Friday, December 15, 2006

பின்னூட்டம் ஏற்காத பீட்டா

கவிதா, சர்வேசன், செந்தில் போன்ற ப்ளாக்கர் பீட்டா பதிவுகளில் சாதா ப்ளாக்கர் கணக்குடையவர்கள் பின்னூட்டமிட்டால், அவை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. நேற்று, டிசம்பர் 14,2006லிருந்து இந்தப் பிரச்சனை புதிதாகத் துவங்கியுள்ளது.

அறிகுறி:

பீட்டா பதிவுகளில் பின்னூட்டப் பெட்டிக்கு நகரும் தருவாயில், ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைந்திருந்தாலும், உங்களின் பெயர் காண்பிக்கப்படாது. கீழுள்ள படம் போல:



பிளாக்கர் மென்பொருளாக்கக் குழுமம் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைக் கண்டுகொண்டுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள் வேலை செய்துகொண்டே இருக்கும்போதில், தற்காலிகத் தீர்வாக முன்வைப்பது:

  • புதுப் பக்கம் ஒன்றைத் திறந்து கொண்டு http://www.blogger.com/login.g என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  • இதில் உங்கள் ப்ளாக்கர் பயனர்/கடவுச் சொல்லை அளித்து லாகின் செய்யவும்
  • பீட்டா ப்ளாக்கரில், நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய பக்கத்தின் உரலை எடுத்து இப்போது லாகின் செய்து வைத்திருக்கும் புதுப் பக்கத்தின் address bar இல் ஒட்டிவிடவும்.
  • இப்போது உங்கள் பெயர் பதிவில் தெரியும். நீங்களும் உங்கள் பயனர் பெயரிலேயே பின்னூட்டமிடலாம்.


இந்த வழி கடினமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது அனானி மற்றும் அதர் ஆப்ஷன்கள் :). மேலும் தகவல்களுக்கு இங்கு தட்டவும்.

8 comments:

Anonymous said...

சில வேளைகளில் இப்படி நடக்கிறது, சில சமயங்களில் நல்ல பிள்ளையாக வேலை செய்கிறது.

சென்ஷி said...

//சில வேளைகளில் இப்படி நடக்கிறது, சில சமயங்களில் நல்ல பிள்ளையாக வேலை செய்கிறது//

உண்மைதான். நானும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்

சென்ஷி

Anonymous said...

From AASATH

We need the net-struggle against the word "Blogger only". It is against democracy like Bharbaneeyam.

Charyyaa ...

மதுமிதா said...

பொன்ஸ் அஞ்சலி, மா.சிவகுமார் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.

இதே பிரச்சினை. சரி செய்யத் தெரியவில்லை.

மா.சிவகுமாரின் பதிவு வாசிக்க இயலாமல் கரும்புள்ளிகளாகத் தெரிகிறது
என்ன செய்யணும் பொன்ஸ்

மதுமிதா said...

http://ezhuththu.blogspot.com/
பாருங்கள் இது தெரியவில்லை

கல்வி குறித்த சிவாவின் அருமையான பதிவுக்கு பின்னூட்டமிட இயலவில்லை

Anonymous said...

இன்னும் ஏன் பிளாகரைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். வேர்ட்பிரஸ்க்கு மாறுங்கள். இது ஒரு கருத்து. பிளிறல் அல்ல.

பொன்ஸ்~~Poorna said...

//இது ஒரு கருத்து. பிளிறல் அல்ல. //
அனானி, ஆனை மொழியில் எல்லாமே பிளிறல் தான் ;)

Anonymous said...

தகவலுக்கு தேங்க்ஸ்கா...

//அனானி, ஆனை மொழியில் எல்லாமே பிளிறல் தான் ;) //

அப்போ பொன்ஸ்க்கு பதிலாக ஆனை என்று வைத்துக்கொள்ளலாமா? சும்மா விளையாட்டுக்குத்தான்