Thursday, March 23, 2006

ஃப்ரெஞ்சு மாரி

நாங்க ரொம்ப வெட்டி ஆபீஸரா இருக்கறதினால, இப்பொ ஃப்ரெஞ்சு கத்துக்கறோம்.. சும்மா தான், ஆபீஸ் நேரத்துல ஒரு ரெண்டு மணி நேரம் சொல்லிக் குடுக்கறாங்க.

சொல்லிக் குடுக்குறவங்களுக்கு தமிழ் தெரியாது- பாவம் டெல்லிக்காரம்மா..

அதுல பாருங்க, நேத்திக்கி, "உறவுகள்" பத்தி சொல்ல ஆரம்பிச்சாங்க. "Marie" அப்டீன்னா கணவன்னு அர்த்தமாம்.

அதையும் "மாரி"ன்னு தான் உச்சரிப்பாங்களாம். இதுக்கே எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டோம்.

அவங்களும், "என்ன? இங்கயும் ஒரு மாரிமுத்து , மாரியம்மா யாராவது இருக்கீங்களா"ன்னு கேட்டாங்க. அவங்க முன்னாடி சொல்லிக் குடுத்த இடத்தில் இப்படி யாரோ இருந்தாங்களாம்.

அப்புறம் தாங்க வந்துச்சு முக்கியமான காமெடி. Elle sont - அப்டீன்னா, அவளோடன்னு அர்த்தமாம். அதை 'எல் சோ' அப்டீஇன்னு தான் படிக்கணும்.

இப்போ, இதை வச்சி ஒரு வாக்கியம் அமைக்கணும்,
"Elle sont Marie Ram"

இதை எழுதிட்டு அவங்க படிச்சாங்க பாருங்க:

"எல் சோ மாரி ராம்"

உடனே நம்மாளுங்க, சோமாறியான்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. இதுல ஒருத்தர் கேப்மாறி வேற இருக்கான்னு கேக்கறாரு.. இதுல பெஸ்ட் என்னன்னா, அந்தம்மாவுக்கு ஒண்ணும் புரியல.. பொறுமையா விளக்க வேண்டியதா போச்சு..

ஒரே தமாஷு தாங்க..

[பி.கு] கைப்புள்ளெ விரும்பிக் கேட்டதுக்காக, இன்னிக்கு எப்படியும் மூணு பதிவாவது போட்டுர்றதுன்னு முடிவு பண்ணினதன் விளைவு தான் இது. இதைப் படிச்சுட்டு எல்லாரும் சிரிச்சிருங்க, இல்லைன்னா இதே மாதிரி இன்னும் நிறைய ஜோக் கைவசம் வச்சிருக்கேன், ஒண்ணொண்ணா எடுத்து விட்டா அப்புறம் தாங்க மாட்டீங்க..

6 comments:

கைப்புள்ள said...

ஜோக்கைப் படிச்சாச்சு...சிரிச்சாச்சு! வந்ததுக்கு ஒரு உள்ளேன் அம்மாவும் போட்டாச்சு.(அம்மாவா...அய்யாவானு அப்பப்ப சந்தேகம் வருது. உங்க ப்ரொஃபைல பாத்தா அம்மானு தான் இருக்குது. பூனை கதை அய்யா எழுதுன மாதிரி இருக்கு)

அம்மாவோ...அய்யாவோ...வாழ்க உங்கள் உங்கள் எழுத்துப் பணி...வளர்க உ(எ)மது ஃப்ரெஞ்சு பொழி அறிவு.

பொன்ஸ்~~Poorna said...

அம்மா தாங்கோ. ஆனா அம்மான்னு சொல்லி ரொம்ப பெரிய பொண்ணாக்கிறாதீங்கோ.. கதை ஒரு அப்பாவின் பார்வையில் எழுதினேன். அதுக்காக இப்டி சொன்னா எப்படி?

கைப்புள்ள said...

//அம்மா தாங்கோ. ஆனா அம்மான்னு சொல்லி ரொம்ப பெரிய பொண்ணாக்கிறாதீங்கோ..//
சே! சே! அம்மணிங்க கிட்ட வயசு சம்பந்தமா எது பேசுனாலும் நமக்கு 'பாதுகா பட்டாபிஷேகம்' நடக்க சான்ஸ் இருக்குங்கிற அடிப்படை funda கூடவா எனக்குத் தெரியாம இருக்கும்?

// கதை ஒரு அப்பாவின் பார்வையில் எழுதினேன். அதுக்காக இப்டி சொன்னா எப்படி?//
நீங்க சொல்றது சரி தான். ஆனா இந்த சந்தேகம் வர இன்னொரு காரணம் நம்ம சங்கத்து கொ.ப.செ. கார்த்திக் ஜெயந்த் தன்னோட ஒரு பதிவுல உங்களைக் 'கூட்டாளி'ன்னு விளிச்சது. அனேகமா அவரும் 'அய்யா'னு தான் நெனச்சிருக்கனும்.

ganeshram said...

Superabu

பொன்ஸ்~~Poorna said...

//.ப.செ. கார்த்திக் ஜெயந்த் தன்னோட ஒரு பதிவுல உங்களைக் 'கூட்டாளி'ன்னு விளிச்சது.//
இது வேறயா?? இருங்க கார்த்திகையும் கவனிக்கறேன்..

thanks ganesh.. atlast you got the font?

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ.....
:-))))))))))))))))))))