Saturday, July 01, 2006

கேள்விகளின் இடையில்

அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டி போல்,
பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்...

பதில் தேடிப் பிடித்தால்,
ஒவ்வொரு
பதிலுக்குப் பின்னும்
ஒளிந்து சிரிக்கும்
மற்றுமொரு கேள்வி

இருளில்
ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன் போல்
முளைத்து வரும்
கேள்விகளில்
விடை தேடித்
தொலைந்து போகிறேன்

74 comments:

நாமக்கல் சிபி said...

அடுத்த ஏஜென்ஸியா!

நாமக்கல் சிபி said...

//அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டி போல்,
பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்...//

இதுக்குத்தான் அப்பவே பதில் சொல்லீட்டமே!
சங்கத்துல வேற யாராவது கேள்வி கேட்டுட்டாங்களா?

"கேள்வி ஒண்ணை நானும் கேட்டேன்
பதிலே இல்லை மலைச்சுப் போனேன்"

என்கிட்ட கேள்வி கேட்டப்போ எல்லாம் காலேஜ்ல எங்க ஹெச்.ஓ.டி இந்தப் பாட்டைத்தான் பாடிக்குவார்.

கோவி.கண்ணன் said...

//விடை தேடித்
தொலைந்து போகிறேன் //
யானை வேகமாக ஓடுவதில் நன்றாகவே தெரிகிறது ...


நல்ல இருக்கு பொன்ஸ் ... கேள்வியின் நாயகனே பாடலை நினைவு படுத்திவிட்டீர்கள்

பொன்ஸ்~~Poorna said...

தளபதி..
ஏதாச்சும் உள்குத்து வெளிக்குத்துன்னு சொல்லாதீங்க..

இந்தக் கவிதைக்கும் தமிழ்மணத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..

இது பத்தாங்கிளாஸ்ல, ஹிஸ்டரி டீச்சர் ஹிட்லரே தெரியாதுன்னு சொல்லச் சொல்லக் கேட்காம, அவர் பொறந்த வருஷம், நடந்த வருசம்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணினப்போ எழுதினது!!! :)))))))

நாமக்கல் சிபி said...

//இது பத்தாங்கிளாஸ்ல, ஹிஸ்டரி டீச்சர் ஹிட்லரே தெரியாதுன்னு சொல்லச் சொல்லக் கேட்காம, அவர் பொறந்த வருஷம், நடந்த வருசம்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணினப்போ எழுதினது!!!
//

அது சரி!

:))

கோவி.கண்ணன் said...

//ஏதாச்சும் உள்குத்து வெளிக்குத்துன்னு சொல்லாதீங்க..
//

பொன்ஸ்...நான் கூட இதுமாதிரி உள்குத்து இல்லாத கவிதை எழுதினேன்.. ஒருவரும் வந்து குத்தவில்லை

http://govikannan.blogspot.com/2006/06/blog-post_25.html

பத்மா அர்விந்த் said...

பொன்ஸ்
இதே போல உஷா ஒரு கவிதை எழுதியதாக நினைவு. கிட்டதட்ட ஒரே சாயலில்.
அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கிறது?

பொன்ஸ்~~Poorna said...

தேன் துளி, உஷாவுக்கு ஒரு வாரம் முந்தி இதை தட்டச்சி திண்ணைக்கு அனுப்பி வச்சிருந்தேன்.. கொஞ்சம் மாற்றி இப்போ சொந்த பக்கத்துல :)

அமெரிக்க வாழ்க்கை நல்லாத் தான் இருக்கு.. இன்னும் ஒரு மாசம் தான்னு ஒரு சந்தோஷம் :)

பொன்ஸ்~~Poorna said...

நன்றி கோவி. கண்ணன்.. இருங்க.. குத்தாத உங்க கவிதையைப் படிக்க வரேன்.. :)

ramachandranusha(உஷா) said...

பத்மா, குருவின் சாயல் சிஷ்ய பிள்ளைகளிடம் காணப்படுவது இயல்பு தான் என்பதை தன்னடகத்துடன்
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடடா, மாற்றி சொல்லிவிட்டேனே, கவிதை நான் எழுதுவதற்கு முன்பு பொன்ஸ் எழுதி விட்டாளே, சரி, சரி அறிவாளிகள் ஓரே மாதிரி சிந்திப்பார்கள் இல்லையா?

VSK said...

தெரிந்ததற்குப் பெயர்தான் விடை.
தெரியாத ஒன்றை எப்படித் தேட முடியும்?
தொலைத்திருந்தால் தேடலாம்.
தேவையெனில் தேடலாம்.
தெரிந்து கொள்ளத் தேடலாம்-ஆனால்
கேள்விக்காக தேடுதல் எபோதுமே
சரிவருவதில்லை!

தேடலை நிறுத்தி,
தேவையைச் சுருக்கி
தினசரி வாழ்வை
துணிவுடன் ஏற்றுக்கொண்டால்,
தெளிவு பிறந்திடும்!
தெரியாதா, பொன்மகளே!

நாகை சிவா said...

//கேள்விகளில்
விடை தேடித்
தொலைந்து போகிறேன் //
தொலைந்து போகிற உருவமா அது?:)))

//அமெரிக்க வாழ்க்கை நல்லாத் தான் இருக்கு.. இன்னும் ஒரு மாசம் தான்னு ஒரு சந்தோஷம் :) //
யாருக்கு உங்களுக்கா, இல்ல அமெரிக்காவில் உள்ளவர்களுக்கா? :)))

நாமக்கல் சிபி said...

//யாருக்கு உங்களுக்கா, இல்ல அமெரிக்காவில் உள்ளவர்களுக்கா? :)))
//

பார பட்சமில்லாம கேக்குறீங்க நாகையாரே!

ராபின் ஹூட் said...

//அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டி போல்//
என்ன பொன்ஸ், யானையினால ஈட்டியப் பிய்த்து எறிய முடியாதா என்ன?

கவிதை ரெம்ப நல்லா இருக்கு. ஆற்றலரிசி பொன்ஸை நட்டத்திரப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கும்படி தமிழ்மணம் நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைக்கிறேன்.

(பொன்ஸ் நீங்க கொடுத்த காசுக்கு இவ்வளவு போதும் தானே?)

பொன்ஸ்~~Poorna said...

//அறிவாளிகள் ஓரே மாதிரி சிந்திப்பார்கள் இல்லையா? //
:))) உஷா, கவிதை எப்படின்னு சொல்லவே இல்லையே..

சிவா,
// தொலைந்து போகிற உருவமா அது?:)))//
:)))

// யாருக்கு உங்களுக்கா, இல்ல அமெரிக்காவில் உள்ளவர்களுக்கா? //
No comments :)))

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே,
தேவைக்காகத் தேடத் தொடங்கிய மனிதன், அறிவுக்காகவும், தெளிவுக்காகவும் தேடத் தொடங்கி வெகு நாள் ஆகிவிட்டதே? கீழே விழுந்த ஆப்பிளைத் தேவைக்காக எடுத்து சாப்பிட்டுவிட்டுப் போகாமல், தெளிவுக்காக அதன் மேல் கேள்வி கேட்டதால் தானே புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி அறிந்தோம்?
இன்றைய கேள்விகள் தெளிவுக்காக.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி ராபின்,
//ஆற்றலரிசி பொன்ஸை நட்டத்திரப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கும்படி தமிழ்மணம் நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைக்கிறேன்.//
இப்படி எல்லாம் என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது.. :)))

manasu said...

கேள்விப் பிரச்சனை வலை மக்களை ரெம்பவே பிடிச்சு ஆட்டுதுப்பா...

அண்ணன் வா.ம வலைப் பக்கம் அடிக்கடி போனதால் வந்த விளைவா?

நுனிப்புல்லுக்கு சொன்னது.

"தேடுவதை நிறுத்திய போது
தேடியது கிடைத்தது"


//அரைவட்ட அறையின்//
1.அது ஏன் அரைவட்டம்?

2.வெண்பாவில் இருந்து புதுக்கவிதைக்கு மாறியது எப்போது?

//பதிலுக்குப் பின்னும்//
3.பதிலுக்கு பின்னால் தான் கேள்வி இருக்குமா?


//ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன்//
4.விண்மீன் ஒன்று ஒன்றாய்த் தான் கண்சிமிட்டுமா?

//தொலைந்து போகிறேன்//
5.தொலைந்து போனது எங்கே?

இந்த கேள்வி போதுமா, இன்னும் கேட்கனுமா?

நிலா said...

பொன்ஸ்

நல்லா இருக்கு...

//பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்...//

எனக்குத்தான் இப்படின்னு நினைச்சேன்:-)

VSK said...

நானும் அது சரி என்றுதானே சொல்லியிருக்கிறேன்!!

//தொலைத்திருந்தால் தேடலாம்.
தேவையெனில் தேடலாம்.
"தெரிந்து கொள்ளத் தேடலாம்"-ஆனால்
கேள்விக்காக தேடுதல் எபோதுமே
சரிவருவதில்லை!//

கேள்விக்காக தேடுதல்தான் சரியாவதில்லை எனச் சொன்னேன்!

கேள்விகளில் விடைதேடித் தொலைந்து போகிறேன் எனச் சொன்னதால் அதைச் சொன்னேன்.

தெளிவு நோக்கிய தேடல் எனில், புறக் கேள்விகள் கேட்க மாட்டார்.
தொலைந்தும் போக மாட்டார்.

Thekkikattan|தெகா said...

மிக நிசர்சனமான வார்த்தைங்க பொன்ஸு... கேள்வியில் தான் வாழ்வே தொடங்குகிறது.

கேள்விகள் கேட்பது தேக்குறும் பொழுது, வாழ்வின் ஓட்டமும் தேக்குறுகிறது, இல்லையா?

தேடலே கேள்வி... அதுவே விரு விருப்பமான வாழ்வும் கூட...

ஆனால் உங்களுக்காக "ஓஷொவின்" கருத்தொன்று...

ஒவ்வொரு கேள்விக்கும்
விடையைக் காண முற்படல்
அவசியம் தானா?

விடையைக் காண்பதென்பது
கேள்வியைக் கொன்று விடுவதற்குச்
சமமில்லையா?

வேண்டாம்,
இதுபோன்ற குரூரத்தில் இறங்காதே.

கேள்வியே இவ்வளவு அன்பாக உள்ளது.
அதுவே போதுமானது.
அதனூடேயே வாழ்.

பைத்தியமே!
விடைகளோடு வாழ்வதும்
ஒரு வாழ்வாகுமா?

இறந்து விடுவதற்கு மறுபெயரே அது.

....விடையைத் தேடதே - கேள்வியுடனேயே வாழ்.

நாகை சிவா said...

//இன்றைய கேள்விகள் தெளிவுக்காக//
தெளிய தெளிய அடிச்சா எல்லாம் தெளிவாகி விடுமும் நம்ம சந்தோஷ் சொல்லுறார்.முடிந்தால் முயற்சித்து பார்க்கவும். :))))

//பார பட்சமில்லாம கேக்குறீங்க நாகையாரே! //
நன்றி தளபதியாரே! நீங்க எல்லாம் சப்போட்டுக்கு இருக்கீங்க என்ற தைரியம் தான்.

//(பொன்ஸ் நீங்க கொடுத்த காசுக்கு இவ்வளவு போதும் தானே?) //
மனதுக்குள், கோய்லா, குடுத்த காசுக்கு மேல பீல் பண்ணுறானே.........

//No comments :))) //
:(((( முதல் முறையாக உங்களிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கும்படி ஆயிற்றே. :((((

கோவி.கண்ணன் said...

ஒரு தத்துவம் .. தப்பிதம் ஆக இருந்தால் உட்டுடுங்க

கேள்வி என்பது சலனம் அதாவது எழும் அலை !
பதில் என்பது சலனமற்ற நிலை !
பதில் கிடைக்காத கேள்விகள் என்பது அலையும் அலைகள் !

சலனமற்ற நிலையிலிருந்து சலனம் எழுந்து அடங்குவது போல கேள்வி -பதில்கள் இணைந்துள்ளன.

- சுவாமி கோவி சித்தர்

பொன்ஸ்~~Poorna said...

மனசு,
//அண்ணன் வா.ம வலைப் பக்கம் அடிக்கடி போனதால் வந்த விளைவா?//
ஹி ஹி.. உங்கள் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டிய முகவரி பேசலாம் @ pesalaam.blogspot.com

//1.அது ஏன் அரைவட்டம்?//
இதை எழுதின அன்னிக்கு ஒரு அரைவட்ட அறைல தான் உட்கார்ந்திருந்தேன்.. அதான்..

//2.வெண்பாவில் இருந்து புதுக்கவிதைக்கு மாறியது எப்போது?//
அது ரொம்ப நாளாச்சு.. இங்கேர்ந்து பாருங்க.. புரியும் :) ஆனா, நாங்க வெண்பாவுக்கும் ஆதரவு தருவோம்ல..

//3.பதிலுக்கு பின்னால் தான் கேள்வி இருக்குமா?//
இருந்துச்சே.. இருந்துச்சே!!

// 4.விண்மீன் ஒன்று ஒன்றாய்த் தான் கண்சிமிட்டுமா?//
அப்படித் தான் நினைக்கிறேன்.. தெரியலை.. யாராச்சும் ஸயன்ஸ் படிச்சவங்க இருந்தா கேட்கலாம் :)

//5.தொலைந்து போனது எங்கே?//
கேள்விக்கு நடுவுல தான்..

//இந்த கேள்வி போதுமா, இன்னும் கேட்கனுமா? //
எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டோமா?

பொன்ஸ்~~Poorna said...

நன்றி நிலா,
//எனக்குத்தான் இப்படின்னு நினைச்சேன்:-) //
எல்லாருக்கும் அப்படித் தான், புதுக் கேள்வியைப் பார்த்தும் பதில் தேட வேணாம்னு முடிவு பண்ற வரை :)

//கேள்விக்காக தேடுதல்தான் சரியாவதில்லை எனச் சொன்னேன்!//
எஸ்கே, கேள்வி வேற எப்படி வருதுங்கறீங்க? அதென்ன புறக் கேள்விகள்? எல்லாமே கேள்விகள் தானே? புறமென்ன அகமென்ன? ஒரு பொருளைத் தேடிப் போகும்போது வரும் கேள்விகள்..

பொன்ஸ்~~Poorna said...

//கேள்விகள் கேட்பது தேக்குறும் பொழுது, வாழ்வின் ஓட்டமும் தேக்குறுகிறது, இல்லையா?//
கரெக்ட் தெகா, ஆனாலும் நம்ம எல்லாரும் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் கேள்விகளோட வாழ ஆரம்பிச்சிடுறோம்.. இல்லைன்னா, சமூகம் ஒரு நார்மல் மனிதனா நம்மைப் பார்க்காதே!!

//நன்றி தளபதியாரே! நீங்க எல்லாம் சப்போட்டுக்கு இருக்கீங்க என்ற தைரியம் தான். //
ஒரு சின்னப் பொண்ணை இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே.. அங்க ராபினை ஏன் விட்டுட்டீங்க?.. இந்த லிஸ்ட்ல தலைமைப் பதவி கொடுத்தாக் கூட விரும்பி ஏத்துக்குவாரே!!
//முதல் முறையாக உங்களிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்கும்படி ஆயிற்றே. :(((( //
என்ன சிவா, பதில் சொல்ல முடியாத படி மடக்கிட்டீங்கன்னு நானே வருத்தப் பட்டுகிட்டு இருக்கேன்.. நீங்க என்னன்னா, இதுக்குப் போய் பீல் பண்ணிகிட்டு :)

ஓஷோ சொல்றதைக் கேட்குறதா, கோவிச் சித்தரைப் படிக்கிறதான்னு கன்பூசன் ஆப் இந்தியா ஆய்போச்சேப்பா.. :)

VSK said...

வாதத்திற்காக கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கேள்விகளில் விடை தேடித் தொலைந்து போகிறேன் என்று சொன்னதால், அப்படிச் சொன்னேன்.

இது ஒரு தொடர் வட்டம்!
கேள்விக்காகத் தேடல்; தேடலில் இருந்து கேள்விகள் என வந்து கொண்டே இருக்கும்.
இதிலிருந்து விடுபட, தொலைந்து போன இடம் எது என்பதை மீண்டும் நினைவு படுத்த, சற்று ஒதுங்கி, உள்ளே கேட்டால் விடை விரைவில் கிடைக்கும்.
அதைத்தான் அகம் புறம் எனச் சொன்னேன்.
விட்டால், எல்லாரும் மனிதர்கள்தானே, இதில் ஆணென்ன, பெண்ணென்ன என்று கூடக் கேட்பீர்கள் போலிருக்கிறதே!
நிறைய வேறுபாடுகள் உண்டு, பொன்ஸ், அகத்துக்கும், புறத்துக்குமிடையே.
நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
மற்றதையும் போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்!

பொன்ஸ்~~Poorna said...

//வாதத்திற்காக கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.//
வாதத்துக்காக இல்லை.. நிஜமா புரியாததினால் கேட்டேன்..

//இதிலிருந்து விடுபட, தொலைந்து போன இடம் எது என்பதை மீண்டும் நினைவு படுத்த, சற்று ஒதுங்கி, உள்ளே கேட்டால் விடை விரைவில் கிடைக்கும்.
//
ம்ம்ம்.. சில சமயம், சில வட்டங்களில் ஆரம்பம் தெரியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனினும் இந்த என் கேள்விகளுக்கான விடை இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.

//மற்றதையும் போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்!
//
உண்மைதான். கற்றது கைம்மண்ணளவு.

நாமக்கல் சிபி said...

ம்ம்.. தமிழ் வகுப்புகள் எடுப்பது போய் இப்போ ஞான வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்து விட்டார் பொன்ஸ்!

பொன்ஸ்~~Poorna said...

சிபி, நம்ம எங்க ஞான வகுப்பு எடுக்கிறது?!! ஏதோ எஸ்கே, தெகா எல்லாம் சொல்றாங்க, நான் கேட்டுக்கிறேன்...
ஞானமெல்லாம் இருந்தா இந்த மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருப்பேன்?!! ம்ஹும்:)

Geetha Sambasivam said...

ஒரு கேள்விக்கு எத்தனை விதமான பதில்!

பினாத்தல் சுரேஷ் said...

கேட்டிடு.. கேட்டிடு

கேள்விகள் அழியும்வரையும்
விடைகள் தொலையும்வரையும்..

பதில்களின் விஸ்தீரணம்
பதிலுக்குப் பதில்
கேள்விகளை அளித்தே
ஓய்ந்திடும் வரையில்..

விரலடி வண்டாய்
பதில்களும்,
பதிலறியாக்கேள்விகளும்
விடுபடத் துடித்து
விடைபெறும் வரையில்.

கேள்விகள் குறித்த
ஆய்வுகள் இன்னும்
வினாக்களை விருந்தளித்து
முடிந்தாலும்

உள்ளே புகுந்து
குத்துக்களைக் கணித்திடும்
உயர்ந்த உள்ளங்கள்

கேள்வியை சமனப்படுத்தாவிட்டாலும்
உயரவே வைத்திருக்கும்..

புரட்சிக்கவி பினாத்தலார்.

(ஆமா, ஆஸீப் ஊருக்குப்போறேன்னு சொன்னா இவ்வளவா துளிர்த்திடும்? அவர் சீடன் இன்னும் பதிவுகளைப்பாத்துகிட்டுதான் இருக்கான்:-))

நாமக்கல் சிபி said...

//நம்ம எங்க ஞான வகுப்பு எடுக்கிறது?!! ஏதோ எஸ்கே, தெகா எல்லாம் சொல்றாங்க, நான் கேட்டுக்கிறேன்...
ஞானமெல்லாம் இருந்தா இந்த மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருப்பேன்?!! ம்ஹும்:)//

சொல்லிக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறை! மாணவர்களிடம் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு, அவர்களிடமே பதில் வரவழைத்து, அவர்களுக்கு புரியச் செய்தல்.

பொன்ஸ்~~Poorna said...

கீதா, நீங்க என்ன குத்தறீங்கன்னு புரியலியே!!! :))

கவிப்பகைவனின் தலைமைச் சீடன் பினாத்தலாரே,
நீங்க ஆபீஸ் போயிருப்பீங்கன்னு ஒரு தைரியத்துல தானே எழுதினேன்.. இப்படி இங்க தான் இருக்கீங்கன்னு தெரியாம போய்டுச்சே!! :)))

உங்க கவுஜ(?!) டா வின்சி கோட் மாதிரி இருக்கு.. பாதி புரியுது.. பாதி புரியலை.. கருப்பாயி மாதிரி புலம்ப விட்டுட்டீங்களே :)))

நாமக்கல் சிபி said...

//உள்ளே புகுந்து
குத்துக்களைக் கணித்திடும்
உயர்ந்த உள்ளங்கள்//

புரட்சிக் கவியே!
எந்த குத்தைப் பற்றி சொல்கிறீர்?
உள் குத்தா அல்லது வெளி குத்தா?

உள்ளே புகுந்து என்றதால் உள் குத்து என்று எடுத்துக் கொள்ளலாமா?

நாகை சிவா said...

கீதாக்கா, ஏதோ கல்யாணத்துக்கு போறேன், செவ்வாய்கிழமை வரைக்கு வரமாட்டேன் சொன்னீங்க.... என்னா ஆச்சு.....

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ் - என்ன நீ இன்னும் அடிப்படைக் கவுஜர் குணத்தையே இன்னும் கத்துக்கலையே!!

கவிதைக்குப் பொருள்
சொல்வது
கற்றவர் வேலை..

கவிஞனுக்கு தொழில்
கவிதை படைப்பதுவே..

கருப்பாயி ரேஞ்சுக்கெல்லாம் திங் பண்ணக்கூடாது.. உடம்புக்கு ஆவாது.. எந்தக்காரணம் முன்னிட்டும் கருத்தோட கவிதை எழுதமாட்டேன்னு செத்துப்போன என் பாட்டிக்கு எச்சி உமிஞ்சு சத்தியம் பண்ணியிருக்கேன்!

நாமக்கல் சிபி said...

//விண்மீன் ஒன்று ஒன்றாய்த் தான் கண்சிமிட்டுமா?
//

ஆமாம் மனசு! வாரம் ஒன்றாக!

நாமக்கல் சிபி said...

தெகா!

//ஒவ்வொரு கேள்விக்கும்
விடையைக் காண முற்படல்
அவசியம் தானா?//

கரெக்ட்தான் தெகா! பரீட்சை பேப்பர் திருத்தும்போது நம்ம பள்ளிக் கூட வாத்தியார்களுக்கு இது தெரிவதே இல்லை. பதில் இல்லைன்னா மர்க்கை குறைச்சு போட்டு பெயிலாக்கிடறாங்க!


//
விடையைக் காண்பதென்பது
கேள்வியைக் கொன்று விடுவதற்குச்
சமமில்லையா?
//
அந்த கொஸ்டீன் பேப்பர் எவ்வளவு செலவு செஞ்சி பிரிண்ட் பண்ணுறாங்க. நாம் கேள்விகளைக் கொன்னு அதை வீணாக்கலாமா?

//
வேண்டாம்,
இதுபோன்ற குரூரத்தில் இறங்காதே.

கேள்வியே இவ்வளவு அன்பாக உள்ளது.
அதுவே போதுமானது.
அதனூடேயே வாழ்.

பைத்தியமே!
விடைகளோடு வாழ்வதும்
ஒரு வாழ்வாகுமா?

இறந்து விடுவதற்கு மறுபெயரே அது.
//

ஐயோ! தெகாவுக்கு தெரிஞ்ச மாதிரி இங்க யாருக்கும் தெளிவா தெரிய மாடேங்குதே!

பொன்ஸ்~~Poorna said...

சிபி,
இது கோவி வாரமா? பொன்ஸ் வாரமா? கவிதை படிக்க வர்றவங்க எல்லாரையும் கேள்வி மேல கேள்வி போட்டுத் தாக்கறீங்க.. நீங்க தான் உண்மையிலேயே கேள்விகளின் இடையில் இருக்கீங்க :))

சிவா, உங்க கிட்டேர்ந்து தப்பிக்க இப்படி எல்லாம் சொல்லலாமா?:)

//பொன்ஸ் - என்ன நீ இன்னும் அடிப்படைக் கவுஜர் குணத்தையே இன்னும் கத்துக்கலையே!!//
அதையேன் கேக்கறீங்க சுரேஷ், முத்துவின் நாயைப் பத்தி பேசிகிட்டிருந்த வாரத்துல, நான் எத்தனை கேட்டும் ஆசிப் என்னை கவுஜ மன்றத்தின் அடிப்படை உறுப்பினராக் கூட சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. என்ன பண்ண.. அதான் இதுக்கெல்லாம் பதில் தேடி கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன் :)

Vaa.Manikandan said...

நல்ல கவிதை பொன்ஸ்.

இந்த 'போல்' கவிதையின் அச்சை முறிப்பதாக இருக்கிறது. என் பார்வையில்.

நாமக்கல் சிபி said...

//இது கோவி வாரமா? பொன்ஸ் வாரமா?//

கோவி வாரம்தான் பொன்ஸ்!

:))

நாமக்கல் சிபி said...

//இந்த 'போல்' கவிதையின் அச்சை முறிப்பதாக இருக்கிறது. என் பார்வையில்//

:))

அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டிகளாய்,
பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்...

என்று வைத்துக் கொள்வோமா வா.ம.னாரே!

பொன்ஸ்~~Poorna said...

சிபி,
மணி ரெண்டு போலையும் சொல்றாரு..

இருளில்
ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன் என
முளைத்து வரும்
கேள்விகளில்
விடை தேடித்
தொலைந்து போகிறேன்

நாமக்கல் சிபி said...

//மணி ரெண்டு போலையும் சொல்றாரு.. //

அது சரி!

நமக்கு "சௌத் போல்" மட்டும்தான் கண்ணுல பட்டது.

Vaa.Manikandan said...

நீங்க எப்படி வேணும்னாலும் வெச்சுக்குங்க...உங கூட மட்டும் வாய் கொடுக்க மாட்டேன்...இந்த தமிழ்மணத்துல நீங்க மட்டும் தான் எனக்கு பார்த்திபன். :)

நாமக்கல் சிபி said...

//நீங்க எப்படி வேணும்னாலும் வெச்சுக்குங்க...உங கூட மட்டும் வாய் கொடுக்க மாட்டேன்...இந்த தமிழ்மணத்துல நீங்க மட்டும் தான் எனக்கு பார்த்திபன்//

:))

அட என்னங்க மணிகண்டன்,
நீங்க சொன்ன மாதிரி (சீரியஸாத்தான்) கவிதையை மாத்தி இருக்கோம்ல, அதை பத்தி கருத்து சொல்லாம!

Thekkikattan|தெகா said...

ச்சிபி,

திருப்பி போட்டு "கிச்சு கிச்சு" ;-) மூட்டினதை "ஒஷொவிற்கே" அர்பணித்து விடுவோம்.

எனக்குத் தெரிஞ்சா நான் ஏங்க...இங்கன ஏங்கெ ஏங்கெ வந்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமின்னு சேகரிச்சுக் கிட்டு இருக்கிறேன்.

சிப்பிக்குள் முத்துவான... "சரவெடி நாமக்கல்லார்" இருக்கும் பொழுது, மகிழ்வுக்கு என்ன குறை அதுவே ஒரு ஞானம் தானே? என்ன ஞான் சொல்றது....

Thekkikattan|தெகா said...

ஆன்மாவிற்கு ஆண் பால் - பெண் பால் வித்தியாசமெலாம் உண்டா?

theka.

பெருசு said...

கேள்வி+பதில்=வாழ்க்கை
வாழ்க்கை-பதில் =கேள்வி
வாழ்ககை-கேள்வி = பதில்

இதுல எது கேள்வி எது பதில் அப்படின்னு தேடறதுதான நம் வாழ்க்கை.

கேள்வி கேட்டு பதில் பெறுவதைவிட பதில்கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறுவதும் சரியா.

கேள்வி கேட்பவருக்கே பதில் தெரிந்திருந்தாலும்,மறுகேள்வி கேட்கும்போதுதான் சரியான பதில்
கிடைக்கும் என்பதும் சரியா.

ஒரு கேள்விக்கு பதில்கள் பல இருக்கலாம் என்பதும்
பல பதில்களுக்கு கேள்வி ஒன்றாக இருக்க முடியாது
சரியா, என்பதுதான் என் கேள்வி.

ஐயோ எனக்கே குழம்பிருச்சே.

வெற்றி said...

பொன்ஸ்,

//அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டி போல்,//

இந்த உவமை புரியவில்லையே? சற்று விளக்கம் தர முடியுமா?

Amar said...

அடடா, பொன்ஸக்கா பதிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிபோச்சு..

//இருளில்
ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன் போல்
முளைத்து வரும்
கேள்விகளில்
விடை தேடித்
தொலைந்து போகிறேன் //

எதுக்கு தேடனும்?
பேசாம நல்லா டின்னர் முடிச்சிட்டு தூங்குங்க.

ramachandranusha(உஷா) said...

நீங்க எப்படி வேணும்னாலும் வெச்சுக்குங்க...உங கூட மட்டும் வாய் கொடுக்க மாட்டேன்...//
தர்க்க சாஸ்திரத்தில் எம் சிஷ்யை இந்தளவு தேறிவிட்டாளா? மணியே பாராட்டும் அளவு:-)))))))))

கைப்புள்ள said...

பொன்ஸ்!
எல்லாரும் என்னன்னமோ கருத்து சொல்றாங்க. எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. அரைவட்ட அறையை நான் பாக்காததுனாலா? இல்ல கேள்விக்கெல்லாம் விடை எல்லாம் எப்பவும் தேடாததுனாலா? கோனார் நோட்ஸ் குடுத்தீங்கனா நால்லாம் புரிஞ்சுக்குவேன்.
:)

பொன்ஸ்~~Poorna said...

பெருசு.. நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு.. நீராச்சு.. உம்ம கேள்வி பதிலாச்சு!!

வெற்றி, இதை விளக்க முடியுமா என்று புரியவில்லை.. பொதுவாக சுலப மொழி நடையில் இருக்கும் இது போன்ற கவிதைகளை விளக்கும் போது அதன் ஆன்மா காணாமல் போய் விடுகிறது.. இருப்பினும் முயல்கிறேன்.. கொஞ்சம் பொறுக்க வேண்டுகிறேன் :)

பொன்ஸ்~~Poorna said...

//பேசாம நல்லா டின்னர் முடிச்சிட்டு தூங்குங்க//
ஓகே சமுத்ரா.. அன்னிக்கு கவிதை எழுதிட்டு, ஒரு வெட்டு வெட்டிட்டு ஒரே தூக்கம் தான்.. (அடுத்த நாள் ஏன் லேட்டுன்னு ஆபீஸ்ல கேள்வி... என்ன பண்ண.. கேள்வி துரத்துது!!!) :)

//தர்க்க சாஸ்திரத்தில் எம் சிஷ்யை இந்தளவு தேறிவிட்டாளா? மணியே பாராட்டும் அளவு//
உஷா குருஜி.. அது உங்க சிஷ்யைக்குச் சொன்னதில்லை.. சிபிக்கும் மணிக்கும் ஒரு டாம் அன்ட் ஜெர்ரி உறவு இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் இப்படித் தான் எங்க சந்திச்சாலும் கொஞ்ச நேரம் பாசத்தோட அளவளாவிட்டுத் தான் போவாங்க.. :) மத்தபடி, நானாவது தர்க்கமாவது.. அதெல்லாம் இனிமேதான் கத்துக்கணும் :)

//எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. //
அட போங்க தல, உங்களுக்குப் புரியாமயா? ஆண்டாள் பாசுரமும், பாரதியார் பாடலும்னு புகுந்து புறப்படுறீங்க?!! சும்மா கேலி பண்ணாதீங்க :)

கைப்புள்ள said...

//ஆண்டாள் பாசுரமும், பாரதியார் பாடலும்னு புகுந்து புறப்படுறீங்க?!! சும்மா கேலி பண்ணாதீங்க :)//

அட மெய்யாலுமே புரியலைமா
:)

Vaa.Manikandan said...

பாஸ் சிபி,

பொதுவா உவமை படுத்தறது இல்லாம இருந்தா கவிதை நல்லா இருக்கும்..
அதுக்காக உவமையே இருக்க கூடாதுன்னு சொல்ல வரலை.
as I said in my first comment itself, its a good poem.

அதுக்கு அப்புறம் மாத்தி, பிரிச்சு எதுக்கு? விடுங்க... :)

நாம ரெண்டு பேரும் டாம் அன்ட் ஜெர்ரியாமாம்...சொர்ணக்கா சொல்லிட்டாங்க :)

(//I wanted to write this in tamil. asusual font problem. :(//
எம் கடன் பணி செய்து கிடப்பதே.. எமது கவித் துரோணருக்காக, இந்த ஏகலைவி, இது கூட செய்யமாட்டாளா? தமிழ்ப் படுத்திட்டேன் தலைவா :) )

நாகை சிவா said...

//naama rendu perum tom and jerry aamaa...sornakka sollitaanga :) //
சொர்ணாக்காவா........
விடு ஜுட்.....

ALIF AHAMED said...

//
எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது. அரைவட்ட அறையை நான் பாக்காததுனாலா? இல்ல கேள்விக்கெல்லாம் விடை எல்லாம் எப்பவும் தேடாததுனாலா? கோனார் நோட்ஸ் குடுத்தீங்கனா நால்லாம் புரிஞ்சுக்குவேன்.
//

எனக்கும் தான் ...... நான் உள்ள வர்ரதும் என்ன எழுதுறதுனு தெரியாம வெளிய போறதுமாவே அறுவதை(60) தாண்டி போயிட்டு......

நாமக்கல் சிபி said...

//சிபிக்கும் மணிக்கும் ஒரு டாம் அன்ட் ஜெர்ரி உறவு இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் இப்படித் தான் எங்க சந்திச்சாலும் கொஞ்ச நேரம் பாசத்தோட அளவளாவிட்டுத் தான் போவாங்க.. //

:))

இதுல யாரு டாம், யாரு ஜெர்ரின்னும் நீங்களே சொல்லிட்டா நல்லது.

நாமக்கல் சிபி said...

//சொர்ணாக்காவா........//

புதுப் பேரா இருக்கே!

Unknown said...

உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் 42

வெற்றி said...

பொன்ஸ்,

//வெற்றி, இதை விளக்க முடியுமா என்று புரியவில்லை..//


அரைவட்ட அறை என்றால் என்னவென்று சொல்லுங்கள். இச் சொல்லுக்குப் பொருள் தெரிந்தால் கவிதை புரிந்துவிடும். எனக்கு இச்சொல் தான் புரியவில்லை. இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்படவில்லை. மிக்க நன்றி.

கவிதா | Kavitha said...

பொன்ஸ், தொலைந்து போவதை பற்றி நான் கூட எழுதி எழுதி தொலைத்து தான் மிச்சம்..இன்னும் முடிக்கவில்லை.. நல்ல கவிதை.. நல்ல சிந்தனைஓட்டம்..

Chellamuthu Kuppusamy said...

அரை வட்டம், கம்பி, விண்மீன்கள்.. பொன்ஸுக்கு வாழ்வு வந்து அர்த்த ராத்திரில குடை பிடிக்க்றீங்களோன்னு அன்னிக்கே சொல்லனும்னு நினைச்சேன்.

பொன்ஸ்~~Poorna said...

தல, மின்னல், விடுங்க.. ஏதோ அப்போ தோணிச்சு,.. எழுதிட்டேன்,,இப்படி ஆளாளுக்கு விளக்கம் கேட்டா என்ன பண்ணுறது? :)

அதாவது சிபி, டாம் ஜெயிக்கிறபோது, நீங்க டாம்.. ஜெர்ரி ஜெயிக்கும் போது நீங்க ஜெர்ரி.. எப்படி? ஓகேவா? சங்கத்து மானத்தைக் காப்பாத்திட்டேனா?

செல்வன், 42 படிச்சேன்.. அது பத்தி இன்னும் நிறைய கேட்கணும்.. வரேன்..

பொன்ஸ்~~Poorna said...

வெற்றி, அரைவட்டம் என்றால் Semicircle. Semi Circular Room பார்த்திருக்கீங்களா? அதான் கான்சப்ட்.. இப்போ புரியுதான்னு சொல்லுங்க..

கவிதா, ரொம்ப நாளாச்சு நீங்க இந்தப் பக்கம் வந்து.. கவிதாவே வந்து பாராட்டணும்னா, இந்தக் கவிதை ஓரளவுக்கு ஒழுங்காத் தான் வந்திருக்குன்னு நினைச்சிக்கிறேன் :)

குப்பு, நேர்குத்துக்கு பதில் குத்தா? கவிதை அல்பமா, நான் அல்பமா? :))))

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள, எக்கசக்கமா எழுதி குவிச்சுடிங்க போல இருக்கே அரியர்ஸ் எக்சாம் போல எல்லாம் ஒன்னு ஒன்னா படிச்சிட்டு வரேன் இருங்க. கவிதை நல்லா வந்து இருக்கு.

//பதில் தேடிப் பிடித்தால்,
ஒவ்வொரு
பதிலுக்குப் பின்னும்
ஒளிந்து சிரிக்கும்
மற்றுமொரு கேள்வி//

இதுல ஒரு தத்துவமே ஒளிஞ்சு இருக்கு , கேள்வி மட்டுமே சாஸ்வதமானது, பதில் மாறிக்கிட்டே இருக்கும்.எனவே தேடலின் முடிவில் நாம் காணும் பதில் தற்காலிகமான ஒன்றே. இது வாழ்கையில் எல்லாருக்கும் நடக்கும் ஆனால் கேள்விக்கான பதில் மாறிவிட்டது தெரியாமல் நாம் கடந்து விடுகிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வவ்வால்,

// கேள்வி மட்டுமே சாஸ்வதமானது, பதில் மாறிக்கிட்டே இருக்கும்.எனவே தேடலின் முடிவில் நாம் காணும் பதில் தற்காலிகமான ஒன்றே.//

ம்ம்ம்... தேடல்.. இது தான் இந்தக் கவிதைக்கு நான் முதல்ல வச்சிருந்த பெயர்.. அப்புறம் யோசிச்சி மாத்திட்டேன்.. சரியா புரிஞ்சிட்டதுக்கும், உங்க வாயால கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கும்... எப்படி.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலையே!!! :)

தருமி said...

வழக்கமா இந்த 'கவுஜ'க மட்டும்தான் புரியாது. அதனாலேயே அந்தப் பக்கம் போறதில்லை. இங்க என்னடான்னா, பின்னூட்டங்கள்கூட எதுவும் 'பிரிய'மாட்டேங்குது...எலாமே நம்ம உசரத்துக்கு மேஏஏஏஏலே இருக்கு 'இருளில்
ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன் போல் ..'!
:)

நாமக்கல் சிபி said...

//குப்பு, நேர்குத்துக்கு பதில் குத்தா? கவிதை அல்பமா, நான் அல்பமா?//

அம்பயர்கள் மற்றும் தேர்ட் அம்பயர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

பாவூரான் said...

கதவைத் திறந்து உள்ளே சென்றால், அங்கே திறக்கப்படாத பல கதவுகள்.

ஒவ்வொரு கதவாய்த் திறந்து பார்த்தால் மேலும் மேலும் பல திறக்கப்படா கதவுகள்.

கதவு திறந்ததே, திறக்கப்படாத பல கதவுகள் உள்ளன எனக்காட்டத்தானோ?

பொன்ஸ்~~Poorna said...

தருமி, விடுங்க ப்ரோபஸர்.. :))) வந்ததுக்கு நன்றி :)

சிபி, இது ஓல்ட் ஸ்டோரிம்மா.. நாங்களே தீர்த்துட்டோம் ;)

பாவூரான், //கதவு திறந்ததே, திறக்கப்படாத பல கதவுகள் உள்ளன எனக்காட்டத்தானோ?// உண்மைங்க....