Thursday, September 07, 2006

நட்புக்காலம்



நானே ரசிக்காத
என் கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்..

படிக்கவும்
ரசிக்கவும்
நிமிடங்கள் இல்லை என்னிடம்

புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!

11 comments:

Anu said...

kavidhai..and photo..both are good.

ப்ரியன் said...

/*புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!*/

நன்று!

பொன்ஸ் எங்கே இருந்து படம் சுட்டீங்க நல்லா இருக்கு படமும்

கார்த்திக் பிரபு said...

nalla kavidhai aanal iinum niraya edir parkirom ungagkitta irundhu..appdiye namma pak

ராசுக்குட்டி said...

கவிக்கணங்கள் நல்ல சொல்லாடல்

படம் அருமை... கவிதை அதனினும்!

சத்தியா said...

"புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!"

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

fhygfhghg said...

அருமை ! அருமை !

வீரமணி said...

வணக்கம் பொன்ஸ் மேடம். நட்புக்காலம் நன்று... எனினும் இன்னும் வீரியமிக்க வார்த்தைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.... புகைப்படம் நல்லாஇருந்தது.....
நிறைய அன்புடன்
வீரமணி

Amar said...

நானும் பாக்குறேன் ரெண்டு மூனு நாளா ஒரே கவித-கவிதையா வந்துகிட்டு இருக்கு உங்ககிட்ட இருந்து.

ஒரே spontaneous overflow of powerபுல் பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா இருக்கே....என்னக்கா சமாச்சாரம்?

வெற்றி said...

கவிதை அருமை. படம் மிக அருமை.

பொன்ஸ்~~Poorna said...

அனிதா, ப்ரியன், கார்த்திக், சின்னதம்பி, ராசுக்குட்டி, வழிப்போக்கன், தமியன், வெற்றி, நன்றி..

ப்ரியன், //பொன்ஸ் எங்கே இருந்து படம் சுட்டீங்க // கூகிளாண்டவரே சரணம் :)

//கொஞ்ஜ‌ம் மெதுவா போகசொல்லுக்கா.// அந்தப் பழக்கம் தான் கிடையாதே தம்பி :)

சத்தியா, முதல் வருகைக்கு நன்றி, வாழ்த்துக்கும் :)

வீரமணி, வீரியம் மிக்க வார்த்தைகள்னு எதைச் சொல்றீங்கன்னு புரியலியே.. அப்புறம், இந்த மேடம் வேண்டாமே..

சமுத்ரா, //என்னக்கா சமாச்சாரம்? // பழைய கவிதைகள் தான்.. இப்போ தான் நேரம் கிடைச்சுது, போட்டோவுடன் போட..

தமியன், இன்னும் சிக்கனமா இருக்கலாம்னு சொல்றீங்களா?

MSV Muthu said...

நல்ல கவிதை. "கவிக்கணங்கள்" கவிச்சொல். இந்த கவிதையைப் படித்தவுடன் எனக்கு கவிஞர் அறிவுமதியின் "நட்புக்காலங்கள்" தொகுதியில் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை கூட :

பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை
*

சமுத்ரா:
//ஒரே spontaneous overflow of powerபுல் பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா இருக்கே
:)))