Wednesday, November 22, 2006

கோகுலம் - இதழ் 2

இந்த வாரம் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த போது ஒரு பேப்பர் கிடைத்ததாக பாட்டி எடுத்துக் கொடுத்தார்.

ஆமாமாம், எல்லாம் உங்க அன்புக்குரிய பொன்ஸின் மழலைக் கதை தான்.

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க..










இனி கதை:

தங்கமும் தேங்காய் நாரும்

ரு ஊரில் ஏழைத் தம்பதிகளான ராமனும் சீதையும் வாழ்ந்து வந்தார்கள். குழந்தைப் பேறில்லாத சீதா, ராமனிடம் சதா "பழனிக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஒருநாள் போதுமான பணம் சேர்ந்ததும் அவர்கள் இருவரும் பழநிக்குச் சென்றனர். அங்கு சீதா, தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் எடைக்குச் சம எடையாக தேங்காய் நார் காணிக்கையாக்குவதாக வேண்டிக் கொண்டாள்

இது நடந்து ஒரு வருடத்திற்குள் அவர்கட்கு குழந்தை பிறந்தது. அத்தோடு பெரும் பணக்காரர்களாக ஆனார்கள். இருப்பினும் அவர்கள் பழனிக்குச் சென்றனர். செல்லும்போது சீதா, கடவுளுக்குத் தேங்காய் நார் வைக்கக் கூடாது. தங்கம் வைக்கலாம்" என்றாள்.

ஆனால், எவ்வளவு தங்கம் வைத்தாலும் குழந்தை உள்ள தட்டே தழைந்தது. கலவரமடைந்த அவர்களை குருக்கள் தங்கத்தை எடுக்கச் சொன்னார். அதன்பின் ஒரு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். அப்போது அவர் உடைத்த தேங்காயின் குடுமியைப் பிய்த்துப் போட்டார். அது சென்று தட்டின் மேலே விழுந்தது. உடன் அது சமமாகிவிட்டது


[இராம நாராயணன் அல்லது பேரரசு கேட்டால், பஞ்ச் வசனங்களுடன் காப்பி ரைட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் ;) ]

கோகுலம் படிப்பவர்களே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.. குழந்தைகளுக்காக

22 comments:

Anonymous said...

அசத்துறீங்களே! நல்லா இருக்கு! ஆதாரத்ட்தோட வேற நிறுவிக்கிறீங்க.!
கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு! பழைய எழுத்தாளர் லிஸ்ட்டில் உங்க பெயரையும் சேர்த்துடுவோம்.
:-)))))
ஸ்மைலி போட்டுக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

யானை எடைக்கு தேங்காய் நாரா?!!!!

ரவி said...

எனக்கு உங்கள் பதிவில் வரும் எந்த படமும் தெரிவதில்லை...இதற்க்காக ஒரு சர்வருக்கு (ஹோட்டல் சர்வர் இல்லைங்க) சென்று பார்க்கவேண்டும்...அந்த சர்வர் பக்கத்தில் இருந்தால் பரவாயில்லை...அது லேபில் இருக்கிறது...அதுக்கு அந்த லேபுக்கு போகவேண்டும்...அந்த லேபு சாவி கீழே செக்யூரிட்டியிடம் இருக்கிறது...அதுக்கு கீழே ஒரு மாடி இறங்கி போகவேண்டும்...(மறுபடி வேற அதை திருப்பி கொடுக்க இறங்கவேண்டும்..)...அந்த செக்யூரிட்டி கீ கிடைக்க வேண்டுமானால் ISMS பாலிஸி படி செக்யூரிட்டி ஆபீசருக்கு மெயில் அனுப்ப வேண்டும்...சரி அதை விடுங்க...


உங்க பதிவில் இருக்கும் படத்தை இப்போதுதான் பார்த்தேன்...

லக்கிலுக் said...

கையெழுத்து படு மோசம் :-(((((



(காமிக்ஸ் எல்லாம் படிச்சதுண்டா?)

Hariharan # 03985177737685368452 said...

அது என்னங்க முட்டைக்குள்ளே இருந்து யானை பிளிறியபடி வெளிவருகிறது?

Elephant is a Mammal? The huge mammal on surface இப்படி முட்டைக்குள்ள இருந்து வர்றது ஆக்சுவலி பயாலஜிகலி ஜூவலஜிகலி இல்லாஜிகல் இல்லீங்களா?

ரொம்பவே ஹெவியான புரொபைல்ங்க
யானைக்கூட்டமே பல்கிப் பரவி இருக்கு
பக்கமெல்லாம் :-)))

நாமக்கல் சிபி said...

நன்றாக இருந்தது குட்டி எழுத்தாளர் பொன்ஸ் அவர்களே!

பாராட்டுக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

ஸ்மைலி அனானி, நன்றி,

கொத்ஸ், யானை எடைக்கு இல்லப்பா.. :))

ரவி.. புரியுது.. ஒண்ணும் பண்றதுக்கில்லை.. உங்களுக்கு வேணும்னா பதிவு போட்டுட்டு படங்களைத் தனியஞ்சல் தான் செய்யலாம்.. அதான் முடியும் :))

//கையெழுத்து படு மோசம் :-(((((//
ஆனா, ஒரு எழுத்துப் பிழை கூட இல்லை பாருங்க. அதை நினைச்சுத் தான் எங்க பாட்டிக்கு ரொம்ப ஆச்சரியம்! :)))

//காமிக்ஸ் எல்லாம் படிச்சதுண்டா?//
ம்ம்ம்ம்ம்ம்

ஹரிஹரன், முதன்முறைய நம்ம காட்டுக்கு வர்றீங்க போலிருக்கு :)))

அருள் குமார் said...

//இராம நாராயணன் அல்லது பேரரசு கேட்டால், பஞ்ச் வசனங்களுடன் காப்பி ரைட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் //

பொன்ஸ், அவங்கல்லாம் கேட்டுகிட்டு இருக்க மாட்டாங்க. எடுத்து யூஸ் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க :)

அப்பவே இவ்ளோ யோசிச்சிருக்கீங்களே... இப்போ என்னங்க ஆச்சு ;)

நாமக்கல் சிபி said...

//அப்பவே இவ்ளோ யோசிச்சிருக்கீங்களே... இப்போ என்னங்க ஆச்சு?//

நல்ல கேள்வி! அருள்குமாரை வழிமொழிகிறேன்.

பொருளாளர்,
பொ.க.ச

Anonymous said...

அந்த காலத்தில் கோகுலம் வாங்கித் தந்து உங்களுக்கு நல்ல குழந்தைப் பருவம் கிடைக்க வைத்து இருக்கிறார்கள் போல .மற்றும் நல்ல கடவுள் கதைகளும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

சின்ன வயசுல நீங்க நல்ல எழுத்தாளரா இருந்துருப்பீங்க போல இருக்கே ;)

குமரன் (Kumaran) said...

பொன்ஸ். கதை சுருக்கமாவும் நச்சுன்னும் இருக்கு. கலக்கிட்டீங்க போங்க. எந்த வயசுல எழுதுனதுன்னு சொல்லலியே?

பொன்ஸ்~~Poorna said...

//அப்பவே இவ்ளோ யோசிச்சிருக்கீங்களே... இப்போ என்னங்க ஆச்சு ;)
//
இன்னும் வருது அருள், இனி தினசரி சிறுவர் கதை தான் இந்த வாரம் முழுவதும்...

//நல்ல கேள்வி! அருள்குமாரை வழிமொழிகிறேன்.
//
பொருளாளரா.. வரேன்.வரேன். நற நற..

//மற்றும் நல்ல கடவுள் கதைகளும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
//
லக்ஷ்மி, நல்ல கடவுள், கெட்ட கடவுள்னு வேற இருக்குங்களா? அடப் பாவமே..

//சின்ன வயசுல நீங்க நல்ல எழுத்தாளரா இருந்துருப்பீங்க போல இருக்கே//
வெட்டி, அப்போ இப்போ இல்லீங்கிறீங்களா? நீங்களும் பொ.க.சவா?

//எந்த வயசுல எழுதுனதுன்னு சொல்லலியே?
//
தெரியலை குமரன், இந்தக் குண்டு குண்டான கையெழுத்தையும் கோடு போட்ட பேப்பரையும் பார்த்தால், ஆறாவது ஏழாவது இருக்கும்னு நினைக்கிறேன்..

நாமக்கல் சிபி said...

//வெட்டி, அப்போ இப்போ இல்லீங்கிறீங்களா? நீங்களும் பொ.க.சவா?
//
ஹி..ஹி..ஹி...

இதெல்லாம் சொல்லித்தான் தெரிஞ்சிக்கணுமா?

மா சிவகுமார் said...

கோகுலம் பதிவுகள் அனைத்தும் அருமை. அந்தத் துப்பறியும் கதை கோகுலத்துக்கே அழைத்துப் போய் விட்டது. நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

அன்புள்ள சந்தனமுல்லை,
எனக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள், ஆனால், உங்களின் பதிவு லிங்கோ, மின்முகவரியோ இல்லாமல், உதவி செய்ய முடியாதே :(

கொஞ்சம் என் முகவரிக்கு ஒரு மடல் போடுங்களேன்..

poorna(dot)rajaraman(at)gmail(dot)com

siva gnanamji(#18100882083107547329) said...

அந்த வயதிலேயே இப்படி யோசித்தீர்களா? அருமை!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது உங்க கையெழுத்து தானா? னா-வன்னா பழைய தமிழ் எழுத்து வடிவத்தில் எழுதி இருக்கீங்க..அது எப்படி?

பாரதி தம்பி said...

ச்ச்ச....சின்ன வயசுலயே எவ்வளவு திறமை..?
இந்த மாதிரி கையெழுத்தைதான், 'கோழி சீச்ச மாதிரி எழுதுறான்..'னு எங்க தமிழு வாத்தியார் சொல்லுவாறு.

உண்மையை சொல்லுங்க....
'மர வியாபாரி...இரும்புக் கோடரி...ஆறு... தேவதை...தங்கக்கோடரி...' கதையோட காபிதானே இது...?

(இந்த பின்னூட்டத்திற்கு வரப்போகும் பின்னூட்டம்...

//உண்மையை சொல்லுங்க....
'மர வியாபாரி...இரும்புக் கோடரி...ஆறு... தேவதை...தங்கக்கோடரி...' கதையோட காபிதானே இது...?//

அப்பவேவா...?)

Radha Sriram said...

'அவர்களுக்கு' ங்கர்த அடிச்சிட்டு 'அவர்கட்கு' ன்னு எழுதியிருகீங்க பாருங்க......அப்பயே நீங்க பெரிய எழுத்தாளரா வருவீங்கன்னு உங்க அம்மாக்கு தெரிஞ்சு போயிருக்கும்!!! அடா அடா என்னே உங்கள் தமிழ் ஆர்வம் :):)

வடுவூர் குமார் said...

இடுகையை விடுங்க.
யானைகளின் அட்டகாசம் தான் அட்டகாசமாக் இருக்கு.

சென்ஷி said...

//புதன் நவம்பர் 22, மாலை 04:05:00 2006 மணிக்கு, luckylook பிளிறினது...:
கையெழுத்து படு மோசம் :-(((((//

லக்கி அன்னிக்கு சொன்னத சென்ஷி இன்னிக்கு ரிப்பீட்டுறான் :))

கையெழுத்து ரொம்ப மோசம் :(

சென்ஷி