Wednesday, July 12, 2006

அந்தப் பயம் - தேன்கூடு

"ஏய் சிவா, யாரைத் தேடுற? ஸ்ரீகாந்தையா? அவன் கிளம்பியாச்சு.. உன்னை இருந்து அழைச்சிகிட்டு வரச் சொல்லி என்கிட்ட சொன்னான்.. வரியா?"

"என்னது?! நீ என்னை அழைச்சிகிட்டு போகப் போறியா? நீயே அடுத்தவங்களோட தொத்திகிட்டு வர்றவ தானே?"

"இல்லையே.. இப்போ நான் கார் எடுத்திருக்கேனே.. உனக்குத் தெரியாதா?"

"என்னது, கார் எடுத்தியா?"

"ஆமாம், அதான் கம்பனில பணம் தராங்க இல்லை.. அப்புறம் ஏன் வேஸ்ட் பண்ணணும்னு.. கார் எடுத்தேன்.. வரியா?"

"ம்ம்.. வரேன்.., வேற வழி?"

"பெல்டைப் போடு.. கதவை ஒழுங்கா சார்த்து.. என்ன நீ உனக்கு கதவைச் சார்த்தக் கூடத் தெரியலை?!! "

"சரி சரி.. ரொம்ப பேசாத.. வண்டிய எடு."

"ம்ம்.. " எடுத்தாள். மெல்ல நகரத் தொடங்கியது வண்டி..

"ஆமா, நீ காரெல்லாம் ஓட்டுவியா? நான் எதிர்பார்க்கவே இல்லை..."

"ஓட்டாம, பின்ன.. எல்லாம் ஓட்ட வேண்டியது தான்.. பாட்டு கேட்கறியா?"

"தமிழ்ப்பாட்டுலாம் வச்சிருக்க?"

"ம்ம்ம்.. அதோ அந்த சிடி.. இளைய ராஜா, ஏர். ரஹ்மான் எல்லாம் இருக்கும் பாரு.. "

"இதுவா? "

"அது இல்ல.. உள்ள இருக்கும்.. "

எங்கே என்று தேடினான்

"அதோ அது தான்.. அப்படித் தான் திறக்கணும்.. என்ன நீ, இதுவரை காரில் ஏறினதே இல்லையா? இப்படித் தடவற!"

"..."

"இப்போ இதைப் போடத் தெரியுமா இல்லை அதுவும் நான் தான் செய்யணுமா? "
முறைத்துவிட்டு ஒலிப்பேழையை உள்ளே தள்ளினான். கொஞ்ச நேரம் பாட்டு மட்டும் ஒலித்தது.. ..

"ஏய்!..ஏய்!.. என்னது இது.. இப்படி ப்ரேக் போடற?" வண்டி ஏற்கனவே நின்றிருந்த காரின் பின் விளக்கைக் கிட்டத் தட்ட இடிப்பது போல் உரசி நின்றது.

"என்ன பண்ணச் சொல்ற?!! திடீர்னு தான் பார்த்தேன்.. அங்க சிக்னல் இருக்கு..."

"ஓ.." கொஞ்சம் பயத்துடன்.. "ஆமாம், அதென்ன ரெண்டு காலை வச்சி ஓட்டற?"

"பின்ன, ஒண்ணு ஆக்சலரேட்டருக்கு.. இன்னோண்ணு ப்ரேக் பிடிக்க.."

"ஓ, வெளங்கிரும்.. உனக்கு நிஜமாவே கார் ஓட்டத் தெரியுமா?"

"என்ன நீ, திரும்பித் திரும்பி கேட்குற?!! அதான் ஓட்டறேனே.."

"ஏய்!.. ஏய்!.. இரு இரு.. முன்னாடி பார்த்து ஓட்டு.. என்னைப் பார்க்காதே.. "

இன்னொரு சடன் ப்ரேக்.. ஓட்டுதளம்(லேன்) மாறிப்போனதில் பின்னால் வந்து கொண்டிருந்த பேரூர்தி (ட்ரக்) பெரிதாக ஒலிப்பானை அமுக்கி எச்சரித்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கிச் சென்றது. ஒதுங்கி விட்டதால் ஏதோ கார் பிழைத்தது..

"ஹி.. ஹி.. " என திரும்பிப் பார்த்து இளித்தாள்..

"கொஞ்சம் பார்த்து ஓட்டும்மா. எங்கம்மாவுக்கு நான் தான் ஒரே முதல் பையன்.."

"ம்ம்.. பார்க்கிறேன்.."

சொல்லிக் கொண்டே சாலை திருப்பத்தில் எதிரில் வரும் காருடன் தலைக்குத் தலை மோத முயன்று சட்டென எதிர் வண்டிக்காரன் சுதாரித்துத் திரும்பியதில் தலை தப்பியது.

"ராங் சைட் வந்திருக்கேன் போலிருக்கு..." அப்பாவியாகச் சொன்னாள்.

"ஓ மை காட்.. இது எங்க போய் முடியப் போகுதோ!!"

திடீரென அவனுக்குள் அந்தக் கேள்வி உதித்தது..

"ஏய், உன்கிட்ட லைசன்ஸ் இருக்கா?"

"ஹி ஹி சிவா.. அதெல்லாம் எதுக்கு? அதான் உன் கிட்ட இன்சூரன்ஸ் இருக்கே.."

சிவாவின் பார்வையில் இருந்தது கொலைவெறியா, சுய பச்சாதாபமா, கோபமா, இல்லை மீண்டும் வண்டியைக் கிளப்பிவிட்டாளே என்னும் மரண பயமா?

[ ஹி ஹி.. வாத்தியார் மரணம்னு தலைப்பு கொடுத்தாலும் கொடுத்தார்.. எல்லா பக்கத்திலும் மரணத்தைப் பத்தி ஒரே உருக்கமான, நெஞ்சைத் தொடும் கதைகளா ஆகிடுச்சு.. அதான்.. கொஞ்சம் மூட் மாத்தலாம்னு யோசிச்சேன்.. :)) ]

அந்தப் பயம் - தேன்கூடு போட்டிக்கு இல்லை..

30 comments:

துளசி கோபால் said...

புரிஞ்சுருச்சு. லைசன்ஸ் எடுக்க ட்ரை பண்ணறீங்க.

சரியா?

பினாத்தல் சுரேஷ் said...

தூள் பொன்ஸ்!

போட்டிக்கும் அனுப்பலாமே.. காமெடி குட்டாதுன்னு யாராச்சும் (குறிப்பா இளவஞ்சி) சொல்லுவாரா என்ன?

டயலாக் இயல்பா வர ஆரம்பிச்சுடுச்சின்னாலே, சிறுகதை எழுதறதுலே 90% தேர்ச்சின்னு அர்த்தம்.

மனதின் ஓசை said...

யார் அந்த பாவப்பட்ட சிவா?

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, மனதின் ஓசை, எல்லாமே சொந்தக் கதையா இருக்கணுமா என்ன? இது புனைவு தான் :)

சுரேஷ், காமெடி கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க.. இதுல மரணம் கான்சப்ட் ரொம்ப இல்லையே.. அதோட, ஒரு போட்டிக்கு ஒரு கதை போதும்ங்கிறது என்னோட ஐடியா.. அதுக்கு மேல எழுதினா, எனக்கே குழப்பமாய்டும் :)

மனதின் ஓசை said...

//எல்லாமே சொந்தக் கதையா இருக்கணுமா என்ன? //

சீ சீ.. அப்படி எல்லாம் நினைச்சிகிட்டு படிக்கல... ஆனா கதைய படிச்சப்ப, அப்படிப்பட்ட பொண்ணு நீங்களா மட்டும்தான் இருக்க முடியும்னு தோனுச்சு..அதனாலதான்.... :-)

//எங்கம்மாவுக்கு நான் தான் ஒரே முதல் பையன்.."//
பள்ளி பருவ உரையாடல்கள் ஞாபகத்துக்கு வருகின்றன...

நல்ல கதை..அப்பப்ப இந்த மாதிரியும் கதைகளும் தேவை..:-)

குமரன் (Kumaran) said...

:))))))

தருமி said...

சரி விடுங்க..புதுசா, அதுவும் புது நாட்டில மொதல்ல வண்டி ஓட்றிங்கன்னா அப்படித்தான். சிவா - உங்க மனசாட்சிதானே..?

VSK said...

//"ம்ம்.. வரேன்.., வேற வழி?"//

"ஆவல் பொங்க அவனை விழியால் அளந்தாள்"

அப்படீன்னு ஒரு வரி சேர்த்துடுங்க இங்கே!

இன்சூரன்ஸ் பக்காவா எடுபடும்!

மணவிழாவிற்குப் போக அவனைக் கூட்டிச் செல்லவில்லை அவள்!....
மரணவிழாவிற்கு.... என்பது புரிபடும்!

ramachandranusha(உஷா) said...

ம்ம்ம்ம் குருவை மிஞ்சிய சிஷ்யை :-)

பொன்ஸ்~~Poorna said...

//அப்பப்ப இந்த மாதிரியும் கதைகளும் தேவை..:-) //

என்ன உள்குத்து?

குமரன், நல்லா சிரிக்க வச்சிட்டேன் போலிருக்கு.. :)

//சிவா - உங்க மனசாட்சிதானே..? //
தருமி, இப்போத்தாங்க நம்ப வச்சேன் மக்களை.. இது என்னோட சொந்தக் கதை இல்லைன்னு... ம்ஹும்.. :)

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே, கவிஞராச்சே.. எல்லாத்தையும் காதல் கதையாவே பார்க்கறீங்க.. லாஜிக் கேட்டீங்கன்னா,
//எங்கம்மாவுக்கு நான் தான் ஒரே முதல் பையன்.//
//அதான் உன் கிட்ட இன்சூரன்ஸ் இருக்கே//
இப்போ ஓகேவா? அந்த பிற்சேர்க்கை எல்லாம் தேவையில்லை தானே? ;)

// குருவை மிஞ்சிய சிஷ்யை//
உஷா, எதுல? வண்டி ஓட்டறதுலயா? ;)

வெற்றி said...

பொன்ஸ்,
இதுவரை சோகக் கதைகளை எழுதிவந்த நீங்கள் இப்ப இப்பிடி ஒரு நகைச்சுவைக் கதையையும் எழுதி நீங்கள் ஒரு சகலகலாவல்லி(சகலகலாவல்லவனுக்கு பெண்பால் சகலகலாவல்லி?] எண்டு நிரூபித்துவிட்டீங்கள். வாழ்த்துக்கள்.
அதுசரி, இப்பிடி தொடர்ச்சியாய் கதை எழுத உங்களுக்கு எப்பிடி நேரம் கிடைக்குது?

நாகை சிவா said...

//அதென்ன ரெண்டு காலை வச்சி ஓட்டற?"
"பின்ன, ஒண்ணு ஆக்சலரேட்டருக்கு.. இன்னோண்ணு ப்ரேக் பிடிக்க.."//
ஆஹா.... அவன் உசிரு ரெண்டு காலுக்கு நடுவில் தான் இருக்கா

//எங்கம்மாவுக்கு நான் தான் ஒரே முதல் பையன்.."//
இந்த டயாலக் நானும் அடிக்கடி சொல்வேன். நல்லா காமெடியான ட்யலாக். அடுத்தவனுக்கு சட்னு புரியாது.

//இல்லை மீண்டும் வண்டியைக் கிளப்பிவிட்டாளே என்னும் மரண பயமா?//
வேற என்ன தோணும், இதை தவிர

வல்லிசிம்ஹன் said...

தூள்! நிங்க ஊருக்கு வந்து காரை எடுக்கும்போது யாரவது ஏறுவாங்க?
எனக்குத் தோணலை.:-((((((((

பல்லே சுளுக்கிக் கிச்சு.
தான்க் யூ.
அப்பா ஒரே சோகமா பார்த்து(என்னுதையும் சேத்துதான்)
நல்ல மழை பெய்த மாதிரி இருக்கு.

ALIF AHAMED said...

வண்டிக்கு இன்சுரன்ஸ் இருக்கு உங்களுக்கும் ஒன்னு எடுத்திட்டா நல்லது ....

மணியன் said...

அந்த பயம் ஒரு பெண் ஓட்டுவதால் என்ற ஆணாதிக்க சிந்தனையை கண்டிக்கிறேன் :)
நான் முதன்முதலில் கார் ஓட்டியபோது என் மனைவி முகத்தில் அந்த பயத்தைப் பார்த்தேன்.

ILA (a) இளா said...

பொன்ஸ், இந்த பதிவுல ஒரு கருத்து சொல்லியிருக்காங்க(அவுங்களுக்கு தெரியாமலே). மொதல்ல ஆய்ள் காப்பீடு, ஓட்டுனர் உரிமம் எல்லா எடுத்த பின்னாடி, உங்க துணையை மகிழுந்துல கூட்டிக்கிட்டு போங்க. சரிங்களா பொன்ஸ்?

பொன்ஸ்~~Poorna said...

// இதுவரை சோகக் கதைகளை எழுதிவந்த நீங்கள் இப்ப இப்பிடி ஒரு நகைச்சுவைக் கதையையும் எழுதி நீங்கள் ஒரு சகலகலாவல்லி எண்டு நிரூபித்துவிட்டீங்கள். //
வெற்றி, என்னோட கதை தவிர்த்து மத்த அனுபவங்கள் பதிவெல்லாம் பாருங்க.. எனக்கு அவ்வளவா சோகமே பிடிக்காதுங்க.. :)

//அதுசரி, இப்பிடி தொடர்ச்சியாய் கதை எழுத உங்களுக்கு எப்பிடி நேரம் கிடைக்குது? //
வெற்றி நீங்களும் வரவர உள்குத்தெல்லாம் ஆரம்பிச்சிட்டீங்க.. அது வந்து.. கதை, கவிதைன்னு ஒரே இலக்கிய ஆர்வத்தோட இருக்கேனா.. அதான்.. தூங்கும் போதும் விழிக்கும் போதும் அதைப் பத்தியே யோசிக்கிறேனா.. சரி சரி.. யானை (அதாங்க என்னோட மனசாட்சி) முறைக்குது.. வெளியூர்ல தனியா இருக்கிறதுனால இப்படி நிறைய நேரம் கிடைக்குதோ என்னவோ.. :)

//(சகலகலாவல்லவனுக்கு பெண்பால் சகலகலாவல்லி?]//
அட, சரிதாங்க.. சகலகலா வல்லி மாலைன்னு ஒரு பாட்டே வச்சிருக்கோமே

பொன்ஸ்~~Poorna said...

//இந்த டயாலக் நானும் அடிக்கடி சொல்வேன். //
நான் அடிக்கடி சொல்வேங்க.. என்ன செய்ய, ஒரே முதல் பொண்ணாப் பிறந்தா இப்படித் தான் சொல்லிக்கணும் ;)
//வேற என்ன தோணும், இதை தவிர //
சிவா, ஒரு நாள் ட்ரை பண்றீங்களா? ;)

//அப்பா ஒரே சோகமா பார்த்து(என்னுதையும் சேத்துதான்)
நல்ல மழை பெய்த மாதிரி இருக்கு. //
மனு, சிரிப்பு வந்ததுக்கு ரொம்ப நன்றி, ஆனா சிவா பாடு தான் பாவம்... ;)

பொன்ஸ்~~Poorna said...

//வண்டிக்கு இன்சுரன்ஸ் இருக்கு உங்களுக்கும் ஒன்னு எடுத்திட்டா நல்லது .... //
மின்னல், கதையே மனித உயிரோட இன்சுரன்ஸ் பத்தி தான்.. வண்டியப் பத்தி அவ பேசவே இல்லையே!!

//அந்த பயம் ஒரு பெண் ஓட்டுவதால் என்ற ஆணாதிக்க சிந்தனையை கண்டிக்கிறேன் :)//
மணியன், என்னது இது??? யாரு அப்படிச் சொன்னது?!! நானாவது ஆணாதிக்கமாவது. என்னோட பதிவில நிறைய பெண்ணாதிக்க சிந்தனை இருக்கிறதா சில கம்ப்ளெயின்ட்ஸ் வருதுங்கோ... ;)

//மொதல்ல ஆய்ள் காப்பீடு, ஓட்டுனர் உரிமம் எல்லா எடுத்த பின்னாடி, உங்க துணையை மகிழுந்துல கூட்டிக்கிட்டு போங்க. //
அது சரி.. கரெட்டுங்க இளா.. ஆனா, துணைங்கிறதை, நான் வன்மையா கண்டிக்கிறேன்.. அது யாரா வேணாலும் இருக்கலாம்.. கதைப்படி, சும்மா நிற்கிறவனை உசுப்பேத்தி அழைச்சிகிட்டு போகிறதாவும் இருக்கலாமே!!

இலவசக்கொத்தனார் said...

கடைசி வரை உங்க பேரை சொல்லாமலேயே கதையை முடிசுட்டீங்களே.

நல்ல வேளை ஜிரா கீழ விழும் போது நீங்க இங்க இருந்தீங்க. இல்லைன்னா அதையும் உங்க பேருல எழுதியிர்ருப்போம்....

ILA (a) இளா said...

துணைன்னா வாழ்க்கைத்துணைன்னு நெனச்சுட்டீங்களோ?
நட்பெல்லாம் துணை இல்லீங்களா?

நாகை சிவா said...

//சும்மா நிற்கிறவனை உசுப்பேத்தி அழைச்சிகிட்டு போகிறதாவும் இருக்கலாமே!! //
எங்க? பரலோகத்துக்கா?

//சிவா, ஒரு நாள் ட்ரை பண்றீங்களா? ;)//
இந்த டகால்டி வேலை எல்லாம் நம்பகிட்ட ஆவாது, இங்க நாங்க அத தானே புல் டைம் ஜாப்பா செய்துக்கிட்டு இருக்கோம். அப்புறம் எப்படி நாங்க மாட்டுவோம்.

//நட்பெல்லாம் துணை இல்லீங்களா?//
இளா கேட்குறார்ல பதில் சொல்லுங்க.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், நல்ல வேளை ஜிரா அடிபடுறதுக்கு முந்தியே நான் வந்திட்டேன்.. எனக்கே இப்போ தான் எப்படி மயிரிழையில் தப்பி இருக்கேன்னு புரியுது.. :)

//நட்பெல்லாம் துணை இல்லீங்களா//
இளா, இந்தப் பையன் நட்பு கூட இல்லையே.. சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தவன் தானே.. அதோட, முந்தியே ஒருத்தர் இந்த அர்த்தத்துக்கு கொண்டு வந்ததால, இப்படி டிஸ்கி போட வேண்டி இருக்கு..

//இந்த டகால்டி வேலை எல்லாம் நம்பகிட்ட ஆவாது, இங்க நாங்க அத தானே புல் டைம் ஜாப்பா செய்துக்கிட்டு இருக்கோம். அப்புறம் எப்படி நாங்க மாட்டுவோம்.//
சிவா, புல் டைம் ஜாப்பா என்ன பண்றீங்க? என்னை மாதிரி சும்மா இருக்கிறவங்களுக்கெல்லாம் வைகுண்டத்துக்கு வழி காட்டறீங்களா ;)?

நாகை சிவா said...

//சிவா, புல் டைம் ஜாப்பா என்ன பண்றீங்க? //
ஆஹா, ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேன் என்கிறார்கள். அத அப்படியே பிடிச்சுக்க வேண்டியது, இதுக்காக தான் அந்த மேட்டர சொன்னேன் போதுமா!

// வைகுண்டத்துக்கு வழி காட்டறீங்களா ;)?//
பரலோகம் சொன்னத்துக்கு தானே இது?

பொன்ஸ்~~Poorna said...

சிவா,
fulltime ஆத் தான் செய்றீங்க.. அந்தப் பதிவு எழும்பி எழும்பி வருவதைப் பார்த்தால் தெளிவாத் தெரியுது ;)

//பரலோகம் சொன்னத்துக்கு தானே இது?//
நானும் உங்க பின்னூட்டத்தைப் பார்த்து பரலோகம்னு தான் எழுதலாம்னு இருந்தேன்.. ஏனோ அந்த வார்த்தையைப் போட மனசு வரலை.. எதுக்கு வம்புன்னு தான் வைகுந்தம் கைலாசம்னு மாத்திட்டேன் ;)

Chandravathanaa said...

பொன்ஸ்
தகவலைத் தந்ததற்கு மிகவும் நன்றி

நட்புடன்
சந்திரவதனா

நாகை சிவா said...

//ஏனோ அந்த வார்த்தையைப் போட மனசு வரலை.. //
:)))))))))))))

பொன்ஸ்~~Poorna said...

சந்திரவதனா, நன்றி :)

ரகு,
//எதுக்கும் இனி உங்க பிரயாணத்துல கொஞ்சம் ஜாக்கிறதயா இருங்க.
//

எல்லாம் கூட வர்றவங்க தான் எல்லா சாமியையும் வேண்டிக்கிடறாங்களே.. நமக்கொண்ணும் ஆகாதுங்க ;)

பெருசு said...

அக்கா பொன்ஸூ

அந்த பயம் சரியா

இல்லை அந்தப்பயம் சரியா.

எனக்கு என்னமோ தப்பாப்படுது(ஆனா இது சரி).

அந்த(ப்)பயம் புணர்ச்சி விதியிலே எதோ தப்பு இருக்குன்னு தோணுது.

யார் கிட்டயாவது கேட்டு சொல்லுங்க.

எங்கடா யானையக்காணோமுன்னு பாத்தா போய் புதுசா மேக்கப் போட்டு
வந்திருக்கு.