Tuesday, June 13, 2006

ஆசை.. ஆசை..

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு செய்தி விமர்சனப் பதிவு போடணும்னு ஆசை. செய்தின்னு ஏதாச்சும் படிச்சாத் தானே போட முடியும்? :)
அதான், என்னாலானது, விமர்சனத்துக்கு விமர்சனம்னு ஒரு பதிவு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த வார அவள் விகடன்ல ஒரு வாசகர் விமர்சனம்:

"ஜெயா டீவியில், சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் 'ஏன்?, எப்படி?, யாரு?' தொடர் புதுமையாக உள்ளது! ஒரு கொலை அல்லது கொள்ளை நடப்பதைக் காட்டி குற்றவாளி யார் என்பதை நேயர்களையே துப்பறிந்து கூறச் சொல்வது சுவாரஸ்யமான ஐடியா.."


எப்போதிருந்து இவங்க துப்பறியும் தொடர் எல்லாம் போடறாங்கன்னு தெரியலை.. ஆனா, இதைப் படிச்ச உடனே எனக்கு சட்டுனு நினைவுக்கு வந்தது இந்த கலைஞரின் கைம்மாறுன்னு ஒரு 'டிடெக்டிவ் ஸ்டோரி' போட்டாங்களே, அது தான்!

அதுக்கப்புறம் இந்த மாதிரி இறங்கிட்டாங்களோ?. அந்த டீமுக்கும் ஏதாவது வேலை கொடுக்கணுமே... இதுவும் அதே மாதிரி ப்ரோபஷனலா இருக்கான்னு யாராவது பார்க்கிறவங்க சொல்லுங்க.

டிஸ்கி: இது அரசியல் பதிவல்ல.. சும்மா ஆசைக்காக :))

34 comments:

அருள் குமார் said...

ம்... என்னவோ போங்க. கூடிய சீக்கிறம் 'ஆற்றலரசி' பட்டம் துறந்து 'சகலகலா வல்லவி' பட்டம் வாங்கிடுவீங்கன்னு நினைக்கிறேன். பல துறையிலும் கலக்கறீங்களே :)

நாமக்கல் சிபி said...

தங்கள் அடுத்த ஆசை என்னவோ?
யாருக்கும் புரியாத ஒரு கவிதை எழுதுவதா?

பொன்ஸ்~~Poorna said...

அருள், புதுப் பட்டம் கொடுத்தா பழைய பட்டத்தைத் துறக்கணுமா என்ன? அதுவும் சைட்ல இருந்துட்டு போகட்டுமே.. என்ன சொல்றீங்க?!!

சிபி, அதுக்குத் தான் நீங்க இருக்கீங்களேஅந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை.. இதுவரை இந்த நூல்நயத்துல தான் எதுவும் எழுதலை.. பார்க்கலாம், ஏதாச்சும் வெள்ளை நூல், பச்சை நூல் கிடைச்சா அதுல ஒண்ணு போடணும்னு ஆசை இருக்கு.. ;)(தப்பிச்சிருவீங்களா? விட்ருவோமா? :))

குமரன் (Kumaran) said...

நூல் நயம் எழுதணும்ன்னா டா வின்சி கோட் இருக்கே. மின்னூல் இருக்கு. வேணுமா?

மின்னூல் கிடைக்கிறதுக்கு முன்னாடியே அந்த புத்தகத்தை பார்டர்ஸில் $8க்கு வாங்கிப் படித்தேன். உங்களுக்கு அந்தப் புத்தகம் வேண்டுமென்றால் பாதிவிலைக்க் (+ அஞ்சல் செலவு) கிடைக்கும். சொல்லுங்கள். :-)

Thekkikattan|தெகா said...

பொன்ஸு,

படிச்சேன், ஒண்ணும் மண்டையிலெ ஏறமாட்டேங்கிது. உங்க யானை வேற மிரட்டிகிட்டே இருக்குது... பழைய ஞாபகத்தை கொண்டு வருது தொரத்திக்கிட்டு வரமாதிரியே :-) அதே ஸ்பிடூ போங்க...

பொன்ஸ்~~Poorna said...

குமரன்,
டாவின்சி கோட் மூணு முறை படிச்சிட்டேன். அதுல எடுத்துச் சொல்லும் அளவுக்கு நயம் இருப்பதாகத் தெரியவில்லை.. படிக்கும் போது ஆர்வமா இருக்கு.. விறுவிறுப்பா நல்லா இருக்கு.. புதுப் புது விஷயங்கள் சொல்றாங்க - உண்மையோ பொய்யோ.. அவ்வளவு தான்..

[5$ஏ ஆனாலும் அந்தப் புத்தகத்துக்கு 5*50=250ரூ ரொம்ப அதிகம்.. நான் எல்லாம் 60ரூபாய்க்கு வாங்கிப் படிச்சேன். திருப்பி 35ரூபாய்க்கு வித்துட்டேன் :) ]

ஏதாவது தமிழ் புக்கை எடுத்து எழுதுவோம்.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. இப்போவே எல்லா ஆசையும் தீர்த்துட்டா அப்புறம் ப்ளாக் பக்கம் வராமயே போய்ட சான்ஸ் இருக்கு :) (யாரது.. அப்பாடான்னு மூச்சு விடுறது?!!!)

வெளிகண்ட நாதர் said...

//செய்தின்னு ஏதாச்சும் படிச்சாத் தானே போட முடியும்? :)// ஏன் இந்த் ஊரு பேப்பரு, புஸ்த்தகம்னு ஏதும் படிக்கிறத்தில்லையா??

பொன்ஸ்~~Poorna said...

தெ.கா, என்னோட பதிவெல்லாம் உங்களுக்குப் புரிஞ்சாத் தான் நான் ஆச்சரியப் படணும்.. இல்லைன்னா விடுங்க.. அடுத்த பதிவு புரியலாம் :)

உதயகுமார், எல்லாம் படிக்கிறது உண்டுங்க.. பதிவு மேய்வதைத் தவிர சில சமயங்களில் அபூர்வமா இப்படி வெளிச் செய்திகளும் படிக்கிறது உண்டு.. ஆனா விமர்சிக்கும் அளவுக்கு ஆழ்ந்து படிக்கிறதில்லை. (அதான் டீசன்டா சொல்லிருக்கோமே.. இப்படிப் பிரிச்சு பிரிச்சு கேட்டா எங்க தல மாதிரி நானும் அவ்வ்வ்வ்வ்வ்) :)

வெளிகண்ட நாதர் said...

//(அதான் டீசன்டா சொல்லிருக்கோமே.. இப்படிப் பிரிச்சு பிரிச்சு கேட்டா எங்க தல மாதிரி நானும் அவ்வ்வ்வ்வ்வ்) :) //யாரு உங்க தல??

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க நட்சத்திரம், வெளி விவகாரங்களில் பயங்கர அட்வான்ஸ்டா இருக்கிற நீங்க இப்படிப் பதிவுலகச் செய்திகள் இத்தனை பின்னாடி இருக்கீங்க!!

அதான் நம்ம வ.வா.சங்கத் தலைவர் கைப்புள்ள தான் :)

VSK said...

ஆசை, தோசை, அப்பளம், வடை, அஸ்கு, புஸ்கு, ஆமை[யானை??!!] வடை!

வவ்வால் said...

ஆசை... ஆசை இது பேராசையா ... :-))

( ஆசையே துன்பத்திற்கு காரணம்,ஆசை துறந்தால் அகிலம் உனக்கு! இதுலாம் ஏன் எனக்கு நியாபகம் வருதுனே தெரியலை ..ஹி ... ஹி ... ஹி )

Unknown said...

அவ்வளவு பெரிய விமர்சனம் இல்லை.. ஆனாலும் முழுக்க தட்ட முடியலை. இங்க போய் பாருங்க//

It's a pay site:-((

மகேஸ் said...

பொன்ஸ், அவள் விகடன் user id , password கேக்குதுங்க. இருந்தாக் குடுத்து உதவுங்க.

துளசி கோபால் said...

சின்னச் சின்ன ஆசை, இது சிறகடித்துப் பறந்து போனபின் வந்த ஆசை.

ம்ம்ம்ம் நடக்கட்டும்.சொந்த ப்ளொக் வச்சுக்கிட்டு நினைச்சதையெல்லாம்
எழுதாம இருந்தா எப்படிங்க?

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, என்ன இது? வடை ஆமை வடை எல்லாம் நினைவு படுத்தறீங்க.. இங்க யாரு இப்போ எனக்கு வடை சுட்டுத் தருவாங்க.. ம்ம்ம்:((((

வவ்வால், ஏதோ ஆசை, விடுங்களேன்!! :)

செல்வன், மகேஸ், அந்த பார்ட்டை மட்டும் வெட்டி இங்கயே போட்டுட்டேங்க. படிச்சா சப்புனு ஆய்டும்னு நினைக்கிறேன். பில்டப் கொஞ்சம் தூக்கலோ?

$செல்வன், ஆங்கில வலைப்பூ ஆரம்பிச்சதிலேர்ந்து நீங்க ஆங்கிலத்துல தான் பின்னூட்டம் கூடப் போடறீங்க போலிருக்கு.. :)

ஆமாம் துளசி அக்கா.. கரெக்டு. இப்படிக் கூட எழுதலைன்னா இந்த ப்ளாக் என்னத்துக்கு? :))

Unknown said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்.நான் பள்ளிகூடத்திலேயே தமிழ் பரிட்சையை கூட ஆங்கிலத்தில் எழுதி புரட்சி செய்தவனாக்கும்.ஆக ஆங்கில பதிவு ஆரம்பித்த பின் தான் ஆங்கிலத்தில் பதில் எழுதுகிறேன் என்பது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும்:-))

ஹா..ஹா...நான் ஆபிஸ்ல இருந்து அனுப்பிய பின்னூட்டங்கள் அவை.அதான் ஆங்கிலம்.

வீட்டுக்கு வந்ததும் தமிழ்ல்ல பின்னூட்டம் எப்படி வேகமா வருதுன்னு பாருங்க

வல்லிசிம்ஹன் said...

"
ஏதாவது தமிழ் புக்கை எடுத்து எழுதுவோம்.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. இப்போவே எல்லா ஆசையும் தீர்த்துட்டா அப்புறம் ப்ளாக் பக்கம் வராமயே போய்ட சான்ஸ் இருக்கு :) "
இது நிஜம்.எனக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்களில்
இதுவும் ஒன்று.
நமக்கு ஊக்கம் கொடுக்கும் சில விஷயங்களில்(விடயங்களில்)
உற்சாகம் குறையாமல் இருந்தால் அதிர்ஷ்டம் தான்.
விஜய் டிவிலே க்ராண்ட் மாஸ்டர்னு ஒரு டாக் ஷோ ஆரம்பமாயிருக்கு.

பொன்ஸ்~~Poorna said...

சரிதான் செல்வன்.. இப்போ கொஞ்ச நாளா நீங்க எல்லார் பக்கத்திலயும் இங்கிலீஸ்ல எழுதறீங்கன்னு தோணிச்சு.. அதான் சொன்னேன்..

ஆமாம் மனசு, என்னைப் பொறுத்தவரை இது நடந்து கொண்டே இருக்கும்.. ஆறு மாதத்துக்கு ஒரு முறை எதாவது புதுசா பண்ணிகிட்டே இருக்கணும்.. :).

ஆக மொத்தம் யாரும் பதிவைப் படிக்கலை.. பின்னூட்டத்துல சொல்லி இருக்கிறதுக்குத் தான் மக்கள் பின்னூட்டம் போடறாங்க.. சீக்கிரமா அடுத்த பதிவைப் போட்டுறணும்.. இல்லைனா இது பின்னூட்ட விளையாட்டாவே ஆய்டும்

நன்மனம் said...

:-)

"-"

பொன்ஸ்~~Poorna said...

நன்மனம், மைனஸ் குத்தினீங்களா? அது சரி.. நம்ம பதிவுக்கு + குத்தே வராது.. நானே குத்த மாட்டேன்.. இதுல மைனஸ் ஒண்ணு தான் குறைச்சல் போங்க :)
சரி இப்படியும் ஒரு மைனஸ் ஜந்து தமிழமணத்துல இருந்துட்டுப் போகட்டும் :)

குமரன் (Kumaran) said...

யானையை ஓடுறதைப் பாத்து என் பொண்ணு ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டு இருந்தா. அதுக்காக ஒரு + :-)

நன்மனம் said...

பொன்ஸ், என்ன இவ்வளவு பீளிங்ஸா பதில் சொல்லிட்டீங்க :-))

அது மைனஸ் இல்ல பாலம் சிம்பள், நாங்க படிக்காதத நீங்க படிச்சு அதுக்கு விமர்சனத்தோட கொடுத்து, ஒரு செய்திக்கும் எங்களுக்கும் ஒரு பாலமா இருக்கீங்கனு சிம்பாளிக்கா சொன்னா நீங்க எங்க நம்பவா போரீங்க:-))

பொன்ஸ்~~Poorna said...

அச்சச்சோ.. சும்மா கிண்டலுக்குச் சொன்னேங்க.. நீங்க வேற.. +எல்லாம் எடுத்துட்டு திரும்பி - போடுங்க எல்லாரும் :-)

நன்மனம், உங்க ப்ரோபில்லயும் ஒரு பாலம், நீங்க அப்பப்போ போடும் பின்னூட்டத்துலயும் ஒரு பாலம்.. என்ன ஒரு காம்பினேஷன் :)

manasu said...

என்ன ஒரு ஆசை.....
(ஏன் இப்ப சோறெல்லாம் வடிக்கிறது இல்லையா... பதிவு போட)

முன் பின்னூடமிட்டது மனசு இல்ல மனு.

ராமகிருஷ்ணனின் துணையெழுத்து பிடிச்ச நூல் சொல்லிரூக்கிங்ள்ள... அதுபற்றி எழுதலாமே.

//யாருக்கும் புரியாத ஒரு கவிதை எழுதுவதா?//
என்ன சிபி உள்குத்தா?

நாமக்கல் சிபி said...

நான் கூட அப்பவே ஒரு "+" போட்டாச்சு!

நாமக்கல் சிபி said...

//என்ன சிபி உள்குத்தா?//

மனசு! நமக்கெல்லாம் உள் குத்தெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது(வெளங்காது)! நம்மளதெல்லாம் வெளி குத்துதான்.
பாருங்க ஏற்கனவே ஒரு + குத்துதான் போட்டிருக்கேன்.

:))

Unknown said...

Pons, I have also posted a blog with the same title "Aasai" just one day before ur post. Visit mine ;-)

G.Ragavan said...

அட நீங்களும் அரசியல் பதிவு போடலையா? நானும் போடலை. :-)

பொன்ஸ், நீங்க கொஞ்சம் விதவிதமா கலக்கனும்னு கேட்டுக்கிறேன். கலக்கோ கலக்ஸ் பொன்ஸ் அப்படீங்கற பட்டம் வேற வாங்கனுமே.

நாகை சிவா said...

அது என்னாங்க, கலைஞரின் கைமாறு. அதை பற்றி கொஞ்சம் விபரமாக சொல்லுகளேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

Chellamuthu Kuppusamy said...

ஒன்னும் சொல்லிகிறதுக்கு இல்ல போங்க..

அது இருக்கட்டும்..மங்கையர் மலர், மேகா சீரியல் பொண்ணா நீங்க?

நாமக்கல் சிபி said...

நாகை சிவா அவர்களே!

கலைஞரின் கைம்மாறு பற்றி அறிய
இப்பதிவையும் இதற்கு அடுத்துள்ள பதிவையும் பாருங்கள், ஓரளவு வி(வெ)ளங்கும்.

http://pithatralgal.blogspot.com/2006/05/85.html

பொன்ஸ்~~Poorna said...

மனு, சாரிங்க.. பேரைத் தப்பா படிச்சிட்டேன்.:(

மனசு, நீங்களாவது பேரை மாத்திக்கிடலாம்ல? அட ரொம்ப வேணாம்ங்க.. MANASUன்னு போட்டாக் கூட குழப்பம் குறையும் :). என் கண்ணாடியைத் துடைச்சுப் போட்டாலும் குழப்பம் குறையும்னு சொல்றீங்களா. அது சரி :) எந்தப் புத்தகம் பத்தி எழுதணும்னாலும் ஏற்கனவே எழுதி இருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். எழுதலாம், எழுதுவதை விட படிப்பது தான் என் சாய்ஸ்.

பாலாஜி உங்க கதையைப் படிச்சிட்டேன். திருவண்ணாமலைக்காரரா நீங்க?

பொன்ஸ்~~Poorna said...

ராகவன்,
//அட நீங்களும் அரசியல் பதிவு போடலையா? நானும் போடலை. :-)//
அப்படியே மெயின்டெயின் பண்ணிக்குங்க.. :)

// பொன்ஸ், நீங்க கொஞ்சம் விதவிதமா கலக்கனும்னு கேட்டுக்கிறேன். கலக்கோ கலக்ஸ் பொன்ஸ் அப்படீங்கற பட்டம் வேற வாங்கனுமே. //
அது சரி.. எல்லாப் பக்கத்திலயும் அடிவாங்கிக் கொடுக்க ப.ம.கவின் சதி!!! நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு :)

சிவா, உங்களுக்குச் சிபி பதில் சொல்லி இருக்காரு.. ஆனா, இது ஒரு அறி வினாவாக இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.. ;)

//அது இருக்கட்டும்..மங்கையர் மலர், மேகா சீரியல் பொண்ணா நீங்க? //
குப்பு, நான் மங்கையர் மலர் படிக்கிறது இல்லை.. அது என்ன மேகா சீரியல்? மெகா சீரியல் எனில், பொழுது போகலை மூட் அவுட்னா பார்த்துக் கிண்டல் அடிச்சு சிரிக்கிறது உண்டு.. ஒரு மெகா சீரியல் எடுத்துகிட்டு திறனாய்வுப் பதிவு போடவா? ;)