Sunday, June 18, 2006

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனா? எதிரியா?

பொதுவாக நான் பதிவுகளில் டெக்னிகல் சமாச்சாரங்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் தினசரி பயன்படுத்தி வரும் விஷயங்களை வலைப்பதிவுகளிலும் பேசுவது எனக்கு ரொம்பவும் அலுப்பான ஒன்று. ஆனால், நேற்று வழக்கம் போல எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தபோது, திரு மகேந்திரனின் பதிவில் மட்டுறுத்தல் செயலியைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு டுபாக்கூர் என்பவரும் பின்னூட்டமிட்டு அன்னியலோகத்தைப் பற்றிய தன் 'உறுதியான சந்தேகங்களை'ச் சொல்லி இருந்தார்.

ரமணி தன்னளவில் அதற்கு பதில் சொல்லி விட்டார் என்ற போதும் எனக்கு இன்னும் கொஞ்சம் சுலபமாக இதை விளக்கிச் சொல்லலாமே என்று தோன்றியது. அதன் விளைவே இந்தப் பதிவு.

ரமணியின் மட்டுறுத்தல் நண்பன் செயலியை அன்னியலோகம் என்னும் பக்கத்தில் இருந்து பயன்படுத்தலாம். மட்டுறுத்தல் நண்பன், மூன்று வெவ்வேறு உதவிகளைச் செய்கிறான்

* பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
* தன்னியக்க நிராகரித்தல் மட்டும் (autoreject only)
* தன்னியக்க பிரசுரித்தல் மற்றும் நிராகரித்தல் (autopublish and autoreject)

இது எல்லாவற்றிற்கும் தேவை உங்கள் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். இரண்டாவது மற்றும் மூன்றாவது வசதிகளைப் பயன்படுத்த மட்டுமே உங்கள் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை.

பரிசீலித்து மட்டுறுத்தல் ஆலோசனைகளை மட்டும் வழங்கு (show suggestions only)
நிங்க் இணையதளம் மட்டுறுத்தல் செயலிக்கு ஒரு செய்தியோடையைக் கொடுக்கிறது.. அதாவது லைப்ரரி என்கிறோம். நிங்கில் உங்கள் ஜிமெயில் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால், அந்த மெயில் பாக்ஸினுள் நுழைந்து ஒவ்வொரு பின்னூட்ட மெயிலாக எடுத்து நோட்டம் விட்டு அந்த பின்னூட்டம் உங்களுக்கு அனுப்பியவர் தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ இருப்பவர் தானா, இல்லையா என்பதைக் காட்டுகிறது..(தமிழ்மணத்தில் இருப்பவர் பற்றிய விவரங்களை வெண்பட்டியலாக ரமணி தனியாகச் சேகரித்து வைத்துள்ளார்) அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவும், இல்லாத போது அதை அனுமதிக்காமல் மறுக்கவும் இது பரிந்துரைக்கிறது.

மற்ற இரண்டு ஆப்ஷன்கள் அப்படி அனுமதிக்கக் கூடிய பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கும், சரியில்லை என்று கருதப்படும் பின்னூட்டங்களைத் தானே ரிஜக்ட் செய்வதற்குமானவை.

இந்த இரண்டு ஆப்ஷன்களுக்குத் தான் ப்ளாக்கர் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை. முதல் ஆப்ஷனுக்குத் தேவை இல்லை.

அடுத்தது, டூபாக்கூர் வைத்த முக்கிய குற்றச் சாட்டு,
//அங்கு சேரும் எல்லாரும் மெயில் முகவரியையும் அதன் பாஸ்வேர்டையும் கொடுத்தால் எல்லா பாஸ்வேர்டும் வெங்கட்ரமணிக்கு போய்ச் சேருகிறது. அதன்பிறகு வேண்டாதவர்களை (வலைப்பூக்களை) இந்த பேஸ்வேர்டு கொண்டு அழித்து விட முடியும்.//

இதுவரை விளக்கிய வகையில், முதல் ஆப்ஷனைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் ஐடி தேவையே இல்லை. வெறும் ஜிமெயில் ஐடியே போதும். அதுவும் புத்தம்புதிதாக, மட்டுறுத்தலுக்கு மட்டும் நீங்கள் துவங்கப் போகும் ஐடியே போதும். எனவே அதை வைத்து எதையும் அழிக்க முடியாது.. (அந்த ஜிமெயில் ஐடியைக் கூட அழிக்க முடியாது.. பாவம் ரமணி!! )

மற்ற இரண்டு ஆப்ஷன்களை எடுத்துக் கொண்டோமானால், அவற்றில் ப்ளாக்கர் பயனர் பெயர் கொடுக்கப் படுகிறது. இந்தப் பெயரை அந்தப் பக்கத்தை மூடும் வரை வலைஉலாவிகள்(Browser) நினைவில் வைத்துக் கொள்கின்றன.

இதில் தோன்றக் கூடிய சந்தேகங்கள் இரண்டு:
1. கொடுக்கப்படும், நினைவில் வைக்கப்படும் இந்த கடவுச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? எங்காவது தேக்கி(store) வைக்கப்படுகிறதா?(அப்புறமேட்டு ரமணி எடுத்துக்கிடத் தான் :) )
2. நினைவில் வைக்கப்படும் கடவுச் சொல்லை வேறு யாராவது நிங்கிலிருந்து எடுத்தால் என்ன செய்வது?

பதில்கள் சுலபம் தான். நீளமாகப் போய்விட்டதால், அடுத்த பதிவில் பதில்கள் தொடருகிறேன்.

ஒன்று மட்டும் சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
இந்த மென்பொருளை உருவாக்க ரமணிக்கு ஆன பணச்செலவு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்ற போதும், மென்பொருளாளரின் வாழ்வில் கணினிக்கு அருகில் செலவிடாத ஒவ்வொரு மணித் துளியும் எத்தனை உபயோகமானது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் ரமணியின் வீட்டில் ஒரு புது வரவு வேறு வந்திருக்கும் சமயத்தில் இந்த அன்னியன் மென்பொருளுக்கு அவர் செலவு செய்த ஒவ்வொரு நிமிடமும் பெரிய முதலீடு தான். இது இலவசம் என்பதுடன், தேன்கூடு, தமிழ்மணம் போன்றவர்களால் விளம்பரம் செய்யப்பட்டும் இதை அதிகம் பேர் பயன்படுத்த முன்வராததுமன்றி, (டூபாக்கூர் போன்றவர்களால்) உருவாக்கியவரின் நோக்கத்தை கேள்விக்குரியதாக்கும் போது தான் அலுப்பாக இருக்கிறது.

வேறு கேள்விகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

32 comments:

Venkataramani said...

என் முயற்சிகளில் முதலிலிருந்தே ஆர்வம் காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னைவிட மிகச்சிறப்பாக இதன் செயல்பாட்டை விளக்கியிருக்கீங்க.
இதைப்பற்றி கேள்விகள் உள்ள எல்லா பதிவர்களும் வித்தியாசம் பாராமல் உங்கள் கேள்விகளை பெயருடனோ பெயர் இல்லாமலோ தெரிவித்தால், எங்களுக்கு விளக்கம் சொல்ல வசதியாக இருக்கும்.

SK said...

ரொம்ப நன்றி, பொன்ஸ்!
இது...இது.. இது போன்ற ஒரு பதிவைத்தான் எதிர்பார்த்தென்!
மிக நன்கு விளக்க முயற்சித்திருக்கிறீர்கள்!
இருப்பினும்,[இந்த 'இருப்பினும்' சொல்லாம ஒரு விவாதமும் வளராது!], என் போன்ற கணினி அறிவிலிகளுக்கு இன்னும் சற்று விளக்கக்ம் தேவைப்படுகிறது!
இதன் உபயோகம் குறித்தல்ல!
இதை எப்படிப் பயன்கொள்வது என்பது குறித்து!

இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லப்போனால், எனக்கு, ஒவ்வொரு படியின் முறையும் செயல்பாடும் வேண்டும்.
நீங்கள், ரமணி போன்றோர் ஒரு அடிப்படை அறிவை, உங்கள் அளவில் நியாயமான, அடிப்படை அறிவை, எல்லாருக்கும் இருப்பதாக எண்ணி சொல்லுகிறீர்கள்!
ஆனால், உண்மையில், செல்வன் போன்றோர் இல்லையெனில் நான் இந்த வலைப்பூவில் பதிவிட்டுக் கொண்டிருப்பது என்பதே ஒரு கனவாய்த்தான் இருந்திருக்கும். நன்றி, செல்வன்!

ஆகவே, இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி வந்து பாமர அளவில் இதனைப் பொருத்தும் வழியினைச் சொல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//இதை அதிகம் பேர் பயன்படுத்த முன்வராததுமன்றி//

பொன்ஸ். நானும் பல நாட்களாய் வெங்கடரமணி அவர்களின் மட்டுறுத்தல் நண்பனையும், ஒரு சொடுக்கு அறிவிப்பினையும் என் பதிவுகளில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் சோம்பேறித்தனம். இன்று வரை செயல்படுத்தவில்லை. இன்று மகேந்திரன் (& அவர் பதிவில் டுபாக்கூரின் பின்னூட்டம்), வெங்கடரமணி, நீங்கள் மூவரின் பதிவுகளையும் படித்தபின் இனிமேல் தாமதிக்கக்கூடாது என்று பின்னூட்டத்திற்காக மட்டும் ஒரு தனி ஜிமெயில் கணக்கைத் தொடங்கி மட்டுறுத்தல் நண்பனுக்கு நண்பனாகிவிட்டேன். விரைவில் ஒரு சொடுக்கு அறிவிப்பினையும் பயன்படுத்துகிறேன்.

மட்டுறுத்தல் நண்பன் - நண்பனே என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

குமரன் (Kumaran) said...

//என் போன்ற கணினி அறிவிலிகளுக்கு //

ஹிஹி... பொன்ஸ். எஸ்.கே. வெட்கம் விட்டுக் கேட்டுவிட்டார். நான் கேட்காமல் விட்டேன். கணினியில் தான் 10 வருடமாய் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னது முழுவதும் புரிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். :-) இன்னும் விளக்கமாகச் சொல்ல முடியுமா? முடிந்தால் சொல்லுங்கள். எப்படி இருந்தாலும் (நீங்கள் எவ்வளவு தான் விளக்கமாகச் சொன்னாலும்) இந்த நண்பனைப் பயன்படுத்துபவர்கள் தான் பயன்படுத்துவார்கள்.

துளசி கோபால் said...

பொன்ஸ்,

என்னை மாதிரி உள்ள க.கை.நா.க்களுக்குப் புரியலைதான். இன்னும் விளக்கம் தேவை.

ஆனால் ,ரமணியின் உதவியோடு இந்த நண்பனை என் வலைப்பூவில் சேர்த்திருக்கேன்.

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே, நிச்சயம் உதவி உண்டு.. எம் கடன் பணி செய்து கிடப்பதே!! :))) இரவு உணவுக்குப் பின் போன் செய்கிறேன்.

குமரன், முதல் முதலாக இந்தப் பதிவைப் பார்த்த பின் ஒருவர் மட்டுறுத்தல் நண்பனைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே எங்களுக்கு ஒரு வெற்றி தான். மிக்க நன்றி. விளக்கமாக அடுத்த பதிவு நாளை.. அதையும் பார்த்து விட்டு மேலும் கேள்விகள் இருந்தாலும் சொல்லுங்கள். மற்றபடி உங்கள் பின்னூட்டத்தில் சில பகுதிகளை நீக்கியுள்ளேன் - இந்த விவாத மேடை மட்டுறுத்தல் நண்பனுக்கு மட்டுமே.:). தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

குமரன் (Kumaran) said...

தவறாக எண்ணவில்லை பொன்ஸ்.

செல்வன் said...

மட்டுறுத்தல் நண்பன் நான் பயன்படுத்தாதன் காரணம் என் கணினி 24 நேர பயன்பாட்டில் இல்லாததுதான்.மற்றபடி ரமணி அருமையாக முயற்சி எடுத்து இதை செய்துள்ளார் என்பது தெரிகிறது.ஆங்கில வலை திரட்டிகளில் (blogexplosion,blogworld) கூட இம்மாதிரி எதுவும் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கே It's my pleasure to help a budding poet(genius).

குமரன் (Kumaran) said...

செல்வன். 24 மணி நேரமும் பயன்பாட்டில் கணினி இல்லாவிட்டாலும் எப்போது கணினி பயன்பாட்டிற்கு வருகிறதோ அப்போது இது வேலை பார்க்கும் அல்லவா? இல்லை எந்தக் கணினியில் இருந்து மின்னஞ்சல் முகவரி கொடுத்தோமோ அந்த கணினி எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டுமா?

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, குமரன், இன்னும் சுலபமான விளக்கங்கள் வரும்.. ஆனா அதற்கு முன்னால உங்களுக்கு சரியா என்ன புரியலைன்னு சொன்னீங்கன்னா, அடுத்த பதிவுல விளக்க வசதியா இருக்கும்.

செல்வன், இந்த வசதியைப் பயன்படுத்த 24 மணி நேர கணினி தேவையே இல்லை. காலை வந்து உங்கள் ப்ளாக்கரிலிருந்து comment moderate செய்வதை விட, அன்னியலோகம் பக்கத்தைத் திறந்தாலே போதும். இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வசதி எல்லாம் முன்னேயே ரமணி சொல்லி இருக்கிறார்.. அடுத்த பதிவில் நானும் சொல்லப் போகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள் :)

பொன்ஸ்~~Poorna said...

//செல்வன். 24 மணி நேரமும் பயன்பாட்டில் கணினி இல்லாவிட்டாலும் எப்போது கணினி பயன்பாட்டிற்கு வருகிறதோ அப்போது இது வேலை பார்க்கும் அல்லவா? //

குமரன், 24 மணி நேர கணினி தேவையில்லை. காலை வந்து உங்கள் ப்ளாக்கரிலிருந்து comment moderate செய்வதை விட, அன்னியலோகம் பக்கத்தைத் திறந்தாலே போதும்.

//இல்லை எந்தக் கணினியில் இருந்து மின்னஞ்சல் முகவரி கொடுத்தோமோ அந்த கணினி எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டுமா? //
நிச்சயமாக இல்லை.

மணியன் said...

அடுத்துவரும் விளக்கங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.எஸ் கே சொல்லியிருப்பது போல் வலைப்பதிய வந்துவிட்டாலும் கணினி அறிவு அரைகுறைவாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்மண பட்டை நிரலே தடுமாற வைக்கும்போது எதற்கு வீண் தொந்திரவு,ப்ளாக்கர் மட்டுறுத்தல் தான் இருக்கிறதே, அப்படி சந்தேகம் வந்தால் identity checker manually use செய்து கொள்ளலாமே என்றே தோன்றுகிறது.
வெங்கட்ரமணியின் ஆர்வத்தையும் பணிக்கொடையையும் நான் மதிக்கிறேன். இது அவரது integrity பற்றி அல்ல; இணையத்தின் integrity பற்றிய ஐயங்களே. நான் தேர்ந்தெடுக்கும் அன்னியலோகம் தளமே phishing தளமாயிருந்தால் ...

பொன்ஸ்~~Poorna said...

மணியன்,
தங்கள் ஆர்வத்துக்கு முதற்கண் நன்றி .

//தமிழ்மண பட்டை நிரலே தடுமாற வைக்கும்போது எதற்கு வீண் தொந்திரவு,ப்ளாக்கர் மட்டுறுத்தல் தான் இருக்கிறதே, அப்படி சந்தேகம் வந்தால் identity checker manually use செய்து கொள்ளலாமே என்றே தோன்றுகிறது. //
ஒரு வேளை உங்களுக்குச் சந்தேகம் வராத வார்த்தைகளில் பின்னூட்டங்கள் வரும்போது இது போல் சோதிப்பதும் அதிகப்படி வேலையாகிறதே.

//இது அவரது integrity பற்றி அல்ல; இணையத்தின் integrity பற்றிய ஐயங்களே. நான் தேர்ந்தெடுக்கும் அன்னியலோகம் தளமே phishing தளமாயிருந்தால் ... //
இதைப் பற்றியே உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம் என்று தான் இத்தனை விளக்கமும். எப்படியும் உங்கள் ப்ளாக் பயனர்/ கடவுச்சொல்லைத் தராத போது அன்னியலோகத்தால் என்ன செய்துவிட முடியும்?
ஜிமெயில் பயனரையும், புதிய அக்கவுன்ட், ப்ளாக்கருக்கு மட்டும் தனியாக ஒன்று உருவாக்கி அதைப் பயன்படுத்தச் சொல்கிறோமே.. அதனால், அந்த அக்கவுன்ட்டாலும் மற்றவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

உங்கள் இப்போதைய வேலையைக் குறைக்கும் செயல் தான் இவையெல்லாம். வழக்கமான வழிகளிலிருந்து மாறுவது எப்போதுமே கஷ்டம் தான். ஆனால், முயற்சித்துப் பார்த்துவிட்டுச் சொன்னால், எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் :)
உதவிகளுக்கு நாங்கள் எப்படியும் இருக்கிறோம் :)

வவ்வால் said...

மட்டுறுத்தல் நண்பன் என்ற ஒன்றை யார் வேண்டுமானலும் பயன்படுத்திவிட்டுப் போகட்டும் , ஆனால் இந்த வெண்பட்டியல் என்ற ஒன்றை உருவாக்கி அது தான் உண்மையான வலைப்பதிவர்களின் பட்டியல் என்று சொல்வது ஏமாற்று வேலையே, எப்படி என சொல்கிறேன் ( மத்தது எல்லாம் விளக்குறாங்க இது போல விஷயம் எல்லாம் கண்டுக்காம கண்மூடி போவது தான் நடுநிலைமையோ)

மறுமொழி மட்டுறுத்தல் செய்ய சோம்பலா இருக்குனு மட்டுறுத்தல் நண்பன் என்ற செயலியை ஒரு வலைப்பதிவர் உருவாக்கியுள்ளார், அதனை பயன்படுத்த ஒரு "G MAIL" கணக்கு மற்றும் அதன் கடவு சொல் இரண்டும் அவர் குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் அளித்தால் அந்த செயலி செயல் படும் மேலும் அவ்வாறு அளித்த குறிப்பிட்ட அந்த வலைப்பதிவர்கள் மட்டுமே வெண்பட்டியலில் வந்து விடுவர் .

இப்போது கமெண்ட் ஐடென்டி செக்கர் என்ற அவரின் இன்னொரு பயன்பாட்டில் போய் அந்த வலைப்பதிவரை சோதித்தால் உண்மையான வலைப்பதிவர் எனக் காட்டுமாம் ,காட்டட்டும். ஆனால் சிலர் இந்த மறுமொழிமட்டுறுத்தலே வேண்டாம் என பின்னூட்ட மோகம் இல்லதோரும் இருக்கிறார்கள் அவர்கள் இவ்வாரு போய் அந்த வலைதளத்தில் சரண் அடைய மாட்டர்கள் எனவே அவர்களது பெயர் வெண்பட்டியலில் வராது ! எனவே இப்போது மட்டுறுத்தல் நண்பன் பயன் படுத்தாத காரணத்தால் இத்தகைய வலைப்பதிவர்களை போலி எனக்காட்டும் இந்த கமெண்ட் ஐடென்டி செக்கர் என்ற கருவி. மட்டுறுத்தலை எல்லாரும் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் போலி என்ற முத்திரை இலவசமாக குத்துவோம் என மிரட்டுவது போல் உள்ளது .

மட்டுறுத்தலே வேண்டாம் என்று சொல்பவர்களது தலையில் வெண்பட்டியல் என்ற பெயரில் வெண்பொங்கல் கிண்ட முயற்சிக்கிறார் போல் உள்ளது. இவர்கள் யார் வெண்பட்டியல் தயாரிக்க. இவர்களது வெண்பட்டியல் தான் ஒரே தர நிர்ணயமா?

இதை பின்னூட்டமாக போடுகிறேன் வருமா எனத்தெரியவில்லை. வெளியிட்டால் அதற்கு இப்பொழுதே நன்றி கூறிக்கொள்கிறேன்! ,

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால், உங்க பின்னூட்டம் பிரசுரிக்காம விவாத மேடையா..

நீங்க தான் பின்னூட்ட மட்டுறுத்தலே செய்ய மறுத்த வலை பதிவராச்சே.. உங்களை எப்படி மட்டுறுத்தல் நண்பனைப் பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்த முடியும்?
மற்றபடி வெண்பட்டியல் பெரிய விஷயமில்லை. இப்போ சொன்னா நம்ம ரமணி உங்களைச் சேர்த்துடப் போறாரு.. தமிழ்மணத்தில் சேரும் போதே ரமணிக்கும் மெயில் அனுப்ப வேண்டும் என்று வேண்டுமானால் போட்டுவிடச் சொல்லலாம். என்ன சொல்றீங்க?

வவ்வால் said...

எனது கருத்தினையும் மதித்து வெளியிட்டமைக்கு நன்றி!

நீங்கள் சொன்னார்போல் அவரிடம் சொல்லி எனது பெயரை வெண்பட்டியலில் கொண்டுவரலாம்,கஷ்டம் இல்லை தான். நாளைக்கே இன்னொருவர் கிளம்பி வந்து நான் தான் வெண்பட்டியல் தயாரிப்பேன் அங்கே தான் எல்லாம் தங்களை உண்மையான வலைப்பதிவர் என தர நிர்ணயம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்வார் அப்போது அவர்கிட்டேயும் போய் நிக்கனுமா? சொல்லுங்க இப்படி வர எல்லார் கிட்டேயும் போய் பட்டியல் போட்டு வாங்கிட்டு வந்துடுரேன்! இதனை தமிழ்மணமே செய்யனும் இல்லைனா முரண்பாடான கருத்து தான் வரும்!

சதயம் said...

என்னுடைய கவலையெல்லாம்....இந்த மாதிரி தற்காப்பு நடவடிக்கைகளால் அநேகர் திரு.டோண்டு மாதிரி பெரியவர்களை மறந்து போய்விட வாய்ப்பிருக்கிறது....:-)))))

Anonymous said...

Got this by mail:

அன்பின் பொன்ஸ்

தானியங்கி மட்டுறுத்தல் குறித்த உங்கள் விளக்கங்கள் பார்த்தேன். அதுகுறித்து என் சில கருத்துகள்.

தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ இருப்பவர், அல்லது வலைப்பதிவர் மட்டுமே பின்னூட்டமிட வேண்டும் என்று தடுப்பது புதிய வாசகர்களை வர விடாமல் தடுக்கும். படைப்பாளிகளே மாறிமாறி எழுதிக்கொள்வதைவிட புதிய வாசகப்பரப்பை உருவாக்குவதே படைப்பாளியின் தேவை. அதை இம்முறைகள் தடுக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு போலி கூட புதிய ஒரு ஜிமெயில் கணக்கும் புதிய பிளாக்கர் ஐடியும் உருவாக்கிக்கொண்டு விதிமுறைகளின்படியே ஆரம்பத்தில் எழுதி தமிழ்மணத்திலும் இணைந்து விட முடியும். அப்படி வெண்பட்டியலிலும் இடம்பெற்றுவிட முடியும். பின்னர் அதைப்பயன்படுத்தி தன்வேலைகளைக் காட்ட முடியும். (சில நாட்களுக்காவது) அதுதான் அவனது நோக்கமும். மேலும் IP சோதனை இருந்தால் கூட அவன் வேறொருவர் கணினியிலோ அல்லது வெளியூர் செல்லும்போதோ கூட இவற்றை உருவாக்கி செயல்படுத்த முடியும். இதனால் இவை எவையுமே நிரந்தரத்தீர்வாக கருத முடிய

பொன்ஸ்~~Poorna said...

//இதனை தமிழ்மணமே செய்யனும் இல்லைனா முரண்பாடான கருத்து தான் வரும்! //
சரிங்க தலைவா.. செய்யச் சொல்லிடுவோம். தமிழ்மணத்திலிருந்து லிஸ்ட் வாங்கித் தான் இப்போவும் செய்யறோம் . :) இப்போ ஓகேவா?

சதயம்.. நீங்க வேற.. அவரைக் காணோமேன்னு தான் நினைச்சிகிட்டு இருக்கேன்.. :))))

பொன்ஸ்~~Poorna said...

//தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ இருப்பவர், அல்லது வலைப்பதிவர் மட்டுமே பின்னூட்டமிட வேண்டும் என்று தடுப்பது புதிய வாசகர்களை வர விடாமல் தடுக்கும். படைப்பாளிகளே மாறிமாறி எழுதிக்கொள்வதைவிட புதிய வாசகப்பரப்பை உருவாக்குவதே படைப்பாளியின் தேவை. அதை இம்முறைகள் தடுக்கின்றன என்று நான் கருதுகிறேன். //
இல்லீங்க.. அனானி, அதர் ஆப்ஷனும் வேணாலும் வச்சிக்குங்க. அதை எல்லாம் பிறகு நிதானமா நீங்க தான் படிச்சி பப்ளிஷ் பண்ணணும். அவ்வளவு தான். அப்புறம் புது வாசகர்கள் கமென்ட் எல்லாம் உங்க கமென்ட் பாக்ஸ்ல தான் இருக்கும். நீங்க முடிவு செய்ய வேண்டியது.

// மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு போலி கூட புதிய ஒரு ஜிமெயில் கணக்கும் புதிய பிளாக்கர் ஐடியும் உருவாக்கிக்கொண்டு விதிமுறைகளின்படியே ஆரம்பத்தில் எழுதி தமிழ்மணத்திலும் இணைந்து விட முடியும். அப்படி வெண்பட்டியலிலும் இடம்பெற்றுவிட முடியும். பின்னர் அதைப்பயன்படுத்தி தன்வேலைகளைக் காட்ட முடியும். (சில நாட்களுக்காவது) அதுதான் அவனது நோக்கமும். மேலும் IP சோதனை இருந்தால் கூட அவன் வேறொருவர் கணினியிலோ அல்லது வெளியூர் செல்லும்போதோ கூட இவற்றை உருவாக்கி செயல்படுத்த முடியும். இதனால் இவை எவையுமே நிரந்தரத்தீர்வாக கருத முடிய //
சரி.. அப்போ தமிழ்மணத்தில் மட்டும் போலிகள் இருந்தா காசி சும்மா விடப் போறாரா? என்னங்க சொல்றீங்க. தமிழ்மணத்தில் மூணு போஸ்டு போட்டு இணைஞ்சிட்டு அப்புறம் தப்புத் தப்பா எழுத ஆரம்பிக்கப் போறவங்களை எப்படித் தடுக்கப் போறோம்? இதையெல்லாம் தெரிந்து தானே நாம் தமிழ்மணத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறோம்.

//வெண்பட்டியலில் இடம்பெற்றுள்ளவரே போலியாக இருந்தால் என்ன செய்வது?//
அப்படி ஏதாவது இருந்தால், அதை இரண்டு விதமாக சமாளிக்கலாம்:
1. வருமுன் காக்க முடியாது, சரி தான். ஆனால் அப்படித் தான் என்று தெரிந்த பின் வெண்பட்டியல், தமிழ்மணம் இரண்டிலிருந்தும் நீக்க முடியும்.
2. குறைந்த பட்சம் அந்த நபரின் மெயில் ஐடியாவது நம்மிடம் இருக்கும். (தமிழ்மணத்தில் சேரும்போது கொடுத்திருப்பாரே!!) அது கூட இன்றைக்கு நம்மிடம் இல்லையே.. அதனால் தான் இந்த வழி கொஞ்சமாவது பயனளிக்கும் என்று தோன்றுகிறது.

இன்னும் ஏதேனும் கருத்து இருந்தாலும் சொல்லுங்க.. ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவரத் தான் இந்த முயற்சி.

Venkataramani said...

அன்புள்ள பொன்ஸ்,

இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதற்கு நன்றி. நீங்கள் என் மென்பொருளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் விளக்கங்கள் சிறப்பாக இருப்பதால் நீங்களே இதைத் தொடருங்கள். அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

அன்புடன்
ரமணி.

செல்வன் said...

பொன்ஸ் நீங்க அடுத்த பதிவையும் போடுங்க.படிச்சுட்டு முடிவெடுக்க பலருக்கும்(எனக்கும்) உபயோகமா இருக்கும்.

குமரன்,நீங்க மட்டுறுத்தல் நண்பனை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ ஆனா கண்டிப்பா பயன்படுத்தணும்னு தோணுது.ஏன்னா நிறைய பதிவுகள் இருக்கு.எதில் பின்னூட்டம் போட்டோம்னு நினைவு வெச்சு தேடி பிடிச்சு வர கொஞ்சம் சிரமமா இருக்கு.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

இது மகேந்திரனின் கேள்வி--------->

//எனது வலைப்பூக்களில் நான் ஒரு குத்து அறிவிப்போ மட்டுறுத்தல் நண்பனோ பயன்படுத்த வில்லை வெறும் பின்னூட்ட மட்டுறுத்தல் மட்டுமே (ப்ளாகரின் சேவையில் உள்ளது) எதோச்சையாக இப்போது நான் எனது பெயரை அன்னியலோகத்தின் அடையாளச் சோதனைக்கு உட்படுத்திய பொழுது எனது பெயர் பொய் என்று வந்தது.//


இது வெங்கட்ரமணியின் பதில் --------->

//உங்கள் பெயர் இல்லாததால் மற்றவர்கள் உங்கள் பின்னூட்டங்களை இதன்மூலம் சோதனை செய்யமுடியாது (போலி என்றும் கருதமுடியாது). உங்கள் பெயர் பட்டியலில் இருக்கவேண்டும் என்று விரும்புனால் என்னை rarunach@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். நன்றி. //

நான் முதலில் சரி பார்த்த போதும் ஐடென்டி செக்கரில் எனது பெயர் எல்லாம் வரவில்லை சரி நாம் தான் இதை எல்லாம் பயன்படுத்தபோவதில்லையே என இருந்து விட்டேன்,ஆனால் தற்போது பார்த்த போது தான் பெயர் எல்லாம் வருகிறது.எனவே இதற்கு முன்னர் தமிழ் மணத்திடம் இருந்து பெயர்ப்பட்டியல் எதுவும் வாங்கபடாமலேயே தனிப்பட்டமுறையில் இதனை முன்னிருத்தினார்கள். தற்பொழுது கேள்விகள் எழ ஆரம்பித்த பிறகே தமிழ்மணத்திடமிருந்து பட்டியல் வாங்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

ஆரம்பத்திலேயே வெண்பட்டியல் இப்படி வந்தார்போல் ரொம்ப வலுவா சொல்றிங்க ,அப்போ நாங்க இதை செக் செய்து பார்க்காதது போல :-))

எது எப்படி தானாகவே வெண்பட்டியல் திரட்டப்பட்டு செயல் பட்டால் சரி தான் , மெயில் அனுப்பினால் தான் பட்டியல் வெளிவரும் என்று இல்லாமல்.

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால், நீங்க வந்த புதுசா இருக்கும்.. ரமணி என்ன, என்னை மாதிரி எப்போ பார்த்தாலும் வலை மேயறவருன்னு நினைச்சீங்களா.. நேரம் கிடைக்கும் போது இணைப்பாரு..

இல்லைன்னா யாராவது சொல்வாங்க.. இதை வேண்டுமானால் ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவருவோம். அதற்கான முறைமைகளையும் இந்த விவாதத்தின் முடிவில் வகுத்து விடுவோம். :)

பொன்ஸ்~~Poorna said...

இங்கே உள்ள பல கேள்விகளுக்கு இங்கே பதில் உள்ளது...

விவாதத் தொடர்ச்சிக்கு...

மகேந்திரன்.பெ said...

திரு வவ்வால் அவர்களின் பின்னூட்டத்தில் எனக்கும் சம்மதமே. ஆனால் மட்டுருத்தல் நண்பன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே வெண்பட்டியலில் இருப்பார்கள் என்றால் அது சரியல்ல. ஆனால் அப்படி யில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று( நான் பயன்படுத்தவில்லை)எம் பெயர் வெண்பட்டியலில் உண்டு. இதுகூட மட்டுறுத்தல் நண்பனை பயன்படுத்துவோர் வசதிக்காக இணைத்ததே.

திரு பொன்ஸ் படிக்க வருகிறேன் (ஆனால் உங்க லிங்க்தான் தப்பு:) நான் உங்களின் தொழில்நுட்ப சந்தேகம் அளவெல்லாம் யோசிக்கவில்லை நீங்கள் சொன்ன து போல //பாவம் ரமணி// எனக்கு நண்பன் தேவையில்லை என்போன்ற இருபது மணி நேரத்திற்கும் மேல் கணினியை அகலாது இருப்போருக்கு ப்ளாகர் சேவை போதும் என்பது என்கருத்து மற்றபடி என் கணக்கை ரமணி திருடி?விடுவார் என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை.

முத்து(தமிழினி) said...

பொன்ஸ்,

பின்னூட்டங்களுக்கு மட்டும் ஒரு ஐ.டி வைத்து அதை காம்ப்ரைமைஸ் செய்வதும் கூட சரியில்லை என்பது என் அபிப்பிராயம்.

ரமணியின் பணி பாராட்டுக்குரியது. யாரும் உபயோகப் படுததுவதில்லை என்றெல்லாம் அலுத்து கொள்வதில் நியாயம் இல்லை.அவங்கவங்க இஷ்டமில்லையா அது :))

அதுபோல் தமிழ்மணத்தில் ஆபாச பின்னூட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்று ரூல்ஸ் சரிதான்.(இலலாட்டி மறுமொழி சேகரிக்கப்படமாட்டாது என்ற கன்டிசன்).

ஆனால் இந்த சாஃப்டுவேர் கண்டிப்பாக இணைக்கணும் என்று சொல்வது உங்கள் நிலையானால் அது தவறு.

தமிழ்மணம் பிடிக்காமல் காசியை பிடிக்காமல் திட்டிக்கிட்டே இங்க இருக்கற அளவிற்கு இங்கு கருத்துரிமை உள்ளது:)).

மஞ்சூர் ராசா said...

போன்ஸ்,
உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

பொன்ஸ் மட்டுறுத்தல் நண்பனை நானும் பயன்படுத்தி பார்த்தேன்.

ஆலோசனை வழங்குதல் சரியாகச் செயல்படுகிறது. ஆனால் தனியங்கி அனுமதித்தல்/நிராகரித்தலை எப்படி சோதனை செயது என்று தெரியவில்லை.

வவ்வால் said...

முத்து ,மற்றும் மகேந்திரன் நானும் இதையே தான் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகிறேன்.உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

வவ்வால் said...

போலிகளை இரண்டு முறையில் இது சமாளிக்க உதவும் என்று பொன்ஸ் சொல்லியுள்ளார் இரண்டுமே சரியான தீர்வல்ல என்பது அவர் சொல்வதிலிருந்தே தெரியவருகிறது.

//அப்படி ஏதாவது இருந்தால், அதை இரண்டு விதமாக சமாளிக்கலாம்:
1. வருமுன் காக்க முடியாது, சரி தான். ஆனால் அப்படித் தான் என்று தெரிந்த பின் வெண்பட்டியல், தமிழ்மணம் இரண்டிலிருந்தும் நீக்க முடியும்.//

இவ்வாறு நீக்குவதை தான் இப்போது உள்ள மட்டுறுத்தல் முறையிலும் ,தமிழ்மணம் செய்து வருகிறதே ,இது என்ன புதிதாக இபோது தான் நீக்கமுடியும் என்பது போல் ஒரு தோற்றம்.

//2. குறைந்த பட்சம் அந்த நபரின் மெயில் ஐடியாவது நம்மிடம் இருக்கும். (தமிழ்மணத்தில் சேரும்போது கொடுத்திருப்பாரே!!) அது கூட இன்றைக்கு நம்மிடம் இல்லையே.. அதனால் தான் இந்த வழி கொஞ்சமாவது பயனளிக்கும் என்று தோன்றுகிறது.
//

இதையும் சொல்வது நீங்கள் தான் ..

//நாம் நமது ப்ளாக்கர் ஐடியைத் தரப் போவதில்லையே..வெறும் ஜிமெயில் கடவுச் சொல் தானே. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தலுக்காகவே தொடங்கப் பட்ட புதிய ஜிமெயில் அக்கவுன்டைத் தருவதால், இதை வைத்து எதுவுமே செய்ய முடியாது.//


அப்புறம் என்ன போலியின் மின்னஞ்சல் கிடைக்கிறதே என ஒரு புதிதாக ஒரு பூரிப்பு ,அதை வைத்து எதும் செய்ய முடியாது என்று நீங்களே சொல்கிறீர்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன என்றால் , முன்னர் என்ன மறுமொழி மட்டுறுத்தலில் என்ன நிலை இருக்கிறதோ அதுவே தான் இப்போதும் நீடிக்கும் ,பழைய கள் புதிய மொந்தை :-))

ஆனால் இதனால் ஒரு புதிய சிக்கல் தான் என் பார்வையில் படுகிறது(வவ்வால் ஆச்சே தலைகீழ் பார்வை)

//ரமணி என்ன, என்னை மாதிரி எப்போ பார்த்தாலும் வலை மேயறவருன்னு நினைச்சீங்களா.. நேரம் கிடைக்கும் போது இணைப்பாரு..//

எனவே சிறிது காலத்திற்கு வேலைப்பளு காரணமாக திருவாளர்.ரமணி வரவில்லை என்றால் அந்த இடைப்பட்ட காலத்தில் புதிதாக வரும் வலைப்பதிவர் பெயர்கள் வெண்பட்டியலில் இடம் பெற இயலாது ,அப்போது அவர்கள் எல்லாம் போலிகள் என அறியப்பட நேரிடுமே! தமிழ்மணம் போன்று கமிட்டட் ஆக இருப்போர் இதனை செய்வதே சரியாக வரும் என்பதே எனது கருத்து! தனி நபர் எத்தனை தூரம் அப்படி இருக்க முடியும்.

Thekkikattan said...

பொன்ஸு,

எனக்கு என்னமோ வவ்வால் சொல்வது சரியாக படுகிறது. தமிழ் மணம் இந்த மென்பொருளை அவசியம் என்று ஆக்கும் பொழுது வேண்டுமானால், ஓ.கே.

இது என்ன ப்ளாக்கர் தானே? எதற்கு இத்துனை சிரமங்கள்? ப்ளாக்கர் தரும் மட்டுறுத்தலே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.