருந்தால் தான் இயற்கையின் எல்லா விலங்குகளையும் உயிரோடு இருக்க விடப் போகிறானா மனிதன்?!" என்ற கேள்வி திரும்பி வரும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது..

    தொடர்புள்ள பதிவு: Happy Feet பற்றிய அஞ்சலியின் பார்வை

    6 comments:

    ✪சிந்தாநதி said...

    விமர்சனத்தைக்கூட தரமான படைப்பாக ஆக்கியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    அதுசரி தமிழ்மணத்தில் பதிவுக்கான படம் என்ன யானைக்கு பதிலா வேறெதுவோ வருது...?

    senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

    இன்னைக்குப் போகலாம் நாளை போகலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன். பதிவு ஆவலை இன்னும் தூண்டி விட்டது.

    ///
    உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் "இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்" என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.
    ///

    உங்களைப் போலவே நினைத்துக் கொண்டிருந்த என் சிந்தனையை Life of PI புத்தகத்தில் வரும் இந்த பகுதி மாற்றி விட்டது. அதனை அப்படியே இங்கே கொடுக்கிறேன். உயிர்க்காட்சியக காப்பாளரின் மகனாக வரும் piயின் சிந்தனையாக அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. இது உண்மையா என்று தெரியாது ஆனால் zooவைப் பற்றி சிந்தனையை மாற்றியது உண்மை.

    I have heard nearly as much nonsense about zoos as I have about God and religion. Well-meaning but misinformed people think animals in the wild are "happy" because they are "free". These people usually have a large, handsome predator in mind, a lion or a cheetah (the life of a gnu or of an aardvark is rarely exalted). They imagine this wild animal roaming about the savannah on digestive walks after eating a prey that accepted its lot piously, or going for callisthenic runs to stay slim after overindulging. They imagine this animal overseeing its offspring proudly and tenderly, the whole family watching the setting of the sun from the limbs of trees with sighs of pleasure. The life of the wild animal is simple, noble and meaningful, they imagine. Then it is captured by wicked men and thrown into tiny jails. Its "happiness" is dashed. It yearns mightily for "freedom" and does all it can to escape. Being denied its "freedom" for too long, the animal becomes a shadow of itself, its spirit broken. So some people imagine.

    This is not the way it is.

    Animals in the wild lead lives of compulsion and necessity within an unforgiving social hierarchy in an environment where the supply of fear is high and the supply of food low and where territory must constantly be defended and parasites forever endured. What is the meaning of freedom in such a context? Animals in the wild are, in practice, free neither in space nor in time, nor in their personal relations. In theory—that is, as a simple physical possibility—an animal could pick up and go, flaunting all the social conventions and boundaries proper to its species. But such an event is less likely to happen than for a member of our own species, say a shopkeeper with all the usual ties—to family, to friends, to society—to drop everything and walk away from his life with only the spare change in his pockets and the clothes on his frame. If a man, boldest and most intelligent of creatures, won't wander from place to place, a stranger to all, beholden to none, why would an animal, which is by temperament far more conservative? For that is what animals are, conservative, one might even say reactionary. The smallest changes can upset them. They want things to be just so, day after day, month after month. Surprises are highly disagreeable to them. You see this in their spatial relations. An animal inhabits its space, whether in a zoo or in the wild, in the same way chess pieces move about a chessboard—significantly. There is no more happenstance, no more "freedom", involved in the whereabouts of a lizard or a bear or a deer than in the location of a knight on a chessboard. Both speak of pattern and purpose. In the wild, animals stick to the same paths for the same pressing reasons, season after season. In a zoo, if an animal is not in its normal place in its regular posture at the usual hour, it means something. It may be the reflection of nothing more than a minor change in the environment. A coiled hose left out by a keeper has made a menacing impression. A puddle has formed that bothers the animal. A ladder is making a shadow. But it could mean something more. At its worst, it could be that most dreaded thing to a zoo director: a symptom, a herald of trouble to come, a reason to inspect the dung, to cross-examine the keeper, to summon the vet. All this because a stork is not standing where it usually stands!

    But let me pursue for a moment only one aspect of the question.

    If you went to a home, kicked down the front door, chased the people who lived there out into the street and said, "Go! You are free! Free as a bird! Go! Go!"—do you think they would shout and dance for joy? They wouldn't. Birds are not free. The people you've just evicted would sputter,"With what right do you throw us out? This is our home. We own it. We have lived here for years. We're calling the police, you scoundrel."

    Don't we say, "There's no place like home"? That's certainly what animals feel. Animals are territorial. That is the key to their minds. Only a familiar territory will allow them to fulfill the two relentless imperatives of the wild: the avoidance of enemies and the getting of food and water. A biologically sound zoo enclosure—whether cage, pit, moated island, corral, terrarium, aviary or aquarium—is just another territory, peculiar only in its size and in its proximity to human territory.That it is so much smaller than what it would be in nature stands to reason. Territories in the wild are large not as a matter of taste but of necessity. In a zoo, we do for animals what we have done for ourselves with houses: we bring together in a small space what in the wild is spread out. Whereas before for us the cave was here, the river over there, the hunting grounds a mile that way, the lookout next to it, the berries somewhere else—all of them infested with lions, snakes, ants, leeches and poison ivy—now the river flows through taps at hand's reach and we can wash next to where we sleep, we can eat where we have cooked, and we can surround the whole with a protective wall and keep it clean and warm. A house is a compressed territory where our basic needs can be fulfilled close by and safely. A sound zoo enclosure is the equivalent for an animal (with the noteworthy absence of a fireplace or the like, present in every human habitation). Finding within it all the places it needs—a lookout, a place for resting, for eating and drinking, for bathing,for grooming, etc.—and finding that there is no need to go hunting, food appearing six days a week, an animal will take possession of its zoo space in the same way it would lay claim to a new space in the wild, exploring it and marking it out in the normal ways of its species, with sprays of urine perhaps. Once this moving-in ritual is done and the animal has settled, it will not feel like a nervous tenant, and even less like a prisoner, but rather like a landholder, and it will behave in the same way within its enclosure as it would in its territory in the wild, including defending it tooth and nail should it be invaded. Such an enclosure is subjectively neither better nor worse for an animal than its condition in the wild; so long as it fulfills the animal's needs, a territory, natural or constructed, simply is, without judgment, a given, like the spots on a leopard. One might even argue that if an animal could choose with intelligence, it would opt for living in a zoo, since the major difference between a zoo and the wild is the absence of parasites and enemies and the abundance of food in the first, and their respective abundance and scarcity in the second. Think about it yourself. Would you rather be put up at the Ritz with free room service and unlimited access to a doctor or be homeless without a soul to care for you? But animals are incapable of such discernment. Within the limits of their nature, they make do with what they have.

    A good zoo is a place of carefully worked-out coincidence: exactly where an animal says to us, "Stay out!" with its urine or other secretion, we say to it, "Stay in!" with our barriers. Under such conditions of diplomatic peace, all animals are content and we can relax and have a look at each other.

    In the literature can be found legions of examples of animals that could escape but did not, or did and returned. There is the case of the chimpanzee whose cage door was left unlocked and had swung open. Increasingly anxious, the chimp began to shriek and to slam the door shut repeatedly—with a deafening clang each time—until the keeper, notified by a visitor, hurried over to remedy the situation. A herd of roe-deer in a European zoo stepped out of their corral when the gate was left open. Frightened by visitors, the deer bolted for the nearby forest, which had its own herd of wild roe-deer and could support more. Nonetheless, the zoo roe-deer quickly returned to their corral. In another zoo a worker was walking to his work site at an early hour, carrying planks of wood, when, to his horror, a bear emerged from the morning mist, heading straight for him at a confident pace. The man dropped the planks and ran for his life. The zoo staff immediately started searching for the escaped bear. They found it back in its enclosure, having climbed down into its pit the way it had climbed out, by way of a tree that had fallen over. It was thought that the noise of the planks of wood falling to the ground had frightened it.

    siva gnanamji(#18100882083107547329) said...

    //இன்னும் மூன்று மாதத்தில் அவன்
    குரலை இழந்துவிடுவான்;ஆறு மாதத்தில்...பைத்தியமாகிவிடுவான்//

    "குயிலப் பிடிச்சுக் கூண்டிலடைச்சு
    பாடச்சொல்லும் உலகம்........."

    Unknown said...

    முன்னாடி ஒரு முறை உங்க விமர்சனம் படிச்சுட்டுத் தான் கார்ஸ் படம் பாக்க போனேன் இப்போ ஹேப்பி பீட்டா.. அதையும் பாத்துருவோம்.

    பி.கு.சமீபத்தில் மார்ச் ஆப் பென்குயின்ஸ் ( MARCH OF PENGUINS) என்றொரு படத்தினை டி.வி.டி மூலம் பார்த்தேன்... உங்களுக்கும் சமயமும் சந்தர்ப்பமும் வாய்க்குமெனின் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

    வினையூக்கி said...

    31/12/2006 அன்னக்கி ஹேப்பி ஃபீட் சத்யம் ல புக் பன்ணிட்டு போனேங்க, அன்னக்கி புரெஜெக்டர் ஃபெயிலியர்னு ஷோ வை கேன்சல் பண்ணிட்டாங்க,
    (பைசாவும், திருப்பிக் கொடுத்தாட்டாங்க, )
    உங்க விமர்சனம் படிச்சப் பின்னாடி கண்டிப்பா பார்க்கனும்னு தோணுது.

    பொன்ஸ்~~Poorna said...

    மதுரா, பாருங்க, வந்து சொல்லுங்க :)

    சிந்தாநதி, நன்றி, யானை தான், ஆடும் யானையை அப்படித் தான் தமிழ்மணம் காட்டுகிறது..

    செந்தில், Life of Pi படிக்க வேண்டும் என்று ஆசையாய் வாங்கி, ரெண்டு அத்தியாயங்களுக்கு மேல் படிக்க முடியாமல் போய்விட்டது :( அவர்கள் எல்லாரும் கப்பலில் போவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே நான் அப்பீட் :) இப்போ இந்த பத்தியை எப்படியாவது படித்துவிட்டு தான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று பதில் எழுதாமலே ரெண்டு நாள் ஓட்டிப் பார்த்தேன். ம்ஹும்.. முடியலை.. என்ன சொல்றாங்கன்னு கொஞ்சம் நீங்களே, சிம்பிளா சொல்லிடுங்களேன் :))))


    சிஜி :(

    தேவ், மார்ச் ஆப் பென்குயின்ஸ் இன்னும் பார்க்கலை. அஞ்சலி சொல்லி இருப்பதைப் படித்தே அதைப் பார்க்க ஆசை உருவாகிவிட்டது... இப்போ நீங்களும் சொல்லிட்டிங்க.. பார்க்கிறேன்..

    //முன்னாடி ஒரு முறை உங்க விமர்சனம் படிச்சுட்டுத் தான் கார்ஸ் படம் பாக்க போனேன்//
    இதைப் படிச்சுத் தான் கொஞ்சம் பயம்மா இருக்கு :)))) அந்தப் படமே உங்களுக்கு அவ்வளவா பிடிக்கலைன்னு நினைவு :))))

    வினையூக்கி,
    நானும் சத்யம்ல தாங்க பார்த்தேன். புரொஜக்டர் பிரச்சனை இங்கும் இருந்தது ஆனா மொத்தமா கேன்சல் செய்யலை.. அவங்க படப் பெட்டியிலேயே பிரச்சனை இருக்கோ என்னவோ..