Wednesday, June 28, 2006

நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

தமிழ்மண நட்சத்திரம்னா தினசரி ஒரு பதிவு போட்டு தமிழ்மண முகப்பில் இருக்கணும்னு பார்த்தே பழகிடிச்சு.. இப்போ கடந்த ரெண்டு நாளா கல்யாண மாப்பிள்ளை நிலவு நண்பன் தான் நட்சத்திரம்னு தெரிஞ்சதிலிருந்து ஒரே பதிவு தமிழ்மண முகப்பில் இருப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

அதனால், ரசிகவ் ஞானியார் பற்றி எனக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாகப் போடலாம் என்று பார்க்கிறேன்.. அப்படியே எனக்கு ரொம்ப தெரியும்னு நினைச்சி படிக்காதீங்க.. நான் வந்த நாளிலிருந்து(அதிகமில்லை ஜென்டில்மேன், March 2006 தான்) ஞானியார் என்ன புதுப் பதிவு போட்டாலும் படிச்சிடுவேன். அந்த மாதிரி ஒரு தொடர் வாசகி என்னும் முறையில் எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நிலவு நண்பன் பக்கங்களில் எல்லாக் காலத்துக்கும், எல்லாப் பொருளிலும் கவிதைகள் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்பாவுக்கான அவரது கடிதம் மிகச் சமீபத்தில் மீள்பதிவாகி வந்தது.

காதல் கவிதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்..

இலங்கைத் தமிழர்களுக்கான அவரது கவிதையும் இப்போதும் பொருந்தும் ஒன்று (இனிவரும் காலங்களில் பொருந்தாமல் போகட்டும்! )

எந்தக் காரணங்களுக்காகவோ தனி வலைப்பூ தொடங்கிப் பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனி வலைப்பூ தொடங்கியது ஞானியார் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். அவரது விதைகள் என்னும் வலைப்பூ மூலம் பல உயிர்களைப் பிழைக்க வைத்தது, வைத்துக் கொண்டிருப்பது எத்தனை பாராட்டினாலும் தீராது..

அட, மாப்பிள்ளையா லட்சணமா சமையலும் பழகி இருக்காருங்க..

கவிதைல நகைச்சுவை குறைவுன்னு யாருங்க சொன்னாங்க? இதைப் பார்க்கச் சொல்லுங்க..


நான் கொடுத்த அறிமுகத்தைப் பார்த்துட்டீங்க.. நிலவு நண்பன் தானே தன் ஒரு வருட வலைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த நினைவுகள் இங்க இருக்கு. அதையும் பார்த்துடுங்க..

ஞானியார் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகளை மட்டும் சொல்லிட்டு இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்:

* இணையத்தில் கவிஞர் பெயரில்லாமல் வலம் வந்த காலத்திலேயே இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம நிலவு நண்பன் எழுதியது என்றவுடன், இன்னும் அதிகம் விரும்பிய கவிதையாகி விட்டது. இதுவரைக்கும் பார்க்கலைன்னா, படிச்சி பாருங்க. நல்ல கவிதை.

* அடுத்து எனக்குப் பிடிச்சது அவரோட காதலர் தினப் பதிவு. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள். உரைநடைப் பதிவுல இத்தனைக் கவிதையா எழுத முடியுமா என்ன? அது சரி, காதலைப் பத்தி நிலவு நண்பன் எழுதினால் கவிதை வராமல் எப்படி? இந்தப் பதிவுல எங்கயோ ஞானியாரோட நிலவைப் பத்தியும் க்ளூ இருக்கு.. எனக்குத் தான் புரியலை.. உங்களுக்கு? :)

கடைசியா ஊருக்குப் போவதற்கு முன்னால், ஆறு பதிவு போல ஒரு ஐந்து பதிவு போட்டார்.. என்னைத் தான் அடுத்ததா அஞ்சு கேள்விக்கும் பதில் எழுதித் தொடரச் சொன்னார்..

ஞானியார், நமக்கு கேள்வி கேட்கத் தான் தெரியும்.. பதில் சொல்றதுன்னா. "ஹி ஹி" தான்.. அதான் இத்தனை பெரிய பதிவு போட்டிருக்கேனே.. அந்தக் கேள்வியெல்லாம் சாய்ஸ்ல விட்டிரலாமா? :))

நண்பர்களே, தமிழ்மண நட்சத்திரமான நிலவு நண்பனுக்காக நான் இப்போ ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.. இந்த ஒரு வாரம், மாப்பிள்ளை சார் ஊரில் இல்லாததால், ஞானியாரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் இது போல அவரவருக்குத் தெரிந்ததை, ஞானியார் பதிவுகளில் ரசித்ததை, விதைகள் மூலம் சாத்தியமான உதவிகளை, எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க..

தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்.. தமிழ்மண நண்பர்கள் சார்பா ஞானியார்-ஜஹானுக்கு நமது திருமணப் பரிசு.. இந்தப் பதிவெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி ஒரு கார்டுல போட்டு கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்.. - சஜஷன் தான் - என்ன சொல்றீங்க?

41 comments:

துளசி கோபால் said...

என்னம்மா நட்சத்திரத்துக்கு விளம்பரமா? இதுவும் நல்லாத்தான் இருக்கு.

பாவம். கல்யாண மாப்பிள்ளைக்கு நேரம் கிடைச்சிருக்காது. இப்பத்தானே
ஊர் போய் சேர்ந்துருப்பார்.

செல்வன் said...

நீங்க எப்பங்க நட்சத்திரமாகப் போறீங்க?அதை சொல்லுங்க.ஒரு கலக்கு கலக்கிடுவோம்.

ஆனா இந்த கார்டை யாரு அவரு கிட்ட கொண்டு போய் கொடுப்பது?கல்யாணத்துக்கு போகும் பதிவர்கள் யாராவது இருக்காங்களா என்ன?

கோவி.கண்ணன் said...

நிலவை நட்சத்திரம் என்றால் கோவம் வரதா, அதனால் ஓளிந்துகொண்டுள்ளது

பொன்ஸ்~~Poorna said...

//கல்யாண மாப்பிள்ளைக்கு நேரம் கிடைச்சிருக்காது.//
அதாங்க்கா.. ஏதோ நம்மால் ஆனது.. கொஞ்ச நேரமாவது தமிழ்மண முகப்பில் நட்சத்திரம் பேர் இருக்குமே...

//நீங்க எப்பங்க நட்சத்திரமாகப் போறீங்க?//
அட போங்க செல்வன்.. நம்ம பதிவு போட மேட்டர் இல்லாம, லோகோ மாத்திகிட்டு காமெடி பண்ணிகிட்டு இருக்கோம்.. நீங்க வேற.. :))

//ஆனா இந்த கார்டை யாரு அவரு கிட்ட கொண்டு போய் கொடுப்பது?கல்யாணத்துக்கு போகும் பதிவர்கள் யாராவது இருக்காங்களா என்ன? //
இப்போ வரை ப்ரியன் போறாரு.. மேலும் யாராவது போறாங்களான்னு தெரியலை...

சிறில் அலெக்ஸ் said...

amazing pons..nice job..Sry no tamil typing today.

When people are looking for the slightest way to find fault... your post is a soothing relief.

Its a wrong time for him to be star... I would not have accepted.

நாமக்கல் சிபி said...

ஞானியார் சார்பா நீங்க போட்ட பதிவுக்கு (ஞானியார் சார்பா) நன்றி சொல்லிக்கறேன்.

Kuppusamy Chellamuthu said...

அப்பாடி.. இன்னிக்குத் தான் உங்க பிளாக் முழுசா ஓப்பன் ஆகி பின்னூட்டம் இட அனுமதிச்சுருக்கு.

பொன்ஸ்~~Poorna said...

கண்ணன்,
ஆனானப் பட்ட நிலாவே ஒரு வாரம் தமிழ்மணத்துல நட்சத்திரமா இருந்தாங்க தானே.. நிலவு நண்பனுக்கும் அது பெருமை தாங்க.. வந்துருவாரு.. சீக்கிரமே

சிறில்,
//When people are looking for the slightest way to find fault//
வார்ப்புரு பத்தி பேசினதை நினைச்சுப் பார்த்தா, நீங்க இந்த வரில, என்னையும் (உள்)குத்தறீங்களோன்னு தோணுது.. :))) இருந்தாலும், வாழ்த்துக்களுக்கு நன்றி..

சிபி, நன்றிக்கு நன்றி, அப்படியே, ஞானியார் சார்பா அடுத்த பதிவு நாளைக்குப் போட்டுடுவீங்களாம் :)

SK said...

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்கிற குறளுக்கு ஏற்ப, நட்சத்திர நிலவு நண்பணுக்காக வந்து பதிவிட்ட தங்க மங்கையே!
நின் திறம் போற்றுதும்!

கோவி., அறிவியல் கூற்றுப்படி, ஆதவன், நிலவு எல்லாமே ஒருவகை நட்சத்திரங்கள் தானாமே!!

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. ஆதவன் நட்சத்திரம் சரி. நிலவுமா? நிலவு 'நிலவு' தானே???? :-)

Venkataramani said...

//நீங்க எப்பங்க நட்சத்திரமாகப் போறீங்க?//
அதானே..

//அப்பாடி.. இன்னிக்குத் தான் உங்க பிளாக் முழுசா ஓப்பன் ஆகி பின்னூட்டம் இட அனுமதிச்சுருக்கு.//
இதுபற்றி பொன்ஸ் ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு கமெண்டுக்கு ஒருதடவை one-clickகிற்காக அந்நியலோகம் வலைத்தளத்தை அணுகுவதால், நிறைய பின்னூட்டங்கள் இருக்கும் பதிவுகள் சிலசமயம் இவ்வாறு பாதிக்கப்படலாம் என்று சந்தேகிக்கிறேன். இதை வேறுவிதமாக செய்ய முயற்சிக்கிறேன். ஓரிரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

சேதுக்கரசி said...

நல்ல காரியம் செஞ்சீங்க பொன்ஸ். ஆமா, நீங்க சொன்னமாதிரி ப்ரியன் நிலவுநண்பனோட திருமணத்துக்குப் போறார் தான். அன்புடன் குழும நண்பர்களின் வாழ்த்துக்களையும் அவர் தான் பிரிண்ட் செஞ்சு கொண்டுபோய்க் கொடுக்கப்போறார்.

"ரசிகவ்" ஞானியாரை எனக்கு ஏப்ரல் 2005 முதல் தெரியும். அவருடைய தூக்கம் விற்ற காசுகள் கவிதையை அன்புடனில் சுட்டு இட்டதும் அதுக்குப் பின்னூட்டம் பிச்சிக்கிட்டுப் போச்சு. அப்ப அவர் திஸ்கியில் அடிச்சிருப்பார்னு நினைக்கிறேன். யாகூ சாட்டில் அவரைத் தொடர்பு கொண்டு யுனித்தமிழ் தட்டச்சுக்கு அறிமுகப்படுத்தினேன். ரசிகவ் டச்சுக்கும் ரசிகவ் நகைச்சுவைக்கும் அவருடைய nickname என்ன தெரியுமா? "அன்புடனின் வால்!"

ஆமா எனக்கொரு சந்தேகம்.. அவங்கவங்க சௌகரியத்தைத் தெரிஞ்சுக்காமல் தான் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக்குவாங்களா?!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி எஸ்கே, நிலவு நண்பனுக்காக எத்தனை பதிவு வேணுமானாலும் போடலாம்.. அவருடைய விதைகளைப் பார்த்தீங்களா?

குப்பு, குமரன், ரமணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ரமணி, செல்வனுக்குச் சொன்ன பதில் தாங்க உங்களுக்கும்.. அப்படியே இதுக்கு முந்தய பதிவுல மணியன் ஏதோ கேட்கிறார் பாருங்க..

பொன்ஸ்~~Poorna said...

சேதுக்கரசி,
ஞானியாரைப் பற்றி அடுத்த பதிவு போட சரியான ஆள் நீங்க தான் போலிருக்கே!! கொஞ்சம் அடுத்த பதிவு போடறீங்களா? :)

//அவங்கவங்க சௌகரியத்தைத் தெரிஞ்சுக்காமல் தான் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக்குவாங்களா?!
//

தமிழ்மண நட்சத்திர வாரம் என்பது பதிவர்களின் வசதியைப் பொறுத்து தாங்க அமையுது.. ஞானியார் ஏதோ ஒரு கணக்குல ஒப்புகிட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன்.. ஊருக்குப் போய் அங்கிருந்து பதிவு போடுவாராய் இருக்கும்..

ஞானியாரை வால்னு சொல்வீங்களா? இங்க (என்னை மாதிரி) நிறைய வால்கள் இருக்கிறதுனால அடக்கி வாசிச்சாரு போலிருக்கு :)

சேதுக்கரசி said...

//ஞானியாரைப் பற்றி அடுத்த பதிவு போட சரியான ஆள் நீங்க தான் போலிருக்கே!! கொஞ்சம் அடுத்த பதிவு போடறீங்களா? :)//

அய்யோ ஆள விடுங்கப்பா. எனக்கு வலைப்பூ அலர்ஜி. நானே வலைப்பூக்களுக்குப் புதுசு. என் வலைப்பூ ஒரு நடை போய்ப் பாருங்க, ஒரே "பொல்லாத மௌனமா" இருக்கும் :-) நம்ம கோபியின் பிருந்தாவனத்தில் ஒரு பின்னூட்டம் இடப்போய்த் தான் பிளாக்கர் அக்கவுண்டு ஓப்பன் செய்யப்போய் வந்த வினை இது :-) கொசுறு தகவல்: வலைப்பூ அலர்ஜியைப் போக்குறதுக்காக கைப்புள்ள வ.வா.சங்கத்துப் பக்கம் அப்பப்ப வரச்சொல்லியிருக்கார்!!

//ஞானியாரை வால்னு சொல்வீங்களா? இங்க (என்னை மாதிரி) நிறைய வால்கள் இருக்கிறதுனால அடக்கி வாசிச்சாரு போலிருக்கு :)//

வலைப்பூ வால்களைப் பத்தி இப்பத்தான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன். உண்மை தான், இங்கே நிறைய வாலுங்க இருக்கீங்க. அன்புடனில் ரசிகவ் தான் சரியான வால்.

Samudra said...

யாருப்பா அது ஞானியார் கல்யானத்துக்கு போறது?

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லீடுங்க.முடிஞ்சா பந்தியில் இன்னொரு ரவுன்டு என்னோட பேர சொல்லிட்டு உக்காதிருங்க. :))

S. அருள் குமார் said...

//தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்// நல்ல ஐடியா பொன்ஸ்.

எனக்குத் தெரிந்து சிங். செயகுமார் திருமணத்திற்கு செல்கிறார்.

மணியன் said...

பொன்ஸ், உங்களின் இந்த இடுகை நட்பின் இலக்கணத்தை வரையறுப்பதாக இருக்கிறது. இதை போற்றுகிறேன்.

தவிர நிலவுநண்பனின் கவிதைகளை விரிவாக அலசியுள்ளீர்கள். நிச்சயமாக இந்த ஆக்கம் அவருக்கு ஒரு நல்ல கல்யாணப் பரிசுதான். இத்தகைய இரசிகையை பெற்றது அவர்தம் ஆக்கங்களுக்குப் பரிசு.

வளர்க இத்தகையோர்!!

மணியன் said...

//ரமணி, ....................அப்படியே இதுக்கு முந்தய பதிவுல மணியன் ஏதோ கேட்கிறார் பாருங்க.//

ரமணி அதற்கு பதில் சொல்லிவிட்டார். பழைய ஜிமெயிலை தொடர்ந்ததால் வந்தது. இப்போது சரியாக வேலை செய்கிறது. அடிக்கடி நிங்க் தளம் தான் பிரேக் எடுத்துக் கொள்கிறது :)

ப்ரியன் said...

பொன்ஸ் நல்லதொரு காரியம்.காலையில் அலுவலகம் வரும் வழியிலேயே சொல்ல பாலா அழைத்திருந்தார் பயணத்தில் இருந்ததால்,பேச இயலவில்லை உங்கள் பதிவை மடல் அனுப்பி இருந்தார்.படித்த சூட்டோடு நானும் நிலவு நண்பன் ஞானியைப் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன் என் வலைப்பூவில் காண்க கலியாணத்துக்கு போறேனுங்கோ....

நீங்கள் சொன்ன அதே வெட்டி ஒட்டும் வேலையை அன்புடன் குழுமத்திலும் செய்து கொண்டிருக்கிறோம் :) அதோடு வலைப்பூ வாழ்த்துக்களும் சேர்ந்தால் ரசிகவுக்கு கண்டிப்பாக இனிப்பான அதிர்ச்சிப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.என்னுடைய தொடர்பு தகவல்களை என் பதிவில் தந்திருக்கிறேன்.அன்பர்கள் எல்லோரும் பதித்து வெட்டி ஒட்டி தந்தால் சுகம் :)

நாகை சிவா said...

பொன்ஸ்,
நல்ல ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நம்ம எஸ்.கே, அடித்த கமெண்டை நானும் வழி மொழிகின்றேன்.
ரசிகவ் ஞானியாரை சில காலம் தான் தெரியும் என்றாலும் இம்புட்டு சீக்கிரம் போயி மாட்டுவாருனு நான் எதிர்ப்பாக்கலை. என்ன பண்ணுறது. விதினு ஒன்னு இருக்குல :)))))

ப்ரியன் said...

அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனி நம்மை எல்லாம் முந்திகிட்டாங்க பொன்ஸ் அவுங்க பாருங்க திங்கட்கிழமையே பதிவு போட்டு இருக்காங்க(அவர் தமிழ்மணத்தில் இல்லை என்று நினைக்கிறேன்)

For Nilavu Nanban!

காசி (Kasi) said...

என் வாழ்த்தையும் மணமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 'எல்லா வளமும் பெற்று வாழ்க.'

மஞ்சூர் ராசா said...

அன்பு போன்ஸ்
ரசிகவ் என்னும் எனது நண்பனைப்பற்றி (வலைப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நண்பர்தான்) (எனக்கு முதலிலிருந்தே தெரியும்ங்கறதாலும். முத்தமிழ் குழுமத்தில் தொடர்ந்து எழுதிவரும் முக்கிய எழுத்தாளர் என்பதாலும்) உங்களின் அறிமுக வலைப்பதிவு அருமை. நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களும் பிரியனும் முந்திவிட்டீர்கள்.

மிகவும் நன்றி.

உங்களுக்கு தெரியாத ஒரு விசயம்: ரசிகவ் விகடனின் மாணவ நிருபராகவும் கல்லூரியில் படிக்கும் போதே பல பத்திரிகைகளுக்கு நிருபராகவும் இருந்திருக்கிறார் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நன்றி.

மஞ்சூர் ராசா
குழுமம்:http://groups.google.com/group/muththamiz
http://muththamiz.blogspot.com/

manasu said...

அவரின் "அப்பாவுக்கு ஒரு கடிதமும்", "நீ எனக்கு வேண்டாமடி" யும் படித்தேன். நல்ல கவிதை என்பதில் மறுப்பு இல்லை.

நீ எனக்கு வேண்டாமடி கவிதையின் கருத்துகளோடு உடன்பாடில்லை,முத்துக்குமரன் போல.

காதலித்த பின்பு தான் காதலனுக்கு அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லாரும் கிடைத்தார்கள் என்றால் சரி. காதலி கிடைக்குமுன்பே இவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களையே காதலித்திருக்கலாமே இப்போது போல்.

இவ்வளவு இயல்பான,நேசமான குடும்பம் இருக்கும் போது காதலித்திருக்கவே கூடாது.

ஓடிபோதலின் வலி ஆணை(ஆனை இல்ல) பெண்ணுக்கே அதிகம்.

நிஜத்தில் காதலித்த நிலவையே கை பிடிக்க போகும் நிலவுநண்பனுக்கு வாழ்த்துக்கள் (க், வருமா?)

//கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்//

"இப்பவாவது" கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா!!!!

தேவ் | Dev said...

நிலவுக்கு நண்பன் ஆகிறார் நிலவு நண்பன்..மணவிழா வாழ்த்துக்கள்...

நட்சத்திர நட்புக்கு மரியாதை செய்திருக்கும் பொன்ஸ்க்கு பாராட்டுக்கள்

பொன்ஸ்~~Poorna said...

சேதுக்கரசி,
// அய்யோ ஆள விடுங்கப்பா. எனக்கு வலைப்பூ அலர்ஜி. நானே வலைப்பூக்களுக்குப் புதுசு. என் வலைப்பூ ஒரு நடை போய்ப் பாருங்க, ஒரே "பொல்லாத மௌனமா" இருக்கும் :-) //
இங்கே எல்லாருமே இப்படித்தாங்க ஆரம்பிச்சோம். நீங்க சீக்கிரமே எழுதிடுவீங்க. நான் கியாரன்டி.
வ.வா.ச பக்கம் வாங்க.அங்க வந்தீங்கன்னா நல்லா ஜாலியா இருக்கும் :). தலையே சொல்லிட்டா, வால் நான் என்ன சொல்லுறது? :))

// வலைப்பூ வால்களைப் பத்தி இப்பத்தான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன். உண்மை தான், இங்கே நிறைய வாலுங்க இருக்கீங்க. அன்புடனில் ரசிகவ் தான் சரியான வால். //
ஆனா நீங்களும் வாலுல சேர்த்தின்னு தான் தோணுது.. கொஞ்ச நாள் போகட்டும், என்னவோ எனக்குப் போட்டியா வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் :)))

பொன்ஸ்~~Poorna said...

சமுத்ரா, மணியன், நாகை சிவா, காசி, மனசு,
உங்க வாழ்த்தை எல்லாம் ப்ரியன் கிட்ட கொடுத்தாச்சு.. நிச்சயம் போய்ச் சேர்ந்திடும் :). ஞானியார் சார்பா நன்றியும் ப்ரியன் எடுத்து வந்து கொடுப்பாரு :)
(கொரியர் மாதிரி ஆக்கிட்டியே பொன்ஸுன்னு கேட்காதீங்க ப்ரியன்.. நான் ஊர்ல இருந்திருந்தா உங்களைத் தொல்லை பண்ணுவேனா?!! :)))


அருள்,
//நல்ல ஐடியா பொன்ஸ்.//
அது சரி.. அப்போ அடுத்து நீங்க எழுதுறீங்களா? இல்லை சிங்கை எழுதச் சொல்றீங்களா? :)))

பொன்ஸ்~~Poorna said...

//காலையில் அலுவலகம் வரும் வழியிலேயே சொல்ல பாலா அழைத்திருந்தார் பயணத்தில் இருந்ததால்,பேச இயலவில்லை உங்கள் பதிவை மடல் அனுப்பி இருந்தார்.//
பாலா இன்னும் ப்ளாகை விட்டுப் போகலையா?!! :)))

// கண்டிப்பாக இனிப்பான அதிர்ச்சிப் பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.//
உண்மைங்க.. பார்க்கலாம்.. திடீர்னு தோணிச்சு.. சரி.. நீங்களும் சிங்கும் கல்யாணத்துக்குப் போறீங்களேன்னு தான் தைரியமா ஆரம்பிச்சேன்.. இப்படி வாழ்த்துக்களை எடுத்துப் போய்ச் சேர்ப்பதற்கு உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது ப்ரியன்..

//அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனி நம்மை எல்லாம் முந்திகிட்டாங்க பொன்ஸ் அவுங்க பாருங்க திங்கட்கிழமையே பதிவு போட்டு இருக்காங்க//

அன்பர் தமிழ்மாங்கனி கவிதை நல்லா இருக்கு :). நட்பைக் காட்டுவதில் யார் முந்திகிட்டா என்னங்க?! திங்களுக்கு அவங்க, புதனுக்கு நம்ம. இன்னும் மற்ற நாட்களுக்கும் யாராவது எழுதினா நட்சத்திர வாரம் நல்லா போகும் :)

பொன்ஸ்~~Poorna said...

மஞ்சூர் ராசா,
//நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களும் பிரியனும் முந்திவிட்டீர்கள். //
எழுதுங்க.. நான் வெறுமே நான் படிச்ச மூன்று மாதக் கவிதைகளுக்கு என் பார்வையிலான அறிமுகம் தான் கொடுத்திருக்கேன். ஞானியார் பத்தி எழுத உங்களுக்குத் தான் அதிக உரிமை + ஞானம் இருக்கு.. எழுதுங்க ஐயா.. பார்க்கக் காத்திருக்கோம்..

பாருங்க, பின்னூட்டத்துலயே புதுத் தகவல் சொல்றீங்க.. பதிவு போட்டா இன்னும் எத்தனை இனிமையா இருக்கும்?!!

முத்துகுமரன் said...

வாழ்த்துச் சரம் கோர்க்க
நட்புக்கரம் நீட்டிய தோழியே.
நன்றிகளாயிரம் உனக்கு.
இரட்டிப்பாக அல்ல
மடங்குகளாகப்
பெருகியிருக்கிறது
பூரித்த உள்ளங்களின் அன்பு.
மிதக்கட்டும்
மின்னட்டும்
நட்சத்திர நிலவு
நம்
நட்பின் வெளிகளில்

பொன்ஸ்~~Poorna said...

மனசு,
ஞானியார் அந்தக் கவிதைக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்காரு.. எனக்கென்னவோ அந்த விளக்கம் சரி தான்னு தோணுது.. வரட்டும், புது மாப்பிள்ளையா வந்ததும் அவர்கிட்டயே பேசுவோம். :)
//வாழ்த்துக்கள் (க், வருமா?)// க் வரும் வராமலும் எழுதலாம். அதுவும் சரி தான் :)

நன்றி தேவ்..

சேதுக்கரசி said...

//இம்புட்டு சீக்கிரம் போயி மாட்டுவாருனு நான் எதிர்ப்பாக்கலை. என்ன பண்ணுறது. விதினு ஒன்னு இருக்குல :)))))//

என்னங்க நாகை சிவா இப்படிச் சொல்லிப்புட்டீங்க? அவர் கல்லூரில ஜஹானுடைய டிபன்பாக்ஸ்ல இருந்து "பூரி"யைத் திருடி சாப்பிட்டுட்டு "சாரி"ன்னு எழுதிவச்சப்பவே மாட்டிக்கிட்டாருன்னில்ல நான் நெனச்சேன்?! (அவரோட பூரிக்கதை படிச்சீங்களா? ப்ரியனோட பதிவுல பாருங்க)

//இங்கே எல்லாருமே இப்படித்தாங்க ஆரம்பிச்சோம். நீங்க சீக்கிரமே எழுதிடுவீங்க. நான் கியாரன்டி.//

ஆகா.. வாழ்த்துக்களுக்கு நன்றி பொன்ஸ். 3 மாச விடுமுறைல போறேன். பார்ப்போம் 2007-ஆம் வருசம் பதிவு போட ஆரம்பிக்கிறதைப் பத்தி ;-)

//ஆனா நீங்களும் வாலுல சேர்த்தின்னு தான் தோணுது.. கொஞ்ச நாள் போகட்டும், என்னவோ எனக்குப் போட்டியா வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் :)))//

பாத்தீங்களா? பின்னூட்டமிடுறதுக்காக பிளாக்கர் அக்கவுண்டு திறந்து கொஞ்ச நாள்லயே எவ்ளோ நல்ல பேர் வாங்கியிருக்கேன்னு :-D இந்த லட்சணத்துல பதிவு வேற போட ஆரம்பிச்சேன்னா என்னாகுறது :-)))

வெற்றி said...

பொன்ஸ்,
இதுவரை ரசிகவ் ஞானியாரின் படைப்புக்களை நான் படித்ததில்லை. தங்களின் பதிவைப் பார்த்ததும், 'அட ஒரு அருமையான படைப்பாளியி பதிவுகளைப் படிக்காமல் விட்டுவிட்டோமே' எனும் ஏக்கம் மனதில் எழுகிறது. ஒரு நல்ல படைப்பாளியை வெளிச்சம் போட்டுக்காட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள் பொன்ஸ்.

நிலவு நண்பன் said...

எனக்காக மற்றவங்க பதிவு போடுறாங்களா.. முதலட் துபாய் ராதஜா போளன் செய்து சொல்லியபோது என்னால நம்ப முடியவில்லை..ஆனா இப்ப ..இப்ப..இப்ப..

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல..அல்ல.. அல்ல..

இதனை விடவும் பெரிய பரிசு எனக்கு கண்டிப்பாய் இருக்காதுன்னு நினைக்கின்றேன்..

நீங்கள் தருகின்ற வாழ்த்தை எல்லாம் ப்ரியன் என்னிடத் தருவார்னு நினைக்கின்றேன்..அதனை என் வருங்காலத்துணையிடம் காட்டி மகிழ்வேன்..நன்றிங்கோ..

மின்னுது மின்னல் said...

//
வெற்றி said...
பொன்ஸ்,
இதுவரை ரசிகவ் ஞானியாரின் படைப்புக்களை நான் படித்ததில்லை. தங்களின் பதிவைப் பார்த்ததும், 'அட ஒரு அருமையான படைப்பாளியி பதிவுகளைப் படிக்காமல் விட்டுவிட்டோமே' எனும் ஏக்கம் மனதில் எழுகிறது. ஒரு நல்ல படைப்பாளியை வெளிச்சம் போட்டுக்காட்டியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள் பொன்ஸ்.

//

அதே...

ப்ரியன் said...

அன்புடன் அன்பர் ப்ரேமின் "கவிஞருக்கு கல்யாணம்"

world champ stephen neal said...

I really like your walking elephant. It reminds me of myself...

ப்ரியன் said...

பொன்ஸ் ரசிகவ் க்கு வாழ்த்துக்களை வெட்டி ஒட்டி தர இயலுமா?

இன்று மாலைக்குள்?

ILA(a)இளா said...

நல்ல முயற்சி பொன்ஸ், பாரட்டுகள். உங்க பதிவு மூலமா நிலவு நண்பனுக்கு கல்யாண வாழ்த்துக்கள்.

மின்னுது மின்னல் said...

நன்றாக உள்ளது ஒரு ரசிகையின் அலசல் பதிவு