Thursday, November 23, 2006

சிவகுமார்! இது நியாயமா?

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எங்கள் வீட்டில் ஒரு போராட்டதினம் தான். நான் எழுந்து கொள்ளக் கொஞ்சம் தாமதமானாலும் என் அப்பா பக்கத்தில் வந்து நின்று தட்டித் தட்டி எழுப்பிவிடுவதோடல்லாமல், எழுந்துவிட்டேனா என்று பத்து நிமிடத்துக்கொரு முறை வந்து சோதித்துவிட்டும் செல்வார்.

நான் எழுந்து வரும் போது அம்மா சமையலறையில் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டோ, காய் நறுக்கிக் கொண்டோ இருந்தாலும் அப்பா பொதுவாக அன்றைக்கு எந்த அறையைத் தேர்வு செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொண்டிருப்பார். எந்த அறை என்று தேர்வானதும், என்னை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கிவிடுவார்.

"இதோ இந்த பீரோ இருக்கில்ல, இதை பக்கத்து ரூமுக்கு மாத்திடுவோம். ஹாலில் இருக்கும் டீவியை, பெட்ரூமுக்கு அனுப்பிடலாம். சமையலறையில் இருக்கும் பிரிட்ஜ் இந்த டீவி இடத்துக்கு வரட்டும்." அப்பா சொல்லிக் கொண்டே போக, நானும் தங்கையும் ஒவ்வொன்றாகச் செய்ய உதவுவோம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம்போல் சமையல் தயாராகிச் சாப்பிடத் தொடங்கும்போது, வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களும் இடம் மாறியிருக்கும். வண்டிகள் எல்லாம் துடைக்கப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும்.

சிலநாட்கள் வீட்டை மாற்றுவது போரடித்தால், குளிர்சாதனப்பெட்டியின் உள்ளிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டுத் துடைத்து அங்குமிங்குமாக மாற்றிவைப்போம்.

அலங்கார அலமாரிப் பொருட்களும் எங்களின் இந்தப் படையெடுப்புக்குத் தப்பித்ததில்லை.

இதெல்லாம் தவிர அவரவர் துணியலமாரியையும், புத்தக அலமாரியையும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் துடைத்து வைத்துவிடவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் புதிய வீட்டில் இருப்பது போலான தோற்றத்தை இந்த மாற்றங்களே கொடுத்துவிடுவதால், இன்றுவரை வீடுகளும் அத்தனை போரடித்ததாகத் தோன்றியதில்லை.

இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போராட்டம் தான்.

"இப்போ எதுக்கு இதை மாத்தணும்ங்கிறீங்க?"

"ஒரு விஷயம் இருக்கிற இடத்தில் இருந்தாப் பிடிக்காதே உங்களுக்கு"

"வீட்டோட அழகே போச்சு"

என்று நாங்களும்

"அந்த கத்திரிக்கோல் இங்க தானே வச்சிருந்தேன். அதை எடுத்து எங்க வச்சார் உங்கப்பா?"
என்று வாரம் முழுவதும் ஒவ்வொன்றாகத் தேடும் அம்மாவும், போனவாரத்துக்கு இந்தவாரம் கட்டில் கொஞ்சம் நகர்ந்திருப்பதால் வீடு பெருக்கும்போது கவனமில்லாமல் காலில் இடித்துக் கொண்டு தன் தாயாரை அழைக்கும் வேலைக்கார அம்மாவுமாகச் சேர்ந்து அப்பாவுக்கு வாரம் பூராவும் ஞாயிற்றின் பின்விளைவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயமாகிவிடும். அப்படியும் சிரித்துக் கொண்டே அதைக் கடந்து போய்விடுவார் அப்பா.

பொதுவில் வீட்டுப் பொருட்களை மாற்றுவது போல் தோன்றினாலும் இந்த வேலைகளினால்,
1. குடும்பம் முழுவதும் ஒரே வேலையில் ஈடுபடுவதன் மூலம் ஒன்றாக செலவழிக்கும் அந்த நேரமும்
2. அரிசிமூட்டை முதல் பெரிய கட்டில் வரை அங்குமிங்கும் நகர்த்த உதவுவதால் உடற்பயிற்சிக்களமாகவும்
3. தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் வீணாகாத ஒரு ஞாயிறும்
4. ஏதாவது பாட்டுப் பாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ செய்வதால், மனமும் லேசாகும் ஒரு மனப் பயிற்சியாகவும்..

என்று எங்களுக்கு லாபங்களும் நிறைய தான்.


என்ன திடீர்னு வார நாளிலேயே ஞாயிற்றுக் கிழமை நினைவு என்று கேட்கிறீர்களா?

சிவகுமாரின் பதிவில் ,

பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும்


என்று சொல்லியிருப்பதைப் பார்த்தவுடன், அப்பாவிடம் "இப்போ இதை எல்லாம் மாத்தவச்சி, எங்களை வேலை வாங்கி என்னதான் சாதிச்சீங்க?" என்று சும்மாவே கடிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

வலைப் பதிவு அடைப்பலகைகளும் மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற இந்த உணர்வும் என் ஜீனில் உள்ளதோ?

(சிவகுமார், இருந்திருந்து பெண்வலைப்பதிவர்களுக்கு மட்டும் இந்த எண்ணம் உள்ளது என்பது போல் எழுதி இருக்கீங்களே... தேவ் பதிவெல்லாம் பார்த்ததில்லையா.. )

43 comments:

இராம்/Raam said...

பொன்ஸ்க்கா...

ஆமா இப்போ என்னா சொல்ல வர்றீங்க????

siva gnanamji(#18100882083107547329) said...

An idle mind is devils work chamber
என்பதை நம்புகிறாரோ என்னவோ!

பத்மா அர்விந்த் said...

பொன்ஸ், நம்ம வீடும் அப்படித்தான் மாறிக்கிட்டே இருக்கும். பெண்வலைப்பதிவாளார்கள் என்றாலும் நீங்களும் மதியும் மட்டும்தானா:) நான் வேறு யாரும் மாத்தி பார்த்ததில்லை. உஷா முதலைக்கு பதில் குதிரை மாற்றியதை தவிர.

நாமக்கல் சிபி said...

//அரிசிமூட்டை முதல் பெரிய கட்டில் வரை அங்குமிங்கும் நகர்த்த உதவுவதால் உடற்பயிற்சிக்களமாகவும்//

ஒரே இடத்தில் இருக்கும் பொருள்களை நகர்த்துவதால் சந்து பொந்துகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறிய உயிரினங்களான அன்கோண்டா, டைனோசரஸ் போன்றவை வெளியில் வந்துவிடும். ஒட்டடை, கரையான் போன்றவையும் அகன்றுவிடும்.

சீனு said...

//வாருங்கள்! வாருங்கள்!! COLUMBUSஇல் மாதம் மும்மாரி பொழிகிறதா?
UNITED STATESஇல் நம் மக்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களா?
உங்கள் COVANSYS என்ற கணினி அடிக்கடி restart செய்யாமலே வேலை செய்கிறதா?//

நான் எப்போ US போனேன்???

துளசி கோபால் said...

பொன்ஸ், இது என்னாம்மா அநியாயம்? வாராவாரம் ப்ரிட்ஜை நவுத்தணுமா?
செத்தேன்(-:

நாடோடி said...

// சிவகுமார்! இது நியாயமா?//

சிவக்குமார் என்னதான் செய்வார்.

இப்பதான் செல்வி கூட நடிக்கலையே..

நாமக்கல் சிபி said...

ஏன் சிவக்குமார் சூர்யாவிற்கு ஜோவைத் திருமணம் செய்து வைத்தது தவறா?

Unknown said...

//குடும்பம் முழுவதும் ஒரே வேலையில் ஈடுபடுவதன் மூலம் ஒன்றாக செலவழிக்கும் அந்த நேரமும்//

இதற்காக வீடு என்ன தெருவையே சரி செய்யலாம்.

ப்ரியன் said...

/*வாருங்கள்! வாருங்கள்!! DELHIஇல் மாதம் மும்மாரி பொழிகிறதா?
INDIAஇல் நம் மக்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களா?
உங்கள் STERLING CAPITAL PVT. LTD என்ற கணினி அடிக்கடி restart செய்யாமலே வேலை செய்கிறதா?*/

நான் எப்ப டெல்லி போனேன்...அட கம்பெனியும் மாறிட்டேன் போல :)

Anonymous said...

பின்னூட்டங்கள் வழியே வைரஸ் வருகிறதாம். உங்கள் சிஸ்டத்தையே காலியாக்கிவிடக் கூடும் என்று கண்ணீர் சிந்தி புலம்புகிறார் சிந்தாநதி!

ஆவி அண்ணாச்சி said...

//ஞாயிற்றுக்கிழமை மதியம்போல் சமையல் தயாராகிச் சாப்பிடத் தொடங்கும்போது//

சாப்பிட்ட பிறகு ஏப்பம் விடுவது எப்படி?

கவிதா | Kavitha said...

சிவகுமார்ஜி சொன்னது போன்று நானும் உங்களிடம் இந்த அடிக்கடி மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன் பொன்ஸ்.. தவறுஇல்லை - உங்களைப்பற்றி நீங்கள் உட்கார்ந்து யோசித்து பாருங்கள், மாற்றங்கள் அவசியமே,ஆனால் அடிக்கடி மாற்றம் ...... ???
பொருட்களை நகர்த்தி வைத்து சுத்தம் செய்து பிறகு, அதே இடத்தில் வைத்தால் க்கூட நீங்கள் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.
1. எதிலுமே நம்மால் எளிதில் தெளிவான முடிவெடுக்கமுடியாது
2. மனம் அலைப்பாய்ந்து கொண்டே இருக்கும்.
3. எதிலும் எளிதில் திருப்தி அடைய முடியாது.

எதையுமே இருந்த இடத்தை மாற்றாமல் சுத்தம் செய்யும் போதே எங்கள் வீட்டில் "அம்மா தாயே..நீ தயவு செய்து சுத்தம் செய்யாதே" என்று நிஜமாகவே அழுகிறார்கள்.

Anonymous said...

பொன்ஸ்,

உங்கப்பா, நம்ம கிரிக்கெட் கோச் சேப்பலுக்கு ஒரு முன்னோடிபோல.

கவிதா | Kavitha said...

//சிவகுமார்ஜி சொன்னது போன்று //

பொன்'ஸ் சிவகுமார்ஜி, பெண்பதிவர் என்று சொல்லியிருக்கிறார், உங்களையா என தெரியயாது...ஆனால் நான் உணர்ந்தது உங்களின் மாற்றங்களைத்தான்...

சிவகுமார்ஜியை தேவையில்லாமல் இழத்ததாக எனக்குப்பட்டது.. அதற்காக..இந்த தன்னிலைவிளக்கம்.. :)

பொன்ஸ்~~Poorna said...

ராம், சிவகுமார் வந்து பார்க்கட்டும்.. அவருக்காவது புரியுதான்னு பார்ப்போம்..

சிஜி, உண்மை தான்.
"சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்" னு அப்பப்போ பாடிகிட்டிருப்பாரு :)

சிபி,
//ஒட்டடை, கரையான் போன்றவையும் அகன்றுவிடும். //
உண்மை தான். இது நேரடிப் பயனாச்சே.. அதான் போடலை..

பொன்ஸ்~~Poorna said...

//நான் எப்போ US போனேன்//
தெரியலியே சீனு... :))

//வாராவாரம் ப்ரிட்ஜை நவுத்தணுமா?//
:)))) கோபால் சாரை இந்தப் பக்கத்துக்கு வராம பாத்துக்குங்க துளசிக்கா.. :)))

//இப்பதான் செல்வி கூட நடிக்கலையே..//
//ஏன் சிவக்குமார் சூர்யாவிற்கு ஜோவைத் திருமணம் செய்து வைத்தது தவறா?
//
ஹி ஹி.. அதனால தான் சிவகுமார்னு போட்டேன்.. நம்ம சிவகுமாருக்கு 'க்' இல்லையே.. :))

//இதற்காக வீடு என்ன தெருவையே சரி செய்யலாம்.
//
கல்வெட்டு, வீடு சுத்தம் செய்து போரடித்த சில ஞாயிறுகளில் நாங்கள் இதைக் கூடச் செய்திருக்கிறோம் :((

//நான் எப்ப டெல்லி போனேன்...அட கம்பெனியும் மாறிட்டேன் போல :) //
:))

//பின்னூட்டங்கள் வழியே வைரஸ் வருகிறதாம்.//
அடப் பாவமே.. இப்படி வேறயா!!

பொன்ஸ்~~Poorna said...

//சாப்பிட்ட பிறகு ஏப்பம் விடுவது எப்படி? //
ஆவி அண்ணாச்சி, படத்துண்டோட, பதிவு போட்ரவேண்டியது தானே..!;)

//உங்கப்பா, நம்ம கிரிக்கெட் கோச் சேப்பலுக்கு ஒரு முன்னோடிபோல. //
ஹி ஹி..

//1. எதிலுமே நம்மால் எளிதில் தெளிவான முடிவெடுக்கமுடியாது
2. மனம் அலைப்பாய்ந்து கொண்டே இருக்கும்.
3. எதிலும் எளிதில் திருப்தி அடைய முடியாது.
//
பின்னூட்டத்துக்கு நன்றி கவிதா.

//பெண்பதிவர் என்று சொல்லியிருக்கிறார், உங்களையா என தெரியயாது...சிவகுமார்ஜியை தேவையில்லாமல் இழத்ததாக எனக்குப்பட்டது..//
சுட்டி கொடுத்திருக்கிறேனே, திறந்து பார்த்தீர்களா?

கவிதா | Kavitha said...

பொன்'ஸ் பார்த்துட்டேன்.. அட அவர் உங்களத்தான் சொல்லியிருக்கிறார்..!!!! ம்ம்.. அவர் பதிவை படிக்காதது..என் தவறுதான்.. :)

Unknown said...

//வீடு சுத்தம் செய்து போரடித்த சில ஞாயிறுகளில் நாங்கள் இதைக் கூடச் செய்திருக்கிறோம் :((//

?????

உண்மையா ?

பிடியுங்கள் வாழ்த்தை!!!!

இதற்கு ஏன் இந்த :(( ஸ்மைலி போடுறீங்க ? சந்தோசமான விசயம்தானே.

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தான் வாழும் தெரு/ ஊருக்கு செலவழிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுவும் இந்த "குப்பை ஒழிப்பு" எனது முதல் அஜண்டா :-)))

வாழ்க உங்கள் அப்பா!

- யெஸ்.பாலபாரதி said...

நாங்கள் இருக்கும் அறையை கொஞ்சம்(!) சுத்தமாக வைக்கும் படி அடிக்கடி சொல்லுவதால், அறை நண்பரிடம் எனக்கு கிடைத்த பட்டம்---------------, சொல்ல பயமா இருக்கு வலை உலகமே பாகச ஆளுங்களாக இருக்கு! பரவாயில்லை. "ஆண் மாமியார்"!

நானும் இதில் உங்க அப்பா+கல்வெட்டு கட்சி!
(அது சரி! நானும் கூட வலைக்கு வந்த ஒருவருடத்தில் ஏழு முறை வீட்டின் வர்ணத்தையும், மூன்று முறை மாற்றி விட்டேனே.. அவரு என் வூட்டு பக்ல்கமே வர்றதில்லைன்னு நினைக்கிறேன்.)

நீங்க சுறுசுறுப்பா இருக்க இது தான் காரணமா.. அந்த ஆனை வேகமா ஓரும் போதே நெனைச்சேன்.
:-)))

ரவி said...

இந்த ஆட்டைக்கு நானும் வரலாமா ?

நாடோடி said...

//இந்த ஆட்டைக்கு நானும் வரலாமா ?//

பொ.க.ச வில் மெம்பர் ஆக வேண்டும்.

நான் ஏற்கனவே ஆகிவிட்டேன்.

லக்கிலுக் said...

மாற்றம் என்ற ஒன்றே உலகில் மாறாதது. எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டே இருப்பது தான் எனக்கும் பிடிக்கும்.

லக்கிலுக் said...

//இந்த ஆட்டைக்கு நானும் வரலாமா ? //

அப்பாவியான செந்தழல் ரவி எல்லா ஆட்டைக்கும் வரவேற்கப்படுகிறார்....

லக்கிலுக் said...

//நான் எப்போ US போனேன்??? //

ப்ராக்ஸி யூஸ் பண்ணுறவங்க எல்லாருமே யூ.எஸ். தாம்பா...

கதிர் said...

//வாருங்கள்! வாருங்கள்!! DUBAIஇல் மாதம் மும்மாரி பொழிகிறதா?
UNITED ARAB EMIRATESஇல் நம் மக்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களா?
உங்கள் EMIRATES TELECOMMUNICATIONS CORPORATION என்ற கணினி அடிக்கடி restart செய்யாமலே வேலை செய்கிறதா?//

விஜயகாந்துக்கு சொந்தக்காரவுகளா நீங்க அம்புட்டையும் புட்டு புட்டு வைக்கறிங்களே!!

உலகத்துக்கே தெரியும் இங்க வருஷத்துக்கு ஒரு மாரியே வரதில்லை அப்புறம் எங்கருந்து மாதம் மும்மாரி வர்றது?

இப்படி கண்டுபுடிச்சி சொல்றதுதான் பயமா இருக்கு.

கதிர் said...

உங்க வீட்டுல அப்பான்னா எங்க வீட்டுல அம்மா இந்த மாதிரி இன்ப இம்சைகள குடுப்பாங்க ஞாயிற்றுக்கிழமைகளில்

ப்ரிட்ஜ் தொடச்சி வையி
டீ.விய தொடச்சி வையி
தோட்டத்த சரி பண்ணு
மாட்டுக்கு வைக்க புடுங்கி போடுன்னு

ஒரே தொல்லை பண்ணுவாங்க நிம்மதியா ரெஸ்ட் எடுக்க விடாம!

அருள் குமார் said...

//அரிசிமூட்டை முதல் பெரிய கட்டில் வரை அங்குமிங்கும் நகர்த்த உதவுவதால் உடற்பயிற்சிக்களமாகவும்
//
அப்படி ஒன்னும் தெரியலியே..!

நாடோடி said...
This comment has been removed by a blog administrator.
- யெஸ்.பாலபாரதி said...

//அப்படி ஒன்னும் தெரியலியே..! //

ரிபிட்..ரிபிட்..ரிபீட்டே.....

- யெஸ்.பாலபாரதி said...

//ttp://www.ip2phrase.com/ip2phrase.asp இது
யக்கோவ் என்ன கண்டுபிடிச்சு சொல்ல மாட்டேனுது. //

பதிவுக்கு சம்பந்தி இல்லாத இந்த பின்னூட்டத்தை எதிர்க்கிறேன்.

- யெஸ்.பாலபாரதி said...

சம்பந்தி அல்ல சம்பந்தம் என்று மாற்ரி வாசிக்கவும்.

நாடோடி said...

//பதிவுக்கு சம்பந்தி இல்லாத இந்த பின்னூட்டத்தை எதிர்க்கிறேன்./

accepted and deleted

நாடோடி said...

//மாற்ரி//
திரும்பவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

உங்கள் நண்பன்(சரா) said...

பின்னூட்டம் போடும் போதும் ஒரே நச்சு தாம்பா, அநியாயத்துக்கு மிஸ்டேக்கு சரியா தான் ரூம்மேட்ஸ் போர் வச்சிருக்காங்க அந்த "ஆம்பளை மாமியாருக்கு":))))))))))


அன்புடன்...
சரவணன்.

நாடோடி said...

//மாற்றம் என்ற ஒன்றே உலகில் மாறாதது.//

எதோ ஒரு பிளாக்கரோட ஹெட்டிங்கு இது.

நம்ம சின்னகுத்தூசி காப்பி அடிச்சுட்டாரு.

தருமி said...

பொன்ஸ்,

மாத்ற ஐடியாவுக்கு brain அப்பா. முட்டுக் கட்டை போடுறது நீங்க. அதுக்குப் பிறகு எப்படி நீங்க //பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல...//அப்டின்ற categoryக்குள்ள வர்ரீங்க?

போனா போவுது... -// இந்த உணர்வும் என் ஜீனில் உள்ளதோ?// அப்டின்னும் சொன்னதால தகப்பன்குலத்தின் சார்பாக மன்னிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், நல்ல ஞாயிற்றுக் கிழமை பதிவு.

மெனு என்னவோ?
உங்கள் கணினி சொல்லும் இடம் சரிதான்.

அப்பாக்களுக்கும் அருமைப் பெண்களுக்கும் நன்றி.

மா சிவகுமார் said...

//இருந்திருந்து பெண்வலைப்பதிவர்களுக்கு மட்டும் இந்த எண்ணம் உள்ளது என்பது போல் எழுதி இருக்கீங்களே... தேவ் பதிவெல்லாம் பார்த்ததில்லையா..//

பாலபாரதியும் சில முறை மாற்றி விட்டாராமே! பொதுப்படையாக எழுதாது சரியில்லைதானோ!

இன்னொரு நோக்கில், சில ஆண்களிடம் இந்தப் பெண்மைக் குணம் இருக்கலாம் என்று சப்பைக் கட்டலாம் :-)

//ஆமா இப்போ என்னா சொல்ல வர்றீங்க????//
//சிவகுமார் வந்து பார்க்கட்டும்.. அவருக்காவது புரியுதான்னு பார்ப்போம்..//

ராம்/பொன்ஸ்

அப்பாவிடமிருந்து வீட்டை மறு சீரமைக்கப் படித்ததை வலைப்பூவில் செய்வதாகச் சொல்கிறார் என்று புரிகிறது.

கல்வெட்டு,

குப்பை அள்ளுவதில் எனக்கும் ஆர்வம் அதிகம். சேர்ந்து செயல்படலாமே!

ஆனால் அடைப்பலகையைப் பொறுத்த வரை பொருத்தமில்லாத சுட்டிகளை நீக்கி அழகு படுத்தக் கூட நேரம் செலவளிப்பதில்லை. அதையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்

VSK said...

அட! இப்படி ஒரு ஆட்டம் இங்கே நடக்குதா? இது நல்லா இருக்கே!

:))

Unknown said...

//குப்பை அள்ளுவதில் எனக்கும் ஆர்வம் அதிகம். சேர்ந்து செயல்படலாமே! --மா.சிவகுமார்.//

சிவா,
நிச்சயம்!
நான் அது பற்றி பேசுகிறேன்.

கார்மேகராஜா said...

பொன்ஸ்! உங்களுக்கு யானை என்றால் ரொம்ப பிடிக்குமா என்ன?

உங்கள் பக்கத்தில் நிறைய யானை படம் இருக்கிறதே!