Sunday, June 18, 2006

ஏன் என்ற கேள்வி.. -2

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா? என்று கேட்டிருந்தோம். இந்த விவாதத்திற்குப் பதில் வருமா என்று சந்தேகமாகவே இருந்தது. உங்கள் கருத்துகளைக் கண்ட பின் தான் செயலியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வெறும் புரிதல் பிரச்சனைகளே என்று தெளிவானது. கருத்தளித்த எல்லாருக்கும் நன்றி.

இந்தப் பதிவில், முன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் அதற்கு மேல் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி உள்ளோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் விவாதிக்கலாம்:

முதலில் போன பதிவில் முன்வைத்த இரண்டு கேள்விகள்:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )

2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

டெக்னிகல் சமாச்சாரங்களான இவற்றிற்குப் பதில் சொல்லி விட்டு அடுத்த சாதாரண சமாச்சாரங்களுக்குப் போகலாம்.
கொடுக்கப்படும் கடவுச்சொல், நிங்குக்கு அனுப்பப்படுவதில்லை. இந்த ப்ளாக்கர் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் வலை உலாவியே(Browser) தான் மறுமொழி மட்டுறுத்தல் பக்கத்தைத் திறக்கிறது. அதனால் தான் முதன் முறையாக இந்தப் பக்கத்தைத் திறக்கும் போது உங்களிடமே உங்கள் பயனர்/கடவுச்சொல்லைக் கேட்கிறது.

அடுத்து, இந்த கடவுச்சொல்லை அன்னியனின் மென்பொருள் எங்கும் பயன் படுத்தவோ சேர்த்து வைக்கவோ இல்லை. இது வலை உலாவிக்கும் ப்ளாக்கருக்கும் மட்டுமே உள்ள கொடுக்கல் வாங்கல்.

இப்போது நீங்கள் தமிழ்மணம்/தேன்கூடு படிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வலையுலாவி ஜன்னல்களைத் திறப்பீர்களேயானால், அவற்றில் ஒன்றில் லாக் இன் செய்தால் போதும் அல்லவா? நீங்கள் தான் பயனர் என்பது ஒரு முறை லாக் இன் செய்தாலே எப்படி எல்லா புது உலாவிகளுக்கும் போய்ச் சேருகிறதோ அதே மாதிரி, ஏன் அதே காரணத்தால் தான் இந்த அன்னியன் மென்பொருளிலும் மறுமொழிகள் மட்டுறுத்தப்படுகின்றன. ஆக, உங்கள் கடவுச்சொல் அன்னியனின் கையில் கிடைக்கவே முடியாத போது ரமணிக்கும் கிடைப்பது அரிது தான். ப்ளாக்கரிலிருந்து வேறு யாரும் நமது கடவுச்சொல்லை எடுத்து விட மாட்டார்கள் என்று எப்படி நம்புகிறோமோ, அதே மாதிரி, இங்கே கொடுக்கப்படும் கடவுச்சொல்லையும் வேறு யாரும் எடுக்க முடியாது

இனி மற்ற பின்னூட்டக் கேள்விகள்:

3. என்னிடம் 24 மணி நேர இணையமோ, கணிணியோ இல்லையே.. நான் இதைப் பயன் படுத்த முடியுமா?

ப: கண்டிப்பாக முடியும். 24 மணி நேரமும் பயன்பாட்டில் கணினி இல்லாவிட்டாலும் எப்போது கணினி பயன்பாட்டிற்கு வருகிறதோ அப்போது ப்ளாக்கரிலிருந்து மறுமொழி மட்டுறுத்துதலை விட, அன்னியலோகம் பக்கத்தைத் திறந்தாலே போதும்.

4. எந்தக் கணினியில் இருந்து மின்னஞ்சல் முகவரி கொடுத்தோமோ அந்த கணினி எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டுமா?
ப: நிச்சயமாக இல்லை. எந்தக் கணினியில் வேண்டுமானாலும் இதைப் பயன் படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும்.

5. அடிப்படைக் கணிணி அறிவு அதிகம் இல்லாத நான், இந்த ப்ளாக்கர் மட்டுறுத்துதலைத் தாண்டி ஏன் வர வேண்டும்? ஏதோ ஒன்றிரண்டு பின்னூட்டங்களில் சந்தேகம் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளுகிறேன்..
ப: ஒரு வேளை உங்களுக்குச் சந்தேகம் வராத வார்த்தைகளில் பின்னூட்டங்கள் வரும்போது பின்னூட்டியவரின் பக்கத்துச் சென்று அதன் நம்பகத் தன்மையைப் பார்த்து சோதிப்பதும் அதிகப்படி வேலையாகிறதே.

6. அன்னியலோகமே ஒரு வேளை போலியான சைட்டாக இருந்தால்? எனது விவரங்களை விலை பேசும் ஏமாற்றுப் பக்கமாக இருந்தால்?
ப: அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அன்னியலோகம் நிச்சயம் நம்பக் கூடியதே. மேலும், நாம் நமது ப்ளாக்கர் ஐடியைத் தரப் போவதில்லையே..வெறும் ஜிமெயில் கடவுச் சொல் தானே. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தலுக்காகவே தொடங்கப் பட்ட புதிய ஜிமெயில் அக்கவுன்டைத் தருவதால், இதை வைத்து எதுவுமே செய்ய முடியாது.

7. மறு மொழி மட்டுறுத்தலுக்கு ஒரு வெண்பட்டியல், இன்று ரமணி தயாரித்திருக்கிறார். நாளை வேறொருவர் வந்து வேறு ஒரு பட்டியல் தருவார். எல்லாருடைய பட்டியலுக்கும் சென்று என் பெயரைச் சேர்க்கச் சொல்ல வேண்டுமா?
ப: தமிழ்மணத்தில் சேரும் பதிவர்களின் பெயர்களைத் தானாகச் சேர்க்க முயற்சி செய்வோம். அது பற்றி சீக்கிரம் அறிவிக்கலாம்

8. இந்த மறுமொழி மட்டுறுத்தலை ஏற்றால், அதர் மற்றும் அனானி ஆப்ஷனை விட்டு விட வேண்டுமா?
ப: அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீக்க வேண்டிய தேவை இல்லை. இவற்றின் மூலம் இடப் படும் பின்னூட்டம் தானே பிரசுரமோ/மறுக்கப் படவோ மாட்டாது. அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். ப்ளாக்காருக்குப் போய்ச் செய்ய வேண்டும்.

9. புதுப் பதிவர்கள் வந்தால் அவர்கள் பின்னூட்டம் ரிஜக்ட் செய்யப் படுமா?
ப: புதுப் பதிவர்களின் பின்னூட்டங்கள் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் தான் இருக்கும். வேண்டுமென்றால் எடுத்து பப்ளிஷ் செய்யலாம்.

10. புதுப் பதிவர்களின் பின்னூட்டங்களும் இருக்கும், அதர் அனானி ஆப்ஷன் பின்னூட்டங்களும் இருக்கும் என்றால், இந்தச் செயலி எதைத் தான் ரிஜக்ட் செய்யும்?
ப: அ. ஆட்சேபிக்கக் கூடிய வார்த்தை உள்ள பின்னூட்டங்கள் (பல வார்த்தைகள் எங்கள் பட்டியலில் உள்ளது. ஏதேனும் புது வார்த்தை சேர்க்கவேண்டுமாயின் ரமணியிடம் சொல்லவும்)
ஆ. வெண்பட்டியிலில் உள்ள பதிவரது பெயருடன் வேறு ஒரு ப்ரோபைல் எண்ணிலிருந்து வரும் பின்னூட்டம் (போலி)
இ. கறுப்புப் பட்டியலில் உள்ள ப்ரோபைல் எண்கள்

இத்துடன், இந்தச் செயலியால் எனக்குத் தெரியும் நன்மைகளையும் சொல்லி விடுகிறேன் :
1. நிச்சயமாக வெண்பட்டியலில் இருப்பவரின் பின்னூட்டங்கள் மட்டும் தான் அங்கீகரிக்கப்படுவதால், பின்னூட்டங்கள் வரும்போது அவற்றை இட்டவரின் நம்பகத் தன்மையைச் சோதித்து அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.
2. தமிழ்மணத்தில் மட்டுறுத்தல் வந்த புதிதில் அது என்னவோ பெரிய தொந்தரவு என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் பல பதிவுகளைக் காண முடிந்தது.(அந்தச் சமயம் நான் வலைபதிய வரவில்லை). இந்த மட்டுறுத்தல் நண்பன் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டால், நம்பகமான பின்னூட்டங்கள் தானாக பிரசுரித்துக் கொள்கின்றன. நாம் இன்னொரு பக்கம் நமது வேலையைச் செய்து முடித்து விட்டு வந்து பார்க்கலாம்.
3. தனி மடல் என்று போட்டு வரும் பின்னூட்டங்கள் தானாக பிரசுரிக்கப்படுவதில்லை என்பதால், அந்தக் கவலையும் இல்லை.

இத்தனையும் சொன்ன பின், இந்தப் பதிவைப் படிப்பவருக்கு ஒரு வேண்டு கோள்.

பின்வரும் கேள்விக்கு ஆம் இல்லை என்று காரணத்துடன் பதில் சொன்னால், மேல் விளக்கங்கள் கொடுக்க வசதியாக இருக்கும்:

1. மட்டுறுத்தல் நண்பனை நீங்கள் பயன் படுத்துகிறீர்களா?
2. ஆம் எனில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா?
3. இல்லை எனில் ஏன்? (அட போங்கப்பா.. இதெல்லாம் வேஸ்ட்.. ட்ரெடிஷனல் மாடரேஷன்(traditional moderation) தான் த்ரில்லிங்கா இருக்கு என்றும் சொல்லலாம் )

28 comments:

பொன்ஸ்~~Poorna said...

(பி.கு.: கொஞ்ச நாட்களுக்கு "பொன்ஸி"டமிருந்து ஏதேனும் பின்னூட்டம் வந்தால் நல்லா ஒரு முறை செக் பண்ணிப் போடுங்க... :)

Unknown said...

திரு வவ்வால் அவர்களின் பின்னூட்டத்தில் எனக்கும் சம்மதமே. ஆனால் மட்டுருத்தல் நண்பன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே வெண்பட்டியலில் இருப்பார்கள் என்றால் அது சரியல்ல. ஆனால் அப்படி யில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று( நான் பயன்படுத்தவில்லை)எம் பெயர் வெண்பட்டியலில் உண்டு. இதுகூட மட்டுறுத்தல் நண்பனை பயன்படுத்துவோர் வசதிக்காக இணைத்ததே.

திரு பொன்ஸ் படிக்க வருகிறேன் (ஆனால் உங்க லிங்க்தான் தப்பு:) நான் உங்களின் தொழில்நுட்ப சந்தேகம் அளவெல்லாம் யோசிக்கவில்லை நீங்கள் சொன்ன து போல //பாவம் ரமணி// எனக்கு நண்பன் தேவையில்லை என்போன்ற இருபது மணி நேரத்திற்கும் மேல் கணினியை அகலாது இருப்போருக்கு ப்ளாகர் சேவை போதும் என்பது என்கருத்து மற்றபடி என் கணக்கை ரமணி திருடி?விடுவார் என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை.

Muthu said...

பொன்ஸ்,

பின்னூட்டங்களுக்கு மட்டும் ஒரு ஐ.டி வைத்து அதை காம்ப்ரைமைஸ் செய்வதும் கூட சரியில்லை என்பது என் அபிப்பிராயம்.

ரமணியின் பணி பாராட்டுக்குரியது. யாரும் உபயோகப் படுததுவதில்லை என்றெல்லாம் அலுத்து கொள்வதில் நியாயம் இல்லை.அவங்கவங்க இஷ்டமில்லையா அது :))

அதுபோல் தமிழ்மணத்தில் ஆபாச பின்னூட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்று ரூல்ஸ் சரிதான்.(இலலாட்டி மறுமொழி சேகரிக்கப்படமாட்டாது என்ற கன்டிசன்).

ஆனால் இந்த சாஃப்டுவேர் கண்டிப்பாக இணைக்கணும் என்று சொல்வது உங்கள் நிலையானால் அது தவறு.

தமிழ்மணம் பிடிக்காமல் காசியை பிடிக்காமல் திட்டிக்கிட்டே இங்க இருக்கற அளவிற்கு இங்கு கருத்துரிமை உள்ளது:)).

நாகை சிவா said...

மட்டுறத்தல் நண்பனை நான் பயன்படுத்தவில்லை. எனக்கு அது சரிப்பட்டு வரும் என தோன்றவில்லை. மற்றபடி அதனின் பயன்பாட்டின் மேல் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ரமணியின் பதிவுகளில் அவர் சோதித்த முறைகளை படித்து நன்கு புரிந்து கொண்டேன். மாயவரத்தான் பதிவிலும் இந்த மட்டுறுத்தல் சரியாக வேலை செய்கின்றது.

ரமணியின் One Click Notificationனை என் வலைப்பதிவில் பயன்படுத்துகின்றேன். அதை நான் தவறாக நிறுவிய போது தேடி வந்த என் தவறை சுட்டிக்காட்டியவர், அந்த one click notificationனை தனி ஜன்னலில் திறக்கும்படி செய்ய முடியுமா என கேட்டதற்கு உடனடியாக அது போல் செய்தவர். அவரின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

இந்த சேவைகளை விரும்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. நீங்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லை என எனக்கு புரிகின்றது. ஆனால் நீங்கள் கட்டாயப்படுத்துவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.

திரு. ரமணி அவர்களும் இது போன்ற சலசலப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடந்து தன் பணியை தொடர வேண்டுகின்றேன்.

மஞ்சூர் ராசா said...

உங்கள் கேள்விக்கு
இதுவரை பயன்படுத்தவில்லை.

உங்களின் விளக்கத்திற்குப் பிறகு பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

நன்றி.

நாமக்கல் சிபி said...

இது வரை பயன்படுத்த வில்லை.
இனி பயன்படுத்த விரும்புகிறேன்.


தற்போது மாற்றங்கள் எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

(இதனை தனியே எனது கணிப்பொறியில் நிறுவ வேண்டுமா?)

பொன்ஸ்~~Poorna said...

மகேந்திரன்,
//ஆனால் மட்டுருத்தல் நண்பன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே வெண்பட்டியலில் இருப்பார்கள் என்றால் அது சரியல்ல. ஆனால் அப்படி யில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று( நான் பயன்படுத்தவில்லை)எம் பெயர் வெண்பட்டியலில் உண்டு.//
அவ்வளவு தாங்க.. உங்க பேரும் இருக்கும் பயன் படுத்துவதும் இல்லாததும் உங்க கைல.

//திரு பொன்ஸ் படிக்க வருகிறேன் (ஆனால் உங்க லிங்க்தான் தப்பு:)//
எந்த லிங்க்??

// நான் உங்களின் தொழில்நுட்ப சந்தேகம் அளவெல்லாம் யோசிக்கவில்லை நீங்கள் சொன்னது போல //பாவம் ரமணி// எனக்கு நண்பன் தேவையில்லை என்போன்ற இருபது மணி நேரத்திற்கும் மேல் கணினியை அகலாது இருப்போருக்கு ப்ளாகர் சேவை போதும் என்பது என்கருத்து மற்றபடி என் கணக்கை ரமணி திருடி?விடுவார் என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை.//

ஓ... உங்கள் பதிவில் அனுமதிக்கப் பட்ட திரு டூபாக்கூராரின் பின்னூட்டத்திற்குப் பின், "நண்பர் ரமணிக்கு நானும் திரு டுபாக்கூர் போலவே சிந்தித்ததன் காரணமாகவே அவரின் பின்னூட்டம் வெளியிடப்பட்டது" என்றதால் தான் நீங்கள் கவலைப் படுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டதோ?

manasu said...

புட்டு புட்டு வக்கிறீங்களே பொன்ஸ்

வெண்பாவா இருந்தாலும் சரி, கணினியா இருந்தாலும் சரி. (சோறு வடிக்கிறத தவிர)

நயன் தாராவின் மயக்க பதிவிற்கு பதில் சொல்லாவிட்டால் அண்ணன் சிபி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

முத்து,
உங்களைப் போய் கண்டிப்பா பயன்படுத்துங்கன்னு சொல்வேனா?:))
அதெல்லாம் யாரையுமே சொல்லலை.. முதல்ல இந்த சாப்ட்வேர் ஏன் பயன்பாட்டுக்கு வரலை, மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கு என்று தெரிஞ்சிக்கத் தான் இந்தப் பதிவுகள்.
அதிலும் உட்கார்ந்து உருவாக்கியவரின் நம்பகத்தன்மையைக் கேள்விகுட்படுத்திய ஆணித்தரமான பின்னூட்டம், அதை ஆமோதிக்கும் பின்னூட்டம், இவற்றால் மட்டும் தான்.

சரி, உங்களுக்கு சுத்தமா யூஸே இருக்காதுன்னு நினைக்கிறீங்களா? இந்த நன்மைன்னு ரெண்டாவது பாயின்ட் ஒண்ணு கொடுத்திருக்கேனே.. அதைப் பத்தி என்ன சொல்றீங்க?

//பின்னூட்டங்களுக்கு மட்டும் ஒரு ஐ.டி வைத்து அதை காம்ப்ரைமைஸ் செய்வதும் கூட சரியில்லை என்பது என் அபிப்பிராயம்.//
இது என்ன மாதிரி காம்ப்ரமைஸ்? சரியாப் புரியலை.. :)

manasu said...

ரொம்ப நாளா பதிவிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு மறுமொழி இடனும்னு ஆசை. இப்ப தான் நிறைவாச்சு.

பொன்ஸ்~~Poorna said...

நாகை சிவா,
//நீங்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லை என எனக்கு புரிகின்றது. ஆனால் நீங்கள் கட்டாயப்படுத்துவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.//
நன்றி, :))

இது ஏன் உங்களுக்குச் சரிப்படாதுன்னு காரணம் இருந்தா சொல்லுங்க.. சரிப்பட்டு வருவது போல் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமான்னு பார்க்கலாமே..

பொன்ஸ்~~Poorna said...

மஞ்சூர் ராஜா, சிபி,
பயன்படுத்த முன்வந்ததற்கு நன்றி.
சிபி, தனியே எதுவும் நிறுவ வேண்டியதில்லை. anniyalogam.ning.com சைட்டுக்குப் போனாலே போதும். மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

மா சிவகுமார் said...

நான் மட்டுறுத்தலையே பயன்படுத்துவதில்லை. மட்டுறுத்தல் கருத்து பரிமாற்றத்தின் கழுத்தை நெரிக்கும் என்று வவ்வால் சொல்வதுதான் என் கருத்தும்.

ஏதோ ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒவ்வொருவரும் மட்டுறுத்தலைச் செயல்படுத்தி பின்னூட்டங்களை ஒவ்வொன்றாக அனுமதிப்பது வேண்டாத வேலை, இத்தனை பதிவர்களின் நேரச் செலவை கூட்டிப் பாருங்கள். அந்த வேலையை எளிதாக்க தன்னுடைய திறமையைப் பயன்படுத்தி ஒரு நிரலை எழுதியது ரமணியின் நல்ல மனது. ஆனால் அப்படி எழுத வேண்டிய நிலையே இருந்திருக்கக் கூடாது.

நம்முடைய திறமைகள், நேரங்கள் புதிதாக உருவாக்க ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு சமூக பிரச்சனைக்கு தொழில் நுட்ப தீர்வு காண்பது நடக்காது என்பார்கள். ஒவ்வொரு ஓட்டையாக நாம் அடைக்க அடைக்க விதிகளை முறிக்க நினைப்பவர்கள் அதற்கும் வழி கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல், பின்னூட்டங்களை கண்காணித்து தவறான, விரும்பத்தகாத பின்னூட்டங்களை அழித்து விடுவது போதாதா?

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

Transferring to this new discussion:

போலிகளை இரண்டு முறையில் இது சமாளிக்க உதவும் என்று பொன்ஸ் சொல்லியுள்ளார் இரண்டுமே சரியான தீர்வல்ல என்பது அவர் சொல்வதிலிருந்தே தெரியவருகிறது.

//அப்படி ஏதாவது இருந்தால், அதை இரண்டு விதமாக சமாளிக்கலாம்:
1. வருமுன் காக்க முடியாது, சரி தான். ஆனால் அப்படித் தான் என்று தெரிந்த பின் வெண்பட்டியல், தமிழ்மணம் இரண்டிலிருந்தும் நீக்க முடியும்.//

இவ்வாறு நீக்குவதை தான் இப்போது உள்ள மட்டுறுத்தல் முறையிலும் ,தமிழ்மணம் செய்து வருகிறதே ,இது என்ன புதிதாக இபோது தான் நீக்கமுடியும் என்பது போல் ஒரு தோற்றம்.

//2. குறைந்த பட்சம் அந்த நபரின் மெயில் ஐடியாவது நம்மிடம் இருக்கும். (தமிழ்மணத்தில் சேரும்போது கொடுத்திருப்பாரே!!) அது கூட இன்றைக்கு நம்மிடம் இல்லையே.. அதனால் தான் இந்த வழி கொஞ்சமாவது பயனளிக்கும் என்று தோன்றுகிறது.
//

இதையும் சொல்வது நீங்கள் தான் ..

//நாம் நமது ப்ளாக்கர் ஐடியைத் தரப் போவதில்லையே..வெறும் ஜிமெயில் கடவுச் சொல் தானே. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தலுக்காகவே தொடங்கப் பட்ட புதிய ஜிமெயில் அக்கவுன்டைத் தருவதால், இதை வைத்து எதுவுமே செய்ய முடியாது.//


அப்புறம் என்ன போலியின் மின்னஞ்சல் கிடைக்கிறதே என ஒரு புதிதாக ஒரு பூரிப்பு ,அதை வைத்து எதும் செய்ய முடியாது என்று நீங்களே சொல்கிறீர்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன என்றால் , முன்னர் என்ன மறுமொழி மட்டுறுத்தலில் என்ன நிலை இருக்கிறதோ அதுவே தான் இப்போதும் நீடிக்கும் ,பழைய கள் புதிய மொந்தை :-))

ஆனால் இதனால் ஒரு புதிய சிக்கல் தான் என் பார்வையில் படுகிறது(வவ்வால் ஆச்சே தலைகீழ் பார்வை)

//ரமணி என்ன, என்னை மாதிரி எப்போ பார்த்தாலும் வலை மேயறவருன்னு நினைச்சீங்களா.. நேரம் கிடைக்கும் போது இணைப்பாரு..//

எனவே சிறிது காலத்திற்கு வேலைப்பளு காரணமாக திருவாளர்.ரமணி வரவில்லை என்றால் அந்த இடைப்பட்ட காலத்தில் புதிதாக வரும் வலைப்பதிவர் பெயர்கள் வெண்பட்டியலில் இடம் பெற இயலாது ,அப்போது அவர்கள் எல்லாம் போலிகள் என அறியப்பட நேரிடுமே! தமிழ்மணம் போன்று கமிட்டட் ஆக இருப்போர் இதனை செய்வதே சரியாக வரும் என்பதே எனது கருத்து! தனி நபர் எத்தனை தூரம் அப்படி இருக்க முடியும்.

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
//தமிழ்மணம் போன்று கமிட்டட் ஆக இருப்போர் இதனை செய்வதே சரியாக வரும் என்பதே எனது கருத்து! தனி நபர் எத்தனை தூரம் அப்படி இருக்க முடியும்//
ரமணி மட்டும் இதைச் செய்வது தான் உங்கள் பிரச்சனை இல்லையா? ரமணியுடன் இன்னும் கமிட்டட் ஆன இரண்டு பேர் இணைந்து செய்தால் ஓகேவா?

தமிழ்மண அங்கீகாரத்துடன் தான் இந்தச் செயலி பயன்பாட்டில் இருக்கிறது என்பது தமிழ்மண முகப்பைப் பார்த்தாலே தெரியும்.

பொன்ஸ்~~Poorna said...

// இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல், பின்னூட்டங்களை கண்காணித்து தவறான, விரும்பத்தகாத பின்னூட்டங்களை அழித்து விடுவது போதாதா? //
உண்மைதான் சிவகுமார். விரும்பத்தகாத பின்னூட்டங்களைப் பார்க்கவும் கூட விரும்பாத சிலருக்காகத் தான் இந்தச் செயலி முதலில் செயல்பாட்டுக்கு வந்தது.

இப்போது, இதன் மூலம் நீங்கள் சொல்லும் கருத்து சுதந்திரத்துக்கு ஒரு வழிவகை செய்யலாமே என்று தான் இதன் குறைகளைக் களைந்து எல்லாருக்கும் பயன்படுமாறு செய்ய முயலுகிறோம்.

ஒரு காலத்தில் மறுமொழி மட்டுறுத்தலே இல்லாத போது எல்லா நேரத்திலும் நமது பதிவுகளில் பின்னூட்டங்கள் வந்து கொண்டே இருந்ததும், அது சில விவாதங்களில் மிக வசதியாக இருந்தது என்றும் கேள்விப்பட்டதுண்டு. இந்தச் செயலியை ஒரு மாதிரி 24 மணி நேரமும் செயல்பட வைக்கும் எண்ணமும் இருக்கிறது (24 மணி நேர கணினி, இணையம் இல்லாதவர்களுக்கும்). அதற்கு முதல் படி தான் இந்தக் குறை களையும் விவாதம்.

//ஒவ்வொரு ஓட்டையாக நாம் அடைக்க அடைக்க விதிகளை முறிக்க நினைப்பவர்கள் அதற்கும் வழி கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்//
சிவகுமார், அதற்காக அடைக்க முயலாமலே இருக்க முடியுமா? ஏதோ எங்களால் ஆன முயற்சி...

வவ்வால் said...

எனக்கு யார் எது செய்தாலும் பிரச்சினையே இல்லை ,நான் இந்த பாதுகாப்பு தேடுவோரின் பட்டியலில் வராதவன்! தனி நபரோ குழுவோ , அவர்களது நேரமின்மையால் புதிதாக கிடைப்பதாக கூறப்படும் இந்த பாதுகாப்பு உத்திகள் கூட குறைந்த காலத்திலேயே காணாமல் போய்விட வாய்ப்புள்ளதே என சுட்டிக்காட்டி இது நிரந்தரமாக தமிழ்மணத்திலேயே இணைக்கப்பட்டு செயல்பட்டால் பரவாயில்லை எனவே சொன்னேன்.அப்படி செய்வதாலும் புதிதாக ஏதும் நிலவரம் மாறாது என்பதே உண்மை.

போலிகளிடமிருந்து தப்பிக்க புதிய பாதுகாப்பு கிடைக்கும் ,இது ஒரு அற்புத தீர்வு என்பது கற்பனையே என்பதை உங்கள் பதிவிலிருந்தே சுட்டிக்காட்ட விரும்பினேன்,அதை தெளிவாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். மற்றபடி இது மற்றும் ஒரு "அரசாங்க திட்டம்" போல என்பதை தவிர வேரொன்றும் இல்லை.பயன் படுத்துவோர் விருப்பம் , தாங்கள் அதிகம் பேர் பயன்படுத்த வில்லையே என்று விசனப்பட்டதால் ஏன் என தெளிவுபடுத்தவே இதனை எல்லாம் சொன்னேன்.இது போதும் என நினைக்கிறேன் .சுபம் போட்டு மங்களம் பாடுகிறேன்!

வவ்வால் said...

நன்றி சிவகுமார் நீங்கள் கூறுவது தான் எனது கருத்தும்

பொன்ஸ்~~Poorna said...

1. மட்டுறுத்தல் செயலியைப் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயத்துக்கு யாரையும் தள்ளும் எண்ணம் இந்த விவாதத்தில் இல்லை.

2. விருப்பம், பயன்படுத்தும் ஆர்வம் இருந்தும் செய்யாமல் இருப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கண்டு கொள்ளத் தான் இத்தனை கேள்வியும் பதிலும்.

3. எப்படியும் இப்போது நாம் கட்டாயமாக மறுமொழி மட்டுறுத்தலைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

கட்டாயப்படுத்துவது மாதிரியான தொனி கட்டுரையில் வந்துவிட்டதோ என்று கொஞ்சம் மாற்றியுள்ளேன்.

வவ்வால் உங்கள் விவாதம் நிச்சயம் ஏற்புடையதே. குறைகளைச் சொல்வது தான் நாங்கள் எதிர்பார்ப்பதும். மாலை பதில் சொல்ல முயல்கிறேன். (இப்போ இங்க காலை).

மாயவரத்தான் said...

ஆரம்பம் முதலே பயன்படுத்தி வருகிறவன் என்ற வகையில் நான் சொல்ல விரும்புவது... உண்மையிலேயே இது ஒரு சூப்பர் தான்.

புதிய வலைபதிவர்கள் பெயர் வெண்பட்டியலில் இல்லாவிட்டால், அது போலி என்று நிராகரிக்கப்படாது. அது சாதாரணமாக நமது மட்டுறுத்தலுக்காக காத்திருக்கும்.

24 மணி நேரமும் கணினியின் விழித்திருப்போருக்கு இது தேவை இல்லை தான். ஆனால் அப்படி இல்லாதிருப்பவர்களுக்கு ஒட்டு மொத்தமாக அனைத்து பின்னூட்டங்களையும் காத்திருக்க வைத்திருபப்தை விட ஓரளவுக்கு அவற்றை அனுமதிக்கும் இந்தச் செயலி பாராட்டுக்குரியது.

Unknown said...

பொன்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தாலும் நானும் ஒருமுறை சொல்லிவிடுகிறேன். இதை பயன்படுத்தச்சொல்லி யாரையும் இங்கு கட்டாயப்படுத்தவில்லை.

உங்களில் நிறைய பேருக்கு போலி பின்னூட்டங்கள் அவ்வளவாக வருவதில்லை என்று நினைக்கிறேன். அதையே இந்த முயற்சியில் நான் கண்ட வெற்றியாக கருதுகிறேன்.

குமரன் (Kumaran) said...

//(பி.கு.: கொஞ்ச நாட்களுக்கு "பொன்ஸி"டமிருந்து ஏதேனும் பின்னூட்டம் வந்தால் நல்லா ஒரு முறை செக் பண்ணிப் போடுங்க... :)

//

:-)))))

இலவசக்கொத்தனார் said...

பொன்ஸ்,

உங்க கேள்விக்கு என் பதில்.

நான் மட்டுறுத்தல் நண்பனைப் பயன்படுத்துவது இல்லை. காரணம் என்ன வென்றால்...

முதலில் மறுமொழி மட்டுறுத்தல் கட்டாயமாக்கப் பட்ட பொழுது அது கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் புதிர் பதிவுகள் போடும் பொழுது மட்டுறுத்தலைப் பயன்படுத்தி வரும் பதில்களை வெளியிடாமல் அது சரியாத் தவறா என்பதை மட்டும் சொல்லி ஒரு புதிரை பல பேர் விடுவிக்கும் வகையில் அது நன்மையாகவே போயிற்று.
இப்பொழுது அது கட்டாயத்தின் பேரில் செய்யும் ஒன்றாக இல்லாமல் ஒரு வசதியாகவே இருக்கிறது.

இந்த வசதி தேவை இல்லாதவர்களுக்கு மட்டுறுத்தல் நண்பன் ஒரு நல்ல நண்பனே.

Geetha Sambasivam said...

என்ன பொன்ஸ், பயமெல்லாம் போச்சா?:)

மணியன் said...

பொன்ஸ், இன்று மட்டுறுத்தல் நண்பனை உபயோகித்துப் பார்த்தேன். இதுவரை publish செய்த பின்னூட்டங்களையும் பரிசீலிக்கிறதே, பார்த்தவற்றை அழித்திட வேண்டுமா? ( நான் புதிய ஜிமெயில் கணக்கு ஆரம்பிக்கவில்லை, இதற்காக முன்னமே பயன்படுத்தும் கணக்கையே தொடர்கிறேன்)

Unknown said...

மணியன், உங்க கேள்வியை இப்போதான் பார்த்தேன். முதல்முறை செயலியை பயன்படுத்தும்போது அஞ்சல்பெட்டியில் உள்ள எல்லா பின்னூட்டங்களையும் பரிசீலிக்கும். ஏனென்றால் நீங்கள் அதை ஏற்கனவே பார்த்தது என் செயலிக்கு தெரியாது :( அடுத்தமுறையிலிருந்து புதியவற்றை மட்டும்தான் பரிசீலிக்கும். பொன்ஸ், இதை வெளியிட்டபின் மணியன் அவர்களுக்கு ஒரு notification அனுப்பிடுங்க.

Anonymous said...

ஏங்க தமிழ்மணம் கைமாறிடுச்சுங்களே. இப்பவும் அவுங்க அந்நியன்.காம் செயலிகளுக்கு ஆதரவு குடுப்பாங்களா ?

Anonymous said...

பொன்ஸ் சொன்னது:

அட, என்னாத்த சொல்வேனுங்க?!..
புது நிர்வாகியக் கேளுங்க, இல்லீன்னா, அந்நியனைக் கேளுங்க.. :)

பயன்படுத்துறவங்க கவலை.. உங்களுக்கு என்னங்க ?