Monday, May 29, 2006

துளசி அக்காவுக்கு தாங்க்ஸ்!!!!

ஒரு வழியா ஒரு பெரிய்ய்ய பிரச்சனை ஒழிந்தது..

நுண்ணலை அடுப்பில் துளசி அக்கா தந்த செய்முறைப்படி சாதம் தயார்.. !!!

அக்கா சொன்ன சமையற்குறிப்பு இதோ:

மைக்ரோவேவ் ரைஸ் குக்கர் வாங்கிரணும். 1 கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணி. நான் அவ்வளோதான் ஊத்தறேன். ஆனா இது ஜாஸ்மின் அரிசிக்கு. பாசுமதின்னா 3 கப்.
100% பவர்லே 4 நிமிஷம், 70% பவர்லே 4 நிமிஷம், 9 நிமிஷம் 59% பவர்,அப்படிப் போட்டாத்தான் தண்ணி வழியாது.


இதில் ரைஸ் குக்கர் மட்டும் நான் வாங்கவில்லை..

மற்றபடி அக்கா சொன்ன பவர்/நிமிடக் கணக்கு அப்படியே பின்பற்ற, மல்லிப்பூ போல உதிரி உதிரியான சாதம் தயார்.

அக்கா, உங்களுக்கு என் ஸ்பெசல் தாங்க்ஸ்!!!:)

என் நன்றிகளைத் தெரிவிக்க, பலூனுடன் யானையாரை நியூசிக்கு அனுப்பியுள்ளேன்.. :) .. ஏர்போர்ட்டிலிருந்து ரிசீவ் செய்துகொள்ளவும். கடப்பாறையை எடுத்துப் போய்டாதீங்க, பயந்து ஓடிடப் போறாரு :)




கொத்தனார், ஜிரா கவனிக்க: நானும் ஒரு சமையற்குறிப்பு பதிவு போட்டுவிட்டேன் :)

49 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல வேளை அந்த மட்டும் வெந்நீர் தயார் பண்ண குறிப்பு போடலையே. அது வரைக்கும் சரி. வரப்போற ரங்கமணியை நினைச்சால்தான் பாவமா இருக்கு.

துளசி கோபால் said...

பொன்ஸ்,

எப்படியோ பட்டினி கிடந்து வயித்தைக் காயப்போடாம, சோறு சாப்புட்டு நல்லா இருந்தா அதுவே போதும்.

நீங்கெல்லாம் பச்சைப் புள்ளைங்க. அதான் நம்ம 18 வருச மைக்ரோவேவ் அனுபவத்தை எடுத்து வுட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ் எப்போ சாம்பார் பொரியல் செய்யப் போரீங்க/

- யெஸ்.பாலபாரதி said...

ம்ம்ம்.. சமைக்கவும் கற்றுக்கொடுக்கிறது அமெரிக்க வாழ்வு..

VSK said...

//'குண்டு' எல்லாம் வேண்டாம்!
உடனே, பக்கத்தில் உள்ள, வால்-மார்ட் அங்காடிக்குச் சென்று 6 - 7 டாலரில் ஒரு மைக்ரோவேவ் குக்கரை வாங்கி,
ஒரு கப் அரிசிக்கு, 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி,
15 - 20 நிமிடம் டைமர் வைத்து அழகான அரிசி சோறு சாப்பிட வாழ்த்துகிறேன்!//

துளசி கோபால் சொல்வதற்குப் 10 பின்னூட்டத்திற்கு முன்னமேயே இந்த செயல்முறையை நான் சொல்லியிருந்தேன்!

எனக்குத் 'தேங்க்ஸ்' கிடையாதா?!!:))

கலிகாலமடா சாமி!

கார்திக்வேலு said...

பொன்ஸ்,
நுண்னலை அடுப்பில் அரிசியைப் பொங்கும் முன் ,சிறிது நேரம் ( 3/4 நிமிடம்)
தண்ணீரில் ஊற வைத்தால் சாதம் இன்னும் மிருதுவாகவும் , சுவையாகவும் இருக்கும்.
(என் முதல் முதல் சமையல் குறிப்பு , மங்கையர் மலர் தரத்திற்கு இருக்கா தெரியலையே :-) )

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், உங்க பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி :)

துளசி அக்கா,, வெரி வெரி தாங்க்ஸ்.. மறுபடியும் :) (இது இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் :))

மனு, சாம்பார் பொரியல் எல்லாம் செஞ்சிதாங்க சாப்பிட்டேன்.. :)

பொன்ஸ்~~Poorna said...

பாலா, அட, நமக்கும் கொஞ்சம் அடிப்படை சமையல் தெரியும்ங்க.. யாருமே நம்ப மாட்டேங்கறாங்க!!! :(

எஸ்கே, உங்க வழிமுறை நமக்கு சரிப் படலைங்க :) அதுனால தாங்க்ஸ் அக்காவுக்கு மட்டும் தான் :).. உங்களுக்கு வேற தாங்க்ஸ், உங்க புண்ணியத்துல எனக்கு விசிலே கிடைச்சுடுச்சு :)

கார்த்திக்வேலு, மங்கையர் மலர் தரத்துக்கு இருக்கான்னு செஞ்சு பார்த்து சொல்றேன்.. அப்புறம் ம.மலருக்கு அனுப்பலாம் :)

Unknown said...

எஸ்.கே சார் சொன்ன மாதிரி நானும் போன பதிவுலேயே மைரொவேவ் பத்தி சொல்லியிருந்தேன்.எனக்கும் நன்றி தெரிவிச்சு ஒரு பதிவு போடவும்.

பொன்ஸ்~~Poorna said...

செல்வன், எனக்கு நிஜமாகவே குழப்பமா இருக்கு!!! நீங்க மைக்ரோவேவ் பத்தி என்ன சொல்லி இருந்தீங்க?!! டாலர் ஸ்டோரில் போய் கப்பு, ஸ்பூன் எல்லாம் வாங்கச் சொன்னீங்க.. அதெல்லாம் இங்க தங்குமிடத்திலேயே இருக்கு.. நான் வேற எடுத்து வந்திருக்கிறேன்..

எவ்வளவு நுட்பமா தேடினாலும், இந்த நுண்ணலை சமைப்பான் பத்தி நீங்க என்ன சொன்னீங்கன்னே தெரியலையே!!

மணியன் said...

ஆகா, சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவில் சமையல் செய்ய நியூசி யிலிருந்து சமையல் குறிப்பு. என்னே இணையத்தின் பெருமை.:))

Unknown said...

சொல்லலையா?ஒரு வேளை சொல்ல நினைச்சு மறந்திருப்பேன்.இருந்தாலும் நல்லதை மனதில் நினைத்ததற்கே ஒரு நன்றி பதிவு போடணுமாக்கும்:-)))

துபாய் ராஜா said...

///"நானும் ஒரு சமையற்குறிப்பு பதிவு போட்டுவிட்டேன் :)"///.

"புதரகத்தில் புதுப்பயணம் துவக்கிய
பொன்சின் இந்த 'சாதக்குறிப்பு' சாம்பார் குறிப்பு,ரசக்குறிப்பு மற்றும் பொரியல் குறிப்பு,கூட்டுக்குறிப்பு என வடை,பாயாசகுறிப்பு வரை வளர்ந்து
'சாதனை குறிப்புகளாக'மாறி
சாகசம் புரிந்திட வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

தருமி said...

தமிழினி-முத்து நம்ம நள பாகத்தைச் சாப்பிட்டுவிட்டு என்னமா ஒரு நற்சான்றிதழ் கொடுத்திருந்தார் தெரியுமா? அதெல்லாம் இப்போ பழகினது. பழகாத காலத்தில் நான் பட்ட கஷ்டம் தெரியணும்னா எதுக்கும் இதை வாசிச்சுப் பாருங்க. (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!):-)

பொன்ஸ்~~Poorna said...

உண்மைதான் மணியன், தமிழ்மணத்தின் பெருமைன்னு இல்லை சொல்லி இருக்கணும்?!!

//இருந்தாலும் நல்லதை மனதில் நினைத்ததற்கே ஒரு நன்றி பதிவு போடணுமாக்கும்:-))) //
சரி செல்வன், சீக்கிரம் போடுங்க!! :)

ராஜா, உங்களோட சிறு குறிப்பு சூப்பர் :)

//தமிழினி-முத்து நம்ம நள பாகத்தைச் சாப்பிட்டுவிட்டு என்னமா ஒரு நற்சான்றிதழ் கொடுத்திருந்தார் தெரியுமா? //
ம்ம்ம்ம்... நானும் சாப்பிட்டிருக்கவேண்டியது தருமி.. மிஸ் பண்ணிட்டேனேன்னு கொஞ்சம் வருத்தம் தான்.. இருக்கட்டும், வந்து பாத்துக்கிடறேன் :)

ILA (a) இளா said...

பாலையில "தலை" மண்டை காய, "பிகுலு" சோறு செய்ய நியூசிலிருந்து குறிப்பு வாங்க என்ன சங்கத்து மக்கள் சோத்துக்கே இவ்ளோ கஷ்டப்படவேண்டியிருக்கோ. யார் கண் பட்டதோ தெரியல. மொதல்ல எல்லருக்கும் மந்திரிச்சு போட ஒரு மந்திரவாதிய தேடனும்.

ரிஷி said...

Kadasiyile.. rice seyia kattikitachu...next recipies eppo varum :):)

Unknown said...

அடுத்த சமையல் குறிப்பு பதிவு - டீ போடுவது எப்படி என இருக்குமோ?

G.Ragavan said...

அடடா! சோறு வெக்கிறதுக்கு இப்படி ஒரு குறிப்பா...அதப் போட்டுட்டு என்னயக் கூப்புட்டு வேறச் சொல்லீருக்கீங்க...

சரி...நம்ம தகவலுக்கு வருவோம். மைக்ரோவேவ் ஓவன்ல அரிசி வெச்சா..ரொம்ப நேரமாகுதே....அதுக்கு அடுப்புலயே தண்ணி ஊத்தி கொதிக்க வெச்சிரலாம் போல இருக்கே....

Chellamuthu Kuppusamy said...

மேலும் ஒரு தமிழ்ப் பதம் இங்கே கிடைக்கிறது - நுண்ணலைச் சமைப்பான். ஆமா மைக்ரோவேவ் ஓவன் ஆண்பாலா? சமைப்பான்-ன்னு ஏன் சொல்லனும்?

பொன்ஸ்~~Poorna said...

இளா, சீக்கிரம் நல்ல மந்திரவாதியைக் கூட்டி கிட்டு வாங்க...

ரிஷி, அடுத்த ரெசிபி உங்ககிட்டேர்ந்து தான் எதிர்பார்க்கிறோம் :)

துபாய்வாசி, துபாய்ல டீ கிடைக்கலியா? சொல்லித்தர்றேன் இருங்க :)

இலவசக்கொத்தனார் said...

//ஆமா மைக்ரோவேவ் ஓவன் ஆண்பாலா? சமைப்பான்-ன்னு ஏன் சொல்லனும்?//

அதாவதுங்க வேலை பாக்கற விஷயத்துக்கு எல்லாம் ஆண்பால் பெயர். அலங்கரப் பொருட்கள் எல்லாம் பெண்பால்.

வாங்க மக்களே. வந்து அடிச்சு சாத்துங்க.

(வேற ஒண்ணுமில்லை. இணையத்தின் இணையில்லா சூப்ரீம் ஸ்டார் பொன்ஸ் அவர்களுக்கு 50 பின்னூட்டம் வர வாக்கு கொடுத்தாச்சு. இப்படி எதாவது கொளுத்திப் போட்டாத்தானே. சிந்து பாட சந்து கொடுத்த குப்புசாமி செல்லமுத்து அவர்களுக்கு நன்றி)

பொன்ஸ்~~Poorna said...

//சோறு வெக்கிறதுக்கு இப்படி ஒரு குறிப்பா...அதப் போட்டுட்டு என்னயக் கூப்புட்டு வேறச் சொல்லீருக்கீங்க...
//
என்ன ஜிரா, எனக்குத் தெரிஞ்ச பைவ் ஸ்டார் குக் நீங்க தானே.. உங்க கிட்ட தானே சொல்ல முடியும்?!! உங்கள் ஐயங்களுக்கு துளசி அக்கா, எஸ்கே போன்ற மைக்ரோ வேவ் மேக்னெட்ஸ் பதில் சொல்வார்கள் :)

// மைக்ரோவேவ் ஓவன்//
குப்புசாமி, ஓவன், அவன்ன்னு சொல்லறதுனால, அது ஆண்பால்தான்.. அத்தோட, நளபாகம்னு சொல்கிறோமில்லை, அதுனால, சமையல் தொடர்பான எல்லாமே ஆண்பால்தான் !!! எப்படி?!!

ramachandranusha(உஷா) said...

துளசி, என்னிடம் இருப்பது நேஷனல் பிராண்டு. அதுல இந்த பர்சண்டேஜ் இல்லையே. மைக்ரோபவர் என்று இருக்கும். எனக்கு அதுல அரிசி வைக்க வரவில்லை.

யாராவது, உஷாவுக்கு சாதம் சமைக்கக்கூட வராதா என்று சொல்லி என்னை அழ விடாதீர்கள்.
பத்தொம்பது வருடமாய் ஆக்கிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுல வாழ்க்கைதுணைக்கு
பிரெட், கார்ன்பிளேக்ஸ், ஓட்ஸ் இவையெல்லாம் பிரேக் பாஸ்ட்டுக்கு சாப்பிட்டால், வயிற்றால் போக
ஆரம்பித்துவிடும். இட்லி என்றால் சட்னி அரைத்தாலும் மிளகாய் பொடி வேண்டும். மாயவரத்து
காரர்களுக்கே நாக்கு முழ நீளம். நான் ஓவென்று அழுததைப் பார்க்க வாசன் பிள்ளை அவர்களின் பதிவு,.

பொன்ஸ்~~Poorna said...

//அதாவதுங்க வேலை பாக்கற விஷயத்துக்கு எல்லாம் ஆண்பால் பெயர். அலங்கரப் பொருட்கள் எல்லாம் பெண்பால். //

கரெக்டு கொத்ஸ்.. உண்மைதான்

//வேற ஒண்ணுமில்லை. இணையத்தின் இணையில்லா சூப்ரீம் ஸ்டார் பொன்ஸ் அவர்களுக்கு 50 பின்னூட்டம் வர வாக்கு கொடுத்தாச்சு//
அட.. உங்க ரசிகர் மன்றத்துக்கு வர மாட்டேன்னு சொன்னத்துக்கு இப்படி ஒரு மிரட்டலா?!! அதெல்லாம் வேண்டாம்..

நீங்க சொல்லி இருக்கும் விஷயம் எல்லாருக்கும் ஓகேதான்.. ஒரேடியா வேலை பார்த்தா உடம்பு கெட்டுப் போய்டும்.. கொஞ்சமாவது அலங்காரம், அழகு இதெல்லாம் இருக்கணும்.. வாழ்க்கை போர் அடிக்காம இருக்க..:)

பை த பை சுப்ரீம் ஸ்டார் எனக்குப் பிடிக்காதுங்க.. ஒரு சூப்பர் ஸ்டாரோ, இளைய தளபதியோ வச்சிக்கலாமா?

பினாத்தல் சுரேஷ் said...

1. மங்கையர் மலரில் குறிப்பு வருவதற்கு செய்து பார்த்துவிட்டு சொல்வீர்களா? நீங்கள் ஒன்று மங்கையர் மலர் குறிப்பே படித்ததில்லை - அல்லது அநியாயத்துக்கு அப்பாவி.

2. வ வா சவில் நூற்றுக்கணக்கான குற்றசாட்டுகள், ப ம கவின் இளவல் கொத்தனாரின் பின்னூட்ட ஆதரவு..

வாங்க வாங்க!

இலவசக்கொத்தனார் said...

//பை த பை சுப்ரீம் ஸ்டார் எனக்குப் பிடிக்காதுங்க.. ஒரு சூப்பர் ஸ்டாரோ, இளைய தளபதியோ வச்சிக்கலாமா?//

கட்சி மாறி நம்ம பக்கம் வரப் போறீங்க. அதான் சுப்ரீம் ஸ்டார். அதெல்லாம் மாத்த முடியாது.

பொன்ஸ்~~Poorna said...

உஷாக்கா, உங்க பிரச்சனைக்கும் துளசி அக்காகிட்ட பதில் இருக்கும்.. பார்க்கலாம்

சுரேஷ், கொத்ஸ், சங்கப் பிரச்சினைகள் வ.வா.சங்கப் பலகையில். இது பொன்ஸ் பக்கங்கள்.. தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொல்கிறேன்.. ஆங்.. கொள்கிறேன்.. :)

ரிஷி said...

enkita recipie ketta HOTWATER'um IODEX pain balm than sollamudiyum :)

நாகை சிவா said...

எனுங்க, இதுக்கு எல்லாம் ஒரு பதிவா. அதுக்கு 50க்கு மேல் பின்னூட்டம் வேற.
அரிசி(சாதம்) பொங்குற தம்மாதுண்டு மேட்டருக்கு இவ்வளவு கஷ்படுறீங்க.
இந்த வலைப்பக்கத்தை போயி பாருங்க. நம்ம நண்பருடையது தான்.
http://www.arusuvai.com

பொன்ஸ்~~Poorna said...

ரிஷி,
ஐயோடெக்ஸுக்கு எல்லாம் ரெசிபி இருக்கா என்ன? சரி, சுரதா பார்த்தீங்களா? தமிழில் எழுத ஆரம்பிங்க..

சூடான் சிவா,
//எனுங்க, இதுக்கு எல்லாம் ஒரு பதிவா. //
என்னங்க நீங்க, நன்றி சொல்வது நம்ம பண்பாடாச்சே!! அப்புறம்.. சாப்பாட்டுக்கு கஷ்டப் பட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்.. ம்ம்ம்... இன்னும் ஐம்பதுக்கு வரலைங்க.. வராம பாத்துக்கிடறேன். நீங்க வேற இதுக்கெல்லாம் 50ஆன்னு கேட்டுட்டீங்க!! :)

குமரன் (Kumaran) said...

தாங்க்ஸா? நன்றி என்ற அழகிய தமிழ்ச்சொல் என்னவாயிற்று பொன்மகளே? இந்த சினம் தீர்ந்த பிறகு வந்து முழுப் பதிவையும் மறுமொழிகளையும் படிக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//தாங்க்ஸா? நன்றி என்ற அழகிய தமிழ்ச்சொல் என்னவாயிற்று பொன்மகளே? இந்த சினம் தீர்ந்த பிறகு வந்து முழுப் பதிவையும் மறுமொழிகளையும் படிக்கிறேன்.//

சொல்லின் செல்வர் குமரன், அப்படிச் சொன்னா எப்படி?!! எதுகை மோனை எல்லாம் பார்க்கணும் இல்லை?!! துளசிக்கு மோனை தாங்க்ஸ் தானே?!! நாகை சிவாவுக்குச் சொல்லணும்னா நன்றின்னு சொல்லி இருப்பேன்...:)

குமரன் (Kumaran) said...

அப்ப குமரனுக்கு மோனை என்ன? குத்தா?

பொன்ஸ்~~Poorna said...

எல்லாரும் வம்பு பண்ணனும்னே பார்க்கிறாங்க.. குமரனுக்கு குளிர்வாழ்த்துக்கள்(cool greetings).. இது எப்படி?!!!

நாகை சிவா said...

பரவாயில்லை. நடத்துங்க.

//சாப்பாட்டுக்கு கஷ்டப் பட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்.. //
அட எங்க.... எப்ப இந்தியா விட்டு வெளில வந்தேனோ அப்ப இருந்து நாய் படாத பாடு தான். அதுலேயும் இந்த பிரஞ்ச் மெனு இருக்கு பாருங்க. எப்படி தான் சாப்பிடுறான்கனு தெரியலை. எல்லாம் அரை வேக்காடு தான். சூடானில் கொஞ்சம் பரவாயில்லை. இந்தியாவில் இருந்து ஒரு மூட்டையுடன் தான் வெளியே வரது.
அரை சதம் அடிக்க வாழ்த்துக்கள்!!!!!!!!!

துளசி கோபால் said...

பொன்ஸ்,

டூடுல் போர்டுலே அவசர அழைப்பு வுட்டீங்களேன்னு வந்து பார்த்தா நிறையப்பேர்( உஷா) சந்தேகம் கேட்டுருக்காங்க.

பவர் லெவல்தான் உங்க மைக்ரோலெவல்னு நினைக்கிறேன்.
எதுக்கும் அந்த பட்டனை அழுத்தி என்னென்ன சொல்லுதுன்னு பாருங்க.

அதுக்கு முன்னாலெ ஸேஃப்டிக்காக ஒரு கப் தண்ணியை அவனுக்குள்ளெ வச்சுக்குங்க.( நமக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு பாவ்லா காமிச்சுக்கத்தான் இந்தக் குறிப்பு!)

அது சில அவென்களிலே ஹை, மீடியம் ஹை, மீடியம், மீடியம் லோன்னுன்னு கூட வரும்.
என்ன வருதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்க.

ரிஷி said...

ஆமாம் இது சுலபமாக இருகிறது.
மிக்க நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

ராகவன் கூட ஏதோ கேட்டிருக்கார் பாருங்க அக்கா... அதான் நிறைய பேர்னு சொன்னேன்..

ரிஷி, அக்கா சொன்னதை சமைச்சும் பார்த்துட்டீங்களா? ஓ.. சுரதா சுலபம்னு சொல்றீங்களா.. ஓகே ஓகே.. :)

நாமக்கல் சிபி said...

ஒரு ஃபுல் மீல்ஸ் பார்சல்!

கவிதா | Kavitha said...

பொன்ஸ், அங்க இருக்கிற வரை அவங்க உணவை சாப்பிட்டு பழக கூடாதா?..வித்தியாசமா இருக்கும் இல்ல..அங்க போயும் சோறு பொங்கி..?!! என்னவோ போங்க..

கவிதா | Kavitha said...

மைக்ரோவேவ் இங்கேயே இப்ப famous பொன்ஸ்..தெரியாதா உங்களுக்கு.. மைக்ரோவேவ் வாங்கினா cooking one month course free..மா...இந்தியா வந்தவுடனே போய் சேர்ந்துகோங்க..

இலவசக்கொத்தனார் said...

அடடா இப்படி விஷயத்தைப் போட்டு உடைச்சுட்டீங்களே. ஏற்கனவே ரங்கமணிக்கு கண்டிஷன் மேல கண்டிஷன் (பாருங்க யாராவது கண்டிஷன் ஃபீமேல கண்டிஷன் அப்படின்னு சொல்லறாங்களா. எப்பவுமே மேல்தான்!) இப்போ அவரு நுண்ணலை சமைப்பான் உபயோகிக்கும் வழிமுறைகள் பத்தி ஒரு மாதம் கிளாஸ் போயி சர்டிபிகேட் வேற வாங்கணுமா? பாவம்டா சாமி!

பொன்ஸ்~~Poorna said...

//ஒரு ஃபுல் மீல்ஸ் பார்சல்! //
:) பார்க்கலாம்

//அங்க இருக்கிற வரை அவங்க உணவை சாப்பிட்டு பழக கூடாதா?..//
கவிதா, இங்க கிடைக்கிறதெல்லாம் இப்போ இந்தியாவிலும் கிடைக்குதுங்க.. என்ன இருந்தாலும் நம்ம சாப்பாடு மாதிரி நிறைவா வருமா?

//ஒரு மாதம் கிளாஸ் போயி சர்டிபிகேட் வேற வாங்கணுமா? //
பேசாம சீப்பா கொத்தனார் க்ளாசுக்கு அனுப்பலாமான்னு யோசிக்கிறேன்... :)

இலவசக்கொத்தனார் said...

//பேசாம சீப்பா கொத்தனார் க்ளாசுக்கு அனுப்பலாமான்னு யோசிக்கிறேன்... :)//

நம்ம கிளாஸ் எப்பவுமே இலவசம்தான். அதான் எனக்கு தெரியுமேன்னு சொல்லற பார்டிங்களுக்கு மட்டும் ஹோம்வொர்க் எல்லாம் உண்டு.

என்ன நீங்க இருக்கற ஊர் பக்கம் வந்தா ஒரு வேளை சாப்பாடு போடணும். அவ்வளவுதான்.

லதா said...

// உங்களுக்கு வேற தாங்க்ஸ், உங்க புண்ணியத்துல எனக்கு விசிலே கிடைச்சுடுச்சு :) //

உங்க பேர்தான் பிகிலு பொன்ஸ்ன்னு எல்லோருக்கும் தெரியுமே :-)))

// அதாவதுங்க வேலை பாக்கற விஷயத்துக்கு எல்லாம் ஆண்பால் பெயர். அலங்கரப் பொருட்கள் எல்லாம் பெண்பால்//

எடுத்துக்காட்டு - டைப்ரைட்டர், கம்ப்யுட்டர், டெலிவி'சன்', ரெக்கார்டர், ப்ரிண்டர், காப்பியர்:-))), ரெஃப்ரிஜ்ரேட்டர், பஸ்ஸர், ஸ்பீக்கர், ட்ரையர், நெயில்கட்டர், காலண்டர், ஏர்கூலர், ............

துளசி கோபால் said...

அய்யோ ராகவன்,
அடுப்பிலே சோறு வச்சா அது வெந்து முடியறவரை ஆளு அங்கேயே இருக்கணும். இதுவே மைரோவேவ்ன்னா
அரிசியும் தண்ணீயும் அளவா வச்சிட்டு நேரத்தையும் பதிஞ்சுட்டுப் போயிரலாம். வீடு வரும்போது சோறு ரெடி:-))))

Anonymous said...

But Pons microwave cooking is not good for health..

பொன்ஸ்~~Poorna said...

What to do anony... still single.. need to cook myself ;)