Friday, March 24, 2006

இன்னொருவன்

எனக்கும் உனக்குமான
உறவின் நடுவில்
இன்னொருவன்...

எப்படி அனுமதித்தாய் நீ??

மஞ்சள் மாலையில்,
மெல்லிய குளிரில்,
கைப்பிடித்து நேசம்
சொன்னபோது இல்லை அவன் நம்மிடையே!!.

இப்போது
"அவனுக்குப் பிடிக்கவில்லை.
கையை விடு!!!" என்கிறாய்....

நிலவின் ஒளிகூட இல்லாத
ஓர் இரவில்
அலையொலிகளுக்கிடையில்
வருடந்தோறும்
நீ பிறந்த நாளில்,
அலையைப் பார்க்க வருவோம்"
என்று சொன்னவள் நீதான்.

இன்று சொல்கிறாய்,
"அவனுக்குத் தெரியாமல் போனால் கோபிப்பான்;
சொல்லிவிட்டுப் போனால் சண்டைக்கு வருவான்" என்று!!!!

எனக்கும்
உனக்குமான
உறவின் நடுவில்
இன்னொருவன்...

எப்படி அனுமதித்தாய் நீ??

நடுநிசியில்,
பெருங்கோபமும்,
உன்மேல்
கோபம்காட்டி அறியாத இயலாமையும்
சேர
நான் சுவர் பார்த்து
படுத்திருக்கையில்,
அவன் அறியாமல்,
என்னருகே வந்து,
"பொறாமையா? ..
உன் மகன் அல்லவா?" ...
என்று சொல்லும்போது
ஒற்றைப் புன்னகையில்,
உயிர் கரைந்து சொல்கிறேன்,
"நானும் உன் மகன் தானே??!!!"

கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்குங்க.. :)

13 comments:

கைப்புள்ள said...

சித்த முன்னாடி தான் இங்ஙண வந்தேன். திடீர்னு வெள்ளிக்கிழமை தேதி போட்டு புதுசா ஒரு கவிதை முளைச்சிருக்கு?

கவிதை நல்லாருக்குங்க...ஆமா நீங்க "ஐயாவின் பார்வையிலே" எழுதுன சரக்கு நெறைய வச்சிருப்பீங்க போலிருக்கு?
:)-

பொன்ஸ்~~Poorna said...

தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத்தென் இந்த கவிதையை பப்ளிஷ் பண்ணினேன்.

ஆமா அண்ணே.. ரொம்பத் தான் "ஐயாவின் பார்வையிலே" வா போய்கிட்டிருக்கு.. மாத்திருவோம்..

கைப்புள்ள said...

//தேதி எங்ஙன இருந்து வந்திச்சின்னு தெரியல.. இப்போத்தென் இந்த கவிதையை பப்ளிஷ் பண்ணினேன்.//

நீங்க ஏற்கனவே எழுதி வச்சு draftஆ ப்ளாக்கர்ல சேமிச்சு வச்சிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணீங்கன்னா எந்த தேதியில draftஆ சேவ் பண்ணீங்களோ, அந்த தேதி தான் வரும்.

//ரொம்பத் தான் "ஐயாவின் பார்வையிலே" வா போய்கிட்டிருக்கு.. மாத்திருவோம்..//

ஐயயோ! மாத்த சொல்லி சொல்லலைங்க. Just my observation. அய்யாவின் பார்வையிலே எழுதறதுக்கும் தெறமை வேணுமே! தொடர்ந்து கலக்குங்க.
:)

ILA(a)இளா said...

காலங்காத்தால சென்டி ஆக வெச்சுடீங்களே, கவிதை அருமைங்க, வித்தியாசமா இருக்கு.

Ms.Congeniality said...
This comment has been removed by a blog administrator.
♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஆஹா... வலைப்பக்கத்தில் இன்னொரு கவிதாயினியா... வாங்கம்மா...வாங்க...
இந்தகவிதைக்கு
:)

செந்தில் குமரன் said...

உங்களுடய கற்பனை திறன் என்னை கவர்ந்து விட்டது. நீங்கள் வ.வ.வா சங்கத்தில் உள்ளீர்களா உங்களுக்கே ஒரு ரசிகர் சங்கம் ஆரம்பிக்க வேண்டு போல உள்ளதே.

இலவசக்கொத்தனார் said...

கவித?

மரபு கவித எழுதறவங்க இந்த மாதிரி எல்லாம் எழுதக் கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு தெரியுமா?

பொன்ஸ்~~Poorna said...

இன்னிக்குத் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்றதுன்னு முடிவு பண்ணினேன்..

நன்றி இளா, கைப்பு அண்ணா, பாலா...

குமரன் எண்ணம், ரசிகர் சங்கம் எல்லாம் ஆரம்பிக்காதீங்க.. நம்ம direct ஆ அரசியல் தான் இந்த ரசிகர் சங்கம் எல்லாம் தொடங்கி அப்புறம் அரசியல்லுக்கு வந்து.. ம்ஹும்..

கொத்ஸ், எந்த ஊரு சட்டம்? எங்க தாயுள்ளம் கொண்ட கைப்புவின் வரு.வா.சங்கத்தில் அந்த மாதிரி சட்டம் எல்லாம் கிடையாது :)

ஜெய. சந்திரசேகரன் said...

//கவிதைன்னு நெனைச்சு தான் எழுதினேன்.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்குங்க.. :)//

நினைச்சு எழுதினதே இவ்வளவு நல்லாருக்கே, நினவுல எழுதுனா எப்படி இருக்கும்! எழுதுங்க, எழுதுங்க!

பொன்ஸ்~~Poorna said...

பாராட்டுக்கு நன்றிங்க சந்திரா.. :)

ரவிசங்கர் said...

கவிதையோ கதையோ நல்ல திருப்பம்

✪சிந்தாநதி said...

!
:)