Friday, March 24, 2006

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

இப்போ சொந்த சரக்கு இல்லை. நண்பர்கள் அனுப்பினது. அதுனால, தைரியமா படிக்கலாம். நல்லா இருந்ததினால், தமிழில்:

அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருத்தருக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஞாயிற்றுக்கிழமைங்கறதுனால யாரும் அலுவலகத்தில் இல்லை. தன் கீழ் வேலை செய்யும் ஒருவருக்கு போன் செய்தார்:

"ஹல்லோ" ஒரு சின்னக் குழந்தையோட குரல்.

"அப்பா வீட்டில் இருக்காங்களா?" என்றார் அதிகாரி.

"இருக்காங்க" சின்னக் குரல்ல சொன்னான் அந்தக் குட்டிப் பையன்

"அவர்கிட்ட நான் பேசலாமா?"

"முடியாது" அப்டீங்கறான் அவன். அந்த அதிகாரி வியந்து போனாரு.

இவனை மீறி எப்படிப் பேசறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சார்.

"அம்மா இருக்காங்களா?"

"இருக்காங்க"

"அவங்ககிட்ட போன் குடுப்பா?"

"குடுக்க மாட்டேன்"

"வேற யாராவது வீட்ல இருக்காங்களா?"

"இருக்காங்க"

"யாரு?"

"போலீஸ் மாமா"

"போலீசா?" சின்ன அதிர்ச்சியுடன் கேட்டாரு அதிகாரி. "அவர்கிட்ட பேசலாமா?"

"இல்ல.. அவரு ரொம்ப பிஸியா இருக்காரு"

"பிஸியா? பிஸியா என்ன பண்றாரு?"

"அம்மா கிட்டயும், அப்பா கிட்டயும், ஃபையர் சர்வீஸ் அண்ணங்கிட்டயும் பேசிகிட்டிருக்காரு."

இப்போ நம்ம அதிகாரிக்கு ரொம்ப கவலையாப் போய்டிச்சி.. இதுக்கு நடுவுல ஒரு ஹெலிகாப்டர் சத்தம் வேற கேட்டுச்சு.

"அது என்னப்பா சத்தம்?" ன்னு கேட்டாரு அந்தப் பையன் கிட்டயே

"எலிகாப்டர்"ன்னு சொன்னான்

"அது எதுக்கு வந்திருக்கு?" அதிகாரி சந்தேகமா கேட்டாரு

"தேட வந்திருக்காங்க"

" என்ன தேடறாங்க??"

மெதுவா வாய்க்குள்ளயே சிரிச்சிகிட்டு, நம்ம பையன் சொல்றான்:

"யார்கிட்டயும் சொல்லாதீங்க... என்னைத் தான்"

14 comments:

கைப்புள்ள said...

ஜோக் நல்லாருந்துதுங்க :))- உங்க மொழிபெயர்ப்பும் தான்.

பொன்ஸ்~~Poorna said...

சிரிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் கைப்புள்ளெ அண்ணா..

கொங்கு ராசா said...

வரிசையா பதிவு போட்டு கலக்கரீங்க.. இதுக்கு பேரு தான் 'சொல்லி அடிக்கறது' .. வாழ்த்துக்கள்..!

ILA(a)இளா said...

இந்த காலத்து பசங்க கிட்ட தில்லு ரொம்ப ஜாஸ்த்தி

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

இப்படி

ரி
சை

ரி
சை-யா
கிளப்பினா என்னங்க அர்த்தம்... கொஞ்சம் நிதானிங்க... இல்லாட்டி.. போர் அடிச்சு... நீங்களே நிப்பாட்டீடுவீங்க.
தொடர்ந்து எழுத நிதானிங்க மேடம்.

பொன்ஸ்~~Poorna said...

நன்றிங்க ராசா. ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருக்கும்.. இதே மாதிரி தொடர்ந்து எழுதினா நானே ஆச்சரியப்பட்டு போய்டுவேன்...

//இந்த காலத்து பசங்க கிட்ட தில்லு ரொம்ப ஜாஸ்த்தி //

அது சரி இளா.. உங்க தில்லுக்கு முன்னாடி வருமா..

சரி பாலா, கொஞ்சம் மெதுவா, தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. :)

நாமக்கல் சிபி said...

கலக்குறீங்க! ஜோக் நல்லாவே இருந்தது.

ஆனா இப்படி எல்லாருடைய பின்னூட்டத்திற்கும் சேர்த்து ஒரு பதில் எழுதாதீங்க. :-). இன்னும் நீங்க நிறைய கத்துக்கணும்.

//கொஞ்சம் நிதானிங்க... இல்லாட்டி.. போர் அடிச்சு... நீங்களே நிப்பாட்டீடுவீங்க.
தொடர்ந்து எழுத நிதானிங்க மேடம்//

பாலா சார் சொல்றது வாஸ்தவம்தான்.
பார்த்து நிதானமாவே எழுதுங்க.
(அட! நானே அட்வைஸா?)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

ஆர்த்தி said...

:))

பொன்ஸ்~~Poorna said...

//பாலா சார் சொல்றது வாஸ்தவம்தான்.
பார்த்து நிதானமாவே எழுதுங்க.
//

சரிங்க சிபி சார். இனிமே நிச்சயம் பொறுமை தான்..

பொன்ஸ்~~Poorna said...

ஆர்த்தி, முதன் முறை வந்திருக்கீங்க.. வந்ததுக்கும், ரசிச்சதுக்கும் நன்றி..

கைப்புள்ள said...

Petite Sœur!
என்னங்க பிரெஞ்சு க்ளாஸ்லே சர்ப்ரைஸ் குவிஸ் எல்லாம் வெச்சு பெண்டு நிமித்துறாங்களா? ரெண்டு நாளா வை சைலண்ட்பா? டெல்லி காரம்மா ரொம்ப டார்ச்சர் குடுத்ததுன்னா நம்ம கையில சொல்லிக்கங்க...நம்ம பசங்க அவுங்க ஊர்ல இருக்கானுங்க...கவனிச்சுக்கலாம்!

பொன்ஸ்~~Poorna said...

நீங்க கேக்கறதுகு முன்னாடியே எழுதிட்டேண்ணே.. எந்த நேரத்துல சொன்னிங்களோ இன்னிக்கி நெசமாவே டெஸ்டுண்ணே.. ம்ம்ம்:(

மகேஸ் said...

ஹாஹாஆஆஆ
இந்த ஜோக் நான் ஏற்கனவே கேட்டது தான்.

ஆர்த்தி , ஏன் இப்ப நீங்க கொஞ்ச நாளா கவிதை எழுதுறது இல்ல?

நாமக்கல் சிபி said...

மகேஷ்!

ஆர்த்தியக்காவுக்கு காலேஜ் ஃபைனல் இயர் பரீட்சை! அதான் பரீட்சை முடிஞு கூட இன்னும் வரலை போல!