Thursday, November 23, 2006

கோகுலம் - இதழ் 3

நீர் நீர் - பிரசுரமான என் முதல் கவுஜ


நீர் நீர்
எங்கும் இல்லை குடிநீர்

அதனால்
உலகம் முழுவதும் கண்ணீர்

ஏனோ
வானம் பொழியவில்லை விண்ணீர்
ஆகவே
கிடைக்கவில்லை தண்ணீர்

மண்ணில் நீர் கிடைக்கும் என்றே
எண்ணி நான் தோண்டினேன்
நீர்கிடைக்க இறைவனைத்
தினமும் வேண்டினேன்

தோண்டியது பலிக்கவில்லை;
வேண்டியதில் பலனில்லை;

மண் தரவில்லை மறுவற்ற நீர்
விண் தரவில்லை விலையற்ற நீர்
ஏன் தரவில்லை நீர் என்றே எண்ணி
நான் அவ்விரண்டைப் பார்த்தேன்

மண் சொன்னது மரமில்லை
எனவே
விண் சொன்னது மேகமில்லை

நான் புரிந்து கொண்டேன்
நன்றாக
நீங்கள்..?

[இந்த மாதிரி கவுஜயெல்லாம் எப்படிப் பிரசுரமாச்சுன்னு சந்தேகமா? உங்க அப்பா இல்லைன்னா அம்மா ஆபீஸ்ல ஆண்டுவிழா இதழ் போடுவாங்க தானே? அங்க கொடுத்தீங்கன்னா, நிச்சயம் பிரசுரிச்சே தீருவாங்க.. உங்க கவுஜயப் பாத்து கடுப்பாகி உங்க அப்பா அல்லது அம்மாவுக்கு வேலை போனா நான் பொறுப்பில்லை.. ]

20 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...
அய்யோ.. அம்மா...


நீங்க டி.ஆர் தங்கச்சியா... இப்பத்தான் தெரிஞ்சது.. ?

அருள் குமார் said...

//நீங்க டி.ஆர் தங்கச்சியா... இப்பத்தான் தெரிஞ்சது.. ? //

ரிப்பீட்டே...!

Anonymous said...

ஆஹா!!
கவி
மா
மணியா இருப்பீங்கன்னு நெனைக்கவேயில்லையே. என் பதிவுல பின்னூட்டம் போட்டதுக்கே இப்படி கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்களே?!
நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//நீங்க டி.ஆர் தங்கச்சியா... இப்பத்தான் தெரிஞ்சது.. ? //

ரிப்பீட்டே...! ;)

பொன்ஸ்~~Poorna said...

//ரிப்பீட்டே...! ;) //
யக்கா, நீங்க இன்னும் தூங்கப் போவலியா? :))

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்ன ஆசிப் இப்படிச் சொல்லிட்டீங்க. அம்மணி உங்களுக்கு சீனியர். கோகுலத்தில வந்ததுங்கிறாங்களே! [கோகுலத்தில வந்ததுக்கு அத்தாட்சி கேட்டிராதீங்க. பாட்டி வீட்டு பரண்லருந்து கொண்டுவந்தாலும் கொண்டுவந்திருவாங்க. நமக்குத்தான் அப்புறம் தும்மியே மூக்குப்போயிரும். ஆமா. ;)

- யெஸ்.பாலபாரதி said...

//கோகுலத்தில வந்ததுக்கு அத்தாட்சி கேட்டிராதீங்க. பாட்டி வீட்டு பரண்லருந்து கொண்டுவந்தாலும் கொண்டுவந்திருவாங்க. நமக்குத்தான் அப்புறம் தும்மியே மூக்குப்போயிரும். ஆமா. ;)//

பொ.க.ச ஆரம்பிக்க ஆழமான அஸ்திரம் போட்ட அக்கா மதிக்கு நன்றிகள். (நீங்க பா.க.சவுல இல்லைன்னு நம்பிகிட்டு இருக்கேன்க்கா.. கவுத்திடாதீங்க.. :(.)

லக்கிலுக் said...

ஆஹா... ஓஹோ...
அபாரம்... அட்டகாசம்...
சூப்பர்... அல்டிமேட்....
பேஷ்... பேஷ்....
ரொம்ப நன்னா இருக்கு...

பாராட்ட வார்த்தைகளே இல்லை

Anonymous said...

எழ்ழம்மா! அண்ணாழ் குழிச்சிட்டு வந்துட்டானேன்னு பார்க்குறீயா!

தண்ணி தண்ணின்னு நீ எழுதி வெச்சதை நான் தப்பாப் புழிஞ்சிக்கிட்டேன்!

Anonymous said...

இந்த அண்ணன் கூழ பொ.க.சாவிலே உண்டுதான? இழ்ழைன்னு மட்டும் சொல்லீறாத கண்ணு!

இராம்/Raam said...

கவிதை... கவிதை!!!!????

:-((((

Anonymous said...

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
நல்லா எனக்கு தெரிஞ்சு போச்சி
நீங்க Teee Yaaar தங்கச்சி.

பத்மா அர்விந்த் said...

பொன்ஸ், வடை சுடுவது கரம், வளையல் அணிவது கரம் என்று நான் எழுதிய கவிதை போல தண்ணீரும் மண்ணீருமாய் இருப்பதுகண்டு அகம் மகிழ்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
நல்லா எனக்கு தெரிஞ்சு போச்சி
நீங்க Teee Yaaar தங்கச்சி//

அகத்தீ! இன்னும் கொஞ்சம் வார்த்தைகளைப் போட்டுப் பாடுவோம்!

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
நல்லா எனக்கு தெரிஞ்சு போச்சி
நீங்கதானே Teee Yaaar தங்கச்சி
நீங்கதானே Teee Yaaar தங்கச்சி
பதிவு போட்டா பொழுது போச்சி!

பதிவாக நினைச்சித்தான் இதைப் படிச்சேன்! இங்கே
பாட்டெழுதிப் போட்டுவிட நானும் சிரிச்சேன்!

-தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி

நாமக்கல் சிபி said...

இது நீங்க சின்ன வயசுல எழுதனீங்கனு சொல்லி பேப்பர் ஸ்கேன் பண்ணி போட்டாத்தான் நம்புவோம்...

பொன்ஸ்~~Poorna said...

//நீங்க டி.ஆர் தங்கச்சியா... இப்பத்தான் தெரிஞ்சது.. ?
//
ஹி ஹி..

//ரிப்பீட்டே...! //
ஹி ஹி ஹி..

//என் பதிவுல பின்னூட்டம் போட்டதுக்கே இப்படி கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்களே?!//
ஆசீப் வீட்டுப் பின்னூட்டப் பெட்டியும் கவுஜ பாடும்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.. :))

பொன்ஸ்~~Poorna said...

//பாட்டி வீட்டு பரண்லருந்து கொண்டுவந்தாலும் கொண்டுவந்திருவாங்க.//
தேடிகிட்டே இருக்கேன்.. கிடைச்சதும், போட்டுர்றேன்..

//பாராட்ட வார்த்தைகளே இல்லை//
ஹி ஹி

//இழ்ழைன்னு மட்டும் சொல்லீறாத கண்ணு! //
நான் தனியா ஏதாச்சும் சொல்லணுமா என்ன.. :(

//கவிதை... கவிதை!!!!???? //
இல்லை ராம்.. கவுஜ... கவுஜ.. ????!!!!

//அகம் மகிழ்கிறேன். //
நீங்க ஒருத்தராவது மகிழறீங்களே.. நன்றி பத்மா :)))

அகத்தீ, உங்கப் பாட்டை சிபி, பெரிய தத்துவமாக்கிட்டார். சிபி, இதைப் பித்தானந்தாவில் போட்ர வேண்டியது தானே..

//இது நீங்க சின்ன வயசுல எழுதனீங்கனு சொல்லி பேப்பர் ஸ்கேன் பண்ணி போட்டாத்தான் நம்புவோம்... //
தேடி எடுத்து வரேன் வெட்டி... :))

thiru said...

கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா... கவிஜய படிச்சு மயக்கமா வருது :))

நாடோடி said...

//நீங்க டி.ஆர் தங்கச்சியா... இப்பத்தான் தெரிஞ்சது.. ? //

ரிப்பீட்டே...! ;)


யக்கோவ் விஷபரிச்சை வேண்டாம்..
:)

மா சிவகுமார் said...

பெரியவர்களையும் கட்டிப் போடும் படைப்புகள்தான் சிறந்த சிறுவர் படைப்புகள். இந்த கவிதை அந்த வகையில் சேரும். பாராட்டுக்கள், பொன்ஸ்.

அன்புடன்,

மா சிவகுமார்