"வார்த்தைகளில் விவரிக்க இயலாத அறிவும் திறமை மிகுந்த ஆற்றலரசி பராக் பராக்"'ன்னு கோமுட்டிதலையன் ஸ்டியோ வெளியிலிருந்து கட்டியம் சொல்லுறமாதிரி சவுண்ட் விட நம்ம படகுக்கா or பூனையக்கா or பப்பியக்கா or பொன்ஸ்க்கா அலங்காரம் செய்யப்பட்ட வண்டியிலிருந்து இறங்கி ஸ்டியோ'க்குள்ளே வருகிறார், வாசலிலே நிற்கும் கோமுட்டிதலை'கிட்டே "ரொம்ப நன்றிண்ணே! நான் சொன்னமாதிரியே, கூவிட்டிங்க, இந்தாங்க நீங்க கேட்ட மணப்பாறை முருக்கு பொட்டலம், கவுண்டருண்ணே உள்ள இருக்காங்களா"ன்னு லஞ்சம் கொடுத்துட்டு ஸ்டியோ'க்குள்ளே நுழைகிறார் ...
"இதோ இப்பொழுது ஆரம்பிக்கிறது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவுண்டர் டெவில் ஷோ வித் பொன்ஸ்... இது ஒரு முழுக்க முழுக்க பொன்ஸ் கலாய்ப்போர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும், ஆகவே வழக்கம் போல் சங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை இப்போழுது பெருவாரியாக அளிக்கும்படி விரும்பிகேட்டுகொள்கிறேன் , இந்த பொன்னான வாய்ப்பளிந்த பொன்ஸ்க்காவிற்கு மிண்டும் நன்றி சொல்லி அமர்கிறேன், இவண் ஒங்க பாசக்காரபய இராம்"
கவுண்டர்:- "அடேய் மஞ்சகலரு முடி மண்டையா! மைக் கெடச்சா இப்பிடிதான் பேசணுமின்னு யாருடா ஒங்களுக்கெல்லாம் சொல்லி குடுக்கிறது , என்னையே ஆரம்பத்திலே டென்சன் பண்ணாத? சவுண்ட் விட்டமாதிரியே ஓடி போயிரு , இல்லே ஓடி வந்து குறுக்குலே மிதிச்சிருவேன்!, நம்ம ஆற்றலரசி பொன்னம்மா வந்துருக்காங்க ! அவங்கள நான் பேட்டியெடுக்கனும்?"
பொன்ஸ்:- "என்னது பொன்னம்மா'வா? நான் என்ன கிழவியா ?"
க:- "அப்புறம் நீ பொக்கம்மா'வா ? இங்க பாரு! நாந்தான் கேள்வி கேட்பேன், நீ ஏதாவது திருப்பி என்னை கேள்வி கேட்டேன்னு வை? அப்பிடியே அந்த தும்பிக்கையை பிடிச்சு கடிச்சி வைச்சிடுவேன்!? "
பொ:- "அதுதான் ஏன்னு கேட்கிறேன், ஏன் பித்தளைதான் கேள்வி கேட்கணுமோ ? எப்போவும் ஈயம் பதில் சொல்லிக்கிட்டே தான் இருக்கணுமா என்ன?"
பொன்ஸை அருகில் வரசொல்லி நறுக் நறுக்'ன்னு தலையிலே கொட்டுகிறார் கவுண்டர்...
க:- "போய் ஒழுங்கா ஒன்னோட சேர்'லே போயி ஒக்காரு , நான் என்ன கேட்டேன் நீ என்ன பதிலுக்கு கேள்வி கேட்கிறே?, இதேமாதிரி பித்தளைகாரனுக பேட்டிக்கு வந்திருந்தா நாலஞ்சு மண்டயா 'ன்னு சொல்லி திட்டிருப்பேன், நீ பொம்பளை பிள்ளையா போயிட்டே ? இன்னும் கொட்டு வேணுமின்னா இந்தமாதிரி டிஸ்டர்பன்ஸ் கொஸ்டின்ஸ் கேளு?"
பொ:- "ஐயோ வேணாங்கணா! நான் என்னோட தும்பிக்கையை சுருட்டிகிட்டு ஒக்கார்த்துகிறேன் , நீங்க கேள்வி கேளுங்கணா?"
க:- "அந்த பயம் மனசிலே இருக்கட்டும்! அடிச்சாதான் மிதிச்சாதான் எல்லாபேரும் ஒழுங்கா இருக்கீங்க ? ஆமா அம்மணி என்ன பேரு அது பொன்ஸ்?
பொ:- "மிஸ்டர் கவுண்டர் ஒங்களை என்னாலே அண்ணா'ன்னு கூப்பிடமுடியாதுன்னு சொல்லிக்கிறேன் , எனக்கே அது ஓவரா இருக்கு, சின்னபொண்ணு தாத்தா மாதிரி இருக்கிறவரை அண்ணா 'ன்னு கூப்பிடமுடியாது?"
க:- "ஏய் ஆரம்பிச்சுட்டியே நீயி? நான் இந்நேரம் எங்க எப்பிடி இருக்கவேண்டியவன் , இந்நேரம் நான் பீக்'லே இருந்தா கோவாபீச் 'லே நமிதா'கூடா ஏ லெக் லெக்' ன்னு டூயட் பாடிட்டுருப்பேன், எங்கஷ்டகாலம், இங்க வந்து ஒன்கிட்டே பேட்டியெடுக்கிறமாதிரி ஆகிட்டேன். ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லு இல்லேன்னா இன்னொரு செட் கொட்டு வைச்சிருவேன்"
பொ: "ஓ அந்த பெயர் காரணம் சொல்லணுமின்னா ஒரு மணிநேரமில்லை ரெண்டு மணி நேரமில்லை முணுமணி நேரமெல்லாம் பத்தாது"
க:- "ஸ்டாப் த நான்சென்ஸ்? நான் என்ன கேட்டாலும் நீ எடக்குமொடக்கா 'தான் பதில் சொல்லனுமின்னு வந்திருக்கே? என்ன பண்ணுறது ? அதெயன் என்னதையாவது ஒன்னை மாத்திக்கிட்டே இருக்கே தாயி?"
பொ:- "மாற்றம் என்பது தொடர் நிகழ்ச்சி. மாற்றங்கள் சில இல்லையென்றால் சரித்திரங்கள் எழுதவே வாய்ப்பில்லை.'ன்னு பெரியவயங்க சொல்லிருங்காங்க! என்னோட சரித்தரமும் அஞ்சாம்வகுப்பு வரலாற்று பாட பொஸ்தகத்திலே வரனுமின்னு மாற்றமா பண்ணிட்டு இருக்கேன்!"
க:- "ஒன்னோட சரித்திரம் பொஸ்தகத்திலே வந்தா அது வரலாற்றுக்கே பிடிச்சே தரித்தரம்? ஏம்மா நீ என்ன போன ஜென்மத்திலே யானை மேச்சிட்டு இருந்தியா? எங்க பாரு யானை யானை' னு திரியுற?
பொ:- "இந்தமாதிரி அறிவுப்பூர்வமான கொஸ்டினை தான் நான் உங்ககிட்டே எதிர்பார்த்தேன், யானையை பத்தி நான் சொன்னா நாலு மணிநேரத்திலே முடிச்சிருவேன்னு தும்பிக்கை சாரி நம்பிக்கை இருக்கு, ஒங்களுக்கு அதெய்ல்லாம் கேட்க டயமிருக்காது, என்னோட எழுத்துபூர்வமான பதிவை படிச்சி பாருங்க."
க:- "ஆமாம், இவுக பெரிய எழுத்தாளினி அப்பிடியே எழுத்தாணியை வெச்சு ஓலையிலே செதுக்கி வைச்சமாதிரி என்ன பில்டப், இங்கப்பார் நான் என்ன கேட்கிறோனோ அதுக்கு ஒழுங்கா பதிலே சொல்லனும்,இல்லே சொன்னமாதிரியே தும்பிக்கைய பிடிச்சு கடிச்சி வைச்சிருவேன், நானும் எல்லாபயலுகளையும் பார்க்கிறேன், ஆளுக்குஆளு கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு சொல்லிட்டு திரியிறீங்க, ஒங்களுக்கு வேலைவெட்டியெல்லாம் இருக்காதா?"
பொ:- "மிஸ்டர் கவுண்டர், ஒங்க கொஸ்டின்'லே பிழை இருக்கு, அது பேரு கவிதை இல்லே, கவுஜ...
க:- "ஐயோ இந்த இம்சையை யாருடா பேட்டியெடுக்க கூப்பிட்டு வந்தது? அடேய் காட்டுமண்டையனுகளா இந்தம்மா தொல்லை தாங்கமுடியலைடா? இதை திரும்ப கூட்டிட்டு போயி காட்டுலே விடுங்கடா?நான் என்ன கேட்டாலும் திரும்பி எனக்கே கேள்வி கேட்கிது, இல்லேன்னா திருத்தம் பண்ணுறேன்னு உசுரை வாங்குது?? ஏய் யானையத்தா ஒழுங்கா இரு இல்லே கோமுட்டிதலையனுக்கு எத்து விடறமாதிரி ஒனக்கும் விட்டுறுவேன், அப்புறம் கொட்டு வாங்கிட்டு அழுதமாதிரி இப்போவும் அழுதுட்டு இருப்பே? சிறுவர் கதை எழுதுறேன்னு சின்னவயசிலே பூந்தளிர், அம்புலிமாமா'விலே இருக்கிறதே உல்டா பண்ணி போட்டுறே இல்லே?"
பொ:- "பார்த்தீங்களா நீங்களே என்னோட நினைவாற்றலை புகழ்றீங்க, போங்க சார் எனக்கு கொஞ்சம் வெக்கமாயிருக்கு!"
க:- "ஈயடிச்சான் காப்பியடிக்கிறேன்னு சொன்னா அது புகழுறதா? நீ இன்னிக்கு எடக்குமொடக்கு பண்ணியே தப்பிக்கலாமின்னு திரியுறே? என்னோமோ அறிவு சுரங்கம் மாதிரி டெக்னிக்கல் விஷயமா எழுதி கொட்டுறீயே? ஏந்தாயி இன்னொரு தடவை திரும்ப கேட்கிறேன், ஆபிசுன்னு ஒன்னு இருக்கே, தினமும் அதுக்கு வேறே தவறாமே போறியே, அங்கே வேலைன்னு ஒன்னே பார்ப்பியா மாட்டியா?"
பொ:- "ஹலோ சார், நான் ஒரு அஷ்டவதானி, என்னாலே ஒரே நேரத்திலே நிறைய வேலைகளை பார்க்கமுடியும்,"
க:- "இப்பிடியே தற்பெருமையா பேசிட்டு திரிஞ்சுட்டு இரு? வெளங்கிரும்? இந்த பொஸ்தகம் படிச்சா சும்மா இருக்கமாட்டாமே அதை வேற பதிவிலே எழுதிட்டு திரியிறே இல்லே நீயி? அதெப்படி ஒனக்கு மட்டும் யானை சம்பந்தப்பட்ட எல்லா பொஸ்தகமெல்லாம் கிடைக்கிது? இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"
பொ:- "ஹி ஹி அதெல்லாம் இல்லே கவுண்டரே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் சொல்லிருக்காங்க! அதுதான் எல்லாரும் நான் படிச்சு பயன்பெற்றதை ஷேர் பண்ணிக்கிறேன்"
க:- "ஆமா மிச்சப்பேருல்லாம் படிக்க தெரியாத கம்னாட்டிக! இவக பெரிய படிப்பாளி, எல்லாருக்கு படிச்சு காட்டுறாங்களாம்! ஏய் நீ முதியோர் கல்வியிலே பொஸ்தகம் வாசிக்கிற ஆயா வேலையா பார்க்கிறே? ஒங்கூட பேசி என்னோட பாதி உசுரு போச்சு, கடைசியா ஒன்னு கேட்கிறேன், அதுக்காவது ஒழுங்க பதிலே சொல்லிடு தாயி, போறே போக்கிலே ஒனக்கு புண்ணியமா போயிரும்!"
பொ: "சரி கேளுங்க! பதில் சொல்ல முயற்சி பண்ணுறேன்!"
க:- "போனவருசம் இதே நாளிலே வந்து பயமா இருக்குன்னு சொல்லிட்டு உள்ளே வந்தியே? இன்னிக்கு வரைக்கும் என்ன சாதிச்சு இருக்கே?
பொ: "கவுண்டர் சார், என்னோட சாதனையெல்லாம் பட்டியலிட்டா அது கிலோமிட்டர் கணக்கிலே போகும், அதிலே முக்கியமான சாதனை'ன்னா நீங்க என்னை பேட்டியெடுத்தது ,அதைவிட எல்லாரும் மாதிரியே நீங்களும் என்கூட பேச பயந்ததது, இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஒங்களுக்கு டயமிருக்கா? :)"
இவ்வாறு பொன்ஸக்கா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.
31 comments:
இன்று தன்னுடைய வலையுலக முதலாமாண்டு நிறைவை கொண்டாடும் தானை தலைவி எங்கள் அக்கா பொன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..... :)
தனைய தலைவி
ஆற்றலரசி
சாப்ட்வேர் தாரகை
பொன்ஸ்க்கா வாழ்க வாழ்க !! :))))
சரி ஒரு வருசமாச்சு யானைக்கு பாவம் கால் வலிக்கும் இந்த வருசம் ஏன் நீங்க பூனையோட brand அம்பாசிடரா இருக்க கூடாது ?? ;))))))))))
//இன்று தன்னுடைய வலையுலக முதலாமாண்டு நிறைவை கொண்டாடும் தானை தலைவி எங்கள் அக்கா பொன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..... //
Repeatu...
வாழ்த்துக்கள் பொன்ஸ்..
ஓ! அதான் மேட்டரா? வலைப்பதிவு சீனியர் என்ற முறையில் என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன்.
ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜு?
வலைஉலகில் முதல் ஆண்டை வெற்றிகரமாக முடித்திருக்கும்
பொன்ஸ் அவர்களுக்கு
என்வாழ்த்துகள்
ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))
அப்புறம்
பொன்ஸக்காவுக்கு வாழ்த்துக்கள்.
//ஏம்பா ராமு, இந்த மாதிரி
விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜு?//
எல்லாம் நார்மல் சார்ஜ்'தான் கொத்ஸ் :)
நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற நிறையா பேரை நம்ம ஆட்கள் லூசு அப்படின்னு ப்ரொபைலிங் பண்ணிடறாங்க.
அதனால இந்த மாதிரி வெவரமா பேசறேன்னு உளறாம டப்புன்னு மேட்டரைச் சொல்லும். ஆமாம்!
//ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))///
யோவ் நட்சத்திரம் :), அப்போ வெட்டி, பாண்டி, ஒனக்கெல்லாம் போட்ட டெவில் ஷோ'வெல்லாம் பொய்'க்கு போட்டதா?? ;)
//நார்மல் என்னய்யா நார்மல். தான் நார்மல் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற நிறையா பேரை நம்ம ஆட்கள் லூசு அப்படின்னு ப்ரொபைலிங் பண்ணிடறாங்க. //
கொத்ஸிண்ணே, சும்மா தெளிவா நீங்க குழப்பிறீங்கன்னு தெரியுது :)
//அதனால இந்த மாதிரி வெவரமா பேசறேன்னு உளறாம டப்புன்னு மேட்டரைச் சொல்லும். ஆமாம்! ///
ஒவ்வொரு வரிக்கும் ஒரு டாலர் சார்ஜ் தான்... :)
[கோவில் கொடுக்கிற டாலர் இல்லே... நிஜ புதரக டாலர்]
அப்புறம் பொன்ஸ்க்கா'விற்கு இன்னும் உங்க பேமண்ட் என்னோட சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் வந்து சேரலை, கொஞ்சம் பார்த்திட்டு சொல்லுங்க அக்கா :)
இங்கே எல்லாமே எடக்கு முடக்கா இருக்கே?
எப்போதும் கேள்விதான் ஷார்ட்டா இருக்கும். பதில் நீட்டா இருக்கும்.. இங்கே பதில் ஷார்ட். கேள்வி நீட்டு..
தானைத்தலைவி பொன்ஸ் அக்கா கவுண்டரை கலாய்ச்சிட்டாங்களே!
//இன்று தன்னுடைய வலையுலக முதலாமாண்டு நிறைவை கொண்டாடும் தானை தலைவி எங்கள் அக்கா பொன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..... //
என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகுக.. ;-)
//இந்த வருசம் ஏன் நீங்க பூனையோட brand அம்பாசிடரா இருக்க கூடாது ??//
யானைக்கு ஒரு காலம் வந்த மாதிரி பூனைக்கு இன்னும் காலம் வரவில்லை.. ஹிஹிஹி..
பொன்ஸக்கா,
முதலாமாண்டு வாழ்த்துக்கள்!!!
//தம்பி said...
ராம் அண்ணே உண்மையான டெவில் ஷோ இதுதான். :))//
எலேய் இதுக்கு என்ன அர்த்தம்??? பொன்ஸக்காவ டெவில்னு சொல்றியா???
பொ.க.ச,
பாஸ்டன் கிளை.
கவுண்டரை விரட்டி, பதிவிட்டுக் கொடுத்ததுக்கு பெரிய நன்றி ராம்... புதரக டாலரா? அது எப்படி இருக்கும்? டாலரில் புதரக மேப் போட்டிருக்குமா? ;)
நன்றி பாண்டி.. பூனை துளசி அக்கா தொடங்கி நாடோடி வரை நிறைய பேர் வச்சுருக்காங்க.. இப்பத்தான் நீங்க வேற நாலு குட்டியப் போட்டு = அதாம்பா, போட்டோ புடிச்சி போட்டு - சென்சேஷனக் கெளப்பி இருக்கீங்க.. பாவம்பா பூனை :) பொழச்சி போகட்டும் :)
நன்றி தேவ், முத்துலட்சுமி, கொத்ஸ் :), சிஜி :), ஸ்டார் தம்பி :),
மை பிரெண்ட், வெட்டிப்பயல், நீங்களும் இவங்க க்ரூப் தானா?!! ஆகா. பொகச படை பெருகுதே!!!!
:))))))
Ravi
யப்பா.. தானையத் தலைவியா?? இல்ல யானையத் தலைவியா?? தெளிவா சொல்லுங்க அப்பு...
பொன்ஸக்காவிற்கு வாழ்த்துக்கள். அதுலையும் கவுண்டரோட டெவில் ஷோ ஏற்பாடு பண்ணின ராமண்ணனுக்கும் வாழ்த்துக்கள்..
//எலேய் இதுக்கு என்ன அர்த்தம்??? பொன்ஸக்காவ டெவில்னு சொல்றியா???//
நல்ல பாயிண்ட்'க்கு டாங்கீஸ்ப்பா பாலாஜி,
ஓ இந்த பதிவிலே இருக்கிற மொத போட்டோ பொன்ஸ்க்காதானா :))
"என்ன மணியண்ணே, இப்படிப்பண்ணிட்டீங்க?"
"வாத்தியார், கேக்கிறதைப் புரியும்படியாக் கேளுங்க!
உங்க கிளாஸ் பசங்ககிட்ட கேக்கிறமாதிரிக் கேக்காதீங்க!"
"தன் டெவில் ஷோ வாழ்க்கையில் முதன்முறையாக பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார் கவுண்டர்.
ன்னு
பொன்ஸ் அம்மணி பதிவு போட்டிருக்கே - அதுதான்
என்ன விஷயம்னு கேட்டேன்"
"அது சும்மா டகல் பாச்சா வேலை!.நான் வேகமா
தப்பிச்சு வந்தது என்னமோ உண்மைதான். அந்த அம்மணிக்குப்
பயந்து ஓடிவரலை!. அந்த டில்லிக்காரப் பையன் தலை தெரிஞ்சுது
அந்தப் பையன் ஒருத்தன்தான் பாக்கி - என்ன வச்சு அந்தப் பையனும்
கோக்குமாக்கா எதாவ்து பதிவு போட்டறக்கூடாதுன்னுதான்
ஓடியாந்துட்டேன்! "
"அய்யோ அந்தப் பையன் ரெம்ப நல்லவன் மணியண்ணே!"
"நீங்க யாரைதான் கெட்டவன்னு சொல்லியிருக்கீங்க?
இதனாலதான் உங்ககிட்ட படிக்கறவன் எவனுமே
உருப்படறதில்லை!"
வாழ்த்துக்கள் பொன்ஸ்.
//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜு?//
நெஜமா பொன்ஸ்???:))))
//ஏம்பா ராமு, இந்த மாதிரி விளம்பர பதிவு எல்லாம் போட எம்புட்டு சார்ஜ்ஜ்?//
நெஜமா பொன்ஸ்???:)))) //
பின்னே, ஆதாயம் இல்லாமே யாராவது வேலை பார்ப்பாங்களா?? ;)
அருமை சகோதரி அவர்களே.. உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. தொடர்ந்து இதே போன்ற கற்பனைக் குதிரைகளை ஓட விடுங்கள். அப்படியே இந்தக் கதைகளை "சுடு"வதற்கு அனுமதி உண்டுதானே?
அன்புடன்
தமிழ்சரண்
வாழ்த்துக்கள், பொன்ஸ்.
நாடகம் படு ஜோராயிருக்கு.
ஒரு வருஷ சாதிப்பு நிறையவே .. தொடருங்கள்.
அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க..
//"அது சும்மா டகல் பாச்சா வேலை!.நான் வேகமா
தப்பிச்சு வந்தது என்னமோ உண்மைதான். அந்த அம்மணிக்குப்
பயந்து ஓடிவரலை!. அந்த டில்லிக்காரப் பையன் தலை தெரிஞ்சுது
அந்தப் பையன் ஒருத்தன்தான் பாக்கி - என்ன வச்சு அந்தப் பையனும்
கோக்குமாக்கா எதாவ்து பதிவு போட்டறக்கூடாதுன்னுதான்
ஓடியாந்துட்டேன்! "
"அய்யோ அந்தப் பையன் ரெம்ப நல்லவன் மணியண்ணே!"
"நீங்க யாரைதான் கெட்டவன்னு சொல்லியிருக்கீங்க?
இதனாலதான் உங்ககிட்ட படிக்கறவன் எவனுமே
உருப்படறதில்லை!"//
:)))
I continue tomorrow... ur honour
senshe
hi pons!!
congrats on your first year completion!!!
nalla devil show!!!
ஒரு வருஷம் கழிச்சும் இன்னும் தத்தக்க பித்தக்க தானா?
அது சரி படகக்காவா - படகுக்காவா?
இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு, கொஞ்சம் பாத்து எழுதியிருக்கலாமே தாயி....?
ஆனாலும் ஒரு வருசம் வெற்றிகரமா ஓட்டினதுக்காக வாழ்த்துக்கள். இன்னும் ஓடுவதற்கும் வாழ்த்துக்கள்.
//அப்படியே இந்தக் கதைகளை "சுடு"வதற்கு அனுமதி உண்டுதானே? //
நண்பரே,
இந்த டெவில் ஷோ கான்செப்ட் வெட்டிபயல் பாலாஜியால் உருவாக்கப்பட்டு இப்பொழுது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நகைச்சுவைக்காக எழுதப்படும் பதிவுகளுக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது..... இதை சுடாமல் வேறு புதுமாதிரியாக கலாய்ச்சலை உருவாக்குங்கள்... புரிந்து கொள்விர்கள் என நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்....:)
//அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க.. //
ஐயா,
நாங்க ஏற்கெனவே ரைட்ஸ் வாங்கிட்டோமில்லே :)
ராம் சூப்பர் ராம்,
/இதுக்கு பதில் சொல்லுறேன்னு சொல்லி நான் ஒரு அறிவாளி, தண்ணிவாளின்னு சொன்னேன்னு வை,நான் மிருகமா ஆகிருவேன்.!"//
நீ இதுக்கு மேல தான் ஆகணுமா என்ன? அது சரி கலாச்சே பழக்கப்பட்ட கவுண்டரையே கலாச்சி அனுப்பி இருங்காங்க பொன்ஸ்.
பொன்ஸ்,
முதலாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள். யானையை promote செய்தது போதும் நீங்க ஏன் வேற உங்க புது promotionஜ துவங்க கூடாது.
//அப்படியே பொ.க்.ச. மதுரைக் கிளைக்கு பொறுப்பாளரா என்னையே ...ஹி. ஹி.. ஏதோ பாத்து செய்யுங்க.. //
ஐயா,
நாங்க ஏற்கெனவே ரைட்ஸ் வாங்கிட்டோமில்லே //
என்னங்கப்பா உங்களோட ஒரே இதா போச்சு.. நீங்கள்ளாம் பெண்களூரு வாசி ... மதுர எங்க ஏரியா ..தெரியும்ல ..
Post a Comment