Tuesday, October 17, 2006

அஞ்சு பேரும் ஒரு டீயும்..

"என்ன வேணும்? வழக்கம் போல ஸ்பெஷல் டீ தானே?"

"ஆமாம் ஆமாம்..சொல்லிடு.."

"அப்புறம், அந்த பூத்துக்கு உள்ள போனவுடனே என்ன நடந்தது தெரியுமா.."

"ஹைய்யோ..! "

"என்னாச்சு?! என்னாச்சு?"

"செம க்யூட்.. "

"தாங்க்ஸ்.. இப்போ தான் பார்த்தியா? இந்த டீ சர்ட்டைத் தானே சொல்றே?"

"ஆசை தோசை.. உன்னை எவ சொன்னா?!"

"பின்ன? யாரைச் சொல்றே?"

"அட! அஞ்சு பேர் இருக்காங்கடா.. எத்தனை அழகா இருக்கானுங்க.."

"அஞ்சு பேரு எனக்குப் போட்டியா?! யாரு ? எங்க இருக்கானுங்க?"

"பயங்கர துறு துறுன்னு இருக்கானுங்க இல்ல?"

"என்கிட்டயேவா? நான் கூட ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிறதா நேத்து தானே சொன்னே?"

"அது நேத்திக்கு.. இன்னிக்கு இவங்க தான் பயங்கர துடிப்பா இருக்கானுங்க.. அங்க பாரேன்.."

"சரி சரி, மொதல்ல நீ இந்த டீய கைல வாங்கு!"

"அச்சிச்சோ.."

"என்னாச்சு? ரொம்ப சூடா? கையச் சுட்டுகிட்டியா?"

"இல்லடா.. அங்க பாரு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க.. வா வெலக்கிவிடலாம்.."

"அடச்சீ.. சும்மா இரு! டீயக் குடிச்சி முடிப்பியா! வந்துட்டா.. வெலக்கி விடுறாளாம்!"

"பாவண்டா.. சண்டை போட்டு ஏதும் காயமாய்ட்டா!"

"ஒண்ணும் ஆகாது. அஞ்சு நிமிஷத்துல அடங்கிடுவானுங்க.. நம்ம எல்லாம் அங்க போனா ஆட்டுச் சண்டையில் நரி புகுந்த மாதிரி தான். நீ பேசாம டீயக் குடி!"

"நீ ஒரு ஜீனியஸ்டா!"

"அப்பா.. ஐயாவைப் பத்தி இப்போவாவது புரிஞ்சுதே.. எப்படிச் சொல்றே?"

"அங்க பாரு சண்டை ஓய்ஞ்சு சமத்தா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.."

"ஐயோ!!" தலையில் அடித்துக் கொள்கிறான்.










[பிகு: ஹி ஹி.. flash-க்கு அடுத்து வீடியோ போட்டு பார்க்கலாமே என்ற (விபரீத) ஆசையின் விளைவு ;) எங்க அலுவலகத்துக்கு எதிர் டீக்கடை புதுசா வந்திருக்கும் கஸ்டமருங்க.. ]

28 comments:

மணியன் said...

சகலகலாவல்லிதான் போங்க! எல்லா உயிரினங்களும் குட்டியாயிருக்கும் போது அழகுதான்!

Unknown said...

:))

அருமையா இருக்கு நாய்குட்டிகள்

இராம்/Raam said...

ஹி ஹி ... யக்கா நெசமாதான் சிரிக்கிறேன்!!!!!

வல்லிசிம்ஹன் said...

எதிர்பாராத முடிவு:-))
நாய்க்குட்டிகளுக்கும் பதிவா?

பாவம் யானை சண்டைக்கு வரப்ப்போவுது.
அட ஆமாம் இப்ப நாய்க்குட்டி ஓடுது உங்க பதிவிலே/இப்போதான் பார்த்தேன்.

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ், இந்த மாதிரி கருப்பு கலரில் பிளாக் போட்டால் படிக்கவே முடிவதில்லை. பல நாளாய் சொல்ல வேண்டும் என்றிருந்தேன்.
வேறு சிலரும் இப்படி கருப்பு கலர் அடித்து உயிரை வாங்குகிறார்கள். என்னால் சில வரிகளுக்கு மேல் படிக்க முடிவதில்லை. எனக்குதான் இப்படியா, வேறு யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? ஒரு வேளை வயசாயிடுச்சா ;-)

இலவசக்கொத்தனார் said...

உங்க டெம்பிளேட்டில் எனக்கு ஒன்றுமே தெரிவதில்லை. காமெண்ட் செக்ஷனுக்குப் போய் show original post மூலமாக படிக்கிறேன். :(

பாரதி தம்பி said...

அவ இவன்னு எழுதி இளைஞர்களை படிக்கத்தூண்டி இறுதியில் நாய்குட்டியை காட்டி ஏமாற்றிய பொன்ஸக்காவுக்கு கடுமையான கண்டனங்கள்...

பொன்ஸ்~~Poorna said...

உஷா, கொத்ஸ், இப்போ ஓக்கேவா?

இலவசக்கொத்தனார் said...

இல்லை.

பர்ப்பிள் கலரில் பச்சை எழுத்துக்கள், பிங்க் எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை. ஆனால் முன்னம் ஒன்றுமே தெரியாததற்கு இது பரவாயில்லை..

இராம்/Raam said...

யக்கோவ் எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது... என்னா டெம்பிளேட் மாத்தீனிங்க...????

நாகை சிவா said...

எதிர்பார்த்தது தான் ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்.

பூனைக்குட்டிகள் என்று நினைத்தேன். நாய்க்குட்டிகள் பரவாயில்லை.

பூனைக்குட்டிகள் விளையாடுவது ரொம்பவே அழகாக இருக்கும். பாக்கவும் சலிப்பு தட்டாது.

ramachandranusha(உஷா) said...

இலவசம்! தெய்வமே :-) எனக்கு மட்டும் தான் கண்ணு தெரியவில்லை என்று நினைச்சிக்கிட்டு இருந்தேன்.
பொன்ஸ், அழகாய் பர்பிள் கலராய் பக்கம் திறந்து, வெள்ளையாய் மாறி அதில் கருப்பு சொற்கள்.
சூப்பர்!

ராம், என்னையா குழப்புறீங்க? எனக்கு நல்லா தெரியுதே :-(

இலவசக்கொத்தனார் said...

//இலவசம்! தெய்வமே :-) //

யக்கா, என்ன இது விளையாட்டு!!

//அழகாய் பர்பிள் கலராய் பக்கம் திறந்து, வெள்ளையாய் மாறி அதில் கருப்பு சொற்கள்.//

பர்பிள் வெள்ளையாய் மாறாம எழுத்துக்கள் எல்லாம் பச்சையாய் (அட கலருங்க) படிக்கவே முடியலையே..

//எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது.//

ராம்ஸ், சாயங்காலம் நேர வீட்டுக்குப் போகாம கண்ட கழுதைங்களோட சேர்ந்து கண்டதையும் குடிச்சி, சாப்பிட்டா இப்படித்தான்!

யம்மா பொன்ஸு, ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி தெரியற மாதிரி என்ன இந்த குழப்பு குழப்புறீங்க..

இலவசக்கொத்தனார் said...

//எல்லா உயிரினங்களும் குட்டியாயிருக்கும் போது அழகுதான்!//

மணியன்,

பொன்ஸ் எதாவது அப்போ, இப்போன்னு அவங்க போட்டோ அனுப்புனாங்களா? இந்த ஓட்டு ஓட்டறீங்க. :D

இராம்/Raam said...

//ராம், என்னையா குழப்புறீங்க? எனக்கு நல்லா தெரியுதே :-( //


இப்போ ஓகே!!! ஆனா நெருப்பு நரியிலே சரியா தெரியலே!!!

இராம்/Raam said...

//ராம்ஸ், சாயங்காலம் நேர வீட்டுக்குப் போகாம கண்ட கழுதைங்களோட சேர்ந்து கண்டதையும் குடிச்சி, சாப்பிட்டா இப்படித்தான்! //

இது அபாண்டமான குற்றசாட்டு.... :-)

Anonymous said...

nalla suspense :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒரு நாயை 10 வருஷம் வளர்த்து பிரிவுதாளாமல் இனி நாய் குட்டியையே பார்க்கக்கூடாது என்று இருந்த என்னையே அசத்திவிட்டது அழகுகுட்டிகள்.நல்ல ரசனை பொன் ஸ்

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

இந்த மாதிரி நாய் குட்டி , நரிக்குட்டிக்குலாம் பதிவுப்போட்டு மேனகா காந்திக்கு வாரிசாகிடுவிங்க போல இருக்கே. சரி சரி கடைசில ஒன் பை 5 நு டீ சாப்டாச்சா இல்லையா!!

பொன்ஸ்~~Poorna said...

//சகலகலாவல்லிதான் போங்க//
உள்குத்து :)) நன்றி மணியன், நானும் அழகுதான்னு சொன்னதுக்கு, பின்னே, நானும் சின்னப் பொண்ணு தானே :)))

நன்றி தேவ்

ராம், ரொம்ப சிரிக்காதீங்க, பல் சுளுக்கிக்கப் போகுது ;). தீபாவளி பட்சணம் சாப்பிடணும், கவனம் இருக்கட்டும் ;)

பொன்ஸ்~~Poorna said...

வள்ளி, நாய்க்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கணும் இல்லையா :)

ஆழியூரான், அப்போ படிச்சீங்க ;) அது போதும் :)))

சிவா, பூனையோ, நாயோ, எல்லாமே விளையாடும்போது அழகு தான் :))

கொத்ஸ்,
//ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி தெரியற மாதிரி என்ன இந்த குழப்பு குழப்புறீங்க.. //

மாயக் கண்ணாடின்னு பதிவு பேரை மாத்திடவா? ;)

பொன்ஸ்~~Poorna said...

ஹனீப், தி.ரா.ச, நன்றி.. நாய்க்குட்டிகள் சார்பாக..

BadNewsIndia said...

அழகா இருக்குங்க. பாவம், வீட்டுக்கு எடுத்துட்டு போய் வளங்க!
லவன், குசன் பேரும் நல்லா இருக்கு.

லதா said...

உங்கள் பதிவின் தலைப்பில் யானைக்கன்று வித்தியாசமாக முட்டையிலிருந்து வருகிறதே :-)))

fhygfhghg said...
This comment has been removed by a blog administrator.
G.Ragavan said...

ரொம்பவே க்யூட். அழகுதான் போங்க.


அப்புறம் இந்த டெம்பிளேட்டு..........

கைப்புள்ள said...

நாய்க்குட்டி படங்களும் வீடியோவும் நல்லாருக்கு.
:)

கானா பிரபா said...

தாயீ பொன்ஸ்

ஒங்க டெம்ப்ளேட்டை பழையதுக்கு மாற்றக்கூடாதா, வாசிக்கச் சிரமமா இருக்கு.