Tuesday, September 26, 2006

அட! அடுத்தது அக்டோபர் மாதம்..

"அடங்கவே மாட்டியா" என்று கேட்பதற்கு முன்னால், எல்லாக் கிழமையும் ஒரு சுற்று வந்துடுச்சே.. அதான் மாதத்துக்குப் போக வேண்டியதாப் போச்சு.. இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க நினைக்கிறவங்க, கடைசி வரை படியுங்க பார்க்கலாம்:

  • 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வந்தால் அதை நமது ஆவிம்மணிக்குரிய நாளாகக் கருதுகின்றனர் அமெரிக்கர்கள்( ஐரோப்பியர்கள்?). ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா? அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?

  • துப்பறியும் நிபுணர் வேம்பு, ராதிகாவிடம் அவரது குழந்தைகள் பற்றிக் கேட்டார். "எனக்கு அன்னம், ஆதிரை, இனியான்னு மூணு பொண்ணுங்க... அவங்க எல்லார் வயதின் பெருக்குத் தொகை 36. கூட்டுத் தொகையோ, எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டு எண். "

    வேம்பு பக்கத்துவீட்டில் போய் பார்த்துவிட்டு வந்து ராதிகாவிடம், "இன்னும் முழுதாகச் சொல்லவில்லை நீங்கள்" என்றார். "ஓ, மறந்துட்டேன், என் பெரிய பொண்ணு பள்ளிக்குப் போயிருக்கா" என்றாள் ராதிகா.

    "அப்படியானால் சரி" என்றார் வேம்பு. அவர்களது வயது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

  • அருகில் இருக்கும் படத்திலிருந்து மூன்று தீக்குச்சிகளை எடுத்தபின் ஒரே பரப்பளவிலான மூன்று முக்கோணங்கள் மிஞ்சவேண்டும், அந்த மூன்று முக்கோணங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் இருக்க வேண்டும். முடியுமா?



  • ராமு அவன் டியுசன் வாத்தியார் சரவணனைப் பார்க்க இந்த மாதம் போயிருந்தான். சரவணனுக்கு மிக்க மகிழ்ச்சி, "அட, ராமுவா, வா! வா! ஆச்சரியம் பாரு, இன்னிக்குன்னு பார்த்து என்னோட பழைய மாணவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இப்போ நீ வருவதற்கு முன்னால் கூட மூன்று வேறு மாணவர் குழுக்கள் வந்து போச்சு. அதுல பாரு, ஒவ்வொரு குழுவிலுமிருந்த மாணவர் எண்ணிக்கை வேற வேற. எல்லாக் குழுவின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பெருக்கினால், அதன் பெருக்குத் தொகை இன்னிக்கு தேதி தான். எங்கே, ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தாங்கன்னு சொல்லு பார்ப்போம்.." என்றார்.

    "இது ஏதடா, இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கே" என்று நினைத்துக் கொண்டாலும் கணக்குப் போடத் தொடங்கினான் ராமு. தேதியைப் பார்த்தபோது, நான்கு வெவ்வேறு பதில்கள் சாத்தியம் என்று தெரிந்தது. சரவணன் சாரிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்டதற்கு சார் "இல்லை" என்று சொல்லிவிட்டார். இதைச் சொன்னது தான் தாமதம், நம்மாள் பட்டென்று விடை சொல்லிவிட்டான்.

    ராமு சரவணனைப் பார்க்கப் போனது என்ன தேதி? சரவணன் சார் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன? சரவணன் சாரிடம் ராமு கேட்டது என்ன கேள்வி?

[பிற்சேர்க்கை: இந்தப் புதிரில் குழு என்பதை batch என்ற பொருளில் படிக்கவேண்டும்..]


தலைப்புக்கு காரணமா? என்னங்க நீங்க? இன்னுமா அதை மறக்கலை? ;)

அதான் தேதியில் ஆரம்பிச்சி மாசத்துல முடிச்சிருக்கேனே!

25 comments:

இராம்/Raam said...

யக்கோவ் நானும் நாளைக்கி இந்த மாதிரி ஒரு பதிவுப் போட்டுறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ராதிகாவின் குழந்தைகளின் வயது இதில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

9 4 1 = 14, 36
12 3 1 = 16, 36
4 3 3 = 10, 36
6 6 1 = 13, 36
18 2 1 = 21, 36
3 6 2 = 11, 36
2 9 2 = 13, 36
1 1 36 = 38, 36

இதில் 13 பக்கத்து வீட்டு எண்ணாக இருந்தால் மட்டுமே குழம்ப வாய்ப்பிருக்கிறது ஆகவே 9 2 2 இல்லை 6 6 1 ஆகத்தான் இருக்க வேண்டும்.

பெரிய பெண் என்று ஒருமையில் அழைத்ததால் 9 2 2 தான் வயதாக இருக்க வேண்டும்.

சரியா இது?

ஜயராமன் said...

ரெண்டு விடை பிடித்தேன். பெண்கள் வயசு - 6, 3, 2.

நெருப்புகுச்சிகளில் வெளியே உள்ள சக்கரத்தில் ஒவ்வொரு குச்சியை மாற்றி மாற்றி எடுக்க வேண்டும்.

வாத்தியாரை மடக்க யோசித்துக்கொண்டிருக்கேன்

நல்ல பதிவு. எங்கேருந்து சுட்டீங்க என்றுதான் தெரியவில்லை. உங்க கம்பனி டெஸ்டுல கேட்டாங்களோ?

நன்றி

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன்,
ராதிகாவின் மக்கள் பற்றிய உங்கள் விடை சரி. மற்றவை ஏதும்?

ஜயராமன்,
அதே கேள்விக்கு உங்கள் விடை தவறு. நீங்கள் சொல்லும் எண்கள் மட்டுமே விடையாக இருக்கும் பட்சத்தில் பக்கத்து வீட்டு எண்ணைப் பார்த்தவுடன் வேம்புவுக்குப் பதில் தெரிந்திருக்குமே?! கடைசி குறிப்புத் தேவையே பட்டிருக்காதே? இதை மனதில் வைத்து மீண்டும் யோசியுங்களேன்..

தீக்குச்சிகளின் விடை சரிதான்..

//நல்ல பதிவு. எங்கேருந்து சுட்டீங்க என்றுதான் தெரியவில்லை. உங்க கம்பனி டெஸ்டுல கேட்டாங்களோ?
//
ஹி ஹி.. சனி, ஞாயிறு நடந்த எங்கள் கம்பனியின் நேர்முகத் தேர்வுகளில் கேட்கலாம் என்று நினைத்து சனிக்கிழமை என்னை நானே தயார் பண்ணிக் கொண்டிருந்தேன். பெரிய அளவில் பயன்படவில்லை :( அதான், வலையேற்றியாச்சு..

ராசுக்குட்டி said...

முடியாது, அதிக பட்சம் 2, 13-வெள்ளிகள்

ராதிகாவின் மக்கள் 2 2 9

வெளி வட்டத்திலிருந்து ஒரு குச்சி விட்டு ஒரு குச்சி எடுத்தால் மூன்று முக்கோணங்கள் மிஞ்சும் நடுவில் ஒட்டியும் இருக்கும்!

தேதி 24,

2 3 4 சரவணன் சார் வீட்டுக்கு வந்தவர்கள்.

ராமு கேட்ட கேள்வி, தனியாக யாராவது வந்தார்களா

(சரியாயிருந்தால், குழு என்று கூறியபின்னும் இந்தக் கேள்வி தேவைதானா)

பொன்ஸ்~~Poorna said...

ராசுக்குட்டி ,
எல்லாமே சரிங்க :)

அனானித் தம்பி! அனானித் தம்பி!,
ஏங்க நீங்க வேற?! உங்க பின்னூட்டத்தைப் பிரசுரிக்கலாம், ஆனா பயம்ம்ம்ம்மா கீதே.. ஏதும் தனிமனிதத் தாக்குதல்னு அண்ணாச்சி பொங்கிட்டார்னா இந்த அறியாப் பொண்ணு(பொன்ஸு) என்ன பண்ணும்? [பொன்ஸ் மனசாட்சி: தாக்குதல்னு அண்ணாச்சி பயந்துட்டார்னாலும் கஷ்டம்தானே.. எத்தனி பதிவு அண்ணன் தயவுல வாழ்ந்துகிட்டிருக்கு! ]

siva gnanamji(#18100882083107547329) said...

1. அப்புரம் விடை சொல்வேன்
2] 2x2x9= 36
2+2+9= 13 முதலில் குறிப்பிடப்படும் இர்ண்டும் இரட்டைக்குழந்தைகள்[twins]

3]வெளி வட்டத்தில் உள்ள குச்சிகளுக்கு 1,2,3,4,5,6,என எண்ணிக்கை இடவும்;1,3,5 அல்லது
2,4,6 எண்ணுள்ள குச்சிகளை நீக்கவும். இப்போ ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொள்ளும் 3 முக்கோணங்கள்
உள்ளனவா என் எண்ணிப்பார்க்கவும்

4] 30
2x3x5
"லீப் வருஷமா?"

மா சிவகுமார் said...

1. விக்கிபீடியாவில் பார்த்தால் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இல்லாத ஆண்டே கிடையாதாம். அதிக பட்சம் நான்கு மாதங்களில் அது வரலாம்.

http://en.wikipedia.org/wiki/Friday_the_13th#Trivia

2. கூட்டுத் தொகை ஒரே மாதிரி வருகிற இரண்டு கணங்கள் வேண்டும்.
1,6,6
2,2,9
மூத்த மகள் மட்டும் பள்ளிக்கு போனால் அது 2,2,9. ஒவ்வொன்றாக எழுதிக் கணக்குப் போட்டது :-(

4. 3. குழு என்பதால் 1 ஐ விட்டு விடுவோம். 7க்கு மேலான எண்களாக இருக்க முடியாது.
2,2,3
2,3,5
2,2,5
2,2,7

விடை 2,3,5
கேட்ட கேள்வி - ஏதாவது இரண்டு குழுக்களில் ஒரே எண்ணிக்கை இருந்ததா?
தேதி - 30

உங்கள் விளக்கமான விடை வெளிச்சம் போடும் என்ற நம்பிக்கையில்

அன்புடன்,

மா சிவகுமார்

மனதின் ஓசை said...

13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா? முடியாது.

அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்? :
அதிகபட்சம் : 3 குறைந்தபட்சம் :2

இந்த நடுராத்க்திரியில என்ன கம்புட்டர்ல இருக்கிற காலண்டரை இப்படி பாக்க வச்சதுக்கு உங்கள என்ன பன்றதுன்னே தெரியல...ஆமாம்..இத கண்டுபிகிக்க எதும் லாஜிக் இருக்கனுமே...என்னது..எனக்கு புரியலயே...

"அப்படியானால் சரி" என்றார் வேம்பு. அவர்களது வயது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?
கடைசி குளுவுக்கான காரணம் புரியல.. இருந்தாலும் இதுல ஒன்னுதான் பதில்..
வயசு(கள்) - பக்கத்து வீட்டு எண்.
1,1,36 - 38
1,2,18 - 21
1,3,12 - 16
1,4,9 - 14
1,6,6 - 13
2,2,9 - 13
2,3,6 - 11
3,3,4 - 10
(என்ன மீசையில மன்னு ஒட்டலதானே)..

மூன்று தீக்குச்சிகளை எடுத்தபின் ஒரே பரப்பளவிலான மூன்று முக்கோணங்கள் மிஞ்சவேண்டும்,

ஈஸி :-) சுத்தி இருக்கர ஆறு குச்சியில ஒன்னு விட்டு ஒன்னா 3 குச்சிய எடுத்துடுங்க..


ராமு சரவணனைப் பார்க்கப் போனது என்ன தேதி? : 24
சரவணன் சார் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன? : 2,3,4
சரவணன் சாரிடம் ராமு கேட்டது என்ன கேள்வி? : கேட்க வேண்டிய அவசியமே இல்லையே..

(குழு : அதுனால குறைந்த பட்சம் 2 பேராவது ஒரு குழுவுக்கு இருப்பாங்க..
//ஒவ்வொரு குழுவிலுமிருந்த மாணவர் எண்ணிக்கை வேற வேற// ன்னு வேற சொல்லி இருக்கிங்க.. சோ, மத்த குழு எண்ணிக்கை மினிமம் 3,4 ஆவது இருக்கனும்.. அதோட கூட்டுத்தொகை 24.. 2,4,5 கூட்டுத்தொகை 40 வருது,,. சோ ஒரே ஒரு ஆப்சன்தான் இருக்கு,....2,3,4..)

Anonymous said...

1.
கே: ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?
ப: இருக்க முடியாது.

கே: அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?
ப: மூன்று மாதங்கள் வரை...

(கூகிளாண்டவரை எல்லாம் தேடி paraskavedekatriaphobia வரை கண்டுபிடிக்க வைத்துவிட்டீர்கள்..)

2.
கே: அவர்களது வயது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?
ப: 2 வயது இரட்டையர்கள் மற்றும் 9 வயதுப் பெரிய பெண் ராதிகாவிற்கு...

(பதில் கேள்வி : வேம்பு பக்கத்துவீட்டில் -லா, இல்லைப் பக்கத்துவீடுகளில் பார்த்தாரா? பதில் வேறு கிடைக்கும்..)

3. ...முடியுமா?

1-லிருந்து 6-வரை வெளி தீக்குச்சிகளை வரிசைப்படுத்திவிட்டீர்களென்றால், 1-ம், 3-ம், 5-ம் எடுத்துவிடுங்கள்.
முக்கோணங்கள் மூன்று இதழ்ப் பூ போல கண்முன்னே விரியும்.

(இல்லைன்னா எண் கணித ராசிப்படி 2, 4, 6 எடுங்க... என்னவேன்னா செய்யுங்க.. இம், சீக்கிரம்.. ;-D )

4.
கே: ராமு சரவணனைப் பார்க்கப் போனது என்ன தேதி?
ப: 24-ம் தேதி.
கே: சரவணன் சார் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன?
ப: 2, 3, 4 பேர் கொண்ட குழுக்கள்.
கே: சரவணன் சாரிடம் ராமு கேட்டது என்ன கேள்வி?
ப: சார், எதாவது குழுவிலே ஒரே ஒருத்தர் இருந்தாரா?

(நாம கேட்க மறந்த கேள்வி: டியுசன் வாத்தியார் சரவணன் எடுப்பது கணிதப்பாடம் தானே ?)

பொன்ஸ்~~Poorna said...

சிவஞானம் ஜி,
முதல் விடை இன்னும் சொல்லலை, 2, 3 - சரி, 4 நீங்கள் சொல்லும் விடை சரியில்லையே... காரணங்கள்:
1. இது தான் விடை என்றால், கடைசியில் கேள்வி கேட்காமலே இதை ராமு கண்டு பிடித்திருப்பான்
2. கேள்வியும் தப்பு.. அந்தக் கேள்விக்கு செப்டம்பர் மாதத்தில் என்ன அவசியம் என்று புரியவில்லையே :(

சிவகுமார்,
1. சுட்டி வேற கொடுத்திருக்கீங்க.. ஆனா, நீங்க சொன்ன அதிக பட்ச கணக்கு தப்புன்னு அந்தச் சுட்டியே சொல்லுதே!
2. சரி
4. சிவஞானம் சார் சொன்ன பதிலும் இதுவே தான். ஆனால், நீங்கள் சொல்லும் கேள்விக்கான பதிலும் புதிரிலேயே இருக்கிறது. எனவே இந்தத் தேதியாக இருந்தால், கேள்விகளே தேவையில்லாமல் போயிருக்கும் அல்லவா?

மற்றுமொரு விளக்கம், இந்தப் புதிரில் குழு என்பதை batch என்ற பொருளில் படிக்கவேண்டும்..

பொன்ஸ்~~Poorna said...

மனதின் ஓசை,
1. கேட்கப் பட்ட கேள்விகளுக்கான பதில் சரி. ஆனா, நான் கேட்காமயெ ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கீங்க, அது தான் தப்பாகிடுச்சு :)

ஏதோ, நாள் முடியுற போதாவது காலண்டரைப் பார்த்தீங்களே :)

2. ஏங்க, அதென்ன பக்கத்துவீட்டு எண்-அப்டீன்னு ஒருமையில் கேட்டால், அந்த ஊர்ல இருக்கக்கூடிய எல்லா எண்ணையும் எடுத்துக் கொடுத்திருக்கீங்க?! விடை தப்பு.. பாதிக் கிணறு தான் தாண்டி இருக்கீங்க :)

3. அப்பாடா.. இது தான் சரியா சொல்லி இருக்கீங்க..

4. இதுக்கான பதிலும் சரி. கேள்வியா ராமு கேட்டதைத் தான் நீங்க அடைப்புக் குறி போட்டு தனியா எழுதி இருக்கீங்க..

பொன்ஸ்~~Poorna said...

முரட்டுக் காளை,

1. வாழ்க உங்கள் பரக்ஷாவேதகாட்ரியாபோபியா. சரியாத் தான் சொல்லிருக்கீங்க :)

2. விடை சரி. அதனால் உங்கள் பதில் கேள்விக்கான பதிலும் உங்களுக்குப் புரிந்திருக்கும் :)

3. எண் கணித ராசி வொர்க் ஆகிடுச்சு தல.

4. ஆஆஆஆ.. இதுல கேள்வி முதற்கொண்டு சரியா சொன்னது நீங்க தான்.. இதுல கேட்க மறந்த கேள்வி வேறயா!! :)

ஆவி அம்மணி said...

ஓரத்தில் இருக்கும் தீக்குச்சிகளில் ஒன்று விட்டு ஒன்றாக மூன்றை எடுத்து விட மூன்று சம பரப்பளவுள்ள முக்கோணங்கள் அவற்றின் முனைப்புள்ளிகள் ஒரெ புள்ளியில் தொட்டவாறு இருக்கும்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

24 தேதி - 6 4 1, 8 3 1, 12, 2 1, 2 3 4

கேள்வி - தனியாக யாராவது வந்தார்களா? கரெக்டா?

மனதின் ஓசை said...

//ஆனா, நான் கேட்காமயே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கீங்க, அது தான் தப்பாகிடுச்சு :)//
எது? 13 தேதி வெள்ளிக்கிழமையாக இல்லாமல் இருக்க முடியாதுன்னு சொன்னதா? அது கரக்டுதானே? அது தப்பா இருந்தா எப்படி மினிமம் 2 ன்றது சரியா இருக்கும்?

2க்கு பதில் தப்பா? (என்ன கொடுமை மேடம் இது?)
நான் கேள்வியையே/கடைசி குளுவையே சரியா புரிஞ்சிக்க மாட்டேன்கிறேன்னு நினைக்கிறேன்..
என்ன பதில்னு சொல்லுங்க..

//4. இதுக்கான பதிலும் சரி. கேள்வியா ராமு கேட்டதைத் தான் நீங்க அடைப்புக் குறி போட்டு தனியா எழுதி இருக்கீங்க.. //

கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்ல... ஒருவேளை ஒரே ஒருத்தர் கூட ஒரு அணியில இருக்கலாம்னா 4க்கும் மேல அதிகமான சாத்தியங்கள் இருக்கு...சரியா?

நேரம் இருந்தா எனக்கு மின்மடலில் பதில் சொல்லுங்க. பை பை..

siva gnanamji(#18100882083107547329) said...

சரி உங்களுக்காவது சரியான விடை....................?

பொன்ஸ்~~Poorna said...

ஆவி,
3- சரி

செந்தில் குமரன்,
4- மிகச் சரி

மனதின் ஓசை,
நான் கேட்காம நீங்க சொன்ன பதில் : ஒரு வருடத்தில், குறைந்த பட்சம் எத்தனை 13-வெள்ளிகள் இருக்க முடியும் என்பது. அந்தப் பதில் தப்பு..

2- இன்னும் ஒரு நாள் போகட்டும். வியாழன் பதில் போட்டுவிடுகிறேன்..

4 - மிகச் சரியான லாஜிக்...அந்தக் காரணத்தால் தான் அவன் கேள்வி கேட்டான்..

சிவஞானம்ஜி,
//சரி உங்களுக்காவது சரியான விடை....................? //
ஆகா.... இன்னும் ஒரே ஒரு நாள்.. அதுக்கப்புறம் போட்டுடுறேன் :)

ஆவி அம்மணி said...

2வது புதிருக்கான விடை:

வயதுகள் முறையே 6,3,2

பக்கத்து வீட்டு எண்: 11

மனதின் ஓசை said...

//ஒரு வருடத்தில், குறைந்த பட்சம் எத்தனை 13-வெள்ளிகள் இருக்க முடியும் என்பது. அந்தப் பதில் தப்பு..//

தப்பா???? சரி.. அதையே அடுத்த கேள்வியா வச்சுக்க வேண்டியதுதானே :-) அதுக்கு உங்க பதிலையும் சேத்து நாளைக்கு சொல்லிடுங்க..

நிலவொளி said...

1.max 2 13th falling on fridays
2.2,3,6 are the ages
3.i am not able to paste the changed image.if u number the sides of the hexagon start from top as 1, remove 1,3,5th stick which results in having 3 triangles join together in one vertex.
4.its 30[2,5,3] and question shld have been are the numbers consecutive and the answer is no.

Anonymous said...

பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
பதிலாக நிற்கும் பிரிந்து.

பொன்னம்மா கேட்ட புதிரிலே உள்ளவர்
அன்னம் இனியாவும் ஆதிரையும் - அன்னையின்
அன்புடைய பெண்கள் அவர்கள் வயதோ
ஒன்பஃது நான்குடன் ஒன்று.

அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.

அனைத்திற்கும் மேலான ஆசானைக் காணத்
தனியாக வந்தவரும் தானில் - எனக்கூறின்
விண்ணவன் ஈசன் வழிவந்த மக்களின்
கண்களை நீஎண்ணிக் கொள்.

Syam said...

இது எல்லாம் LKG பசங்க கிட்ட கேட்கவேண்டிய கேள்வி எங்கள போய் கேட்டுடு (சியாம் உன்கிட்ட பதில் என்னனு கேட்கறதுகுள்ள ஒடிரு) :-)

Udhayakumar said...

1. சாதரண வருடத்தில் 2. லீப் வருடத்தில் 3

2. 9,2,2

3. வெளிப்புறத்திலுள்ள தீக்குச்சிகளில் ஒன்று விட்டு ஒன்று எடுத்து விடுங்கள்.

4. 24

Anonymous said...

பொன்னம்மா கேட்ட புதிரிலே உள்ளவர்
அன்னம் இனியாவும் ஆதிரையும் - அன்னையின்
அன்புடைய பெண்கள் அவர்கள் வயதோ
ஒன்பஃது இரண்டோடு இரண்டு.

என்று இருக்க வேண்டும். முன்பே பார்க்கத் தவறி விட்டேன். மன்னிக்கவும்.