பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும், வலைபதியும் பெண் தோழிகள் விளக்கேற்றினால், தனக்கு நன்மை என்று நம்பும் எங்களின் நண்பர்களுக்காக, விளக்கேற்றுவது அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.
தற்போது வலைபதியும் ஆண்களுக்காக மட்டுமன்றி இனிமேல் வலைபதியப் போகும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் சிறார் போர்னோகிராபிக்கும் எதிராக குரல் கொடுப்போம்.
வாருங்கள் தோழிகளே.. விளக்கேற்றுவோம்.
உங்களின் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒரு குழந்தைக்கு எதிரான சிறார் போர்னோகிராபியைத் தடுக்க ஒலிக்கும் எதிர்க்குரலாகவும், நமது சக வலைதோழர் ஒருவரின் நம்பிக்கையை வளர்க்கும் அருமருந்தாகவும் இருக்கட்டும்..
தொடர்புள்ள பிற பதிவுகள்:
1. சிறார் போர்னோக்கு எதிராக குரல்
2. சிறுவர் போர்னோகிராபி
3. ஆண்களுக்கு ஆபத்து
4. வதந்திகளும் நம்பிக்கைகளும்
21 comments:
அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.//
?????????????:-))))))))))))))))
தோழிகளேன்னு கூப்பிட்டீங்க...தோழர்களுக்கு ? நானும் ஒரு விளக்கை ஏத்திட்டேன்...!!!!..
என்ன பொன்ஸ், இதுமாதிரி மூட நம்பிக்கைகளை எல்லாம் நம்பறீங்களா.
விளக்கு ஏற்றுவது நல்ல விசயம்தான், ஆனால் எதற்காக என்பதுதான் கேள்வி?
பிள்ளையார் பால் குடிச்சது, பச்சை சாரி வாங்கி கொடுக்கச் சொன்னது மாதிரி இதுவும் ஒரு வதந்தியாகத்தான் இருக்கும்.
நீங்க தோழிகளைத்தான் கூப்பிட்டீங்க,
பாருங்க ரவி விளக்கேத்திட்டு வந்து நிக்கிறாரு. இவரு மாதிரி இன்னும் எத்தனை பேரோ தெரியல :)))
நானும் ஒரு விளக்கை ஏத்திட்டேன்...!!!!..
ஆதி பகவன்,
மூட நம்பிக்கையோ, இல்லையோ, இதை ஏற்றினால், சிறார் போர்னோகிராபிக்கு எதிரான குரலாக அது கண்டிப்பாகப் பதிவாகும்... :)
இது போன்றவற்றை நம்புபவர்களுக்கு இது ஒரு நிமிட அமைதியையும் தருமே..
நீங்களும் ஒன்று ஏற்றலாமே.. இன்னும் யார் வேண்டுமானாலும்.. :)
செஞ்சுட்டேங்க. ஆதிபகவன் விஷயத்தைச் சரியாகப் படிக்காமல் பொரிஞ்சுட்டாருன்னு நினைக்கறேன். :)
நல்ல காரியம். ஏத்தியாயிற்று.
ஆபாசப் படங்களுக்கு எதிராக அல்லது சிறார்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விளக்கு ஏற்றுவது சரி. நிச்சயமாக அது ஒரு நம்பிக்கையைத் தரும்.
நான் சொன்னது ஆண்களின் ஆபத்தை நீக்குவது பற்றி....:))
பொன்ஸ்,
தகவலுக்கும், இந்தச் செய்தியை பலரும் அறியும் வண்ணம் பரப்பும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
நானும் ஒரு விளக்கை ஏத்தியாச்சு!!!
இ.கொத்தனாரே,பொரியல.
நான் சொன்னது மூட நம்பிகைகளைப் பத்தி. ஜாதி நம்பிக்கைகளை விட கொடுமையானது அது..)
அந்த மெழுகுவர்த்திய நாங்கல்லாம் எப்பவோ ஏத்திட்டொம். இந்த மெழுகுவர்த்தி ....நற..நற...
//ஆண்களின் ஆபத்தை நீக்க//
இது பொன்ஸ் அக்காவின் பதிவில்..
பாலாபாய் கமெண்ட் : என்ன கொடும இது சரவணா..?
கோ&கோ: சிறுவர் போர்னோகிராபிக்கு எதிரான்னா நல்ல விஷயம் தானே தல.
சென்ஷி
என்னமோ நடக்குது,ஆனால் எனக்குத்தான் ஒன்னுமே புரியலை....
//விளக்கு ஏற்றுவது நல்ல விசயம்தான், ஆனால் எதற்காக என்பதுதான் கேள்வி?
//
இங்கே சொல்லியிருப்பது நல்ல விஷயத்துக்காக என்பதால்
நாங்களும் ஏத்திட்டோம்ல!
நல்ல முயற்சி பொன்ஸ்! இதற்கு முன்னரும் பதிவர் நண்பர் ஒருவர் தை பதிந்து ஆதரவு திரட்டினார். பெயர் தான் நினைவில்லை :(
ஒளி மனங்களிலும் வரட்டும்!
டன் (done :-))
இங்க விளக்கை அணைக்கும் புகைப்படம் ஏன்?
//இங்க விளக்கை அணைக்கும் புகைப்படம் ஏன்?//
:-))
அந்த link இப்போ வேலை செய்யலையே ஏன்?
குழந்தைகளுக்காக விளக்கேற்றி விட்டு, பின்னூட்டம் போடாமல் போய் விட்டேன். இன்றைக்கு மீண்டும் விளக்கேற்றிவிட்டு இதை எழுதுகின்றேன். நன்றி.
விளக்கேற்றிய நண்பர்கள் உஷா, ரவி, எஸ்கே, கொத்ஸ், மலைநாடன், வெற்றி, சென்ஷி, ப்ரியதர்ஷினி கல்லூரி, திரு, சேது, கலை- நன்றி..
ஆதிபகவன்,
மூட நம்பிக்கை என்று சொல்கிறோமே தவிர, அவை உண்மையில் அவற்றை நம்புபவர்களுக்கு ஏதோ ஒரு நிம்மதியையும் நம்பிக்கையையும் கொடுக்கின்றன. "எந்தப் பிரச்சனையும் என்னால் அல்ல, என்னுடைய இந்த நம்பிக்கையை நானே மீறியதால் தான்" என்பன போன்ற சுய விளக்கங்களுக்கு உதவுகிறது. அடுத்த முறை தைரியமாக முயலவும் உதவினால், இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே..
அது போல் இல்லாமல், வீட்டுப் பெண்களுக்கு நிஜமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நாட்களிலும், விளக்கேற்றக் கூட காசில்லாத நாட்களிலும் கூட இதைச் செய்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பது தவறு. அந்த நிலைக்குப் போகும் வரை, சில நம்பிக்கைகளை நாம் encourage செய்யலாம் தானே!
சிந்தாநதி,
இப்போ ஒண்ணு ஏத்துங்களேன் சாமி :)
துர்கா, என்னங்க புரியலை? :)
திரு,
குழலியும் செந்தில் குமரனும் முன்பு பதிவிட்டிருந்தார்கள். சுட்டிகள் இதிலேயே இணைத்துள்ளேனே..
கொத்ஸ்,
சரியா பாருங்க, அது ஏத்துற படம் தான் :))
மீனா,
வேலை செய்யுதே.. உங்க கணினியில் ஏதும் பிரச்சனை இருக்குமோ..
Post a Comment