Monday, November 27, 2006

பாரா உஷார்!

நிரலிகள் எழுதி, புத்தகம் படித்து, மீதி நேரங்களில் அழுது வடியும் தமிழ்த் தொலைக்காட்சி மெகாதொடர்களிடமிருந்து தப்பிக்கவே பதிவெழுத வந்தவள் நான்.

தினசரி பல்வேறு பதிவுகளைப் படித்து நியூசி முதல் கலிபோர்னியா வரையிலான நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலிருந்து, புதுப் புது நட்புகள் பெறுவது வரை பதிவுலகம் எனக்குக் கொடுத்த வசதிகள் ஏராளம். பதிவெழுதத் தொடங்கி எட்டு மாதம் ஆகிறது, இப்போது தட்டிக் கொண்டிருக்கும் தொண்ணூறாவது பதிவு வரை, 'ஒரு இடுகை' என்று எழுத எனக்குக் காரணம் என்று தனியே ஏதும் தேவைப்பட்டிருக்கவில்லை.

சும்மாவே ஒரு நாளில் அதிகபட்சம் மூன்று இடுகைகள் கூட போட்டும் பொழுதுபோகாத என்னைத் தூக்கி நட்சத்திரப் பெட்டிக்குள் போட்டு தமிழ்மண வாசகர்களுக்குத் தண்டனை கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார்கள் போலும்.

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க :))

முதல் இடுகையில் என்னைப் பற்றிய அறிமுகம் எழுதச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாதது ஏதும் இருக்கிறதா என்றே தெரியவில்லை. நான் புத்தகப் பூச்சியானதிலிருந்து இப்போதைய பதிவுலக அறிமுகம் வரை ஏற்கனவே பலமுறை பல இடங்களில் தெரிவித்து விட்டதால், இந்த இடுகையைச் சின்னதாகவே வைத்துக் கொள்கிறேன்.

55 comments:

கோவி.கண்ணன் [GK] said...

பொன்ஸ் !
நீங்கள் நட்சத்திரமாக இருந்தாலும் ஆயிரம் பொன் !

வாழ்த்துக்கள் !

இன்பா said...

தங்கத் தாரகைக்கு வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்!!!

இந்த வாரம் கலக்கல்தான் :-))

துளசி கோபால் said...

ஹைய்யாரெ ஹைய்யா...

நீங்களா?

வாங்கம்மா வாங்க.

வாழ்த்து(க்)கள்.

'ச்சும்மா 'பின்னி' எடுக்கணும் ஆமா:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொன்ஸ்
வாழ்த்துக்கள்!

நட்சத்திரக் கோலம் போட்டப்பவே நினைச்சேன்; :-)))
நட்சத்திரம், நட்சத்திர வாரத்தில் மேலும் ஜொலிக்கட்டும்!

யானையார் மீது பவனி உண்டா? :-))

Thekkikattan said...

நட்சத்திர வாழ்த்துக்கள், பொன்ஸு!!!

திரு said...

வாங்க வாங்க பொன்ஸ்! நல்லா சொல்லுங்க! வாழ்த்துக்கள்! :)

Udhayakumar said...

all the best!!!

sivagnanamji(#16342789) said...

வ்வ்வ்வ்வ்வாஆஆஆழ்த்துகள்!

ஜொள்ளுப்பாண்டி said...

ஒரு
நட்சத்திரமே
நட்சத்திரமாய்
மின்னுதே !!!

கவிஜ எப்படி? நேர் நிரையெல்லாம் பிரிக்கறேன்னு இம்ச படுத்தாம படிங்கக்காவ் !!! ;)))))

பொன்ஸக்கா நட்சத்திரமே ஆய்டீங்க ம்ம்ம் இனி என்னா கவலை எனக்கு ;)))) வாழ்த்துக்கள் !!!

S. அருள் குமார் said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்.

ம்... ரெண்டு மாபெரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் என்ன மாட்டி விட்டுருக்காங்க :)

மங்கை said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்..:-))

விழிப்பு said...

இ.வா.ந ஆனதற்க்கு வாழ்த்துக்கள் பொன்ஸ்

மோகன்தாஸ் said...

நட்சத்திரமாமே, வாழ்த்துக்கள்.

நல்ல சில புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். (க்கலாமா?)

உங்கள் நண்பன் said...

இந்த வாரம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜொலிக்கவுள்ள பொன்ஸ்-க்கு வாழ்த்துக்கள்!

யானையாரின் சேவை எங்களுக்குத் தேவை!!!


அன்புடன்...
சரவணன்.

பொன்ஸ்~~Poorna said...

கோவி, இன்பா, வெட்டிப்பயல், தெகா, திரு, உதய், சிஜி, மங்கை, விழிப்பு, சரவணன்,
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

//'ச்சும்மா 'பின்னி' எடுக்கணும் ஆமா:-)
// எடுத்துருவோம்க்கா.. நீங்க எல்லாம் இருக்கிறச்சே என்ன கவலை :)

//யானையார் மீது பவனி உண்டா?//
இல்லாமையா krs, பலவித யானைகள் காத்திருக்கின்றன..

//நேர் நிரையெல்லாம் பிரிக்கறேன்னு இம்ச படுத்தாம படிங்கக்காவ்//
அதெப்படி பாண்டி.. ஒரு நேர் நிரை க்ளாஸ் போட்டுருவோமா? :)

//ரெண்டு மாபெரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் என்ன மாட்டி விட்டுருக்காங்க :) //
அருள், இதானே வேணாங்கிறது.. :)

//நல்ல சில புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். (க்கலாமா?) //
'நல்ல'வான்னு தெரியலை, ஆனா க்கலாம் :)

குழலி / Kuzhali said...

நட்சத்திர வாழ்த்துகள், கலக்குங்க

நன்றி

Anonymous said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்..

கலக்குங்க...:-)

நட்புடன்
சந்தனமுல்லை

We The People said...

வாழ்த்துக்கள் பொன்ஸ் :)

இன்னாபா இது ரெண்டு வாரமா சென்னப்பட்டிண வாரமா இருக்கே??

கானா பிரபா said...

தானைத் தலைவி பொன்ஸ் நட்சத்திரமாவதையொட்டி அண்ணா சாலையில் கட் அவுட் போட்டாச்சு, வாழ்த்துக்கள்:-)

Anonymous said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்.

Hariharan # 26491540 said...

நட்சத்திர யானையாக யானைமீதேறி அம்பாரியில் அமர்ந்து தமிழ்மணத்தில் ஒருவாரம் நட்சத்திரமாக ஜொலித்தபடி தங்களது சிறப்பான திருவுலாவுக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

யக்கோவ்,

நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்.

ப்ரியன் said...

இந்த வாவாவாவாவாவாரம் பொன்ஸ் வாவாவாவாவாவாரம்!

வாழ்த்துக்கள் பொன்ஸ்!

நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துகள் பொன்ஸ் :-)

நன்மனம் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பொன்ஸ்.

ராசுக்குட்டி said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்... இந்த வாரத்தை ஜொலிப்பூட்டுங்கள்

முத்துகுமரன் said...

சுவையாகவும், கலகலப்பாகவும், கலகமாகவும் இருக்கப்போகும் நட்சத்திர வாரம். வாழ்த்துகள் பொன்ஸ்.

கோகுலம் - சிறப்பு பதிவுகள் உண்டா:-))

tamilnathy said...

வாங்க பொன்ஸ்!

எழுத்துக்கு அடித்தளம் மானுடநேயம். அதன் நதிமூலம் நட்புணர்வுதான். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. ஒருநாள் பழகினாலும் ஒட்டிக்கொண்டுவிடும் உங்கள் சிரிப்பு. நட்சத்திரப் பதிவாளராக நீங்கள் வலைப்பூவைச் சிறப்பிப்பதற்கும் எங்களைச் சிரிப்பிப்பதற்கும் வாழ்த்துக்கள்.

நட்புடன் நதி

SP.VR.சுப்பையா said...

நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்!

ROSAVASANTH said...

அஹா நடத்துங்க! மணியோசைதான் கேக்காம போயிருச்சு!

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

குழலி, சந்தனமுல்லை, ஜெய்சங்கர், கானாபிரபா, தங்கவேல், ஹரிஹரன், அனானி, ப்ரியன், சுதர்சன், நன்மனம், ராசுக்குட்டி, முத்துகுமரன், நதி, சுப்பையா சார், ரோசா, செல்வநாயகி,
எல்லாருக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி..

//இன்னாபா இது ரெண்டு வாரமா சென்னப்பட்டிண வாரமா இருக்கே??
///
அதானே..

//அண்ணா சாலையில் கட் அவுட் போட்டாச்சு//
பிரபா, அதான் இங்க ஒரே டிராபிக் ஜாமா?! :))

//நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?//
அது இல்லாமையா ப்ரியன், நம்ம எல்லா பதிவுமே பா.க.ச தானே.. :))

//கோகுலம் - சிறப்பு பதிவுகள் உண்டா:-))//
நேயர் விருப்பமா? போட்டுடுவோம் :)

செந்தழல் ரவி said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வெல்கம்...

நாமக்கல் சிபி said...

ஆஹா! படகு அக்காதான் இந்த வார நட்சத்திரமா?

உடனே தெரியாம போச்சே!

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல!

வாழ்த்துக்கள் படகு அக்கா!

கலக்குங்க!

நாமக்கல் சிபி said...

//ரெண்டு மாபெரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் என்ன மாட்டி விட்டுருக்காங்க//

அருள்! என்ன சொல்ல வர்றீங்க!

(ரெண்டு மாபெரும் நட்சத்திரங்களுமே யானை படம் என்றால் விரும்புபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

இராம் said...

அடடே பொன்ஸ்க்கா நீங்கதான் இந்த வாரத்து நட்சத்திரமா.. அப்போ சூப்பரா இருக்கும் இந்த வாரம்!!

யாராங்கே நம் நட்சத்திர பொன்ஸ்க்காவுக்காக தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்!!

;)

Dharumi said...

//என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாதது ஏதும் இருக்கிறதா என்றே தெரியவில்லை..//

இத.. இதத்தான் அங்க சொன்னேன்.

மீண்டும் வாழ்த்துக்கள்

ஜோ / Joe said...

Vazhthukkal! kalakkunga

இம்சை அரசன் said...

கனவு கண்டு அவசரப்பட்டு பதிவு போட்டு விட்டேன். அடடே பொன்ஸ்க்கா நீங்கதான் இந்த வாரத்து நட்சத்திரமா.. வாழ்த்துக்கள்.
அரசனின் பிழையை மன்னியுங்கள்!!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் விண்மீனே

மலைநாடான் said...

//ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க :))//

நெசமாலுமே,
ஆனாலும் புடிச்சிருக்கு தாயீ!

சும்மா போட்டுத் தாக்குங்கோ..

இலவசக்கொத்தனார் said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

பொன்னும் மினுக்கும்
விண்மீனும் மினுக்கும்
இந்த நட்சத்திர வாரத்தில்
உங்கள் ஒவ்வொரு பதிவும் மினுக்கும்
என வாழ்த்துக் கூறி வரவேற்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ரவி, ஜோ, குமரன், கொத்ஸ்.

//ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல!//

பரவாயில்லை சிபி, இந்த வாரம் பூரா இருக்கே :)

//(ரெண்டு மாபெரும் நட்சத்திரங்களுமே யானை படம் என்றால் விரும்புபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)//
ஹல்லோ.. என்ன சொல்ல வரீங்க? [இதுக்கு இன்னும் லேட்டாவே வந்திருக்கலாம் ;)]

//இத.. இதத்தான் அங்க சொன்னேன்.//
ஆமாம் தருமி :)


//யாராங்கே நம் நட்சத்திர பொன்ஸ்க்காவுக்காக தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்!!//
ராயல், வேணாம்.. விட்டுடு.. அளுதுடுவேன்.. ;) :)))

//அரசனின் பிழையை மன்னியுங்கள்!!//
இம்சை, மன்னித்தோம், பிழை பொறுத்தோம் :)))

//நெசமாலுமே,//
ஆகா.. மலைநாடன், நீங்க கூடவா :))

//உங்கள் ஒவ்வொரு பதிவும் மினுக்கும்
என வாழ்த்துக் கூறி வரவேற்கிறேன்.//
பார்க்கலாம் ராகவன் :), முயற்சிக்கிறேன்.

இராம் said...

//ராயல், வேணாம்.. விட்டுடு.. அளுதுடுவேன்.. ;) :)))//

என்னாக்கா இதுக்கேவா.. நாங்க நாளைக்கி வாடிப்பட்டி மேளதாளமெல்லாம் அரெஞ்ச் பண்ணலாமின்னு இருக்கோம்...

அதுக்குள்ளே அழுதுருவேன்... சிரிச்சிருவேன்னு பயமுறுத்திரிங்க....??

;)))

கப்பி பய said...

வாழ்த்துக்கள் பொன்ஸ்!

Madura said...

பொன்ஸ் கலக்குங்க.

சேதுக்கரசி said...

நட்சத்திரம் யானைக்குட்டியானதற்கு வாழ்த்துக்கள்!
சே..சே..
யானைக்குட்டி நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்! :)

ஜெயஸ்ரீ said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் பொன்ஸ்

வெற்றி said...

அன்புச் சகோதரி பூர்ணா[பொன்ஸ்],
நீங்கள் இவ்வார நட்சத்திரமாக வலம் வர இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள். சில தினங்களூக்கு முன்னர்தான் தாயகத்தில் இருந்து திரும்பியதால் இன்னும் பயணக் களைப்பு போகவில்லை. நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொல்கிறேன். மீண்டும் நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

நன்றி.

நிரலிகள் = ??
நியூசி முதல் = ??

பொன்ஸ்~~Poorna said...

கப்பிபய, மதுரா, சேது, ஜெயஸ்ரீ, வெற்றி, நன்றிகள் பல..

நிரலிகள் = code
நியூசி முதல் = வெற்றி, இதில் என்ன புரியவில்லை என்று தெரியலியே.. துளசி அக்கா வசிக்கும் நியூசிலேண்டைச் செல்லமாக, நியூசி :))

மணியன் said...

பொன்னான வாரத்தை தவற விட்டிருக்கிறேனே ! முதலில் வாழ்த்துக்கள்!
இன்றுதான் ஊர் திரும்பினேன். இந்த வார இடுகைகள் கலக்கலாகவே தெரிகின்றன. வாசித்துத் தெளிந்ததும் கருத்திடலாம்; என்றாலும் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே :)

இராம் said...

//என்றாலும் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே :) //

:-)))))))))))))

பொன்ஸ்~~Poorna said...

//வாசித்துத் தெளிந்ததும் கருத்திடலாம்; என்றாலும் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே :) //
அப்படியில்லை மணியன்.. படித்து சொல்லுங்க.. :))

ராம், சிரிச்சதுக்கு நன்றி ;)