Thursday, January 11, 2007

தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க

இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது மதுரை மராத்தான்.

பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.



தான் அமைப்பினரால் நடத்தப்படும் இந்த மதுரை மராத்தான் நடக்கப் போகும் நாள் 13- ஜனவரி-2007 - பொங்கலை ஒட்டி.



நிகழ்வுகள்:

  1. மினி மராத்தான் ஓட்டம்
  2. நீருக்காக ஒரு நடைபயணம்
  3. புகழ்பெற்றவர்களுடன் நடை
  4. வித்தியாசமான உடல்நிலையாளர்களின் ஓட்டம்
  5. ஸ்கேட்டிங்
  6. நீர் சேமிப்பு பற்றிய கலை நிகழ்ச்சிகள் - மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
  7. நீர்க் கண்காட்சி

நாம் செய்யக் கூடியது:

  • பொங்கலை ஒட்டி மதுரையில் இருக்க வசதிப்பட்ட நண்பர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். அனுமதிக்கட்டணங்கள் உள்ளன, ஒரு அடையாளக்கட்டணமாக.

  • மண்ணின் மைந்தர்கள், தமக்குத் தெரிந்த, தாம் அறிந்த பழைய நீர்வளமிக்க மதுரையைப் பற்றிய விஷயங்களைக் கட்டுரையாக, வரைபடமாக, புகைப்படங்களாக, பழைய பத்திரிக்கைச் செய்திகளாக, விருப்பப்பட்ட வகையில் மதுரை மராத்தான் குழுவினருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இன்றைய மதுரைவாசிகள் மதுரையின் பழைய நீர்வளத்தை அறிந்து கொள்ளவும் அவற்றை மீட்பதற்கும் ஏதுவாகும்.

  • "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமான கட்டுரைகளை (ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில்) எழுதிக் கொடுக்கலாம். விழிப்புணர்வைத் தூண்டும் இது போன்ற கட்டுரைகள் மதுரை நகர செய்தித்தாள்களில் இடம்பெற்று அனேகரைச் சென்றடையக் கூடும்.

  • தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்புக்கான வழிமுறைகளைப் பற்றியும் கட்டுரைகள் மூலம் பகிரலாம்.

  • பங்கெடுப்பவர்களுக்கு உதவுமுகமாக உங்களால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம். அது பற்றிய விவரங்கள் அறிய இங்கு சுட்டவும்.

  • மதுரை வாசியாக இருந்தால், பங்கெடுப்பவர்களுக்கு உதவவும், அவர்களை நெறிப்படுத்தவும், பங்கெடுக்கும் பொது மக்களை நெறிப்படுத்தி உதவவும் தன்னார்வலராகப் பணிபுரியலாம்.

மதுரை மராத்தான் குறித்து மேலும் அறிய:

  1. பலூன்மாமாவின் பதிவு
  2. மதுரை மராத்தான் குழுவினர்

[இந்த இடத்தில் தண்ணீரைப் பற்றிய என்னுடைய பழைய கவுஜயை நினைவுறுத்த விரும்புகிறேன். ஓடத் தயங்குபவர்களிடம் கவுஜ படித்துக் காட்டினால், தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது உறுதி :-D ]

15 comments:

அரை பிளேடு said...

நல்ல பதிவு...

காலர தூக்கி விட்டுக்னவங்க எல்லாம் வந்து ஒரு ஓட்டம் ஓடிருங்கப்பா...

:)))

வாட்டர் லாரிகள் வாழ்வாதாரமாயிட்ட சென்னையிலயும் இந்த மாதிரி விழிப்புணர்வு ஓட்டம் வந்தா நல்லாதான் இருக்கும்.

டாங்ஸ்... (இது வாட்டர் டாங்ஸ் இல்லீங்கோ... நன்றிக்கு சொல்லுற டாங்ஸ்)

:))

இலவசக்கொத்தனார் said...

தமிழ்மணத்தில் இந்த மருதகாரய்ங்க கவனத்திற்கு என வரும் பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் பேசாம இவர்களே காசியிடமிருந்து வாங்கி இருக்கலாம் போல! :))

பங்காளி... said...

மதுரைன்னு பேரப்பாத்தாலே இப்பல்லாம் உணர்ச்சிவசப்படற மாதிரியாய்டுச்சி....ஹி..ஹி....ஊர்பாசம்....கண்டுக்காதீங்க

ஆமா....இந்த மேட்டரல்லாம் நாங்கதானே போடனும்....பட்டனத்துக்காரவுக இம்புட்டு அக்கறய மேட்டர் போட்டதுக்கு டாங்ஸ்....

Anonymous said...

நல்ல தகவல்!

ஆனால் இந்த அமைப்பினருக்கு பயன்படும் இந்தத் தகவல்தான் சூப்பர்!

//[இந்த இடத்தில் தண்ணீரைப் பற்றிய என்னுடைய பழைய கவுஜயை நினைவுறுத்த விரும்புகிறேன். ஓடத் தயங்குபவர்களிடம் கவுஜ படித்துக் காட்டினால், தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது உறுதி :-D ]//

உண்மை உண்மை உண்மை தவிர வேறில்லை:-))))))))))))))))))))))))))))))))

சாலிசம்பர் said...

மெட்ராஸ்காரய்ங்க மரியாதையே இல்லாம பேசுறாய்ங்க.

ஏம் பங்காளி நீங்களாவது சொல்லக்கூடாதா?

மணியன் said...

நீங்களும் மதுரைப்பட்டணம் கூட்டுபதிவு உறுப்பினரா ?

வைகைநதிக்கரையோரம், இப்படி தண்ணீருக்கு ஓட வைத்துவிட்டார்களே :(

கோவையின் 'சிறுதுளி' இயக்கம்போல் இந்த ஓட்டம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தட்டும்.்நடத்துபவர்களுக்கும் பரப்புகின்ற உங்களுக்கும் ஒரு ஷொட்டு!

போகிறபோக்கை கவனித்தால் நாமே ஒரு தன்னார்வலர் குழுவை பதிவு செய்து கொள்ளலாமோ ?

பொன்ஸ்~~Poorna said...

அரைபிளேடு, சென்னையிலும் வரும்னு எதிர்பார்ப்போம்.

கொத்ஸ், :)))) என்னத்த சொல்ல :)

பங்காளி, ஊர்ப்பாசத்தோட நீங்களும் ஒரு பதிவு போடுங்களேன்..! முடிஞ்சா மதுரைக்கு ஒருக்கா போய் ஓடுறது?! :)

சுரேஷ்... Grrr!!!

ஜாலிஜம்பர்,
மெட்ராஸ்காரங்க அப்டித்தான் நைனா.. பேச்சுத் தான் அப்டியே ஒளிய, வெள்ள மனசுதான். நீ ஒன்னியும் கண்டுகாத.. அப்பால, மருதய்க்குப் போய் ஓடப் போறியா நைனா?


//நீங்களும் மதுரைப்பட்டணம் கூட்டுபதிவு உறுப்பினரா ? //
இல்லை மணியன், கவனத்துக்கு வந்தது அவ்வளவு தான் :).

//போகிறபோக்கை கவனித்தால் நாமே ஒரு தன்னார்வலர் குழுவை பதிவு செய்து கொள்ளலாமோ ? //
நிச்சயமாக. நம்மைப் போன்றவர்களால் நிரம்பியது தானே தன்னார்வலக் குழுக்கள்?! :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி பொன்ஸ்.
வைகையில் நீர் ஓடின நாட்கள் இருந்திருக்கிறேன்.அழகர் ஆற்றில் இறங்கும்போது உண்மையாகவே தண்ணீர் சுழித்து ஓடும்.

வைகை அணை வந்தபிறகும் திறந்துவிடப்படும் தண்ணீரால் ஆறு வளமாகவே இருந்தது.
கரையோரங்களில் குடியிருப்பு வர வர தண்ணீரும் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டதோ என்னவோ.
இத்தனை கால்கள் ஓடுவதற்கும்
வைகை அன்னை கருணை செய்யட்டும்.
நன்றி.

சேதுக்கரசி said...

நல்ல பதிவு பொன்ஸ்.

அப்புறம், "மதுர"க்காரய்ங்க இல்லை, "மருத"க்காரய்ங்க :-)

இலவசக்கொத்தனார் said...

சேது

நான் சரியாச் சொல்லி இருக்கேன் பாருங்க! அது எல்லாம் தனக்கா தெரியணும். இல்லை சொன்னாப் புரியணும். :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹா ஹா...
மிகவும் இன்றியமையாத ஒன்று!
நீரோட்டம் காண நீர் ஓட்டம் என்பது நல்ல விடயம்!

கோவைக்கு ஒரு சிறுதுளி!
மதுரைக்கு ஒரு மராத்தான்!!
சென்னை, திருச்சி - சீக்கிரம் காண வேண்டும்!

//நீர்க் கண்காட்சி//
இப்படி எல்லாம் முயற்சிக்கா விட்டால், கொஞ்ச நாளில் நீரைக் கண்காட்சியில் தான் காண முடியும்!

VSK said...

தண்ணி ஓடின காலம் போய்,
தண்ணிக்காக ஓடற காலம் இப்ப!

முயற்சி வெல்ல வாழ்த்துகள்!

கிவியன் said...

ஆஹா போர போக்குல வைகெல தண்ணிக்கு பதில மராத்தாந்தான் ஓடும் போலருக்கே?

கிபி: 2030
//மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் "நீர்க் கண்காட்சி"//
கண்காட்ச்சிலதான் நீரை பாக்கணுமோ?
இது நடக்க்கூடிய சாத்தியம் உள்ளது. ஏன் என்றால்
இந்த வருடம் ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை சரிவிகளில் மிக குறைந்த பனியினால் அங்கு பனிசறுக்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களில் பனி தாழ்வான பகுதியை விட்டு மிக உயரத்துக்கு சென்றுவிடும் வாய்ப்புள்ளது. புவிவெப்ப உயர்வினால் வரக்கூடிய பாதிப்பு இன்னும் பல வருடங்களாகலாம்ன்னு சொல்லிகிட்டுருந்தத மாத்தி இல்லப்பா நாளான்னக்கே வந்துடும்னு கவல படுறாய்ங்க. இடுல இந்தியவும் சீனாவும் வளரும் வேகத்தில் எரியர நெருப்புல எண்ணய ஊத்தின கததான். நம்ம கிவி ஷ்டைல்ல எல்லாரும் இந்த வாச்கத்துக்கு மாறினா நாம அனுபவிச்ச இந்த புவிய மிச்ச சொச்சம் நம்ம அடுட்த தலைமுறை அனுபவிக்கும் வாசகம் என்னன்னா" I burn fat not oil" அதாவது முடிஞ்சமட்டும் நடக்றது, இல்ல சைக்கிள்ல போறதுன்னு சபதம் போட்டா நல்லது. (Honda civicஅ வீட்டுல நிப்பாட்டிட்டு ராலிலதான் வேலக்கி போரேன்).

saravanana said...

"maduraikarainga ghavanika" patri ezhutha entha madurai annain ,thambigalavathu irukaingalaa.
en minnanjal mugavari
saravanana_65@yahoo.co.in

thiru said...

மாரத்தான் நடந்தது பற்றிய தகவல்கள் எதாவது கிடைத்ததா பொன்ஸ்? பொங்கல் வாழ்த்துக்கள் :)